உழவாரப்பணி நடைபெற்ற மே 24, அக்னி நட்சத்திரம் தகித்துக் கொண்டிருந்த காலம் என்பதால், பணிக்கு எத்தனை பேர் வருவார்கள் என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், வருவதாக ஒப்புக்கொண்ட சில வாசகர்களால் கடைசி நேரத்தில் வர இயலவில்லை என்றபோதும், வேறு சிலர் புதிதாக வந்து பணியை சிறப்பித்தனர்.
இந்தப் பதிவில் கிட்டத்தட்ட அறுபதுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பதால், பிரவுசர் சற்று மெதுவாகத் தான் லோட் ஆகும். எனவே பொறுமையுடன் பதிவை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
1) உழவாரப்பணியின் புகைப்படங்கள்
2) கோவில் அர்ச்சகர்களுக்கும், கோவில் ஊழியர் ஒருவருக்கும் மரியாதை செய்து, வஸ்திரம் அளித்தது
3) அர்ச்சகர்கள் கரங்களால் நம் உழவாரப்பணிக்குழு உறுப்பினர்களுக்கு ‘சௌந்தர்யலஹரி’ பரிசளித்தது.
4) க்ரூப் ஃபோட்டோ
என புகைப்படங்கள் நான்கு நிலைகளில் அளிக்கப்பட்டுள்ளது.பணியை பொருத்தவரை BEFORE & AFTER படங்களை எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தந்திருக்கிறோம்.
இந்தப் பதிவின் நோக்கம் இதைப் பார்க்கும் படிக்கும் நம் வாசகர்களுக்கு உழவாரப்பணி மீது ஆர்வத்தை ஏற்படுத்தவும் மேலும் பணியில் பங்குபெற்ற நம் வாசக அன்பர்களை உற்சாகப்படுத்தவும், அடுத்தடுத்து நாம் செய்யக்கூடிய பணிகளில் அவர்கள் ஆர்வமுடன் கலந்துகொள்ளவுமே அன்றி வேறொன்றுமில்லை.
சென்னை நகருக்குள் நடைபெற்ற பணி என்பதால் போக்குவரத்துக்கு வேன் ஏற்பாடு செய்யவில்லை. அனைவரையும் நேரே திரிசூலம் வரச்சொல்லிவிட்டோம்.
வீட்டிலிருந்து ஒரு பிக்கப் வேன் மூலம் உழவாரப்பணிக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு காலை 6.00 மணிக்கெல்லாம் புறப்பட்டுவிட்டோம். சரியாக 6.45 மணிக்கு கோவிலை அடைந்தாகிவிட்டது.
பொருட்களை இறக்கிவைத்துவிட்டு, கோவிலை ஒரு முறை சென்று சுற்றிப் பார்த்துவிட்டு வந்தோம். உழவாரப்பணிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர, பணி துவங்கியது. பணியை துவக்குவதற்கு முன்னர், அர்ச்சனை செய்துவிட்டு பணியை துவக்கவிருந்தோம். ஆனால், கோவில் அர்ச்சகர் திரு.கணபதி ஐயர் அவர்கள் பணி முடிந்த பின்னர் அர்ச்சனை செய்துகொள்ளலாம் என்றார்.
எனவே காபி, பிஸ்கட் சாப்பிட்டு சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்ட பிறகு பணி முழுவீச்சில் துவங்கியது. (காபி, பிஸ்கட் ? சே… சே… நாம அதை தொடலைங்க…! நம்புங்க!!)
இருக்கும் நபர்களுக்கு ஏற்றார்போல அனைவரும் சிறு சிறு குழுவாக பிரிந்து கைங்கரியம் செய்தோம். மகளிர் குழுவினர் ஒரு சிலர் தாமதமாக (வழக்கம் போல!) வந்தாலும் சிறப்பான பணிகளை செய்து முடித்தனர் என்பது வேறு விஷயம். நவக்கிரக சன்னதி, அம்பாள் சன்னதி, சுவாமி சன்னதி என தலா அனைவருக்கும் பிரித்து விடப்பட்டது.
முதலில் கோவில் முழுதும் ஒட்டடை அடிக்கப்பட்டது. பின்னர் பிரகாரம் முழுக்க பெருக்கி சுத்தம் செய்து நீர் விட்டு அலம்பிவிடப்பட்டது. தூண்களில், தூண் இடுக்குகளில் அப்பிக்கொண்டிருந்த விபூதி, குங்குமம் ஆகியவை பிரஷ் வைத்து துடைக்கப்பட்டது. பிரகாரங்களில் நீண்ட நாட்களாக இருந்த குப்பைகள் மொத்தமும் அள்ளப்பட்டு வெளியே கொண்டுபோய் போடப்பட்டது.
பழைய உடைந்த விளக்குகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டது. தீபபேற்றும் மெட்டல் மேடை சுரண்டி சுத்தம் செய்யப்பட்டு பின்னர் நீர் விட்டு அலம்பிவிடப்பட்டது. நந்தியின் சன்னதி முன்பு இருந்த எண்ணை பிசுக்கை சுரண்டி எடுத்து சுத்தம் செய்யப்பட்டது.
வழக்கம் போல இந்த முறையும் மகளிர் அணியினருக்கு தான் பணி அதிகம். எக்கச்சக்க பூஜை பாத்திரங்கள், மற்றும் விளக்குகள் ஆகியவற்றை தேய்க்க வேண்டியிருந்தது. ஆனால் கொஞ்சம் கூட அசராமல் அடித்து தூள் கிளப்பிவிட்டார்கள்.
பாதி பணி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, சீதாராமன் – காயத்ரி தம்பதியினர் மகள்கள் வள்ளி லோச்சனா மற்றும் அவர்களது உறவினர் சிலருடன் வந்து, பணியில் சேர்ந்துகொண்டனர்.
புகைப்படமெடுக்கும் பணியையும் ஒருங்கிணைப்பு பணியையும் நம்மிடம் இருந்து சரிபாதி எடுத்துக்கொண்டு நண்பர் மனோகரன் உதவினார்.
உழவாரப்பணியை பொருத்தவரை எவ்வளவுக்கெவ்வளவு வேலை அதிகமோ அவ்வளவுக்கவ்வளவு ஆத்ம திருப்தியும் சந்தோஷமும் கிடைக்கும். இங்கும் அதே தான்.
ஒவ்வொரு முறையும் உழவாரப்பணி செய்யும்போது நமக்கு கிடைக்கக்கூடிய மனநிறைவு வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒன்று. கோவில் சுத்தமானதோ இல்லையோ எங்கள் மனமும் வாழ்க்கையும் சுத்தமானதாகவே கருதுகிறோம். ஒருமுறை உழாவாரப்பணி செய்து அந்த மனநிறைவை உணர்ந்து பாருங்கள் புரியும். அதற்கு பிறகு கிரகமாவது தோஷமாவது…. அவன் வீட்டு வேலைக்காரர்களாகிவிட்ட பிறகு நம்மை பார்த்துக்கொள்வது அவன் கடமையாகிவிடுகிறது அல்லவா?
சுமார் 1.00 மணியளவில் அனைத்து பணிகளும் முடிவடைந்த பின்னர், திரிசூலநாதருக்கு நம் தளம் சார்பாக விசேஷ அர்ச்சனை செய்யப்பட்டது. அனைவருக்கும் வீரேஸ்வரன் குருக்கள் சங்கல்பம் செய்து வைத்து அர்ச்சனையும் சிறப்பான முறையில் செய்தார். நாம் கொண்டு சென்ற பெயர்ப்பட்டியலில் இருந்த நம் வாசகர்களின் பெயர்களுக்கும் சங்கல்பம் செய்யப்பட்டது.
அடுத்து….நமது உழவாரப்பணியின் முக்கிய அம்சமே கோவிலில் துப்புரவு பணி செய்பவர்கள் மற்றும் அர்ச்சகர்களை கௌரவிப்பது தான். இந்த ஆலயத்தை பொருத்தவரை துப்புரவு பணி செய்யும் ஒருவர் அன்று வரவில்லை. எனவே வீரேஸ்வரன் குருக்களுக்கும் திரு.கணபதி குருக்களுக்கும் பிரகாரத்தில் வைத்து நம் தளம் சார்பாக மரியாதை செய்யப்பட்டது. இருவருக்கும் பொன்னாடை போர்த்தப்பட்டு வெற்றிலை பாக்கு, பூ, பழம், வேட்டி, சட்டை, ரொக்கமாக ஒரு சிறு தொகை என அனைத்தும் வைத்து தரப்பட்டது.
ஆலய அலுவலக ஊழியர் ஒருவர் நடப்பதையெல்லாம் பார்த்துக்கொண்டேயிருந்தார். அவர் குமாஸ்தாவாக அல்லது உதவியாளராக இருக்கக்கூடும்.
பொதுவாக நாம் இது போன்ற மரியாதை செய்வதில் ஒரு கணக்கு இருக்கிறது. அதற்க்கென்று சில தகுதிகள் உள்ளன. ஆலயத்தில் அவர்கள் தன்னலம் கருதாது பணியாற்றுபவர்களாக இருக்கவேண்டும். நாம் ஒரு பக்கம் வேலை செய்தாலும் அவர்கள் ஒரு பக்கம் பணி செய்ய ஆர்வம் காட்டவேண்டும். குறைந்தபட்சம் எங்களை வேலைவாங்கவாவது செய்யவேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் ATTITUDE எப்படி என்பதை கவனித்த பிறகே மரியாதை செய்யப்படவேண்டியவர் பட்டியலில் அவர்களை சேர்ப்போம். இல்லையெனில், எடுத்து வைத்துவிடுவோம். பல உழவாரப்பணிகளை செய்து செய்து நாம் கற்றுக்கொண்டது இது.
ஆனால் மேற்க்கூறிய பணியாளர் (அலுவலக கடைநிலை ஊழியர்) இருவரையும் கௌரவிப்பதை பார்த்துக்கொண்டே இருந்தார். ஏனோ மனம் கேட்கவில்லை. அவரையும் இறுதியில் அழைத்து, “கோவிலை நல்லா பார்த்துக்கோங்க. குறிப்பா தலைவரை பார்த்துக்கோங்க. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்” என்று கூறி அவரையும் கௌரவித்தோம்.
உங்களுக்கே தெரியும் நமது உழவாரப்பணியில் பங்கேற்கும் நமது குழுவினரை உற்சாகப்படுத்த நாம் ஒவ்வொரு முறையும் சிறு சிறு பரிசுகள் அளித்து அவர்களை கௌரவிப்போம். இந்த முறை வழங்கப்பட்டது என்ன தெரியுமா? அம்பாளின் திவ்ய சொரூபத்தை விவரிக்கும் சௌந்தர்யலஹரி. கணபதி குருக்கள் அவர்களின் கரங்கள் மூலம் நம் வாசகர்களுக்கு சௌந்தர்யலஹரி வழங்கப்பட்டது. (சௌந்தர்யலஹரி உருவான கதை தெரியுமா? அது பற்றிய சிறப்பு பதிவு விரைவில்…!)
இந்த முறை நம் பணிக்குழு நண்பர்களுக்கு என்ன பரிசு தருவது என்று யோசித்தபோது ஒன்றும் தோன்றவில்லை. அந்த நேரம், நாம் ‘காலடியை நோக்கி ஒரு புனிதப் பயணம்’ தொடரின் அடுத்த பாகத்தை எழுதிக்கொண்டிருந்தோம். அதில் சௌந்தர்யலஹரி பிறந்த கதை பற்றி விவரித்திருக்கிறோம். அது ஒரு கற்பனைக்கெட்டாத அற்புதமான சம்பவம். பேசாமல் சௌந்தர்யலஹரியையெ கொடுத்துவிட்டால் என்ன என்று தோன்ற, அந்நேரம் பார்த்து நண்பர் ராகேஷ் அவர்கள் பாம்பன் ஸ்வாமிகள் அதிஷ்டானத்திலிருந்து நம்மை அலைபேசியில் அழைத்தார். அங்கு பல்வேறு நூல்கள் விறபனைக்கு இருப்பதாகவும் நமக்கு ஏதாவது வேண்டுமா என்றும் கேட்டார். அப்போது உழவாரப்பணி குழு நண்பர்களுக்கு திரிசூலத்தில் பரிசளிக்க, சௌந்தர்யலஹரி தேவைப்படுவதாகவும் அது இருந்தால் (சிறிய பாக்கெட் சைஸ் புத்தகம்) வாங்கிக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டோம். நேரில் பார்க்கும்போது அதற்குரிய தொகையை தந்துவிடுவதாக சொன்னோம். ஆனால் அவர் பணம் எதுவும் வேண்டாம், நானே வாங்கிவருகிறேன் என்று சொல்லி, சொன்னது போல வாங்கிக்கொண்டு வந்தார். எனவே, இந்தமுறை உழ்வாரப்பணிக்குழு அன்பர்களுக்கு சௌந்தர்யலஹரி பரிசளிக்கப்பட்டது. அது எத்தனை அற்புதமான ஒரு நூல் என்பதை இன்னும் ஓரிருநாளில் நாம் அளிக்கவிருக்கும் பதிவை வைத்து தெரிந்துகொள்ளலாம்.
பொதுவாகவே இறைவனின் ஸ்லோகம் மற்றும் பாடல்கள் புத்தகங்களுக்கு மதிப்பு அதிகம். அதுவும் அனுதினமும் சிவனுக்கு பூஜை செய்யும் பாக்கியம் பெற்ற ஒருவர் கரங்கள் மூலம் நாம் அனைவருக்கும் தந்ததனால் பன்மடங்கு மதிப்பு பெற்றது. சிவனை தீண்டும் உரிமை பெற்றவர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் திரு.வீரேச்வரன் குருக்கள் ஆகியோரெல்லாம் நெருங்கிய உறவினர்கள். பல ஆண்டுகளாக பரம்பரை பரம்பரையாக அர்ச்சகர்களாக பணியாற்றி வருகின்றனர்.
கடைசியாக மதிய உணவு. நமது ஏற்பாட்டில் வெளியே கேட்டரிங்கில் ஆர்டர் செய்து கொண்டு வரப்பட்ட புளியோதரை + சிப்ஸ் + தயிர் சாதம். வெளியே பிரகாரத்தில் நல்ல காற்றோட்டமான நிழலான இடமாக பார்த்து அமர்ந்தோம். எல்லாரும் ஒரு பிடிபிடிக்க நாம் மட்டும் வழக்கம் போல அடக்கி வாசித்தோம். (அட உண்மையா தானுங்க. வதந்திகளை நம்பாதீங்க!) புளிசாதத்தையும் தயிர் சாதத்தையும் ரவுண்டு கட்டி அடித்தவர்களின் பெயர்களை வெளியிட விரும்பவில்லை. கடைசி படத்தை பார்த்து நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்!!!!!
(நண்பர்கள் அனைவரும் விடைபெற்றுச் சென்றபிறகு நண்பர் குட்டி சந்திரன் மற்றும் அந்த நேரம் இருந்த ஓரிருவர் பொருட்களை வேனில் ஏற்ற உதவி செய்தனர். அனைத்தும் முடித்துவிட்டு புறப்படும்போது, மடப்பள்ளியில் பணியாற்றும் ஒரு மிக வயதான பாட்டி எதிரே வந்தார். அவருக்கும் கோவில் வாசலில் எண்ணை மற்றும் விளக்குகளை விற்கும் ஒரு மூதாட்டிக்கும் புடவை + ரவிக்கை செட் கொடுத்தோம். இது தொண்டுக்கு அல்ல. முதுமைக்கு நாம் கொடுக்கும் மரியாதை! )
================================================================================
அடுத்த உழவாரப்பணி!
நமது அடுத்த உழவாரப்பணி, வரும் ஜூலை 19 ஞாயிற்றுக்கிழமை குன்றத்தூரில் உள்ள சேக்கிழார் மணிமண்டபத்தில் நடைபெறவிருக்கிறது. வரும் ஜூலை 25 ஆம் தேதி இங்கு சேக்கிழார் விழா நடைபெறவிருக்கிறது. எனவே அதையொட்டி இந்த உழவாரப்பணி ஜூலை 19 நடைபெறுகிறது. (சென்ற ஆண்டும் இங்கு நாம உழவாரப்பணி செய்தது குறிப்பிடத்தக்கது.)
பணியில் கலந்துகொள்ள விரும்பும் அன்பர்கள் நேரடியாக வளாகத்திற்கு காலை 6.30 – 7.00 மணிக்குள் வரவேண்டும். காலை காபி-பிஸ்கட்டும், மதியம் மதிய உணவும் வழங்கப்படும்.
முகவரி : தெய்வச் சேக்கிழார் மணிமண்டபம், பெரிய தெரு, குன்றத்தூர், சென்னை – 600 069.
================================================================================
Please check :
கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்
“எது இன்பம்?” — சேக்கிழார் மணிமண்டபத்தில் சில நெகிழ்ச்சியான தருணங்கள்!!
================================================================================
ராகு பரிகாரத் தலம் – குன்றத்தூர் நாகேஸ்வரர் கோவிலில் சிறப்பு அர்ச்சனை!
மேற்படி உழவாரப்பணி நடைபெறும் சேக்கிழார் மணிமண்டபம் அமைந்துள்ள அதே தெருவில் மணிமண்டபம் அருகில் அமைந்திருப்பது தான் வட திருநாகேஸ்வரம் என்று அழைக்கப்படும் ஆலயம். இது சென்னையில் உள்ள நவக்கிரக பரிகாரத் தலங்களில் ஒன்று. ராகு பரிகாரத் தலம். தெற்கே உள்ள திருநாகேஸ்வரம் போலவே, சேக்கிழார் பெருமான் தான் பிறந்த இந்த ஊரில் கட்ட விரும்பி எழுப்பிய கோவில் இது. 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
நமது உழாவாரப்பணி நடைபெறும் நாளன்று இங்கு நம் தளம் சார்பாக சிறப்பு அர்ச்சனை நடைபெறவுள்ளது.
நம் வாசகர்கள் யாருக்கேனும் ராகு தோஷம் இருந்தாலோ, ராகு-கேது பெயர்ச்சி சரியில்லை என்றாலோ அவர்கள் தங்கள் பெயர், ராசி, கோத்திரம் விபரங்களை நமக்கு editor@rightmantra.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். அவர்கள் பெயருக்கு அன்று அர்ச்சனை செய்யப்படும்.
================================================================================
Please check :
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் – மழலைகள் போதிக்கும் ஒரு பாடம்!
================================================================================
An appeal – Help us in our mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
நமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா?
================================================================================
Also check articles on ‘உழவாரப்பணி’:
நம் உழவாரப்பணிக்கு பெருமை சேர்த்த சிறுவன்! நெகிழவைக்கும் சம்பவம்!!
தீவினைகளை அகற்றி பாவங்களை துடைத்தெறிய ஓர் அரிய வாய்ப்பு!
உயிரை பறிக்க வந்த எமதூதர்கள்; தடுக்க வந்த சிவகணங்கள்!
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே!
குரங்கை அடித்ததால் ஏற்பட்ட தோஷம்! மகா பெரியவா சொன்ன பரிகாரம்!! குரு தரிசனம் (32)
இவர்களின் சேவையை விட பெரியது இந்த உலகில் உண்டா? “இதோ எந்தன் தெய்வம்” – (3)
வள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!
“எது இன்பம்?” — சேக்கிழார் மணிமண்டபத்தில் சில நெகிழ்ச்சியான தருணங்கள்!!
பாயாசம் சாப்பிட்டதற்கு பாராட்டு கிடைத்த அதிசயம்! — சிவராத்திரி SPL (5)
“என் கடைக்காலம் அரங்கன் சேவைக்கே!’ – கண்கலங்க வைத்த ரங்கநாயகி – திருநீர்மலை உழவாரப்பணி
‘பெரிய’ இடத்து பணியாளர்களுக்கு நம் தளம் செய்த சிறப்பு – A quick update on திருநின்றவூர் உழவாரப்பணி !
திருமகளின் புகுந்த வீட்டில் (திருநின்றவூர்) நமக்கு உழவாரப்பணி வாய்ப்பு கிடைத்த கதை !
பாராட்டும் வரவேற்பும் பெற்ற நமது ஒத்தாண்டீஸ்வரர் கோவில் உழவாரப்பணி! பிரத்யேக பதிவு!!
“என் பிள்ளை குட்டிங்க நல்லாயிருந்தா அது போதும்” – திருமழிசையில் நெகிழவைத்த ஈஸ்வரியம்மா!
================================================================================
[END]
உழவராபணியில் பங்கேற்கும் பாக்கியம் பெற்ற நமது வாசகர்கள் அனைவருக்கும் என்னுடைய மரியாதையான வணக்கங்கள்.
இந்த மிக சிறந்த பதிவின் பின்னால் உள்ள ஆசிரியரின் உழைப்பு வியக்க வைக்கிறது.
புகைபடங்கள், நமது சேவையின் நேர்த்தியை பறைசாற்றுகின்றன.
முதுமைக்கு ஆசிரியர் செய்த மரியாதை, மனதை தொட்டது.
நன்றி .
திரிசூலநாதர் கோவிலில் நாங்கள் உழவாரப் பணியில் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி, அக்னி நட்சத்திர வெயிலையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்ட வாசகர்கள் அனைவரும் தங்களது வேலைகளை செவ்வனே செய்தார்கள். தாங்கள் இந்த பணியை அழகாக ஆர்கனைஸ் செய்ததற்கு பாராட்டுகள்.
நானும் மாலதியும் நவக்ரக சன்னதியை சுத்தம் செய்துகொண்டிருக்கும்போது வந்த ஒரு வயதான தம்பதியர், “இந்த சன்னதியை நீங்கள் சுத்தம் செய்கிறீர்கள். எவ்வளவு பெரிய புண்ணியம், ஷேமமாக இருப்பீர்கள்” என்றார்கள். இதை மிகப் பெரிய ஆசியாக கருதுகிறோம்.
இறுதியில் சன்னதியில் சிவபுராணத்தை வள்ளி , லோச்சனாவுடன் சொன்னது மறக்க முடியாது.
கடைசியாக சௌந்தர்ய லகரி புத்தகம் பரிசாக கிடைத்ததில் அளவற்ற மகிழ்ச்சி. அதை வாங்கி கொடுத்த திரு ராகேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
புளி சாதமும். தயிர் சாதையும் அனைவரும் சாப்பிட்ட பிறகு , கடைசியாக நாங்கள் சாப்பிட்டோம். ஆகையால் நாங்கள் மிச்சம் வைக்க வில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை.
அனைத்து 60 படங்களும் அருமை.
அடுத்த வாராம் குன்றத்தூரில் சேக்கிழார் மணிமண்டபத்தில் உழவாரப் பணி ஏற்பாடு செய்வதது அறிய மிக்க மகிழ்ச்சி.
நடந்த அனைத்தையும் நினைவில் வைத்திருந்து ஒன்று விடாமல் தொகுத்து அளித்து இருக்கிறீர்கள்
வாழ்க … வளமுடன்
நன்றி
உமா வெங்கட்
வணக்கம் சுந்தர். அருமையான,அழகான,உழைப்பை பறைசாற்றும்புகைப்படங்கள்.எல்லோருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். இந்த உழவார பணியை திட்டமிட்டு சிறப்பாக நடத்தி.அதை நன்றாக தொகுத்து அளித்த உங்கள்கு கோடி கோடி நன்றிகள்.பங்கு பெற்றவர்கள் அனைவரும் புண்ணியசாலிகள். நன்றி.
வணக்கம்……. திரிசூலநாதர் ஆலயத்தில் நம் தளம் சார்பாக நடைபெற்ற உழவாரப்பணி இனிதே நடந்ததை அறிந்து மிக்க மகிழ்ச்சி……… படங்களைப் பார்க்கும் போது நாமும் கலந்து கொண்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது……….
இந்த உழவார பணியில் பங்கேற்றது ஈசனின் அருட் கொடை ..
புதிய உறவுகள்..புதிய நட்புகள்..
வாழ்வின் அர்த்தம் மற்றும் வாழ்தலுக்கான சூத்திரம் வழங்கி கொண்டிருக்கும் “Right Mantra” விற்கு கோடான கோடி நன்றிகள் பற்பல.
This temple seems to be on dire status.. Request you to kindly explore the possibility of doing uzhavara pani here. https://m.facebook.com/groups/155673031256017?view=permalink&id=527971767359473&fs=1
தேங்க்ஸ்
A Ganesh
வணக்கம் ஐயா,
மிக அருமையான பதிவு. நாங்களும் இப்பணியில் கலந்து கொள்ளலாமா? அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
Just drop a mail quoting your name, mobile number, and place of residing to editor@rightmantra.com quoting ‘Temple Cleaning Volunteer’ in the subject. that’s enought. We will inform you through SMS.
thanks