அவர்கள் அனைவரையும் தமிழ்நாடு சேக்கிழார் மன்ற பொது செயலாளர் திரு.இரா.பார்த்திபன் அவர்கள் வரவேற்று அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்துக்கொண்டிருந்தார்.
அப்போது தாடி வைத்து திருநீறு பூச்க்கொண்டிருந்த ஒருவரை அறிமுகப்படுத்தினார்.
“நம்மில் சிலர் சைவத்தில் தீவிர பற்று உடையவர்களாக இருந்தாலும் எப்போதாவது தவிர்க்க இயலாமல் முட்டை சாப்பிட்டுவிடுகிறோம். ஆனால் டாக்டர் ஹூசேன் அவர்கள் பிறப்பால் இஸ்லாமியராக இருந்தபோதும் வள்ளலாரின் சன்மார்க்கத்தை பின்பற்றுகிறமையால் முட்டை கலந்திருக்கும் என்பதால் கேக், பிஸ்கட் கூட சாப்பிடமாட்டார். அதுமட்டுமல்ல திருமந்திரம், திருவாசகம் இவற்றில் தீவிர பற்றுள்ளவர். திருக்குறளை கரைத்து குடித்தவர். சேக்கிழாரின் மெய்த் தொண்டர்களில் ஒருவர். திருத்தணியில் நடைபெற்ற ஐந்தாம் உலக சேக்கிழார் மாநாட்டுக்கு சிறப்பு மலரை குறுகிய காலத்தில் தயாரித்து கொடுத்தவர். இயற்கை ஆர்வலர். தலைசிறந்த சித்த மருத்துவர்!” என்று அவரை அறிமுகப்படுத்த, கூட்டத்தில் கைதட்டல் பிய்த்துக்கொண்டு போனது.
அட……!!!!!!!!!!!!!! உங்களைப் போலவே நாமும் நிமிர்ந்து உட்கார்ந்தோம்!
(* இந்தப் பதிவில் குன்றத்தூர் சேக்கிழார் அவதாரத் தலத்தில் நடைபெற்ற சேக்கிழார் விழா & மயிலை கற்பகாம்பாள் நகர் வி.என்.சண்முகசுந்தரம் ஹாலில் நடைபெற்ற திருஞானசம்பந்தர் விழா ஆகிய இரண்டு விழாக்களின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. பார்த்தாலே எது எந்த விழாவின் புகைப்படம் என்று புரியும்!)
என்ன…..????????????? ஒரு இஸ்லாமியர் வள்ளலாரின் சன்மார்கத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறாரா? மேலும் சைவ உணவு முறையை பின்பற்றுகிறாரா? அதுமட்டுமல்லாமல் சேக்கிழாரின் தொண்டராக இருப்பதோடு திருமந்திரம் திருவாசகம் இவற்றையும் வேறு கசடறக் கற்றிருக்கிறாரா??
நாம் வியப்பின் உச்சிக்கே சென்றோம்.
இதெல்லாம் இங்கே ஹிந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கே 90% தெரியாதே…
அவரை நிச்சயம் சந்தித்து நமது தளத்திற்காக ஒரு விரிவான பேட்டியை காண நமக்கு ஆசை எழுந்திருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமோ?
ஊனடைந்த உடம்பின் பிறவியே
தானடைந்த உறுதியைச் சாருமால்
தேனடைந்த மலர்ப்பொழில் தில்லையுள்
மாநடஞ்செய் வரதர் பொற்றாள் தொழ.என்று சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் கூறிய பிறவிப் பயன் பாடல் வலது ஓரம் இருப்பதை கவனியுங்கள்!
ஆனால், விழா நடைபெற்ற இடம் மிக மிக சிறிய இடம். கூட்டமோ கட்டுக்கடங்காமல் திமிறிக்கொண்டிருந்தது. அறிஞர் பெருமக்களே நூற்றுக்கணக்கில் குழுமியிருந்தனர். எனவே அவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொள்ள சந்தர்ப்பம் அமையவில்லை. அவருடைய அலைபேசி எண்ணை மட்டும் வாங்கி வைத்துக்கொண்டோம்.
நெற்றி நிறைய பூசிய திருநீறுடன் காணப்பட்ட அவரது முகம் அடுத்த சில நாட்களுக்கு நம் மனதைவிட்டு அகலவேயில்லை.
இஸ்லாமியர்கள் என்றாலே தீவிர மதக்கோட்பாடு உடையவர்கள், அசைவ உணவை சாப்பிடுபவர்கள் என்ற பிம்பம் மனதில் ஆழப்பதிந்துவிட்டபடியால், இவரை நம்மால் மறக்கமுடியவில்லை.
அவரை விரைவில் நேரில் சந்தித்து பேட்டி எடுத்தே தீரவேண்டும் என்று முடிவு செய்தோம். சந்தர்ப்ப சூழ்நிலைக்காக காத்திருந்தோம். ஏனெனில் அடுத்தடுத்த நமது பல வார-இறுதிகள் பல்வேறு கமிட்மெண்ட் மற்றும் சந்திப்புக்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே ஜூன் 6 ஆம் தேதி மயிலையில் கற்பகாம்பாள் நகரில் உள்ள கே.என்.சண்முகசுந்தரம் ஹாலில் ‘தமிழ்ஞான சம்பந்தர் அறக்கட்டளை’ சார்பாக எட்டாம் ஆண்டு திருஞானசம்பந்தர் மாநாடு நடைபெற்றது.
நண்பர் ஒருவரின் அழைப்பின் பேரில் அங்கு சென்றிருந்தோம். நிகழ்ச்சியை அமர்ந்து ரசித்துக்கொண்டிருக்கிறோம்..! அறிஞர் பெருமக்கள் ஒவ்வொருவராக மேடையில் தோன்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
திடீரென, நிகழ்ச்சியின் அமைப்பாளர் மைக் முன் வந்து “தற்போது நமது சபைக்கு டாக்டர் திரு.எம்.ஏ.ஹூசைன் அவர்கள் வந்திருக்கிறார். வள்ளலாரின் உண்மைத் தொண்டராக சைவப் பணியாற்றி வரும் அவர் கோடையில் பெய்யும் குளிர் மழை போல, உங்களிடையே உரையாற்றவிருக்கிறார்….” என்றார்.
கைத்தட்டல் பலமாக எழுந்தது.
நாம் நமது டைரியையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு தயாராக அமர்ந்தோம்.
மைக்கைப் பிடித்த திரு.ஹூசேன்…..
“அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
எல்லாம் செயல்கூடும் என்னாணை யம்பலத்தே
எல்லாம்வல் லான்ற னையே ஏத்து.
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை”
என்று வள்ளல் பெருமானின் மந்திரத்தை கூறிவிட்டு,
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையவனும் எறும்பு முதல் யானை வரை எண்ணற்ற ஜீவன்களுக்கும் நாயகனுமாகிய எப்பொருளுக்கும் ஒப்புமை இல்லாத ஏக பரம்பொருளாகிய எல்லாம் வல்ல இறைவனை அகத்தே நினைந்து இந்த உரையை தொடங்குகிறேன்.
திரு.தியாகராஜன் அவர்கள் ஒருமுறை என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு, “டாக்டர் நீங்க இந்த திருவருட்பா, திருமந்திரம், திருக்குறள், திருவாசகம் இதெல்லாம் பத்தி தான் பேசுவீங்களா? தேவாரமெல்லாம் உங்களுக்கு ஆகாதா?” என்றார்.
அதை தொடர்ந்து சுமார் ஐம்பது நிமிடங்கள் தேவாரம் பற்றி இருவரும் பேசினோம்.
இன்று ஐயா அவர்கள் பேசும்போது, மிகவும் சிந்திக்க வேண்டிய ஒரு விஷயத்தை சபையில் எடுத்து வைத்தார்கள். வயது முதிர்ந்த முற்படுத்தப்பட்டு வாழ்ந்த அப்பர் சுவாமிகளை முன்னிலைப்படுத்தாமல் ஞானசம்பந்தரை சேக்கிழார் பெருமான் முற்படுத்தி வந்ததின் காரணத்தை சிறப்பாக சொன்னார்கள்.
அப்பர் ஸ்வாமிகள் அனுபவத்தில், வாழ்வில், அறிவில் முன் சென்று இறைவனிடம் இரண்டறக் கலந்தார். அதே நேரம், குழந்தையாக இருக்கும்போதே, சம்பந்தர் இறைவனின் அருளைப் பெற்றார்.
குழந்தை குளக்கரையில் தந்தையை காணாமல் அழுகிறது. பெருமானும் பெருமாட்டியும் வருகிறார்கள். அழக்கூடிய குழந்தையை பார்த்து பெருமாட்டியிடம், “குழந்தை பசியில் அழுகிறது. நீ சென்று பால் கொடு” என்று பரிந்துரை செய்கிறார் பெருமான்.
உடனே பெருமாட்டி பொற்கிண்ணத்தில் பால் ஊட்டுகிறார்கள். குழந்தை அழுகையை நிறுத்தியது.
அதற்கு பிறகு தந்தை சிவபாதவிருதயர் வந்து, குழந்தையின் வாயில் பால் வழிவதை பார்த்து, “உன் வாயில் பால் எப்படி வந்தது? யாரு உனக்கு பால் ஊட்டியது?'” என்று அதட்டுகிறார்.
அதற்கு குழந்தை என்ன சொல்லவேண்டும்?
சற்று யோசியுங்கள்….
பால் ஊட்டியது பெருமாட்டி தானே? அவர்களைத் தானே சொல்லவேண்டும்….?
ஆனால் குழந்தையோ, “தோடுடையசெவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக் காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்” என்று பெருமானைக் காட்டி பாடுகிறது.
அவரா வந்து பால் கொடுத்தார்?
அப்போது ஏன் அவரை சொல்கிறது?
ரொம்ப எளிமையான விஷயம். குழந்தை எப்போதும் பரிந்துரைப்பவர்கள் பக்கமே நிற்கும்!
அஞ்சு வயசுக்கு கீழே உள்ள குழந்தை எப்போதுமே தாய் அடித்தால் தந்தையை போய் அணைத்துக்கொள்ளும். தந்தை அடித்தால் தாயை அணைத்துக்கொள்ளும்.
ஐந்து வயதுக்கு பிறகு ஒரு குழந்தையை தாய் அடித்தால், தகப்பன் பிள்ளையாக மாறிவிடும். தந்தை அடித்தார் என்று சொன்னால், அம்மா பிள்ளையாக மாறிவிடும். இது இயல்பு.
இந்த இடத்தில் பரிந்துரை செய்த பெருமானை மனதில் பதிய வைத்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் பெருமானுடைய அந்த பேரருளை குழந்தையிலேயே பெற்றுவிட்டபடியால் தகப்பன் பிள்ளையாக மாறிவிட்டார் சம்பந்தர்.
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திறம்பட மெய்ஞானம் சேரவு மாட்ட
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்தேனே
என்றார் திருமூலர் திருமந்திரத்தில்.
இந்த பூமியில் பிறந்தது எதற்கு? உறுதி வாய்ந்த மெய்ஞானத்தை அடைவதற்கு.
அந்த மெய்ஞானம் என்றால் என்ன? இறைவனுடைய இரண்டறக் கலப்பது.
ஆனால், சம்பந்தரைப் பொருத்தவரை இறைவனே சம்பந்தரை நாடி வந்து கலந்துவிட்டான். அதனால் தான் சம்பந்தர் முற்படுத்தப்படுகிறார்.
ஆண்டு தோறும் இந்த சம்பந்தர் விழா நடைபெற்றுவருகிறது. இந்த விழா திருக்கழுக்குன்றத்தில் முன்பு நடைபெற்றபோது மூன்று முறை சகோதரர் சம்பந்தன் அவர்கள் என்னை மேடையில் பேசச் செய்திருக்கிறார்கள். அப்போது ஐ.ஏ.எஸ். கிருஷ்ணன் ஐயா அவர்கள் என்னை பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே பேச வைத்தார்.
ஏனெனில் கோட்டும் சூட்டும் போட்டுக்கொண்டு தலையில் ஒரு இஸ்லாமிய தொப்பியை போட்டுக்கொண்டு தான் நான் எங்கும் செல்வது வழக்கம். அதேபோலத தான் திருக்கழுகுன்ற விழாவுக்கும் சென்றேன்.
அப்போது, அந்த ஊர் பெரிய மனிதர் ஒருவர் விழாக்குழு உறுப்பினராக இருந்தார். அவர், “என்னய்யா இது… அற்புதமா ஞானசம்பந்தர் விழா நடக்குது. தேவையில்லாம லுங்கி கட்டுற முஸ்லீமையெல்லாம் மேடையில உட்கார வெச்சிருக்கீங்களே? இது நியாயமா?” அப்படி என்று… எங்கோ பேசவில்லை. மேடையில் என்னை வைத்துக்கொண்டே மைக்கில் பேசினார்.
"
ஆஹா.. நமக்கு நல்ல தீனி கிடைச்சுதுடான்னு நான் நினைத்தேன்.
ஐ.ஏ.எஸ். கிருஷ்ணன் ஐயா அவர்கள் என் முதுகைத் தட்டி, “டாக்டர் தப்பா நினைச்சுக்காதீங்க” என்றார்.
“அட நீங்க வேற… எவ்ளோ பெரிய வாய்ப்பு எனக்கு கிடைச்சிருக்கு!” என்றேன்.
பரபரப்பான சூழ்நிலையில் மைக்கை பிடித்தேன்.
“நான் ஏன் வேட்டிகளே ஆக்கிரமித்துள்ள இந்த விழாவிற்கு கோட்டு சூட்டு மாட்டிக்கொண்டு வந்திருக்கிறேன் என்றால் எவனோ ஒருத்தன் புதுசா வந்திருக்கானேன்னு என்னை எல்லாரும் கவனிக்கணும். தொப்பியை ஏன் போட்டுக்கொண்டு வந்திருக்கிறேன் என்றால் இவன் இஸ்லாமியன் இவனுக்கு இங்கென்ன வேலை என்று தோன்ற வேண்டும். அதற்கு பிறகு, நான் பேச மைக்கை பிடித்தால், என் பேச்சை உற்று கவனிப்பார்கள். எனக்குள்ளே யார் இருக்கிறார்கள் என்று அனைவருக்கும் புரியும். இதற்கு வாய்ப்பு கொடுத்த ஐயாவுக்கு நன்றி” என்று கூறித்தான் நான் பேசவே ஆரம்பித்தேன்…!!
(கைத்தட்டல்கள் அரங்கமே அந்த ஹாலே அதிர்ந்தது.)
தொடர்கிறார் திரு.ஹூசேன்…. “அப்போ பேசியது தான் திருமந்திரம் பற்றியும் திருவாசகம் பற்றியும்.”
“இது சமயம் என்ற அடிப்படையில் பார்க்கும்போது தான் பிரச்சனையே. இது மனிதனுக்காக வந்ததல்லாவா? யாராக இருந்தால் என்ன?
ஒரு முக்கியப் பிரமுகர் ஒருவர் ஒரு முறை ஒரு விழாவில் என்னை பார்த்தபோது என்னிடம் சொன்னார், “டாக்டர் எல்லாம் சரி தான்… ஆனா உங்க பேர் தான் என்னவோ சிக்கலா இருக்கு. பேசாம பேரை மாத்திடுங்க”ன்னு சொன்னார். அவரு போனவுடனே… கொஞ்ச நேரம் கழித்து வேறொரு முக்கிய பிரமுகர் சொன்னார்… “டாக்டர் எந்த பைத்தியக்காரன் சொன்னாலும் உங்க பேரை மட்டும் மாத்திடாதீங்க”ன்னு.
“ஏன் ஐயா அப்படி சொல்றீங்க??”
“காரணம் இதை வெச்சு தான் வியாபாரம் பண்ணனும்…” என்றார்.
ஆம்… இந்த பெயரை வைத்து தான் வியாபாரம் செய்யவேண்டும்.
என்ன வியாபாரம்?
உலகம் முழுக்க பலநாடுகள் அதாவது கிட்டத்தட்ட 46 நாடுகள் பயணம் செஞ்சு வியாபாரம் பண்ணிக்கிட்டுருக்கேன். என்ன வியாபாரம் என்றால் சைவ நெறியின் தலையாய நெறியாக இருக்கக்கூடிய ஜீவகாருண்ய ஒழுக்கத்தை உலக மக்களிடம் எடுத்து வைக்கக்கூடிய வள்ளல் பெருமானின் பாதையை எடுத்துக் கூறிக்கொண்டிருக்கிறேன். அதற்கு ஒரு நல்ல வாய்ப்பு எனக்கு இந்த பிறவியில் கிடைத்தது.
எனக்கு சொர்க்கம் கிடைக்கிறதோ, நரகம் கிடைக்கிறதோ, மரணமில்லா பெருவாழ்வு கிடைக்கிறதோ அதைப் பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை. எனக்கு எல்லாம் கிடைத்துவிட்டது. காரணம் நான் இருக்கக்கூடிய பாதை அப்படிப்பட்டது. அதனால் தான் எனக்கு இந்த சபையில் இடம் கிடைத்துள்ளது. இல்லையெனில் கிடைக்காது. என்றைக்கு வள்ளல் பெருமானின் பாதையை நான் தேர்ந்தெடுத்தேனோ அன்றைக்கே எனக்கு எல்லாம் நிச்சயமாகிவிட்டது.
"
பல ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா செல்ல சந்தர்ப்ப சூழ்நிலைகள் வந்தபோது நான் செல்ல மறுத்துவிட்டேன். ஒரு கட்டத்தில் போகவேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டு, அமெரிக்க தூதரகத்தில் விசா கேட்டேன். ஆனால் என் பெயரில் ‘ஹூசேன்’ இருப்பதால் சதாம் ஹூசேன் மீதிருந்த வெறுப்பில் பயத்தில் எனக்கு விசா கொடுக்க மறுத்துவிட்டார்கள்.
நான் திரும்ப வந்துவிட்டேன். எந்த இடத்தில் நம் பணி தேவைப்படுகிறதோ அந்த இடம் நமக்கு இறைவன் நமக்கு கொடுக்கும் இடம். சைவப்பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது. அதை மனமுவந்து செய்துகொண்டிருக்கிறேன்.
நான் திரும்ப வந்துவிட்டேன். எந்த இடத்தில் நம் பணி தேவைப்படுகிறதோ அந்த இடம் நமக்கு இறைவன் நமக்கு கொடுக்கும் இடம். சைவப்பணி செய்ய வாய்ப்பு கிடைத்து. அதை மனமுவந்து செய்துகொண்டிருக்கிறேன்.
இந்த சபையில் பேச வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றியை கூறி விடைபெற்றுக் கொள்கிறேன். வணக்கம்!!!!!!!!!!”
கைத்தட்டல்கள் அடங்க வெகு நேரமானது என்று சொல்லவும் வேண்டுமோ?
அவரது உரையை முடித்து அவர் சென்று அமர்ந்தவுடன், அவரை நோக்கிச் சென்று நமது பாராட்டுதல்களை தெரிவித்தோம்.
நம்மைப் பற்றி ஒரு சுருக்கமான அறிமுகத்தை கொடுத்து நமது விசிட்டிங் கார்ட் பரிமாறிக்கொண்டோம்.
அவரை நமது தளத்தின் பேட்டிக்காக சந்திக்கவிருப்பதாக கூறினோம். தாராளமாக வருமாறும் முன்பே அவருடன் கலந்து பேசி டயத்தை ஃபிக்ஸ் செய்துகொண்டு வருமாறு கேட்டுக்கொண்டார்.
சைவத்தை போற்றி அதை பரப்பும் பணியில் ஈடுபடவேண்டியவர்களே எனக்கென்ன என்று உறங்கிக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில்…
தேவாரம் திருவாசகம் திருமந்திரம், திருவருட்பா என அனைத்தும் கற்று அதை ஓதவேண்டியவர்களே அதை கற்க மறந்த நிலையில்…
திருக்குறளை கசடறக் கற்று அதற்கு தக நிற்கவேண்டியர்களே அதை புறக்கணித்துவிட்ட நிலையில்…
ஜீவகாருண்யத்தை போதிக்கவேண்டியவர்களே ஊன் சுவைக்கு அடிமையாகிவிட்ட நிலையில்…
பிறப்பால் இஸ்லாமியராக இருக்கும் ஒருவர் இவற்றையெல்லாம் செய்கிறார் என்றால் அது என்ன சாதாரண விஷயமா? அதை எல்லாரும் செய்துவிடமுடியுமா?
இவர் சமயத்தை சார்ந்தவர்களிடமே இவர் எண்ணற்ற எதிர்ப்புகளை சந்திக்கவேண்டி வருமே?
நமது சமூகத்தில் நம் இந்து சமய மக்களிடையே கூட பல அவமதிப்புக்களை அவர் சந்திக்கவேண்டி வருமே… அதையெல்லாம் எப்படி எதிர்கொள்கிறார்? எப்படி சமாளித்து எப்படி தனது சைவப் பணியை செய்கிறார்?
ஆச்சரியமாகத் தான் இருந்தது!
சென்ற மாதம் ஒரு நாள் அவரது இல்லத்தில் சந்திப்ப் நடைபெற்றது.
மிகப் பெரிய ஊடகங்களுக்கு கூட திறக்காத அவர் கதவு நமக்காக திறந்தது.
சுமார் நான்கு மணி நேரம் நம் சந்திப்பு நீடித்தது என்றால் நாம் எவ்வளவு விஷயங்களை பேசியிருப்போம் என்று பார்த்துக்கொள்ளுங்கள்….
உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
அடிப்படையில் சித்த மருத்துவரான அவரது இல்லத்தில் நாம் திருக்குறள், தேவாரம், திருவாசகம், திருமந்திரம், கீதை, ராமாயணம் என ஒரு ஹிந்து வீட்டில் கூட இன்று காணமுடியாத பல பொக்கிஷங்களை பார்த்தோம். இவற்றையெல்லாம் தனது வீட்டில் அலங்காரப்பொருளாக மட்டும் அவர் வைத்திருக்க வில்லை. அவற்றை படித்தும் இருக்கிறார் என்பது தான் விசேஷமே!
மேலும் சிவப்பிரகாச வள்ளலாரின் சன்மார்க்கத்தை பரப்பும் நோக்கில், ‘சன்மார்க்க நேசன்’ என்கிற மாத இதழையும் இவர் நடத்தி வருகிறார்.
அது மட்டுமா சமஸ்கிருதமும் இவருக்கு அத்துப்படி.
ஆம்… இவர் சமஸ்கிருதத்திலும் புலமை பெற்றவர்.
அது மட்டுமா… காஞ்சி காமகோடி பீடத்துடன் கூட இவருக்கு நெருங்கிய தொடர்புண்டு.
நேற்றைய பதிவில் ‘கொம்பு முளைத்த தேங்காயை பார்த்தோம் என்று சொன்னோமில்லையா? அது இவரது வீட்டு பூஜையறையில் பார்த்தது தான்.
காமராஜர் கைகளால் முதன்முதலில் சத்துணவு சாப்பிட்டார் ஒருவர் என்று முன்பு ஒரு பதிவில் சொன்னோமல்லாவா? அது இவர் தான்!
* இஸ்லாமியரான இவர் சைவத்துக்கு திரும்பியது எப்படி?
* அசைவ உணவை இவர் துறந்து இவர் வள்ளலாரின் சன்மார்க்கத்துக்கு மாறியது எப்போது?
* இவர் தான் சார்ந்த சமூகத்தில் இதன்பொருட்டு சந்தித்த எதிர்ப்புக்கள் என்ன?
* ஹிந்து சமய இலக்கியங்கள் என்னென்ன இவர் படித்திருக்கிறார்?
* சமஸ்கிருதம் பற்றி இவரது கருத்து என்ன?
* இவர் சித்த மருத்துவரான கதை!
மேலும் மேலும் பல புதிய தகவல்களுடன்…. இவரது விரிவான சந்திப்பு நமது தளத்தில் வெளியாகவிருக்கிறது.
இந்த பதிவை படித்த பின்னர் உங்களுக்கு ஒரு ஐயம் தோன்றலாம்… இவர்களைப் போன்றவர்கள் எல்லாம் எப்படி நமது கண்களுக்கு புலப்படுகிறார்கள் என்று!
ஒரே ஒரு சிவத்தொண்டர் பின்னே சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்றோம்… இதோ இன்று கற்பனைக்கு கூட எட்டாத ஆளுமைகளையெல்லாம் சந்திக்கும் பாக்கியத்தை ஈசன் வழங்கி வருகிறான். Check : நல்ல நண்பனை அடையாளம் காண்பது எப்படி ?
==============================================================
Also check :
சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!
சிவனின் செல்லப்பிள்ளைகள் போதித்த பாடம்!
நண்பர் வீட்டு திருமண விருந்து vs தெய்வச் சேக்கிழார் குருபூஜை விருந்து!
சிவபெருமான் கண்ணாடியில் ரசித்த தனதுருவம்… பிறகு நடந்தது என்ன?
==============================================================
தெருக்களுக்கு ‘நாயன்மார்கள்’ பெயர் – சேக்கிழார் பிறந்த பூமியில் ஒரு புரட்சி!
கடமைக்கு குறைவில்லை தொண்டுக்கும் ஓய்வில்லை – அதிசய மனிதர் சிவ.ஜனார்த்தனம்!!
“கண் போனால் என்ன? கால் போனால் என்ன?” – தேவாரத் திருப்பணியில் அசத்தும் ஞானப்பிரகாசம்!
உருகிய பக்தை… வீட்டுக்கே வந்த நடராஜர்! உண்மை சம்பவம்!!
திருமுறை, திருப்புகழ் விளக்கை அனைவருக்கும் ஒளிரச் செய்யும் ஓர் அன்னை!
ஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்!!
‘என்னை தாலாட்ட வருவாரோ?’ ஏழுமலைக்காக தினமும் ஏங்கும் வேதபுரீஸ்வரர்!
‘மாணவர்கள் மனதில் மாணிக்கவாசகர்’ – திவாகரும் அவரது திருவாசகத் தொண்டும்!
தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!
==============================================================
காரணங்களின்றி காரியங்கள் நடப்பதில்லை!
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் – மழலைகள் போதிக்கும் ஒரு பாடம்!
பள்ளி மாணவர்களுக்கு இலவச திருமுறை வகுப்பு – சங்கர் அவர்களின் அயராத சிவத்தொண்டு!
திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!
சிவபெருமான் கண்ணாடியில் ரசித்த தனதுருவம்… பிறகு நடந்தது என்ன?
பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!
முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!
ஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்!!
ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!
இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்!
ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்!
தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!
பணத்தை தேடி வரவழைத்த பதிகம்! மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!
உணவும், உறக்கமும், நிம்மதியும், செல்வமும் நல்கி இறுதியில் சிவபதம் அருளும் பதிகம்!
வசிஷ்டர் அருளிய தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்
நமக்கென்று ஒரு சொந்த வீடு – உங்கள் கனவு இல்லத்தை வாங்க / கட்ட வழிகாட்டும் பதிகம்!
ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?
அகத்தியரின் ‘திருமகள் துதி’ – இது வீட்டில் இருந்தாலே திருமகளின் அருள்மழை நிச்சயம்!
மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம், வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக!
ஆஞ்சநேய பக்தர்களுக்கு ஓர் வரப்பிரசாதம் – கிடைப்பதர்க்கரிய ஸ்ரீஹநுமத் சுப்ரபாதம்!!
வறுமையை விரட்டி, பொன் பொருள் சேர்க்க எளிய தமிழில் ஒரு அழகிய ஸ்லோகம்!
களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!
‘திருவாசகம்’ என்னும் LIFESTYLE MANTRA – கருவுற்றிருக்கும் பெண்கள் கவனத்திற்கு!
கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!
அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!
பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!
செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!
==============================================================
[END]
Dear SundarJi,
Very inspiring.. can’t wait for full interview…
Rgds,
Ramesh
Dear Sundarji,
Great to know about Dr. Hussain. Obviously, those who seek genuinely, would never be disappointed by god. And it is just the same thing with you.. that you get to meet all great souls with your untiring efforts. And we get to hear them/read about them through you without much effort by virtue of simply knowing you & following your posts.
Best wishes
Prabu
சுந்தர் சார்,
சொல்ல சொல்ல இனிக்குதடா பாடலை போல படிக்க படிக்க இனிமையான பதிவு. I am waiting for full interview .
நன்றி,
சங்கர்
சிவநெறித் தொண்டரை நம் தளத்தின் மூலம் அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. பதிவை படிக்க படிக்க பரவசம் ஆக உள்ளது.
திரு ஹுசைனின் interview வை படிக்க ஆவல்.
தங்களுக்கு ஈசன் வழங்கிய பாக்கியத்தால் நாங்களும் பூவோடு சேர்ந்த நாரும் போல பயனடைகிறோம்
வாழ்க …. வளமுடன்
நன்றி
உமா வெங்கட்
மிக சிறப்பான பதிவு. நன்றி
விரிவான பேட்டியை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம்
டாக்டர் ஹுசேனை பற்றிய இந்த பதிவு அற்புதம். அவரை பாராட்ட வார்த்தைகளே இல்லை. உண்மையில் சைவத்திலும், வைஷ்ணவத்திலும் பிறந்தவர்களில் சிலர் தவறான பழக்கங்களிலும் அசைவ உணவு உண்பதிலும் குறியாக இருக்கிறார்கள்., அப்படியிருக்க திரு. ஹுசேன் அவர்கள் இவ்வளவு சைவ நெறியை பின்பற்றுவதில் மிக்க சந்தோஷமே. அவர்களை வாழ்த்த வயதில்லை. வணங்குகின்றேன்.
வளர்க அவர்தம் நன்னெறி.
டாக்டர்.எம்.ஏ.ஹூசேன் பதிவு என்று பார்த்தவுடனே பிரமிப்பு..இன்னும் பதிவின் தாக்கத்தில் இருந்து மீள வில்லை. எப்போது டாக்டர்.எம்.ஏ.ஹூசேன் முழு பதிவு வரும் என்று ஏங்க வைத்து விடீர்கள்..
டாக்டர்.எம்.ஏ.ஹூசேன் – ஒரு பல்கலைகழகம் என்பது சால பொருந்தும்.
நம் தளத்திருக்கு வந்த பிறகு தான் சிவ பெருமை பற்றி தெரியும். இருந்தாலும் இந்த பதிவை படித்த பிறகு..இன்னும் கற்று கொள்ளவேண்டியது ஏராளம்.
வள்ளலாரின் சன்மார்க்க நெறிகளை தற்போது சன்மார்க்க நேசன் மூலம் தெரிவிக்கும் அய்யவினை பார்க்கும் போது,வள்ளலாரின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும். திருவருட்பா படிக்கணும் ..
கொம்பு முளைத்த தேங்காயும், காமராஜர் கைகளால் முதன் முதலில் சத்துணவு சாபிட்டவரும் என்ற பெருமைக்கு உரியவர் – அவரை பற்றி நம் தள பதிவு.. ஆச்சர்யம் தான்..சிறப்பான ஒரு பிரமுகரை அறிமுகபடுத்தி..இன்றைய நாளை மேலும் பிரமிப்பூட்டியதற்கு நன்றி.
அடுத்த பதிவினை – தாங்கள் சொல்லி முடித்த கேள்விகளோடு எதிர்பார்க்கிறோம்.
நன்றி அண்ணா..
amazing article sundarji! Very nice to read ! you are such lucky person to attend this! pictures all super! om namasivaya! Waiting for more about the meeting with Dr.M.A.Hussain! Thanks a lot
அண்ணா..
பதிவின் முடிவில் தாங்கள் கொடுத்த நல்ல நண்பனை அடையாளம் காண்பது எப்படி ? என்ற பதிவை படித்தேன். ஒவ்வொரு வார்த்தையும் உண்மை நிலை விளக்கங்கள். மீள்பதிவாய் சுட்டியதற்கு நன்றிகள்.
Sundarji,
I just got a chance to read this article. WOW! I was speechless. Cant wait to know more about this great doctor. Request you to post it soon…Many thanks.