Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, December 8, 2024
Please specify the group
Home > Featured > விரட்டப்பட்ட பக்தர், தடுத்தாட்கொண்ட பூரி ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (1)

விரட்டப்பட்ட பக்தர், தடுத்தாட்கொண்ட பூரி ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (1)

print
லீலைகளிலும் திருவிளையாடல்களிலும் பெயர்பெற்றவர் சிவபெருமான் மட்டுமல்ல மகாவிஷ்ணுவும் தான். தெற்கே திருவரங்கம், மேற்கே பண்டரிபுரம், கிழக்கே திருமலை திருப்பதி, வடக்கே பூரி என்ற இந்த நான்கு ஷேத்ரங்களிலும் அவர் பக்தர்களிடம் நிகழ்த்திய லீலைகளும் திருவிளையாடல்களும் எண்ணிலடங்கா. ஈசன் மதுரையை மையமாக கொண்டு நிகழ்த்திய திருவிளையாடல்கள் சுமார் 1500 ஆண்டுகளுக்கும் பழமையானவை. சம்பந்தர் மற்றும் நாவுக்கரசர் காலத்துக்கு முந்தியவை. ஆனால் திருமால் நிகழ்த்திய திருவிளையாடல்கள் யாவும் அதற்கு பிந்தியவை. அதாவது கி.பி. 1000 வது ஆண்டிலிருந்து 1800 வது ஆண்டு வரை பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்தவை.

Puri Jagannath 2

இவற்றில் திருவரங்கத்திலும், பண்டரிபுரத்திலும், திருமலையிலும் ஸ்ரீமந்நாராயணன் நிகழ்த்திய லீலைகளை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். நம் தளத்தில் கூட படித்திருப்பீர்கள். ஆனால், ‘புருஷோத்தம ஷேத்ரம்’ என்றழைக்கப்படும் பூரியில் எழுந்தருளியிருக்கும் ஜகந்நாதர் நிகழ்த்திய லீலைகளை அதிகம் கேள்விப்பட்டிருக்கமாட்டீர்கள். எனவே பூரி உள்ளிட்ட ஷேத்ரங்களை அடிப்படையாக கொண்டு ஸ்ரீமந்நாராயணன் நிகழ்த்திய திருவிளையாடல்களை விவரிப்பதே இந்த தொடரின் நோக்கம்.

பக்தர்களின் துன்பத்தை பொறுத்துக்கொள்ளமுடியாத ஜகந்நாதர்

பூரியில் எழுந்தருளியிருக்கும் ஜகந்நாதர் பக்தவாத்சல்யர் என்று அழைக்கப்படுகிறார். பக்தர்களுக்கு மிகவும் அனுகூலமானவர், பக்தர்களை தன்னிடையே ஈர்ப்பவர், மேலும் பக்தர்களின் பெருமையை காப்பவர் என்று பல நூற்றாண்டுகளாக அவர் போற்றப்படுகிறார்.

பூரியில் உள்ள மூலவர்கள் மற்ற ஆலயங்களில் உள்ளது போல் கருங்கல்லால் வடிக்கப் பெற்றவை அல்ல. மரச்சிற்பங்களினால் ஆனவர். ஜகந்நாதருக்கு ஒருபுறம் சகோதரி சுபத்ராதேவியும் இன்னொருபுறம் பலராமரும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.

தனது பக்தர் துன்பப்படும்போதோ தன்னை காணவியலாமல் தவிக்கும்போதோ ரத்தின சிம்மாசனத்தில் எழுந்தருளியிருக்கும் ஜகந்நாதரால் பொறுத்துக்கொள்ள முடியாதாம். அப்படி ஜகந்நாதன் பொறுத்துக்கொள்ள முடியாமல் தனது அடியார்களின் துயர் தீர்க்க ஓடோடி வந்த சம்பவங்கள் பலவற்றை வரலாறும் பல்வேறு வட இந்திய பக்தி இலக்கியங்களும் பதிவு செய்து வைத்திருக்கின்றன.

அப்படிப்பட்ட சம்பவங்களுள் ஒன்றை பார்ப்போம்.

கி.பி. 10 ஆம் நூற்றாண்டு. ஒரிஸ்ஸா மாநிலத்தை உத்யோத் கேசரி என்னும் மன்னன் ஆண்டு வந்த நேரம். ஒரிஸ்ஸாவில் பாயும் புனித நதி ரிஷிகுல்யா. அதன் கரையோரம் சஹாபூர் என்கிற அழகிய கிராமம் ஒன்று உண்டு. அங்கு பக்த மனோகர் தாஸ் என்னும் அடியவர் வாழ்ந்து வந்தார்.

பூரியில் உள்ள ஜகந்நாதரை தரிசிக்கவேண்டி, ஒரு நாள் கால்நடையாக சஹாபூரிலிருந்து புறப்பட்ட மனோகர் தாஸ், பல நாட்கள் இரவு பகல் மழை வெயில் பாராமல் பூரி நோக்கி நடந்தவண்ணமிருந்தார். இவ்வாறு நடந்து வந்த மனோகர் தாஸ் ஒரு நாள் வழியில் சாலையோரத்தில் ஒரு அழகிய குளத்தை பார்த்தார். அதில் மிகவும் அபூர்வமான நூறிதழ் தாமரை மலர்கள் பூத்து மிதந்துகொண்டிருந்தை பார்த்தார். “இத்தனை அழகான தாமரை மலர்களை இதுவரை பார்த்ததில்லையே… இதை ஜகந்நாதனுக்கு சூட்டினால் எப்படியிருக்கும்” என்று கருதியவர், தாம் பூரி சென்று சேரும் வரை பூவானாது வாடாமல் இருக்குமா என்பதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் குளத்தில் இறங்கி மலர்களை பறித்து தனது தலையில் இருந்த துண்டை அவிழ்த்து அதில் கட்டிக்கொண்டார்.

பின்னர் தொடர்ந்து பூரி நோக்கி நடக்கலானார். ஒரு தை மாத அமாவாசையன்று பூரியை அடைந்தார் மனோகர் தாஸ். பூரி கோவிலின் கிழக்கு பக்கம் புர்பா துவாரம் அருகே இருக்கும் படாசட்டா மடத்தில் தங்கினார். கால் கடுக்க பல நூறு மைல்கள் நடந்து வந்திருந்தாலும் அவருடைய மனம் என்னவோ ஒரு வித குதூகலத்தில் இருந்தது. காரணம் ஜகந்நாதனுக்கு தாமே பறித்து வந்த தாமரையை சூட்டப்போகிறோமே என்று. வேறு எந்த சிந்தனையும் அவர் மனதில் எழவில்லை. இரவு உறங்கியதும், அதிகாலை எழுந்து கோவில் குளத்தில் நீராடிவிட்டு, திருமண் தரித்துக்கொண்டு ஜகந்நாதரை தரிசிக்க கோவிலுக்குள் சென்றார்.

ஒரு பரதேசி போல தோற்றம் கொண்ட அவரை கோவிலின் பாதுகாவலர்கள் அவரை மறித்து, “துண்டில் என்னத்தை கட்டி உள்ளே கொண்டு போகிறாய்?” என்றனர்.

அவர் உடனே துண்டை விரித்து காட்ட, அந்தோ பரிதாபம் அதன் உள்ளே இருந்த தாமரை மலர்கள் யாவும் பறித்து நாளாகிவிட்டபடியால் வாடி வதங்கி அழுகிப்போய் காட்சியளித்தன. தாமரைக்குரிய நிறம் வேறு மங்கி கறுத்துவிட்டிருந்தன.

அவர் உடனே துண்டை விரித்து காட்ட, அந்தோ பரிதாபம் அதன் உள்ளே இருந்த தாமரை மலர்கள் யாவும் பறித்து நாளாகிவிட்டபடியால் வாடி வதங்கி அழுகிப்போய் காட்சியளித்தன. தாமரைக்குரிய நிறம் வேறு மங்கி கறுத்துவிட்டிருந்தன.

“அவனவன் என்னென்னவோ கொண்டு வருகிறான். நீ இந்த அழுகிப் போன மலர்களையா ஜகந்நாதருக்கு கொண்டு வந்தாய்? பைத்தியக்காரா…” என்று அவரை கீழே தள்ளினர். தடியால் அடித்து நையப்புடைத்தனர். கடும்காயமும் அதிர்சியுமடைந்த மனோகர் தாஸ் சில நிமிடங்களில் சுயநினைவின்றி கீழே விழுந்தார்.

அதற்குள் விஷயம் படாசட்டா மடத்துக்கு எட்டியது. கோவிலுக்கு சென்ற யாத்ரீகர் ஒருவர் காவலாளிகளால் தாக்கப்பட்டு உள்ளே வீழ்ந்து கிடக்கிறார் என்று கேள்விப்பட்டு கோவிலுக்கு விரைந்து வந்த மடத்து ஊழியர்கள் மனோகர் தாஸை தூக்கிச் சென்று முதலுதவி அளித்து மடத்தில் படுக்கவைத்தனர்.

Puri Jagannath
பத்மாபேச அலங்காரம் எனப்படும் தாமரைப் பூ அலங்காரத்தில் பூரி ஜகந்நாதர்

அங்கே அரண்மனையில் பூரி மன்னன் கஜபதி மஞ்சத்தில் படுத்திருக்கிறான். அவனுக்கு திடீர் என்று ஒரு கனவு. கனவில் தோன்றிய ஜகந்நாதன், “என் அடியவன் மனோகர் தாஸ் கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டு தாக்கப்பட்டு படாசட்டா மடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளான். நீ அவனை சகல மரியாதையோடு சன்னதிக்கு அழைத்து வர ஏற்பாடு செய். அவன் கொண்டு வந்திருக்கும் மலர்களையே எனக்கும் சூட்டுவாயாக!” என்று கட்டளையிட்டு மறைந்தார்.

திடுக்கிட்டு விழித்த கஜபதி, உடனே தனது ராஜகுரு பவாதேவா என்பவரை அழைத்து கனவில் ஜகந்நாதர் கட்டளையிட்ட விபரத்தை கூறினான். அவரும் உடனே படாசட்டா மடத்துக்கு விரைந்து, மனோகர் தாசிடம் நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு, மனோகர் தாஸையும் அவர் மூட்டைகட்டி கொண்டு வந்த மலர்களையும் எடுத்துக்கொண்டு ஸ்ரீமந்திருக்கு (மூலஸ்தானம்) விரைந்தார்.

எந்த ஆலயத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டாரோ அதே ஆலயத்துக்குள் ராஜ மரியாதையோடு அழைத்துவரப்பட்டார் மனோகர் தாஸ். எந்தக் காவலர்கள் தாக்கினாரோ அவர்கள் இவரை கரம்குவித்து வரவேற்றார்கள். (அது!). நடப்பதெல்லாம் கனவா நனவா என்றே மனோகர் தாஸ்க்கு புரியவில்லை. கண்களில் நீர் ஆறாக பெருகி வழிந்துகொண்டிருந்தது.

எந்த ஆலயத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டாரோ அதே ஆலயத்துக்குள் ராஜ மரியாதையோடு அழைத்துவரப்பட்டார் மனோகர் தாஸ். எந்தக் காவலர்கள் தாக்கினாரோ அவர்கள் இவரை கரம்குவித்து வரவேற்றார்கள். (அது!). நடப்பதெல்லாம் கனவா நனவா என்றே மனோகர் தாஸ்க்கு புரியவில்லை. கண்களில் நீர் ஆறாக பெருகி வழிந்துகொண்டிருந்தது.

அங்கு மூலவர் முன்பு அனைவரும் நிற்க, மனோகர் தாஸ் கொண்டு வந்த மூட்டை பிரிக்கப்பட்டு மலர்கள் ஜகந்நாதர் முன்பு கொட்டப்பட்டது. என்ன ஆச்சரியம், வாடி வதங்கி அழுகிப்போயிருந்த மலர்கள் அன்று பூத்த புத்தம் புது மலர்கள் போல புத்துணர்ச்சியுடன் காணப்பட்டன. மேலும் அந்த இடமெங்கும் தாமரை இதழுக்கென்றே உரிய நறுமணம் வீசியது.

அதை ஏற்றுக்கொண்ட ஜகந்நாதர் சுபத்ராதேவியுடனும் தனது மற்றொரு அவதாரமான பலராமருடனும் தேஜோமயமாக காட்சியளித்தார்.

“ஜகந்நாதா… ஜகந்நாதா..” என்கிற கோஷம் விண்ணைப் பிளந்தது.

கடைக்கோடி பக்தன் மீதும் பரந்தாமன் கொண்டுள்ள இந்த வாத்சல்யத்தை நினைவு கூறும் வகையில் இன்றும் ஆண்டு தோறும் வசந்த பஞ்சமி அன்று (மாசி மாதம் சுக்ல பட்சம் பஞ்சமி திதி) தாமரை மலர்களால் ஜகன்னாதருக்கு அலங்காரம் செய்விக்கப்படுகிறது. இதை பத்மாபிஷேகம் என்று அழைப்பர். இந்நன்னாளில் மனோகர் தாஸ் தங்கிய படாசட்டா மடத்திலிருந்து ஜகந்நாதருக்கு பாயசம் படைக்கப்பட்டு அடுத்த நாள் பக்தர்களுக்கு அது பிரசாதமாக விநியோகிக்கப்படுவது வழக்கம்.

திருமால் பெருமைக்கு நிகரேது – உன்றன்
திருவடி நிழலுக்கு இணையேது!
பெருமானே உன்றன் திருநாமம் – பத்து
பெயர்களில் விளங்கும் அவதாரம்

(திருமால் திருவிளையாடல் தொடரும்…)

================================================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

================================================================================

Also check :

சலவைத் தொழிலாளி அரங்கனுக்கு சூட்டிய பெயர்! நெகிழ வைக்கும் வரலாறு!!

உருவுகண்டு எள்ளாமை வேண்டும்! சமையற்காரர் படைத்த காவியம்!!

“நான் உனக்காக காத்திருக்கிறேன்!”

ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?

அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

அரங்கன் மீது கொண்ட காதலால் ‘துலுக்க நாச்சியார்’ ஆன சுல்தானின் மகள்! 

ஹரிஹர தரிசனமும் தாத்திரீஸ்வரர் கோவில் உழவாரப்பணியும்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

சபரியின் பக்தியும் இழந்த பொலிவை பெற்ற பம்பை நதியும்! இராமநாம மகிமை (4)

அனுமனுடன் யுத்தம் செய்த இராமர்! எங்கே? ஏன்? – இராமநாம மகிமை (3)

ராம்சுரத்குமார் விளக்கிய ராமநாம மகிமை – (2)

கருடனின் கர்வத்தை அழித்த சிவபெருமான் – இராமநாம மகிமை (1)

உங்களை ரீசார்ஜ் செய்துகொள்ள உதவும் ஒரு பவர் ஹவுஸ் — பார்க்க வேண்டிய திரைப் பொக்கிஷம் — (1 )

கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்!

பாண்டுரங்கன் சுமந்த மூட்டை!

================================================================================

[END]

18 thoughts on “விரட்டப்பட்ட பக்தர், தடுத்தாட்கொண்ட பூரி ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (1)

  1. திருமாலின் திருவிளையாடலை படித்து மெய் சிலிர்த்தேன்.
    தங்கள் தளத்தின் மூலம் பெருமாளின் பக்தனை பற்றிய தெரியாத கதையை தெரிந்து கொண்டதில் மற்றட்ட மகிழ்ச்சி ..

    பத்மாபேச அலங்காரம் அருமை.

    வாழ்க …. வளமுடன்

    நன்றி
    உமா வெங்கட்

  2. புதுமையான தொடர். தென்னாட்டவர்களுக்கு பரிச்சயமில்லாத பூரி ஜகன்னதரின் திருவிளையாடல். அனுபவிக்க காத்திருக்கின்றோம். கோடானு கோடி நன்றிகள் சுந்தர்.

  3. வணக்கம் சுந்தர் சார்

    மிகவும் அருமையான பதிவு

    நன்றி

  4. திருமால் திருவிளையாடல் என்ற புதிய தொடர் – எதிர்பார்கவில்லை..மகிழ்ச்சியில் திக்கு முக்காட செய்து விட்டிர்கள்..அதுவும் முதல் தொடரே..முத்தாய்ப்பு ..என்னே பக்தியின் அருமை..! திருமாலின் பெருமை..அவர் நாமம் சொல்லி,சொல்லி பரவசமாவோம்..

    வட இந்திய கோவில் – பூரி ஜகந்நாதர் மிகவும் அருமை தான்..கோபுர தரிசனத்தோடு தாமரை பூ அலங்காரத்தில் பூரி ஜகந்நாதர் – காண கிடைக்காத பொக்கிஷம் ..

    தல பெருமை மற்றும் தல சிறப்பு சேர்த்து இன்னும் சுவை கூட்டி இருக்கலாம் என்று தோன்றுகிறது..மற்ற திருமாலின் பதிவுகளையும் படிக்க தூண்டியமைக்கும் நன்றிகள் அண்ணா..

    1. ஒரே பதிவுல எல்லாத்தையும் சொல்லிட்டா எப்படி? அடுத்தடுத்த பதிவுகளுக்கு விஷயம் வேணுமில்லே! (இதையே எத்தனை பேர் படிச்சாங்கன்னு தெரியாம நான் முழிச்சிக்கிட்டுருக்கேன்!)

      1. சுந்தர் அண்ணா..

        தாங்கள் கூறிய கருத்து மிகவும் சரியே..அணைத்து தகவல்களையும் இணைத்தால் பதிவின் நீளம் கூடி விடும்..தங்களின் கைவண்ணமும், கருத்து வண்ணமும் மிகவும் சரியே..

  5. Dear Sundar Ji,

    Many of us reading all your articles without fail (I visit alteast 10 times per days)..may be not writing comments and th hat does now mean that people who have shared comments alone red the articles. I am sure there may be hundreads of people like me.

    Also I have red somewhere that Periyava said…only khestras are mentioned…in the vedas are …Thirupathi and the other one is Poori. Many of us not knowing important of this khestra.. this temple is the great divine place on the earth.. He is the lord of the universe.

    Thanks,
    Rajraaman A

    1. ஒரு படைப்பாளிக்கு RESPONSE என்பது எந்தளவு முக்கியம் என்று பலருக்கு புரிவதில்லை. எந்த ஒரு நல்ல படைப்பாளியும் எதிர்பார்ப்பது APPRECIATION அல்ல. RESPONSE தான். இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது.

      தற்போது நீங்கள் அளித்திருக்கும் இந்த பின்னூட்டம் போலத் தான் வாசகர்களிடம் இங்கு அளிக்கப்படும் பதிவுகளை பற்றிய அவர்கள் பார்வையை கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். உண்மையில் பூரி ஷேத்ரம் பற்றி தாங்கள் கூறியிருக்கும் கருத்து அருமை.

      மேலும், ஒரு பதிவை வாசகர்கள் படித்து கிரகித்துக்கொண்ட பின்னரே அடுத்தது அளிக்கவேண்டும் என்று கருதுகிறேன். அதன் பொருட்டே கொஞ்சம் மெதுவாக செல்கிறேன்.

      நன்றி!

      1. RESPONSE பற்றியும் APPRECIATION பற்றியும் தெரிந்து கொண்டோம். தெரிந்து கொண்டோம் என்று சொல்லுவதை விட “உணர்ந்து ” கொண்டோம்..

  6. I fully agree with you Sir and Sorry for my comments. Response is what motivates. Going forward, I will share my comments without fail.

    Dear Readers: Kindly share your comments as and when you read the articles. Let us motivate and provide moral support and energy to Sundar Ji so that we can continue to get great articles.

    Thanks,
    Rajaraman A

    1. Thanks for understanding. Not only to me, wherever you feel that you have read some good content just drop in a few words as ‘response’.

      Even when i visit some restaurants during my outstation trip, if the food or hospitality is good, I used to go and tell the same to the proprietor who is sitting in cash counter as a token of appreciation.

      Appreciation costs nothing. But it delivers countless benefits.

      Here i am not appreciation expecting… just RESPONSE. Unless i know that readers have gone through the article, how can i post subsequent ones?

      Last week, a reader named Sakuntala asked me to write about when the Almighty gave the phrase ‘Ulagelaam’ to Sekkizhar for Periya Puranam and also about Thirumurugatrupadai. Really I appreciate her.

      Am working on the same.

      1. இந்த பதிவின் மூலம் பெருமாள் பற்றி அறிந்து கொண்டோம்..அத்துடன் மட்டுமின்றி ஏகப்பட்ட செய்திகள் ..அதாவது இறைவனை பற்றியும்..அதோடு இணைத்த வாழ்வியல் நெறிமுறைகள் (பின்னூட்டம் மூலமாக) பற்றியும் உணர்தோம்.

        தங்களின் கைவண்ணத்தில் – பெரிய புராண தொடர்,திருமுருகாற்றுப்படை, ஏனைய பதிவுகளின் தொடர்ச்சி என அனைத்தையும் எதிர்பார்க்கிறோம்.

        இந்த பதிவின் மூலம் பெருமாள் நிகழ்த்திய திருவிளையாடல் இது

  7. சார், தங்களிடமிருந்து நாங்கள் புதிய புதிய படைப்புகளை தினமும் எதிர்பார்க்கிறோம். உங்கள் மகத்தான சேவையை தொடரவும் . விட்டுப்போன மகரிஷி தரிசனம், சேஷாத்ரி சுவாமிகள் தொடர் , ஞானானந்தா ஸ்வாமிகள் தொடர் மற்றும் ராகவேந்திரர் தொடர் போன்றவற்றை தொடர்ந்து எழுதவும்

    கஷ்டப்ப் பட்டு உழைத்து எழுதும் எங்களுக்கு படிக்கவா வலிக்கும்,. உங்களின் எழுத்தின் வலிமை கண்டிப்பாக படிப்பவர்களுக்கு புரியும்

    வாழ்க … வளமுடன்

    நன்றி
    உமா வெங்கட்

  8. வணக்கம் சுந்தர்.என் பக்தன் சாதாரணமாக வந்து தரிசனம் செய்வதாஎன்று எண்ணிய பெருமாள் ராஜா மரியாதையுடன் தரிசனம் செய்ய வைத்துவிட்டார் .இந்த தொடர் ஆரம்பித்த நேரம் உங்களை பூரி ஜெகநாதர் தரிசனத்துக்கு அழைக்கட்டும்.நன்றி

  9. திருமால் பெருமைக்கு நிகரேது? பூரி ஜகன்னாதரின் கருணையையும் பக்தரின் மேல் கொண்ட வாத்சல்யத்தையும் கண்டு மெய்சிலிர்த்துப் போனோம்…….. ஜகன்னாதரின் தாமரைப் பூ அலங்கார தரிசனம் அருமை….. விரைவில் அவரை நேரில் தரிசிக்கும் பேறு நம் அனைவருக்கும் கிடைக்கட்டும்………

  10. திருமாலின் பெருமை அறிந்து மகிழந்தோம். இந்நிகழ்வு தொடரும் என்ற இனிய செய்தி தந்த தங்களுக்கு நன்றி.

    பத்மாபேச அலங்காரம் அற்புதம்.

    நன்றி

  11. Good to know about Puri Jagannathar & His Leela!!
    Have not heard much about this temple… awaiting more articles in RM…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *