Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, December 7, 2024
Please specify the group
Home > Featured > ‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

print
மது பிரார்த்தனை கிளப் துவக்கி இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. பல வாசகர்கள் இந்த காலகட்டங்களில் பிரார்த்தனைக்கு கோரிக்கையை அனுப்பியிருக்கின்றனர். அவற்றுள், கோரிக்கை நிறைவேறிய சிலரது அனுபவங்களைப் பார்ப்போம்.

பொதுவாகவே பிரார்த்தனை என்பது மிக மிக சக்தி மிக்கது. இறைவனுக்கும் நமக்கும் நேரடி தொடர்பை ஏற்படுத்தும் ஒரு உன்னதமான விஷயம்.

ஆண்டவனிடம் “எனக்கு அது வேண்டும், இது வேண்டும், இதை தந்தால் நான் உனக்கு அதை செய்கிறேன்” என்றெல்லாம் சொல்வது பிரார்த்தனையல்ல. அது பிசினஸ். அப்போது பிரார்த்தனை என்றால் உண்மையில் என்ன?

பிரார்த்தனை என்பது CONFESSION, GRATITUDE, SELFLESSNESS. அதாவது தவறுகளை ஒப்புக்கொள்வது, நன்றி தெரிவிப்பது, சுயநலமற்ற வார்த்தைகளை கொண்டு செய்வது. இது தான் இது மட்டும் தான் பிரார்த்தனை.

Beautiful

நமக்காக நமது நலனுக்காக இறைவனிடம் வேண்டக்கூடாதா என்றால்…. நிச்சயம் வேண்டலாம். தவறில்லை. நமக்காக நமது தேவைகளுக்காக பிரார்த்திக்கலாம். ஆனால், கூடவே மற்றவர்களுக்காக, இந்த நாட்டுக்காக இந்த சமூகத்துக்காக சேர்த்து பிரார்த்தனை செய்யவேண்டும். அப்போது அது உன்னதமாகி இறைவனின் தனிக் கவனத்தை பெற்றுவிடுகிறது.

ஆண்டவனிடம் “எனக்கு அது வேண்டும், இது வேண்டும், இதை தந்தால் நான் உனக்கு அதை செய்கிறேன்” என்றெல்லாம் சொல்வது பிரார்த்தனையல்ல. அது பிசினஸ். அப்போது பிரார்த்தனை என்றால் உண்மையில் என்ன?

கீழ்கண்ட வாசகர்கள் தாங்கள் பிரார்த்தனை சமர்பித்தபோது, எப்படிப்பட்ட ஒரு கையறு நிலையில் இருந்தனர் என்று அவர்களுக்கு தெரியும். ஏதாவது ஒரு அற்புதம் நடந்தால் தான் தங்களுக்கு வழி பிறக்கும் என்று எதிர்பார்த்தவர்கள் இவர்கள். விரக்தியின் உச்சத்தில் இருந்தபோது நம்மை தொடர்புகொண்டு பிரார்த்தனைக்கு கோரிக்கைகளை அனுப்பி காத்திருந்தனர். மற்றவர்களுக்காகவும் பிரார்த்தித்து வந்தனர். இதோ இன்று இவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுவிட்டது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகியிருக்கிறது இவர்களது பிரார்த்தனை நிறைவேற. ‘நடக்கவே நடக்காது’ என்று நினைத்தது, இரண்டு ஆண்டுகளில் நடந்துவிட்டதே… இது எவ்வளவு பெரிய அதிசயம் ?

இதற்கு நமது பிரார்த்தனை கிளப்பே காரணம் என்று நாம் கருதவில்லை. அவர்கள் நம்பிக்கை, கர்ம பலாபலன்கள் என்று பல காரணிகள் இதில் உள்ளன. உயர்நிலை நீர் தொட்டி நிறைய நீர் இருந்தாலும், கீழே உள்ள குழாயை திறந்தால் தானே நீர் வரும்? அந்த குழாயைப் போலத் தான் நமது பிரார்த்தனை கிளப் செயல்படுகிறது. எங்கோ குவிந்திருக்கும் திருவருளை உங்களுக்கு பெற்றுத் தருகிறது.

பல நூறு வாசகர்களின் பிரார்த்தனை, அதை இறைவனிடம் எடுத்துச் செல்ல தகுதி வாய்ந்த ஒரு சான்றோர், இப்படி பலர் இவர்களுக்காக பிரார்த்தனை செய்யும்போது, அந்த எண்ண அலைகள் கர்ம பலாபலன்களை மாற்றிவிடுகிறது. பிரார்த்தனை செய்யும் நூற்றுக்கணக்கானோரில் ஒரே ஒருவருக்கு அந்த நேரம் யோகம் உச்சத்தில் இருந்து, அவர் வார்த்தைகள், எண்ணங்கள், பிரார்த்தனைகள் பலிக்கும் என்று இருந்தால் கூட போதும், சமர்ப்பிக்கப்படும் பிரார்த்தனை நிறைவேறிவிடும்.

பிரார்த்தனை கிளப்பில் பிரார்த்தனை சமர்பித்ததோடு நமது வேலை முடிந்துவிட்டது என்று மேற்படி வாசகர்கள் கருதாமல், சத்சங்கம், நல்ல எண்ணங்கள், இறைவழிபாடு, ஆலய தரிசனம், சேவை, என இந்த காலகட்டங்களில் தங்களை பல்வேறு விதங்களில் பக்குவப்படுத்திக்கொண்டனர். நமது தளத்தை தொடர்ந்து படித்து ஏதோ ஒரு வகையில் நம்முடன் தொடர்பில் இருந்தனர். நமது பிரார்த்தனை கிளப் மீதும் வாசகர்கள் மீதும் ‘நன்றியுணர்ச்சி’ அவர்களுக்கு இருந்தது.

சிலர் பிரார்த்தனைகளை வெளியிட்டவுடன் அதை அவர்கள் நம் தளத்தில் பார்த்தார்களா இல்லையா என்று கூட நமக்கு தெரியாது. குறைந்தபட்சம் அவர்கள் பிரார்த்தனை வெளியான அந்த வார பிரார்த்தனையாவது அவர்கள் செய்தார்களா இல்லையா என்று கூட  தெரியாது. உங்கள் பிரார்த்தனை வெளியிடப்பட்டுவிட்டது என்று மின்னஞ்சல் அனுப்பினால், அந்த மின்னஞ்சலையாவது குறைந்தபட்சம் அவர்கள் பார்த்தார்களா என்றால் அதுவும் தெரியாது.

அவர்களுக்காக பிரார்த்தனை செய்த – முன் பின் தெரியாத – அந்த முக்கியப் பிரமுகர்களுக்கும் – நமது வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும் கூட அவர்கள் நன்றி தெரிவிக்க மறந்துவிடுகின்றனர். இது ஏதோ நாம் நன்றியை எதிர்பார்த்து சொல்வதாக நினைக்கக்கூடாது. “என் கடன் பணி செய்து கிடப்பதே!” நன்றி, RESPONSE இதையெல்லாம் எதிர்பார்த்துக்கொண்டிருந்தால் ஏமாற்றத்திற்கு தான் உள்ளாவோம் என்று நமக்கு தெரியும். அந்தளவு இந்த உலகில் ‘நன்றி’ அரிதான பொருள் ஆகிவிட்டது. நமக்கும் அது பழகிவிட்டது. என்ன, ரைட்மந்த்ரா படிப்பவர்கள் இப்படி நடந்துகொள்கிறார்களே என்று சில நேரங்களில் வருத்தமாயிருக்கும். ஆனால், நாம் சொல்வது சம்பந்தப்பட்டவர்களின் நலனுக்காக. அவர்கள் பிரார்த்தனை விரைவில் நிறைவேறவேண்டும் என்ற அக்கறையின் காரணமாக. இதை படிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த கருத்துக்கள் போய் சேரவேண்டும் என்பதற்காக.

நன்றியுணர்ச்சியுடன் இருப்பவர்களுக்கே இறைவனிடம் கையேந்தும் தகுதி இருக்கிறது. முதலில் நாம் ஏற்கனவே நமக்கு கொடுத்தவைகளுக்கெல்லாம் நன்றி சொன்னோமா? அதை ஒரு கணம் யோசித்துப் பார்க்கவேண்டும்.

No matter thank god

“உனக்கும் கீழே உள்ளவர் கோடி; நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு” என்று கண்ணதாசன் எழுதிய வரிகள் எத்தனை ஆழமானது தெரியுமா?

உங்களில் அநேகமாக அனைவருக்கும் கண் பார்வை இருக்கிறது. இதற்கே நீங்கள் தினமும் பலமுறை நன்றி கூறவேண்டும். ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டு செயல்படமுடியுமா என்று பாருங்கள்… உங்கள் கண்களின் மகத்துவம் புரியும். பார்வையற்றோர் படும் வேதனை புரியும்.

உங்களில் அநேகமாக 95% பேருக்கு உடல் உறுப்புக்கள் நன்றாக இருக்கிறது. இதற்கும் நீங்கள் பலமுறை இறைவனுக்கு நன்றி கூறவேண்டும். அங்கஹீனத்துடன் இந்த உலகில் வாழ்பவர்களுக்கு தெரியும் உடலுறுப்புக்களின் அருமை.

அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது

உங்களில் பலருக்கு பெற்றோர்கள் குறிப்பாக ‘ஈன்றெடுத்த தாய்’ உடன் இருப்பார்கள். பரிவுடன் உங்களை கவனிக்க, விசாரிக்க, சமைத்துப் போட இருப்பார்கள். இது எவ்வளவு பெரிய ஆசீர்வாதம் தெரியுமா?

பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா

விலை மீது விலை வைத்துக் கேட்டாலும்
கொடுத்தாலும் கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா

பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே
உன்அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே

அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும்
நான் உந்தன்மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே

நண்பர் ஒருவர் “வெளிநாட்டுக்கு சென்று வேலை செய்யவேண்டும்… எனக்காக பிரார்த்தியுங்கள்”  என்றார்.

அப்போதே அவர் பெற்றோரை விட்டு பிரிந்து எங்கோ வேறு ஒரு மாநிலத்தில் பணிபுரிந்து வந்தார்.

“உங்க அம்மாவுக்கு என்ன வயசு?” என்றோம்.

“65 +” என்றார்.

“இப்போவே நீங்க அவங்ககூட இல்லே. என்னைக்கோ வருஷத்துக்கு ஒரு முறை ரெண்டு முறை தீபாவளி பொங்கலுக்கு ஊருக்கு போறீங்க. வெளிநாட்டுக்கு போனீங்கன்னா அதுக்கும் வாய்ப்பு இருக்காது. ஒரு கட்டத்துல பணமெல்லாம் வெறும் கலர் காகிதம் தான்றது புரியும். அன்னைக்கு தான் அம்மாவோட அருமை புரியும். ஆனா, THEN IT WILL BE TOO LATE.”

“முதல்ல ஊருக்கு போங்க. அங்கேயே பக்கத்துலேயே ஏதாவது ஒரு வேலை தேடி தினமும் வீட்டுக்கு போறமாதிரி ஏற்பாடு செஞ்சிக்கோங்க. இப்போ நீங்க வாங்குற சம்பளத்துல பாதி வாங்கினா கூட பரவாயில்லே. அம்மாவோட இருக்குற அந்த தருணங்கள் எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காது. தாயன்பை இழந்தவங்களுக்கு தான் தெரியும் அது. தினமும் அம்மா கையால சாப்பிடுங்க. அந்த சாப்பாட்டுலதான் அது பழையதா இருந்தாலும் அன்பும் கலந்து இருக்கும். இல்லீயா, நீங்க இருக்குற இடத்துக்கு உங்க அம்மாவை கூட்டிகிட்டு போய் கூட வெச்சிக்கோங்க. அதைவிட்டுட்டு பணம் சம்பாதிக்கப் போறேன் அது இதுன்னு அம்மாவை விட்டுட்டு போகாதீங்க” என்றோம்.

என்ன நினைத்தாரோ…. “சரியான நேரத்துல சொன்னீங்க சார்…” என்றவர், தற்போது அவர் ஊருக்கு அருகிலேயே ஒரு பணியில் சேர்ந்து தினமும் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு போய் வருகிறார்.

“எது இருக்கோ இல்லீயோ மனசுக்கு நிம்மதி இருக்கு சார் இப்போ” என்றார்.

“யெஸ்… அது ஒன்றைத் தேடித் தான் இன்று பல செல்வந்தர்கள் ஓடிக்கொண்டிருக்கின்றனர். உங்களுக்கு அது சுலபமாக கிடைத்துவிட்டது” என்றோம்.

===============================================================

பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்…!

ஒட்டியிருந்த இரட்டை குழந்தைகள் நல்லமுறையில் பிறந்தன!

வாசகி ஒருவர் ஜூலை 14, 2014 அன்று சமர்பித்திருந்த பிரார்த்தனையில், தனக்கு கருவில் இரட்டை குழந்தைகள் இருப்பதும் அவை பிரியாத நிலையில் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் இது மிகவும் சிக்கலான நிலை என்றும் தனக்காகவும் இரு குழந்தைகளும் நல்ல முறையில் கருவில் வளர்ந்து ஆரோக்கியமாக பிறக்கவும் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.

அவருக்கு சமீபத்தில் இரண்டு குழந்தைகளும் ஆரோக்கியமான முறையில் பிறந்திருப்பதாகவும் தாயும் சேயும் நலம் என்றும் நமக்கு சம்பந்தப்பட்ட வாசகியின் சகோதரர் சண்முகநாதன் தகவல் அனுப்பியிருக்கிறார்.

அந்த மின்னஞ்சல் உங்கள் பார்வைக்கு.

Dear Sundarji,

I am fine. My heart & mind is full of joy. i am not telling this for formality.

Our prayer club prayer have saved my sister’s life from critical pregnancy. After your PRECIOUS prayer the test reports were converted to positive. we felt peaceful.

She has deliverd twins (beautiful boy babies) thru ceasrian. Now both of them are fine. She is living in kuwait. As a brother i can’t do anything in this respect. It all happened only by your prayer. Thanks to you and Mr.Adudhurai Azhagu Panneerselvam iyya and rightamantra readers for all your prayer.

I am grateful to you and all prayerclub members throughtout my life time.

Thanking you
Shanmuganathan

அவர்கள் பிரார்த்தனை வெளியான பதிவு :
http://rightmantra.com/?p=12225

இந்த பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றது : ஆடுதுறை திரு.அழகு பன்னீர்செல்வம் அவர்கள். (நமது ரைட்மந்த்ரா விருதுகள் விழா மற்றும் ஆண்டுவிழாவின் சிறப்பு விருந்தினர்)

===============================================================

மழலைச் செல்வம் பிறந்தது ! குடும்ப விருட்சம் துளிர்த்தது!!

அடுத்து நமது வாசகர் சக்திவேல் மற்றும் அவரது சகோதரி திருமதி.ஜெயலக்ஷ்மி செந்தில்குமார்.

இருவரும் தனித் தனியே அனுப்பியிருந்தார்கள்.

கடந்த செப்டம்பர் 5, 2014 அன்று தனது பிரார்த்தனைக்கான கோரிக்கையை சமர்பித்திருந்தார். அவர் தங்கை ஆகஸ்ட் 17, 2013 அன்று நடைபெற்ற பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருந்தார்.

அவரது பிரார்த்தனையை வெளியிட்டபோது நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்தார். சென்ற டிசம்பர் 14 ல் நடைபெற்ற நமது ஆண்டுவிழாவிற்கும் கோவையிலிருந்து வருகை தந்திருந்தார்.

புத்தாண்டு துவக்கத்தில் நமக்கு ஃபோன் செய்து அவரது மனைவி கருத்தரித்திருக்கும் நல்ல விஷயத்தை கூறினார். அப்போது அவர் கூறிய காரணம் இரண்டு. ஒன்று நமது பிரார்த்தனை கிளப். மற்றொன்று நமது விழாவிற்கு வந்து அரிதினும் அரிய சான்றோர்களை நேரில் தரிசித்தது. “நல்லோர் தரிசனம் பாப விமோசனம் என்று நீங்கள் அடிக்கடி சொல்வீர்கள் சுந்தர். இத்தனை நல்லவர்களை ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் சந்தித்தாலோ என்னவோ என் பாபங்கள் தொலைந்து, இன்று என் கிரகத்தில் நல்ல விஷயம் நடந்துள்ளது” என்றார்.

சக்திவேல் அவர்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அவர் சகோதரியும் கருத்தரித்துள்ளார்.

சக்திவேல் அவர்களுக்கு நம் வாழ்த்துக்கள்.

திரு.சக்திவேல் அவர்களின் பிரார்த்தனை இடம்பெற்ற பதிவு :
http://rightmantra.com/?p=13526

இந்த பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றது : வள்ளி, லோச்சனா சகோதரிகள் (வாரியார் சுவாமிகளின் கொள்ளுப் பேத்திகள்)

அவரது சகோதரி திருமதி.ஜெயலக்ஷ்மி செந்தில்குமார் அவர்களின் பிரார்த்தனை இடம்பெற்ற பதிவு :
http://rightmantra.com/?p=6233

இந்த பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றது : திருவாசகத் தூதுவர் திரு.திருவாசகம் பிச்சையா அவர்கள்.

===============================================================

நடக்கமுடியாத குழந்தை நடந்த அதிசயம்!

அடுத்து கரூரிலிருந்து திருமதி.ராஜேஸ்வரி பன்னீர்செல்வம்.

தண்டுவட பாதிப்புடன் பிறந்த தனது குழந்தை சாய் அக்ஷதா நடக்க முடியாமல் சிரமப்படுவதாக கூறி மே 18, 2013 அன்று நடைபெற்ற பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருந்தார். அதை அப்படியே இங்கு தருகிறோம்.

வணக்கம் சார்.

என் பெயர் ராஜேஸ்வரி. கரூரில் வசிக்கிறேன். என்னோட ரெண்டாவது குழந்தை ‘சாய் அக்ஷதா ஜெய ஸ்ரீ’. பிறக்கும் பொதே பிரச்சனையோட தான் அவ பிறந்தாள். தண்டுவட எலும்பு பாதிலயே நின்று விட்டது. காலோட சேர்கிற எலும்பு பிறக்கும் போதே, இல்லாம தான் பிறந்தாள.

இப்போ 1 yr and 3 month ஆகுது. இன்னும் நடக்கல. ரொம்ப கஷ்டமா இருக்கு.

வாழ்க்கையே வெறுத்து போன மாதிரி இருக்கு. அவ நடக்க எனக்காக பிரார்த்தனை பண்ணுங்க. கூகுளில் குழந்தை நடக்க ஸ்லோகம் தேடிட்டு இருந்தேன். அப்போ தான் இந்த WEBSITE பார்த்தேன். நான் பார்த்த முதல் வரியே “நடக்க முடியாது இருந்த குழந்தையை நடக்க வைத்த தெய்வம்!” இது தான். எனவே நம்பிக்கையோட மெயில் பண்றேன். பாப்பா இடுப்புக்கு பலம் பெற, அவ காலுக்கு பலம் பெற, பாதத்துக்கு பலம் பெற வேண்டும். நானும் ஒரு மாற்று திறனாளி. என் பொண்ணூக்கும் அந்த நிலைமை வராமல் இருக்க போராடிட்டு இருக்கேன். எனக்காக பிரார்த்தனை பண்ணுங்க. முதல் பொண்ணு மதுமிதா எந்த குறையும் இல்லாம பிறந்தா. இப்போ அவ நான்காம் வகுப்பு படிக்கிறா. ரெண்டாவது குழந்தைக்கு மட்டும் இப்படி ஆயிடிச்சு. எனவே அவளுக்காக பிரார்த்தனை பண்ணுங்க.

நன்றி
ராஜேஸ்வரி & பன்னீர்செல்வம், கரூர்

மேற்படி கோரிக்கையை அனுப்பிய ராஜேஸ்வரி அவர்கள் நம்மிடம் பேசும்போதே அழுதுவிட்டார். காரணம் அவர் ஒரு மாற்றுத் திறனாளி. “நான் தான் மாற்றுத் திறனாளியாக பிறந்து கஷ்டப்படுகிறேன் என்றால் என் குழந்தையும் இப்படி பிறக்கவேண்டுமா?” என்று கதறுகிறார்.

அவருக்கு ஆறுதல் கூறி “காஞ்சியில் உள்ள மகா பெரியவாவின் அதிஷ்டானத்திற்கு ஏதாவது அனுஷத்தன்று போய் வாருங்கள். நிச்சயம் உங்கள் குழந்தையின் பிரச்னைக்கு நல்லதொரு வழி பிறக்கும்…” என்று அவருக்கு ஆறுதல் கூறி உடனடியாக அவர் செய்ய வேண்டிய நமக்கு தெரிந்த ஒரு பரிகாரத்தை சொன்னோம்.

சமீபத்தில் நம்மை தொடர்புகொண்டவர், குழந்தை நடக்க ஆரம்பித்துவிட்டதாக கூறி தனது மகிழ்ச்சியை பறிமாறிக்கொண்டார். அப்போது நாம் கேட்ட ஒரே கேள்வி, “மகா பெரியவாவின் அதிஷ்டானத்திற்கு போனீர்களா?” என்பது தான்.

கிட்டத்தட்ட மூன்று முறை சென்று வந்ததாக கூறினார்.

அவர் பயணம் செய்வது எத்தனை சிரமம் அதுவும் அந்த குழந்தையை வேறு எடுத்துக்கொண்டு என்பது நமக்கு தெரியும். இருப்பினும் நம்பிக்கையுடன் சென்று வந்ததற்கு கை மேல் பலன்.

மகா பெரியவா கைவிடவில்லை. நம் வாசகியின் நம்பிக்கையும் பொய்க்கவில்லை.

அவரது பிரார்த்தனை இடம்பெற்ற பதிவு :
http://rightmantra.com/?p=4636

இந்த பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றது : சாட்சாத் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா அவர்கள்.

===============================================================

சொத்து வழக்கில் வெற்றி! குடும்ப சொத்து மீண்டும் கிடைத்தது!!

கடந்த அக்டோபர் 31, 2014 அன்று நடைபெற்ற பிரார்த்தனைக்கு கோரிக்கை சமர்பித்திருந்த சேலம் வாசகி வசந்தா என்பவர், சென்ற மாதம் நமக்கு ஒரு தகவல் அனுப்பியிருந்தார்.

அவருடன் கூட பிறந்தவர்களே, கையெழுத்தை மாற்றிப் போட்டு சொத்துக்களை அபகரித்து நடுத்தெருவில் நிறுத்திவிட்டதாகவும் தற்போது அவரும் அவரது உடல்நலம் குன்றிய கணவரும் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும் அவர்களுக்காக பிரார்த்திக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

தற்போது வழக்கில் அவர்கள் பக்கம் சாதகமான தீர்ப்பு வந்திருப்பதாகவும், கணவரும் உடல்நலம் தேறி தற்போது பணிக்கு சென்று கொண்டிருப்பதாகுவும் கூறியிருக்கிறார்.

அவருக்கு நம் வாழ்த்துக்கள்.

அவரது பிரார்த்தனை இடம்பெற்ற பதிவு :
http://rightmantra.com/?p=14458

இந்த பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றது : பொள்ளாச்சியை சேர்ந்த மாற்றுத் திறன் சாதனையாளர் திரு.சூரியா அவர்கள்.

===============================================================

\நான்கு வருட போராட்டம் முடிவுக்கு வந்தது – நல்லதொரு வேலை கிடைத்தது!

அடுத்து மைசூரிலிருந்து வாசகர் உதயகுமார்.

இவர் தனக்கு நல்லதொரு வேலை வேண்டி, பிரார்த்தனைக்கு மனு செய்திருந்தார். திருச்சி திருவெறும்பூருக்கு செல்லும்போது, எறும்பீஸ்வரருக்கு அர்ச்சனை செய்ய கடைசி நேரத்தில் இவர் பெயர் சேர்க்கப்பட்டது. தவிர, சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற (ஜூன் 19, 2015) பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருந்தார்.

அது முடிந்து சில நாட்களிலேயே இவருக்கு விப்ரோவில் நேர்முகத் தேர்வு ஒ.கே.யாகி அதில் தேர்ச்சியும் பெற்றுவிட்டார். என்ன காரணமோ தெரியவில்லை இவரது அப்ளிகேஷனை ஹோல்ட் செய்துவிட்டார்கள். நிறுவனத்தில் விசாரித்தபோது சரியான ரெஸ்பான்ஸ் இல்லை. கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று வருந்திய அவர் நம்மை தொடர்புகொண்டு தனது வருத்தத்தை பகிர்ந்துகொண்டார். “நமது பிரார்த்தனை கிளப்புக்கு கோரிக்கை அனுப்புங்கள். வெளியிடுகிறேன்” என்று சொன்னோம். தொடர்ந்து கோரிக்கை அனுப்பினார்.

இதோ தற்போது விப்ரோவிலிருந்து பணி நியமன ஆணை கிடைத்துவிட்டதாக நேற்று முன்தினம் நம்மை தொடர்புகொண்டு கூறினார்.

Dear Sundarji.

It is really a miracle that i got job in WIPRO. Because, when you started to Thiruverumbur you added my name at last. And after that i got call from WIPRO. I passed various tests and procedures. But after that they holded my application without telling the resume. Day by day my confident was declining. I spoke to you and you said to submit prayer request.

I sent you the request and that prayer was placed in our prayer club on June 19. Mrs.Santha Sethuraman headed that prayer. The next day while i checking WIPRO portal i found that I have been finally selected and i’ve got offer letter and joined the duty few days back.

I feel it happend because of Erumbeeswarar’s grace and Guru Rayar’s blessings and our Prayer Club.

thanks to all those prayed for me.

Regards,
R Udhayakumar,
Mysore.

திரு.உதயகுமார் அவர்களுக்கு நம் வாழ்த்துக்கள்.

அவரது பிரார்த்தனை இடம்பெற்ற பதிவு :
http://rightmantra.com/?p=19779

இந்த பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றது : அமரர் ‘மந்த்ராலய முரசு’ மானாமதுரை சேதுராமன் அவர்களின் துணைவியார் திருமதி.சாந்தா சேதுராமன் அவர்கள்.

===============================================================

இந்த வார பிரார்த்தனை கிளப் பதிவுக்கு பதில் இந்த பதிவு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வார பிரார்த்தனையில் அவரவர் நலன்களை தவிர கீழ்கண்ட மக்களுக்காகவும் பிரார்த்தனை செய்யவேண்டும் என்று கேட்டுகொள்கிறோம்.

அடுத்த வாரம் முதல், முன்பு அறிவித்ததை போல பிரார்த்தனை கிளப் பதிவு அளிக்கப்படும்.

5(137)

கோதாவரி புஷ்கரலு விழாவில் பலியானோருக்காக சிறப்பு பிரார்த்தனை!

ஆந்திர மாநிலத்தில் கோதாவரி புஷ்கரலு விழா ஜூலை 14 முதல் 25 ம் தேதி வரை விழா நடை பெற்று வருகிறது. விழாவில் அனைவரும் புனித நீராடுவது வழக்கம். இந்த ஆண்டு ‘கோதாவரி  மகா புஷ்கரலு விழா’ என்பதால் நதியானது மேலும் பிரகாசமாக இருக்கும். இதனால் பக்தர்கள் போட்டி போட்டு கொண்டு, நீராட முயன்றனர். இதன் பொருட்டு, ஆற்றின் படித்துறையில் கூட்ட நெரிசலில் தள்ளு முள்ளு ஏற்பட்டு நெரிசலில் சிக்கி 27 பக்தர்கள் எதிர்பாராத விதமாக பலியாகினர். மேலும் 30க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயமடைந்து ராஜமுந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

STAMPEDE

இன்னும் விழா தொடர்ந்து நடை பெற்று வரும் சூழ்நிலையில், விழா நல்லபடியாக நடந்து முடியவேண்டும்.

பலியான 27 பகதர்களின் ஆன்மா இறைவனடி சேரவும் அவர்களது பிரிவால் வாடும் குடும்பத்தார் அமைதியும் ஆறுதலும் பெறவும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பக்தர்கள் விரைவில் குணம் பெற்று வீடு திரும்பவும் பிரார்த்திப்போம்.

இதுவே இந்த வார பொது பிரார்த்தனை.!

===============================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

===============================================================

* திருமண வயது தாண்டியும் திருமணமாகாமல் தவிதவிப்பவர்களுக்காக ஒரு சிறப்பு பிரார்த்தனை மிக மிக அற்புதமான ஒரு மனிதரை கொண்டு நடைபெறவிருக்கிறது. அநேகமாக ஜூலை கடைசி வாரம் அந்த பிரார்த்தனை கிளப் பிரார்த்தனை இடம்பெறக்கூடும். எனவே இது தொடர்பாக ஏற்கனவே கோரிக்கை அனுப்பி வெளியாகாதவர்களும் சரி… புதிதாக அனுப்ப விரும்புகிறவர்களும் சரி உடனே நமக்கு editor@rightmantra.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சலில் தங்கள் (மகன்) பெயர், வயது, ஊர் உள்ளிட்ட விபரங்களை மின்னஞ்சல் (பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் கூடுதல் சிறப்பு) அனுப்பவும்.

நம் தளத்தில் வெளியிட பிரார்த்தனை கோரிக்கை தனியாகவும், பெயர், ராசி நட்சத்திர விபரங்கள் தனியாகவும் அனுப்பவும். பெயர், ராசி, நட்சத்திரம் எதற்காக என்றால், நாம் திருமண பரிகாரத் தலங்களுக்கு செல்லும்போது அர்ச்சனை செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

**  பிரார்த்தனைக்கு வேறு கோரிக்கைகளுக்காக விண்ணப்பித்து இதுவரை அது வெளியாகாமல் இருந்தால் அந்த மின்னஞ்சலையும் நமக்கு மீண்டும் editor@rightmantra.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

===============================================================

அடுத்த உழவாரப்பணி!

நமது அடுத்த உழவாரப்பணி, நாளை மறுநாள் (ஜூலை 19 ஞாயிற்றுக்கிழமை) குன்றத்தூரில் உள்ள சேக்கிழார் மணிமண்டபத்தில் நடைபெறவிருக்கிறது. 

DSC01949

பணியில் கலந்துகொள்ள விரும்பும் அன்பர்கள் நேரடியாக வளாகத்திற்கு காலை 6.30 – 7.00 மணிக்குள் வரவேண்டும். காலை காபி-பிஸ்கட்டும், மதியம் மதிய உணவும் வழங்கப்படும்.

முகவரி : தெய்வச் சேக்கிழார் மணிமண்டபம், பெரிய தெரு, குன்றத்தூர், சென்னை – 600 069.

===============================================================

Please check :

கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்

“எது இன்பம்?” — சேக்கிழார் மணிமண்டபத்தில் சில நெகிழ்ச்சியான தருணங்கள்!!

================================================================================

ராகு பரிகாரத் தலம் – குன்றத்தூர் நாகேஸ்வரர் கோவிலில் சிறப்பு அர்ச்சனை!

மேற்படி உழவாரப்பணி நடைபெறும் சேக்கிழார் மணிமண்டபம் அமைந்துள்ள அதே தெருவில் மணிமண்டபம் அருகில் அமைந்திருப்பது தான் வட திருநாகேஸ்வரம் என்று அழைக்கப்படும் ஆலயம். இது சென்னையில் உள்ள நவக்கிரக பரிகாரத் தலங்களில் ஒன்று. ராகு பரிகாரத் தலம். தெற்கே உள்ள திருநாகேஸ்வரம் போலவே, சேக்கிழார் பெருமான் தான் பிறந்த இந்த ஊரில் கட்ட விரும்பி எழுப்பிய கோவில் இது. 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

DSCN2649

நமது உழாவாரப்பணி நடைபெறும் நாளன்று இங்கு நம் தளம் சார்பாக சிறப்பு அர்ச்சனை நடைபெறவுள்ளது.

நம் வாசகர்கள் யாருக்கேனும் ராகு தோஷம் இருந்தாலோ, ராகு-கேது பெயர்ச்சி சரியில்லை என்றாலோ அவர்கள் தங்கள் பெயர், ராசி, கோத்திரம் விபரங்களை நமக்கு editor@rightmantra.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். அவர்கள் பெயருக்கு அன்று அர்ச்சனை செய்யப்படும்.

===============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

===============================================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்கள் குறிப்பிடும் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : editor@rightmantra.com    Mobile : 9840169215

===============================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131

===============================================================

Also Check :

வெற்றிகரமான பிரார்த்தனைக்கு ஒரு வழிகாட்டி!

உங்கள் பிரார்த்தனைகள் சுலபமாக நிறைவேற வேண்டுமா?

ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் – வாருங்கள் விதியை மாற்றுவோம்!

===============================================================

[END]

 

12 thoughts on “‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

  1. உங்கள் தளம் சார்பாக பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்து இருந்த வாசகர்களின் கோரிக்கை நிறைவேறியது அறிய மிக்க மகிழ்ச்சி.

    கோதாவரி புஷ்கரலு விழாவில் பலியனவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம்

    குன்றத்தூர் உழவார்ப் பணி இனிதே நடைபெற ஈசன் அருள் புரியட்டும்

    லோகா சமஸ்தா சுகினோ பவந்து

    ராம் ராம் ராம்

    நன்றி
    உமா வெங்கட்

  2. மிக மிக உணர்ச்சி பெருக்கில் மிதக்கும் படியான பதிவு..சென்ற வார பதிவில் தான் பிரார்த்தனையை பற்றி A to Z தெரிந்து கொண்டதாக நினைத்தேன். அனால் அது தவறு என்று புரிந்து கொண்டேன்.சிறப்பாக பிரார்த்தனையின் சூத்திரம் சொல்லிவிடிர்கள்.

    CONFESSION + GRATITUDE + SELFLESSNESS = பிரார்த்தனை

    பிரார்த்தனை நிறைவேறிய சம்பவத்தை படிக்க படிக்க.. இன்னும் நாம் போக வேண்டிய தூரம் அதிகம் என்று தோன்றுகிறது. ஒவ்வொரு நிகழ்வின் பின்னணி, அவர்களின் முயற்சி என எவ்ளோ செய்திகள் உள்ளன. அதிலும் “நல்லோர் தரிசனம் பாப விமோசனம்” என்ற செய்தி கொடுத்த பிரார்தனை பின்னணி இருகிறதே…!

    பிரார்த்தனை நிறைவேறிய அனைவர்க்கும் நம் வாழ்த்துக்கள்.அவர்கள் அனைவரும் மென்மேலும் உயரட்டும்.மேலும் ஏற்கனவே பிரார்த்தனை கோரியுள்ளவர்கள், நம்முடைய தேவைக்காக பிரார்த்தனை செய்து..மேலும் பொது நல நோக்கிற்காகவும் பிரார்த்தனை செய்து,ஆலய தரிசனம் செய்து..உழவார பணி செய்து இறைவனை உளமார மகிழ்விப்போம்.

    இந்த வார பொது பிரார்த்தனையை அனைவரும் மறக்காமல் செய்யவும்.

    வேண்டத் தக்கது அறிவோய் நீ! வேண்ட, முழுதும் தருவோய் நீ!
    வேண்டும் அயன், மாற்கு, அரியோய் நீ! வேண்டி, என்னைப் பணி கொண்டாய்;
    வேண்டி, நீ யாது அருள் செய்தாய், யானும், அதுவே வேண்டின் அல்லால்,
    வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில், அதுவும், உன் தன் விருப்பு அன்றே?
    (திருவாசகம்/குழைத்த பத்து)

    அனைவரது வாழ்விலும் இன்ப ஒளி பெருகிட எல்லாம் வல்ல ஈசனார் அருள் புரியட்டும்.

  3. மனோ , தங்களின் பின்னூட்டம் அருமை. தாங்கள் quote செய்த திருவாசக பாடல் நன்றாக உள்ளது.

    வாழ்க … வளமுடன்

    நன்றி
    உமா வெங்கட்

    1. உமா அம்மா அவர்களுக்கு
      வணக்கம். தங்களின் பதில் பின்னூட்டம் கண்டு, மிகுந்த மகிழ்ச்சி உற்றேன். தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

    2. சுந்தர் அண்ணா..
      தங்களின் பின்னூட்டம் சொல்லியது போல் “பொது நல பிரார்த்தனை ” மேற்கொள்வோம். காலையில் மற்றும் இரவில் சுமார் 5 நிமிடம் இறைவனிடம் பேசி பிரார்த்திப்போம்.

      “மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்” என்ற திருப்பதிகத்தை அறிய செய்தமைக்கு நன்றிகள். தாங்கள் இந்த பதிகத்தை கூறும் போது கேட்டுள்ளேன்..ஆனால் ஆல்டைம் பேவரைட் என்று தெரியாது..

      இந்த பதிகம் பற்றி நம் தலத்தில் மேற்கொண்டு தேட வேண்டும்.

      நன்றி..

  4. பிரார்த்தனைக் கோரிக்கைகள் நிறைவேறிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் வாழ்த்துகள்.
    மேலும், வேண்டுதல் வைத்துள்ள அனைத்து நண்பர்களின் வேண்டுதல்களும் நிறைவேற மகாபெரியவா அருள் புரிய வேண்டும்.
    கோதாவரியில் கும்பமேளாவில் உயிர்துறந்த அனைத்து ஆத்மாக்களும் இறைவனடியை அடைய பிரார்த்திப்போம்.

  5. Sundar Sir, How is your Dad now, I recited the 69th and the100th Dasakas of Sri Narayaneeyam, after I read about your Dad’s discomfort during your pilgrimage tour to Chidambaram. Thillai Pitthanar played some mischief during your pilgrimage tour. I am sure due to Sri Guruvayurappan’s grace, your Dad is well now. Please let us know about your favourite Shloka/Padikam. We would recite it for the welfare of your Dad, Mum and your family. Please convey our regards to your Mum and Dad
    cheers
    Shakuntala

    1. மிக்க நன்றி. எனக்காக மட்டுமல்ல, எல்லோருக்காகவும், குறிப்பாக இங்கு பிரார்த்தனை சமர்பிக்கும் அனைவருக்காகவும் நீங்கள் படிக்கவேண்டும்.

      எனக்கு ஆல்டைம் பேவரைட்… “மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்” என்னும் பதிகம் தான்.

      தங்கள் அன்புக்கு நன்றி…!

  6. நன்றி நன்றி நன்றி
    கோடானு கோடி நன்றிகள் இறைவா.
    மிகவும் சந்தோசமாக உள்ளது.
    நமக்கே நிறைவேறியது போன்ற மிக்க மகிழ்ச்சி .
    நமக்கும் கூடிய விரைவில் நிறைவேறும்
    கண்களில் கண்ணீர்.

    நன்றி
    வாழ்க வளமுடன்

  7. வாழ்க வளமுடன்

    பணம் பந்தியிலே,குணம் குப்பையிலே என்பர் ஆனால் இங்கு சுந்தர் சாரின் நல்ல குணத்தால் ஒரு நல்ல அமைப்பை உருவாக்கி அதன் மூலம் நல்ல நல்ல இதையங்களை இணையவைத்து நல்ல குணத்தை கோபுரத்தில் ஏற்றிவிட்டார்.அவருக்குதான் கோடான கோடி நன்றி சொல்லவேண்டும்

  8. எங்களுக்காக பிரார்த்தனை மேற்கொண்ட அனைத்து வாசக நண்பர்களுக்கு கோடானு கோடி நன்றிகள். பிரார்த்தனைக்கு தலைமை ஏற்ற வள்ளி, லோச்சனா சகோதரிகளுக்கும், திரு. திருவாசகம் பிச்சையா ஐயா அவர்களுக்கும், எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து இந்த பிரார்த்தனை கிளப் தவறாமல் நடத்தி வரும் நண்பர் சுந்தர் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. (பத்து நாட்கள் விடுப்பில் இருந்ததால் பதிவை தாமதமாக தான் பார்க்க முடிந்தது. மன்னிக்கவும்.)

  9. சார்,

    கூட்டு பிரார்தைனையில் ELLORAIYUM பங்கு எடுக்க VAITHA உங்களுக்குதான் மிக மிக நன்றி .

    வாழ்த்துக்கள் நிறைவேரியவர்கள் அனைவர்க்கும்/

    நன்றியுடன்

    சோ. ரவிச்சந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *