Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, July 16, 2024
Please specify the group
Home > Featured > அன்னையின் ஆயுளை நீட்டித்த அருட்கடல்! RIGHTMANTRA PRAYER CLUB

அன்னையின் ஆயுளை நீட்டித்த அருட்கடல்! RIGHTMANTRA PRAYER CLUB

print
சென்னையை அடுத்துள்ள போரூரைச் சேர்ந்தவர் திருமதி.வத்சலா வேணுகோபால். வயது 58. சென்ற வாரம் ஒரு நாள் இரவு, சுமார் 10.00 மணியளவில் திடீரெனெ “அம்மா… நெஞ்சுவலிக்குதே…” என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தவர், அப்படியே மூர்ச்சையாகிவிட்டார். என்னவோ ஏதோ என்று பதறிப்போன பிள்ளைகள், அவரை உடனே வளசரவாக்கத்தில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவருக்கு பரிசோதனை நடந்தபோது, பிள்ளைகள் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தனர். ஏதோ கேட்கப் போய் ஏதோ பதில் வர, அவர்களுக்கும் அங்கு பணியிலிருந்த ஒரு மூத்த டாக்டருக்கும் வாக்குவாதம் மூண்டது.

Guru ragavendhra

“உங்க அம்மாவை அமெரிக்கா கொண்டு போனாலும் காப்பாத்த முடியாது… முதல்ல இங்கேர்ந்து டிஸ்சார்ஜ் பண்ணிக் கூட்டிட்டு போங்க….” என்று முகத்திலடித்தாற்போல கூறிவிட, செய்வதறியாது தவித்த இவர்கள் உடனே வடபழனியில் உள்ள சூரியா மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஆஞ்சியோகிராம் நடைபெற்றது.

இது நடந்தபோது நள்ளிரவு 1.00 மணி.

“உங்கம்மாவை அமெரிக்கா போனாலும் காப்பாத்தமுடியாது…”

“உங்கம்மாவை அமெரிக்கா போனாலும் காப்பாத்தமுடியாது…”

டாக்டரின் வார்த்தைகள் இரண்டு பிள்ளைகள் மனதிலும் எதிரொலித்துக்கொண்டிருந்தன.

மூத்த மகன் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் தீவிர பக்தர். அடிக்கடி மந்த்ராலயம் செல்பவர். இங்கே சென்னையில் உள்ள சில பிருந்தாவனங்களுக்கும் வருடக்கணக்காக அடிக்கடி சென்று வரும் வழக்கமுடையவர். என்ன தோன்றியதோ உடனே ஒரு பைக்கை எடுத்துக்கொண்டு தாம் அடிக்கடி செல்லும் கோடம்பாக்கம்   ராகவேந்திரர் பிருந்தாவனம் விரைந்தார். (ராம் தியேட்டர் எதிரே உள்ள தெருவின் கோடியில் அமைந்துள்ளது இந்த பிருந்தாவனம்!)

அங்கு சென்று பூட்டப்பட்ட பிருந்தாவனத்தின் முன் அமர்ந்தவர்…. குருராஜர் முன்பு கண்ணீர் உகுத்தார்.

“சுவாமி… என் அம்மாவை எப்படியாவது இன்னும் ஒரு 15 வருடம் காப்பாற்றி கொடுத்துவிடுங்கள். அது போதும். வேறு எதுவும் நான் கேட்கமாட்டேன்” என்றார். அப்படியே சுமார் 10 நிமிடம் தியானத்தில் ஆழ்ந்தவர் அதன் பிறகு மீண்டும் சூரியா மருத்துவமனைக்கு விரைந்தார்.

அங்கு டாக்டர், “நாங்க ஒரு அடைப்பை சரி செஞ்சிட்டோம். மீதியை அப்பல்லோவுல தான் முடியும். உடனே அப்பல்லோவில் அட்மிட் பண்ணிடுங்க” என்றார்.

இதைதொடர்ந்து மறுநாள் மதியம் சுமார் 3.00 மணியளவில், கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ இருதயநோய் சிறப்பு சிகிச்சை மையத்தில் அட்மிட் செய்யப்பட்டு அங்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. பின்னர் சிகிச்சை தரப்பட்டது.

இரண்டு நாள் இறுதியில், அப்பல்லோவில், “இனி நீங்க சூரியாவுலேயே உங்க ட்ரீட்மெண்ட்டை கண்டின்யூ பண்ணிக்கலாம். நாலஞ்சு நாள் கழிச்சி மறுபடியும் செக்கப்புக்கு போங்க…..” என்று கூறி டிஸ்சார்ஜ் செய்தனர்.

பின்னர் வீட்டுக்கு திரும்பினார் வத்சலா அம்மாள்.

Sukumaranநான்கைந்து நாள் கழித்து மீண்டும் சூரியா மருத்துவமனைக்கு வந்தபோது திருமதி.வத்சலாவை பரிசோதித்த சூரியா மருத்துவமனையின் இதய நோய் பிரிவு தலைமை மருத்துவர் திரு.ராஜராஜன், அவரை முழுமையாக பரிசோதித்த பிறகு மகன்கள் இருவரையும் அழைத்து, குறிப்பாக மூத்த மகனிடம், “இனி உங்க அம்மாவுக்கு 15 வருஷத்துக்கு பயப்படுறதுக்கு ஒன்னுமேயில்லை. எல்லாம் நார்மலாயிருக்கு!” என்றாரே பார்க்கலாம்… இவர் அந்த இடத்திலேயே உணர்ச்சி மிகுந்து “குரு ராகவேந்திரா…” என்று கத்தியே விட்டாராம்.

ராயரிடம் தனது அன்னைக்கு இன்னும் 15 வருடம் ஆயுளை நீட்டித்து கேட்டது இங்கே மருத்துவமனையில் உள்ள மருத்துவருக்கு எப்படி தெரியும்?

மேலும் அமெரிக்கா போனாலும் காப்பாற்ற முடியாது என்று கருதப்பட்டதொரு உயிர் உள்ளூரிலேயே சில நாட்கள் சிகிச்சையிலேயே காப்பாற்றப்பட்டது எப்படி?

ஸ்ரீ பூஜ்யாய ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாய ச |
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேநவே ||

மேற்படி சம்பவத்தில் வரும் மூத்த மகன் வேறு யாருமல்ல… ஏற்கனவே “அழைத்தால் போதும் அடுத்த கணமே நினைத்தது நடக்கும்!” – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 2 என்ற பதிவில் நமக்கு அறிமுகமான திரு.சுகுமாரன் அவர்கள் தான்.

இது எப்படி நமக்கு தெரியும்?

அடுத்து படியுங்கள்….

===============================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் : ‘மந்த்ராலய முரசு’ அமரர் மானாமதுரை திரு.சேதுராமன் அவர்களின் துணைவியார் திருமதி.சாந்தா சேதுராமன் அவர்கள்.

சென்ற வாரம் ஒரு நாள் வளசரவாக்கத்தில் உள்ள ‘மந்த்ராலய முரசு’ அமரர் திரு.மானாமதுரை சேதுராமன் அவர்களின் மகன் லக்ஷ்மி நாராயணன் அவர்களின் இல்லத்துக்கு சென்றிருந்தோம்.

முதல் காரணம்… அவரை சந்தித்து நாட்களாகிவிட்டது. தொடர்பு விடுபட்டுவிடக்கூடாது என்பது. இரண்டாவது… திரு.லக்ஷ்மி நாராயணன் அவர்களின் தாயார் திருமதி.சாந்தா சேதுராமன் அவர்கள் தற்போது இவர் இல்லத்தில் இருப்பதாக கிடைத்த தகவல். அம்மாவை சந்தித்து ஆசி பெறவேண்டும். அது இரண்டாவது காரணம். (அடியேனின் தாயார் பெயரும் சாந்தா தான்!)

Sethuraman-Sir-at-Discourse-2

சாந்தா அவர்களை சந்திக்கும்போதெல்லாம் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் மகிமையைப் பற்றி புதுப் புது தகவல்கள் கிடைக்கும். நமது ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் தொடருக்கு அது மிகவும் உபயோகமாக இருக்கும். இந்த முறை, நாகர்கோவில் பிருந்தாவனத்தை பற்றியும் அதன் அற்புதங்களையும் சொன்னார். பேசிக்கொண்டிருக்கும்போது நண்பர் திரு.சுகுமாரன் அவர்களை பற்றிய பேச்சு வந்தது. (இவர் தான் சுகுமாரன் அவர்களை நமக்கு அறிமுகம் செய்துவைத்து அந்த தொடருக்கு உதவியவர்.).

அப்போது திருமதி.சாந்தா சேதுராமன் அவர்கள் கூறிய சம்பவம் தான் மேலே நீங்கள் படித்த, அமெரிக்கா போனாலும் காப்பாற்ற முடியாது என்று சொல்லப்பட்ட திரு.சுகுமாரன் அவர்களின் தாயார் திருமதி.வத்சலா வேணுகோபால் அவர்கள் ஸ்ரீ ராகவேந்திரர் அருளால் உயிர்பிழைத்த சம்பவம்!

Santha Sethuraman copy copy
திருமதி.சாந்தா சேதுராமன்

சாந்தா அம்மா நம்மை நாகர்கோவில் செல்லுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். அங்கு ராகவேந்திர பிருந்தாவனத்தை நிர்வகித்துவரும் அன்பர் ஒருவரின் அலைபேசி எண்ணை கொடுத்து அங்கு சென்றால் எண்ணற்ற விஷயங்களை தெரிந்துகொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.

திரு.லக்ஷ்மி நாராயணன் உள்ளே பூஜையறைக்கு அழைத்துச் சென்று காட்டினார். அப்போது அவரது அனுமதியுடன் எடுக்கப்பட்ட மந்த்ராலயம் ஸ்ரீ ராகவேந்திரரின் மூல பிருந்தாவன புகைப்படம் இங்கே பகிரப்பட்டுள்ளது.

திரு.லக்ஷ்மி நாராயணன் அவர்களிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, நமது பிரார்த்தனை கிளப்புக்கு இந்த வாரம் திருமதி.சாந்தா சேதுராமன் அவர்கள் தான் தலைமை ஏற்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டு, அம்மாவிடமும் அது பற்றி தெரிவித்துவிட்டு ஆசிபெற்றுக்கொண்டு இல்லம் திரும்பினோம்.

(திரு.லக்ஷ்மி நாராயணன் இதற்கு முன்பு நமது பிரார்த்தனை கிளப்புக்கு தலைமை ஏற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரது அன்னை தலைமை ஏற்கிறார்!)

திரு.லக்ஷ்மி நாராயணன் அவர்களின் பூஜையறை - வலது புறம் ராயரின் மூல பிருந்தாவனப் புகைப்படம் உள்ளது
திரு.லக்ஷ்மி நாராயணன் அவர்களின் பூஜையறை – வலது புறம் ராயரின் மூல பிருந்தாவனப் புகைப்படம் உள்ளது

மானாமதுரை சேதுராமான் அவர்கள் செய்தது சாதாரண தொண்டல்ல… மஹா பெரியவாவே அடிக்கடி நிஷ்டையில் ஆழ்ந்து இவரது சொற்பொழிவை கேட்கப்போய்விடுவதுண்டு.

“மகா பெரியவாளுக்கு சேதுராமன் சாரை தெரியுமோ?” என்பது தானே உங்கள் சந்தேகம்.

“தெரியுமாவா….?”

இதைப் படியுங்கள்…

காஞ்சி மடத்தில் ஒரு நாள் மகா பெரியவா பக்தர்களோட பேசிக்கிட்டுருக்கார். பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென்று ஏதோ சிந்தனையில் ஆழ்ந்துவிடுகிறார்.

ஆனால்…. அது புரியாமல் அவருடன் பேசிக்கொண்டிருந்த பக்தர்களில் ஒருவர் தான் பாட்டுக்கு பேசிக்கொண்டே போக… “நிறுத்து…  நிறுத்து….உன் பேச்சை சித்த நேரம் நிறுத்து…. அங்கே சேதுராமன் ராகவேந்திரரோட பிருந்தாவனப் பிரவேசம் சொல்லிக்கிட்டுருக்கார்…. அதை கேட்டுட்டு வந்துடுறேன்….” என்று கூறி மறுபடியும் நிஷ்டையில் ஆழ்ந்துவிடுகிறார்.

சுற்றியிருந்த அத்தனை பேருக்கும் ஒரு கணம் சிலிர்ப்பு. பெரியவா மானசீகமா ஏதோ உபன்யாசம் கேட்டுகிட்டு இருக்கார் போல என்று பக்தர்கள் நினைத்துக்கொண்டனர்.

ஆம்… மானாமதுரை சேதுராமன் அவர்களை போல ஸ்ரீ ராயரின் பிருந்தாவனப் பிரவேசத்தை சொல்லக்கூடியவர்கள் யாருமில்லை. எனவே தான் பெரியவா சூட்சும சரீரத்தோடு இவர் சொற்பொழிவை கேட்க அடிக்கடி மடத்திலிருந்து போய்விடுவாராம்!

===============================================================================

இன்றிரவு நாம் பெற்றோருடன் வைத்தீஸ்வரன் கோவில், நாச்சியார் கோவில் உள்ளிட்ட கும்பகோணத்தை சுற்றியுள்ள தலங்களுக்கு புறப்படுகிறோம். இறையருளால் நாளை முழுதும் கும்பகோணம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள ஆலயங்களில் தரிசனம். திருவருள் துணைக்கொண்டு ஞாயிறு சென்னை திரும்புகிறோம்.

===============================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியுள்ள வாசகர்களைப் பற்றி…

இந்த வாரம் பிரார்த்தனைக்கு மனு செய்திருப்பவர்களில் முதலாமவர் திருமதி.செல்வி ராஜன் அவர்கள். நம் தளத்தின் தீவிர வாசகி. நமது உழவாரப்பணிகள் சிலவற்றில் பங்கேற்றிருக்கிறார். நமது தளத்தின் சார்பாக நடைபெறும் விழாக்களில் தவறாமல் கலந்துகொள்பவர். மேலும் சென்ற வருடன் நாம் வடலூர் சிவப்பிரகாச ஸ்வாமிகள் ஆஸ்ரமம் சென்றபோது, தனது மகனை அழைத்துக்கொண்டு உடன் வந்தவர். அவரது கணவரின் நலன் வேண்டி பிரார்த்தனைக்கு மனு செய்திருக்கிறார். அவர் கணவரைப் பற்றி பிரார்த்தனையில்  தெரிவித்திருக்கிறோம்.

அடுத்து மும்பை சந்திரசேகரன் அவர்கள். மகா பெரியவாவின் தீவிர பக்தர். மடத்துக்கு சென்றால் மகா பெரியவா கேட்கும் முதல் கேள்வி என்ன தெரியுமா? – குரு தரிசனம் (35) என்ற பதிவை நமக்கு ஆங்கிலத்தில் எழுதி அனுப்பியவர் இவர் தான். இவர் ஏகப்பட்ட குடும்ப பிரச்சனையில் சிக்கியிருப்பது நமக்கு தெரியும். இவரது நிலையில் நாம் இருந்தால் இப்படி இன்னமும் இறைவன் மீதும் பிரார்த்தனை மீதும் நம்பிக்கை வைத்திருப்போமா என்பது சந்தேகமே. நாம் முன்பே கூறியது போல, துன்பத்திலும் தொடரும் பக்தியே தூய்மையானது. அந்தவகையில் இவரது பக்தி மிகவும் உயர்ந்தது.

அடுத்தது நண்பர் உதயகுமார். திருச்சி திருவெறும்பூர் எறும்பீஸ்வரருக்கு நாம் வேலை வாய்ப்பு சிறப்பு பிரார்த்தனைக்காக அர்ச்சனை செய்ய சென்றிருந்தபோது கடைசி நேரத்தில் தனது பெயரை சேர்த்தவர். அதன் பின்னர் வேலை வாய்ப்பு வேண்டி நமது பிரார்த்தனை கிளபுக்கு தனியாக கோரிக்கை அனுப்பினார். அனுப்பிய இரண்டொரு நாளில் நம்மை தொடர்புகொண்டவர், நமக்கு கோரிக்கை அனுப்பிய நேரம் அவருக்கு நல்ல நிறுவனத்தில் வேலை  கிடைத்துவிட்டதாகவும், இன்னும் ஒரு சில ஃபார்மாலிட்டிகள் இருப்பதாகவும், எனவே கோரிக்கையை வெளியிட்டு உதவுமாறும் கேட்டுக்கொண்டார். இதையடுத்து அவருடைய கோரிக்கையை வெளியிட்டுள்ளோம். பிரார்த்தனையை நிறைவேற்றிய எறும்பீஸ்வரரையும் ஒரு முறை தரிசித்துவிட்டு வரச் சொல்லியிருக்கிறோம்.

===============================================================================

* திருமண வயது தாண்டியும் திருமணமாகாமல் தவிக்கும் ஆண்களுக்காக ஒரு சிறப்பு பிரார்த்தனை மிக மிக அற்புதமான ஒரு மனிதரை கொண்டு நடைபெறவிருக்கிறது. அநேகமாக ஜூலை முதல் வாரம் அந்த பிரார்த்தனை கிளப் பிரார்த்தனை இடம்பெறக்கூடும். எனவே இது தொடர்பாக ஏற்கனவே கோரிக்கை அனுப்பி வெளியாகாதவர்களும் சரி… புதிதாக அனுப்ப விரும்புகிறவர்களும் சரி உடனே நமக்கு editor@rightmantra.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சலில் தங்கள் (மகன்) பெயர், வயது, ஊர் உள்ளிட்ட விபரங்களை மின்னஞ்சல் (பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் கூடுதல் சிறப்பு) அனுப்பவும்.

**  பிரார்த்தனைக்கு வேறு கோரிக்கைகளுக்காக விண்ணப்பித்து இதுவரை அது வெளியாகாமல் இருந்தால் அந்த மின்னஞ்சலையும் நமக்கு மீண்டும் editor@rightmantra.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

===============================================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

திருமதி.செல்வி ராஜன் அவர்களின் கணவர் திரு.கே.ராஜன் அவர்கள் நலம் பெறவேண்டும்!

நம் தள வாசகர் திருமதி.செல்வி ராஜன் அவர்கள். சாலிக்கிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். திரு.ராஜன் (52) அவர்களுக்கு திடீரென ஏற்பட்ட பக்கவாதம் காரணமாக விஜயா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

செய்வதறியாது கலங்கித் தவித்து வருகிறார். இன்று காலை நம்மை தொடர்புகொண்டு தனது கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விபரத்தை கண்ணீர் மல்க தெரிவித்தார். மேலும் நமது இன்றைய பிரார்த்தனை கிளப் பதிவில் தமது கணவருக்காக கோரிக்கை வெளியிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

திரு.ராஜன் அவர்களை நாம நேரில் சந்தித்ததில்லை என்றாலும் பழகுதற்கு இனியவர். நம் தளம் தொடர்பாக உழவாரப்பணி, ஆலய தரிசனம் உள்ளிட்ட பலவற்றில் செல்வி அவர்கள் கலந்துகொள்ள பரிபூரண ஒத்துழைப்பையும் அனுமதியையும் நல்கியவர். எந்த வித தீய பழக்கங்களும் இல்லாத ஒரு பொறுப்பான குடும்பத் தலைவர்.

அவர் விரைந்து நலம் பெற்று வீடு திரும்பவேண்டும் என்றும், இந்த இக்கட்டிலிருந்து செல்வி அவர்களின் குடும்பம் மீண்டு, அவர் தம் கணவர் மற்றும் குழந்தைகளுடன் சௌக்கியமாக சந்தோஷமாக வாழ வேண்டும் என்றும் ஸ்ரீ ராகவேந்திரரை பிரார்த்திப்போம்.

கணவர் நலம் பெற்று திரும்பியவுடன் ராயருக்கு நன்றி செளுத்துவிதமாக குடும்பத்தோடு ஒரு முறை மந்த்ராலயம் சென்று வருமாறு திருமதி.செல்வி அவர்களை கேட்டுக்கொண்டுள்ளோம்.

===============================================================================

Want financial blessings!

My Dear Brother

Daily I am contacting you through phone and disturbing you very much.  But you are replying patiently and encouraging me.  Thank you very much for the same. Daily I am praying Mahaperiyava that today some financial blessing to my business  or any good thing should be happened. But due to my misfortune I am not able to enjoy such good miracles.

Now without working capital  I cannot run my business.  I am also trying and approaching banks for financial assistance.  But some obstacles are comming and stopped me to proceed further.  As on date If I have not blessed with financial assistance I have to close down my business.   Also I am daily chanting “Idarinum Thalarinum” Pathikam in good faith.  Now every thing is going beyond my control.

I request you to kindly pray for me in your Prayer Club.  You are aware that I am doing this business not only for me but also to nurture Vedas and Education.  Now nothing in my hand.  All are in the hands of God.  Myself and my wife is in extreme frustration.

Regards

S. Chandrasekaran,
Mumbai

===============================================================================

Want job confirmation!

Hi sir,

I’m happy to see Right Mantra on every days. I’m request you to please pray for me, I need the job due to my family bad circumstance along with current job.

Past 4 years I am searching jobs but I didn’t the get job, why I don’t know. Else if I passed the interview after that there is no communication between company and me.

Last year interview all the round passed in Wipro technology after that, there is no communication, and they said YOU ARE HOLD.

I don’t know why it’s happening for me. Not only this many companies sir. Now also I’m trying and going for many interviews. So please do pray for me this Sunday.

I hope you are doing great for me.

Regards,
R Uthaya Kumar,
Mysore.

===============================================================================

பொது பிரார்த்தனை

சென்னையை உலுக்கிய விபத்து – கிரிதரன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டும்!

சென்னை மடிப்பாக்கம் வெங்கடேச பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மென்பொருள் பொறியாளர் திரு.கிரிதரன் (30). இவர் வடபழனியில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். கிரிதரன் மனைவி ருத்ரா. இவர்களுக்கு ஓர் ஆண்டுக்கு முன்பு திருமணமானது. மென்பொருள் பொறியாளரான ருத்ராவும், சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ருத்ரா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். ருத்ராவுக்கு இன்னும் 15 நாள்களில் குழந்தை பிறக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

Giridharan chennai metro accident

இந்நிலையில் கிரிதரன் கடந்த புதன்கிழமை காலை வழக்கம்போல வேலைக்கு வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அவர் மோட்டார் சைக்கிளில் பரங்கிமலை-மீனம்பாக்கம் இடையே சாலையில் காலை 9 மணியளவில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் அருகே சென்றபோது, அங்கு மெட்ரோ ரயில் பாலத்திலிருந்து திடீரென ஒரு பெரிய இரும்புத் தூண் கிரிதரனுடைய தலையின் மீது விழுந்தது. அவர் தலைக்கவசம் அணிந்திருந்தபோதும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Giridharan
மறைந்த திரு.கிரிதரன் அவர்கள் தனது மனைவி ருத்ராவுடன்….

சம்பவம் கேள்விப்பட்டு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு விரைந்த அவரது பெற்றோர் கிரிதரின் உடலை பார்த்து கதறி அழுதது கல்லையும் உருக்கும் விதம் இருந்தது.

நிறைமாத கர்ப்பிணி மனைவி. எதிர்கால கனவுகள் எவ்வளவோ.. எல்லாம் ஒரு நொடியில் தகர்ந்துவிட்டன.

திரு.கிரிதரன் அவர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் ஆறுதல் பெறவும், இறைவனை பிரார்த்திப்போம். குறிப்பாக கிரிதரனின் மனைவி ருத்ரா அவர்களை நினைக்கும்போது தான் கண்ணீர் பெருகுகிறது. இறைவா… அந்த ஜீவனுக்கு நீயே ஆறுதலை தரவேண்டும். இதற்கு மேலும் அந்த குடும்பத்தை சோதிக்காதே…

இதுவே இந்த வார பொது பிரார்த்தனை !

===============================================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgமாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நம் தள வாசகி திருமதி.செல்வி அவர்களின் கணவர் திரு.ராஜன் அவர்கள் விரைந்து நலம் பெற்று ஆரோக்கியத்துடன் வீடு திரும்பவும் இனி எஞ்சி வரும் காலங்களில் அவர் தனது குடும்பத்துடன் சௌக்கியமாக சந்தோஷமாக இருக்கவும், தொழில் அபிவிருத்திக்காக நிதி வேண்டி தவிக்கும் மும்பையை சேர்ந்த திரு.சந்திரசேகரன் அவர்களுக்கு பொருளாதார நெருக்கடிகள் நீங்கி அவர் ஈடுபட்டுள்ள தொழிலில் முன்னேற்றம் அடையவும், வேலைவாய்ப்புக்காக கோரிக்கை வைத்திருக்கும் வாசகர் திரு.உதயகுமார் அவர்களுக்கு அவர் விரும்பிய வேலை, எந்த வித தடைகளும் இன்றி அவருக்கு நிறைவான ஊதியத்துடனும் இதர பல சலுகைகளுடனும் கிடைக்க மஹா குரு ஸ்ரீ ராகவேந்திரரை பிரார்த்திப்போம். மேலும் மெட்ரோ ரயில் கட்டுமான விபத்தில் பலியான மடிப்பாக்கத்தை சேர்ந்த திரு.கிரிதரன் அவர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவர் தம் குடும்பத்தினர் ஆறுதல் பெறவும் மகா குருவின் தாள் பணிவோம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : ஜூன் 21, 2015 ஞாயிற்றுக்கிழமை | நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

===============================================================================

An appeal – Help us in our mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

===============================================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

=============================================================

Rightmantra Prayer Club

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

===============================================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E : editor@rightmantra.com  |   M : 9840169215  | W: www.rightmantra.com

===============================================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131

===============================================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : அன்னதான அருந்தொண்டர் திரு.ஜோலார்பேட்டை நாகராஜ் அவர்கள்.

11 thoughts on “அன்னையின் ஆயுளை நீட்டித்த அருட்கடல்! RIGHTMANTRA PRAYER CLUB

 1. மிக நீண்ட உணர்ச்சி பூர்வமான பிரார்த்தனை பதிவு. திருமதி வத்சலா அவாகளுக்கு நீண்ட ஆயுளை கொடுத்த குருவின் கருணையை நினைத்து மெய் சிலிர்க்கிறது. ஆத்மானுபவமாக வேண்டும் பக்தர்களை அவர் கை விடுவதில்லை என்பதற்கு இந்த பதிவே ஒரு சான்று

  (இந்த பதிவில் கோடம்பாக்கம் தியேட்டர் அருகில் உள்ள பிருந்தாவனம் என்று போட்டு இருக்கிறீர்கள் எந்த தியேட்டர் என்று எழுதவும். )

  இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திருமதி சாந்தா சேதுராமனுக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரம். இந்த வார பிரார்த்தனை பதிவிற்கு மிகவும் பொருத்தமானவரை தேர்ந்து எடுத்து இருக்கிறீர்கள்.

  இந்த வார பிரார்தனை கோரிக்கை வைத்து இருக்கும் செல்வி அவர்களின் கணவர் வெகு விரைவில் பூரண நலம் பெற வேண்டும். செல்வி எனக்கு இனிய சகோதரி போன்றவர். நம் உழவாரப் பணிக்கு வந்து இருக்கிறார்.

  மற்றவர்களின் பிரார்த்தனைகளும் வெகு விரைவில் நிறைவேற பகவான் அருள் புரிய வேண்டும்

  திரு கிரிதரன் பற்றி படிக்கும் பொழுது கண்கள் கலங்குகின்றது அவர் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்வோம்.

  லோகா சமஸ்தா சுன்கினோ பவந்து

  ராம் ராம் ராம்
  நன்றி
  உமா வெங்கட்

 2. சார் வணக்கம்
  மிகவும் அருமையான பதிவு
  நன்றி படிக்க படிக்க
  கண்கள் பனித்து உடல்
  சிலிர்த்தது.
  அருள் செய்யும்
  மகானின் அற்புதங்கள் நம்
  தளத்தில் படிக்கும் பேறு
  நாங்கள் மிக
  பாக்கியசாலிகள்.
  நம் மன பாரம் எல்லாம்
  குறைந்து மன நிம்மதி கிடைக்கிறது.
  நன்றி.

 3. உங்களுக்கு
  என் மனமார்ந்த நன்றிகள்
  பல!! அடுத்த பதிவிற்காக
  காத்திருக்கிறேன்!! ஓம்!!

 4. உங்களின் இந்த ஆன்மீக
  சேவைக்கு என் மனமார்ந்த
  நன்றிகள். தங்களின்
  இவ்வான்மீக பணியினால்
  பலரது வாழ்க்கையில் ஒளி
  பிறந்திருக்கும். பலரது
  வாழ்கையை நெறிப்படுத்திய
  உங்களுக்கு மீண்டும் என்
  நன்றிகள். உங்களுக்கு
  என் மனமார்ந்த நன்றிகள்
  பல!! அடுத்த பதிவிற்காக
  காத்திருக்கிறேன்

 5. வணக்கம் சுந்தர்.படிக்க,படிக்க கலவையான உணர்வுகளை கொடுத்தது இன்றைய பதிவு .பாசமுள்ள மகன்கள்,பக்தனுக்கு உடனே பதில் சொன்ன குரு ,பிராத்தனை பதிவுகளில் வருத்தம் என இருந்தது .மந்த்ரயலய மகான் எல்லோர் பிரச்சனைகளும் தீர ஆசி செய்யட்டும். திருமதி ருத்திர வை நினைக்கும் பொது பாவமாக உள்ளது.குருவே ஆறுதல் சொல்லுங்கள், குழந்தை நலமோடு பிறக்க ஆசிர்வதியுங்கள்.நன்றி

 6. வணக்கம்…….. குருவருளாலும், திருவருளாலும் அனைவரின் மனக் குறைகளும் நீங்கி எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுமாய் எல்லாம் வல்ல இறைவனின் இணை கழலடிகளை இறுகப் பற்றி இரைஞ்சுகிறோம்……..

 7. குரு இராகவேந்தரரின் அருளுக்கு எல்லையே இல்லை

  இந்த வார பிரார்த்தனை குழுவின் வேண்டுதல் யாவும் நிறைவறவும், சொல்லானா துயரத்தில் மூழ்கி உள்ள திரு கிரிதரின் குடுபத்திற்கு உற்ற துணையாக இருந்து அவர்களை பாதுகாக்கவும் குரு திருவருள் புரிய உளமார பிரார்த்தனை செய்வோம் .

 8. வணக்கம் சுந்தர் சார்,

  எல்லாரும் நல்ல இருக்கனும்…. கிரிதரன் ஆத்மா சாந்தி அடையவும், ருத்ரவுக் எல்ல தெம்பும், தைரியமும், பக்குவமும், குழந்தை நல்ல இருக்கவும் நானும் பிரத்திகிறேன்…

  அவங்களுக்கு எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் அது ஈடாகது…அதனால நம்ம சிவா கிட்ட வேண்டிகிறேன்.

  பிரியா

 9. அள்ள அள்ள குறையாதது இறை அருள் …படிக்க படிக்க கண்கள் கண்கள் பணித்தது.அருட் கடல் கிடைக்க நாம் நம்பிக்கையோடு இறை கடலில் நீந்த வேண்டும்.

  குரு ராகவேந்தரின் அருள் படத்தை பார்க்கும் போதே, நம் துன்பங்கள் நீங்கும் என்பது உறுதி.

  பிரார்த்தனைக்கு வேண்டியோர்களின் ( திருமதி.செல்வி ராஜன் அவர்களின் கணவர் திரு.கே.ராஜன் அவர்கள் நலம் பெற்றிடவும்,சந்திரசேகரன் அய்யா அவர்களின் பொருளாதாரம் மேன்மை பெறவும், உதயகுமார் அவர்களுக்கு வேலை கிடைத்திடவும், பொது பிரார்த்தனையாக கிரிதரன் குடும்பத்தார் மகிழ்ச்சியுடன் வாழ்வில் வளம் – திருமதி ருத்ரா அவர்களும், அவர்களது குழந்தையும் சீரும் சிறப்போடும் வாழ்ந்திடவும் ) குறைகள் களைந்து, அனைவரும் இன்புற்றிருக்க எல்லாம் வல்ல குருவருளும், இறை அருளும் துணை புரிந்திட, இந்த வாரம் கூட்டு பிரார்த்தனை,வரும் ஞாயிற்றுக்கிழமை 28/06/2015 மாலை 5:30 மணி அளவில் செய்வோமாக..

  வரும் கூட்டு பிரார்த்தனையின் அருள் கிடைக்க , குரு ராகவேந்தரும், மகா பெரியவாவும் அருள் புரியட்டும்.

  குருவே சரணம்.
  குருவின் திருவடிகள் போற்றி..போற்றி..

 10. Sir
  very very thanks to RIGHTMANTRA readers and Right Mantra Sundar sir and my friends to pray for my husband.
  He is discharged by Thursday from hospital. But he can continued the tablets and medicines.
  RIGHT MANTRA readers are supporting that time to speak to me to pray GOD for my husband health.
  There is no word to say or abut the situation.
  THANKS A LOT.
  REGARDS
  SELVI RAJAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *