Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, July 12, 2024
Please specify the group
Home > Featured > வியாபாரத்திலும் சரி வெற்றியிலும் சரி நிலைத்து நிற்க ஆசையா?

வியாபாரத்திலும் சரி வெற்றியிலும் சரி நிலைத்து நிற்க ஆசையா?

print
மது தளத்தில் இதுவரை வெளியான MOTIVATIONAL பதிவுகளில் இது மிக மிக மிக மிக மிக முக்கியமான ஒன்று! இந்த பதிவின் மதிப்பை எல்லாரும் உணர்ந்துகொள்வது கடினம்.

கைக்கடிகாரங்கள் தற்போது மெல்ல மெல்ல அழிந்து, வெறும் அலங்காரப் பொருளாகிவிட்டன. எச்.எம்.டி. நிறுவனம் அதில் தனிக்காட்டு ராஜாவாக உச்சத்தில் இருந்தபோது டைட்டன் உள்ளே நுழைந்தது. டைட்டனை அது எதிரியாக பாவிக்கத் தொடங்கி, தனது தயாரிப்புக்களின் விலையை குறைத்துக்கொண்டே வந்தது. கடைசியில் யாரும் எதிர்பாராமல் நோக்கியா மொபைல் வந்து இரண்டுக்குமே சமாதி கட்டிவிட்டது.

ரெமிங்டன், கோத்ரேஜ் இரண்டும் டைப்ரைட்டிங் மிஷின் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தன. இரண்டும் போட்டி காரணமாக விலை குறைப்பில் ஈடுபட்டன. கடைசியில் அவர்கள் இருவருக்குமே எமனாக வந்தது கம்ப்யூட்டர். டைப்ரைட்டிங்கும் காணாமல் போய், டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டுகளும் தற்போது காணாமல் போய்விட்டன.

Watch

Typewriter

CISCOகணினி தயாரிப்பு நிறுவனங்களான டெல் மற்றும் எச்.பி. இரண்டும் இதே போல போட்டிபோட்டு விலை குறைப்பில் ஈடுபட்டன. ஆப்பிளும் சாம்சங்கும் எதிர்பாராமல் அவர்கள் இடத்தை ஸ்மார்ட்போன்கள் மூலம் பிடித்துக் கொண்டன.

இதே போல கார்ப்பரேட் விமான பயணிகளை ஈர்க்க லுப்தான்சாவும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்ஸும் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டனர். கடைசியில் CISCO TELEPRESENCE என்கிற தொழில்நுட்பத்தை கொண்டு வந்து இருவரது வருமானத்திற்கும் வேட்டு வைத்துவிட்டது. சிஸ்கோ செய்த புரட்சியால் கார்ப்பரேட் விமான பயணிகள் குறைந்துவிட்டனர். CISCO ஒருவேளை தானும் விமான சேவையை ஆரம்பித்திருந்தால் புலியை பார்த்து பூனை சூடுபோட்டுக்கொண்ட கதையாக இன்னொரு கிங் ஃபிஷராக மாறியிருக்கும். வித்தியாசமாக சிந்தித்ததால் இன்று யாராலும் அசைக்க முடியாத ஒரு மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிவிட்டது.

saregama

Trancendஇதே போல ஆடியோ நிறுவனங்களான சோனியும் சரிகமாவும் மோதிக்கொண்டன. கடைசியில் காலர் ட்யூன்கள் மூலமும் ஹலோ ட்யூன்கள் மூலமும் ஒவ்வொரு மாதமும் பல நூறு கோடிகளை அனாயசமாக குவிப்பது என்னவோ ஏர்டெல் தான்.

பிளாப்பி டிஸ்க் தயாரிப்பாளர்கள் ஆம்கெட் மற்றும் இமேஷன் தங்களுக்குள் போட்டியிட்டுகொண்டபோது மோசர்பேர் மற்றும் சாம்சங் ஆகியவை சி.டி., டி.வி.டி. மூலம் மென்பொருள் மார்கெட்டை கைப்பற்றின. ஆனால் அவர்கள் வைத்திருந்த மார்க்கெட்டை தற்போது டிரான்ஸ்செண்ட், சான்டிஸ்க் ஆகியவை கைப்பற்றிவிட்டன. இப்போது பல நிறுவனங்கள் பிளாஷ் டிரைவ் சந்தையில் இருந்தாலும் டிரான்ஸ்செண்ட், சான்டிஸ்க் அளவுக்கு வெற்றி பெற முடியவில்லை. காரணம் கணினியில்  யூ.எஸ்.பி. (USB) அறிமுகமாகி பாப்புலர் ஆகும்போதே மேற்கூறிய இரண்டும் சந்தைக்குள் தங்கள் தயாரிப்புக்களை களமிறக்கிவிட்டுவிட்டன.

வி.ஜி.பன்னீர்தாஸ் & கோவும், செல்லமணி & கோவும், விவேக் & கோவும் மாறி மாறி ரேடியோக்களில் விளம்பரம் செய்துகொண்டிருக்க, சத்தம்போடாமல் ஃபிளிப்கார்ட் உள்ளே நுழைந்து எலக்ட்ரானிக் சந்தையை கைப்பற்றிவிட்டது.

சினிமாவிலும் இதே போன்ற உதாரணங்கள் உண்டு. மிக பெரிய ஜாம்பவான் இயக்குனர்கள், தமிழ் சினிமாவில் புது ரத்தம் பாய்ச்சியவர்கள் என்றெல்லாம் கூறப்பட்ட பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்யராஜ் போன்றவர்கள் எல்லாம் குறிப்பிட்ட வருடங்களுக்கு மேல் தாக்கு பிடிக்க முடியவில்லை. காரணம் மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப அவர்கள் தங்களை அப்டேட் செய்துகொள்ளாதது தான். ஆனால் எத்தனையோ புதுப் புது இயக்குனர்களின் படையெடுப்பிலும் ஷங்கரும், மணிரத்னமும் தாக்கு பிடிக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் அவர்கள் மாறும் ட்ரெண்டுக்கு ஏற்ப தங்களை, தாங்கள் படம் எடுக்கும் தொழில்நுட்பத்தை, தங்களை மேம்படுத்திக்கொள்கிறார்கள் என்பது தான்.

இதே போல பல உதாரணங்கள் உண்டு.

நாம் அமெரிக்காவை பார்த்து, ஐரோப்பாவை பார்த்து பயப்படுகிறோம். ஆனால் உண்மையில் நமக்கு அனைத்து வழிகளிலும் (உள்நாட்டு சந்தை, பாதுகாப்பு etc) அச்சுறத்தலாக இருப்பது சீனா தான்.

"

உங்கள் போட்டியாளர்களை உங்கள் எதிரிகளாக பாவிக்கவேண்டாம். அவர்கள் என்றுமே உங்கள் எதிரிகள் அல்ல. இன்றைய எதிரிகள் உங்கள் கண்களுக்கு தெரியாமல், எதிர்பாராத இடங்களிலிருந்து தான் வருவார்கள். அவர்களிடமிருந்து தப்பிக்க ஒரே வழி INNOVATION எனப்படும் புதுமை தான்.

மாறும் சூழலுக்கேற்பவும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்பவும் தொழில்நுட்பரீதியாக தங்களை மேம்படுத்திக்கொள்ளாத எந்த ஒரு வியாபாரமும் நீடித்து நிற்க முடியாது.

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. :
9120 2005 8482 135
Account type :
Current Account
Bank :
Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code :
UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

நம் தளம் மேலும் மேலும் வளர, தொய்வின்றி தொடர் உங்கள் பங்களிப்பு அவசியம்!

காலத்திற்கேற்றவாறு தங்களை அப்டேட் செய்துகொள்ளாத எந்த ஒரு வியாபாரத்திற்கும் வர்த்தக நிறுவனத்திற்கும் எதிரிகளே தேவையில்லை. அவர்களே தங்களை அழித்துக்கொள்வார்கள்.

எனவே உங்களை உங்கள் தொழிலை, விற்பனை வழிமுறைகளை அவ்வப்போது ஆராய்ந்து மேம்படுத்திக்கொள்ளத் தவறவேண்டாம்.

இதை நம் முகநூல் நண்பர் தொழிலதிபர் திரு.ஜான் யேசுதாஸ் அவர்கள் முகநூலில் பகிர்ந்திருந்தார். ஆங்கிலத்தில் அவர் பகிர்ந்ததை சற்று மெருகூட்டி, இரண்டொரு விஷயங்களை சேர்த்து தமிழில் தந்திருக்கிறோம்.

அவர் பகிர்ந்த ஒரிஜினல் ஆங்கில எழுத்துரு கீழே தரப்பட்டுள்ளது.

Folks keep upgrading and be innovative.

HMT thought Titan as a competitor and kept on cutting prices… Nokia mobile came and hit both…

Facit and Godrej mfd typewriters and competed with price reduction… Computers hit them..

Dell, hp competed to reduce prices – unlikely Apple and Samsung hit them..

Lufthansa and British Airways fought fiercely and cut fares every month… In came Cisco with telepresence solutions… Very few are travelling now… doing video conferencing !

Sony and HMV and Saregama fought pitched battle it is airtel which is earning 300 crores month on month in dialer tunes..

Like this many examples….

We were worried about USA, Greece, Europe etc… It is China which is hitting us….

Don’t mistake your competitors for enemies – today the enemy is invisible, comes from unlikely places….

The only rescue is innovation.. facebook.com/John Yesudas

================================================================

ரைட்மந்த்ரா பதிவுகள் அனைத்தும் கடும் உழைப்பில் விளைபவை. இவற்றை காப்பி பேஸ்ட் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது, பொருளாதார ரீதியான ஆதாயங்களுக்கு பயன்படுத்துவது சட்டப்படி குற்றம். பதிவை உங்கள் நட்பு வட்டத்திடமும் சுற்றத்தினரிடமும் பகிர / மின்னஞ்சல் செய்ய தனி வசதிகள் பதிவின் துவக்கத்திலும் இறுதியிலும் தரப்பட்டுள்ளன. அவற்றை பயன்படுத்தவும். நன்றி.

================================================================

நல்வாழ்வுக்கு ஒரு டிப்ஸ் – 7

வியாபாரத்தில் அதிக லாபம் ஈட்ட…!

Putlur

என்ன தான் வியாபாரத்தில் புதுமைகள் புகுத்தினாலும் சிலருக்கு எப்போதும் கடன் தொல்லை இருந்து கொண்டே இருக்கும். சில வியாபாரிகள் தங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் வகையில் வியாபாரம் நடக்கவில்லையே என்று வேதனைப்படுவார்கள். இத்தகைய பாதிப்புகளில் இருப்பவர்கள் புட்லூர் அங்காள பரமேசுவரியை சரண் அடைந்து 5 வாரம் எலுமிச்சம் கனி பெற்று வழிபட்டால் போதும், எல்லா பிரச்சினகைளும் பனி போல விலகி மறைந்து விடும்.

ஆவடி – திருவள்ளூர் சாலையில் புட்லூர் அமைந்துள்ளது. இராமாபுரம் என்றும் பெயர் உண்டு. ரயிலில் செல்வதானால் திருவள்ளூருக்கும் செவ்வாய்ப்பேட்டைக்கும் இடையே புட்லூர் ரயில் நிலையம் உள்ளது.

டிப்ஸ் தொடரும்…

================================================================

Also check for more motivational stories :

எது உண்மையான வெற்றி? எது உண்மையான தோல்வி?

What is the real meaning of PRECIOUS ? மதிப்புமிக்கது என்றால் என்ன ?

இன்று கிடைக்கும் தேன்துளி Vs நாளை கிடைக்கக்கூடிய வெகுமதி!

பாலைவனமாய் இருக்கும் வாழ்க்கை சோலைவனமாக வேண்டுமா?

இறைநம்பிக்கை Vs தன்னம்பிக்கை!

ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ?

விதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் எது தெரியுமா?

நாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் ?

‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது?’

எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? –

வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா?

பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா?

சந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்

மகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா ?

இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் ?

நடப்பதெல்லாம் நன்மைக்கே! நடக்காதது இன்னும் நன்மைக்கே!!

அனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் ?

நினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்!

மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா?

தவளையை கொன்றது எது?

================================================================

[END]

7 thoughts on “வியாபாரத்திலும் சரி வெற்றியிலும் சரி நிலைத்து நிற்க ஆசையா?

 1. Good Morning,

  Excellent Article. An Confindent and Motivational Issues are Clearly Mentioned in this article. Thanks to Mr. John Jesudass and Mr. Sundar for Presenting this Wonderful article.

  Have an nice and Successful Week.

  S.Narayanan.

 2. காலை வணக்கம் சுந்தர்
  நல்ல பதிவு. புதுமைகள் இல்லாமல் வளர்சிகள் இல்லை. உங்கள் பதிவுகள் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.

 3. தமிழாக்கம் தங்கள் மெருகூட்டலில் அருமை.

  இந்த வாரம் இனிய வாரமாக அமைய வாழ்த்துக்கள்

  டிப்ஸ் நன்றாக உள்ளது

  வாழ்க ………….. வளமுடன்

  நன்றி
  உமா வெங்கட்

 4. மாற்றம் ஒன்றே மாறாதது.
  இது வியாபாரத்துக்கு மட்டும் இல்லை.அனைத்துக்கும் பொருந்தும்.

  அருமையான மிகவும் தேவையான ஒரு டிப்ஸ்.

  நன்றி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *