Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, October 6, 2024
Please specify the group
Home > Featured > இறைவனை பார்க்க நாங்கள் சென்றதும்; இறைவனே எங்களிடம் வந்ததும்!

இறைவனை பார்க்க நாங்கள் சென்றதும்; இறைவனே எங்களிடம் வந்ததும்!

print
துவரை நான் பல முறை புத்தாண்டை கொண்டாடியிருக்கிறேன். கொண்டாட்டம் என்றால் என்னைப் பொருத்தவரை புத்தாண்டு பிறக்கும் நேரம் கண் விழித்திருந்து முதலில் பெற்றோர்களுக்கும் உடன் பிறந்தோருக்கும் வாழ்த்து சொல்வது. பின்னர் நண்பர்களுக்கு ஃபோன் செய்து வாழ்த்து சொல்வது. பொழுது விடிந்ததும் காலை அல்லது மாலை ஏதாவது பிரசித்தி பெற்ற கோவிலுக்கு செல்வது. பதிவு எழுதுவது. மதியம் சிறிது தூங்குவது. நேரம் கிடைத்தால் சினிமா செல்வது. என்னுடைய புத்தாண்டு கொண்டாட்டம் என்பது இவ்ளோ தான்.

ஆனால் ஆண்டவன் இம்முறை RIGHTMANTRA.COM என்கிற மிகப் பெரிய பொறுப்பை அளித்துள்ளபடியால், அர்த்தமுள்ள வகையில் அதை கொண்டாடவேண்டும் என்று சென்ற வாரமே முடிவு செய்துவிட்டேன்.


இதற்கிடையே ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு, விழிகளை மட்டும் அல்ல வாழ்க்கையையே தொலைத்துவிட்டு நிற்கும் வினோதினிக்கும், நிற்கதியாய் நிற்கும் அவரது குடும்பத்திற்கும் ஏதாவது செய்யவேண்டும் என்று முடிவு செய்து நண்பர்களுடன் செயலில் இறங்கினேன். அது பற்றிய பதிவுகளை அளித்தேன். உங்கள் அனுதாபத்தை தவிர சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் வினோதினியின் குடும்பத்திற்கு முதலில் தேவையான நிதியை அளிப்பது முதல் கடமை என்று வலியுறுத்தியிருந்தேன். சற்று காலம் கடந்த முயற்சி தான் என்றாலும் BETTER LATE THAN NEVER இல்லையா?

வினோதினிக்காக மற்றவர்களிடம் நாம் பணம் திரட்டக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். எனவே இதற்கென்றே வினோதினியின் தந்தை திரு.ஜெயபாலன் துவங்கியிருக்கும் வங்கிக் கணக்கு விபரத்தை அளித்து வினோதினியின் சிகிச்சைக்காக உதவிட விரும்புகிறவர்கள் நேரடியாக அதை செய்யுங்கள் என்று கூறினேன். நண்பர்கள் மற்றும் வாசகர்கள் பலர் அந்த வங்கிக் கணக்கில் தங்களால் இயன்ற பணத்தை செலுத்தி வருகிறார்கள். அனைவருக்கும் என் நன்றி.

இதற்கிடையே நானும் என் நண்பர்கள் சிலரும் (CORE TEAM of RightMantra) எங்களால் இயன்ற ஒரு தொகையை தயார் செய்து, அதை புத்தாண்டு அன்று நேரடியாகவே திரு.ஜெயபாலனை சந்தித்து அளிக்க முடிவு செய்தோம்.

இதற்கிடையே என் நெருங்கிய நண்பர் ஒருவர் யூ.எஸ்.ஸிலிருந்து ரூ.10,000/- எனக்கு அனுப்பி, “நீங்கள் வினோதினியின் தந்தையை சந்திக்கும்போது, இந்த தொகையையும் சேர்த்து கொடுத்துவிடுங்கள். நான் விடுமுறையில் இருக்கிறேன். அவரது கணக்கை என்னுடைய அக்கவுண்ட்டில் ADD செய்து அனுப்ப நேரமில்லை. தயவு செய்து இந்த உதவியை செய்யுங்கள் சுந்தர்” என்று கேட்டுக்கொண்டார். நான் மறுத்தால் ஏற்கனவே நெருக்கடியில் இருக்கும் வினோதினியின் குடும்பத்தினருக்கு உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும் என்பதால் அதற்கு ஒப்புக்கொண்டேன்.

அவருடைய பணம் + நாங்கள் தயார் செய்த ஒரு தொகை இரண்டையும் சேர்த்து ஒரு DD எடுக்க முடிவு செய்தோம். மறுநாள் புத்தாண்டு அன்று வங்கி விடுமுறை என்பதால் DD யை திங்களன்றே (டிசம்பர் 31) எடுத்துவிட்டோம். நண்பர் ராஜா தான் இதற்காக நேரம் ஒதுக்கி உதவினார். அவருக்கு என் நன்றி.

நாங்கள் DD  எடுத்த நேரம், நண்பர்கள் பலருக்கு அவர்களது SALARY (சம்பளம்) கிடைத்திருக்கவில்லை. மாத இறுதியில் கடும் நெருக்கடியில் இருக்கும் போது கொடுத்தால் அவர்கள் குறைவாகத் தான் தருவார்கள். கிடைக்கும் தொகை சற்று கூடுதலாக வினோதினிக்கு கிடைக்கட்டுமே என்று சில நண்பர்களிடம், “புத்தாண்டு அன்று நான் திரு.ஜெயபாலனை சந்தித்து முதல் கட்ட நிதியை கொடுத்துவிடுகிறேன். அடுத்த முறை, உங்கள் பங்கிளிப்பை சேர்த்து தேவைப்பட்டால் இன்னொரு DD எடுத்து தரலாம். அல்லது நீங்களே கூட அவரது வங்கிக் கணக்கில் சேர்த்துவிடுங்கள். எல்லாம் ஒன்று தான்” என்றேன். அவர்கள் ஒப்புக்கொள்ள எனக்கு விஷயம் சுலபமாகிவிட்டது.

இதற்கிடையே எங்கள் தொகைக்கு DD எடுத்தவுடன், அதை நாமே நேரடியாக திரு.ஜெயபாலனை சந்தித்து கொடுப்பதைவிட, ஒரு பெரிய மனிதர் யாரையாவது வைத்து அவரது முன்னிலையில் கொடுத்தால் இந்த நிகழ்வுக்கு ஒரு முக்கியத்துவம் கிடைக்கும். தவிர அவர் மூலம் வினோதினிக்கு மேலும் உதவிகள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்று தோன்றியது.

நாமே நேரடியாக திரு.ஜெயபாலனை சந்தித்து கொடுப்பதைவிட, ஒரு பெரிய மனிதர் யாரையாவது வைத்து அவரது முன்னிலையில் கொடுத்தால் இந்த நிகழ்வுக்கு ஒரு முக்கியத்துவம் கிடைக்கும். தவிர அவர் மூலம் வினோதினிக்கு மேலும் உதவிகள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்று தோன்றியது.

யாரை அழைப்பது…. இதற்காக புத்தாண்டு அன்று ஒரு அரை மணிநேரம் ஒதுக்கி யார் வருவார்கள்? அப்படியே வந்தாலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் சிறிது நேரம் செலவிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறவேண்டுமே…. இதற்க்கெல்லாம் ஒப்புக்கொண்டு யார் வருவார்கள் என்று பலவாறாக சிந்தித்தபோது என் மனதுக்கு தோன்றியவர் பாலம் திரு.கலியாணசுந்தரம் ஐயா தான். அவரை விட மிக பொருத்தமான நபர் இதற்கு இருக்கமுடியாது என்று நினைத்து, அவரை தொடர்பு கொண்டு விஷயத்தை கூறி, “நீங்கள் வந்திருந்து அந்த தொகையை உங்கள் கைகளால் அளிக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டேன்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
ஈடு இணையற்ற சாதனையாளர், சமூக சேவகர் ஐயா திரு.பாலம் கலியாணசுந்தரம்
http://rightmantra.com/?p=1467
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

நாங்கள் அந்த உதவியை எங்கள் கைகளால் கொடுப்பதைவிட  பாதிக்கப்பட்டவர்களிடம் அவர் நேரடியாக பேசி, ஆறுதல் கூறி, பின்னர் அவர்களுக்கு இதை செய்தால் அவர் மூலம் அவர்களுக்கு மேலும் பல உதவிகள் கிடைக்குமல்லவா? மேலும் என்ன தான் நான் முக்கி முக்கி முயன்றாலும் என்னால் சில ஆயிரங்கள் மட்டுமே வினோதினியின் சிகிச்சைக்கு உதவிட முடியும். ஆனால் பாலம் ஐயா மனது வைத்தால் மிகப் பெரிய உதவிகளை கூட அனாயசமாக அவர்களுக்கு செய்ய முடியும். அவர் கட்டளையிட்டால் அதை நிறைவேற்றுவதற்கு பல பெரிய மனிதர்கள் காத்துக்கிடப்பது எனக்கு தெரியும்.

வினோதினிக்கு ஏற்பட்ட கொடுமை குறித்து நம்மிடம் வருத்தம் தெரிவித்த அவர், நிச்சயம் தாம் வந்திருந்து வினோதினியை பார்த்து, அவரது குடும்பத்தினருடன் சிறிது நேரம் செலவிடுவதாக கூறினார்.

ஜனவரி 1 அன்று இதை செய்வது என்று தீர்மானமாகிவிட்டது. திரு.ஜெயபாலனை தொடர்பு கொண்டு விஷயத்தை கூறி, நாங்கள் வருவதற்கு ஏற்ற நேரம் குறித்து கேட்டேன். அவர் மதியம் 12 மணிக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் வாருங்கள் என்றார். புத்தாண்டு அன்று மதியம் 12 மணிக்குள் மற்ற வேலைகளை முடித்துவிடவேண்டும் என்று முடிவுசெய்துவிட்டேன்.

எனவே ஜனவரி 1 அன்று அதிகாலை 3.30 மணிக்கே எழுந்து குளித்து தயாராகி நந்தம்பக்க்கம் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவிலுக்கு வழக்கம்போல நண்பர் மாரீஸ் கண்ணனுடன் சென்றுவிட்டேன். புத்தாண்டை முன்னிட்டு வழக்கத்தை விட ஒரு மணிநேரம் முன்னதாக  4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம். அது முடிந்து அங்கு சிறிது நேரம் செலவிட்ட பின்னர் அங்கிருந்து 6.30 மணிக்கு கிளம்பி நேரே பேரம்பாக்கம் (நரசிங்கபுரம்) பயணம். நண்பர்கள் 9 பேர் என்னுடன் பேரம்பாக்கம் வருவதாக கூறியிருந்தனர். சென்ற ஆண்டும் ஜனவரி 1 அன்று பேரம்பாக்கத்தில் நரசிம்மரை தரிசித்தபடியால் இம்முறையும் நரசிம்மரை புத்தாண்டு அன்று பார்த்துவிடுவது என்று முன்கூட்டியே திட்டமிட்டுவிட்டேன். (நண்பர் ஒருவரின் நண்பர் மூலம் இந்த அருமையான ஆலயம் பற்றி எனக்கு தெரியவந்தது.)

பேரம்பாக்கம் (நரசிங்கபுரம்) ஆலய தரிசனம் பற்றி நான் இங்கு நம் வாசகர்களிடம் நான் சொல்லவில்லை. காரணம் பேரம்பாக்கம் செல்வது கடைசி வரை உறுதியாக தெரியவில்லை. புத்தாண்டு அன்று இதைவிட முக்கிய விஷயமான வினோதினியின் தந்தையை சந்தித்து நிதி அளிக்கவேண்டும், அதற்கு பாலம் ஐயா தான் வரக்கூடிய நேரத்தை கன்பர்ம் செய்யவேண்டும். எனவே நிச்சயமற்ற நிலையில் இருந்தேன். எனவே எல்லோரிடமும் சொல்லி வரச்சொல்லிவிட்டு ஆனால் கடைசி நேரம் பேரம்பாக்க பயண நேரத்தை மாற்றும்படியோ அல்லது ரத்து செய்யும்படியோ நிர்பந்தம் ஏற்பட்டால் என்ன செய்வது? ஆகையால் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே பேரம்பாக்கம் பயணத்தை பற்றி கூறியிருந்தேன். அதைக் கூட அவர்களிடம் சொல்ல எனக்கு நேரமிருக்கவில்லை. என் நண்பர் ஒருவர் மூலமே சொன்னேன்.

இதற்கிடையே டிசம்பர் 31 மாலை திரு.கலியாணசுந்தரம் ஐயாவை நான் தொடர்புகொண்டோது கீழ்ப்பாக்கத்தில் வினோதினியை சந்திக்கும் நேரத்தை கன்ஃபர்ம் செய்துவிட்டார். அவருக்கு எங்கள் நன்றியை கூறினோம்.

ஆகையால் ஜனவரி 1 அன்று காலை எழுந்து நந்தம்பாக்கம் சென்று பின்னர் அங்கிருந்து பேரம்பாக்கம் பயணம். செல்லும் வழி நெடுக கண்கள் குளிரும் வண்ணம் எங்கெங்கும் பசுமை தான். பனி  படர்ந்த மார்கழி காலையில் இது போன்ற போக்குவரத்து குறைந்த சாலைகளில் பசுமையை ரசித்துக்கொண்டே செல்வது ஒரு சுகானுபவம்.

பேரம்பாக்கத்தில் நரசிம்மரை கண்குளிர தரிசித்த பின்னர் வரும் வழியல் மப்பேடு என்ற ஊரில் உள்ள மிக மிக பழமையான சிவாலயத்திற்கும் சென்று அங்கு அருள் பாலித்து வரும் சிங்கீஸ்வரரை தரிசித்தோம். மூல நட்சத்திர பரிகாரத் தலம் இது. சிவன் சன்னதியின் முன் வீணை ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இசைத்துறையில் பிரகாசிக்க விரும்புவோர் இவரை வணங்கினால் சிறப்பாக வருவார்கள். (இந்த இரண்டு ஆலய தரிசனங்கள் குறித்த விரிவான பதிவை பின்னர் அளிக்கிறேன்.) அங்கு புத்தாண்டை முன்னிட்டு லக்ஷார்ச்சணனை நடைபெற்றுகொண்டிருந்தது. உடனே ஜெயபாலன் அவர்களை தொடர்புகொண்டு வினோதினியின் ராசி, நட்சத்திரம் உள்ளிட்ட விபரங்களை கேட்டு அவர் பெயருக்கு சங்கல்பம் செய்து லக்ஷார்ச்சனை செய்தோம். பிரசாதப் பையையும் பெற்றுக்கொண்டோம். (கீழே காண்பது தான் மப்பேடு சிங்கீஸ்வரர் ஆலயம்.)

அங்கு சிறிது நேரம் கழித்த பின்னர், அங்கிருந்து அரக்கோணம் சாலையை பிடித்து, சென்னை-பெங்களூரு ஹைவே வழியாக திரும்பி, பின்னர் பூந்தமல்லி வந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையை பிடித்து கீழ்ப்பாக்கத்தில் வினோதினி தற்போது சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையை அடைந்தோம். நாங்கள் வரும்போது மணி பிற்பகல் 1.30 இருக்கும். கோவில் ப்ராசாதத்தை தவிர இடையில் இரண்டு இடங்களில் எங்கள் டூ -வீலரை நிறுத்தி டீ சாப்பிட்டதோடு சரி. (நண்பர்கள் அதை வெந்நீர்  என்றனர்!). வேறு எதுவும் சாப்பிடவில்லை.

ஆதித்யா மருத்துவமனையில் தான் வினோதினி சிகிச்சை பெற்று வருகிறார். பாலம் ஐயா வரட்டும் என்று காத்திருந்தோம். வெளியே பார்க்கிங் ஏரியாவில் ஒரு சிலர் பேசிக்கொண்டிருந்தனர். நாங்கள் அனைத்தையும் கவனித்தபடி காத்திருந்தோம். ஜெயபாலன் அவர்களை கூப்பிடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே ஒருவர் வெளியே வந்தார். தளர்ந்த நடை… அழுது அழுது வறண்ட கண்கள் – பார்த்தவுடன் புரிந்துவிட்டது அவர் தான் திரு.ஜெயபாலன் என்பது. எதற்கும் உறுதி செய்துகொள்ளலாமே என்று அவரிடம் சென்று “நீங்க தானே ஜெயபாலன்………….? வினோதினி ஃபாதர்?” என்றேன்… “ஆமா… நீங்க?……. சுந்தர்?” நம் பதிலுக்கு காத்திராமல் சரியாக கூறிவிட்டார்.

நம்மை அறிமுக செய்துகொண்டு நண்பர்களையும் அறிமுகம் செய்துவைத்து நலம் விசாரித்தேன்.

அவரின் கைகள், கால்கள் எல்லாம் ஆசிட் பட்டு வெந்திருந்தது. அவர் உடனிருக்கும்போதே இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது தெரியவந்தது. தன் கண் முன்னேயே இந்த கொடுமை நடந்தவுடன் “ஐயோ” என்று அலறி மகளை ஓடிச் சென்று அள்ளி இரு கைகளாலும் தூக்க, இவர் மீதும் ஆசிட் பட்டு, பட்ட இடங்கள் எல்லாம் வெந்துபோய்விட்டது.


“என்ன சார்.. இது அநியாயம்? தொட்டு தூக்கிய உங்களுக்கே இப்படின்னா.. வினோதினி  நிலைமையை நினைச்சுக் கூட பார்க்க முடியலே…” என்று நாம் கூறினோம்.

“தீபாவளி லீவுக்கு ஊருக்கு வந்துட்டு மறுநாள் சென்னைக்குக் கிளம்பினாள். பஸ் ஏத்திவிட நானும் கூடப் போனேன். திடீர்னு வழிமறிச்சு என் பொண்ணு முகத்துல ஆசிட் வீசிட்டான்யா அந்தக் கொடூரன்.. அவன் ஊத்தின ஆசிட் மட்டும் ஒரு லிட்டருக்கும் மேல் இருக்கும் சார்” என்றார்.

“கொஞ்ச நேரத்துக்கு என்ன நடந்ததுனே தெரியலங்கையா. என் பொண்ணு வலி தாங்க முடியாம கீழ விழுந்து புரளவும் அவளை மடில தூக்கி வச்சேன். அப்போ அவ உடம்புல பட்டு வடிஞ்ச ஆசிட் எம்மேலயும் பட்டு எனக்குக் கைலயும் நெஞ்சுலயும் வெந்துப்போச்சு. என்னாலயே அதைத் தாங்க முடியல.. ஐயோ என் புள்ள எப்படியெல்லாம் துடிச்சா தெரியுமாங்கைய்யா.. ஆசிட் பட்டதால ரெண்டு கண்லயும் பார்வைப் போயிருச்சுனு சொல்றாங்க.. இப்போ வலி தாங்க முடியாம.. “அப்பா இந்த முகம் வேணாம்.. நான் செத்துப்போறேன்.. கொன்னுடுங்கப்பா”னு கதறி அழுறா.

“அப்பா.. இனி நீங்க செக்யூரிட்டி வேலைக்குப் போக வேணாம்ப்பா.. நான் சம்பாதிக்குறேன்.. சென்னைக்கு வந்துருங்க.. நான் உங்களைப் பார்த்துக்குவேன்ப்பா’னு என் பொண்ணு கடைசியா என்கிட்ட சந்தோசமா பேசுன வார்த்தை இதுதாங்க.. ஆனா என் புள்ள கனவு எல்லாத்துலயும் மண்ணள்ளிப் போட்டுட்டான்யா அந்தப்பாவி. சிகிச்சையளிக்கக்கூடப் பணம் இல்லாம இருக்குற நான் இனி என் புள்ளைய எப்படிக் காப்பாத்துவேனு தெரியலையே” என்று கண் கலங்குகிறார் ஜெயபாலன். அழுத அழுது இருந்த கண்ணீர் அனைத்தையும் தீர்த்துவிட்டபடியால் அவர் கண்ணீர் விட்டு அழவில்லை. அவ்வளவு தான்.

“படுபாவிங்க. அதை அவன் ஒருத்தன் மட்டும் பிளான் பண்ணி செஞ்சிருக்க முடியாது சார். அவர் எங்க போற… எந்த ரூட்ல வர்றா எப்போ ஊருக்கு கிளம்புறா இதெல்லாம் தெரிஞ்சி வெச்சிருக்கான் சார்…. அவன் பின்னாடி நிச்சயம் ஒரு ரெண்டு மூணு பேராவது இருக்கணும்” என்றார் பொருமியபடி.

அவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது தான் கவனித்தேன்… நெற்றியில் குங்குமம் இட்டிருந்தார்.

“சார்… தப்பா நினைக்காதீங்க. ஒரு சின்ன சோதனை வந்தாலே விரக்தி வந்து கடவுள் மேல நம்பிக்கை போய்டும். நீங்க எப்படி சார்… இவ்ளோ பெரிய கொடுமைக்கும் பிறகும் கடவுளை நம்புறதும் கும்பிடுறதும் ஆச்சரியமா இருக்கே? எப்படி உங்களால முடியுது?” என்றேன்.  (அவர்கள் சூழலில் நாம் இருந்து பார்த்தால் கேள்வியின் ஆழம் உங்களுக்கு புரியும்)

“சார் எனக்கு எப்பவோ வெறுத்து போய்டிச்சு சார். ஆனா என் பொண்ணுக்காகத் தான் இதெல்லாம் அவளுக்கு கடவுள் பக்தி அதிகம் சார். இப்போ கூட முருகா… முருகான்னு தான் சொல்லிகிட்டு இருக்கா. அவளுக்காகத் தான் நாங்க இன்னும் உயிரோட இருக்கிறோம். இனி அழுறதுக்கு கூட எங்க கிட்டே கண்ணீர் இல்லே. அழுது அழுது எல்லாம் தீர்த்தாச்சு” என்றார் விம்மியபடி.

“சார் எனக்கு எப்பவோ வெறுத்து போய்டிச்சு சார். ஆனா என் பொண்ணுக்காகத் தான் இதெல்லாம் அவளுக்கு கடவுள் பக்தி அதிகம் சார். இப்போ கூட முருகா… முருகான்னு தான் சொல்லிகிட்டு இருக்கா. அவளுக்காகத் தான் நாங்க இன்னும் உயிரோட இருக்கிறோம். இனி அழுறதுக்கு கூட எங்க கிட்டே கண்ணீர் இல்லே. அழுது அழுது எல்லாம் தீர்த்தாச்சு” என்றார் விம்மியபடி.

நம் தளத்தை பற்றியும் அதன் நோக்கம் பற்றியும் கூறி, இந்த விஷயத்தின் தீவிரத்தை நான் தாமதமாகத் தான் உணர்ந்தேன். மன்னித்துவிடுங்கள் சார் என்றேன்.

“ஐயோ… பரவாயில்லே சார்…. எங்களுக்காக நேரம் ஒதுக்கி உதவி செய்ய வந்திருக்கீங்களே… அதுக்கு முதல்ல என்னோட நன்றி” என்றார்.

அவரிடம் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தினேன். “இப்போது நாங்கள் அளிக்கும் தொகை பொதுமக்களிடமோ அல்லது தள வாசகர்களிடமோ பெற்றது அல்ல. நாங்கள் எங்கள் நண்பர்கள் சுமார் ஐந்தாறு பேர் சேர்ந்து ஆளுக்கு எங்களால் இயன்ற ஒரு தொகையை போட்டு இதை தருகிறோம். இதை கூட இப்படி செய்ய காரணம்… இதுகுறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு பரவவேண்டும் வினோதினிக்கும் உதவிகள் குவியவேண்டும் என்று தான். என் நண்பர்கள் பலர், நேரடியாக அவரவர் சக்திக்கு ஏற்ப ஒரு தொகையை உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தியிருக்கிறார்கள். செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக ரஜினி சாரின் ரசிகர்களின் பங்கு இதில் மகத்தானது!” என்றேன்.

மறுபடியும் “நன்றி… நன்றி…” என்றார்.

ரஜினி ரசிகர்களில் ஒருவரான வேலைவாய்ப்பற்ற சிவா என்னும் மாற்றுத்திறனாளி நண்பர் ஒருவர் ரூ.100/- வங்கியில் செலுத்திய விஷயத்தை அவரிடம் கூறியபோது, “சார் பணம் எவ்ளோ என்பது முக்கியமில்லே. மனசு இருக்கு பாருங்க… அது கோடி ரூபாய்க்கு சமம்” என்றார். மேலும் மும்பையிலிருந்து ஒரு அன்பர் ரூ.50/- செலுத்தியிருப்பதாகவும், அப்படி என்றால் அவரது நிலைமை எப்படி இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள் என்றார்.

எனவே நண்பர்களே, நாம் எவ்வளவு தருகிறோம் என்று அவர்கள் பார்ப்பதில்லை. நம் மனதை தான் பார்க்கிறார்கள். ஆண்டவனும் உங்கள் மனதைத் தான் பார்க்கிறான். உங்களால் இயன்றதை இவர்களுக்கு செய்யுங்கள் என்று கேட்டுகொள்கிறேன்.

இதற்கிடையே பேசும்போது பாலம் ஐயா அவர்களை பற்றி விரிவாக எடுத்துக்கூறி அவர் செய்த தியாகம் மற்றும் ஈடு இணையற்ற சேவைகள் பற்றி குறிப்பிட்டு அவரை பற்றி ஓரளவு புரியவைத்துவிட்டேன். நாங்கள் பேசிக்கொண்டிருந்த சற்று நேரத்தில், பாலம் ஐயா வந்துவிட்டார்.

திரு.ஜெயபாலனை அவரிடம் அறிமுகப்படுத்தினேன். அவரின் காலில் விழுந்து ஆசி பெற்றார் ஜெயபாலன்.

தொடர்ந்து வினோதினியின் தற்போதைய நிலை குறித்து விசாரித்தவர், இந்த கொடுமைக்கு காரணமான சுரேஷ் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என்றும் இது மற்றவர்களுக்கு பாடமாக இருக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அடுத்த சில நிமிடங்களில், எங்களை வினோதினி சிகிச்சை பெற்று வரும் அறைக்கு அழைத்து சென்றார்.

எப்படி சொல்வது? என்ன சொல்வது? அழகான மலர் ஒன்றை காலால் நசுக்கி அதை தீயில் வாட்டியதை போன்று இருந்தார் வினோதினி. இரண்டு கன்னங்களும் கருகிவிட்டது. கண்களில் நேரடியாக ஆசிட் பட்டதால் கண்கள் கருகிவிட்டது. வாயிலும் ஆசிட் பட்டபடியால் வாயும் வெந்து, உணவு அதுவும் திரவ உணவு தான் தற்போது மூக்கின் வழியே செலுத்தி வருகிறார்கள்.

உடல் மிகவும் இளைத்து பார்க்கவே என்னவோ போலிருந்தது. உணவு இல்லாததால் இந்த ஒன்றரை மாதத்தல் சுமார் 20 கிலோ எடையை வினோதினி  இழந்திருப்பதாக அவர் தந்தை கூறினார்.

வலது கை முழுதும் ஆசிட் பட்டு, கட்டு போடப்பட்டுள்ளது. முகம், கழுத்து, இடது தோள்,  தொடை, அடி வயிறு என பல இடங்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது.

தான் அழகாக இருக்கவேண்டும் என்று ஒவ்வொரு பெண்ணும் ஏங்கிக்கொண்டிருக்க, அந்த அழகே இந்த பெண்ணுக்கு ஒரு ஆபத்தாக முடிந்த கதையை என்னவென்று சொல்வது? அழகாக பிறந்தது ஒன்று தான் இவர் குற்றமா?

வறுமையால் வதைக்கப்பட்டவர்களைவிட, செழுமையால் வதைக்கப்பட்டவர்கள் இந்த உலகில் அதிகம். ஆனால் அதைவிட தாங்கள் அழகாக இருப்பதால் வதைக்கப்பட்டவர்கள் அதிகம்.

வறுமையால் வதைக்கப்பட்டவர்களைவிட, செழுமையால் வதைக்கப்பட்டவர்கள் இந்த உலகில் அதிகம். ஆனால் அதைவிட தாங்கள் அழகாக இருப்பதால் வதைக்கப்பட்டவர்கள் அதிகம்.

சுமாரான தோற்றமுடைய ஒரு பெண் கூட இந்த உலகில் நிம்மதியாக சந்தோஷமாக வாழ்ந்துவிடலாம். ஆனால் அழகாக பிறக்கும் ஒவ்வொரு பெண்ணும் படும் துன்பங்களை அந்த பெண் மட்டுமே அறிவாள். அழகான பெண் என்றாலே ‘திமிர் பிடித்தவள்’ ‘தலைக்கனம் மிக்கவள்’ என்ற பொத்தாம் பொதுவான அபிப்ராயமே பெரும்பாலானோரிடம் உள்ளது. ஒரு சிலர் அப்படி இருக்கலாம். ஆனால் பெரும்பாலன அழகிய பெண்கள் அமிலத்தின் நடுவில் தான் இருக்கின்றனர். ஒவ்வொரு முறையும் பார்வையாலேயே துகிலுரிப்பவர்கள் ஒரு புறம், சந்தர்ப்பம் கிடைக்குமா என்று சோதித்து பார்ப்பவர்கள் ஒருபுறம், சந்தேகப்படுபவர்கள் ஒருபுறம், பஸ்ஸில் ட்ரெயினில் பொது இடங்களில் தொல்லை தருபவர்கள் ஒருபுறம், அவதூறு கூறி சந்தோஷப்படுபவர்கள் ஒருபுறம் இப்படி அவர்கள் எந்த நேரமும் நெருப்பாற்றில் தான் நீந்திக்கொண்டிருக்கிறார்கள். எனவே அடுத்த முறை ஒரு அழகான பெண்ணை கண்டால், அந்த அழகின் மீது பொறாமை மட்டும் கொள்ளாதீர்கள். பாவம்… விட்டுவிடுங்கள்.

வினோதினியை பொருத்தவரை பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய அவரது தொடையில் இருந்து தான் சதை எடுக்கவேண்டும். ஒரு பக்க தொடை பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதால் மற்ற பக்கத்தில் இருந்து தான் சதை எடுக்கிறார்கள். குற்றுயிரும் குலையுயிருமாக உள்ள ஒரு ஜீவனிடம் எவ்வளவு தான் சதை எடுப்பது? சதை வளர வளர தான் வெட்டி எடுக்கவேண்டுமாம். ஆகையால் வினோதினியின் சிகிச்சை தொடர்ந்து பல மாதங்கள் நடைபெறும் என்று தெரிகிறது.

ஒரு சில வினாடிகள் தான் நான் வினோதினியை பார்த்தேன். அதற்கே என் கண்களில் கண்ணீர் தளும்பிவிட்டது. ஒவ்வொரு கணமும், வலியில் எரிச்சலில் துடிக்கும் ஆசை மகளை கண்ணெதிரே பார்க்கும் பெற்றோருக்கு எப்படி இருக்கும்? அவர்கள் நெஞ்சுரத்தை என்னவென்று சொல்வது?

[pulledquote][typography font=”Cantarell” size=”13″ size_format=”px” color=”#d10000″]அதே போன்று மருத்துவ தொழில் என்றால் அவர்களின் சொகுசு கார்களும் அவர்கள் சம்பாத்தியமும் மட்டுமே அனைவருக்கும் தெரிகிறது. ஆனால் உண்மையில் அந்த தொழிலில் இருப்பவர்களக்கு எப்படி ஒரு சகிப்புத் தன்மையும் பொறுமையும் அர்பணிப்பும் இருக்கவேண்டும் தெரியுமா? வினோதினியின் முகத்தை என்னால் சில வினாடிகள் கூட பார்க்க முடியவில்லை. காரணம், அந்த பாதிப்பின் தீவிரம் நம்மிடம் ஏற்படுத்தும் தாக்கம். அப்படியிருக்கும்போது அவரை தினமும் கவனித்துகொள்ளும் டாக்டர்களும், டிரெஸ்ஸிங் செய்துவிடும் நர்ஸ்களும், மற்ற உதவிகள் செய்பவர்களையும் நினைத்துப் பாருங்கள்.[/typography] [/pulledquote]

அதே போன்று மருத்துவ தொழில் என்றால் அவர்களின் சொகுசு கார்களும் அவர்கள் சம்பாத்தியமும் மட்டுமே அனைவருக்கும் தெரிகிறது. ஆனால் உண்மையில் அந்த தொழிலில் இருப்பவர்களக்கு எப்படி ஒரு சகிப்புத் தன்மையும் பொறுமையும் அர்பணிப்பும் இருக்கவேண்டும் தெரியுமா? வினோதினியின் முகத்தை என்னால் சில வினாடிகள் கூட பார்க்க முடியவில்லை. காரணம், அந்த பாதிப்பின் தீவிரம் நம்மிடம் ஏற்படுத்தும் தாக்கம். அப்படியிருக்கும்போது அவரை தினமும் கவனித்துகொள்ளும் டாக்டர்களும், டிரெஸ்ஸிங் செய்துவிடும் நர்ஸ்களும், மற்ற உதவிகள் செய்பவர்களையும் நினைத்துப் பாருங்கள்.

இப்போது உங்கள் வாழ்க்கையை நீங்கள் அனுபவித்து வரும் சௌகரியங்களை சற்று நினைத்துப் பாருங்கள். உண்மையில் நாமெல்லாம் வாழ்க்கையை ரசித்துக்கொண்டிருக்கிறோம். WE ARE BLESSED.

எனக்கு மட்டுமல்ல எங்களுடன் வந்திருந்த நண்பர் ராஜா, கண்ணன் வைரமணி, ஆகியோருக்கும் வினோதினி இருந்த கோலத்தை பார்த்து கண்கள் குளமாகிவிட்டது.

அன்பே உருவான பாலம் ஐயா அழாத குறை தான். கீழே மறுபடியும் வந்தோம்….

சிகிச்சை முறைகள், மருத்துவர்களின் பெயர் உள்ளிட்டவற்றை கேட்டு தெரிந்துகொண்டார். அவருடன் வந்திருந்த ஒருவர் அனைத்து விபரங்களையும் குறித்துக்கொண்டார்.

தொடர்ந்து திரு.கலியாணசுந்தரம் ஐயா நமது RIGHTMANTRA.COM சார்பாக DD வழங்க அதை நன்றியுடன் பெற்றுக்கொண்டார் ஜெயபாலன்.

திரு ஜெயபாலிடம் பாலம் ஐயா பேசிக்கொண்டிருந்தபோது புத்தாண்டு அன்று காலை நான் அவரை தொடர்புகொண்டபோது ஒரு பெரிய மனிதரின் வீட்டில் இருந்ததாகவும், என்ன ஏது என்று அவர்கள் கேட்டபோது வினோதினி விஷயத்தை பற்றி அவர்கள் கூறியதாகவும் உடனே அந்த வீட்டின் இல்லத்தரசி ரூ.5000/- தை கொண்டு வந்து பணமாகவே ஐயாவிடம் கொடுத்துவிட்டதாகவும் கூறினார்.

(அந்த தொகையுடன் கூட சேர்த்து ஒரு பெரிய தொகையாக பாலம் ஐயா விரைவில் தருவார் என்று கருதுகிறேன்.)

அடுத்து கையோடு எடுத்துச் சென்ற புஷ்பகுஜாம்பாள் சமேத மப்பேடு ஸ்ரீ சிங்கீஸ்வரர் ஆலயத்தின் லக்ஷார்ச்சனை பிரசாதத்தை தந்தோம்.

“புத்தாண்டு அன்னைக்கு சிவபெருமானே உங்களை நேரடியா தேடி வந்ததா நினைச்சிக்கோங்க. உங்க பெண்ணோட கர்மவினை எல்லாம் இன்னையோட தொலைஞ்சது. இனி எல்லாம் சுபம் தான். விரைவில் வினோதினி நலம் பெற்று திரும்ப அந்த ஈசனை வேண்டிக்கொள்கிறேன்….” என்றேன்.

அவருக்கு ஒரு கணம் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

திரு.ஜெயபாலனிடம் என்னிடம் திரும்பி, “என் பொண்ணு புண்ணியம் பண்ணியிருக்கா சார். இந்த மாதிரி ஒரு மனுஷனை அதுவும் புத்தாண்டு அன்னைக்கு கூட்டிகிட்டு வந்து என் பொண்ணை பார்க்க வெச்சிருக்கீங்க. அவளுக்கு இனிமே நல்ல காலம் தான் சார்… ஏதோ ஆண்டவனா பார்த்து உங்களை அனுப்பி வெச்சிருக்கான் சார்….” என்று என் கைகளை பிடித்துக்கொண்டு நெகிழ்ச்சியுடன் கூறினார்.

“என் பங்கு எதுவும் இல்லை சார். நான் ஒரு கருவி. எல்லாம் ஆண்டவனோட சித்தம்” என்றேன்.

“உங்களுக்கு இது தோணியிருக்கு பாருங்க.. இப்படி செய்யனும்… அதுவும் அதை இந்த மாதிரி ஒரு பெரிய புனிதர் கையாள கொடுக்கணும்… அவரை கூட்டிகிட்டு வந்து என்கிட்டே பேச வைக்கணும்…நீங்க நல்லாயிருக்கனும் சார்…” என்றார் கண்கள் கலங்கியபடி.

“சார்… எங்க பணி இத்தோட நிற்கப் போறதில்லை. வினோதினி பழைய நிலைமைக்கு திரும்புற வரைக்கும் நாங்க ஓயப் போறதில்லே. சிகிச்சைக்கு பிறகு அவரது மறுவாழ்வுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் சார்… கவலை வேண்டாம்…” என்றேன்.

அவரிடம் அடுத்து நாம் இது குறித்து செயல்படுத்தவிருக்கும் ஒரு விஷயத்தை கூறினேன். அடுத்த நொடி மிகவும்நெகிழ்ச்சியடைந்தார் “முதல்ல அதை செய்யுங்க சார்…. அது தான் சார் அவளுக்கு தேவை” என்றார். (நாங்கள் என்ன செய்வதாக கூறியிருக்கிறோம் என்று தெரியவேண்டுமா? சற்று பொறுங்களேன்!)


கலியாணசுந்தரம் ஐயா திரு.ஜெயபாலனிடம் பேச பேச அவருக்கு நம்பிக்கை துளிர்க்க ஆரம்பித்தது. மறுபடியும் அவரின் கால்களில் வீழ்ந்து ஆசி பெற்றார். சற்று நேரத்தில் பாலம் கலியாணசுந்தரம் ஐயா கிளம்பிவிட்டார்.

விதியின் விளையாட்டால் துவண்டுகிடந்த ஒரு குடும்பம் இன்று சற்று நிமிர்ந்து உட்கார்ந்திருக்கிறது என்பதில் எங்களுக்கு மிகப் பெரிய மனநிறைவு. பாறையில் வேரைப் போல அவர்களிடம் நம்பிக்கை துளிர்த்திருக்கிறது.

விதியின் விளையாட்டால் துவண்டுகிடந்த ஒரு குடும்பம் இன்று சற்று நிமிர்ந்து உட்கார்ந்திருக்கிறது என்பதில் எங்களுக்கு மிகப் பெரிய மனநிறைவு. பாறையில் வேரைப் போல அவர்களிடம் நம்பிக்கை துளிர்த்திருக்கிறது.

“ரொம்ப நன்றி சார்… ரொம்ப நன்றி….!” என்றார் திரும்ப திரும்ப. ‘நன்றி’ அவரது வார்த்தைகளில் மட்டுமல்ல அவரது கண்களிலும் தெரிந்தது. அதில் துளிர்த்த கண்ணீர்த் துளிகளிலும் தெரிந்தது.

அந்த கண்ணீர்த் துளிகளில் அப்போது இறைவனைக் கண்டோம் நாங்கள்.

புத்தாண்டு அன்று மிகப் பெரிய ஒரு சேவைக்கு எங்களை கருவியாக தேர்ந்தெடுத்ததற்கு இறைவனுக்கு ‘நன்றி’ சொன்னோம். அதற்கு மட்டுமல்ல….. “உனக்கும் கீழே உள்ளவர் கோடி…நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு” என்பதையும் எங்களுக்கு புரியவைத்தமைக்கு!

[END]

Also check :
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
கண்ணெதிரே கருகும் மொட்டு – கண்ணீரை துடைக்க கைகொடுங்கள்!

பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும் என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

16 thoughts on “இறைவனை பார்க்க நாங்கள் சென்றதும்; இறைவனே எங்களிடம் வந்ததும்!

  1. சொல்லுதல் யார்க்கும் எளிய அறியவாம்
    சொல்லிய வண்ணம் செயல்

    When everyone was just talking, u did it.

  2. தங்கள் தங்கள், வேலையே முக்கியம் என்று அலைந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில், உங்களை போல மனிதர்கள் இருப்பது மனதிற்கு ஆறுதலாக உள்ளது. தாங்கள் Paypal account ஆரம்பித்து வைத்தால், நலமாக இருக்கும். தயவு செய்து நரசிம்ஹர் பற்றி எழுதுங்கள். நன்றி. வள்ளி.

    —————————————————
    தங்கள் ஊக்கத்திற்கும் எம் மீது வைத்திருக்கும் நல்லெண்ணத்திற்கும் நன்றி. நீங்கள் கூறியதை பரிசீலிக்கிறேன்.
    – சுந்தர்

  3. நான் ஏற்கனவே சொன்னது தான் நான் கழித்த புத்தாண்டுகளில் இந்த வருடம் தான் மிக மன நிறைவோடும் ஆத்ம திருப்தியோடும் கழித்த புத்தாண்டு .அவர் அவர்கள் என்ன என்னமோ செய்கிறார்கள் நான் சிறிது நேரம் ஒதுக்கு வரைவோலை எடுத்ததற்கு எதற்கு நன்றி எல்லாம் இது கடமை.

    ஒரு சமூக சேவகர், வயதானவர்,பக்குவப்பட்டவர் , அய்யா கல்யாணசுந்தரம் அவர்களுக்கே இந்த செயலை கேள்வி பட்டவுடன் எவ்வளவு கோபம் வந்தது தெரியுமா ,அப்படி ஆனால் நம்மை போன்றவர்களுக்கு ,திரு சுந்தர் ,அய்யா கல்யாணசுந்தரம் அவர்களாவது உள்ளே சென்று பார்த்தார்கள் என்னால் உள்ளே கூட செல்ல முடியவில்லை வாசலில் இருந்தே தான் பார்த்தேன் அப்படி பார்த்த போதே என்னால் இந்த மகா பாதக செயலை செய்தவனை இங்கேயே கொண்டு வந்து தங்கை வினோதினி குடும்பத்தினர் கண் முன்னாடியே வெட்டி கொல்ல வேண்டும் என்ற அளவு ஆத்திரம் வந்தது ,பெற்றவர்களுக்கு எப்படி இருக்கும்.

    இந்த மாதிரி காட்டுத்தனமான செயல்களை செய்பவர்கள் அடுத்த குடும்பத்தை மட்டும் அல்ல தன குடும்பத்தையும் சேர்த்து தான் தொல்லை கொடுகிறார்கள்.ஏன் என்றால் டெல்லி மாணவிக்கு நடந்த கொடூரத்தில் அந்த பாதகத்தை செய்த கொடூரங்களின் பெற்றவர்களையும் தான் மக்கள் தாக்க பார்கிறார்கள் ,ஒதுக்கி வைக்கிறார்கள்,அவர்களை பெற்றதை தவிர அவர்கள் செய்த பாவம் தான் என்ன .

    உண்மையில் தினசரி செய்திகளை படிக்கும் போது நம் நாடு எங்கு போகிறது என்று கனவிலும் நினது பார்க்க முடியவில்லை

    இளைஞர்களே உங்கள் கையில் தான் நாடு உள்ளது கனவு காணுங்கள் என்றார் அய்யா அப்துல்கலாம் அவர்கள் ,நூறு இளைஞர்கள் சேர்ந்தால் நாட்டின் தலை எழுத்தையே மாற்றி விடலாம் என்று நம்பினார் திரு விவேகனந்தர் ,அவர்களின் நம்பிகையை பொய் ஆக்கிவிடாதீர்கள்

  4. இந்த புத்தாண்டு முதல் யார் கஷ்டப்பட்டாலும் அவர்களுக்கு நாம் உதவ வேண்டும் என்று உறுதி எடுப்போம். உங்கள் சேவைக்கு என் வாழ்த்துக்கள்.

  5. Dear Sir,
    Can you please provide me the bank details about Mr.Jeyapalan?

    Thanks,
    Mahesh

    ———————————————————–
    V. Jayabalan,
    Indian bank, Kilpauk Branch
    A/c no 603899558
    IFSC Code – IDIB000K037

  6. இந்த நெகிழ்ச்சியான தருணங்களில் நான் இல்லை என்றாலும் என் மனது அன்று முழுவதும் அங்கு தான் இருந்தது.

    வேலை பளு காரணமாக என்னால் அங்கு வர இயலவில்லை..

    ஐயா திரு பாலம் கலியாணசுந்தரம் அவர்களின் தலைமையில் இந்த சிறு உதவியை நம் தளம் வினோதினி க்கு செய்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது..

    அவரை போன்ற மிக பெரிய மனிதர்களின் ஆசியும் நம்மை போன்ற பல பேரின் பிரார்த்தனைகளும் கண்டிப்பாக ஒரு மிக பெரிய மாற்றத்தை வினோதினி க்கு தர போகிறது..

    நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்…

    PVIJAYSJEC

  7. உண்மையில் கடவுள் தான்யா உங்களை அவங்க கிட்டே அனுப்பி வெச்சிருக்கார். எனக்கு வேற எதுவும் சொல்லத் தோணல ஜயா. எனக்கு இப்ப இருக்கற வசதிக்கு ரூபாய் 500 மட்டும் நாளைக்கே இந்தியன் வங்கியில் போட்டுடுறேன். சின்ன பொண்ணு. அவங்களை நினச்சா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. கடவுள் அவங்களுக்கு நல்லதே செய்யணும்னு வேண்டிக்கிறேன்.

  8. நண்பர் சோமேஷ் சொன்ன மாதிரி,

    நான் எல்லாம் சொல்ல மட்டும் தான் செய்வேன். (இதை சொல்லவே எனக்கு வெட்கமா இருக்குங்க).

    மிக பெரிய உதவியை எல்லோரும் சேர்ந்து செஞ்சு இருக்கீங்க. உண்மையிலேயே, நீங்க எல்லாரும் கிரேட்.

    இதற்கு மேல், சொல்ல எனக்கு தகுதி இல்ல.
    ***
    சிட்டி.

  9. சுந்தர்ஜி ,

    ஜனவரி 1 அன்று பேரம்பாக்க்கம் செல்லும் வழீயீல் கூவம் எனும்

    ஊரில் தீண்டாத்திருமீனி சும்புலிங்கம் தரிசனம் செய்துவிட்டு ,வினோதினிக்காக சிவனிடத்தில் கோரிக்கை வைத்துவிட்டு, பேரம்பாக்கத்தில் நரசிம்மரை கண்குளிர தரிசித்து விட்டு வினோதினிக்காக கோரிக்கை வைத்துவிட்டு .RIGHTMANTRA.COM ஆலயவழிபாடு குறிப்பு கிடைத்தது கண்டு தங்களின் வருகையை புரிந்து கொண்டேன் .
    வினோதினிக்காக தினமும் பிரார்த்தனை செய்கிறேன் .
    என்றும் சிவனடிமை .
    மனோகரன்.

    ———————————————-
    மிக்க மகிழ்ச்சி நண்பரே.
    இந்த புத்தாண்டு மிகவும் மகிழ்ச்சிக்குரியதாக இருக்கும் உங்களுக்கு என்பதில் சந்தேகமில்லை.
    நம்ம தளத்தோட அந்த PAMPHLET எப்படி இருந்தது? பயனுள்ளதாக இருந்ததா?
    – சுந்தர்

  10. சுந்தர்ஜி ,

    PAMPHLET இல் குறிப்பாக குடும்ப தலைவிகளுக்கு பயனுள்ள
    தகவல்கள்.எங்கள் வீட்டு (home minester )மனைவிக்கு மிகுந்த மகிழ்ச்சி . PDF FILE ஆக COVERTION செய்து நமது இணையத்தளத்தில் UPLODE செய்தால் பிரிண்ட் செய்து விநியோகிக்க , மற்றவருக்கும் அனுப்ப உதவியாக இருக்கும் .
    இறை பணியில் நாங்களும் இணைகிறோம் .

    நன்றி .

    சிவனடிமை,
    மனோகரன் .

  11. “சார்… எங்க பணி இத்தோட நிற்கப் போறதில்லை. வினோதினி பழைய நிலைமைக்கு திரும்புற வரைக்கும் நாங்க ஓயப் போறதில்லே///

    பணம் யாரு வேணாலும் கொடுக்கலாம் அனால் அதனுடன் நிற்காமல் அதற்கும் மேலாக நீங்கள் செய்யும் அந்த முயற்சிக்கும் வாழ்த்துகள்

  12. வருடந்தோறும் தங்களுடைய புத்தாண்டு கட்டுரையை படிப்பது வழக்கம். இந்த ஆண்டு தங்களுடைய கட்டுரை வித்தியாசமான அனுபவத்தை தருகிறது.

    இந்தியாவில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு மிக மிக soft ஆனா நடவடிக்கைகளே எடுக்கப்படுகிறது. மிகவும் புனிதம் வாய்ந்த இந்த மண்ணில் இது போல நிகழ்வது எங்களை போன்ற வெளிநாட்டு தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கும், அளவுகடந்த மனவேதனையை தருகிறது.

    இந்திய எங்கே செல்கிறது, அரசாங்கம் என்ன செய்கிறது, என்று பல கேள்விகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. சகோதரி வினோதினிக்கு நடந்த இந்த கொடுமைக்கு காரணமானவன் நிச்சயம் கடுமையாக தண்டிக்க படவேண்டும்.

    இந்த புண்ணிய பாரதத்தில் இது போன்று குற்றங்கள் புரிபவர்களுக்கு மிக மிக கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

    god bless sister vinothini

    God will save Tamil Nadu.

  13. மறக்க முடியாத புத்தாண்டை அளித்த நம் தளத்திற்கு நன்றிகள்…சகோதிரி வினோதினி விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப அந்த எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்….
    .மாரீஸ் கண்ணன்

  14. Dear sundar,
    Thanks for bringing this to our attention. I used http://www.helpvinodini.com to donate a small amount.
    After one such incident, she will be very much depressed. We should also make sure that she is in good spirits and try to cheer her up.
    Please let us know how we can help. Can we talk to her.
    Also the culprits for such crimes should get maximum punishment to prevent future incidents. What should we do as a group.
    Thanks,
    Venkatesh

    ———————————————————
    All we can do presently is to donate something to her whatever amount we each can afford.
    And i have assured her father already about rehabilitation for her. Will be with them and do the needful.
    Regarding talking to her, let another month pass… we shall do that.
    Presently she need to be infection resistant. So her parents are avoiding that.
    Thanks for your intention.
    – Sundar

    1. Sundar,
      I did the donation part as per the info below. I pray God that she becomes fine soon. I have been reading news articles about her and was glad to know that her friends are trying to keep her in good spirits. Please keep her posted about her condition from time to time. Appreciate your help.

      ________________________________________
      Donation Details
      Confirmation number:
      2A812834TG013453P
      Donation amount:
      $50.00 USD
      Total:
      $50.00 USD
      Purpose:
      Help Vinodhini
      Contributor:
      VENKATESH MANICKAVACHAGAN
      ________________________________________

      Recipient information
      Donations coordinator:
      Packiarajan Sethuramalinga

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *