Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, October 6, 2024
Please specify the group
Home > Featured > சிவனின் பெருமை Vs அவன் அடியார்களின் பெருமை! – Rightmantra Prayer Club

சிவனின் பெருமை Vs அவன் அடியார்களின் பெருமை! – Rightmantra Prayer Club

print
றைவனின் பெருமையை படிப்பதை விட அவன் அடியவர்களின் பெருமையை படிப்பது மிகவும் சிறந்தது. இறைவன் தன் பெருமையை கேட்க விரும்புவதைவிட அவன் அடியவரின் பெருமை கேட்பதையே அதிகம் விரும்புவான். அதுவும் சிவபக்திக்கு உதாரணமாய் திகழ்ந்து, பக்தி என்றால் எப்படி இருக்கவேண்டும் என்று நமக்கெல்லாம் வாழ்ந்து காட்டிவிட்டு போயிருக்கும் நாயன்மார்களின் பெருமையை படிப்பது என்றால் அதன் பலனை கேட்கவேண்டுமா என்ன?

சிவனின் பெருமையை எங்கேனும் யாரேனும் உரைப்பதை கேட்டால், நந்தி அங்கே உடனே வந்துவிடுவாராம். ஆனால், அடியார்களின் பெருமை என்றால் சிவபெருமானே நேரில் வந்துவிடுவாராம்.

"

எனவே வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நாயன்மார்களின் திவ்ய சரிதங்களை கேட்டு, படித்து புண்ணியத்தை சேர்த்துக்கொள்ளவேண்டும்.

நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் 23,  ஆவணி அனுஷம் குலச்சிறை நாயனார் குரு பூஜை.

சிவத் தொண்டே திருத்தொண்டு !

பாண்டியநாட்டின் வளம் பெருக்கிய மணமேற்குடி என்ற ஊரின் தலைவராகத் திகழ்ந்தவர் குலச்சிறையார். இவர் நம்பியாரூரரால் ‘பெருநம்பி’ என்று போற்றப்பட்டவர். சிவத் தொண்டே தன் திருத்தொண்டு என வாழ்ந்து வந்தவர். சிவனடியார்களிடம் மிகுந்த பக்தி கொண்டவராக இருந்து வந்தார். அவர்களில் நல்லவர் தீயவர் என்று பார்க்காமல் பணிந்து வணங்குவார். ஒருவராக இருந்தாலும் சரி, பலராக வந்தாலும் சரி அனைவரையும் வரவேற்று அமுது படைப்பார்.

இத்தகைய பண்பு கொண்ட குலச்சிறையார், நின்றசீர் நெடுமாறன் என்னும் பாண்டிய மன்னனின் முதலமைச்சராக பணிபுரிந்து வந்தார். மன்னன் சமண நெறியை பின்பற்றியபோதும், இவர் சைவத்தின் வழி நின்றார். அப்பொழுது ஒரு நாளில் சிவநெறியை உலகிற்கு விளக்கி வரும் திருஞானசம்பந்தர், பாண்டிய நாட்டிற்கு அருகே திருமறைக்காட்டில் இருப்பதாக குலச்சிறை நாயனாருக்கு செய்தி கிடைத்தது. செய்தி கிடைத்ததும், அவ்விடம் சென்று திருஞானசம்பந்தரை நேரில் கண்டு அடி பணிந்து ஆனந்தம் அடைந்தார்.

kulasirai_nayanar

இந்த நிலையில் பாண்டிய நாடெங்கும் சைவம் தழைக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தார், பாண்டிமாதேவி. எனவே திருஞானசம்பந்தரை, பாண்டியநாட்டிற்கு எழுந்தருள வேண்டும் என்று குலச்சிறை நாயனார் கேட்டுக் கொண்டார். அதன்படி பாண்டிய நாட்டிற்கு வந்தார் திருஞானசம்பந்தர். அவரை பாண்டிமாதேவியார், நேரில் சென்று வரவேற்றார். அப்போது நிலம் மீது விழுந்தார் போல் விழுந்து திருஞானசம்பந்தரின் பாதம் தொழுதார். குலச்சிறை நாயனார், திருஞானசம்பந்தர் வந்த முத்து சிவிகையின் முன்பாக விழுந்தார். ஆனால் எழும்பவில்லை. இதுபற்றி திருஞானசம்பந்தரின் குழுவினர் அவரிடம் கூறினர். அதைக் கேட்டதும் முத்து சிவிகையில் இருந்து இறங்கிய திருஞானசம்பந்தர், தம் கைகளால் குலச்சிறை நாயனாரை அணைத்தெடுத்தார். அவர் தம் அரவணைப்பினால் எழுந்த குலச்சிறையார், திருஞானசம்பந்தரை வணங்கி நின்றார்.

பின்னர் திருஞானசம்பந்தரோடு சென்று, ஈசனை வழிபடும் பாக்கியம் பெற்றார். தொடர்ந்து திருஞானசம்பந்தரை அங்குள்ள திருமடத்தில் தங்க வைத்தார். அப்போது திருஞானசம்பந்தருக்கும், அவருடைய தொண்டர்களுக்கும் விருந்தளிக்கும் பெரும்பேறும், குலச்சிறை நாயனாருக்கே கிடைத்தது. அதை எண்ணி அவர் உள்ளம் நெகிழ்ந்து போனார். அனைத்தையும் சிறப்புற செய்தாலும், குலச்சிறை நாயனாரின் மனதில் ஒரு பயம் கலந்த சிந்தனை இருந்து கொண்டே இருந்தது. அது வேற்று பிரிவினரால், திருஞானசம்பந்தருக்கு ஏதேனும் ஆபத்து நிகழ்ந்து விடுமோ என்பதுதான்.

ஆனால் அவர் அஞ்சியது படியே அன்று இரவு, திருஞானசம்பந்தர் தங்கியிருந்த திருமடத்திற்கு தீவைக்கப்பட்டது. இருப்பினும் அதில் திருஞானசம்பந்தருக்கோ, அவரைச் சேர்ந்தவர்களுக்கோ ஒன்றும் நேரவில்லை. இந்த செய்தி கேட்டதும் பதைபதைத்து போய் அவ்விடம் வந்து சேர்ந்தார் குலச்சிறை நாயனார். அவர் திருஞானசம்பந்தரை நேரில் கண்டு மகிழ்ந்தார். ஒரு ஊரில் மக்கள் செய்யும் இந்த தீவினைக்கு, அந்நாட்டை ஆளும் மன்னனே காரணம் என்பதால், திருஞானசம்பந்தரின் ஆணையால் பாண்டிய மன்னனுக்கு வெப்பு நோய் தாக்கியது. அதை தீர்த்து வைக்க எவராலும் முடியவில்லை.

அதையடுத்து குலச்சிறை நாயனாரின் வேண்டுகோளை ஏற்று, மன்னனை திருமடத்திற்கு அழைத்து வரும் படி திருஞானசம்பந்தர் கூறினார். அதன்படி பாண்டிமாதேவியார், பாண்டிய மன்னனுடன் திருமடத்திற்கு வந்தார். அங்கு மன்னனை பற்றி இருந்த வெப்பு நோயை, இறைவனின் புகழ்பாடி திருஞான சம்பந்தர் நீக்கி அருளினார். அதைத் தொடர்ந்து, திருமடத்திற்கு தீவைத்தவர்கள் கண்டறியப்பட்டு, அனைவரும் கழுவில் ஏற்றப்பட்டனர்.

Manalmelkudi

இதையடுத்து பாண்டிய மன்னன் திருநீறு அணிந்து சைவ மதத்தை தழுவினான். மன்னனையும், அவன் மனைவி பாண்டிமாதேவியையும், குலச்சிறை நாயனார், ஈசன் சன்னிதிக்கு அழைத்துச் சென்று வணங்கச் செய்தார். மேலும் திருஞானசம்பந்தரை, பாண்டிய நாட்டின் திருத்தலங்கள் பலவற்றுக்கும் அழைத்துச் சென்று வழிபடச் செய்தார் குலச்சிறை நாயனார். பின்னர் தன் சொந்த ஊரான மணமேற்குடிக்கும் எழுந்தருளச் செய்தார்.

அங்கிருந்து சோழ நாட்டிற்கு புறப்பட்ட ஆயத்தமானார் திருஞானசம்பந்தர். ஆனால் குலச்சிறை நாயனாரால், அவரை விட்டு நீங்க முடியவில்லை. அது பற்றி அறிந்ததும் இங்கிருந்தே தொண்டு செய்யும்படி குலச்சிறை நாயனாருக்கு அறிவுறுத்தினார், திருஞானசம்பந்தர். அதன்படி இறுதிகாலம் வரை அடியவர் தொண்டாற்றி இறைவனடி சேர்ந்தார்.

===============================================================

Also check : Success Stories where our Rightmantra Prayer Club prayers are answered….

‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

===============================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் : குன்றத்தூரை சேர்ந்த திருமுறை ஆசிரியர் திரு.சங்கர் அவர்கள்.

தனியார் நிறுவனத்தில் இருந்து ஓய்வுபெற்ற திரு.சங்கர் அவர்கள், கடந்த 13 ஆண்டுகளாக குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவிலில் மாணவர்களுக்கு இலவசமாக தேவாரம் உள்ளிட்ட திருமுறைகளை சொல்லிக்கொடுத்து வருகிறார். வணிக நோக்கமின்றி சேவை நோக்கிலேயே இந்த அருந்தொண்டை அவர் செய்துவருகிறார்.

இவர் மூலம் திருமுறை கற்றுக்கொண்ட மாணவர்கள் எத்தனையோ பேர்.

நமது முற்றோதல் விழாவில் திரு.சங்கர் அவர்கள் கௌரவிக்கப்ப்படும்போது...
நமது முற்றோதல் விழாவில் திரு.சங்கர் அவர்கள் கௌரவிக்கப்ப்படும்போது…

ஆகஸ்ட் 2, 2015 ஞாயிறு அன்று குன்றத்தூரில் இவரது மாணவர்களை கொண்டு நமது தளம் சார்பாக அகத்திய தேவார திரட்டு முற்றோதல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அது சமயம், நமது திரு.சங்கர் அவர்கள் கௌரவிக்கப்பட்டு அவரது தொண்டு பற்றி அனைவருக்கும் எடுத்துக்கூறப்பட்டது.

நமது பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். அவருக்கு நம் மனமார்ந்த நன்றி.

Sankar Iyya 2

வரும் ஞாயிறு பிரார்த்தனை, குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவிலில் தேவார வகுப்பு நடைபெறும்போது நடைபெறவிருக்கிறது.

===============================================================

Also check :

பள்ளி மாணவர்களுக்கு இலவச திருமுறை வகுப்பு – சங்கர் அவர்களின் அயராத சிவத்தொண்டு!

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் – மழலைகள் போதிக்கும் ஒரு பாடம்!

===============================================================

இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியுள்ள வாசகர்களைப் பற்றி…

இந்த வார பிரார்த்தனைக்கு முதல் கோரிக்கை அனுப்பியிருக்கும் அன்பர் திரு.பாலாஜி அவர்கள் நம் வாசகர் பழனியப்பன் அவர்கள் மூலம் நமது பிரார்த்தனை கிளப் பற்றி கேள்விப்பட்டு பிரார்த்தனையை சமர்பித்திருக்கிறார். அலைபேசியில் அவர் நம்மை தொடர்புகொண்டு பேசும்போதே, தனது குறை நீங்கி பிரார்த்தனை நிறைவேறிவிட்டது போன்ற நம்பிக்கையோடு தான் பேசினார். அவரது குரலில் இருந்தே அதை நாம் உணர முடிந்தது. அவர் நம்பிக்கை வீண்போகாது!

அடுத்து ஹோசூரை சேர்ந்த திரு.நாகராஜன். அவர் மகள்கள் இருவர் கல்லூரியில் படிக்கும் நிலையில் அவருக்கு உத்தியோகத்தில் இப்படி ஒரு சோதனை ஏற்பட்டுள்ளது. நமது தளத்தின் பதிவுகளை ரெகுலராக படித்துவருவதாக குறிப்பிட்டுள்ளார். மிக்க மகிழ்ச்சி. விரைவில் இவரது பிரச்னை தீர்ந்து ஒரு நல்ல உத்தியோகம் எல்லாம் வல்ல ஈசனருளால் கிடைப்பது திண்ணம்.

பொது பிரார்த்தனையை சமர்பித்திருப்பது இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.சங்கர் அவர்கள் தான். அவரை தொடர்புகொண்டு, பொதுப் பிரார்த்தனை பற்றி எடுத்துக்கூறி, நீங்கள் பார்த்து வருந்தும் சமூகத் தீமை ஏதேனும் ஒன்றை பற்றி கூறினால் அதையே பொதுப் பிரார்த்தனையாக வைத்துவிடலாம் என்றோம். ஒரு சில வினாடிகள் தான் சிந்தித்தார். இதுவரை யாரும் சிந்திக்காத கோணம். சமூக அக்கறை மிக்க ஒருவரால் தான் இப்படி சிந்திக்க முடியும். நன்றி திரு.சங்கர் சார். நீங்கள் விரும்புவது போல ஒரு சமூகம் சிவனருளால் விரைவில் உருவாகும்.

===============================================================

* திருமண தாமதம் தொடர்பான கோரிக்கைகள் தனியாக தொகுக்கப்பட்டு வருகிறது. நாம் கூறிய அந்த முக்கியப் பிரமுகரைப் பற்றி நமது தளத்தில் பதிவு வெளியானவுடன் அந்த பிரார்த்தனைகள் அவரைக் கொண்டே நடத்தப்படும். அதுவரை திருமண தாமதம் தொடர்பான பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும். editor@rightmantra.com என்கிற முகவரிக்கு அந்த கோரிக்கைகளை மின்னஞ்சல் அனுப்பவும்.

நம் தளத்தில் வெளியிட பிரார்த்தனை கோரிக்கை தனியாகவும், பெயர் ராசி நட்சத்திர விபரங்கள் தனியாகவும் அனுப்பவும். பெயர், ராசி, நட்சத்திரம் எதற்காக என்றால் நாம் திருமண பரிகாரத் தலங்களுக்கு செல்லும்போது அர்ச்சனை செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

வேறு சில கோரிக்கைகள் வந்துள்ளன. அவற்றை பெயரை போட்டு  வெளியிடலாமா அல்லது பெயர்களின்றி வெளியிடவேண்டுமா என்று குறிப்பிடவில்லை. அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளோம். அவர்களிடம் பதில் வந்த பிறகு அடுத்தடுத்த வாரங்களில் அந்த கோரிக்கைகள் மன்றத்தில் வைக்கப்படும்.

**  பிரார்த்தனைக்கு வேறு கோரிக்கைகளுக்காக விண்ணப்பித்து இதுவரை அது வெளியாகாமல் இருந்தால் அந்த மின்னஞ்சலையும் நமக்கு மீண்டும் editor@rightmantra.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

===============================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

குழந்தை நன்றாக பேசவேண்டும், நடக்கவேண்டும்!

ரைட்மந்த்ரா ஆசிரியர் மற்றும் வாசகர்களுக்கு என் வணக்கம்.

என் பெயர் பாலாஜி. சென்னையில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மூலப் பொருட்கள் சப்ளை செய்யும் ஏஜண்டாக உள்ளேன். என் நண்பர் திரு.பழனியப்பன் அவர்கள் கூறித் தான் இந்த பிரார்த்தனை கிளப் பற்றி தெரியும்.

என்னுடைய மகள் அமிர்தவல்லிக்கு இரண்டரை வயதாகிறது. இன்னும் அந்த வயதுக்குரிய பேச்சும் நடையும் என் மகளுக்கு வரவில்லை. எங்கள் குழந்தையின் மழலைச் சொல்லையும், தளிர் நடையையும் பார்க்க ஆவலாக இருக்கும் எங்களுக்கு இது ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நானும் என் மனைவியும் மனத்தளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

அவள் விரைவில், நன்றாக பேசவும் நடக்கவும் ரைட்மந்த்ரா குடும்பத்தினரையும் வாசர்களையும் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி

பாலாஜி & கீதா பாலாஜி
சென்னை

===============================================================

Want a good job immediately !

Dear Mr.Sundar sir – Good afternoon.

I am Nagarajan from Hosur. I am also one of the regular reader of your web site postings regarding Sri.Sri.Maha Periyava and other social related subjects and activities. Many thanks for the same and wish you very good luck for your continued activity & efforts.

I was working in an MNC company in a good position. But due to some personal reason I was forced to resign my job (by management without any mistake on me)  during last Dec’14 (18-12-2014). Unfortunately till today I am not getting any suitable opening inspite of my sincere & continuous job search. I have 2 daughters & studying in college.

Hope you can understand my situation & difficulty and requesting your joint prayer on behalf of my family.

with many many thanks & regards,

V.Nagarajan.
Hosur

===============================================================

பொது பிரார்த்தனை

மருத்துவமனைகளில் குவிந்திருக்கும் கூட்டம் குறையவேண்டும்!

இந்த வார பொது பிரார்த்தனையை வழங்கியிருப்பவர் பிரார்த்தனைக்கு தலைமையேற்கும் தேவார ஆசிரியர் திரு.சங்கர் அவர்கள்.

திரு.சங்கர் அவர்கள் கூறுகிறார்….

நான் என் நண்பர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஒரு சில மருத்துவமனைகளுக்கு செல்ல நேர்ந்தது. எந்த மருத்துவமனை சென்றாலும் அங்கு பெருங்கூட்டம் காணப்படுகிறது. மக்கள் பல்வேறு பிரச்சனைகளுடன் வரிசையில் உட்கார்ந்திருக்கின்றனர். நான் சென்ற நான்கு மருத்துவமனைகளிலும் கூட்டமோ கூட்டம். பார்க்கவே மனதுக்கு மிகவும் வேதனையாக இருந்தது.

patients
மருத்துவமனை ஒன்றில் காத்திருக்கும் நோயாளிகள்…

கடற்கரைகளிலும், பூங்காக்களிலும் கூடி, இயற்கையை ரசிக்கவேண்டிய மக்கள் இப்படி மருத்துவமனையில் டாக்டரின் அப்பாயின்மெண்ட்டுக்காக காத்திருப்பதை பார்க்கும்போது இதயத்தில் ரத்தம் கசிகிறது.

இந்த சமுதாயம் எதை நோக்கி செல்கிறது? மக்கள் ஏன் இப்படி மருத்துவமனைகளில் குவிந்து கிடக்கிறார்கள் என்ற கேள்விகள் கடந்த இரண்டு நாட்களாக என் மனதை அரித்து வருகிறது.

இதற்கு முக்கிய காரணம்.. மக்களுக்கு உடலுழைப்பு என்பதே போய்விட்டது. எல்லாரும் தொலைகாட்சி பெட்டிகளுக்கும் அலைபேசிகளுக்கும் அடிமையாகிவிட்டார்கள்.

இன்று புதுவை சென்று பேருந்தில் திரும்பிக்கொண்டிருந்தேன். என்னுடன் பஸ்ஸில் பயணம் செய்த அனைவரும் கைகளில் அலைபேசி வைத்துக்கொண்டு தலையை தொங்கப்போட்டுக்கொண்டு அதை பார்த்தபடி தான் வந்தனர். ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதுவும் பஸ்களில் சில மாணவிகள் நடந்துகொண்ட விதம் இந்த இளையசமூகம் எங்கே போகிறது என்ற ஐயத்தை ஏற்படுத்திவிட்டது. வயதுக்கு வந்த பெண்கள் மற்றும் இளைஞர்கள் எப்போதும் அலைபேசியும் கையுமாகவே இருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் பல்லாங்குழி, பாண்டியாடுதல், ஸ்கிப்பிங் என்று விளையாடிய பெண்களும், ஓடிப்பிடித்து கண்ணாமூச்சி விளையாடிய, சைக்கிள்கள் ஓட்டித் திரிந்த மாணவர்களும் இன்று அலைபேசியே கதி என்று இருக்கிறார்கள். எங்கே போய் சொல்வது இந்த வேதனையை?

சுகப்பிரசவம் என்பதே அரிதாகி எதற்கெடுத்தாலும் சிசேரியன் தான் இப்போது. காரணம் பெண்களுக்கு இயற்கையாக வீட்டில் கிடைத்த எளிய உடற்பயிற்சிககளான கிணற்றில் நீர் இறைத்தல், துணி துவைத்தல் மாவாட்டுதல், போன்றவை கிடையாது.

இளைஞர்கள் சைக்கிள் ஒட்டுவதையே கேவலம் என்று நினைக்கிறார்கள். பள்ளிக்கு செல்ல கூட இப்போது பைக் தான்.

இறுக்கமான ஆடைகள் அதற்குள் இன்னும் சில உள்ளாடைகள்… என ஆடைகளே பெண்களுக்கு மாறிவிட்டன. பாவாடை தாவணியில் பெண்களை பார்ப்பதே அரிதாகிவிட்டது.

எங்கே போகிறோம்? எதை நோக்கி போகிறோம் என்ற உணர்வின்றி கடைசியில் இவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் போய் சேருகினன்ரர்.

இந்த நிலை மாறவேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை அனைவரும் உணரவேண்டும்.

நம்மை அடிமைப்படுத்தி புத்தியை மழுங்கடிக்கும் நவீன தொழில்நுட்பங்களை அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும்.

மருத்துவமனைகளில் குவிந்திருக்கும் கூட்டம், அத்தனையும் ஆலயங்களுக்கும், கோவில் திருவிழாக்களுக்கும் பூங்காக்களுக்கும் வரவேண்டும்.

இதுவே நான் இறைவனிடம் சமர்பிக்க கூடிய பொது பிரார்த்தனை.

===============================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgதிரு.பாலாஜி மற்றும் கீதா தம்பதியினரின் குழந்தை அமிர்தவல்லிக்கு (வயது – 2.5) பேச்சும் நடையும் நன்றாக  வந்து அவர்கள் மகிழவும், ஹோசூரை சேர்ந்த திரு.நாகராஜன் அவர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் அவரது நல்லதொரு வேலை உடனே கிடைத்திடவும், அவரது குடும்பத்தில் வேலையின்மையால் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனைகள் உள்ளிட்ட இதர பிரச்சனைகள் முடிவுக்கு வரவும், திரு.சங்கர் அவர்களின் வேண்டுகோளைப் போன்று நம் மக்கள் அனைவரும் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்கிற முதுமொழியை உணர்ந்து, நோய்நொடியின்றி ஆரோக்கியத்தை பேணும் ஒரு சமூகமாக மாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.சங்கர் அவர்களின் திருமுறைத் தொண்டு மேலும் மேலும் சிறப்பு பெற்று பல்லாயிரம் மாணவர்கள் அவர் மூலம் திருமுறை கற்று அறிவார்ந்த, தெய்வபக்தி மிக்க ஒரு சமுதாயத்தை உருவாக்கவும், அவரும் அவர் தம் குடும்பத்தினரும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டுவோம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : ஆகஸ்ட் 23, 2015 ஞாயிற்றுக்கிழமை | நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

===============================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

===============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

===============================================================

Rightmantra Prayer Club

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

===============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E : editor@rightmantra.com  |   M : 9840169215  | W: www.rightmantra.com

===============================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131

===============================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : 23 வருடங்களாக திருமலைக்கு பாதயாத்திரை சென்று வரும் திரு.எம்.சந்திரபாபு

3 thoughts on “சிவனின் பெருமை Vs அவன் அடியார்களின் பெருமை! – Rightmantra Prayer Club

  1. குலச் சிறை நாயனாரின் குரு பூஜைக்கு முன்னே அவரைப் பற்றி பதிவாக அளித்ததில் மிக்க மகிழ்ச்சி. நாம் சிவன் அடியாரை வணங்கி சிவனின் அன்புக்கு பாத்திரமாவோம்.

    // பெரு நம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன் //

    இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு சங்கர் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம். திரு சங்கரை குன்றத்தூர் முற்றோதலில் பார்த்து பேசி இருக்கிறேன், அவருடனான பரிச்சயம் எங்களுக்கு முற்றோதலில் தங்கள் மூலமாக கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.

    இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்து இருக்கும் வாசகர்களின் கோரிக்கையை இறைவன் கண்டிப்பாக நிறைவேற்றுவார். நாம் அவர்களுக்காக பிரார்த்தனை நேரத்தில் பிரார்த்தனை செய்வோம்.

    பொது பிரார்த்தனையில் திரு சங்கர் சொன்ன பிரார்த்தனைக்காகவும் பிரார்த்தனை செய்வோம். நோயற்ற உலகமாக இந்த உலகம் மாற வேண்டும்.

    எல்லோரும் நன்றாய் இருக்க வேண்டும் அதற்கு ஈசன் அருள் புரிய வேண்டும்.

    //ஓம் நமோ பகவதே மகா சுதர்சன வாசுதேவாய
    தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
    சர்வ பய விநாசாய சர்வ ரோக நிவாரனாய
    த்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே
    ஸ்ரீ மகா விஷ்ணு ஸ்வரூப ஸ்ரீ தன்வந்தரி ஸ்வரூப
    ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அவ்ஷத சக்ர நாராயண ஸ்வாகா/

    ராம் ராம் ராம்

    லோகா சமஸ்தா சுகினோ பவந்து

    நன்றி
    உமா வெங்கட்

  2. குருவே சரணம்……….குலச்சிறை நாயனார் திருவடிகள் சரணம்………. குலச்சிறையாரின் குருபூஜையை ஒட்டி அவரைப் பற்றிய பதிவு அருமை……….

    நம் தளத்தில் பிரார்த்தனை சமர்ப்பித்துள்ள அனைவரின் கோரிக்கைகள் நிறைவேறவும் திருவருளையும் குருவருளையும் வேண்டுவோம்………

    இந்த வார பொது பிரார்த்தனை நெகிழ்ச்சி தருகிறது……அனைத்து மக்களும் நலமாக வாழ வேண்டும் என்கிற நல்ல எண்ணம் கொண்ட திரு.சங்கர் அவர்களுக்கு நம் வணக்கங்கள்……….. நன்றிகள்………

  3. சிவனாரின் பெருமையை பறை சாற்றிய பதிவு.
    சிவா தொண்டின் முக்கியத்துவம் அரிந்ததோடு, குலச்சிறை நாயனாரின் வரலாறும் அறிந்தோம்.
    சிவ அடியாரான சங்கர் அய்யாவுடன் அமைந்த சந்திப்பும், முற்றோதல் நிகழ்வும் அருமை.
    முற்றோதல் குறித்த முழுமையான பதிவை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் அண்ணா.

    அடியார் பெருமையின் உண்மை விளக்கம் பின்வருமாறு..

    அடியார் சிவஞானம் ஆனது பெற்றோர்
    அடியார் அரனடி ஆனந்தம் கண்டோர்
    அடியார் ஆனவர் அத்தருள் உற்றோர்
    அடியார் பவரே அடியார் ஆம்ஆல்”.
    “அடியார் பொன்னம்பலத்து ஆடல்கண் டாரே”
    “ஆரியனாம் ஆசான்வந்து அருளால் தோன்ற
    அடிஞானம் ஆன்மாவில் தோன்றும்”

    எனவே தான் “சிவனின் பெருமையை எங்கேனும் யாரேனும் உரைப்பதை கேட்டால், நந்தி அங்கே உடனே வந்துவிடுவாராம். ஆனால், அடியார்களின் பெருமை என்றால் சிவபெருமானே நேரில் வந்துவிடுவாராம்.” என்ற உண்மை நமக்கு விளங்குகிறது.

    அடியார்க்கு அடியாரை இருந்து, நம் சிவனார் புகழ் பாடுவோம்.

    நன்றி அண்ணா..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *