Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, February 21, 2024
Please specify the group
Home > Featured > கொம்பு முளைத்த தேங்காய்!

கொம்பு முளைத்த தேங்காய்!

print
ஞ்சை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள காட்டுச்சேரியை சேர்ந்தவர் மலைப்பெருமாள் சித்தர். திருவோடு கூட ஒரு சுமையே என்று கருதி, இருகைகளாலும் பிச்சையெடுத்து வாழ்ந்து வந்தவர். பல சித்திகள் கைவரப்பெற்றவர்.

ஆலத்தூர் அருகே ‘தூது போன மூலை’ என்னும் கிராமத்தில் நடந்த சம்பவம் இது. ஒரு முறை ஒரு முதியவரை காளை மாடு துரத்தியது. முதியவர் ஓட்டமாய் ஓடினார். மாடு எப்படியும் துரத்திக் குத்திவிடும் என்று தெரிந்தது. சித்தரை நன்கு தெரியுமாதலால் அவர் இருக்கும் இடத்தை நோக்கி ஓடினார். அதற்குள் மாடு நெருங்கிவிட்டது. “மலைப்பெருமாளே என்னை காப்பாற்று” என்று சொல்லியபடி மூர்ச்சித்து விழுந்தார்.

சித்தர் வந்தார். முதியவரை மூர்ச்சையிலிருந்து எழுப்பினார். காளைமாட்டை கோபத்தோடு பார்த்தார்.

“போ… நீ போய் அந்த வைக்கோல் போர் மீதி ஏறி நில்” என்றார்.

மாடு அடுத்த நொடி வைக்கோல் போர் மீது ஏறி நின்றது.

அரைமணி நேரம் அப்படியே போனது. மாட்டுக்கான பனிஷ்மெண்ட் நேரம் முடிந்தது, அதை இறங்கச் செய்தவர், “ஆண்டவன் உனக்கு கொம்புகளை கொடுத்திருப்பது உனது தற்காப்புக்காக. இப்படி வயதானவர்களை விரட்ட அல்ல. இனி உனக்கு துன்பம் நேராதவரையில் நீ யாரையும் முட்டக்கூடாது” என்றார். மாடு தலையசைத்தபடி சென்றது.

"

வேறொரு சமயம், ஒரு செல்வந்தனிடம் சித்தர் தேங்காய் கேட்டார். அவன் ஒரு மகா கருமி. அவன் கருமியென்பதை தெரிந்தே தான் கேட்டார்.

“உனக்கு அஷ்டமா சித்திகளும் தெரிந்திருக்கலாம். காளை மாட்டைக் கூட வார்த்தையால் அடக்கலாம். பல பேருக்கு ரோகங்களை தீர்த்திருக்கலாம். பிள்ளை வரமும் தந்திருக்கலாம். இதற்கெல்லாம் மயங்கி நான் தேங்காய் தரமாட்டேன். உனக்கு தேங்காய் தரவில்லை என்பதற்காக அதற்கு கொம்பு முளைத்துவிடுமா என்ன?” என்றார் எகத்தாளத்துடன்.

"

சித்தர் ஒன்றும் சொல்லவில்லை. தான் பாட்டுக்கு போய்விட்டார்.

அடுத்த நாள் செல்வந்தன் வீட்டு சமையற்காரன், சமையலுக்கு தேங்காய் பறிக்க தோட்டத்திலுள்ள மரத்தில் ஏறினான். கீழே இறங்கிப் பார்க்கும்போது தான் தெரிந்தது. தேங்காய்க்கு கொம்பு முளைத்திருந்தது.

அலறியபடி செல்வந்தினிடம் ஓடிச் சென்று தேங்காயை காட்டினான்.

Coconut with horn
கொம்பு முளைத்த தேங்காய்!

அவ்வளவு தான் செல்வந்தன் மிரண்டே போய்விட்டான். அடுத்த நொடி தனது தோப்பில் உள்ள அத்தனை தேங்காய்களையும் பறித்து சித்தரிடம் சமர்பித்து மன்னிப்பு கேட்டான்.

என்னது தேங்காய்க்கு கொம்பு முளைக்குமா? கொம்பு முளைச்ச தேங்காய் எப்படி இருக்கும்??

இதைப் படிக்கும் உங்களுக்கு தோன்றும் ஆவலைப் போன்றே நமக்கும் கொம்பு முளைத்த தேங்காயை பார்க்கவேண்டும் என்ற ஆவல் இருந்தது. ஆனால் அதற்கு நாம் எங்கே போவது?

தர்காவில் புகுந்த தேங்காய்த் திருடன்!

மீபத்தில் ரோல்மாடல் / வி.ஐ.பி. சந்திப்புக்கு முக்கியப் பிரமுகர் ஒருவரது இல்லத்திற்கு சென்றிருந்தோம். சந்திப்பு முடித்துவிட்டு புறப்படும் போது பூஜையறைக்கு நம்மை அழைத்துச் சென்றார்.

அங்கே நாம் பார்த்த தேங்காய் ஒன்று வித்தியாசமாக இருந்தது.

“என்ன சார் அது?”

“இது தான் கொம்பு முளைத்த தேங்காய்” என்றார்.

நமக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

Coconut with horn2

ஷாஹுல் ஹமீது வலியுல்லா என்கிற 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு இஸ்லாமிய ஞானியின் அடக்கஸ்தலம் தான் நாகூர் தர்கா. இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து இந்த தர்காவைப் போற்றி வந்ததால் ஒரு சமயம் முத்துசாமிப்பிள்ளை என்பவர் தர்காவின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்தார். நாகூர் தர்க்காவில் நடைபெறு திருவிழாக்களில் அனைத்து மதத்தினரும் கலந்து கொள்கின்றனர். நாகூர் சமாதியில் போர்த்தப்படும் சால்வை, மலர்ப் போர்வை பழனியைச் சேர்ந்த ஒரு இந்துக் குடும்பத்தாரால் இன்றளவும் கொண்டுவரப்படுகிறது. அனைத்து மதத்தினருக்கும் அற்புதங்கள் நிகழ்த்தி வருகிறார் நாகூர் ஆண்டவர்.

(என் அத்தை அதாவது அப்பாவின் மூத்த சகோதரி திருவாரூரை சேர்ந்தவர். அவர் அடிக்கடி நாகூர் தர்கா சென்று வருவார். சந்தனக் கூடு திருவிழாவிலும் கலந்துகொள்வர். அப்பாவும் ஒரு முறை சந்தனக்கூடு திருவிழாவுக்கு சென்று பூக்கள் வாங்கி போட்டிருக்கிறார்!)

முன்பொரு சமயம் ஒரு திருடன் தர்காவில் புகுந்து, அங்குள்ள தென்னை மரம் ஒன்றின் மீது ஏறி, தேங்காய்களை திருட முற்பட்டான். அப்போது அங்கிருந்த அக்ராஹரத்தின் இல்லத்தரசி ஒருவர் அதை பார்த்துவிட, “ஏண்டாப்பா உனக்கு புத்தி இப்படி போகுது…? நாகூர் ஆண்டவரோட சொத்தை திருடுறியே… ” என்று கடிந்துகொள்ள, “ஏம்மா சும்மா கூச்சல் போடுறே… இந்த தேங்காய்களுக்கு மட்டும் என்ன கொம்பா முளைச்சிருக்கு? வேலையை பார்த்துட்டு போவியா…” என்று கூறியபடி மேலே தொடர்ந்து ஏறி தேங்காயை பறிக்க போகும்போது பார்த்தால் அவன் அதிர்ச்சியடையும் விதத்தில் அனைத்து தேங்காய்களுக்கும் கொம்பு முளைத்திருந்தது.

உடனே மூர்ச்சையடைந்து கீழே விழுந்துவிட்டான்.

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்தவனுக்கு சிந்தனையில் ஏதோ மாற்றம். இனிமேல் நாம் திருட்டுத் தொழில் செய்யக்கூடாது என்று முடிவெடுத்து, மனம் திருந்தி உழைத்து வாழ தொடங்குகிறான். ஒரு கட்டத்தில் மிகப் பெரும் கப்பல் வியாபாரியாக மாறும் அவன், தனது வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுத்தியமைக்காக நன்றிக்கடனாக நாகூர் தர்க்காவுக்கு தனது உழைப்பில் ஈட்டிய செல்வத்தை கொண்டு கொடிமரம் ஒன்றை நிர்மாணித்தான். நாகூர் தர்காவில் உள்ள கொடிமரம் அப்படி வந்தது தான்.

“இந்த கொம்புத் தேங்காய் எப்படி சார் உங்களுக்கு கிடைச்சது?” நாம் வியப்புடன் கேட்டோம்.

“எனக்கு 20 வயசிருக்கும்போது, எங்க வீட்டுக்கு ஒரு சன்னியாசி வந்தார். பிச்சை கேட்க வந்திருக்கார் போலன்னு நினைச்சு ‘என்ன வேணும் உங்களுக்கு?’ அப்படின்னு கேட்டேன். ‘நாம் பெற வரவில்லை. தர வந்திருக்கிறோம்’னு கோபமா சொல்லிட்டு தன்னோட பையில் இருந்து எடுத்து இதை கொடுத்துட்டு போய்ட்டார். எனக்கு ஒன்னுமே புரியலே. அப்புறம் எங்கப்பா வந்தவுடனே பார்த்துட்டு மேற்படி நாகூர் தர்கா கதையை சொன்னாரு. அந்த தர்க்காவுல முளைத்த தேங்காய்களுள் ஒன்று தான் இது!” என்றார்.

மீண்டும் பக்தியோடும் வியப்போடும் அந்த தேங்காயை பார்த்தோம்.

நாம் பெற்ற இன்பம் நீங்களும் பெற நாம் ஆசைப்படுவோம் அல்லவா? உடனே அவரிடம் அனுமதி பெற்று அந்த அதிசய தேங்காயை புகைப்படமெடுத்தோம்!

பக்கத்திலேயே ஒரு பெரிய தண்டம் காணப்பட்டது.

“இந்த தண்டம் சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது” என்றார்.

Coconut with horn3
அறுநூறு ஆண்டுகள் பழமையான தண்டம்!

“என்னது 600 ஆண்டுகளா???”

“ஆமாம்… தக்கலை பீர் முகம்மது வாப்பா என்பவருடைய தண்டம் அது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட முத்துசாமி தம்பிரானின் குலகுரு மற்றும் ராஜ வைத்தியர் அவர்!” என்றார்.

ஒரு கட்டத்துக்கு மேல் சென்றுவிட்டால் ஞானிகளிடையே பேதம் எதுவும் இருக்காது. பரம்பொருள் ஒன்றே என்கிற சிந்தனை தான் மேலோங்கியிருக்கும். சுமார் நூறாண்டுகளுக்கு முன்புவரை பல முஸ்லீம் வீடுகளில் அவர்களின் புத்தக அலமாரிகளில் திருக்குர்ரானுடன் தேவாரம் திருவாசகம் உள்ளிட்ட சைவத் திருமுறை நூல்கள் கூட இருக்குமாம்.

சரி… யார் இந்த வி.ஐ.பி.? எதற்காக சந்திப்பு நடைபெற்றது?

விரைவில் பிரமிக்கத்தக்க தகவல்களுடன்…

==============================================================

எந்த வகையில் நியாயம்?

நமது தளம் எந்தளவு தனித்துவத்துடன் விளங்குகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். தளத்திற்கு என்று தனி அலுவலகம் அமைத்துவிட்ட நிலையில் செலவினங்களை சமாளிக்க மிகவும் போராட வேண்டியிருக்கிறது. யாரையும் கட்டாயப்படுத்த விரும்பாமல் மனமுவந்து வாசகர்கள் தங்கள் பங்களிப்பை செலுத்தவேண்டும் என்று தான் நாம் ‘விருப்ப சந்தா’ திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு தளத்தின் பணிகளில் உதவிய வாசகர்கள் தான் தற்போதும் உதவி வருகிறார்கள். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் புதிதாக ஒரு சிலர் ‘விருப்ப சந்தா’ அளித்து வருகிறார்கள். இது மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்று.

நமது தேவையறிந்தும் சிலர் பாராமுகமாக இருப்பது எந்த வகையில் நியாயம்? நாம் ஒவ்வொரு பதிவிலும் ‘விருப்ப சந்தா’ குறித்த அறிவிப்பை வெளியிடுவதன் நோக்கம், அவர்களை மனதில் வைத்து தான்.

ஓரளவு நல்ல பணியில் நல்ல நிலையில் இருப்பவர்கள் அவர்களால் இயன்ற தொகையை பிரதி மாதமோ அல்லது எப்போது முடியுமோ அப்போது அளித்து தளம் தொய்வின்றி தொடர உதவ வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த உலகமே பணத்தை சுற்றி  ஓடிக்கொண்டிருக்கிறது. ரைட்மந்த்ரா மட்டுமாவது விதிவிலக்காக இருக்கவேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம். இருப்பவர்கள் உதவினால் தான் இல்லாதவர்களுக்கு இந்த தளத்தை இப்போது போல் எப்போதும் இலவசமாக கொண்டு செல்லமுடியும். மாற்று வழிகளை ஆராயும் நிலைக்கு நம்மை தயவு செய்து தள்ளவேண்டாம்!

==============================================================

நல்வாழ்வுக்கு ஒரு டிப்ஸ் – 10

இறை வழிபாட்டில் தேங்காய் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது தெரியுமா?

* இறை வழிபாட்டில் தேங்காய் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது தெரியுமா? மற்ற அனைத்து காய்களும் கொட்டைகள் மற்றும் விதையிலிருந்து முளைக்கும் தன்மையுடையவை. அதாவது நாம் சாப்பிட்டுவிட்டு போடும் விதைகள் கூட சில நேரங்களில் முளைத்து மரமாகிவிடும். தேங்காய் அப்படி அல்ல. முழுத் தேங்காயை நட்டால் தான் முளைக்கும். எனவே அதற்கு தோஷம் கிடையாது.

* திருமணங்களில் திருமாங்கல்யமானது மஞ்சள் பூசிய தேங்காயின் மீது தான் வைக்கப்பட்டிருக்கும். இதிலிருந்தே தேங்காய் எந்தளவு புனிதமான ஒன்று என்று விளங்கும்!

* கருத்தரித்திருக்கும் பெண்கள் தேங்காய் உடைக்கக்கூடாது. தேங்காய் உடைப்பதையும் அவர்கள் பார்க்கக் கூடாது.

* பூஜைக்கு பயன்படுத்தும் தேங்காய் ரெண்டாகத் தான் உடையவேண்டும்.

* தண்ணீரில் நனைத்து நரம்பை பார்த்து தேங்காயை உடைத்தால் சரிபாதி இரண்டாக உடையும்.

* மட்டைத் தேங்காய் தானம் கொடுப்பது நல்லது.

* குணசீலத்தில் தேங்காய் தான் பிரசாதமாகத் தருவார்கள்.

* ஒரு மகத்தான பணியை துவக்குபவர்கள் நினைத்த காரியம் நினைத்தவாறு நிறைவேற தேங்காய் தானம் செய்யவேண்டும். (ஆலயங்களில் உற்சவம் நடக்கும்போதோ அல்லது அன்னதானம் நடக்கும்போதோ சமையலுக்கு தேங்காய் வாங்கி கொடுத்துவிடுங்கள்!)

==============================================================

Also check :

அது சாதாரண கை அல்ல தங்கக்கை!

ஒரே நாளில் ஞானம் வருமா? – கண்டதும் கேட்டதும் (3)

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு!

நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!!

சலவைத் தொழிலாளி அரங்கனுக்கு சூட்டிய பெயர்! நெகிழ வைக்கும் வரலாறு!!

‘மெய்யெனில் மெய், பொய்யெனில் பொய்’ – கண்டதும் கேட்டதும் (1)

அன்னப்பிராசனம் – குழந்தைக்கு ஊட்டும் முதல் சோற்றில் இத்தனை விஷயமா?

தீராத தோல்நோய்களை தீர்க்கும் திருத்தலம் + எருக்கன் இலை பிரசாதம்!

பிள்ளைகளுக்கு  என்ன சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்?

==============================================================

[END]

7 thoughts on “கொம்பு முளைத்த தேங்காய்!

 1. சுந்தர் சார் வணக்கம்

  மிகவும் அருமையான மற்றும்
  பிரமிக்கவைக்கும் பதிவு சார்

  மிக்க நன்றி

 2. கொம்பு முளைத்த தேங்காய் – தலைப்பை பார்த்த போதே..என்ன பதிவு என்று புரியவில்லை. இது போன்ற தலைப்புகள் தங்களுக்கு மட்டும் தான் அண்ணா கிடைகிறது. பேச்சு வழக்கில் நாம் பேசும் போது உனக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு? அதனையே தலைப்பாக்கி, மலைபெருமாள் சித்தர் பற்றிய செய்தியை சொன்னது நன்று.

  கொம்பு முளைத்த தேங்காய் பற்றிய சுவாரஸ்யம் நம் தலத்தில் கிடைத்ததும் ஆச்சர்ய ஆரம்பம்.கடைசியில் நீங்கள் வைத்த ட்விஸ்ட் அடுத்த பதிவை படிக்க ஆவல் தருகின்றது.

  தேங்காயின் முக்கியத்துவம் பற்றிய நல்வாழ்வுக்கான டிப்ஸ் மிகவும் தேவையானதும் கூட.

  நன்றி அண்ணா.

 3. எங்குமே கேள்விப் படாத ஒரு நிகழ்வை உரிய சான்றுடன் பதிவாக போட்டு உண்மை சம்பவத்தை மெருகேற்றி விட்டீர்கள்.

  நல்வாழ்விற்கு ஒரு டிப்ஸ் போட்டோ மங்களகரமாக அமைந்துள்ளது இந்த பதிவிற்கு.

  இந்த பதிவில் கூறப்பட்டுள்ள வி ஐ பி பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

  சுபம் ………

  வாழ்க .. வளமுடன்

  நன்றி
  உமா வெங்கட்

 4. இந்த பதிவில் மட்டைத் தேங்காயை பற்றி படிக்கும் பொழுது எனக்கு வளசரவாக்கம் anjaneyar கோவிலில் வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக 5.9.1990 இல் mattai தேங்காய் கட்டிய ஞாபகம் வருகிறது . சரியாக 2 நாள் கழித்து எனக்கு வேலை கிடைத்தது . 8.9.1990 அன்று வேலையில் சேர்ந்து 25 வருடங்கள் முடிக்கப் போகிறேன் என்பதை நான் ingu மகிழ்ச்சியுடன் pakirkiren. மட்டை தேங்காய்க்கு அவ்வளவு power உள்ளது

  வாழ்க வளமுடன்

  நன்றி

  Uma வெங்கட்

 5. Dear Sundar,
  A very nice article. Just wanted to share what i have heard about from the locals about the Dargah.

  When i visited Nagore temple (Naganatha swamy temple based on which the name of this town was derived), I was told by the priest that the Dargah is actually the Samadhi of a Brahmin who was not respected when he lived. He lived like a paradesi . When he died he was cremated by the fishermen community who maintained the samadhi. They felt that the samadhi was so powerful and were being showered blessings. The muslims took over the control from the fishermen community and changed it to Dargah.

  Also the person who ruled the place wanted to donate wealth to the temple, but the temple management at that time (It was not controlled by HR&CE then, but was maintained by the locals) requested the king to donate it to the samadhi as the temple had huge assets at that time and did not require any support.

 6. சார், எங்க வூர்ல சொல்வாங்க , நானும் திருவாரூர் தான். நான் ரொம்ப தடவை நாகூர் தர்காவுக்கு சென்றும் இந்த விபரம் தெரியாது சார்.

  ஆனா தங்களுக்கு மட்டும் இப்படி நல்ல நல்ல விஷயங்கள் எப்படித்தான் கிட்டுமோ?

  பகவான் அருள நிறைய நிறைய உங்களிடம் உண்டு சார்.

  வாழ்க வளமுடன்,

  தங்கள் நலம் விரும்பி

  சோ. ரவிச்சந்திரன்
  கார்வார், கர்நாடகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *