இமயம் விட்டு பொதிகை நாடி தவமியற்ற வந்த ஸ்ரீ அகத்திய மாமுனிவர் இந்த ஆலயத்துக்கு வந்து தங்கி சுயம்பு மூர்த்தியான சிவபெருமானை வழிபட்டுள்ளார். அகத்திய முனிவர் வழிப்பட்டதனால் இங்குள்ள இறைவன் ஸ்ரீ அகத்தீஸ்வரர் என்ற பெயர் கொண்டு அருள்பாலிக்கிறார். அம்பாள் பெயர் ஆனந்தவல்லி.
போரில் கையை இழந்த மன்னன் ஒருவன் இங்குள்ள இறைவனை வழிபாட்டு கையை மீண்டும் பெற்றதினால், ‘ஊனம் நீக்கும் ஈஸ்வரன்’ என்ற பெயரும் இவருக்கு உண்டு. இந்த ஆலயத்தில் உள்ள லிங்கத்தின் திருமேனி, பொன் போல ஒளிரும் தன்மையுடையதால் ‘பொன்மேனி ஈஸ்வரர்’ என்ற திருநாமமும் இவருக்கு உண்டு.
காஞ்சி மகா பெரியவரும் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஆலயத்திற்கு வருகை தந்து தங்கி இறைவனை பூஜித்துவிட்டு சென்றதாக, கடந்த 03/12/2014 அன்று இந்த ஆலயத்திற்கு வருகை தந்த ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் கூறியருளினார். இவ்வளவு பழமையும் பெருமையும் உடைய இந்த ஆலயம், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் ஆசியிலும், மேற்கு மாம்பலம் முருகாஸ்ரமம் ஸ்ரீ சங்கரானந்தா ஸ்வாமிகள் ஆசியிலும் வழிகாட்டுதலிலும் மீண்டும் புதுப் பொலிவை பெற்று குடமுழுக்கை கண்டு இன்று பல்லாயிரக்கனக்கான பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து இகராபார சுகங்களை சர்வ ரோக நிவாரணத்தையும் பெற்று வருகிறார்கள். இங்கு நவக்கிரக தேவைதைகள் தத்தங்கள் சக்திகளுடன் அமைந்துள்ளதால் பரிகாரம் செய்வதற்கு ஏற்ற தலமாக விளங்குகிறது.
இறைவன் கருணையாலும், பெரியவர்கள் வழி காட்டுதலாலும் வரும் ஜுன் 21 தேதி ஞாயிறு அன்று மேற்படி நமது நூம்பல் அகத்தீஸ்வரர் சிவ ஆலயத்தில் உலக நன்மைக்காக, அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ, நோய் மற்றும் இதர பிணிகளில் இருந்து விடுபட மஹா ம்ருத்ஞ்சய வேள்வி சித்தர்கள் முறைப்படி நடைபெற உள்ளது. இதை நம் தள வாசகரும் முகப்பேரை சேர்ந்தவருமான நண்பர் திரு.ஸ்ரீராம் அவர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்.
அதிகாலை 4.00 மணிக்கு ஹோமம் துவங்குகிறது. நண்பகல் 11.30 மணிக்கு பூர்ணஹாகுதி. 12.00 மணிக்கு அபிஷேகம். 1.00 மணிக்கு அன்னதானம் நடைபெறும்.
இதில் பக்தர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தாருடன் கலந்து கொள்ள அன்புடன் வேண்டி கொள்கிறோம். பக்தர்கள் தங்கள் கைகளினால் வேள்வியில் பொருட்களை அக்னியில் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவே இந்த வேள்வியின் சிறப்பு.
குறிப்பு: இந்த வேள்வியில் கலந்துகொள்ள கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
கோவில் முகவரி : அருள்மிகு.ஆனந்தவள்ளி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவில், நூம்பல், சென்னை – 77. (வேலப்பன்சாவடி அருகே). தொடர்பு எண் : 9840123464
வணக்கம் சுந்தர்.இந்த நல்ல விஷயத்தை ஏற்பாடு செய்த திரு ஸ்ரீராம் அவர்களக்கு மிக்க நன்றி நம் தமிழ்நாடு முனேரவும் வேண்டிகொளுங்கள்.உமையும் ,உமையொருபாகனும் ,குறுமுனியும் ,எல்லோருக்கும் ஆசி கூறட்டும் .ஓம் நமசிவாயா. நன்றி
மிகவும் புராதனக் கோயிலான நூம்பல் கோயில் பற்றி தங்கள் தளம் வாயிலாக அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.
திரு ஸ்ரீ ராம் அவர்கள் ஏற்பாடு செய்து இருக்கும் மிருத்யுஞ்ச வேள்வி வெகு சிறப்பாக நடைபெற நம் அம்மை அப்பன் அருள் புரிய வேண்டும்.
திரு ஸ்ரீ ராம் அவர்களுக்கு எமது வாழ்த்துக்களும் வணக்கங்களும்
இங்கு நடைபெறும் வேள்வியின் மூலம் நம் தீவினைகள் கலையட்டும்.
பசுவும், கன்றும் அழகு;
ஓம் நாம சிவாய
நன்றி
உமா வெங்கட்
வணக்கம்…….. வேள்வி பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி……….வேள்வி சிறக்க எங்கள் வாழ்த்துக்கள்……… வேள்வியில் கலந்து கொள்ள அகத்தீஸ்வரர் அருள வேண்டும்……….
மகா பெரியவின் அனுக்ரஹம் பெற்ற இந்த ஆலயத்தில், இந்த சிறப்பு வேள்வி,பூஜை, அபிஷேகம் மற்றும் அன்னதானம் என்று விமரிசையாக செய்துள்ள நமது வாசக நண்பர் ஸ்ரீராம் அவர்கள் பாராட்டுக்குரியவர்
கலந்து கொள்ள நாம் சென்னையில் இல்லையே என்று வருத்தமாக உள்ளது.
அடுத்த முறை சென்னை வரும்போது பொன்மேனியாரின் தரிசனம் கை கூட வேண்டும்
புதியதோர் ஆலயம் பற்றி தெரிந்து கொண்டேன். காண கிடைக்காத பொக்கிஷம் என்று தான் சொல்ல வேண்டும். வண்ண படங்கள் என்னை விரைவில் தரிசனம் பெற தூண்டுகிறது. வேள்வி ஏற்பாடு செய்த ஸ்ரீராம் அய்யா அவர்களுக்கு நன்றிகள் பற்பல.
சர்வதோஷ நிவர்த்தித் தலமாக விளங்கும் நூம்பல் அகதீஸ்வரரை
ஒருமுறையேனும் சென்று தரிசிக்க வேண்டும்.
ஓம் அகதீசாய நமஹ.
குருவடி பொற்றாள் சரண் சரணம்
கும்ப முனியே சரண் சரணம்
திருவடி நாத சரண் சரணம்
சித்தர்களின் அருளே சரண் சரணம்
அருள் வடிவானாய் சரண் சரணம்
அமரர்கள் கோவே சரண் சரணம்
சமுசயந்த் தீர்த்தாய் சரண் சரணம்
ஒதிதருள்வாய் சரண் சரணம்
உண்மை பொருளே சரண் சரணம்
அகத்தீசனே சரண் சரணம்..
அகத்தீசனே சரண் சரணம்..
அகத்தீசனே சரண் சரணம்..