Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, December 6, 2024
Please specify the group
Home > Featured > கந்தரந்தாதியைப் பாராதே, கழுக்குன்றத்து மலையை நினையாதே!

கந்தரந்தாதியைப் பாராதே, கழுக்குன்றத்து மலையை நினையாதே!

print
முருகப்பெருமானின் பெருமையை கூறும் ‘திருப்புகழ்’ எனப்படும் பாக்களை இயற்றியவர் அருணகிரிநாதர். நாளை ஜூலை 1 (ஆனி மூலம்) அவரது ஜெயந்தித் திருநாள். திருப்புகழ் பாக்கள் யாவும் எழுத்தாணி, ஏடு, முதலியன கொண்டு, யோசித்து எழுதாமல் உடனுக்குடன் பேசுவது போல “ஆசு” கவிகளாகத் தோன்றியவை. பதினாறாயிரம் திருப்புகழ்ப் பாக்களை அவர் பாடியதாகக் கூறப்படுகிறது. ஆனால் கால வழக்கில் நமக்குக் கிடைத்துள்ள அவரது திருப்புகழ்ப் பாடல்கள் 1307 தாம்.

Lord Murugaமகாபாரதத்தை தமிழில் பாடியவர் வில்லிபுத்தூரார். இவர் அருணகிரிநாதரின் சமகாலத்தவர். தமிழிலும் வடமொழியான சமஸ்கிருதத்திலும் பாண்டித்தியம் பெற்றவர். வரபதியாட்கொண்டான் என்னும் மன்னனின் ஆஸ்தான பணிதராக இருந்தார் வில்லிபுத்தூரார். இவர் தமிழில் மஹாபாரதம் பாடியமைக்காக மகிழ்ந்த அம்மன்னன் இவருக்கு பல பரிசுகளும் வெகுமதிகளும் அளித்து கௌரவித்தான். அதில் தங்கத்தினாலான கட்டாரியும் (குத்துவாள்) ஒன்று.

புலமைக்கு அங்கீகாரமும் பரிசும் கிடைத்தவுடன், வில்லிபுத்தூராருக்கு ஆணவம் தலைக்கேறியது. ஊர் ஊராக சென்று சந்தம் பாடி, தமக்கெதிராக பாடி தோற்றவர்களின் காதுகளை கொய்து வந்தாராம்.

வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் என்றுமே உண்டல்லவா? இவரது ஆணவத்தையும் அடக்க ஒருவர் வந்தார். அவர் தான் அருணகிரி நாதர்.

அருணகிரிநாதர் இறையருள் பெற்ற கவிஞர் மாத்திரம் அல்ல. முருகனின் திருக்கை வேலாள் பிரணவ மந்திரத்தை நாவினில் எழுதப்பெற்று கவி பாடியவர். திருப்புகழில் உள்ளது போல சொல்லாழமும் உவமையும் இலக்கணச் சிறப்பும் வேறு எந்த பக்தி இலக்கியத்திலும் காண முடியாததாகும்.

Arunagirinadhar 1
திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலில் உள்ள அருணகிரிநாதர் சன்னதி

அருணகிரிநாதரைப் பற்றி கேள்விப்பட்ட வில்லிப்புத்தூரார் அவரையும் வாதில் வென்று அவர் காதுகளை கொய்ய விரும்பினார். அருணகிரிநாதரிடம் அது நடக்குமா?

திருவண்ணமலைக்கு வந்த வில்லிப்புத்தூரார் அருணகிரிநாதரை சந்தித்து, “உங்களால் என்னோடு போட்டியிட்டு சந்தம் பாட முடியுமா?” என்று கேட்டார். அருணகிரிநாதரும் ஒப்புக்கொண்டார்.

அரசன் பிரபுட தேவராயனை சாட்சியாக வைத்துக்கொண்டு அவனது சபையில் போட்டி துவங்கியது. இருவரும் ஒருவர் பாடும் பாடலுக்கு மற்றவர் பொருள் கூறி வரவேண்டும் என்றும், பொருள் கூற முடியாது திகைக்கும் நிலை வந்தால் அவர் தோற்றவராக கருதப்படுவார் என்றும் விதி வகுக்கப்பட்டது. அருணகிரிநாதரும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

முதலில் வில்லிப்புத்தூரார் பாடத் துவங்கினார். அவர் பாடிய அனைத்து பாக்களுக்கும் அருணகிரிநாதர் அசராமல் பொருளுரைத்துக்கொண்டே வந்தார். ஒரு கட்டத்தில் மிக கடினமான சொற்களை கொண்ட பாக்களை பாடியும் அருணகிரிநாதர் அவற்றுக்கு சளைக்காமல் பொருள் கூறிவிட்டார்.

அடுத்து அருணகிரிநாதரின் முறை. அப்போது அருணகிரிநாதர் பாடியது தான் கந்தராந்தாதி.

திருக்கழுகுன்றத்து கோயில் படிக்கட்டுக்கள்
திருக்கழுகுன்றத்து கோயில் படிக்கட்டுக்கள்

Thirukkazhukunram 3

மலைக்கோவிலிலிருந்து தாழக்கோவிலின் அழகு. மலை மீது இறைவன் பெயர் வேதகிரீஸ்வரர். கீழே : பக்தவத்சலேஸ்வரர்!
ஒரு மழைக்காலத்தில் மலைக்கோவிலிலிருந்து தாழக்கோவிலின் அழகு. மலை மீது இறைவன் பெயர் வேதகிரீஸ்வரர். கீழே : பக்தவத்சலேஸ்வரர்!

கந்தரந்தாதி நூலில் காப்புச்செய்யுள் உட்பட 102 பாடல்கள் உள்ளன. அனைத்தும் யமகம் முறையில் அமைந்த அந்தாதிப் பாடல்கள். எளிதில் பொருள் விளங்கிக்கொள்ள முடியாத பாடல்கள்; புலமை விளையாட்டுப் பாடல்கள். எனவே ”கந்தரந்தாதியைப் பாராதே, கழுக்குன்றத்து மலையை நினையாதே” என்னும் பழமொழி ஒன்று தோன்றியது. திருக்கழுக்குன்றத்து மலை ஏறுவதற்குக் கடினமானது. அதுபோல கந்தரந்தாதி புரிந்துகொள்ளக் கடினமானது.

எனவே ”கந்தரந்தாதியைப் பாராதே, கழுக்குன்றத்து மலையை நினையாதே” என்னும் பழமொழி ஒன்று தோன்றியது. திருக்கழுக்குன்றத்து மலை ஏறுவதற்குக் கடினமானது. அதுபோல கந்தரந்தாதி புரிந்துகொள்ளக் கடினமானது.

அருணகிரிநாதர் பாடப் பாட, வில்லிபுத்தூராரும் சளைக்காமல் பொருளுரைத்துக்கொண்டே வந்தார்.

கந்தரந்தாதியின் 54 வது பாடலான

‘திதத்தத்தத் தித்தத் திதிதாதை’ என்று தொடங்கும் முதல்வரியை பாடிமுடிக்கும்போதே வில்லிப்புத்தூராருக்கு கலக்கம் ஏற்பட்டது. தோல்வி பயம் பற்றிக்கொண்டது.

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே

முழுப் பாடலையும் பாடி முடித்த பின்னர், பாடலுக்கு பொருள் கூறமுடியாமல் திருதிருவென விழித்தார் வில்லியார்.

“இவரால் மட்டும் கூற முடியுமோ?” என்றார் அரசனைப் பார்த்து. உடனே அருணகிரிநாதர் பாடலின் பொருளை உரைத்தார்.

திதத்தத்தத் தித்தத் – திதத்தத்தத் தித்த என்னும் தாளமானங்களை திதி – திருநடத்தால் காக்கின்ற தாதை – பரமசிவனும் தாத – பிரமனும் துத்தித் – படப் பொறியினை உடைய தத்தி – பாம்பினை உடைய தா – இடத்தையும் திதத் – நிலைபெற்று தத்து – ததும்புகிற அத் தித் – சமுத்திரத்தையும் பாயலாகக் கொண்டு ததி – தயிரானது தித்தித்ததே – தித்திக்கிறதென்று துத் – உண்ட கண்ணனும் துதித்து – துதி செய்து வணங்குகிற இதத்து – பேரினப சொரூபியான ஆதித – முதல்வனே தத்தத்து – தந்தத்தை உடைய அத்தித் – அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட தத்தை – கிளி போன்ற தெய்வயானைக்கு தாத – தாசனே திதே – தீமையே துதை – பொருந்திய தாது – சப்த தாகுக்களால் நிறைந்த்தும் அதத்து – மரணத்தோடும் உதி – சனனத்தோடும் தத்து – பல தத்துக்களோடும் அத்து – இசைவுற்றதுமான அத்தித் – எறும்பு (தித்தி தீதீ) – இந்தப் பகுதிக்கு உரை விடுபட்டுள்ளது. திதி – அந்த நாளிலே துதி – உன்னைத் துதிக்கும் தீ – புத்தி தொத்ததே – அனக்கே அடிமையாக வேண்டும்

(இந்தப் பாடலின் பொருள் : தாளத்தால் நடிக்கும் பரமசிவனும், பிரமாவும், தயிரை உண்டு, பாற்கடலையும் ஆசிசேடனையும் பாயலாகக் கொண்ட திருமாலும் வணங்குகிற முதல்வனை! தெய்வயானை தாசனே! சனன மரணத்துக்கு இடமாய், எலும்பு முதலிய தாதுக்கள் நிறைந்த பொல்லாத இந்த உடம்பை, தீயில் வேகுங்கால், உன்னைத் துதிக்கும் என் புத்தியை உன் அடி இணைக்கு ஆட்படுத்த வேண்டும்.)

“நீங்களே வெற்றிப் பெற்றீர்!” என்று கூறி, தனது கட்டாரியை அருணகிரிநாதரின் கைகளில் கொடுத்தார் வில்லிப்புத்தூரார்.

“என் தோல்வியை நான் ஒப்புக்கொள்கிறேன். உங்கள் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள்!” என்றார் அருணகிரிநாதரிடம்.

Arunagirinadhar 3

அருணகிரிநாதர் பழுத்த முருகனடியாராயிற்றே. எதிரியின் தோல்வி கண்டு நகைப்பாரா? இவர் ஆணவத்தை தான் அவர் அடக்க நினைத்தாரே தவிர தண்டிக்க நினைக்கவில்லை.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல். (குறள் 314)

கட்டாரியை வில்லிப்புத்தூரரிடமே திருப்பிக் கொடுத்து, “இந்த குத்துவாளை உமக்கே தானமாக கொடுக்கிறேன். உங்கள் செவியையும் சேர்த்து!” என்றார்.

“அடியேன் தங்களிடம் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்று தான். இனி உங்களிடம் வாதில் தோற்பவர் எவர் செவியையும் நீங்கள் கொய்யலாகாது” என்றார். மேலும் தாம் பாடிய கந்தரந்தாதிக்கு வில்லிபுத்தூராரே உரையெழுதலாம் என்றார்.

அருணகிரிநாதரின் வேண்டுகோளை ஏற்று வில்லிபுத்தூராரே கந்தரந்தாதியின் உரையை நிறைவு செய்தார். இதன் மூலம் அருணகிரிநாதரின் புகழ் மேலும் மேலும் பரவத் தொடங்கியது.

தமிழகத்தில் பல ஆலயங்களில் அருணகிரிநாதருக்கு தனி சன்னதி உள்ளது. இந்த பதிவில் நீங்கள் காண்பது திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலில் காணப்படும் அருணகிரிநாதர் சன்னதியாகும்.

===============================================================================
வாரியார் சுவாமிகள் திருப்புகழ் சபை!

அருணகிரிநாதரின் அவதாரத் திருநாளை முன்னிட்டு ஒரு நல்ல முயற்சியின் துவக்கத்தை பற்றிய தகவல் கிடைத்துள்ளது. அது பற்றிய தகவலை இங்கே இத்துடன் பகிர்கிறோம்.

தமிழ் கடவுள் முருகன். அவர் அருள் பெற்ற அருணகிரிநாதரின் திருப்புகழையே பாடி தன் வாழ்நாள் முழுவதும் உலகமெல்லாம் சுற்றிவந்த தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் நினைவாக அருணகிரிநாதரின் அவதாரத் திருநாளாகிய 01/07/2015 அன்று முதல் “வாரியார் சுவாமிகள் திருப்புகழ் சபை” வாரியார் சுவாமிகளின் தம்பி திரு.மயூரநாதசிவம் அவர்களின் பேத்தி காயத்ரி என்பவரால் தொடங்கப்படவுள்ளது. இவரது மகள்கள் வள்ளி, லோச்சனா சகோதரிகள் ஏற்கனவே தேவாரம், திருப்புகழ் ஆகியற்றை கோவில்களிலும் இதர நிகழ்ச்சிகளிலும் பாடி வருவது குறிப்பிடத்தக்கது.

முருக பக்தர்களும், வாரியார் சுவாமிகளின் பக்தர்களும் இணைந்து வாரியார் சுவாமிகளின் வாழ்நாள் லட்சியமான இல்லந்தோறும் திருப்புகழ் எனும் கனவை நினைவாக்குவோம்.

வேலை வணங்குவதே வேலை!

தலைமை அலுவலகம் முகவரி:

வாரியார் சுவாமிகள் திருப்புகழ் சபை
எண் 3/10 ஆற்காடு சாலை
காரம்பாக்கம், போரூர்
சென்னை 600116
தொ.பே : 044 – 2476 8894  | கை பே : 9790 99 3619

===============================================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

===============================================================================

Also check :

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு!

சித்தர்கள் இன்றும் தவம் செய்யும் ஒரு அதிசய மண்டபம் – வள்ளிமலை அற்புதங்கள் (2)

புத்தாண்டு அன்று பார்க்கவேண்டியது யாரைத் தெரியுமா? வள்ளிமலை அற்புதங்கள் (1)

நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!!

அடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் !

 மணிகண்டனை தேடி வந்த முருகன்! ஒரு உண்மை சம்பவம்!!

களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!

முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!

செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!

சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!

முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2

ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1

தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!

காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!

“நான் உன்னை மறவேன். நீ என்னை மறக்காதே!”

=================================================================================

Also check our exclusive interview with Thiru.T M Soundarrajan a year before his departure.

“ஒன்றென்றிரு.. தெய்வம் உண்டென்றிரு…” – ஏழிசை வேந்தர் திரு.டி.எம்.எஸ். அவர்களுடன் ஒரு பிரத்யேக சந்திப்பு!

=================================================================================

[END]

10 thoughts on “கந்தரந்தாதியைப் பாராதே, கழுக்குன்றத்து மலையை நினையாதே!

  1. அருணகிரிநாதரின் குரு பூஜை ஸ்பெஷல் பதிவு நாளை தான் வரும் என்று எண்ணி இருந்தேன்..ஆனால் இன்றே பதிவு செய்து மகிழ்ச்சி கடலில்,நீந்த செய்தமைக்கு பாராட்டுகள்.
    மனம் இரு விசயங்களுக்காக துள்ளி குதிக்கிறது. ஒன்று இன்றைய பதிவு..

    பதிவின் தலைப்புக்கான விளக்கமும் அருமை..முருக பெருமான் அருள் பெற்று , கந்தரந்தாதி பாடியமை பற்றி விளக்கமாக எழுதியது இன்னும் தேன்…தேன் ..தேன் தான்.

    மற்றொன்று..வாரியார் ஸ்வாமிகள் திருப்புகழ் சபை
    வாரியார் ஸ்வாமிகள் திருப்புகழ் சபை தொடங்குவது நல்ல முயற்சி..நல்ல முயற்சி என்று சொல்வதை விட ..நம் சமூகதிற்கு தேவையான முயற்சியும் கூட..முருக பெருமானின் அருளால்,இல்லந்தோறும் திருப்புகழ் எனும் கனவு..கூடிய சீக்கிரம் நனவாகும் என்பது உறுதி.அதற்கான அஸ்திவாரம் போட்டிருப்பது மிகவும் சிறப்பு.

    நம் தள அன்பர்கள், இன்புற்று வாழ்ந்திட, அருணகிரிநாதரின் குருவருளும், நம் முருக பெருமானாரின் இறைஅருளும் துணை புரியட்டும்.

    முருகா சரணம்..
    சண்முகா சரணம்..!

    1. நன்றி . சுந்தர் சாரிடம் நேற்று காலைதான் சொன்னேன் , நேற்று மலையே பதிவு வந்துவிட்டது . உங்கள் பகுதி நண்பர்களை இணைத்து முருகன் கோவிலில் திருப்புகழ் பாராயணம் செய்வோம்

      1. நன்றி சீதாராமன் அய்யா..சுந்தர் அண்ணாவின் மூலம் போரூர் முருகன் கோவிலில் திருப்புகழ் பாராயணம் நிகழ்ச்சி குறித்து எல்லையில்லா மகிழ்ச்சி..திருப்புகழ் அனுபவத்திற்கு தயாராக உள்ளோம் அய்யா.

        மேலும் நேற்று இறையருளால், திருக்கழுகுன்றம் சென்று, கிரிவலம் சென்றேன். அனால் எம் பெருமான் ஈசனை காண இயலவில்லை.

        அடுத்த முறை, திருக்கழுகுன்றத்தில் ஈசனை பற்ற விழைகிறேன்..

        நன்றி…

  2. அருண்கிரியாரிடம் போட்டியில் தோற்ற வில்லிப்புத்தூராரை நினைவுறுத்தியமைக்கு நன்றி.
    வாரியார் சுவாமிகளின் திருப்புகழ் சபை மென்மேலும் தம் பணியை சிறப்புடன் செய்ய வள்ளி மணாளன் அருள் புரிவார்.

    1. நன்றி , உங்களின் பூரண ஆசிர்வாதமும் , ஆலோசனையும் தேவை

  3. ஒரே பதிவில் இரண்டு முருக பக்தர்களை பற்றி படிக்க நேர்ந்தது மகிழ்ச்சி. கந்தரந்தாதி பிறந்த கதை சூப்பர்.

    திருக்கழுக்குன்றம் கோவிலையும் படிக்கட்டுக்களையும் பார்க்கும் பொழுது வெகு விரைவில் அங்கு செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது.

    திருமதி.காயத்ரி அவர்கள் மூலம் போரூரில் வாரியார் சுவாமிகள் திருப்புகழ் சபை உதயமாவதை நினைத்து மிக்க சந்தோசம். சபை மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள் .

    ஆனி மூலம், இன்று எனது பிறந்த நாள் நட்சத்திரம் கூட. காலையிலேயே கோவிலுக்கு சென்றுவிட்டேன்.

    இன்று உலக டாக்டர்கள் தினம். நமக்காக சேவை செய்யும் டாக்டர்களை நினைவு கூர்வோம்.

    ஆக மொத்தத்தில் இன்று ஸ்பெஷல் டே.

    நன்றி
    உமா வெங்கட்

    1. நன்றி , போரூர் , பாலமுருகன் கோவிலில் வைத்து ஒருமுறை சுந்தர் சாரின் தலைமாயில் திருப்புகழ் பாராயணம் செய்வோம்

      1. Thanks sir , definitely I will attend . Eagerly waiting for that day to chant thirupugal .

        Regards
        uma Venkat.

  4. வணக்கம் சுந்தர்.அப்பா இந்த பாட்டை படிபதற்கே கடினமாக உள்ளது.பிறகு எப்படி பொருள் தெரிந்துகொள்வது .விளக்கத்தை படித்த பிறகுதான் சுலபமாக புரிந்தது .திருக்குமரன் அருளாசி பெற்றவர் என்றல் சும்மாவா.நன்றி.

  5. Sundar sir,

    I am unable to type properly in tamil here. But tried to type in gmail and paste. Paste is also not possible. So could not type in tamil and express in my language.

    Excellent article. This article articulates your feel to get us the best subject every time. I could get to know lot about Arunagirinathar swamigal only after you introduced Vel Maral to us only.

    வளர்க தங்கள் திருப்பணி.

    ராஜ்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *