Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, October 6, 2024
Please specify the group
Home > Featured > அணுகாதவர்க்குப் பிணியே பிணிக்கு மருந்தே…! Rightmantra Prayer Club

அணுகாதவர்க்குப் பிணியே பிணிக்கு மருந்தே…! Rightmantra Prayer Club

print
நார்த்தமலை அருகே உள்ள கீழக்குறிச்சி என்ற செழிப்பான ஊர் ஒன்று உள்ளது. எங்கெங்கு பார்க்கினும் பசுமையை போர்த்திய வயல்வெளிகள் தான். இந்த வயல்வெளிகளுக்கு இடையே உள்ள பாதை வழியே சிவாச்சாரியார் ஒருவர் தினந்தோறும் சென்று வரும்போது, ஒரு குறிப்பிட்ட இடத்தை கடக்கும்போது மட்டும் இடறிவிழுந்துவிடுவாராம். இது போல ஒரு முறை அல்ல பல முறை நடக்கவே அவருக்கு சந்தேகம் தோன்றி, வயலில் வேலை செய்பவர்களை அழைத்து அந்த இடத்தை தோண்டி பார்த்தபோது அழகிய அம்மன் விக்ரகம் ஒன்று கிடைத்தது.

Narthamalai temple
நார்த்தமலை முத்துமாரியம்மன் ஆலயம்

சிவாச்சாரியார் உட்பட அனைவருக்கும் பரவசம். எல்லாரும் அம்மனை கரங்கூப்பி தொழுதார்கள்.

அதே நேரம் அங்கேயிருந்த பெண் ஒருவருக்கு அருள் வந்து, “அருகே உள்ள மலையடிவாரத்தில் சிவனார் கோவில் அருகே எனக்கு ஒரு கோவில் எழுப்பி வழிபடுங்கள். இந்த ஊரை நோய் நொடி எதுவும் அண்டாமல் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று உத்தரவு கிடைத்ததாம்.

இதைத் தொடர்ந்து நார்த்தமலை அடிவாரத்தில் இந்த அம்மனுக்கு கோவில் எழுப்பி விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தனராம். அம்மன் அங்கு குடிகொண்டது முதல் அம்மை முதலான எந்த நோயும் அந்த ஊரை அண்டவில்லை. எனவே ‘முத்துமாரி’ என்று பெயரிட்டனர்.

Amman

இது போல தமிழகத்தில் உள்ள பிரபல அம்மன் கோவில் ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு அதிசயம் ஒளிந்துள்ளது.

மத்தூர் மகிஷாஷுர மர்த்தனி கோவிலின் மணிகண்ட குருக்கள் நம்மிடம் மகிஷாஷுர மர்த்தனியின் மகிமைகளை பற்றி குறிப்பிடும்போது இரண்டு சம்பவங்களை குறிப்பிட்டார்.

“சென்னை பாரிமுனையை சேர்ந்த வியாபாரி அவர். அவரது பெண்ணுக்கு எத்தனையோ இடங்களில் தேடியும் வரன் அமையவில்லை. மிகவும் கவலையுற்ற அவர் கடைசீயாக வந்த இடம் மத்தூர்.

தொடர்ந்து ஒன்பது வாரங்கள் வந்தார். என்ன அதிசயம் ஒன்பதாவது வாரம் முடிவதற்குள் பெண்ணுக்கு நல்ல இடத்தில் வரன் அமைந்து ஜாம்ஜாமென்று திருமணம் நடைபெற்றது.

அம்மன் மீது பக்தி அதிகமாகி, கோவிலுக்கு பல திருப்பணிகளை செய்தார். கோவிலுக்கு 2003 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றபோது, அறநிலையத்துறையால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் செலவு செய்யமுடியாமல் தவித்தனர். தனது மகளுக்கு நல்லபடியாக திருமனத்த்தை மகிஷாஷூர மர்த்தனி நடத்திக்கொடுத்தபடியால், கோவிலின் முன்மண்டபம் கட்டுமான செலவை இவர் ஏற்றுக்கொண்டதோடு மேலும் பல திருப்பணிகளை செய்தார்.

என்னையும் திருமணத்திற்கு அழைத்து உரிய மரியாதைகள் செய்து அனுப்பினார்.”

Maddur Amman

“அடுத்து மற்றொருவர். இவர் திருத்தணியை ஒட்டியுள்ள சுற்றுப்பகுதிகளில் காண்ட்ராக்ட் பணிகள் எடுத்து செய்து வந்தார். தொழிலில் பலத்த நஷ்டம். கடன் மேல் கடன்.

என்ன செய்வதென்று தெரியாத நிலையில் மகிஷாஷூரமர்த்தனியை சரணடைந்தார். ஒன்பது வாரம் விளக்குகள் ஏற்றினார். தற்போது அவர் இரண்டு திருமண மண்டபங்களுக்கு சொந்தக்காரர். ஒரு கல்லூரியிலும் தனியார் தொழிற்சாலையிலும் மகிஷாஷூரமர்த்தனி அம்மன் பெயரில் ரெஸ்டாரன்ட் நடத்திவருகிறார். இப்படி அன்னையின் அற்புதங்களை எவ்வளவோ சொல்லலாம்.” என்கிறார் மணிகண்ட குருக்கள்.

புத்திர பாக்கியம் மற்றும் திருமண பிராப்தம் வேண்டுவோர், அன்னையை தரிசித்து அபிஷேகங்கள் செய்து, வேப்பிலை பிரசாதத்தை சாப்பிட்டு வந்தால் அவர்கள் கோரிக்கை நிறைவேறுவது திண்ணம் என்று உறுதியாக கூறுகிறார் மணிகண்ட குருக்கள்.

ஒன்பது வாரம் செல்ல விரும்புகிறவர்கள் செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் அங்கு இருப்பது போல செல்லவேண்டும்.

===============================================================

Also check : Success Stories where our Rightmantra Prayer Club prayers are answered…. (சந்தான ப்ராப்தி, உத்தியோக ப்ராப்தி, ருண விமோசனம் etc. etc.)

‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

===============================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் : மத்தூர் மகிஷாஷூர மர்த்தனி ஆலய தவில் வித்துவான், காஞ்சி காமகோடி பீடம் திரு.ஏ.ஜி.லோகநாதன் அவர்கள்

இரண்டு வாரங்களுக்கு முன்பு நமது தளத்தின் ஆலய தரிசன பதிவுக்காக மத்தூர் அருள்மிகு மகிஷாஷூரமர்த்தனி ஆலயத்திற்கு சென்றபோது இவரை சந்தித்தோம்.

அவருடன் பேசும்போது தான் தெரிந்தது அவர் காஞ்சி காமகோடி பீடத்திலும் தவில் வாசித்திருக்கிறார் என்றும் மகா பெரியவாவை பல முறை தரிசித்திருக்கிறார் என்றும்.

“நீங்கள் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளின் போது தவில் வாசிக்கும்போது, நம் விவசாயிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். விவசாயிகளே நாட்டின் முதுகெலும்பு. ஆனால் இன்று அவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலை மாறி விவசாயிகள் வாழ்வாதாரம் முன்னேற்றமடையவேண்டும் என வேண்டிக்கொண்டு தவில் வாசிக்கமுடியுமா?” என்று கேட்டோம்.

AG Loganadhan

“தாராளமா சார்… நான் எப்பவுமே தவில் வாசிக்கும்போது நாடும் மக்களும் நல்லா இருக்கணும் மழை பெய்ய வேண்டும் என்று வேண்டிக்கொண்டு தான் வாசிப்பேன்” என்றார்.

வரும்போது அவரை அலைபேசி எண்ணை பெற்றுக்கொண்டு வந்தோம். இன்று அவரை தொடர்புகொண்டு நமது பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி, நம் வாசகர்களுக்காக பிரார்த்தனை நேரத்தின்போது மகிஷாஷூர மர்த்தனியிடம் பிரார்த்திக்கவேண்டும் என்று கேட்டபோது, மிக்க மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.

இவரது சொந்த ஊர் திருத்தணி. இவரது தந்தை, பாட்டனார் என அனைவரும் தவில் வித்துவான்கள் தான். மத்தூர் மகிஷாஷூர மர்த்தனி ஆலயத்தில் மட்டுமல்ல… திருத்தணி சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானத்திலும் இவர் தவில் வாசித்திருக்கிறார். ஆண்டு துவக்கத்தில் குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியரிடம் ‘தவில் நன்மணி!’ என்கிற விருதையும் பெற்றிருக்கிறார். இது தவிர மேலும் பல விருதுகளையும் பாராட்டுக்களையும் தனது தவில் இசைக்காக பெற்றிருக்கிறார்.

மகா பெரியவா திருமலை யாத்திரை போகும்போதெல்லாம் பொன்பாடியில் தங்குவது வழக்கம். அது தவிர சாதுர்மாஸ்ய விரதத்திற்காகவும் மத்தூர் அருகே  முகாமிட்டிருக்கிறார். அப்போதெல்லாம் பெரியவாவை வரவேற்க செல்லும் மங்கள வாத்தியக் குழுவில் இவரும் ஒருவர். தவில் வாசிக்க  செல்வார். அதே போன்று சந்திரமௌலீஸ்வரர் பூஜையின்போதும் பல முறை தவில் வாசித்திருக்கிறார். பெரியவாவிடம் ஆப்பிள், மாதுளை போன்ற பழங்களை பிரசாதமாக பெற்றிருக்கிறார்.

வரும் ஞாயிறு நமது பிரார்த்தனை நேரமான மாலை 5.30 PM – 5.45 PM மகிஷாஷூர மர்த்தனி ஆலயத்தில் தான் இவர் இருப்பார் என்றும் நிச்சயம் நமது வாசகர்களுக்காக விசேஷமாகவே அம்மனிடம் பிரார்த்தித்துக்கொண்டு வாசிப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இசையால் நிச்சயம் மகிஷாஷூர மர்த்தனி அன்னையை எளிதில் வசப்படுத்திவிடமுடியும்.

இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருப்பவர்கள் அவசியம் மத்தூர் சென்று அம்மனை தரிசித்து வேப்பிலை பிரசாதம் பெற்றுக்கொண்டு வரவும். முடிந்தால் இவரையும் சந்தித்து பேசவும்.

நன்றி!

Also check : மகா பெரியவாவும் மத்தூர் மஹிஷாசுரமர்த்தனி அம்மனும் !

===============================================================

இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியுள்ள வாசகர்களைப் பற்றி…

இந்த வார பிரார்த்தனைக்கு முதலில் கோரிக்கை அனுப்பியிருக்கும் வாசகி திருமதி.ரஞ்சனி அவர்கள் கடந்த ஒரு வருடமாக நமது தளத்தை பார்த்துவருகிறார். சமீபத்தில் தான் நமக்கு அறிமுகமானார். மகா பெரியவா மீது பெரும் பக்தியும் அறச்சிந்தனை மிக்கவர்.

அடுத்து பிரார்த்தனைக்கு கோரிக்கை சமர்பித்திருக்கும் அம்சவேணி அவர்கள் சில நாட்களுக்கு முன்னர் நம்மை தொடர்பு கொண்டு, தனது கோரிக்கை பற்றி  கூறினார்.மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக்கொண்டோம். அலுவலகத்துக்கு நேரிலேயே கணவருடன் வருவதாகவும், நமக்கு விருப்ப சந்தா செலுத்த விரும்புவதாகவும் கூறி, சொன்னதை போல அலுவலகம் வந்து கோரிக்கையை சொல்லி நம்மையும் வாழ்த்திவிட்டு சென்றார். பல அறப்பணிகளை செய்ய விரும்பும் நல்லுள்ளம் அவர்.

பொதுப் பிரார்த்தனையில் குறிப்பிட்டுள்ள பிரச்னை பிரார்த்தனைக்கு தலைமையேற்கும் திரு.ஏ.ஜி.லோகநாதன் அவர்கள் கூறியது. உண்மையில் தற்போது மிகப் பெரும் பிரச்சனையாக இது உருவெடுத்துள்ளது. பெண்கள் குடத்தை எடுத்துக்கொண்டு வீதி வீதியாக குடிநீருக்காக அலைவது பார்க்கவே பரிதாபமான ஒன்று. நீரின்றி அமையாது உலகு. விரைவில் இப்பிரச்னை தீரவேண்டும்.

===============================================================

* திருமண தாமதம் தொடர்பான கோரிக்கைகள் தனியாக தொகுக்கப்பட்டு வருகிறது. நாம் கூறிய அந்த முக்கியப் பிரமுகரைப் பற்றி நமது தளத்தில் பதிவு வெளியானவுடன் அந்த பிரார்த்தனைகள் அவரைக் கொண்டே நடத்தப்படும். அதுவரை திருமண தாமதம் தொடர்பான பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும். editor@rightmantra.com என்கிற முகவரிக்கு அந்த கோரிக்கைகளை மின்னஞ்சல் அனுப்பவும்.

நம் தளத்தில் வெளியிட பிரார்த்தனை கோரிக்கை தனியாகவும், பெயர் ராசி நட்சத்திர விபரங்கள் தனியாகவும் அனுப்பவும். பெயர், ராசி, நட்சத்திரம் எதற்காக என்றால் நாம் திருமண பரிகாரத் தலங்களுக்கு செல்லும்போது அர்ச்சனை செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

வேறு சில கோரிக்கைகள் வந்துள்ளன. அவற்றை பெயரை போட்டு  வெளியிடலாமா அல்லது பெயர்களின்றி வெளியிடவேண்டுமா என்று குறிப்பிடவில்லை. அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளோம். அவர்களிடம் பதில் வந்த பிறகு அடுத்தடுத்த வாரங்களில் அந்த கோரிக்கைகள் மன்றத்தில் வைக்கப்படும்.

**  பிரார்த்தனைக்கு வேறு கோரிக்கைகளுக்காக விண்ணப்பித்து இதுவரை அது வெளியாகாமல் இருந்தால் அந்த மின்னஞ்சலையும் நமக்கு மீண்டும் editor@rightmantra.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

*** நமது வாசகர் மற்றுமொருவரின் வாழ்வில் ‘இடரினும் தளரினு’ம் பதிகம்அற்புதம் புரிந்துள்ளது. அது பற்றி பின்னர் விரிவாக பதிவு செய்கிறோம்.

===============================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

Dear Sir,

I kindly request all rightmantra readers and family members to pray for my daughter Madhumita, 3yrs old who falls sick every now and then. As a mother, i am really worried and i can’t carry my day-to-day works peacefully because of this.

Please pray for good health, long life and happiness for my family too.

Thanks and regards

Ranjini,
Chennai

===============================================================

குலம் தழைக்கவேண்டும் – மகளுக்கு மழலைச் செல்வம் வேண்டும்!

சென்னை கீழ்பாக்கம் கார்டனில் வசித்து வரும் திருமதி.அம்சவேணி அவர்கள் தனது மகள் விஷ்ணுப்ரியாவுக்காக இந்த பிரார்த்தனையை சமர்பித்திருக்கிறார்.

என்னுடைய மகள் பெயர் விஷ்ணுப்ரியா (32) மருமகன் பெயர் திரு. ராஜேஷ் (33 ).

மகளுக்கு கருப்பை தொடர்புடைய இரண்டு நரம்புகளில் பாதிப்பு காரணமாக கரு தங்கவில்லை. தற்போது ஒரு நரம்பு மட்டுமே வேலை செய்யும் நிலையில் உள்ளது. அதிலும் கூட சிறு பிரச்னை இருப்பதால் உரிய சிகிச்சை மேற்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். இதையடுத்து சிகிச்சைக்காக தனது கணவருடன் அடுத்த மாதம் சென்னை வருகிறாள்.

அவளுக்கு சிகிச்சை வெற்றிபெற்று, பாதிப்புக்கள் நீங்கி, நல்ல முறையில் அவள் கருத்தரித்து நல்ல ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கவேண்டும் என்று அனைவரையும் பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

எனக்கு ஒரே மகள். என் குலம் தழைக்க மழலைச் செல்வம் வேண்டும். இறைவன் அதை அருளவேண்டும்.

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

திருமதி.அம்சவேணி விஷ்ணுசித்தன்,
கீழ்பாக்கம் கார்டன்,
சென்னை.

===============================================================

பொது பிரார்த்தனை

ஏழைமக்களை அச்சுறுத்தும் குடிநீர் பஞ்சம்!

தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வகையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தவித்து வருகின்றனர். வசதி உள்ளவர்கள் கேன் வாட்டர் வாங்கிக்கொள்கின்றனர். ஆனால் கிராமபுறத்தில் இருப்பவர்கள் ஏழை பாழைகள் என்ன செய்வார்கள் ?

மக்களின் குடிநீருக்கு ஆதாரமாக விளங்கும் பல ஆறுகள், ஏரிகள் வற்றிப் போய் விட்டன. நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. இதனால் கிராமங்களில் குடிநீருக்கு மக்கள் அல்லல் படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரி 912 செமீ மழை பெய்ய வேண்டும். ஆனால் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் மழை குறைவு தான்.

Tamil_Daily_News_11018007994

வணிக நிறுவனங்கள் நிலத்தடி நீர் மட்டத்தை உறிஞ்சுவதால் பல மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. ஏரி, குளங்கள் மட்டுமல்லாமல் கிணறுகள், போர்வெல் ஆகிறவற்றிலும் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் உள்ளது. இதனால் கால்நடைகளுக்கு போதியளவு தண்ணீர் கிடைக்கவில்லை. மாடுகளுக்கு, உணவு பயிர்கள் கிடைக்கவில்லை. இதனால், பசுமாடுகள் வழக்கத்தைவிட, குறைந்த அளவே பால் கொடுக்கின்றன.

நிலத்தடி நீர் மட்டத்தை நம்பி விவசாயம் மேற்கொள்வோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இப்போதே பல இடங்களில் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள பிரதான அணைகளின் நீர்மட்டமும் குறைந்த அளவே காணப்படுவதால் வறண்டு காட்சியளிக்கின்றன. குளங்களில் தண்ணீர் இல்லாத ஆடு, மாடு போன்ற கால்நடைகளை மேய்ச்சலுக்கு கூட கொண்டு செல்ல முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். கடும் வறட்சி நிலவுவதால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் தலை தூக்கியுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே குடிநீர் பஞ்சம் தொடங்கி விட்டது. இதனால் மக்கள் குடிநீருக்காக அல்லல்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆறுகள், ஏரிகள் தூர்வாரப்பட்டிருந்தால் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். கோடையை சமாளிக்கலாம். இப்போதே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இனி வரும் காலங்களில் வரலாறு காணாத வகையில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

வான்முகில் வழாது பெய்து மக்கள் துன்பம் தீரவேண்டும்.

வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்

இதுவே இந்த வார பொது பிரார்த்தனை.

===============================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgவாசகி திருமதி.ரஞ்சனி அவர்களின் மகள் சிறுமி மதுமிதாவுக்கு அடிக்கடி ஏற்படும் உடல்நலக்குறைவு நீங்கி, அவள் ஆரோக்கியமாக இருக்கவும், பள்ளிக்கு சரியாக விடுப்பு எடுக்கும் நிலை வாராமல் செல்லவும், வாசகி திருமதி.அம்சவேணி அவர்களின் மகள் விஷ்ணுப்ரியாவுக்கு கருத்தரிப்பதில் உள்ள பிரச்சனைகள் பாதிப்புக்கள் நீங்கி, ஆரோக்கியமான குழந்தை பிறக்கவும், அவர்கள் குடும்பம் தழைக்கவும் பிரார்த்திப்போம். தமிழகத்தை உலுக்கும் குடிநீர் பஞ்சம் நீங்கி, மக்கள் இன்புறவும், மழையானது சரியாக பொழிந்து பூமி குளிரவும், எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம். இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றுள்ள மத்தூர் கோவில் தவில் வித்துவான் திரு.ஏ.ஜி.லோகநாதன் அவர்கள் மேன்மேலும் பல விருதுகளும் பாராட்டுக்களும் பெற்று குடும்பத்தினருடன் சௌக்கியமாக சந்தோஷமாக வாழவும் அம்பிகையை வேண்டுவோம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : ஆகஸ்ட் 9, 2015 ஞாயிற்றுக்கிழமை | நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

===============================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

===============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

===============================================================

Rightmantra Prayer Club

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

===============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E : editor@rightmantra.com  |   M : 9840169215  | W: www.rightmantra.com

===============================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131

===============================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : குன்றத்தூரில் தெருக்களுக்கு நாயன்மார்கள் பெயரைக் சூட்டி புரட்சி ஏற்படுத்தியிருக்கும் பெரியவர் திரு.போதகுரு அவர்கள்.

3 thoughts on “அணுகாதவர்க்குப் பிணியே பிணிக்கு மருந்தே…! Rightmantra Prayer Club

  1. நார்த்தமலை அம்மனை பற்றி இப்பொழுது தான் கேள்விபடுகிறேன் . மத்தூர் அம்மனின் லீலைகளைப் படிக்க படிக்க பரவசம். இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை இருக்கும் திரு லோகநாதன் அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள் . மகா பெரியவருடன் தொடர்புடைய ஒருவரை thalamai ஏற்கச்செய்ததில் மிக்க மகிழ்ச்சி. இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்து இருக்கும் வாசகர்களின் கோரிக்கை இனிதே இறை அருளால் நிறைவேறும்.

    நாட்டு மக்கள் நலனுக்காகவும் , பசுக்களுக்காவும் பிரார்த்தனை செய்வோம்

    லோகா சமஸ்தா சுகினோ பவந்து

    ராம் ராம் ராம்

    நன்றி
    உமா வெங்கட்

  2. முத்து மாரி அம்மன் கோவில் கோபுரம் அருமை
    சூலம் மிக அழகாகவும், மங்களகரமாகவும் உள்ளது.
    சிறுமி மதுமிதா பரிபூரண உடல் நலம் பெறவும், விஷ்ணுப்ரியா-ராஜேஷ் தம்பதியினருக்கு கூடிய விரைவில் சகல சௌபாக்கியங்களுடன் கூடிய மழலை செல்வம் கிடைக்கவும் வேண்டிக் கொள்வோம்.
    ஏரி, குளம் , கிணறு, ஆறு எல்லாம் நிரம்பி வழிய மாரி அளவாய் பொழிக மக்கள் வளமாய் வாழ்க
    மேலும் அனைவரது கோரிக்கைகளும் கூடிய விரைவில், உரிய நேரத்தில் நிறைவேற எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டிக் கொள்வோம்

    நன்றி
    வாழ்கவளமுடன்

  3. வணக்கம் சுந்தர். எல்லோர் கோரிக்கைகளும் நிறைவேற அன்னையிடம் ப்ராதிகிரேன்.குமுதம் ஜோதிடத்தில் அதன் ஆசிரியர் AM ராஜகோபாலன் இந்த வருடம் குடி நீர் பஞ்சம் இருக்காது அனைத்து அனனைகளும் நிரபும் என்ன எழுதி இருந்தார்.நிச்சயம் நடக்கும் என நம்புவோம்.நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *