Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Monday, June 24, 2024
Please specify the group
Home > Featured > பாத்திரமறிந்து பிச்சையிடு!

பாத்திரமறிந்து பிச்சையிடு!

print
சுருட்டப்பள்ளி கோவிலுக்கு போயிருந்தபோது, தரிசனம் முடித்து ஸ்ரீராமுலு மற்றும் சந்திரபாபு அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு கோவிலிலிருந்து புறப்படுகிறோம்… வாசலில் யாசகர்களின் தொல்லை மிக அதிகமாக இருந்தது.

“ஐயா… ஐயா…” என்று அவர்கள் கேட்கும் விதமே ஒரு மாதிரி இருந்தது. அவர்களை புறக்கணித்துவிட்டு கண்டும் காணாமல் போல வருவது அத்தனை எளிதல்ல. மனதை கல்லாக்கி காரில் ஏறும் தருணம் ஒரு மூதாட்டி நம்மை பார்த்து வேகமாக வந்தார்.

===============================================================

Also check :

திருமலை பாதயாத்திரை; அம்மன் நிகழ்த்திய அற்புதம்!

அடியார்கள் வழியனுப்பு விழாவும், ஏமாற்றத்தில் வெளிப்பட்ட அருளும்!

பூவிருந்தவல்லி to சுருட்டப்பள்ளி – அடியார்களின் அடியொற்றி ஒரு பயணம்!

===============================================================

“ஐயா.. சாமி… ஐயா…. சாமி…. தர்மம் பண்ணுங்க…. தர்மம் பண்ணுங்க….” என்று நாம் ஏதோ அவருக்கு தர நினைப்பது போல ஓடிவந்தார்.

Temple_beggars 1

நாம் எங்கே இவரை கூப்பிட்டோம்? இப்படி ஓடி வருகிறாரே… மூதாட்டியாக இருக்கிறாரே… கண்டுகொள்ளாமல் காரில் ஏற விருப்பம் இல்லை. பர்ஸை எடுத்து இரண்டு ரூபா நாணயத்தை போட்டோம்.

வாங்கிப் பார்த்தவர் அது இரண்டு ரூபாய் நாணயம் என்று தெரிந்ததும், நம்மிடம் அலட்சியமாக “இதை கொடுக்குறதுக்கு தான் பர்ஸை எடுத்தியா?” என்ற ரீதியில் ஏதோ முனுமுனுத்தார்.

நமக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

“எனக்கு தேவைம்மா… எனக்கு தேவை… இதுவும் தேவை… இதுக்கு மேலயும் தேவை….” என்றோம்.

செந்தில் நடப்பதை பார்த்து உள்ளுக்குள் கடுங்கோபம் அவருக்கு.

“இதுக்கு தான் சுந்தர், இவங்களுக்கு நான் பிச்சை போடுறதில்லே…” என்றார்.

ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் பிச்சை போடுபவர்களை பிச்சைக்காரர்கள் இப்போதெல்லாம் மதிப்பதில்லை. பதிலுக்கு பிச்சை போடுபவர்களையே பிச்சைக்காரர்கள் போல ட்ரீட் செய்கிறார்கள்.

கோவில் வாசல்களில் பிச்சை எடுப்போர் பல ரகங்கள் உண்டு.

SAM_4180 copy

ஒன்று…. பிள்ளைகளே பணத்தின் ருசி அறிந்து வயதான அப்பா, அம்மாவை “போய் எங்கேயாவது பிச்சை எடுத்துட்டு வா… எனக்கு இருநூறு கொடுத்துடு… மீதி நீ என்னவேணும்னாலும் பண்ணிக்கோ” என்பவர்கள்.

இரண்டாம் ரகத்தினர்… பிள்ளைகள் நல்ல நிலையில் இருந்து சோறு போட்டு வளர்த்தாலும், பணத்தின் ருசி அறிந்து வேண்டுமென்றே பிள்ளைகளுக்கு தெரிந்தோ தெரியாமலோ அவர்களுக்கு விருப்பத்திற்கு எதிராக பிச்சை எடுப்பவர்கள். இப்படி பிச்சை எடுக்கும் ஒருவரிடம் ஒரு முறை அவர் மகன் வந்து, “ஏன்யா நான் உனக்கு என்னய்யா குறை வெச்சேன்? ஏன்யா இப்படி பிச்சை எடுத்து என் மானத்தை வாங்குற?” என்று சண்டைபோட்டதை நேரில் பார்த்திருக்கிறோம்.

மூன்றாம் ரகத்தினர்… ஊனம், முதுமை ஆகியவற்றை காரணம் காட்டி வேலை வெட்டிக்கு போக விருப்பமின்றி, பிச்சையெடுத்து காலம் தள்ளுபவர்கள்.

Temple_beggars 2

இவர்களை விட வேறொரு ரகத்தினர் உண்டு… பிச்சையெடுக்கும் பணத்தில் வட்டிக்கு விடுபவர்கள். ஆம்… பிச்சை எடுப்பது இன்று ஒரு நல்ல பிஸ்னஸ்!

இது நடந்து 12 ஆண்டுகள் இருக்கும். திருவான்மியூரில் ஆர்.டி.ஒ. அலுவலகம் அருகே வால்மீகி நகரில் நம் நண்பர் ஒருவரின் வீடு இருந்தது. அவரை பார்க்க அடிக்கடி அங்கு போவோம். அப்படி போகும்போது ஒரு நாள் அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் ஒரு முறை டீ சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அப்போது ஒரு கூன் விழுந்த மூதாட்டி ஒருவர் “ஐயா… ஏதாவது தர்மம் பண்ணுங்க” என்றார்.

பொதுவாக பிச்சைக்காரர்களுக்கு நாம் பணமாக கொடுப்பதில்லை. சாப்பிடுவதற்கு ஏதேனும் வாங்கி தந்துவிடுவோம்.

“டீ… இல்லே பால்… ஏதாவது சாப்பிடுறீங்களா பாட்டி?” என்றோம்.

நாம் கேட்பதை பெட்டிக்கடைக்காரர் பார்த்தார். நம்மை “கிட்டே வாங்க” என்பது போல கண்களால் சைகை செய்தார்.

“என்ன சார்?” என்று அருகே சென்றோம்.

“அது டீ… பாலெல்லாம் சாப்பிடாது… ப்ரெட் கேட்கும் பாருங்க” என்றார்.

சொன்னதை போலவே இந்த பக்கம் மீண்டும் அந்தம்மா அருகில் வந்ததும் நம்மை நோக்கி குழறும் நாவில், “ப்ரெத் வாங்கிக்கொடுப்பா..” என்றார். நமக்கு புரியவில்லை.

“புரியலேம்மா… என்ன…?”

கடைசியில் டீக்கடையில் அடுக்கப்பட்டிருந்த ப்ரெட் பாக்கெட்டுகளை காண்பித்து அது வேண்டும் என்றார்.

ப்ரெட் விலை விசாரித்தோம் ரூ.15/- சொன்னார்கள்.

அவ்ளோ விலை கொடுத்து வாங்கி தர்மம் பண்ணும் அளவுக்கு நாம் இல்லை அப்போது.

எனவே… “சாரி… பாட்டிம்மா…. டீ… பால் வேணும்னா வாங்கித் தர்றேன்… வடை பஜ்ஜி போண்டா கூட வேணும்னா வாங்கித் தர்றேன்… ப்ரெட்டெல்லாம் என்னால முடியாது” என்றோம்.

நம்மை சட்டை செய்யாமல் வேறு ஒருவரிடம் யாசிக்க நகர்ந்துவிட்டார்.

கடைக்காரரை பார்த்தோம். “நான் தான் சொன்னேன்ல” என்பது போல அவர் நம்மை பார்த்தார்.

“எப்படி சார் அவ்ளோ கரெக்ட்டா சொன்னீங்க?”

“எனக்கு தெரியும் சார்… பத்து வருஷமா அதை பார்க்குறேன்… அது வட்டிக்கு விட்டு பொழைக்குது”

நமக்கு தூக்கி வாரிப்போட்டது.

“அப்போ ப்ரெட் கேட்டது எதுக்கு?”

“பேரப் பிள்ளைங்களுக்கு கொடுக்குறதுக்கு…” என்றார்.

மேலும் தொடர்ந்தார்… “பசங்க எல்லாம் நல்ல வேலைல இருக்காங்க… இதுக்கு பிச்சை எடுக்குறதுல நல்ல வருமானம் வரவே அப்படியே விட்டுட்டாங்க… சோறு குழம்பெல்லாம் வாங்கிட்டு வராதே… ப்ரெட் கேட்டு வாங்கிட்டு வான்னு சொல்லிட்டாங்க. இதுவும் ப்ரெட் பாக்கெட்டை தவிர எதையும் வாங்கிக்காது. பார்க்குறதுக்கு கூன் விழுந்து ஐயோ பாவம்னு இருக்குறதாலே இது மேல யாருக்கும் சந்தேகம் வராது… ஒரு நாளைக்கு குறைஞ்சது ரூ.500/- சம்பாதிக்குது அது!” என்றார்.

பிச்சைக்காரர்கள் குறித்த கண்ணோட்டமே நமக்கு அது முதல் மாறிப்போனது.

அது உண்மை தான் என்பது போல பல சம்பவங்களை பார்த்துவிட்டோம்.

சில மாதங்களுக்கு முன்னர் ஒரு கோவிலுக்கு சென்றபோது, ஒரு பிச்சைக்காரப் பெண்மணி, அலைபேசியில் பேசிக்கொண்டிருந்ததை பார்த்தோம்.

சமீபத்தில் சிறுவாபுரி சென்றபோது இன்னும் கொடுமை… எங்கு பார்த்தாலும் பிச்சைக்காரர்கள் தான்.

வாழவழியின்றி பிச்சை எடுப்போர் இப்போதெல்லாம் அரிதாகிவிட்டனர்.

கோவிலுக்கு வருபவர்களை எமோஷனல் பிளாக்மெயில் செய்து பிச்சை எடுப்பது இப்போது அதிகரித்துவிட்டது.

அவர்களுக்கு நாம் பிச்சைப் போடாமல் வெளியே வரவே முடியாது என்னுமளவிற்கு அவர்கள் ஈனக்குரல் “ஐயா சாமி தர்மம் பண்ணுங்க… அம்மா தர்மம் பண்ணுங்க” என்று பலமாக ஒலிக்கும்.

அவர்களை புறக்கணித்துவிட்டு வரவே முடியாது.

உண்மையில் இவர்களில் பெரும்பாலானோர் இதில் கிடைக்கும் வருவாயை மனதில் கொண்டு, உழைக்காமல் உண்ணவேண்டும் என்று கருதுபவர்கள் தான். இவர்களில் பலர் உணவை பிச்சையாக ஏற்பதில்லை. பணமாகவே கொடுத்துவிடுங்கள் என்கிறார்கள்.

"

வரும் பக்தர்களை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கி, பணத்தை பறிப்பவர்கள் இவர்கள்.

சில மாதங்களுக்கு முன்பு லக்ஷ்மன் சுருதி அருகே… ஒரு பெண்மணி பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். வயது எப்படியும் 40 – 45 இருக்கும். பார்க்க மனநிலை பாதிக்கப்பட்டவர் போல இருந்தார். ஆனால்  மனநிலை பாதிக்கப்பட்டவர் அல்ல.  மனநிலை பாதிக்கப்பட்டவர் போல நடிப்பவர் என்பதை அவளது பாடி லாங்குவேஜை பார்த்தே உணர்ந்துகொண்டோம். கிழிந்த உடுப்பு…. கையில் ஒரு கைக்கோல். (உண்மையில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பிச்சை எடுக்கமாட்டார்கள்!)

என்ன தான் செய்கிறார் என்பதை கவனித்தோம். நமக்கு முன்னே அனைவரிடமும் பிச்சை எடுத்தவர் ஏனோ தெரியவில்லை நம்மிடம் நெருங்கவில்லை. நமக்கு அருகே PARALLEL ஆக ஒரு ஆட்டோ நின்றுகொண்டிருந்தது. அங்கு போய் பிச்சை கேட்டு சைகை காண்பித்தார். அந்த ஆட்டோவில் யாரோ ஒருவர் உட்கார்ந்திருந்தார். தனது பர்சை எடுத்து ரூ.100/- அனாயசமாக எடுத்துப் போட்டார்.

“அடப்பாவி…. பெரிய தர்மப் பிரபுன்னு நினைச்சிகிட்டு இப்படி ஏமாந்து போறீயேடா…” என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டோம்.

Begging
தினகரன் – 18/05/2015 – திருச்சி பதிப்பு

இதே போல கைக்குழந்தைகளுடன் பிச்சை எடுப்பவர்களும் உண்டு. இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகளை வாடகைக்கு அமர்த்தி பிச்சை எடுப்பவர்கள்.

இது குறித்து சமீபத்தில் செய்தித்தாள்களில் கூட கூட செய்தி வெளியாகியிருந்தது.

இதற்கென்றே ஏஜென்ட்டுகள் உள்ளன. காலை 10.00 மணிக்கு எடுத்துவரும் குழந்தைகளை நாள் முழுதும் சுமந்தபடி பிச்சை எடுப்பார்கள். பெற்றோர்களுக்கு வாடகை ரூ.100/-. (அப்பனுக்கு தண்ணியடிக்க ஆச்சு!)

ஆக… பிச்சை போடுகிறோம்… என்ற பெயரில் சோம்பேறிகளையும் ஏமாற்றுப் பேர்வழிகளையும் தான் நாம் ஊக்குவித்துக்கொண்டிருக்கிறோம்.

Temple_beggars 3

அப்போது எப்படித் தான் தர்மம் செய்வது?

இந்து அறநிலை(யா)த் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு செல்லும்போது உங்கள் காணிக்கைகளை உண்டியலில் போடாதீர்கள். அந்த தொகையை அவர்கள் ஆலய வளர்ச்சிக்கு பயன்படுத்துவதில்லை. பல கோவில்களில் குறைந்தபட்சம் கோவிலுக்கு எண்ணை வாங்க கூட அவர்கள் பணம் தருவதில்லை என்பதே கசப்பான உண்மை. உண்டியல் பணம் நேரே அரசு கஜானாவுக்கு சென்றுவிடுகிறது. அங்கு அவர்கள் அதை வைத்து ஹிந்து தர்மத்திற்கு புறம்பான காரியங்களுக்கெல்லாம் செலவிடுகிறார்கள். உண்டியலில் காசை போடுவதற்கு பதில் உள்ளே வெப்பத்திலும் புழுக்கத்திலும் தொண்டாற்றும் அர்ச்சகரின் தட்டில் போடுங்கள. ஆலயத்தில் சொற்ப ஊதியத்துக்கு நாதஸ்வரம், தவில் வாசிக்கும் வித்துவான்களுக்கு உதவுங்கள்.

கோவில்களுக்கு சென்றால் தர்மம் செய்துவிட்டு தான் வரவேண்டும் என்ற நம்பிக்கை உள்ளவர்கள், கோவில் வாசலில் காணப்படும் பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுப்பதைவிட, கோவிலில் துப்புரவு செய்யும் பெண்களுக்கோ தொழிலாளர்களுக்கோ உதவுங்கள். கொடுக்கும்போது “கோவிலை கொஞ்சம் சுத்தமா பார்த்துக்கோங்க” என்று கூறிவிட்டு கொடுங்கள். (சமீபத்தில் சிறுவாபுரி சென்றிருந்தபோது, கோவிலே பக்தர்கள் கூட்டத்தால் குப்பை மேடு போலிருந்தது. ஒரு வயதான பெண்மணி உள்ளே பெருக்கிகொண்டிருந்தர்கள். ஒரு பக்கம் குப்பைகள் விழுந்துகொண்டேயிருந்தன. மறுபக்கம் இவர்  பாட்டுக்கு கர்ம சிரத்தையாக பெருக்கிக்கொண்டிருந்தார். வயது எப்படியும் 70 – 75 இருக்கும். அவரை கூப்பிட்டு கையில் சிறிது பணம் கொடுத்தோம். அதை கண்களில் ஒற்றி வாங்கிக்கொண்டார்!)

மங்கள இசை வித்துவான்களை பார்த்தால் அவசியம் அவர்களுக்கு நூறோ இருநூறோ கொடுத்து உதவுங்கள். இப்படி செய்வதன் மூலம் அவர்களுக்கு கோவிலில் வாசிக்க ஒரு ஆர்வம் ஏற்படும்.

நாம் செய்யவேண்டியது இவர்களுக்கு தான்!

பிச்சைக்காரர்களுக்கு பணமாக கொடுக்காமல் வயிற்றுக்கு வாங்கி கொடுத்துவிடுங்கள். இதற்கு தகுதி பார்க்கத் தேவையில்லை. உண்மையில் வாழ வழியின்றி பிச்சை எடுப்பவர்கள் சாப்பிட ஏதேனும் வாங்கித் தந்தால் அதை ஏற்றுக்கொள்வார்கள். பணமே குறிக்கோள் என்பவர்கள் “எனக்கு பணமா கொடுத்துடு ராசா… நான் வாங்கிக்கிறேன்” என்பார்கள்.

எனவே சரியானவர்களை அடையாளம் கண்டு பிச்சையிடுவது அவசியம். எனவே தான் ‘பாத்திரமறிந்து பிச்சையிடு’ என்றார்கள் பெரியோர்கள்.

Temple_beggars 4

யாருக்கு தான் சார் தர்மம் பண்றது? நீங்க சொல்றதை பார்த்தா தர்மமே பண்ணமுடியாது போலருக்கே… பரபரப்பான வாழ்க்கையில ஏதோ கிடைக்குற சில வினாடிகள் அவகாசத்துல தர்மம் பண்ணுறோம்… இதையெல்லாம் ஆராய்ச்சி செய்துகிட்டிருக்க முடியுமா? இதுலயும் இவ்ளோ வில்லங்கம் இருக்கா? என்று நீங்கள் கேட்டால்… இதோ இருக்கிறது விடை!

என்ன செய்வது? புண்ணியம் சேர்க்கவேண்டும் என்றால் கொஞ்சமாவது மெனக்கெட்டுத் தான் ஆகவேண்டும்.  சரியான பயனாளிகளுக்கு மட்டுமே உதவுவேன் என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்.

யார் சரியான பயனாளி? எப்படி அடையாளம் கண்டுகொள்வது?

இதோ…

நீங்கள் சாலைகளில் பார்த்திருப்பீர்கள்… ஒரு சிறு வண்டியில் ஒருவர் உட்கார்ந்திருக்க மற்றவர் தள்ளிக்கொண்டு செல்வார். இவர்கள் யார் தெரியுமா?

Leprosy Victims

தொழுநோயாளிகள். அதாவது குஷ்டரோகம் என்னும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.

தொழுநோய் காரணமாக பணியிலிருந்தும் வீட்டிலிருந்தும் விரட்டப்பட்டு வீதிக்கு வந்தவர்கள்.

உலக அளவில் இந்தியாவில் தான் தொழுநோயாளிகள் அதிகம். சுமார் 1.5 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழத்தில் மட்டும் இவர்கள் 10,000 துக்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

இவர்கள் தான் நம் கருணைக்கும் தர்மத்திற்கு உண்மையில் பாத்திரப்பட்டவர்கள். ஏனெனில், இவர்களின் பெரும்பாலானோர் கை மற்றும் கால் விரல்கள் மடங்கியிருக்கும். அவரவர் வேலை அவர்களால் செய்துகொள்ளமுடியாது. அனைத்திற்கும் பிறர் உதவி தேவைப்படும்.

கை, கால்கள் இழந்த மாற்றுத் திறனாளிகள் கூட ஏதோ ஒரு வேலை செய்து, வியாபாரம் செய்து பிழைத்துக்கொள்ளமுடியும். ஆனால் சமூகம் ஒதுக்கி வைத்துவிடுவதால் தொழுநோயாளிகளுக்கு பிச்சை எடுப்பதை தவிர வேறு வழியில்லை.

எனவே இவர்களை போன்றவர்களை பார்த்தால் நிச்சயம் தர்மம் செய்யுங்கள். பணமோ, பொருளோ, உணவோ ஏதோ ஒரு வகையில் இவர்களுக்கு உதவுங்கள்.

சுருட்டப்பள்ளியில் நமக்கு நிகழ்ந்த அனுபவத்திற்கு பிறகு, நாம் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம். தொழுநோயாளிகளுக்கு மட்டுமே இனி பிச்சையளிப்பது என்று.

நீங்களும் ஒவ்வொரு முறையும் கோவிலுக்கு போய்விட்டு வரும்போது அவர்களில் தொழுநோயாளிகள் யாரேனும் இருக்கிறார்களா என்பதை பார்த்து அவர்களுக்கு பிச்சை அளிக்கவேண்டும். ‘ஒருவருக்கு அளித்துவிட்டு மற்றவர்களுக்கு அளிக்காமல் இருக்க முடியாது… அதெல்லாம் நடைமுறையில் சாத்தியமில்லை’ என்கிறீர்களா? விடுங்கள் பரவாயில்லை… அந்த பணத்தை தனியாக சேர்த்துக்கொண்டு வந்து சாலையில் அவர்களை எங்கேனும் பார்க்க நேர்ந்தால் கொடுத்துவிடுங்கள். (பொதுவாகவே இவர்கள் தனியாக இருக்கமாட்டார்கள். க்ரூப் க்ரூப்பாகத்தான் இருப்பார்கள்.)

இவர்களில் ஒருவரை பார்த்தால் கூட போதும், அனைவரும் எங்கே இருப்பார்கள் என்று தெரிந்துகொண்டு அவர்களுக்கு ஏதேனும் உதவலாம்.

நம் தளம் சார்பாக பிரதி மாதம் நடைபெறும் கோ-சம்ரட்சணம், கிளிகளுக்கு உணவு, அன்னதானம் போல இனி இதுவும் முக்கிய பணிகளில் ஒன்றாக இருக்கவேண்டும் என்று தீர்மானித்திருக்கிறோம்.

தனிப்பட்ட ஒருவருக்கு என்றால் நாம் மட்டும் போதும். ஒரு க்ரூப்பில் பத்து பதினைந்து தொழுநோயாளிகள் இருப்பார்கள். அவர்களில் ஒருவருக்கு மட்டும் உதவுவது சரியல்ல அல்லவா? எனவே தளம் சார்பாக செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஒரு நாள் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு ஆற்காடு சாலை வழியாக திரும்பிக்கொண்டிருந்தோம். வடபழனி தபால் நிலையம் அருகே இவர்கள் இருவரை பார்த்தோம். ஒருவர் வண்டியில் அமர்ந்துகொண்டிருக்க, மற்றொருவர் தள்ளிக்கொண்டு போனார்.

Leprosy Victims 6

பைக்கை ஓரம்கட்டி அவர்களை பார்த்து நமது “ஒரு நிமிஷம்” என்பது போல ஜாடை காட்டினோம்.

அருகே வந்தார்கள்.

எங்கே இருக்கிறார்கள் எத்தனை பேர் என்று விசாரித்தோம்.

ராம் தியேட்டர் அருகே பிளாட்பாரத்தில் இருப்பார்கள் என்றும் அவர்கள் க்ரூப்பில் சுமார் 12 – 15 பேர் இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.

“நீங்க போங்க… நான் வண்டியை ஓரமா நிறுத்திவிட்டு பின்னாடி வர்றேன்” என்றோம்.

ஏதாவது கொடுப்பார்னு பார்த்தா இவர் நீங்க போங்க நான் பின்னாடி வர்றேன்னு சொல்றாரே என்று யோசித்தார்கள்.

“நிஜமாத் தான் சொல்றேன். நீங்க போங்க… நான் பைக்கை நிறுத்திட்டு பின்னாடி வர்றேன்”

இந்த முறை நம்பிக்கை வந்தது. அவர்களது கைவண்டியை திருப்பி தள்ளிக்கொண்டு போனார்கள். நாம் பேருந்து நிலையம் அருகே கிடைத்த கேப்பில் பைக்கை பார்க் செய்தவிட்டு பின்னால் நடந்து சென்றோம்.

Leprosy Victims 3

சரியாக ராம் தியேட்டர் அருகே ஒரு குழுவாக அமர்ந்திருந்தார்கள்.

முதலில் ஆளுக்கு கொஞ்சம் பணம் கொடுத்தோம்.

“சாப்ட்டீங்களா?”

கையில் வைத்திருந்த பார்சலை காண்பித்தார்கள். இரவு உணவு வாங்கி வந்துவிட்டார்கள் என்று தெரிந்தது.

“உங்களுக்கெல்லாம் குளியல் சோப்பு, வாஷிங் சோப்பு தேவைப்படுமா?” என்று கேட்டோம்.

“தாராளமா வாங்கிக்கொடுப்பா…” என்றார்கள்.

அவர்கள் பேசுவது புரிந்துகொள்ள சிரமமாக இருந்தது.

“என்ன சோப்பு உங்களுக்கு வேணும்?”

“லைப்பாய் சோப்பு போதும்பா” என்றார் ஒருவர்.

அந்த சோப்பு தான் அவர்களுக்கு ஏற்றது என்றும் புண்களுக்கும் காயத்திற்கும் நல்லது என்றும் சொன்னார்கள்.

“அடுத்து வேற ஏதாச்சும் வேணுமா??”

திடீரென்று ஒருவர் இப்படி வந்து என்ன வேண்டும் என்று கேட்பதை அவர்கள் எதிர்பார்த்திருக்கமாட்டர்கள் அல்லவா? தேவைகளை சொல்ல திணறினார்கள்.

“கவலைப்படாதீங்க.. இன்னும் ரெண்டு நாள் கழிச்சு இதே நேரம் இந்தப் பக்கம் வருவேன்.. என்ன வேணும்னு சொல்லுங்க வாங்கிட்டு வர்றேன்.”

“ஆமா… இப்படி பிளாட்பாரத்துல இருக்கீங்களே… திடீர்னு மழை பெய்ஞ்சா என்ன பண்ணுவீங்க? ஒதுங்க கூட இடமில்லையே இங்கே?”

“அதோ அங்கே போவோம் சாமி” என்று இரண்டு கட்டிடங்கள் தள்ளி இருந்த ஒரு தெரு முனையை காண்பித்தார்கள்.

‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி’ என்று கண்ணதாசனின் வரிகள் தான் நினைவுக்கு வந்தது.

Leprosy Victims 4
கழுத்தில் சீழ் பிடித்த காயம்… கையில் காலியாகிவிட்ட அந்த ஆயின்மென்ட் ட்யூப்…

பேசிக்கொண்டிருக்கும்போது தான் கவனித்தோம்… அவர்கள் குழுவில் ஒரு பெண்ணின் கழுத்தில் காயம் ஏற்பட்டு சீழ் கோர்த்திருந்தது. வெட்டுக் காயம் போலிருந்தது. ஆனால் அது வெட்டுக்காயம் அல்ல. நோய்தொற்றினால், வெயிலால் வந்த காயம்.

“என்னம்மா இது காயம்?… இதுக்கு மருந்து ஏதாச்சும் போடுறீங்களா?”

“மருந்து காலியாயிடுச்சு சாமி…” என்றார் கண்கலங்கியபடி.

“அந்த மருந்து இருந்தா காட்டுங்க… நான் வாங்கிட்டு வர்றேன்” என்றோம்.

உடனே பையிலிருந்த காலி ட்யூபை காட்டினார்.

SOFRAMYCIN என்று ஒரு ஆயின்மென்ட் அது.

“நாளைக்கே வாங்கிட்டு வந்து தர்றேன்… உங்க பேர் என்னம்மா?”

“கங்கம்மா!” என்றார்.

அடுத்து அருகே இருந்த மற்றொரு நடுத்தர வயது மனிதர் தனக்கும் காயங்களுக்கு போட ஒரு ஆயின்மென்ட் வேண்டும் என்றார்.

“சாம்பிள் இருக்கா? இருந்தா காமிங்க??” என்றோம்.

தனது பையிலிருந்து மருந்தை எடுத்துக் காண்பித்தார். இது வேறு ஒரு ஆயின்மென்ட்.

இப்படி இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒருவித தேவை இருந்தது.

மேலும் சிறிது நேரம் இவர்களிடம் பேசியதில் அவர்களுக்கு பேண்டேஜ், காட்டன் பஞ்சு, டெட்டால் மற்றும் சோப்பு ஆகியவை தான் உடனடி தேவை என்பது புரிந்தது.

அனைத்தும் வாங்கி வருவதாகவும், இந்த பக்கம் அடிக்கடி வருவோம் என்றும் ஓரளவு நம்மால் இயன்ற உதவிகளை அவர்கள் அனைவருக்கும் செய்வதாகவும் வாக்களித்திருக்கிறோம்.

நம்மை அனைவரும் ஏதோ ஆபத்பாந்தவனை போல கையெடுத்து வணங்கினார்கள். கண்களில் தெரிந்த நன்றியுணர்ச்சி வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒன்று.

இன்று மாலை மேற்படி காட்டன், டெட்டால், சோப்பு இதெல்லாம் வாங்கி தரவிருக்கிறோம்.

இதையெல்லாம் நாம் ஏன் இங்கே சொல்கிறோம் என்றால், நீங்களும் பிச்சைக்காரர்களையும் சோம்பேறிகளையும் ஊக்குவிப்பதற்கு பதில் உங்கள் பகுதிகளில் இது போல தொழுநோயால் பாதிக்கப்பட்டு, சமூகத்தால் புறக்கணிப்பட்டு எந்த வேலையும் செய்ய இயலாத நிலையில் இருப்பவர்களை கண்டால் அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காகத் தான்.

இதையெல்லாம் நாம் ஏன் இங்கே சொல்கிறோம் என்றால், நீங்களும் பிச்சைக்காரர்களையும் சோம்பேறிகளையும் ஊக்குவிப்பதற்கு பதில் உங்கள் பகுதிகளில் இது போல தொழுநோயால் பாதிக்கப்பட்டு, சமூகத்தால் புறக்கணிப்பட்டு எந்த வேலையும் செய்ய இயலாத நிலையில் இருப்பவர்களை கண்டால் அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காகத் தான்.

நீங்கள் செலவழிக்கும் ஒரு சில நிமிடங்கள்… இவர்களுக்கு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது தெரியுமா?

"

மேலும் கோவில்களுக்கு போகும்போது எவ்வளவு தர்மம் செய்ய நினைக்கிறீர்களோ அதை உண்டியலில் சேர்த்துக்கொண்டே வாருங்கள். மாதம் ஒரு முறை இவர்களை போன்றவர்களுக்கு கொஞ்சம் பணமாகவும் கொஞ்சம் பொருளாகவும் வாங்கிக்கொடுத்துவிடுங்கள்.

நம் தளத்தை பார்த்துவிட்டு இந்த பதிவை படித்துவிட்டு குறைந்தது ஒரு நூறு அல்லது இருநூறு பேர் இது போல செய்தால், யோசித்துப் பாருங்கள்… கிட்டத்தட்ட 2000 பேர் பலனடைவார்கள்.

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. :
9120 2005 8482 135
Account type :
Current Account
Bank :
Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code :
UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

நம் தளம் மேலும் மேலும் வளர,  உங்கள் பங்களிப்பு அவசியம்!

Mycobacterium Leprae என்னும் ஒரு வித பாக்டீரியாவினால் வரும் இந்நோய் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளவர்களை எளிதில் தாக்கும். மருத்துவ ரீதியான காரணம் இது. அதே சமயம் நமது ஹிந்து மதக்கோட்பாடுகளின்படி கர்மவினை சம்பந்தப்பட்ட நோய் இது என்பதால் இந்நோயாளிகளுக்கு உதவுவதன் மூலம் உங்கள் கர்மவினையை நீங்கள் மாற்றமுடியும். சனி. ராகு, கேது, செவ்வாய் போன்ற கிரக பாதிப்புக்களிலிருந்து விடுபடமுடியும்.

ஆனால், பலன் கருதியோ புண்ணியம் கருதியோ நாம் இதை செய்யவேண்டாம். நமது கடமை இது என்று உணர்ந்து இது போல வாழ வழியற்றவர்களுக்கு நம்மால் இயன்ற அளவில் உதவுவோம்.

Leprosy Victims 5
உங்கள் வீட்டில் செல்வம் கொழிக்க இவர்களை போன்றவர்களுக்கு உதவுங்கள் என்கிறாளோ அன்னை?

இவர்களுக்கு செய்வதே தர்மம். இவர்களுக்கு செய்யும் தொண்டு சாட்சாத் இறைவனுக்கே செய்யும் தொண்டு. நாம் சொல்லவில்லை. நேற்று அன்னை மகாலக்ஷ்மியே அதை உணர்த்தினார். (மேலே அளிக்கப்பட்டுள்ள புகைப்படத்தின் பின்னணியில் பாருங்கள்… என்ன இருக்கிறது என்று!)

===============================================================

பிச்சையிடுதல் தொடர்பாக முன்னர் நம் தளத்தில் நாம் அளித்த பதிவுகளுக்கு இது முரண்படுவதாக உங்களில் சிலர் நினைக்கலாம். அந்த பதிவுகளில் கூட சரியான பயனாளியை தேர்ந்தெடுத்து உதவ வேண்டும் என்றே கூறியிருப்போம். அதே சமயம்… காலப்போக்கில் பல அனுபவங்களுக்கு பிறகு இன்று யாசிப்பவர்களுக்கு யாசகம் அளிப்பது தொடர்பான ஒரு தெளிவான கண்ணோட்டம் ஏற்பட்டுள்ளது என்றே கருதுகிறோம்.

===============================================================

நல்வாழ்வுக்கு சில டிப்ஸ் – 6

தொழுநோயாளிகளுக்கு உதவுவது மிகச் சிறந்த பரிகாரம்!

சனி, ராகு, கேது, செவ்வாய் போன்ற கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் சஞ்சாரங்களினால் அவதிப்படுபவர்கள் தொழுநோய் போன்ற கொடுநோயால் பாதிக்கப்பாட்டவர்களுக்கு தர்மம் செய்வது அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்வது மிகச் சிறந்த பரிகாரம் ஆகும்.

Nava Graham

இவர்களுக்கு உதவி புரிந்து இவர்களின் ஆசியை பெறுவதன்  மூலம், சம்பந்தப்பட்ட கிரகங்கள் சாந்தியடைகின்றன என்பது ஜோதிட சாஸ்திரம் கூறும் உண்மையாகும்.

டிப்ஸ் தொடரும்…

===============================================================

Also Check :

இளநீர் வியாபாரி செய்த தானம்!

பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE

யார் பெரிய பிச்சைக்காரர்கள்?

“பிச்சையிடும் பணத்தை அவர்கள் தவறாக பயன்படுத்தினால் என்ன செய்வது?” – விவேகானந்தர் கூறிய பதில்!

ஏற்பது இங்கே இகழ்ச்சியல்ல!

எது உண்மையான தர்மம்?

புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !

மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!

மனமிருந்தால் மார்க்கமுண்டு!

“எனக்கு வசதியில்லே. வசதியிருந்தா நான் நிறைய தர்ம காரியங்கள் செய்வேன்” என்று சொல்பவரா நீங்கள்?- MUST READ

ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்….

இறைவனுக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்வது எது ?

===============================================================

[END]

14 thoughts on “பாத்திரமறிந்து பிச்சையிடு!

 1. நீங்கள் செய்திருப்பது உன்னதமான காரியம். இதுவரை இந்த மாதிரியான மனிதர்களைக் கடந்து செல்லும்போது அவர்கள் மேல் பரிதாபம் வரும். ஆனால் இதுவரை அவர்களுக்கு உதவ வேண்டும் என்று எண்ணியதில்லை. உங்கள் செயல் என்னை தலைகுனிய வைத்துவிட்டது.

  என் நண்பர் ஒருவர், பிச்சை கேட்ட ஒரு பெண்மணிக்கு 5 ரூபாய் எடுத்து நீட்ட, ஒரு அலட்சியப் பார்வை பார்த்துவிட்டு, அவரிடமே திருப்பித் தந்து விட்டது. கேட்டால் 10 ரூபாய்க்குக் குறைவாக வாங்க மாட்டார்களாம். இன்னொருவர் எங்கள் பகுதியில் இருக்கிறார். அவர் தொழிலே, தினமும் பிச்சை எடுத்து குடிப்பது தான். இவர்களுக்கு மத்தியில் சரியானவர்களைத் தேர்ந்தெடுப்பது சவாலான விசயமே !

  முடிந்த வரையில், வயதானவர்கள் வந்து கேட்டால், உணவு வாங்கித் தந்து விடுகிறேன். மற்றவர்களை (போலியானவர்களை) முடிந்த வரையில் தவிர்த்து விடுகிறேன், !

  “கடமையைச் செய்; பலனை எதிர்பார் ”

  விஜய் ஆனந்த்

 2. நீங்கள் சொல்வது மிக சரி. நானும் இதுவரை சாதாரண பிச்சைக்காரர்களை விட தொழு நோயாளிகளுக்கு மட்டுமே உதவி செய்திருக்கின்றேன். மேலும் செய்வேன். ஏனென்றால் அவர்களால் வேலை செய்ய இயலாது. நம்மை போன்றவர்கள்தான் உதவ வேண்டும். பாத்திரம் அறிந்தே பிச்சை இட வேண்டும் என்பது மிக சரிதான்.

 3. சுந்தர் சார்,

  மிகவும் உபயோகமான பதிப்பு. நான் பலமுறை thappanavargalukku

  தானம் செய்துவிட்டு பிறகு அதற்காக வருந்தி இருக்கிறேன். இனிமேல்

  உங்கள் அட்வைஸ் படி நடக்க இருக்கிறேன். மிக்க நன்றி.

  உஷா , (மைசூர்).

 4. சுந்தர் சார் வணக்கம்

  மிகவும் பயனுள்ள பதிவு

  மிக்க நன்றி

 5. பிச்சைக்காரர்களைப் பற்றி அக்கு வேற ஆணி வேறாக ஆராய்ச்சி மாணவர் போல் ஆராய்ந்து எல்லோருக்கும் புரியும் படியாக பதிவாக அளித்ததில் மிக்க மகிழ்ச்சி.

  தங்கள் தளம் சார்பாக தொழுநோயாளிகளுக்கு உதவ வேண்டும் மாதம் ஒருமுறை என்ற தங்களின் அடுத்த முயற்சிக்கு பாராட்டுக்கள். ஈசன் அருள் புரிவான்

  வாழ்க … வளமுடன்

 6. வணக்கம் சுந்தர் உங்களை என்ன சொல்லி பாராட்டுவது என்று தெரியவில்லை.சாலையில் பார்க்கும் சம்பவங்களையும் ஒரு பதிவாக மாற்றி அதன் மூலம் ஒரு புதிய விதை ஊன்றிவிடுகிறீர்கள். பலர் பயன் அடைகிறார்கள்.வாழ்த்துகள் நன்றி .

 7. அம்மா உணவகம் என்று சொல்லி சோம்பேறிகளை ஊக்குவிப்பதற்குப் பதில், முதியோர்களையும், இயலாதவர்களையும் இணைத்து, அவர்களுக்கு முடிந்த பணிகளை கொடுத்து (சாலைகளை பராமரித்தல், செடி மரம் பராமரித்து நீர் ஊற்றுதல், ஆன்மீக தளங்களில் துப்புரவு பனி செய்தல், குழந்தை பராமரித்தல், மாற்று திறநாளிகளுக்கு உதவுதல் இன்னும் பல), உணவினை கொடுக்கலாம் அதன்மூலம் அவர்களும் தன்னம்பிக்கையுடன் தங்கள் சுய உழைப்பில் வாழ்வார்கள். இதற்கு அரசாங்கம் செய்தால் நல்லது, ஆனால் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்தப் பணியை செய்யலாம். இங்கே வேலை செய்பவர்களுக்கு ஆயிரம் தேவைகள் இருக்கிறது, அதனை முடிந்த முதியோர்கள், இயலாதவர்கள் மூலம் ஒருங்கிணைத்து செய்தால் எல்லோரும் பயன் பெறலாம். நம் நாட்டில் இதுபோன்ற எண்ணம் வந்தால் யாரும் “அநாதை” இல்லை.

  என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்ற பாடல், வெறும் தத்துவப்பாடல் அல்ல, நாம் மறந்துபோன மனித நேயப் பாடல். சுய நலம் மிக்க தலைவர்கள் நம்மை கெடுத்து அடுத்த தலைமுறையை
  செயளிலந்தவர்கலாக ஆக்கி விட்டார்கள். போதாக் குறைக்கு, இலவசங்களை தவிர்த்து, மது போதை வேறு. நம் நாட்டை ஆண்டவனும் அவன் மூலம் மிஞ்சி உள்ள நல்லவர்களும் மட்டுமே சேர்ந்து காக்க வேண்டும். விதையை விதைப்போம், நல்லவர்கள் கலந்து ஆலோசித்து, திட்டமிட்டு நடைமுறைப் படுத்துவோம். நம்பிக்கை இருக்கிறது. நம் நாட்டை மாற்ற. 100 இளைனர்களை கொடுங்கள் நான் இந்த நாட்டை மாற்றுகிறேன் என்று வீரத் துறவி விவேகானந்தர் கூறினார். அதற்கான நேரம் வந்துவிட்டது. ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு 1000 பேரை தேர்வு செய்து பணியினை துவக்க வேண்டும். அவர்கள் ஒவ்வொருவரும் பயிற்ருவிக்கப்பட வேண்டும்.

 8. sir,

  Nice work but i would like to bring to your notice that there is rehabilitation center for leporsy patient at chingleput u may be knowing which is run by central government with 300 patients. Anyone interested may give sweets or fruits on any occasion i have done it and got immense satisfaction i share this with others.

  S.CHANDRA MOULI

 9. வணக்கம்……..தொழுநோயாளிகளைப் பற்றி அறியும் பொழுது மனது கனக்கிறது……. சமூகத்தால் புறக்கணிக்கப் பட்டபின் அவர்களின் வாழ்வு கேள்விக் குறியாகிறது……….நம் தளத்தின் மூலம் அவர்களுக்கு உதவ வேண்டும் என்பது இறைவனின் விருப்பம் போலும்……… தங்களின் சேவைக்கு எங்களின் வணக்கங்கள்………. நம் தளத்தின் பொறுப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்வதாகத் தோன்றுகிறது……….இறைவன் துணை நிற்கட்டும்……..

 10. காலத்தின் கட்டாயம் என்று சொல்வார்களே..அது இது தான். இந்த பதிவு எப்படி உருவானது? எப்படி உருமாறியது ? என்று யோசித்தால் போதும்.

  மிக மிக தேவையான ஒன்று.தொழுநோயாளிகளுக்கு உதவுதல் சிறந்த பரிகாரம் என்று சொல்லி முடித்தது ..சிறப்பு தான்.

  வாசுதேவன் அய்யாவின் பின்னூட்டம் பல செய்திகளை உணர்த்துகிறது. நம் தளம் மூலம் நாம் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது.அனைத்திற்கும் ஈசனார் அருள் புரியட்டும்.

  தாங்கள் இட்ட விதையை , தள அன்பர்களாகிய நாங்களும் இட முயற்சிக்கிறோம்.

  நன்றி அண்ணா..

 11. Really an eye opener. Wondering how people are exploiting the kind hearted,.

  With respect to the lepers living near Ram theatre any reason why they are not staying in the rehab centers but living on Road. Do you have any idea? This question might linger in the mind of other readers as well.

  PS.Some of my friends are planning to provide a kit containing Dettol, cotton, Bandage, soap and ointment to these people living near Ram theatre this month. Thanks to Sundar ji for this article which sowed the thought to help them in this way.

  1. அது பற்றிய ஐடியா எனக்கு இல்லை. ஒருவேளை சுதந்திரத்தை விரும்பி இவ்வாறு இருக்கலாம். நீங்கள் செல்வதானால் இரவு 8.30 க்கு மேல் செல்லவும். ஏனெனில், சம்பந்தப்பட்ட கடைகளை அடைத்த பின்னர் தான் அவர்கள் அங்கு தங்கமுடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *