நாம் ஏற்கனவே பல பதிவுகளில் கூறியிருக்கிறோம் இறைவனை ஆலயத்தில் கருவறையில் தரிசிக்கும்போது சாட்சாத் இறைவனே நம்மெதிரே அமர்ந்து அருள்பாலிப்பதாக பாவித்து தான் தரிசனம் செய்யவேண்டும். அலங்காரம் செய்யப்பட கருங்கல்லாக கருதி இறைவன் எங்கோ இருப்பதாக கருதி வழிபடக்கூடாது.
“பார்க்குமிடம் எங்குமொரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமே” என்கிறார் தாயுமானவர்.
அதை மெய்ப்பிப்பது போன்ற இரண்டு சம்பவங்களை பார்ப்போம்!
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர் ஒரு முறை எட்டயபுரம் சென்றிருந்தார். வானம் பொய்த்துவிட்டதால் வயல்வெளிகள் எங்கும் பாளம் பாளமாக கிடந்தன. மக்கள் படும் துயரை காண சகியாமல், உடனே அமிர்தவர்ஷிணி ராகத்தில் ‘ஆனந்தாம்கருதகர்ஷினி’ என்ற பாடலை பாடி, ‘வர்ஷய, வர்ஷய’ என்றார். அதற்கு அர்த்தம் பொழிந்துவிடு என்பதாகும்.
இசையால் இறைவனை எளிதில் வசப்படுத்த முடியும் என்பதால், உடனே வானம் பொத்துக்கொண்டு கொட்டியது. கொட்டிய கொட்டில் ஊரே தெப்பம் போலாகிவிட்டது. விட்டால் வீடுகள் எல்லாம் மூழ்கிவிடும் போலிருந்தது.
உடனே… “ஸ்தம்பய…ஸ்தம்பய” என்றார். அப்படி என்றால் நின்றுவிடு என்று அர்த்தம்.
இவர் ஒருமுறை கீவளூரில் உள்ள கேடிலியப்பரை தரிசிக்க சென்றிருந்தார். இங்கு சுவாமியின் பெயர் கேடிலியப்பர், அட்சயலிங்க சுவாமி. ஆனால் இவர் சென்ற நேரம் குருக்கள் பூஜையை முடித்துவிட்டு நடையை சாத்திக்கொண்டிருந்தார்.
தீட்சிதர் பதறினார்.
“ஐயா…. கொஞ்சம் பொறுக்கக்கூடாதா? கேடிலியப்பர் மீது ஒரு கீர்த்தனையாவது பாடலாம் என்று ஆசையோடு ஓடிவந்தேனே…”
தீட்சிதரின் அருமை பெருமைகளை புரியாத குருக்கள், “சுவாமியை அவசர அவசரமாக பாடவேண்டாம். நாளை வந்து நிதானமாக பாடுங்கள். சுவாமி இங்கே தான் இருப்பார்” என்றார் எகத்தாளமாக.
ஆனால், தீட்சிதர் தாமதிக்காமல் “அக்ஷய லிங்க விபோ” என்ற ஒரு அற்புதமான பாடலை சங்கராபரண ராகத்தில் பாடத் தொடங்கிவிட்டார்.
உடனே சன்னதியின் கதவு படாரென்று தானாக திறந்துகொண்டது. குருக்கள், உடனே பதறிப்போய், தீட்சிதரை அழைத்துச் சென்று தீபாராதனை காட்டி தரிசிக்கவைத்தார்.
பிரபல பாடலான வாதாபி கணபதிம் பஜே என்ற இவரது பாடலை பாடித்தான் இன்றும் பல வித்துவான்கள் கச்சேரியை ஆரம்பிக்கின்றனர்.
கீவளூரைப் போல, மதுரை சோமசுந்தரர் மீனாக்ஷி கோவிலை வைத்தும் ஒரு அதிசயம் சொல்லப்படுகிறது.
15 ஆம் நூற்றாண்டில் மாலிக் கஃபூரின் படையெடுப்பின் போது தாங்கள் கொள்ளையடிக்கும் கோவில்களில் உள்ள மூலவரை எடுத்து சின்னா பின்னமாக்கி விடுவார்கள் . அப்பொழுது மீனாக்ஷி அம்மன் கோவிலையும் சூறையாட வந்தார்கள் அப்பொழுது சிவலிங்கத்தை காப்பாற்ற சிவாச்சாரியார்கள் ஒரு கல்திரையை எழுப்பி , அதற்கு முன் ஒரு மூர்த்தியை பிரதிஷ்டை செய்து விட்டார்கள். மாலிக் கஃபூரி படையினர் இது தான் அசல் மூர்த்தி என்று கருதி சிலையை இடித்து விட்டனர். இடிந்த சிவலிங்கம் அங்கேயே இருந்தது. ஆனால் ஒரிஜினல் சிவலிங்கம் சிவாச்சாரியர்களால் காப்பாற்றப்பட்டது.
உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
48 ஆண்டுகள் கழித்து விஜய நகர பேரரசு வந்தவுடன் எல்லா கோவிலையும் புனருத்தாரணம் செய்தார்கள் அப்பொழுது விஷயம் அறிந்தவர்கள் உதவியுடன் மீனாக்ஷி அம்மன் கோவிலில் சொக்கநாதர் சன்னதியில் தற்காலிக கல் திரையை அகற்றிவிட்டு பார்த்தபோது உள்ளே இருந்த அசல் லிங்கம் ஒன்றும் ஆகாமல் சந்தன வாசனையுடன், தீபம் எரிந்து கொண்டிருக்கும் நிலையில், லிங்கத்தின் மீது சூட்டப்பட்டிருந்த மாலை வாடாமல் அன்று பறித்து சூட்டியது போல இருந்ததாம். என்னே ஆச்சர்யம். !!!!
இப்பொழுது கூட நீங்கள் மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு சென்றாலும் அந்த உடைந்த சிவலிங்கத்தை துர்கை அம்மன் சன்னதி முன்பு , இன்றும் அந்த லிங்கத்தையும் கல்வெட்டையும் காணலாம் (கல்யாண சுந்தரர் சன்னதி நுழைவு வாயிலில்).
அருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன் தன்னை
அமரர்கள்தம் பெருமானை அரனை மூவா
மருந்தமரர்க் கருள்புரிந்த மைந்தன் தன்னை
மறிகடலுங் குலவரையும் மண்ணும் விண்ணும்
திருந்தொளிய தாரகையுந் திசைக ளெட்டுந்
திரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவு மாய
பெருந்தகையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!
================================================================
Also check :
திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!
சிவபெருமான் கண்ணாடியில் ரசித்த தனதுருவம்… பிறகு நடந்தது என்ன?
பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!
முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!
ஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்!!
ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!
இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்!
ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்!
தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!
பணத்தை தேடி வரவழைத்த பதிகம்! மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!
உணவும், உறக்கமும், நிம்மதியும், செல்வமும் நல்கி இறுதியில் சிவபதம் அருளும் பதிகம்!
வசிஷ்டர் அருளிய தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்
நமக்கென்று ஒரு சொந்த வீடு – உங்கள் கனவு இல்லத்தை வாங்க / கட்ட வழிகாட்டும் பதிகம்!
ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?
அகத்தியரின் ‘திருமகள் துதி’ – இது வீட்டில் இருந்தாலே திருமகளின் அருள்மழை நிச்சயம்!
மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம், வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக!
ஆஞ்சநேய பக்தர்களுக்கு ஓர் வரப்பிரசாதம் – கிடைப்பதர்க்கரிய ஸ்ரீஹநுமத் சுப்ரபாதம்!!
வறுமையை விரட்டி, பொன் பொருள் சேர்க்க எளிய தமிழில் ஒரு அழகிய ஸ்லோகம்!
களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!
‘திருவாசகம்’ என்னும் LIFESTYLE MANTRA – கருவுற்றிருக்கும் பெண்கள் கவனத்திற்கு!
கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!
அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!
பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!
செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!
================================================================
[END]
நம் ஈசனைப் பற்றிய இரண்டு சம்பவங்களும் அருமை.
முத்துச்வாமி சுவாமி தீட்சதர் பற்றி படிக்கும் பொழுது இறைவனே அவருக்கு கதவை திறந்து காட்சி கொடுத்ததை படிக்க நெஞ்சம் நெகிழ்கிறது. அவர் ஈசனின் மேல் கொண்ட பக்தி எப்பேற்பட்டது.
இரண்டாவது சம்பவம் படிக்கும் பொழுது என் மனம் நேராக மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு சென்று விட்டது. ஏனெனில் மதுரைக்கு செல்லும் பொழுதெல்லாம் உடைந்த சிவலிங்கத்தையும் அதன் கல்வெட்டையும் பார்க்கும் பாக்கியம் கிடைக்கிறது. அதுவும் எங்கள் ஊரான மதுரை நிகழ்வை படிக்கும் பொழுது பரவசம்.
எம் ஈசனின் படம் அருமை …
நன்றி
உமா வெங்கட்
பெரியவளை பேசாத நாள் எல்லாம் பிறவா நொடியே