===============================================================
திருமண வரம் வேண்டி காத்திருப்போர் கவனத்திற்கு…
சிறுவாபுரி வள்ளி மணவாள பெருமானுக்கு கல்யாண மஹோத்ஸவம்!
சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் சாலையில் 35 கி.மீ. தொலைவில் சிறுவாபுரி முருகன் கோவில் உள்ளது. இங்கு மணக்கோலத்தில் வள்ளியும், முருகனும் கைகோர்த்த நிலையில் காட்சி அளிக்கிறார்கள்.
பூச நட்சத்திரத்தில் இந்த கோவிலில் வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. திருமண வயது வந்த ஆண்கள், பெண்கள் இந்த கோவிலுக்கு 6 வாரம் செவ்வாய்க்கிழமை தோறும் வந்து வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும்.
6 வாரம் தொடர்ந்து வர முடியாமல் சிரமப்படுபவர்களுக்காக அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழுவினர் ஆண்டுதோறும் சிறுவாபுரியில் வள்ளி. முருகனுக்கு கல்யாண மகோற்சவத்தை நடத்துகிறார்கள்.
‘அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டுக் குழு’வின் சார்பாக இந்த ஆண்டு செப்டம்பர் 6–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கல்யாண மகோற்சவ விழா நடக்கிறது. இந்த பிரார்த்தனையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு கட்டணம் கிடையாது. இதை அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழுவினர் இலவசமாக நடத்துகிறார்கள்.
சிறுவாபுரி வள்ளி மணவாளன் திருக்கல்யாணம் குறித்த முழு விபரங்கள், எங்கே எப்போது வரவேண்டும், நடைபெறும் தேதி, பிரார்த்தனையாளர்கள் செய்யவேண்டியது என்ன? உடன் வருபவர்கள் நடந்துகொள்ளவேண்டிய வழிமுறைகள் மற்றும் அனைத்து விபரங்களும், கீழ்காணும் பதிவில் இடம்பெற்றுள்ளது. அனைத்து விதமான ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் இதை பார்க்கலாம்.
சிறுவாபுரிக்கு வாங்க, மணமாலையை சூடுங்க!
Also check : இல்லறமும் நல்லறமும் கூடவே சொந்த வீட்டையும் அருளும் சிறுவாபுரி பாலசுப்ரமணியர் !
===============================================================
புதுப்புடவையில் கிழிசல், பொத்தல்…! தீர்வு சொன்ன பெரியவா!!
“மாமி பாருங்கோ… நான் புதுப்புடவை கட்டிண்டுருக்கேன். நன்னாயிருக்கோ?”
குதூகலம் பொங்கக் கேட்டாள் பெண்மணி. அடுத்த வீட்டு அம்மாள் அன்புடன் அருகே வந்து புடவைத் தலைப்பை கைகளால் தூக்கிப் பார்த்து தடவிக் கொடுத்து…
“என்னடி ஜெயந்தி? புதுப் புடவைங்கிறே. கிழிஞ்சிருக்கே…”
ஜெயந்தியும் பார்த்தால். கிழிந்து தானிருந்தது. “அதிசயமா இருக்கே மாமி… நான் கட்டிண்ட போது கிழிசல் இல்லையே? நன்னாப் பார்த்தேனே…?”
துக்கம் தாங்காமல் வீட்டுக்கு வந்தாள் ஜெயந்தி. கட்டியிருந்த புதுப்புடவையை களைந்தாள். ஜோடியாக புடவை வாங்குகிற வழக்கம். பீரோவிலிருந்த மற்றொரு புதுப் புடவையை உடுத்திக்கொண்டு போய் பக்கத்து வீட்டு அம்மாளிடம் காட்டிவிடவேண்டும் என்கிற உத்வேகம்.
பத்து நிமிஷத்தில் பக்கத்துக்கு வீட்டிலிருந்தாள் ஜெயந்தி.
“மாமி… இது வேற புடவை. நன்னா உதறிப் பார்த்து கட்டிண்டிருக்கேன். எப்படி இருக்கு?”
அம்மாள் அருகில் வந்தாள். “உனக்கென்னடியம்மா எந்தப் புடவை கட்டின்டாலும் நன்னாத் தான் இருக்கும்!”
புடவைத் தலைப்பை தொட்டுத் தூக்கி…
“என்னடி இது? நெருப்பு பொறி பட்ட மாதிரி பொத்தல்?”
ஆமாம்… என்ன இது? கஷ்டமே…?
மஹா பெரியவாளிடம் வந்தாள் ஜெயந்தி.
“நீ என்ன பண்ற…. ஒரு மஞ்சக் கிழங்கையும் வேப்பிலை கொத்தையும் புடவைத் தலைப்பு ஓரத்துல கட்டிவிட்டு அப்புறம் உடுத்திக்கோ…” – திருவாய் மலரந்தருளினார்கள் பெரியவா.
"
உடுத்திக்கொண்டாள் அப்படியே.
கிழசலும் இல்லை. பொத்தலும் இல்லை.
இந்த விஷயங்கள் எல்லாம் பெரியவாளுக்கு எப்படி ஸ்புரிக்கிறது?
அது தானே நமக்கு ஸ்புரிக்க மாட்டேனென்கிறது.
– ஸ்ரீ மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்
===============================================================
Also check :
யாருக்கு தானமளிக்க வேண்டும்? யாருக்கு அளிக்கக்கூடாது?
பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE
===============================================================
எந்த மாவில் கோலம் போடவேண்டும்?
சின்னக் காஞ்சிபுரத்தில் இருக்கும்போதெல்லாம், வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரதக்ஷிணம் செய்வது தவறாத் கடமை பெரியவாளுக்கு.
ஒரு விடியற்காலை பொழுதில் கோவிலில் பிரதட்சிணம் செய்துவிட்டு பக்தர்கள் எல்லாம் விஷ்ணு சஹஸ்ர நாமம் பாராயணம் செய்து கொண்டு உடன் வர, தெருவில் நடந்துவந்தார்கள் பெரியவா.
ஒரு வீட்டு வாசலில் ஒரு பெண் குழந்தை கோலம் போட்டுக்கொண்டிருந்தது.
பெரியவா நின்றார்கள்.
“கோலம் நன்னாப் போடறியே. பேஷ். ஆனா கோலம் அரிசி மாவாலேத் தான் போடணும். அப்போ தான் ஈ, எறும்பு பட்சியெல்லாம் அரிசி மாவை சாப்பிடும்; கோலம் போட்ட உன்னை சந்தோஷமா பார்க்கும். மொக்கு மாவாலே போட்டா அது எந்த ஜந்துவுக்கும் பிரயோஜனப் படாது சரியா?”
"
பெண் குழந்தை அழகாக தலையாட்டிவிட்டு நமஸ்காரம் செய்தது.
பெரியவாளின் இந்த அறிவுரை அந்தக் குழந்தைக்கு மட்டுமா? இல்லை எல்லாக் குழந்தைகளுக்குமா?
தாய்மார்கள் யோசிக்கட்டும்.
– ஸ்ரீ மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்
=============================================================
நல்வாழ்வுக்கு ஒரு டிப்ஸ் – 9
புதிய ஆடைகள் உடுத்தும்போது கவனிக்க வேண்டியவை!
இப்போதெல்லாம் கடைகளில் துணிமணிகள் வாங்கி வந்து அதை அப்படியே உடுத்திக்கொள்கிறார்கள். ஆடைகள் என்பவை சாதாரண விஷயம் அல்ல. புத்தாடைகள் உடுத்துவதற்கு என்று சில விதிமுறைகள் இருக்கின்றன.
“ஆள் பாதி ஆடை பாதி” என்று சொன்னார்கள் என்றால் ஆடையானது எவ்வளவு முக்கியமான ஒன்று என்பது விளங்கும்.
பூச நட்சத்திரம், வெள்ளிக் கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் புத்தாடை உடுத்துவது நன்று.
மஞ்சள் அல்லது குங்குமம் வைத்துவிட்டு பூஜையறையில் சிறிது நேரம் சுவாமி முன்பாக வைத்துவிட்டு கிழக்கு முகமாக நின்று தான் புதிய ஆடைகளை உடுத்தவேண்டும். மேலும் புதிய ஆடைகளை உடுத்திய பின்னர் ஏற்கனவே அணிந்த பழைய ஆடை மீது சிறிது நேரம் அமரவேண்டும்.
இவ்வாறு செய்தால் அந்த ஆடைகளில் ஏதேனும் தோஷம் இருந்தால் போய்விடும்.
டிப்ஸ் தொடரும்…
===============================================================
Also check : Success Stories of Rightmantra Prayer Club – சந்தான ப்ராப்தி, உத்தியோக ப்ராப்தி, ருண விமோசனம்
‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!
===============================================================
உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-Development and True Values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us to keep this site active. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
For more details : http://rightmantra.com/?page_id=7762
===============================================================
எல்லா பிரச்சனைகளுக்கும் சேர்த்து ஒரே பதிகம் / ஸ்லோகம் இல்லையா?
எதுக்கு இத்தனை பதிகங்கள்? ஒரே பதிகம் / ஸ்லோகம் அத்தனை பலனையும் தராதா??
===============================================================
Earlies articles on Maha Periyava in Guru Darisanam series…
மஹா பெரியவாவின் ஜட்ஜ்மெண்ட்டும் அனுக்ரஹ தெரபியும்!
அலகிலா விளையாட்டுடையான் ஒரு தாயுடன் விளையாடிய விளையாட்டு!
‘சில சமயம் பகவான் மீதே கோபம் வருகிறதே?’ – தெய்வத்திடம் சில கேள்விகள்! (Part II)
“தினமும் நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டியது எதை ஸ்வாமி?” தெய்வத்திடம் சில கேள்விகள்!
தெய்வத்தின் குரலில் தெய்வக் குழந்தையின் வரலாறு!
தர்மம் தழைக்க தோன்றிய தயாபரன் – மகா பெரியவா ஜயந்தி Spl & Excl.Pics!
“கேட்டால் கொடுக்கும் தெய்வம். கேளாமலே கொடுப்பவர் குரு!” – குரு தரிசனம் (37)
தாயுமானவளை அனுப்பிய தாயுமானவன் – குரு தரிசனம் (36)
மடத்துக்கு சென்றால் மகா பெரியவா கேட்கும் முதல் கேள்வி என்ன தெரியுமா? – குரு தரிசனம் (35)
நெற்றியில் குங்குமம்; நெஞ்சில் உன் திருநாமம்! – குரு தரிசனம் (34)
அலகிலா விளையாட்டுடையானின் அன்பு சாம்ராஜ்ஜியத்தில் ஒரு புதிய வரவு! குரு தரிசனம் (33)
குரங்கை அடித்ததால் ஏற்பட்ட தோஷம்! மகா பெரியவா சொன்ன பரிகாரம்!! குரு தரிசனம் (32)
சர்வேஸ்வரா நீ அறியாததும் உண்டோ? – குரு தரிசனம் (30)
“என்ன தாமஸ், பையன் கிடைச்சுட்டானா?” – குரு தரிசனம் (29)
“மகா பெரியவா நாவினின்று வருவது வார்த்தைகள் அல்ல. சத்திய வாக்கு!” – குரு தரிசனம் (28)
ஒரு ஏழை கனபாடிகளும் அவர் செய்த பாகவத உபன்யாசமும் – குரு தரிசனம் (27)
மகா பெரியவா அனுப்பிய உதவித் தொகை; ஒளிபெற்ற அர்ச்சகர்கள் வாழ்வு! – குரு தரிசனம் (26)
பெரியவா பிரசாதம்னா சும்மாவா? ஆப்பிள் செய்த அற்புதம்! – குரு தரிசனம் (25)
இது உங்களுக்கே நியாயமா சுவாமி? – குரு தரிசனம் (24)
ஸ்ரீ மகா பெரியவா திருவிளையாடல் – குரு தரிசனம் (23)
சொத்து வழக்குகளில் சிக்கித் தவித்தவருக்கு மகா பெரியவா சொன்ன பரிகாரம் – குரு தரிசனம் (22)
மகா பெரியவாவின் ஸ்பரிஸம் பட்ட குளத்து நீர் – குரு தரிசனம் (21)
சாமி குத்தம், தடைபட்ட திருப்பணி, முடித்து வைத்த மகா பெரியவா! – குரு தரிசனம் (20)
இது தான் பக்தி என்பதை உணர்த்திய குடும்பம் – குரு தரிசனம் (19)
பார்வையாலேயே குணப்படுத்தும் வைத்தீஸ்வரன் – குரு தரிசனம் (18)
கேட்டது ஒரு பிள்ளையார் சிலை; கிடைத்ததோ ஒரு கோவில் – குரு தரிசனம் (17)
குரு தரிசனம் தந்த பரிசு – அன்றும், இன்றும் – இரண்டு உண்மை சம்பவங்கள் – குரு தரிசனம் (16)
மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம் – நெஞ்சை உலுக்கும் சம்பவம் – குரு தரிசனம் (15)
“ஏம்பா! உங்களுக்கு எப்போ பார்த்தாலும் பெரியவா சேவை தானா?” – குரு தரிசனம் (14)
வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!
வாழைப்பழத்துக்கு பதில் மகா பெரியவா கொடுத்த நெற்பொரி. ஏன்? எங்கு? – குரு தரிசனம் (13)
“கடமைக்கே நேரமில்லை, இதுல கோவிலுக்கு எங்கே சாமி போறது?” – குரு தரிசனம் (12)
காசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவேண்டும்? – குரு தரிசனம் (11)
குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….
http://rightmantra.com/?cat=126
===============================================================
[END]
மகா பெரியவா பற்றி தொகுத்து அளித்த இரண்டு நிகழ்வுகளும் அருமை. மகா பெரியவாவின் ஞான திருஷ்டியை நினைத்து மெய் சிலிர்த்தேன். நான் தெரிந்தோ தெரியாமலோ அரிசி மாவினால் தான் கோலமிடுகிறேன் . இந்த பதிவை ஓபன் செய்வதற்கு 5 நிமிடம் munnaal தான் kolaththai பற்றி நினைத்தேன் . ஏனெனில் “ஒவ்வொரு வருடமும் வரலக்ஷ்மி பூஜா விற்கு மாக்கோலம் போடுவோமே ” இப்பொழுது விட்டுப் போய் விட்டது என்று மனதில் ஒரு வருத்தம் இருந்தது. கரெக்ட்டாக பதிவை ஓபன் பண்ணி கோலம் பற்றிய நிகழ்வை பார்த்ததில் ஆச்சர்யமாக உள்ளது மகா பெரியவா தியான நிஷ்டை படம் அழகோ அழகு
மகா பெரியவா சரணம்.
வாழ்க… வளமுடன்
நன்றி
உமா வெங்கட்
Very nice info and tips. Jaya Jaya Sankara Hara Hara Sankara