1) சீக்கிரம் படிப்பை முடிக்க ஏதேனும் வழி இருக்கிறதா?
அமெரிக்க அதிபர் கார்பீல்டு கல்லூரி ஒன்றின் தலைவராக இருந்த சமயம், ஒருவர் தன் மகளை கல்லூரியில் சேர்ப்பதற்காக வந்தார்.
“என் மகள் படிப்பை சீக்கிரமாக முடிக்கவேண்டும். ஏதாவது செய்ய முடியுமா?” என்று கேட்டார்.
“முடியும். ஆனால், நீங்கள் அவள் என்னவாக வேண்டுமென்று விரும்புகிறீர்களோ அதைப் பொருத்தது தான். ஓக் மரத்தை உண்டாக்க கடவுளுக்கு நூறு ஆண்டுகளும், கள்ளிச் செடியை உண்டாக்க இரண்டு மாதமும் ஆகின்றன” என்றார் கார்பீல்டு.
வந்தவர் தன் அறியாமையை எண்ணி வெட்கி தலை குனிந்தார்.
– ராஜி ரகுநாதன் @ ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்
2) ‘ஆண்மை’ என்பது எது ?
ஆண்மை எது ,
ஆறடி உயரம் அரும்பு மீசை
கொக்கரிக்கும் பார்வை
நெக்கல் கேலிகளால்
பெண்களை வஞ்சிப்பதா ?
பெற்று வளர்த்த பெற்றவர்களை
நடுத்தெருவில் தவிக்கவிட்டு
இரக்கம் மறந்து இளமை தேடி
காலம் தள்ளுவதா ?
காதலென்று ஊர்சுற்றி
ஒருதலை காதலால் வெறிபிடித்து
விரும்பாத பெண்ணவளை மணக்க நினைத்து
மறுத்தவளை அமிலம் ஊற்றி கொல்வதா ?
பொறுப்பில்லாத சுதந்திரம்
நண்பர்களோடு கூட்டு சேர்ந்து
ஊர்முழுக்க வம்பிழுத்து
பெற்றவர்களுக்கு சுமையாய் இருப்பதா?
இளமை கலாசாரம்
பார்களில் பந்தியிட்டு
அப்பன் சேர்த்த காசையெல்லாம்
தண்ணீராய் கரைப்பதா ?
புது புதிதாய் உடைகள் மாற்றி
புது வண்டியும் ஒன்று வாங்கி
வேகமாய் பயணம் செய்து
விபத்தில் மடிவதா ?
மிதவாதம் அதை மறந்து
தீவிரவாதம் அதை நாடி
ரத்தவெறியால் மக்களை கொன்று
அதோடு தானும் மடிவதா ?
கல்வி பயிலும் வயதினிலே
கலவி பயின்று வெறிபிடித்து
பொம்மைகள்போல் பெண்ணை நினைத்து
கற்பழித்து கொல்வதா?
எது ஆண்மை
ஆண்மையின் வீரம் அழிவதில் இல்லை
ஆண்மையின் பலம் அழிப்பதில் இல்லை
ஆண்மையின் வெற்றி பறிப்பதில் இல்லை
ஆண்மையின் அர்த்தம் அத்துமீறல் இல்லை ?
ஆண்மை என்பது பாதுகாப்பு
ஆண்மை என்பது காவல்
ஆண்மை என்பது சமூக அங்கீகாரம்
ஒட்டுமொத்தமாய் ஆண்மை என்பது
காக்கும் கடவுளுக்கு சமம் !
அந்தகால வரலாறுகள் முதல்
இந்தகால சினிமா வரை
பெண்மை காத்தவர்களே
சிறந்த ஆண்கள் !
இனியாவது சிந்தனை மாற்றி
ஆண்மை என்பதற்கு அர்தம்கற்று
மண்ணை காத்த பெண்மையை
போற்றுவோம் !
ஆண்மை என்பது
பெண்மை போற்றுதலும்
பெண்மை காத்தலும்
மொத்தத்தில் மனிதம் வாழ்வித்தலுமே ஆண்மை !
– அம்முக்குட்டி @ eluthu.com
(புதுவையில் அம்மன் சிலையின் தனங்கள் மீது காலை வைத்து போஸ் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சமீபத்தில் சிறையிலிருந்து விடுதலையான ஒரு வக்கிரப்புத்திக்காரனை கடவுள் மறுப்பு இயக்கத்தினர் மாலை மரியாதையுடன் வரவேற்றதை பார்க்க நேர்ந்தது. எது ஆண்மை என்பதை அவர்கள் மட்டுமல்ல… அனைவரும் உணரவேண்டும். அதற்காகவே நாம் படித்த இந்த அற்புதமான கவிதை இங்கு பகிரப்பட்டுள்ளது!)
3) மாடும், மனநோயாளியும்!
என் நண்பருக்கு இரண்டு சந்தேகங்கள் இருந்தன. ஒன்று, யாரும் தீவனம் போட்டு வளர்க்காத கோயில் மாடு கொழுகொழுவென்று பார்க்கவே பயங்கர திடமாக இருக்கிறதே! ஆனால், வீட்டில் கட்டிப் போட்டு வளர்க்கும் மாடு என்னதான் தீவனம் போட்டாலும், எதையோ இழந்தது போல் சொங்கி போய் நிற்கிறதே! இது ஏன்? இரண்டாவது சந்தேகம், ரோடுகளில் திரியும் மனநோயாளிகள் பலர் இரைச்சலிலும் கூட தேவலோகத்தில் இருப்பது போல் அசந்து ரோட்டோர பிளாட்பாரங்களில் தூங்குகிறார்களே! அது எப்படி சாத்தியமாகிறது? இது தான் அந்த சந்தேகங்கள்.
இந்த கேள்வி இரண்டுக்கும் ஒரு மனநல நிபுணரிடம் விடை கேட்ட போது அவர் சொன்னது ஆச்சரியமானது.
“மேற்சொன்ன மாடும், மனநோயாளியும் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை. இந்த மாடும், மனநோயாளியும் பெரிதாக சிந்திப்பதில்லை. ஆனால் கட்டி வைத்த மாடு தனக்கு எப்போது தீவனம் கிடைக்கும் என்றே சிந்திக்கிறது? அது காலார நடக்க வேண்டும் என்று நினைத்தாலும் மனிதன் போட்ட மூக்கணாங்கயிறு அதற்கு அனுமதிப்பதில்லை. ஆக, வீட்டில் கட்டி வைத்த மாடு தனது எண்ணத்தை எல்லாம் அடக்கிக் கொண்டு ஒரே இடத்தில் நிற்க வேண்டியது தான். முளை குச்சியில் கட்டி வைத்த மாடு தான் தின்றதை செரிப்பதற்குள் போதும்போதுமென்றாகி விடுகிறது. பிறகு வயிற்று உப்புசம், கழிச்சல் என்று மனிதனால் மாடும் அவஸ்தைப்படுகிறது.
மனநோயாளி விடயத்துக்கு வருவோம். மனநோயாளிக்கு இந்த உலகத்தில் ரூபாய் நோட்டை பற்றி எதுவும் தெரியாது. அதனால், பெரிதாக கற்பனைக் கோட்டைகள் இருப்பதில்லை. பசித்தால் மட்டுமே சாப்பாடை தேடுவதும், அது கிடைக்காவிட்டால் கூட அதை பெரிதாக்காமல் தூங்கிவிடுவதும் இயற்கையானது.
ஆக, நாம் சொல்லும் விரதங்களை எல்லாம் இந்த மனநோயாளி எதார்த்தமாகவே இருந்து விடுவதால் பெரிதாக நோயும் இல்லை. இது போல் ஆசைகளும், நிர்ப்பந்தங்களும் பெரிதாக இல்லாத காரணத்தால் எளிதாக தூக்கம் வந்து விடுகிறது. ஆக..அவர்கள் ரோட்டோரத்தில் படுத்தாலும், மேட்டில் படுத்தாலும் தேவலோகம் தான்!” என்றார்.
என்ன ஒரு விளக்கம் பாருங்கள்!!
– தமிழ் உழவன் @ greenindiafoundation.blogspot.in
4) சிறிய விஷயங்களுக்குக் கூட நீங்கள் ‘டென்ஷன்’ ஆகிறீர்களா?
சிறிய விஷயங்களுக்குக் கூட நீங்கள் ‘டென்ஷன்’ ஆகிறீர்களா? பிரச்சினையை சமாளிக்கத் தெரியாமல் அடிக்கடி சத்தம் போடுபவரா? ரசத்தில் உப்பு குறைவாக இருந்தாலும் எரிச்சல் அடைபவரா?
இப்படி எதற்க்கெடுத்தாலும், ‘சுருக்’கென கோபப்படும் நபர் என்றால் முதலில் அவற்றை கைவிட முயற்சி எடுங்கள். இல்லாவிட்டால் சிறு வயதில்கூட `ஹார்ட் அட்டாக்’ வரும் அபாயம் உள்ளது.
அமைதியாக செயல்படுபவர்களுக்கு பொதுவாகவே எந்த உடல் பாதிப்பும் வருவதில்லை. அவர்களின் உணவு, பழக்க வழக்கங்களில் மாற்றம் இருந்தால் மட்டுமே பாதிப்பு ஏற்படும். ஆனால் எதற்கெடுத்தாலும் கோபப்படுவோருக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, பல நோய்களுக்கு அது திறவுகோலாகிறது. இளைய தலைமுறையினருக்கு அதிகளவில் இப்போது மன அழுத்தம் ஏற்படுவதாக தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் இளந்தலைமுறையினர் மன அழுத்தத்தை தவிர்த்து மகிழ்ச்சிடன் வாழ முன்வர வேண்டும்.
உடல் எடை அதிகமாக இருக்கலாம்; ரத்தக் அழுத்தம் இருக்கலாம்; மது பழக்கமும் கூட ஒருவருக்கு இருக்கக்கூடும். ஆனால் அவற்றில் எல்லாம் வராத மாரடைப்பு, மன அழுத்தத்தால் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. ஆத்திரப்படுபவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும்போது, அவர்கள் என்ன தான் ஆரோக்கியமாக இருந்தாலும், ‘சி-ரியாக்திவ்’ ப்ரோட்டீன் என்ற ஒரு ரசாயனம் உருவாகிறது. அது தான் ஆபத்தானது. ரத்தக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்பு வர அது தான் காரணமாகிறது. மாரடைப்பில் இறப்போரில் 50% பேர், இந்த வகை பாதிப்பால் தான் இறக்கின்றனர்.
போக்குவரத்து நெரிசலில் சிக்கும்போது எரிச்சல்படுவது, ரயில் முன்பதிவு செய்யும்போது ‘உச்ச்…’ கொட்டுவது, மனைவியிடம் சண்டை போடும்போது, கண் சிவப்பது, ஆபீஸில் பாஸ் ஏதாவது சொல்லிவிட்டால், தவறை திருத்திக்கொள்ளாமல் புலம்புவது போன்றவையும் மன அழுத்தத்துக்கு அறிகுறி. எல்லாவற்றையும் திட்டமிட்டு அமைதியாக செயல்பட்டால், இருதய பாதிப்பே வராது” என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
– முன்பு எப்பொழுதோ நாளிதழில் படித்தது இது.
5) ஒரு குடும்பப் பெண் கணவனிடம் எப்படியிருக்க வேண்டும்?
ஒரு குடும்பப் பெண் கணவனிடம் எப்படியிருக்க வேண்டுமென்று நீதி சாஸ்திரம் கூறுகிறது தெரியுமா?
கார்யேஷ§ தாசீ கரணேஷ§ மந்த்ரீ
ரூபேஷ§ லக்ஷ்மீ க்ஷமா தரித்ரீ
ஸ்நேஹே ச மாதா சயனேது வேஸ்யா
ஷட்தர்ம யுக்தா குலதர்ம பத்னீ
இதன் பொருள் : பணிவிடை செய்வதில் வேலைக்காரியாகவும், ஆலோசனை கூறுவதில் அமைச்சராகவும், அழகில் லக்ஷ்மியாகவும், பொறுமையில் பூமாதேவியாகவும், பள்ளியரையில் வேசியாகவும், விளங்குபவளே குலப் பெண்ணாவாள். இப்படி உலகில் குடும்பப் பெண் கணவனோடு இரு சரீரங்களுடன் ஒரு மனத்துடன் வாழ வேண்டும்.
– மஹா பெரியவா @ தெய்வத்தின் குரல்
6) பக்தன் பாடலை கேட்க காலத்தை நீட்டித்த அன்னை!
‘மருதமலை மாமணியே முருகைய்யா’ பாடல் புகழ் மதுரை சோமு அவர்கள் இறைப்பற்றாளர் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், அதிலும் முழுமையான ஈடுபாடு கொண்டவர். ஒரு முறை திருக்கடையூர் அபிராமியம்மன் கோவிலுக்கு போயிருக்கிறார். கோவிலினுடைய தலைமை குருக்கள் அவளை அடையாளம் தெரிந்துகொண்டார். அர்ச்சனைகள் பிரசாதம் வழங்கல்கள் எல்லாம் முடிந்தது. வயதான குருக்கள் சோமுவை பார்த்து, “சோமு பிள்ளைவாள், இன்னைக்கு அம்பாளுக்கு உகந்த தினம். அபிராமி அந்தாதி பாடுங்கள்!” என்று கேட்டுக்கொண்டார்.
சோமு, “நீங்க தான் எல்லா மந்திரங்களையும் சொல்லி அர்ச்சனை செய்துட்டீங்களே. நான் வேறு எதற்கு?” என்றார். உடனே குருக்கள், “அர்ச்சனை உங்கள் பேரில் உங்களுக்காக. நீங்கள் பாடப்போவது அம்பாளுக்காக. அந்த சாக்கில் நாங்களும் கேட்டுக்கொள்வதற்காக” என்றார்கள்.
சோமு வந்திருக்கிறார் என்று தெரிந்தவுடன், பல்வேறு சன்னதிகளில் நின்றுகொண்டிருந்த குருக்களும் ஒவ்வொருவராக அங்கு வர, சோமு பாட ஆரம்பித்தார்.
பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்
காத்தவளே பின்கரந்தவளே! கறைக் கண்டனுக்கு
மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!
மாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே!
என்று தொடங்கி விரிவாக மெய்மறந்து பாடினார். ‘அபிராமி அந்தாதி’ நான்கே வரிகள் கொண்ட சிறிய சிறிய பாடல். ஆனால் சோமு, அந்த நான்கே வரிகளை மிக விரிவாக பாவனையோடு பாடிக்கொண்டே போனாராம்.
நிறைய பாடல்கள். கண்களை மூடி அனுபவித்துக்கொண்டு பாடிக்கொண்டிருந்த சோமு, இடுப்பில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து தலையிலிருந்து முகமெல்லாம் வழிந்து கண்களைஎல்லாம் மூடிக்கொண்ட வியர்வையை துடைத்துவிட்டு எதிரே பார்த்தார். கோவில் அலுவலர்கள், கோவிலுக்கு வந்த பக்தர்கள் – கோவிலுக்கு உள்ளே சோமு பாடிக்கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டு கோவிலுக்கு வெளியே இருந்த கடைக்காரர்கள், பொது மக்கள், என பெரிய சபையே கூடிவிட்டதாம்.
பாடியது அத்தனையும் அபிராமியின் பெயரால் ஆன பாடல்கள் மட்டுமே. வேறு தெலுங்கு கீர்த்தனையோ, துக்கடாக்களோ கிடையாது.
ஒலிபெருக்கிக் கிடையாது. சுருதி சேர்க்க தம்புரா கிடையாது. ஆனால், இந்த இசை நிகழ்ச்சி ஒன்றரை மணி நேரத்திற்கும் மேல் நீடித்ததாம்.
– திருச்சி செல்வேந்திரன் @ ‘மகா கலைஞன் மதுரை சோமு’ சீதை பதிப்பகம்.
( சோமுவின் பாடல்களை மேலும் மேலும் கேட்க விரும்பிய அன்னை, யாருமறியா வண்ணம் காலத்தை நீட்டித்துவிட்டாள் போல! காலத்தை உருவாக்கும் பூரணமே அவள் தானே!!)
7) விளக்கை குளிரச் செய்வது எப்படி?
நாம் ஏற்கனவே நமது முந்தைய பதிவு ஒன்றில் விளக்கை குளிரச் செய்ய கல்கண்டை பயன்படுத்தவேண்டும் என்று கூறியிருப்போம். இதோ தற்போது அது பற்றி மேலும் சற்று விரிவான தகவல்.
“திருவிளக்குச் சுடரைப் பூவில் பாலைத் தொட்டு நாம் குளிரச் செய்யவேண்டும். அரிசியை விளக்கில் எண்ணெய் இருக்கும் எந்தப் பகுதியிலாவது முதலில் வைத்துவிட்டு, பிறகு பூவினால் சுடரைக் குளிரச் செய்யும் வழக்கமும் இருக்கிறது. வேங்கடாசலபதி பூஜையின்போது நெய் விளக்கு ஏற்றப்படுகிறது. அப்போது பூஜை முடிந்ததும் நெய் தீர்ந்து தானாகவே சுடரைக் குளிரச் செய்வதுண்டு. இவ்விதம் தானாகச் சுடரைக் குளிரச் செய்வதை, `சுவாமி மலை ஏறுகிறார்’ என்கிறார்கள். பூஜைக்குப் பயன்படுத்திய பூவினாலும் (நிர்மால்யம்) சுடரைக் குளிரச் செய்யலாம். குளிரச் செய்யப்பெற்ற தீபங்கள் தங்களுக்குள், `எனக்குப் பூ கொடுத்தார்கள், உனக்கு என்ன கொடுத்தார்கள்?’ என்று, ஒன்றை ஒன்று விசாரித்துக்கொள்கின்றன என்று ஒரு கதை சொல்வார்கள். இவையெல்லாம் திருவிளக்குச் சுடரை வாயினால் ஊதி அணைக்கக்கூடாது அல்லது வெறுங்கையினால் அணைப்பது கூடாது என்ற கருத்தை மக்கள் மனதில் பதியச் செய்வதற்காக எழுந்த கதை என்று நாம் கொள்ளலாம்.”
– தினகரன் | ஆன்மிகம்
8) ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம்?
******************************************************************************************
“ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம்?”
“என் பேச்சை என் மனைவி கேட்கனும்னு நினைச்சா அது ஆசை. மாமியாரும் கேட்கனும்னு நினைச்சா அது பேராசை!”
******************************************************************************************
மனைவி : “என்னங்க, மளிகை செலவு போன மாசம் இவ்வளவு ஆகியிருக்கு. எல்லாம் எங்கே போச்சு?”
கணவன் : “கண்ணாடி முன்னாடி போய் நின்னு பாரு. தெரியும்!”
******************************************************************************************
9) படித்ததில் பிடித்தது
ஒரு உண்மையில் சமாதானம் ஆகாமல் பல பொய்களால் சமாதானம் அடைபவள் மனைவி.
– twitter.com@kumarfaculty
“இத நீயா உடைச்ச?” எனக்கேட்டு குழந்தை “ஆமாம்” என்று உண்மையை சொன்னால் அடிக்காதீர்கள். பிறகு உண்மை பேசினால் அடிப்பார்கள் என பயந்து பொய் பேச பழகும்!
– twitter.com@bhuviii_
===============================================================================
ஒரு முக்கிய விஷயத்தை அனைவருக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்!
நம் தளத்தில் பதிவுகளின் இறுதியில் விருப்ப சந்தா குறித்த கோரிக்கை அளிக்கப்படுவது நீங்கள் அறிந்ததே. அது தவிர அவ்வப்போது நாம் செய்யக்கூடிய அறப்பணிகளுக்கும் உதவி கோரி அறிவிப்பு வெளியிடுகிறோம். அது குறித்து ஒரு சிறு விளக்கம்.
1) விருப்ப சந்தா
இது தான் நமது வாழ்வாதாரம். தளம் நடப்பது இதைக் கொண்டு தான். இதன் மூலம் தான் தளத்தின் நிர்வாக செலவுகள் செய்யப்படுகிறது. இதை அனைத்து வாசகர்களிடம் இருந்தும் – அவரவர் சக்திக்கு ஏற்ப – எதிர்பார்க்கிறோம். ஆனால் இதைக் கட்டாயப்படுத்த விரும்பவில்லை. பெயரைப் போலவே இது விருப்ப சந்தா. (VOLUNTARY SUBSCRIPTION).
நம் தளத்தின் நிர்வாகப் பணிகளில் உதவுவதே சிறந்த புண்ணிய காரியம் தான் என்றாலும் ‘விருப்ப சந்தா’ செலுத்தும் வாசகர்களுக்கு பிரதியுபகாரம் செய்யவேண்டி அதில் கிடைக்கும் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தை நூம்பல் கோவிலில் நடைபெறும் கோ-சம்ரட்சணத்திற்கு பயன்படுத்தப்படுகிறோம்.
2) சேவைகளில் உதவி வேண்டி விடுக்கும் கோரிக்கைகள்
இது அவ்வப்போது நாம் செய்யக்கூடிய, ஒப்புக்கொள்ளக்கூடிய அறப்பணிகளுக்கு. இதை நாம் அனைத்து வாசகர்களிடமிருந்தும் எதிர்பார்க்கவில்லை. அந்தந்த சேவைகளில் இணைய விருப்பமுடைய வாசகர்களிடமிருந்து தான் எதிர்பார்க்கிறோம். அவ்வளவே. செய்யும் சேவையானது செம்மையாக செய்ய இது துணை புரியும். இதில் கிடைக்கும் தொகையை வைத்து பிரதி மாதம் காசி விஸ்வநாதர் கோவிலில் கோ-சம்ரட்சணம் செய்யப்படுகிறது. (இது நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது.)
விருப்ப சந்தா என்பது அனைத்து வாசகர்களின் கடமை. சேவைகளில் உதவி என்பது அவரவர் சௌகரியம். இரண்டிற்கும் உதவ விரும்பினால் மிக்க மகிழ்ச்சி.
===============================================================================
உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
===============================================================================
Also check :
சாதனை என்பது சுலபமா? – கண்டதும் கேட்டதும் (5)
வள்ளலாரின் கடுக்கணை திருடிய திருடன் – கண்டதும் கேட்டதும் (4)
ஒரே நாளில் ஞானம் வருமா? – கண்டதும் கேட்டதும் (3)
‘நண்டுக்கு ஏற்பட்ட வருத்தம்!’ – கண்டதும் கேட்டதும் (2)
‘மெய்யெனில் மெய், பொய்யெனில் பொய்’ – கண்டதும் கேட்டதும் (1)
===============================================================================
[END]
நேற்று எதிர்பார்த்த பதிவு இன்று வந்ததில் மிக்க மகிழ்ச்சி.
ஒன்பது தலைப்பின் கீழ் உள்ள பதிவுகளும் அருமை .
”ஆண்மை ” என்பது பெண்மையைப் போற்றுதல் அருமையான வைர வரிகள்.
குடும்பப் பெண்ணுக்கான விளக்கம் நம் நடமாடும் தெய்வத்தின் குரலில் கேட்டது ”பளிச்’ என்று உள்ளது
மதுரை சோமுவைப் பற்றி தெரியாத தகவல் தந்து உள்ளீர்கள். நம் தளத்தில் அவரை பற்றிய பதிவை எதிர்பார்க்கிறேன்
விளக்கை குளிரச் செய்வது எல்லோருக்கும் பயனுள்ள தகவல்
ஒரு உண்மையில் சமாதானம் ஆகாமல் பொய்யினால் சமாதானம் ஆபவள் மனைவி என்பது உண்மை தான்
மொத்தத்தில் சூப்பர் பதிவு
நன்றி
உமா வெங்கட் ,
கண்டதும் கேட்டதும் தொகுப்பு மிகவும் அருமை…முதல் தகவலே சூப்பர். ஓக் மரமாக பொறுத்திருந்தால் தான் முடியும். ஆண்மை பற்றிய கவிதை …கண்கலங்க வைத்து விட்டது..ஒவ்வொரு தகவலும் தத்துவ முத்துக்கள். மாடும் மனநோயாளியும் …விளக்கம் அருமை..
மதுரை சோமு அவர்களை பற்றிய தகவல் எனக்கு புதிது..rightmantra தளம் மூலமாக தான் தேவர் அய்யா, மதுரை சோமு என புதிது புதிதாய் அறிய,அனுபவிக்க முடிகிறது..இவை எல்லாம் “Google ” தேடலிலும் கிடைக்காத தகவல்கள்..
உண்மையை சொன்னால் அடிப்பார்கள் என்ற மனப்பாங்கு வரும் சூழலை tweet மூலம் சொன்னது மிக சரியே..
கடைசியில் நச்சென்ற ஒரு வண்ணப்படம்..படம் உதிர்க்கும் தத்துவம் இனிமை தான்.
தங்கள் உழைப்பு பதிவில் தெரிகிறது அண்ணா.
பல்சுவை பகுதியான இப்பதிவு சூப்பர்.
பவர் பாயிண்ட் மெசேஜ் excellent
நன்றி i
சுந்தர் ஜி
வணக்கம்
மிகவும் அருமையான பதிவு
நன்றி
என் கணவரிடம் இசை வகுப்பிற்கு சேர வருகிறவர்கள் எவ்வளவு நாள்களுக்குள் கற்றுக் கொள்ளலாம் என்பார்கள், அவர்களுக்கு சொல்லத் தகுந்த பதிலை அறியத் தந்துள்ளீர்கள்.
ஆசைக்கும் பேராசைக்கும் உள்ள வேறுபாடு சிரிக்க வைத்தது.
குழந்தைகள் உண்மை பேச நாம் தடையாக இருக்கக் கூடாதென குறிப்பிட்டுள்ளது சிறப்பு.
அனைத்து தகவல்களும் அருமை. மிக்க நன்றி.
வணக்கம் சுந்தர்.மிக அருமையான கண்டதும் கேட்டதும் பதிவு. கவிதை மிக அருமை. இவைஅனைத்தும் நினைவில் இருந்து எழதுவத அல்லது பார்த்த ,கேட்டவற்றை குறித்து வைத்து எழதுவத.சிறந்த தொகுப்பு .நன்றி
Power of Positivity, Wonderful. Same as Vilakku thathuvam also very good article.
Tension is the subject i need to attend to it now. Since I am going thro a hard phase in life, this aspect is also getting inbuilt unknowingly. Wanted to get rid of it. Please help us.