Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 8, 2024
Please specify the group
Home > Featured > ‘சில சமயம் பகவான் மீதே கோபம் வருகிறதே?’ – தெய்வத்திடம் சில கேள்விகள்! (Part II)

‘சில சமயம் பகவான் மீதே கோபம் வருகிறதே?’ – தெய்வத்திடம் சில கேள்விகள்! (Part II)

print
ராசரி வாழ்வில் நமக்கு தோன்றும் கேள்விகளுக்கு மஹா பெரியவா அளித்த பதில்களைப் பற்றிய பதிவை சென்ற குரு வாரம் வெளியிட்டது நினைவிருக்கலாம். நம் வாசகர்கள் மத்தியிலும் மஹா ஸ்வாமிகளின் பக்தர்கள் மத்தியிலும் அந்த பதிவு அமோக வரவேற்பை பெற்றதோடல்லாமல், அந்த பதிவை தொடரவேண்டும் என்றும் பலர் நம்மிடம் கேட்டுக்கொண்டார்கள்.

வெகு ஜனக் கோரிக்கையையடுத்து அந்த பதிவின் இரண்டாம் பாகமாக மேலும் சுமார் 10 கேள்விகளுக்கு மஹா ஸ்வாமிகளின் பதில்கள் தரப்பட்டுள்ளது. ‘தெய்வத்தின் குரல்’ என்னும் பொக்கிஷத்தில் மஹா பெரியவா கூறியிருப்பவற்றை இத்தகைய கேள்விகளுக்கு பதிலாக ‘ஸ்ரீ பரமாச்சாரியாள் பதிலளிக்கிறார்’ என்னும் நூலாக தொகுத்து தந்திருப்பவர் நண்பர் அம்மன் சத்தியநாதன் அவர்கள். அவரின் ஒப்புதலோடு இதை நம் தளத்தில் பகிர்கிறோம்.

அனைத்து கேள்வி பதில்களும் பொக்கிஷங்கள் என்றாலும் கடைசி இரண்டும் மாணிக்கங்கள்!

மீண்டும் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளனவே… இதற்கென்ன தீர்வு ஸ்வாமி?

கேள்வி 11 : நல்லது நடக்கும்போது ‘தெய்வ அனுக்ரஹம்’ என்கிறோம். கஷ்டம் வரும்போதும் அது அளவுக்கு மீறும்போதும் எவ்வளவு தான் நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொண்டாலும் சில சமயம் தெய்வத்தின் மீதே கோபம் வருகிறதே ஸ்வாமி!

ஸ்ரீ பரமாச்சாரியாள் : அம்பாளுடைய கருணை நமக்கு தெரியாது. நமக்கு நல்லது வந்தாலும் கெட்டது வந்தாலும் இரண்டுக்கும் மூலம் அவளுடைய அருள் தான். நல்லது காரணம் இல்லாத அருள். கஷ்டம் ஒரு காரணத்திற்க்காக ஏற்படும் அருள். நல்லது வந்தாலும் கெட்டது வந்தாலும் அவளுடைய அருள் என்று எடுத்துக்கொள்ளவேண்டும். நமக்கு தெரியாது. எதற்காக அதை கொடுக்கிறாள் என்று.

Paramachariyal Padhilalikkiraarகேள்வி 12 : நீங்கள் சொல்வது சரி தான் ஸ்வாமி. மேற்படி கருத்துக்கு ஒரு உதாரணம் கூறுங்கள் ஸ்வாமி.

ஸ்ரீ பரமாச்சாரியாள் : பழைய நாளில் சாமானியமாக ஒரு உதாரணம் சொல்வது உண்டு. கழுதை மேல் உப்பு பொதி மூட்டை போட்டுக்கொண்டு ஒருவன் சந்தைக்கு போனான். உப்பு மூட்டையை மாட்டு மேலே கழுதை மேலே போட்டுக்கொண்டு போவது அந்தக்கால வழக்கம். அப்படி கழுதை மேலே உப்பு மூட்டையை போட்டுக்கொண்டு ஒருவன் சந்தைக்கு போகிறான். கிளம்புகிற நேரம் வானம் நன்றாக இருந்தது. மப்பு மந்தாரம் ஒன்றுமில்லை. திடீரென்று நடுவழியில் ஒரே இருட்டாக இருட்டிக்கொண்டு மழை பொத்துக்கொண்டு கொட்ட ஆரம்பித்துவிட்டது. உப்பு மூட்டை கரைந்து போயிற்று. ‘இந்த தெய்வம் இப்படி பண்ணுமா? அதை நினைக்கிறதே தப்பு’ என்று சுவாமியை வைது சந்தைக்குக் போகாமல் திரும்பி வந்துவிட்டான்.

திரும்பிக் காட்டு வழியாக வீட்டுக்கு வரும்போது ‘இவன் சந்தையிலிருந்து நிறைய பணம் கொண்டு வருவான். அடித்துக்கொண்டு போகலாம்’ என்று திருடர்கள் துப்பாக்கியை வைத்துக்கொண்டிருந்தார்கள். அந்தக் காலத்திலே தோட்டா துப்பாக்கி கிடையாது. மருந்து துப்பாக்கி தான். மருந்து கெட்டித்துத் துப்பாக்கி வெடித்து எல்லாரையும் பயப்படச் செய்து, திக்குக்கு ஒருவராக ஓடும்போது அடித்து பிடித்துக்கொண்டு பணத்தை எடுத்துப் போய்விடுவார்கள். அன்றைக்கும் இந்த திருடர்கள் துப்பாக்கியால் சுட்டார்கள். எல்லாம் புஸ் புஸ் என்று போய்விட்டது. மருந்து மழையிலே நனைந்து போனதால் வெடிக்கவில்லை. உடனே துப்பாக்கியை போட்டுவிட்டு ஓட ஆரம்பித்தார்கள். அப்போது தான் இந்த வியாபாரி, ஸ்வாமி, இன்றைக்கு மழை வந்ததனால் நான் பிழைத்தேன். அதனால் என் பிராணன் தப்பியது. உன் கருணையைத் தான் என்னவென்று சொல்வது ? என்று ஈஸ்வரனை பிரார்த்தித்துக் கொண்டானாம்.

கேள்வி 13 : கோயில் கும்பாபிஷேகம் போன்ற இன்றைய பொதுக் காரியங்களுக்கு வசூல் செய்கையில் சில பெரிய மனிதர்கள் பணத்தை கொடுக்கிறார்கள். மற்றவர்களும் அந்த வைபவத்தின் போது அவர்களை புகழ்கிறார்கள். இது சரியா ஸ்வாமி?

ஸ்ரீ பரமாச்சாரியாள் :  ஸமூகத்தில் உள்ள அத்தனை பேரும் ஒரு காலணா அரையணாவாவது போட்டு எல்லாருக்குமாக சேர்ந்தே பொதுக்காரியங்களுக்கான செலவுகளை ஏற்கவேண்டும். பணக்காரன் பணம் மட்டும் கொடுத்துவிட்டு சரீரத்தால் உழைக்கமால் இருந்தான் என்று இருக்கக்கூடாது. ஏழை சரீரத்தால் மட்டும் உழைத்துவிட்டு பணம் கொடுக்காமலிருந்தான் என்று இருக்கக்கூடாது. பணக்காரன் ரூபாய் தருவதும் ஏழை சரீர கைங்கரியம் தருவதும் பெரிய த்யாகமில்லை. பணக்காரன் ஏழைகளோடு வந்து நின்று மண்வெட்டி எடுத்து வெட்ட வேண்டும். ஏழை தன் கூழுக்கு ஒரு மிளகாய் வாங்கிக்கொள்வதற்கு பதிலாக காலணா டொனேஷன் வாங்கிக்கொள்ளவேண்டும். அது தான் பெரிசு. சோஷல் சர்வீஸ் பண்ணும்போதே பண்ணுகிறவர்கள் மனசில் உயர்ந்து வளரவேண்டுமானால் செலவு உழைப்பு இரண்டிலுமே ஒவ்வொருத்தனுக்கும் பங்கு இருக்கவேண்டும். ச்ரம தானத்துக்கு பலஹீனர்கள் மட்டுமே எக்ஸப்ஷன். (விதிவிலக்கு​.)

கேள்வி 14 : பெண்கள் நினைத்தால் எதையும் சமாளிக்கலாம் என்று பட்டி தொட்டியெங்கும் கூறுகிறார்கள். இன்றைய குடும்ப கஷ்ட நஷ்டங்களை சமாளிக்க பெண்களுக்கு ஒரு உபாயம் கூறுங்களேன் ஸ்வாமி.

ஸ்ரீ பரமாச்சாரியாள் : பட்டுப் புடவை, வைரம், இன்னும் வேறு ‘தாம் தூம்’ செலவுகள் செய்யாமலிருப்பதற்கு ஸ்திரீகள் ஒரு பிரதிக்ஞை செய்துகொண்டால் அதுவே பெரிய உபகாரமாகும். பட்டுத் துணி வேண்டாம் என்று வைப்பதால், லக்ஷக்கணக்கான பட்டுப் பூச்சிக்கைளை சாகாமல் காப்பாற்றிய புண்ணியம் கிடைக்கும். அத்தோடு, இருக்கிறவர்கள் இப்படி செலவு செய்வதை பார்த்து இல்லாதவர்களுக்கும் ஆசை உண்டாகிறதே, கடன் கஸ்தி வாங்கியாவது அவர்கள் ஆசையை பூர்த்தி செய்துகொள்கிறார்களே இப்படி அவர்களுக்கு தப்பான வழிகாட்டி அபகாரம் பண்ணாமிலிருப்பதே உபகாரந்தான். இந்த ஆடம்பரங்கள் போய் காபிக்கு பதில் மோர் கஞ்சி சாப்பிடுவது என்றாகிவிட்டால் எல்லாக் குடும்பத்திலும் பாதிச் செலவு மிச்சம். கடன் வாங்கி குடித்தனம் செய்பவர்கள் கடன் வாங்காமல் செய்யலாம்.

Maha Swamigal  copy copy

கேள்வி 15 : ஸ்வாமி! தங்களுக்கு கனகாபிஷேகம் பல நல்லோர்கள் தலைமையில் முயற்சியில் நடைபெற்றது. இன்னமும் நடைபெறுகிறது. அவர்களுக்கு தாங்கள் கூற விரும்பும் அறிவுரை என்னது ஸ்வாமி?

ஸ்ரீ பரமாச்சாரியாள் : எனக்கு கனகாபிஷேகம், பீடாரோஹன உத்சவம் எல்லாம் ரொம்பவும் விமரிசையாக பண்ணுகிறீர்கள். மிகுந்த அன்பினால் பண்ணிப் பார்க்கிறீர்கள். இதற்காக கமிட்டி போடுகிறீர்கள். வசூலிக்கிறீர்கள். ராப்பகல் உழைக்கிறீர்கள். ஆனால் இந்த கனகாபிஷேகம் மடத்துக்கு இனிமேல் வருகிற ஆச்சார்யாள்களுக்கு சாசுவதமாக நடப்பது எப்படி? வேதம் இல்லாவிட்டால் மடம் எதற்கு ? மடாதிபதி எதற்கு? ஆகவே இப்போது என் கனகாபிஷேகத்துக்கும் பீடாரோஹனத்துக்கும் காட்டுகிற உற்சாகத்தை, வேத ரக்ஷணத்தில் காட்டி, அதற்காக கமிட்டி திட்டம் வசூல் எல்லாம் செய்யுங்கள் என்கிறேன்.

கேள்வி 16 : நமது சாஸ்திரங்கள் எல்லாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்டவை. அவற்றை தங்களை போன்ற பெரியோர்கள் இக்காலத்திற்கு ஏற்றார்போல மாற்றக்கூடாதா ஸ்வாமி?

ஸ்ரீ பரமாச்சாரியாள் : சாஸ்திர விஷயங்களில் கொஞ்சம் கொஞ்சம் விட்டுக்கொடுப்பது என்று வந்தால் கூட கடைசியில் வெறும் லௌகிக சௌகரியத்தை மட்டும் அனுசரிக்கும்படி தான் ஏற்பட்டுவிடும். சிலர் நல்லெண்ணத்துடனேயே என்னிடம் வந்து, “தர்ம சாஸ்திரங்களை ரிஷிகள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். நீங்களும் ரிஷி மாதிரி இருக்கிறீர்கள். அதனால் காலத்துக்கு தகுந்தபடி சாஸ்திரங்களை மாற்றிக்கொடுங்கள்” என்று கேட்கிறார்கள். வயலில் களை எடுப்பதைப் போல இப்போதைய கால நிலையை அநுசரித்துச் சில ஆசார தர்மங்களை எடுத்துவிடவேண்டும் என்பது இவர்களின் அபிப்ராயம். இப்போது நான் சிலவற்றை களை என்று நினைத்து எடுத்தால், இன்னும் கொஞ்ச காலத்துக்கு பிறகு இன்னொருத்தர் வேறு சில ஆச்சாரங்களை களை எடுக்கலாம். இப்படியே போய்க்கொண்டிருந்தால் எது பயிர் எது களை என்கிற விவஸ்த்தையே இன்றி வயல் முழுவதுமே போய்விடும்.

கேள்வி 17 : ‘அவிசொரிந்தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்துண்ணாமை நன்று’ என்ற குறளில் “ஆயிரம் யாகத்தை செய்வதைவிட ஒரு உயிரை கொன்று புசிக்காமல் இருப்பது சிறந்தது” என்று வள்ளுவர் கூறியிருக்கிறார். அப்படியானால் அஹிம்சையைவிட யாகம் குறைவானதா ஸ்வாமி?

ஸ்ரீ பரமாச்சாரியாள் : காவிரியின் பெருமையை சொல்லவந்த ஒருவர், ‘ஆயிரம் கங்கையைவிட காவிரி உயர்ந்தது’ என்று சொன்னால், ‘கங்கையும் உயர்ந்தது’ என்றே அர்த்தமாகும். காவிரியை சிலாகித்துப் பேச விரும்புகிற ஒருவர், ஆயிரம் சாக்கடையைவிட காவிரி உயர்ந்தது என்று சொல்வாரா? அப்படியே திருவள்ளுவர் அஹிம்சையை சிலாகித்து பேசும்போது, ‘ஆயிரம் யாகத்தைவிட அஹிம்சை உயர்ந்தது’ என்றால் யாகமும் உயர்ந்தது என்றே அர்த்தமாகும். ரொம்ப உயர்ந்த ஒன்றை சொல்லி, அதை விட இது ரொம்ப ரொம்ப உசத்தி என்று சொல்வது வழக்கம்.

Maha Swamigal 2 copy copyகேள்வி 18 : எனக்கு இப்போது சின்ன வயது தானே. தர்ம காரியங்களை வயதான பின்னே பார்த்துக்கொள்ளலாம் இப்போது என்ன அவசரம் என்று பல பேர் நினைக்கிறார்கள். இந்த எண்ணம் சரியானது தாணா ஸ்வாமி ?

ஸ்ரீ பரமாச்சாரியாள் : சரீரம் வீணாகப் போய்விட்டால் அப்புறம் பகவான் நாமாவை சொல்வது என்பது கூட முடியாது. கைகால் முடக்கிக்கொண்டுவிட்டால் பிரதட்சிணம் பண்ணவேண்டும், நமஸ்காரம் பண்ணவேண்டும் என்று நினைத்தால் கூட முடியாது. ஆகவே காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளவேண்டும். ‘குரு தர்ம’ ‘சத்காரியங்களை செய்’ ‘தர்ம காரியங்களை எல்லாம் செய்து ஈஸ்வரார்ப்பணம் பண்ணு’ என்று சொல்லியிருக்கிறது.

கேள்வி 19 : வாழ்க்கைத் தரம் உயரவேண்டும் என்கிறார்கள். உண்மையில் இதன் பொருள் என்ன? எதை வைத்து வாழ்க்கையின் தரம் உயர்வதாக கணக்கிடுகிறார்கள். நாம் எதை நாடவேண்டும் ஸ்வாமி?

ஸ்ரீ பரமாச்சாரியாள் : வாழ்க்கை தரத்தை உயர்த்துவது என்ற வார்த்தை இப்போது ரொம்பவும் அடிபடுகிறது. சர்க்கார் திட்டங்கள் இதற்குத் தான் என்கிறார்கள். எல்லாருக்கும் வயிறு நிரம்பச் சாப்பாடு. மானத்தையும் குளிர் வெயிலையும் காப்பாற்றப் போதுமான வஸ்திரம், வசிப்பதற்கு ஒரு சின்ன ஜாகை இருக்க வேண்டியது தான். இதற்கே சர்க்கார் திட்டம் போடவேண்டும். இதற்கு அதிகமாகப் பொருட்களை தேடிப் போவதால் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடாது. உண்மையில் வாழ்க்கைத் தரம் என்பது வஸ்த்துக்களின் பெருக்கத்தில் இல்லை. தரமான வாழ்க்கை மனநிறைவோடு இருப்பது தான். தேவைகளை அதிகமாக்கிக்கொண்டு அவற்றுக்கு ஆலாப் பறப்பதால் நிறைவு ஒருவருக்கும் ஏற்படாது. இதை பிரத்யக்ஷத்தில் பார்க்கிறோம். நாம் மேல்நாட்டுக்கார்கள் மாதிரி போக யோக்கியங்களுக்கு பறக்கிறோம். போகத்தின் உச்சிக்கு மேல் நாட்டுக்காரர்களோ அதில் நிறைவே இல்லை என்பதால் நம்முடைய யோகத்துக்கு, வேதாந்தத்துக்கு, பக்திக்கு கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள். இதைப் பார்த்து கூட நாம் புத்தி பெறவில்லை என்றால் அது தான் துரதிர்ஷ்டம்.

கேள்வி 20 : நாட்டில் அராஜகம் அதிகரித்து வருகிறது. போலீஸ் வேலையில் அதிகப்படியான ஆட்கள் தேவைப்படுகிறார்கள். கோர்ட்டுக்களும் ஏராளமாக உள்ளன. இவ்வளவு தண்டனைகள் கிடைக்கின்றன என்பதை உணர்ந்தும் மீண்டும் மீண்டும் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளனவே! இதற்கென்ன தீர்வு ஸ்வாமி?

ஸ்ரீ பரமாச்சாரியாள் : போலீஸையும் கோர்ட்டையும் விருத்தி செய்வதைவிட, தர்மக்ஞர்களை விருத்தி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும். சொந்த நலன்களை கருதாமல், உபதேசத்தை பணம் பண்ணும் தொழிலாக்காமல், பரோபகாரமே லட்சியமாக கொண்டு சாந்தமாக தர்மங்களை எடுத்துச் சொல்கிறவர்களுக்கு ராஜாங்கம் உற்சாகம் தரவேண்டும். இந்த உற்சாகத்தாலேயே மேலும் பலர் அவ்விதம் உருவாவார்கள். எடுத்துச் சொல்வதைவிட, எடுத்துக்காட்டாக தாங்களே இருப்பது தான் அதிக சக்தி வாய்ந்தது.

கோர்ட்டுகள், அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்று அர்த்தம். இதற்கு பதில் கோயில்கள் அதிகமானால் எங்கும் சாந்தி பரவும். பழைய கால ராஜாக்கள் கோர்ட்டுகளுக்கு பதிலாக கோயில்களை கட்டி வந்தார்கள். பழைய கோயில்களை புதுப்பித்தார்கள். அந்த கோயில்களிலேயே பொழுது போக்கிற்கான சகல கலைகளும் கூட தெய்வீகமாக்கப்பட்டு அர்ப்பணமாயின. ஜனங்களும் ஆலய வழிபாடு செய்து சாந்தர்கலாக இருந்தார்கள். இப்போதுள்ளது போலச் சமூகச் சச்சரவு பூசல் எல்லாம் அப்போது இல்லை.

(நன்றி : அம்மன் பதிப்பகம் | ‘ஸ்ரீ பரமாச்சாரியாள் பதிலளிக்கிறார்’ |  தட்டச்சு : www.rightmantra.com)

===============================================================================

For Part I, please check :

“தினமும் நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டியது எதை ஸ்வாமி?” தெய்வத்திடம் சில கேள்விகள்!

===============================================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

===============================================================================

Also check : மகா பெரியவாளின் ஜயந்தி மஹோத்சவம் @ அயோத்யா மண்டபம் – ஒரு நேரடி ரிப்போர்ட்

===============================================================================

எத்தனை பதிகங்கள், எத்தனை ஸ்லோகங்கள்? அத்தனையும் படிக்கவேண்டுமா? எல்லா பிரச்சனைகளுக்கும் சேர்த்து ஒரே பதிகம் / ஸ்லோகம் இல்லையா? என்ற சந்தேகத்திற்கு விடை இந்த பதிவு!

எதுக்கு இத்தனை பதிகங்கள்? ஒரே பதிகம் / ஸ்லோகம் அத்தனை பலனையும் தராதா??

===============================================================================

மனதுக்கினிய வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் அற்புதமான ஒரு பரிகாரத் தலம் பற்றிய பதிவு இது!! கெட்டியாக பிடித்துக்கொண்டு கரை சேருங்கள்!!!

நல்லதொரு வேலை; இனியில்லை கவலை! இதோ ஒரு அருமையான பரிகாரத் தலம்!!

===============================================================================

Earlies articles on Maha Periyava in Guru Darisanam series…

தெய்வத்தின் குரலில் தெய்வக் குழந்தையின் வரலாறு!

தர்மம் தழைக்க தோன்றிய தயாபரன் – மகா பெரியவா ஜயந்தி Spl & Excl.Pics!

எது நிஜமான பக்தி?

“கேட்டால் கொடுக்கும் தெய்வம். கேளாமலே கொடுப்பவர் குரு!” – குரு தரிசனம் (37)

தாயுமானவளை அனுப்பிய தாயுமானவன் – குரு தரிசனம் (36)

மடத்துக்கு சென்றால் மகா பெரியவா கேட்கும் முதல் கேள்வி என்ன தெரியுமா? – குரு தரிசனம் (35)

நெற்றியில் குங்குமம்; நெஞ்சில் உன் திருநாமம்! – குரு தரிசனம் (34)

அலகிலா விளையாட்டுடையானின் அன்பு சாம்ராஜ்ஜியத்தில் ஒரு புதிய வரவு!  குரு தரிசனம் (33)

குரங்கை அடித்ததால் ஏற்பட்ட தோஷம்! மகா பெரியவா சொன்ன பரிகாரம்!!  குரு தரிசனம் (32)

சர்வேஸ்வரா நீ அறியாததும் உண்டோ? – குரு தரிசனம் (30)

“என்ன தாமஸ், பையன் கிடைச்சுட்டானா?” – குரு தரிசனம் (29)

“மகா பெரியவா நாவினின்று வருவது வார்த்தைகள் அல்ல. சத்திய வாக்கு!” – குரு தரிசனம் (28)

ஒரு ஏழை கனபாடிகளும் அவர் செய்த பாகவத உபன்யாசமும் – குரு தரிசனம் (27)

மகா பெரியவா அனுப்பிய உதவித் தொகை; ஒளிபெற்ற அர்ச்சகர்கள் வாழ்வு! – குரு தரிசனம் (26)

பெரியவா பிரசாதம்னா சும்மாவா? ஆப்பிள் செய்த அற்புதம்! – குரு தரிசனம் (25)

இது உங்களுக்கே நியாயமா சுவாமி? – குரு தரிசனம் (24)

ஸ்ரீ மகா பெரியவா திருவிளையாடல் – குரு தரிசனம் (23)

சொத்து வழக்குகளில் சிக்கித் தவித்தவருக்கு மகா பெரியவா சொன்ன பரிகாரம் – குரு தரிசனம் (22)

மகா பெரியவாவின் ஸ்பரிஸம் பட்ட குளத்து நீர் – குரு தரிசனம் (21)

சாமி குத்தம், தடைபட்ட திருப்பணி, முடித்து வைத்த மகா பெரியவா! – குரு தரிசனம் (20)

இது தான் பக்தி என்பதை உணர்த்திய குடும்பம் – குரு தரிசனம் (19)

பார்வையாலேயே குணப்படுத்தும் வைத்தீஸ்வரன் – குரு தரிசனம் (18)

கேட்டது ஒரு பிள்ளையார் சிலை; கிடைத்ததோ ஒரு கோவில் – குரு தரிசனம் (17)

குரு தரிசனம் தந்த பரிசு – அன்றும், இன்றும் – இரண்டு உண்மை சம்பவங்கள் – குரு தரிசனம் (16)

மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம் – நெஞ்சை உலுக்கும் சம்பவம் – குரு தரிசனம் (15)

“ஏம்பா! உங்களுக்கு எப்போ பார்த்தாலும் பெரியவா சேவை தானா?” – குரு தரிசனம் (14)

வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!

வாழைப்பழத்துக்கு பதில் மகா பெரியவா கொடுத்த நெற்பொரி. ஏன்? எங்கு? – குரு தரிசனம் (13)

“கடமைக்கே நேரமில்லை, இதுல கோவிலுக்கு எங்கே சாமி போறது?” – குரு தரிசனம் (12)

காசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவேண்டும்? – குரு தரிசனம் (11)

குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….

http://rightmantra.com/?cat=126

===============================================================================

Also check short series on Kalady & Sornaththu Manai :

வையம் செழிக்க மகனை தியாகம் செய்த ஆர்யாம்பாளின் சமாதி – காலடி பயணம் (3)

சங்கரரின் காலை முதலை பற்றிய ‘முதலைக் கடவு’ – ஒரு நேரடி ரிப்போர்ட் (2)

பக்திக்கும் பாசத்திற்கும் வளைந்த பூர்ணா நதி – காலடி நோக்கி ஒரு பயணம் (1)

ஜகத்குரு ஆதிசங்கரர் வாழ்க்கை வரலாறு – ஒரு (வி)சித்திர அனுபவம்!

===============================================================================

[END]

 

9 thoughts on “‘சில சமயம் பகவான் மீதே கோபம் வருகிறதே?’ – தெய்வத்திடம் சில கேள்விகள்! (Part II)

  1. குரு வாரத்தில் தெய்வத்தின் குரலை தங்கள் பதிவின் மூலம் கேட்டதில் பரம திருப்தி. நடமாடும் தெய்வத்திற்கு என் சாஷ்டாங்க நமஸ்காரம்.
    குருவின் படம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் உள்ளது.

    இந்த பதிவை தட்டச்சு செய்தது நம் வாசகர்களுக்காக வழங்கியது இறைவனை நேரில் பார்ப்பது போல் செய்து விட்டீர்கள்

    வாழ்க வளமுடன்

    ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ்

    மகா பெரியவா கடாக்ஷம்

    நன்றி
    உமா வெங்கட்

  2. Dear Sundarji,

    Wonderful and very useful compilation of Mahaperiyava’s advises to the society presented in a way that is easy to digest and internalise.

    Regards

    Prabu

  3. Sundar Ji,

    There are no words to express my sincere thanks for publishing such a wonderful information. Maha Periyava looks real in this photo. I was searching for similar photo for a long time as I would like to do pushpa pada pooja to Periyava daily. I kindly request you to mail me the photo.

    My Sincere Paranams.

    Thanks,
    Rajaraman A

  4. பத்தும் விலை மதிப்பற்ற பொக்கிஷங்கள்.

    தாங்கள் கூறியது போல் கடைசி இரண்டு பதில்கள், கிரீடத்தில் அமையபெற்ற வைடூரியங்கள்

    குருவின் படம் பார்க்க பார்க்க பரவசம்

    நன்றி
    .

    .

  5. காலையில் படித்த உடனே மனதிற்கு அமைதியை தரும் பதிவு
    இதில் நம்முடைய பல சந்தேகங்கள் தெளிவாகின்றன

    குருவே சரணம்
    நன்றி

  6. எம்மை போன்ற எளியோரும் புரிந்து கொள்ளும்படி “தெய்வத்தின் குரல் ” மூலம் முத்து முத்தாய் 10 கேள்விகள். பல சந்தேகங்கள் நீங்கியது. தாங்கள் சொன்னது போல,கடைசி இரண்டு கேள்விகளும் – சொல்ல வார்த்தை இல்லை. கடைசி கேள்வி – தற்கால நிலையை எடுத்து காட்டுகிறது.

    வாழ்க்கை தரம் பற்றிய பதில் – என் மனதை மேலும் உறுத்துகிறது..நாம் தேட வேண்டியது – வாழ்க்கையா? இல்லை வாழ்க்கை தரத்தையா?

    ஆசிரயருக்கு நன்றிகள் பற்பல.

  7. வணக்கம் சுந்தர். அருமையான பதிவுக்கு நன்றி. அதிலும் மஹா பெரியவரின் திருபாதங்களுடன் காட்சி அளிக்கும் படம் அழகு.கண்ணில் ஒற்றிகொண்டேன்.படத்துக்கும்,தொகுப்புக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *