‘தினமும் காலை, நாராயண நாமத்தையும், இரவில் தூங்கும் முன், சிவ நாமத்தையும் சொல்லுங்கள்…’ என, கூறியிருக்கிறார் காஞ்சி ஸ்ரீ மகா சுவாமிகள்.
மிக எளிய வழிபாடு தான்; ஆனால், நம்மில் எத்தனை பேர் இதை கடைபிடிக்கின்றனர். இறைவனின் நாமத்தை உச்சரிப்பதன் மகிமையைப் பற்றிய கதை இது:
பஜனை கோஷ்டி ஒன்று, வீதியில் நாம சங்கீர்த்தனம் பாடியபடி சென்று கொண்டிருந்தது. அதை, அலட்சியம் செய்த ஒருவனுக்கு, ராம நாமத்தை உபதேசித்த ஞானி ஒருவர், ‘இதை, விற்காதே; ஆத்மார்த்தமாக ஒரே ஒரு முறையாவது சொல்லிப் பார்…’ என்றார்.
அவனும் அப்படியே செய்தான்.
காலகிரமத்தில் இறந்து போனான். அவன் ஆத்மாவை இழுத்துப் போய், யமதர்மராஜன் முன் நிறுத்தினர். அவரும், அவனுடைய பாப, புண்ணிய கணக்கை பரிசீலித்து, ‘ஒருமுறை ராம நாமத்தை சொல்லி இருக்கிறாய்; அதற்காக, என்ன வேண்டுமோ கேள்…’ என்றார்.
ராம நாமத்தை உபதேசித்த ஞானி, ‘அதை விற்காதே…’ என்று கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. அதனால், அதற்கு விலை கூற மறுத்து, ‘ராம நாமத்திற்கு, நீங்கள் என்ன தர வேண்டுமென நினைக்கிறீர்களோ, அதைத் தாருங்கள்…’ என்றான்.
திகைத்த யமதர்ம ராஜா, ‘ராம நாமத்திற்கு, நாம் எப்படி மதிப்பு போடுவது…’ என்று எண்ணி, ‘இந்திரன் தான் இதை தீர்மானிக்க வேண்டும்; வா இந்திரனிடம் போகலாம்…’ என்றார்.
‘நான் வருவதென்றால், பல்லக்கில் தான் வருவேன். அத்துடன், பல்லக்குத் தூக்குபவர்களில், நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும். சம்மதமா…’ என்றான்.
‘இவன் நம்மையும் பல்லக்கு தூக்கச் சொல்கிறான் என்றால், ராம நாமம், மிகுந்த மகிமை உடையதாகத் தான் இருக்க வேண்டும்; அதனால் தான் இப்படி எல்லாம் பேசுகிறான்…’ என்று எண்ணிய யமதர்ம ராஜா, அதற்கு சம்மதித்து, அவனை பல்லக்கில் உட்கார வைத்து, சுமந்து கொண்டு இந்திரனிடம் போனார்.
இந்திரனோ, ‘ராம நாமத்தை என்னால் எடை போட முடியாது; பிரம்மதேவரிடம் கேட்போம்; வாருங்கள்…’ என்றார்.
‘யமதர்மனோடு, இந்திரனும் சேர்ந்து பல்லக்கு தூக்கினால் தான் வருவேன்…’ என்று மீண்டும் அவன் நிபந்தனை விதித்தான். அதற்கு இந்திரனும் ஒப்புக் கொண்டான். பல்லக்கை சுமந்து கொண்டு, பிரம்மாவிடம் சென்றனர்.
அவரும், ‘ராம நாம மகிமை சொல்ல, என்னால் ஆகாது; வைகுண்டம் போய், அந்த பரம்பொருளையே கேட்கலாம் வாருங்கள்…’ என்று சொல்ல, அவரும் பல்லக்கு சுமக்கும்படியாக ஆயிற்று.
அனைவரும் மகா விஷ்ணுவிடம் சென்று, ‘இந்தப் பல்லக்கில் இருக்கும் ஆன்மா, ஒருமுறை ராம நாமத்தை சொல்லியிருக்கிறது; அதற்காக, இவனுக்கு என்ன புண்ணியம் என்பதை தாங்கள் தான் கூற வேண்டும். எங்களால் முடியவில்லை…’ என்றனர்.
‘இந்த ஜீவனைப் பல்லக்கில் வைத்து, நீங்கள் எல்லாரும் சுமந்து வருகிறீர்களே… இதிலிருந்தே ராம நாம மகிமை தெரியவில்லையா…’ என்று சொல்லி, பல்லக்கில் வந்த ஆன்மாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டார் பகவான்.
அலட்சியமின்றி, ஆண்டவன் நாமம் சொல்வோம்; அவனருளாலே அல்லல்களை வெல்வோம்!
(நன்றி : பி.என்.பரசுராமன் | தினமலர்-வாரமலர்)
இராமநாமத்தின் மகத்துவத்தை பாமரர்க்கும் விளக்குவதற்கு இந்த கதை சொல்லப்பட்டுள்ளதே தவிர, வண்டி வண்டியாய் பாவம் செய்துவிட்டு ராமநாமத்தை சொன்னால் தப்பிவிடலாம் என்று யாரும் எண்ணக்கூடாது.
===============================================================
Also check :
ஆங்கிலேய கலெக்டருக்கு காட்சி தந்த மதுராந்தகம் ஏரி காத்த ராமர் – முழு கவரேஜ் – ஸ்ரீ ராமநவமி SPL!
சபரியின் பக்தியும் இழந்த பொலிவை பெற்ற பம்பை நதியும்! இராமநாம மகிமை (4)
அனுமனுடன் யுத்தம் செய்த இராமர்! எங்கே? ஏன்? – இராமநாம மகிமை (3)
ராம்சுரத்குமார் விளக்கிய ராமநாம மகிமை – (2)
கருடனின் கர்வத்தை அழித்த சிவபெருமான் – இராமநாம மகிமை (1)
===============================================================
Similar articles….
தீராத வினை தீர்க்கும் அடியார்கள் பாத தூளி – நம் இராமநவமி அனுபவம்!
108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் தவறவிடக் கூடாத ஒரு தலம்!
புடவை கட்டிக்கொள்ளும் பெருமாள் – சென்னை புறநகரில் ஒரு அதிசய மலைக்கோவில்!
வரங்களை அருள்வதில் திருமலைக்கு நிகரான ‘திருநீர்மலை’ திவ்யதேசம்!
மலை மீது ஒரு எழில் கோலம்! சென்னை புதுப்பாக்கம் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில்! (ஆலய தரிசனம் 1)
விருந்துண்ண சென்றவனுக்கு மருந்தும் கொடுத்தனுப்பிய என் கோதண்டராமன் – (ஆலய தரிசனம் 2)
நம் ராமநவமி தரிசனமும், பொறுமைக்கு கிடைத்த பரிசும்!
ராம நாம மகிமை & போதேந்திராள் வாழ்க்கை வரலாற்று நாடகம்! ஒரு நேரடி அனுபவம்!!
‘நாளை’ என்பதில்லை நரசிம்மனிடத்தில்!
பேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!
சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்!
நரசிம்மரும் நாயன்மாரும் நமக்கு வழங்கியுள்ள மிகப் பெரிய பொறுப்பு!
அண்ட சராசரங்களை கிடுகிடுக்க வைத்த நரசிம்மர் ஒரு வேடனிடம் கட்டுண்ட கதை!
===============================================================
[END]
இறைநாமத்தை உச்சரித்தால் கிடைக்கும் பலன்கலை எளிமையாக விளக்கிய பரசுராம் ஐயா அவர்களுக்கும், அதனை பகிர்ந்த தங்களுக்கும் மிக்க நன்றி. பின் குறிப்பிற்கு மற்றுமொரு நன்றி.
மீள்பதிவு என்றாலும் இந்த பதிவு ஒரு அதிமுக்கியமான பதிவாகும்.
பகிர்ந்தற்கு மிக்க நன்றி.
ராம நாமத்தின் மகிமை சொல்லி மாளாது.
உள்ளன்போடு ராம நாமத்தை ஜெபிக்கும்போது ஏற்படும் ஆனந்தத்திற்கு அளவேயில்லை.
Dear Mr. Sundar,
Good post. I have read a few articles in sakthi vikatan or kumudam bakthi by the same Mr.Parasuraman.
Waiting for many more articles on temples too.
Y dont u write abt parihara temples?
Jus a suggestion.
Tks n regards
Ranjini
Already planning. But i want to give something different and unknown temples. Soon it will start.
ராமநாமத்தின் மகிமை சொல்லில்சொல்ல முடியாது.
அதை அனுபவித்த அனைவருக்கும் அதன் பெருமை தெரியும்.
மீள்கதையை சொல்லிமுடித்த பிறகு உள்ள பஞ்ச் அருமை
நன்றி
மிகவும் அருமையான ராம நாம மகத்துவத்தை நம் தளத்தில் பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி. நான் தினமும் ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்.
கடந்த வாரம் என் கனவில் திருப்பதி மலை மீது பெருமாளின் முன்னால் நிற்கறேன் . ஆனால் கையில் வில்லும் அம்புடன் ராமாராக காட்சி அளித்தார் எம்பெருமான். ஒரு நிமிடம் புல்லரித்தது . கனவு களைந்து விட்டது. இது ராமஜெயத்தின் மகிமையால் நிகழ்ந்தது.
இன்னொரு நிகழ்வு : 10 நாட்களுக்கு முன் மழை நீரில் காந்தி மண்டபம் ரோட்டை கிராஸ் செய்யும் பொழுது கால் வழுக்கி நடு ரோட்டில் விழுந்தேன். பஸ்சும் , ஆட்டோவும் வேகமாக சென்று கொண்டு இருந்தது. அப்பொழுது அந்த வாகனமும் என் மேல் ஏறாமல் என்னைக் காத்தது ராமஜெயம். லேசான காலில் அடியுடன் தப்பித்தேன் இதை எதற்க்காக சொல்கிறேன் என்றால் எல்லோரும் ராம நாமம் எழுத வேண்டும்
தங்கள் ராம நாம மகிமை தொடரை பதிவாக எழுதவும்
நன்றி
உமா வெங்கட்
ராம் ராம் ராம்!
வணக்கம்….. ராம நாமத்தின் மகிமையை விளக்கும் மற்றுமோர் அழகிய பதிவு……… பகிர்ந்தமைக்கு நன்றிகள்………..
ராம நாமத்தின் விலை என்ற பதிவின் மூலம் ராம நாம மகிமையை தெரிந்து கொண்டோம்.
இதயத்தூய்மை பெற எண்ணுபவர்களுக்கே ராமநாமம் மகத்தானது. இதயத்தின் அடிஆழத்திலிருந்து ராமநாமம் எழவேண்டும். அப்போது நாடி நரம்பெல்லாம் உண்மையும் தூய்மையும் பரவத்தொடங்கும்.
எல்லையற்ற பொறுமையும், விடாமுயற்சியும் உள்ளவர்களால் மட்டும் ராம நாமத்தை தொடர்ந்து ஜபிக்கமுடியும்.அதனுடன், ராமபிரான் வாழ்ந்து காட்டிய நெறிமுறைகளைப் பின்பற்றி உயர்வாழ்க்கை வாழ முயற்சிக்க வேண்டும்.
உடல் நோய்களை மட்டுமே மருத்துவரால் குணப்படுத்த முடியும். ஆனால், நம் உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றில் உண்டாகும் குறைகளையும் களையும் சக்தி ராமநாமத்திற்கு உண்டு.
“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும பாவமும் சிதைந்து தேயுமே
ஜன்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே
“ராம” என்றிரண்டெழுத்தினால்”
நல்லன எல்லாம் தரும் “ராம” நாமத்தை,நாமும் ஜபிப்போமாக!
நன்றி அண்ணா…
ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்.