Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, December 6, 2024
Please specify the group
Home > Featured > தெருக்களுக்கு ‘நாயன்மார்கள்’ பெயர் – சேக்கிழார் பிறந்த பூமியில் ஒரு புரட்சி!

தெருக்களுக்கு ‘நாயன்மார்கள்’ பெயர் – சேக்கிழார் பிறந்த பூமியில் ஒரு புரட்சி!

print
மிழகத்தின் எந்த குடியிருப்பு பகுதியை நீங்கள எடுத்துக்கொண்டாலும் தெருக்களுக்கு பொதுவாக யார் பெயர் சூட்டப்பட்டிருக்கும் ? உங்கள் தெருவின் பெயர் என்ன என்று சற்று பாருங்களேன்…! விட்டில் பூச்சிகளாக வாழ்ந்து (?!) மறைந்த அரசியல் தலைவர்களின் பெயர்கள் (அ) அந்த இடத்தில் முன்னொரு காலத்தில் வாழ்ந்தவர்களின் பெயர்கள் (அ) அந்த லே-அவுட்டை ப்ரொமோட் செய்தவர்களின் சொந்தங்களின் (?!) பெயர்கள் (அ) சில நேரங்களில் தேச விடுதலைக்காக சிறை சென்ற தலைவர்கள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயர்கள் தான் பெரும்பாலும் இடம்பெற்றிருக்கும். (கடைசி மட்டும் வரவேற்கத்தக்கது!) ஆனால் சேக்கிழார் அவதரித்த கோவில் நகரமான குன்றத்தூரில் அதற்கு எல்லையாக விளங்குகின்ற சேக்கிழார் நகருக்கு செல்பவர்கள் அங்குள்ள தெருக்களின் பெயர்களை பார்த்தால் ஒரு கணம் பக்தி பரவசத்தில் மூழ்கிவிடுவர்.

kundrathur copy

காரணம், அதிபத்தர் தெரு, கணநாதர் தெரு, புகழ் சோழர் தெரு, திருநீலகண்டர் தெரு என்று நாயன்மார்கள் பெயர்கள் இங்கு தெருக்களுக்கு சூட்டப்பட்டிருக்கும். இதை செய்தது போதகுரு என்னும் பெரியவர். தற்போது 73 ஆம் அகவையில் உள்ள இவர், சுமார் 35-40 ஆண்டுகளுக்கு முன்னர் சேக்கிழார் நகரை அமைத்தபோது மேற்கொண்ட முயற்சிகளின் பலன் தான் இந்த பெயரெல்லாம். இல்லையெனில் விட்டில்பூச்சிகளின் பெயர்களை தான் இந்த தெருக்களுக்கு பார்க்க நேர்ந்திருக்கும்.

சைவ சமயத்தின் உயிர்நாடியாக விளங்கிக்கொண்டிருக்கும் பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழார் அவதரித்த அவரது சொந்த ஊரில், நாயன்மார்கள் பெயர்கள் தெருக்களில் இடம்பெறக் காரணமாக இருந்த திரு.போதகுரு அவர்களை இந்த காலகட்டத்தில் நினைவு கூர்ந்து அவரது வீட்டுக்கு சென்று அவரை கௌரவிக்க தமிழ்நாடு தெய்வச் சேக்கிழார் மன்றம் விரும்பியது.

இதையடுத்து ஏற்கனவே ஒரு விழாவில் நமக்கு அறிமுகமான தெய்வச் சேக்கிழார் மன்றத்தின் பொது செயலாளர் திரு.பார்த்திபன் (இவர் ஒரு தனி ரோல்-மாடல். இவர் யார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!) அவர்கள் நம்மை தொடர்புகொண்டு “இப்படி ஒரு தொண்டை (தெருக்களுக்கு நாயன்மார்கள் பெயரை சூட்டிய) ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்பே செய்து, குன்றத்தூருக்கு பெருமை சேர்த்திருக்கிறார். அவரை கௌரவிக்கப்போகிறோம். நீங்களும் மேற்படி எளிய நிகழ்ச்சிக்கு வந்திருந்து அதை உங்கள் தளத்திற்காக கவர் செய்து செய்தி வெளியிட்டு அன்னாரை கௌரவிக்கவேண்டும்” என்று நம்மை கேட்டுக்கொண்டார்.

தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட திருமுறைகள், திருப்புகழ், திவ்யபிரபந்தம், திருக்குறள் ஆகியவற்றை அழியாமல் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தொண்டர்களின் புகழை பரப்புவதே நமது வாழ்க்கையின் லட்சியமாக நாம் கொண்டுள்ளதால், அமுதம் அருந்த அழைப்பா… என்று வியந்து மேற்படி நிகழ்சியில் பங்கேற்று இட்ட பணியை செய்ய உறுதி பூண்டோம்.

sekkizhar nagar

குன்றத்தூருக்கே திலகமாக விளங்குகின்ற, சேக்கிழார் நகர் உருவாக காரணமாக இருந்த திரு.போதகுரு தற்போது இருப்பது ஒரு எளிமையான வீட்டில். போதகுரு அவர்களை அவரது இல்லத்தில் ஒரு நாள் காலை 7.30 மணியளவில் சந்தித்து அளவளாவினோம். (அவருடன் நாம் மேற்கொண்ட கருத்து பரிமாற்றங்கள் கீழே தரப்பட்டுள்ளது.)

சேக்கிழார் நகர் தெருக்களுக்கு நாயன்மார்கள் பெயர் ஏற்பட்டது எப்படி?

சுமார் 35-40 ஆண்டுகளுக்கு முன்னர், குன்றத்தூரில் உள்ள நாகேஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகம் ஆலயத்துக்கு வருவாய் ஆதாரங்களை பெருக்க வேண்டி கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் தரிசு நிலங்களை குடியிருப்புக்காக விற்க முடிவு செய்தது. நிறைய அமைப்புக்கள் இந்த நிலங்களை 2 ஏக்கர், 3 ஏக்கர் என்று வாங்கின. ஆனால், இவருக்கு மட்டும் சுமார் 14 ஏக்கர் ஒதுக்கப்பட்டது. காரணம் இவருக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தின் தன்மை. (விவசாயத்திற்கு கோவில் நிலங்கள் பயன்பட்டு வந்த நிலையில், பாசன வசதியில்லாததால் இந்த குறிப்பிட்ட 14 ஏக்கர் நிலத்தை மட்டும் யாரும் பயன்படுத்திக்கொள்ள முன்வரவில்லை. எனவே புதர் மண்டி ஒரே சவுக்கு தோப்புக்களாக இந்த பகுதி காட்சியளித்தது.) எனவே சிக்கல் மிகுந்த இந்த நிலத்தை இவரிடம் கொடுத்தால் இவர் அதை உரிய முறையில் ஏதேனும் செய்துகொள்வார் என்று இவருக்கு அந்த 14 ஏக்கர் நிலத்தை கொடுக்க முன்வந்தனர்.

sekkizhar nagar 4

sekkizhar nagar 1sekkizhar nagar 3
sekkizhar nagar 2sekkizhar nagar 9சங்கமாக பதிவு செய்தால் தான் நிலத்தை பெறமுடியும் என்பதால் ‘திருநாகேஸ்வரம் நெசவாளர் கூட்டுறவு வீட்டு மனை சங்கம்’ என்று ஒரு அமைப்பை துவக்கி அந்த அமைப்பின் பேரில் நிலத்தை பெற முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் அந்த நேரத்தில் அவ்வளவு பெரிய நிலத்தை வாங்க பணத்தை புரட்ட முடியாமல், குன்றத்தூர் நகர கூட்டுறவு வங்கியை அணுகி கடன் பெற்று நிலத்திற்கான தொகையை செலுத்தினார்.

இவருடன் சேர்ந்த நிலத்தை வாங்கியவர்கள் நிலத்தை பிரித்து தர விருப்பமின்றி அப்படியே தங்களுக்கு வைத்துக்கொள்ள, இவர் எந்த விதிமுறைகளையும் மீறாமல் முறைப்பட சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தை அணுகி, அவர்கள் கூறிய விதிமுறைகளின் படி தெருக்கள் மற்றும் பூங்கா இவற்றுக்காக போதிய இடங்களை ஒதுக்கி மனைகளை பிரித்து அதன் பின்னர் மாவட்ட ஆட்சியரைக் தொடர்பு கொண்டு அவரது மேற்பார்வையில் விலை நிர்ணயம் செய்து, மனைகளை அனைவருக்கும் பாரபட்சம் இன்றி ஒதுக்கினார்.அப்போது உதயமானது தான் சேக்கிழார் நகர்.

sekkizhar nagar 5
சேக்கிழார் நகரில் கட்டப்பட்டுள்ள பிள்ளையார் கோவில்

நகரை அமைத்தபோது தெருக்களுக்கு அரசியல் மற்றும் வட்டாரத்தில் பிரபலமாக இருக்கக்கூடிய தலைவர்கள் பெயர்களை வைக்கலாம் என்று ஆளாளுக்கு யோசனை தெரிவித்தார்கள். ஆனால், இவர் அந்த யோசனைகளை எல்லாம் நிராகரித்துவிட்டு, இன்று தோன்றி நாளை மறையக்கூடிய அரசியல்வாதிகளின் பெயர்களை தெருக்களுக்கு வைப்பதைவிட, நாயன்மார்களின் பெயர்களை வைக்கலாம் என்று முடிவு செய்து, பல நாயன்மார்களின் பெயர்களை தெருக்களுக்கு வைத்தார்.

சேக்கிழார் நகரில் பூங்காவுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட பூங்கா... இந்த ஒரு புகைப்படமே பல கதைகள் சொல்லுமே!
சேக்கிழார் நகரில் பூங்காவுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட பூங்கா… இந்த ஒரு புகைப்படமே பல கதைகள் சொல்லுமே!

இந்த பதிவுகளில் ஒரு சில வரிகளில் இந்த விபரத்தை நாம் தெரிவித்துவிட்டோம். ஆனால், போதகுரு மாதக்கணக்கில் பல இடங்களுக்கு, அரசு அலுவலகங்களுக்கு அலைந்து திரிந்து இந்த பணியை மேற்கொண்டார். அன்று அவர் அப்படி அலைந்து திரிந்து எடுத்த முயற்சிகளால் தான் இன்று நாயன்மார்கள் பெயர்களை சேக்கிழார் நகரில் பார்க்க முடிகிறது.

(பல பெயர் பலகைகள் சிதிலமடைந்துவிட்டன. சுவற்றில் எழுதப்பட்ட பெயர்கள் மட்டும் ஆங்காங்கே தப்பி பிழைத்திருக்கின்றன. விரைவில் புதிதாக இவை நிர்மாணிக்கப்படவிருக்கின்றன!)

sekkizhar nagar bodha guru 8

12 ஆம் நூற்றாண்டு வாக்கில் தொண்டை மண்டலத்தை ஆண்டு வந்த அநபாயச்சோழனின் மந்திரியாக குன்றத்தூர் என்ற தமிழகத்துக் கிராமத்தில் உழுதுண்டு வாழும் உயரிய குலத்தில் பிறந்தவர் அருண்மொழித்தேவர் என்ற சேக்கிழார். அரசன் இவரது திறனையும் அறிவையும் செயற்திறனையும் கண்டு மந்திரிப்பதவி தந்து சிறப்பித்து அவருக்கு ‘உத்தமசோழப் பல்லவராயர்’ என்ற விருதும் கொடுத்திருந்தான். இவ்வாறாக, அநபாயச் சோழனின் மந்திரியாக இவர் பதவி வகித்து வந்த காலத்தில் அநபாயன் சீவகசிந்தாமணியில் ஆழ்ந்து போயிருந்தான். அந்நூலும் உண்மையிலேயே தமிழ்ச்சுவை நிறைந்தது. மிகவும் இலக்கியச்சுவையுடையது. ஆனால் தன் கடமைகளை எல்லாம் விட்டுவிட்டு காமச்சுவை நிறைந்துள்ள ஒரு சமணகாவியத்தில் நாட்டரசன் மூழ்கியிருப்பதை சேக்கிழார் விரும்பவில்லை. எனவே, மந்திரிக்கான உரிமையுடனும் நட்புரிமையுடனும் உரிய வேளையில் தட்டிக்கேட்டு திருத்தவேண்டிய நிலைக்கு ஆளானார் சேக்கிழார்.

அரசனின் மதிமயக்கத்தைத் தீர்ப்பதற்காக சேக்கிழார் பெருமான் முயன்றார். சுந்தரமூர்த்திசுவாமிகள் அருளிச் செய்த திருத்தொண்டர் தொகையையும் அதன் பின் நம்பியாண்டார் நம்பி அடிகள் அருளிச் செய்த திருத்தொண்டர் திருவந்தாதியையும் முன்னிட்டுக் கொண்டு, தான் அறிந்த வகையில் மிகச்சிறப்பாக, அரசன் வியந்துபோய் பரமசைவனாக மாறும் வண்ணம், அறுபத்து மூன்று நாயன்மார்களின் கதைகளை அவனுக்கு ஓதினார்.

sekkizhar nagar bodha guru 7

கேட்டவன் வியந்தான். ‘ஆஹா.. இத்தனை அருமையான உண்மைச் சம்பவங்கள் நம் சைவத்தில் உண்டாகில் எவ்வளவு ஆச்சரியம்!’ என்று மனப்பூரிப்பு எய்தினான். அவனது வேண்டுகோளை ஏற்று சேக்கிழார் அவனுக்குச் சொன்ன கதைகளை இன்னும் விரிவாகவும், ஆய்வியல் ரீதியாகவும், தமிழகத்தில் நாயன்மார்கள் பிறந்த வாழ்ந்த பல இடங்களுக்கு செய்திகளை சேகரித்து சிதம்பரத்தலத்தில் உறைந்து எழுதிய பக்திக்காவியமே திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம்.

அந்த பெரிய புராணத்தில் வரக்கூடிய நாயன்மார்களின் பெயர்களையே இந்த தெருக்களுக்கு வைத்தால் நாளை யாரும் மாற்றமுடியாது என்று அந்த பெயர்களையே தெருக்களுக்கு வைத்துவிட்டார் திரு.போதகுரு.

sekkizhar nagar bodha guru 4

sekkizhar nagar bodha guru 5sekkizhar nagar bodha guru 6இப்போது இவரது ஆசை என்னவென்றால், இந்த சேக்கிழார் நகரில் இருக்கக்கூடிய தெருக்களில் உள்ள நாயன்மார்களது ஜெயந்தியை  ஒவ்வொரு மாதமும் வெகு விமரிசையாக திருவீதி உலா ஏற்பாடு செய்து கொண்டாடவேண்டும் என்பதே. பெயரை சூட்டிவிட்டால் மட்டும் போதாது… ஜெயந்தி உற்சவங்கள் ஏற்பாடு செய்து அவர்கள் திருமேனியை ஊர்வலமாக கொண்டு வரச் செய்தால் தான் இன்றைய தலைமுறையினருக்கு அவர்களை பற்றிய KNOWLEDGE ஏற்படும் என்றும் கூறுகிறார்.

தமக்கு சில இடங்களிலிருந்து ஒரு பெரிய தொகை வரவேண்டியுள்ளது என்றும் அது வந்தவுடன் இந்த உற்சவங்களை தொடங்கப்போவதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த ஆனி 1 முதல் தமது ஜாதகத்திற்கு யோகமான காலகட்டம் தொடங்குவதாகவும் அடுத்த மூன்றாண்டுகளுக்கு அது நீடிக்கும் என்றும் தமது நல்ல சிந்தனைகள் யாவும் நிறைவேறும் என்றும் தமது ஜாதகத்தில் கூறபட்டிருப்பதாகவும் அதற்கு பிள்ளையார் சுழி போடும் விதமாக தம்மை கௌரவிக்கும் வகையில் இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் தெரிவித்தார் திரு.போதகுரு.

தம்பதிகளை ஒன்றாக நிற்கவைத்து அவர்கள் காலில் வீழ்ந்து ஆசிபெற்றோம். அவரது துணைவியார் திருமதி.சரோஜா அம்மாள் அவர்களிடம் “உங்கள் ஆதரவு இல்லாமல் அவர் இந்த தொண்டை செய்திருக்க முடியாது. உங்களுக்கு தான் முதல் மரியாதை செய்யவேண்டும் அம்மா!” என்றோம்.

“ஆமா… நீங்கள் சொல்றது உண்மை தான். அப்போ எனக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. இவங்க குழந்தையையும் வீட்டையும் பார்த்துக்கிட்டதால நான் இந்த மாதிரி நாலு இடத்துக்கு போய் அலைஞ்சி திரிஞ்சி சேவை செய்ய முடிந்தது” என்றார்.

திரு.போதகுரு அவர்களுக்கு குன்றத்தூர் சேக்கிழார் மன்றம் சார்பாக அதன் தலைவர் திரு.பார்த்திபன் அவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். மேலும் அவருக்கு ‘கரு முதல் திரு வரை’ உள்ளிட்ட சைவ சமய நூல்களும் பரிசளிக்கப்பட்டன. சேக்கிழார் நகரை சேர்ந்த திரு.டி.சண்முகம் உடனிருந்தார்.

sekkizhar nagar bodha guru

எத்தனையோ தொண்டு இருந்தாலும் அவற்றுக்கெல்லாம் சிகரம் எது தெரியுமா? சிவத்தொண்டு தான். சிவதொண்டை விட உயர்ந்தது எதுவும் இல்லை.

ஆனால் அதனினும் உயர்ந்தது  எது தெரியுமா? அவன் அடியார்களுக்கு செய்யும் தொண்டு தான்!!

அந்த வகையில் எடுத்துக்காட்டு வாழ்க்கை வாழ்ந்து இறைவனுடன் இரண்டறக்கலந்த நாயன்மார்களின் புகழை கட்டிக் காக்க பாடுபடும் ஒரு பெரியவரைப் பற்றி  பதிவு செய்ய வாய்ப்பு கிடைத்தது நாம் செய்த பாக்கியம்!!!

sabapathi

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

பெரிய புராணத்தின் முதல் பாடலான இது சாதாரண பாடல் அல்ல. இறைவனே அடியெடுத்துக் கொடுத்த பாடல். வள்ளலார் இந்த ஒரு பாடல் பற்றியே மாதக்கணக்கில் சொற்பொழிவு செய்திருக்கிறாராம்!

===============================================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

===============================================================================

Also check for similar articles :

கடமைக்கு குறைவில்லை தொண்டுக்கும் ஓய்வில்லை – அதிசய மனிதர் சிவ.ஜனார்த்தனம்!!

“கண் போனால் என்ன? கால் போனால் என்ன?” – தேவாரத் திருப்பணியில் அசத்தும் ஞானப்பிரகாசம்!

உருகிய பக்தை… வீட்டுக்கே வந்த நடராஜர்! உண்மை சம்பவம்!!

திருமுறை, திருப்புகழ் விளக்கை அனைவருக்கும் ஒளிரச் செய்யும் ஓர் அன்னை!

ஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்!!

‘என்னை தாலாட்ட வருவாரோ?’ ஏழுமலைக்காக தினமும் ஏங்கும் வேதபுரீஸ்வரர்!

‘மாணவர்கள் மனதில் மாணிக்கவாசகர்’ – திவாகரும் அவரது திருவாசகத் தொண்டும்!

தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!

===============================================================================

கலியின் தீமை, ஊழின் கடுமை நீக்கும் அருட்கொடை = பன்னிரு திருமுறை!

கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்

எதுக்கு இத்தனை பதிகங்கள்? ஒரே பதிகம் / ஸ்லோகம் அத்தனை பலனையும் தராதா??

திருநாவுக்கரசர் பதிகம் பாடி புரிந்த அற்புதங்கள்!

Thalaivar is always great!

தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!

பன்னிரு திருமுறைகளின் பெருமையும் அதை மீட்டுத் தந்த நம்பியாண்டார் நம்பியும்!

களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!

‘திருவாசகம்’ என்னும் LIFESTYLE MANTRA – கருவுற்றிருக்கும் பெண்கள் கவனத்திற்கு!

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!

அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!

உணவும், உறக்கமும், நிம்மதியும், செல்வமும் நல்கி இறுதியில் சிவபதம் அருளும் பதிகம்!

பணத்தை தேடி வரவழைத்த பதிகம்! மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

வள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!

===============================================================================

[END]

9 thoughts on “தெருக்களுக்கு ‘நாயன்மார்கள்’ பெயர் – சேக்கிழார் பிறந்த பூமியில் ஒரு புரட்சி!

  1. Sundar Sir

    The Services rendered by Sri Podaguru is simply super. May Lord Shiva bless him for his best services.

    Thank you very for publishing such good article. Keep it up.

    Regards

    S. Chandrasekaran

  2. இந்த பதிவினை பதிவு செய்தது தங்களுக்கு பாக்கியம் என்றால், அதனை படிக்கும் நாங்களும் மிக பெரிய பாக்கியம் செய்தவர்கள் என்றால் மிகையல்ல.

    போற்றத்தக்க தங்களின் இந்த பணி மேன்மேலும் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்

    நன்றி

  3. டியர் சுந்தர்,

    அறுபத்து மூன்று நாயன்மார்கள் சரித்திரங்களை எத்தனை முறை கேட்டாலும் எனக்கு சலிக்காது. அவர்கள் பெயரிலேயே வீதிகளின் பெயர் குன்றத்தூரில் இருப்பது மிகவும் நன்று. இதற்காக வித்திட்ட திரு. போதகுரு அவர்களுக்கு என் பணிவு கலந்த வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற விபரங்களை தாங்கள் தேடி எங்களுக்கு அளிப்பதால் தங்களுக்கும் என் நன்றி.

  4. Namasthe Shri Sundar Sir
    Thank you from the bottom of my heart for letting us know about Shri Bodaguru swamigal. But for your blog, there is no way that I could learn about this periyavar.

    I think that perhaps, the Sekkizhar swamigal took a rebirth as Shri Boda Guru to remind us about the 63 Nayanmargal. My humble namaskarams to this periyavar.
    Can you please write an article about the incidence when Lord Shiva suggested the first line of this poem “ulagellam”
    Mahaperiyava suggested to a devotee to read Thirumurugatrupadai. I have a humble request for you. If time permits, could you please write an article about the greatness (mahimai) of Thirumurugatrupadai.
    Thanks with regards
    Sakuntala

  5. வணக்கம் சுந்தர்.நல் முத்துகள் இறை அருளால் உங்கள் கண்ணில் படுகின்றன. திரு போத குரு அவர்களின் எண்ணம் நிறைவேற நீலகண்டனும் உமையும் ஆசி கூறட்டும். இந்த நல்ல பதிவுக்கு உங்கள்கு கோடி நன்றிகள்.

  6. திரு போத குரு அவர்களுக்கு என் சிரம் தாழ்த்த வணக்கங்கள். அவரை நம் தளத்திற்கு அறிமுக படுத்தியதற்கு மிக்க நன்றி தங்களுக்கு.

    நாயன்மார்கள் பெயரில் தெருக்கள் நம் குன்றத்தூரில் இருக்கிறது என்றால் குன்றத்தூருக்கு எவ்வளவு பெருமை. இந்த பெருமைக்குரிய சான்றோரை பேட்டி எடுத்து பதிவாக போட்டு நம் தளத்தை புனிதப் படுத்தி விட்டீர்கள் .

    இதே போல் பல சான்றோர்களை பற்றி நம் தளம் வாயிலாக அறிந்து கொள்ள ஆவலாக உள்ளோம்.

    அடியாருக்கு அடியாரை பேட்டி எடுத்தமைக்கு வாழ்த்துக்கள்

    வாழ்க………… வளமுடன்

    நன்றி
    உமா வெங்கட்

  7. நடராஜர் திருவுருவம் நெஞ்சில் நிறைந்தது. நாயன்மார்களை நினைவு கூர்ந்து, அவர்களின் திருநாமங்களை சாலைகளுக்குச் சூட்டியதோடு, அவர்களின் விழாவையும் முன்னெடுத்து நடத்தி, சைவத்தின் பெருமையை நிலைநாட்ட இருக்கும் போதகுரு அவர்களின் திருவடிக்கு எனது வந்தனங்கள். இவ்வடியாரை அறிமுகப்படுத்திய தங்களுக்கும் நன்றிகள்.

  8. மிகவும் அரிய செய்தி இது..குன்றத்தூரின் பெருமைகளில் இதுவும் ஒன்றாகும்.அடுத்தமுறை யாராவது “குன்றத்தூர்” பற்றி கூறினால்,நாம் தயங்காமல் இந்த செய்தியை பகிர வேண்டும்.
    திரு போதகுரு அய்யாவின் பாதம் பணிகின்றோம். போதகுரு அய்யா அவர்கள் நம் இருள் நீக்கி ஒளி ஏற்ற வந்த போதனை குரு என்றால் அது சால பொருந்தும்.விரைவில் நம் தள அன்பர்கள் சேக்கிழார் நகரில் “திருவீதி உலா” கண்டு, தரிசித்திட , ஈசன் அருள் புரிவாராக.

    இந்த பதிவை படித்து, இன்புற்றது யாம் செய்த பாக்கியம். நன்றி அண்ணா..

    தென்னாடுடைய சிவனே போற்றி.
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *