Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, October 8, 2024
Please specify the group
Home > Featured > இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை..!

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை..!

print
ம் தளத்தின் ஓவியர் திரு.சையத் ரமீஸ் என்னும் இளைஞர். மிகவும் சாதாரண ஒரு அடித்தட்டு இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர். நாம் வெளியிடும் நீதிக்கதைகள் மற்றும் பக்தி கதைகள் பலவற்றுக்கு ஓவியம் தீட்டி வருகிறார். நமது தளம் துவக்கப்பட்ட காலகட்டத்தில் (2012), நமக்கென்று பிரத்யேகமாக ஒரு ஓவியரை தேடி வந்தோம். ஆனால் யாரும் கிடைக்கவில்லை. பிரபல ஓவியர்களை அணுகியபோது ஒரு சிறு ஓவியத்திற்கு ரூ.5,000/- முதல் ரூ.10,000/- வரை கேட்டார்கள். மேலும் சிலர் “அப்படியே நாங்க கேட்குறதை நீங்க கொடுத்தாலும் எங்களுக்கு பிற கமிட்மெண்ட்கள் இருப்பதால் எங்களால் முடியாது” என்று கூறிவிட்டனர். மேலும் சிலர் இது போன்ற சிறு சிறு ஆர்டர்களில் ஆர்வம் காட்டவில்லை.

ஒரு கட்டத்தில் நமக்கு விரக்தி ஏற்பட்டது. இவர்களுக்கு ஆயிரக்கணக்கில் நாம் கொடுத்து நமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதைவிட, யாரேனும் கஷ்டப்படும் ஒரு ஓவியக் கல்லூரி மாணவருக்கு ஒரு சிறு தொகையை கொடுத்தால் கூட அவர் மனமுவந்து பணியை செய்வது மட்டுமல்ல, சந்தோஷமாக பெற்றுக்கொள்வரே என்று கருதி, ஓவியக் கல்லூரிகளாக சென்று தேடினோம்.

அப்படியிருக்கையில் ஒரு ஓவியப் பயிற்சி நிறுவனத்தை ஒருமுறை தொடர்பு கொண்டு நமது தேவை பற்றி தெரிவித்திருந்தோம். அதற்கு சில நாட்கள் கழித்து நம்மை தொடர்புகொண்ட ஒரு இளைஞர் தம்மை ரமீஸ் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு தாம் எழும்பூர் ஓவியக்கல்லூரி மாணவர் என்றும் தாம் ஓவியம் வரைந்து தர தயாராக இருப்பதாக கூறினார். (அப்போது ஓவியக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார்).

அவரை நமது வீட்டுக்கு நேரில் வரவழைத்து பேசி, அவரது சாம்பிள் ஓவியங்களை பார்த்து திருப்தி ஏற்பட்டவுடன் அட்வான்ஸ் தொகை கொடுத்து முதல் ஓவியத்தை வரையச் சொன்னோம். யாருமே கிடைக்காமல் தவித்துக்கொண்டிருந்த நமக்கு அந்த ஓவியம் பரமதிருப்தி அளித்தது. தொடர்ந்து அவ்வப்போது நாம் அவருக்கு ஓவியங்கள் வரைய வாய்ப்பு தருவது வழக்கம். (ரமீஸ் அவர்களின் ஓவியம் இடம்பெற்ற நமது பதிவுகளில் ஒன்று கடைசியில் தரப்பட்டுள்ளது. பார்க்கவும்!)

 மாநில அளவிலான ஓவியப்போட்டி ஒன்றில் பங்கேற்று நடிகர் விக்ரமிடம் பரிசு பெறும்போது... (2006 ஆம் ஆண்டு).
மாநில அளவிலான ஓவியப்போட்டி ஒன்றில் பங்கேற்று நடிகர் விக்ரமிடம் பரிசு பெறும்போது (2006)

தளம் துவங்கிய காலகட்டதிலிருந்தே நமக்கு ஓவியம் வரைந்து வரும் ரமீஸ் அவர்கள் எழும்பூரில் உள்ள ஓவியக் கல்லூரியில் பட்டம் பெற்றுவிட்டு தற்போது FREELANCE JOB செய்து வருகிறார். தேசிய, மாநில அளவிலான பல ஓவியப்போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றிருக்கிறார். அப்பா அன்வர் தையற்க் கலைஞர். அம்மா ஹவுஸ் ஒய்ப். உடன் பிறந்த தம்பி ஒருவர் உண்டு. அவர் கால்சென்டர்  ஒன்றில் பணியாற்றிவருகிறார். திரையுலகில் ஒரு சிறந்த இயக்குனராக வரவேண்டும் என்பதே இவர் லட்சியம். வின் டி.வி.யில். கார்ட்டூணிஸ்ட்டாக இரண்டு ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார்.

ஓவியம் வரைவது மட்டுமல்ல, 3D அனிமேஷன், விஷூவல் எஃபக்ட்ஸ், திரைக்கதை எழுதுவது, ஸ்பெஷல் எஃபக்ட் மேக்கப், மற்றும் ஸ்டோரி போர்ட் வரைவது என இப்படி பலவற்றில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற நமது பாரதி விழாவில் இவரை மேடையேற்றி நம் வாசகர்கள் அனைவருக்கும் இவரை அறிமுகப்படுத்தி வைத்து சிறப்பு விருந்தினர் திரு.கி.சிவக்குமார் அவர்கள் கைகளால் இவருக்கு பாராட்டு சான்றிதழ் அளித்தோம்.

ஒரு நாள் இவரிடம் பேசும்போது, “திறமையிருந்தா பத்தாது. அதை காசாக்குற வித்தை தெரிஞ்சிருக்கணும். அப்போ தான் லைப்ல சக்ஸஸ்புல்லா வரமுடியும் ரமீஸ்” என்றோம். அதற்கு பதிலளித்தவர் தமது உடனடி லட்சியம் சினிமாவில் STORY BOARD ARTIST ஆக வருவது தான் என்றும் ஆனால் அதற்கு தேவையான உபகரணம் (DRAWING PAD) இல்லாததால் தமக்கு மிகப் பெரிய இயக்குனர் ஒருவரிடம் கிடைத்த வாய்ப்பு பறிபோய்விட்டது என்று கூறி வருந்தினார்.

Rameez 1

அவர் கூறிய உபகரணம் DRAWING PAD. அனிமேஷன் கலைஞர்கள் மற்றும் கார்ட்டூனிஸ்ட்களுக்கு இது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. இதில் வரைந்தால் கணினி திரையில் நாம் வரைவது தோன்றும். அதை எடிட் செய்வது உள்ளிட்ட அனைத்தும் சுலபம். அதாவது பேப்பரில் வரைவது போல, கணினியில் வரையமுடியும்.

இவர் இது பற்றி சொன்னவுடன் அப்போதே நாம் இவருக்கு நிச்சயம் ஏதேனும் செய்யவேண்டும் என்று மனதுக்குள் தீர்மானித்துக்கொண்டோம்.

இதற்கிடையே சென்ற 2014 டிசம்பரில் நடைபெற்ற நம் பாரதி விழாவில் இவருக்கு அது தொடர்பாக ஏதேனும் செய்ய விரும்பினோம். ஆனால் விழாவையே நாம் கஷ்டப்பட்டு நடத்தி முடித்ததால் இதை செய்ய இயலாமல் போனது.

சமீபத்தில் ஒரு நாள் அவரிடம் தளத்திற்காக ஓவியம் ஒன்றை வரையவேண்டி பேசியபோது, அவர் பணிகள் எப்படி சென்று கொண்டிருக்கின்றன என்று விசாரித்தோம். DRAWING PAD இல்லாததால் மேலும் சில வாய்ப்புக்கள் தவறிப்போனதை தெரிந்துகொண்டோம். அடுத்த பாரதி விழா வரைக்கும் காத்திருக்காமல் உடனே ஏதேனும் செய்யவேண்டும் என்று தீர்மானித்தோம்.

இதுவரை இவர் நம்மிடம் வாய்திறந்து எதுவும் கேட்டதில்லை. நாம் அதை வாங்கித் தரவேண்டும் என்கிற எண்ணத்தில் நம்மிடம் பேசியதுமில்லை. அதாவது நம்மிடம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகிவருகிறார்.

Rameez

ஆனால், நம்மை சார்ந்தவர்கள், நமக்காக எந்தவித எதிர்ப்பார்ப்புமின்றி உழைக்கக்கூடியவர்கள் நலனை, இது போன்ற அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றித் தந்து பார்த்துக்கொள்ளவேண்டும் என்கிற ஆசை நமக்கு எப்போதும் உண்டு. ஆனால் சிலர் நம்மை புரிந்துகொள்ளாமல் அவசரப்பட்டுவிடுகிறார்கள். (நம்மைப் பொருத்தவரை அகத்தின் அழகு முகத்திலல்ல குரலிலேயே தெரிந்துவிடும்!).

“கவலைப்படாதீங்க நான் உங்களுக்கு ஒரு DRAWING PAD வாங்க முயற்சி பண்றேன்” என்று சொன்னோம்.

அன்றைய தினம் நம்மிடம் பேசிய வாசக நண்பர் ஒருவரிடம் இது பற்றி பகிர்ந்து “இப்போவே வாங்கிக்கொடுக்கனும்னு ஆசையா இருக்கு. ஆனா, என்னோட இப்போதைய நிலைமைல முடியாது. வர்ற ஆண்டுவிழாவுல அவருக்கு நிச்சயம் இதை கொடுக்கணும் சார். அந்த நேரம் உங்க கிட்டே சொல்றேன். ஏதாவது முடிஞ்சா பண்ணுங்க!” என்று நமது எண்ணத்தை தெரிவித்தோம்.

அவர், “அந்த DRAWING PAD விலை மட்டும் என்னன்னு விசாரிச்சி எனக்கு ஒரு கொட்டேஷன் அனுப்புங்க, நான் முடியுமான்னு பார்க்கிறேன்” என்றார்.

எதிர்பாராமல் கிடைத்த இந்த உதவியால் அவருக்கு நன்றி தெரிவித்த நாம், ரமீஸ் அவர்களை தொடர்புகொண்டு, “அந்த PAD விலையை விசாரிச்சி, கொட்டேஷனை எனக்கு இன்னைக்குள்ள மெயில் பண்ணுங்க…நல்ல கம்பெனி ஐட்டமாகவே விசாரிங்க! விலையை தெரிஞ்சி வெச்சிக்கிறேன் அவ்ளோ தான் வேற ஒண்ணுமில்லை!” என்றோம் ஜாக்கிரதையுடன். காரணம் அவரிடம் இது குறித்து எதிர்பார்ப்பு எதுவும் ஏற்பட்டுவிடக்கூடாது. ஒருவேளை நம்மால் வாங்கித் தரவியலாமல் போனால் அவருக்கு ஏமாற்றமாகிவிடும்.

சொன்னபடி ரிச்சி ஸ்ட்ரீட் சென்று விசாரித்து அன்று இரவு கொட்டேஷன் அனுப்பிவிட்டார். நண்பருக்கு அதை மின்னஞ்சல் செய்ய, அவர் மறுநாளே அந்த தொகையை நம் கணக்கில் செலுத்திவிட்டார்.

(மேற்படி பேருதவியை நல்கிய வாசகர் நமக்கு பிரதி மாதம் விருப்ப சந்தா செலுத்துவதுடன் இயன்றபோதெல்லாம் நமது அறப்பணிகளில் துணை நிற்பவர். தனது பெயரை எந்தக் காரணம் கொண்டும் ரமீஸ் அவர்களிடம் கூட வெளியிடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.)

உடனே ரமீஸ் அவர்களின் கணக்கில் பணத்தை ஆன்லைனில் செலுத்திவிட்டு, அவரை தொடர்புகொண்டோம். “உங்க கணக்குல ரூ.8000/- போட்டாச்சு. DRAWING PAD ஐ உடனே வாங்குங்க. கையோட வாங்கி ஒரு பில் காப்பியும் ஜெராக்ஸ் எடுத்துகிட்டு ஆபீஸ் வந்துடுங்க” என்றோம்.

அவருக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. நெகிழ்ச்சியில் வார்த்தைகள் வரவில்லை. “ரொம்ப தேங்க்ஸ் சார்” என்றார்.

சொன்னபடி ரிச்சி ஸ்ட்ரீட் சென்று அதை வாங்கிக்கொண்டு சில மணி நேரங்களில் நம் அலுவலகம் வந்துவிட்டார்.

நம் தளத்திற்காக ரிஷி அஷ்டவக்கிரர் ஓவியம் வரைந்தபோது, உடம்பை கோணலாக்கி அதை புகைப்படமெடுத்து அதைக்கொண்டு வரைந்தபோது...!
நம் தளத்திற்காக அஷ்டவக்கிரர் ஓவியம் வரைந்தபோது, உடம்பை கோணலாக்கி அதை புகைப்படமெடுத்து அதைக்கொண்டு வரைந்தபோது…!

அவரை வரவேற்று அமரவைத்து, நமக்கும் நம் வாசகருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல்கள் பற்றி தெரிவித்து, “இதுனால ஒரு குடும்பத்துக்கே விளக்கேத்தி வைக்கமுடியுங்கிறதால நம்ம வாசகர் உடனே நிறைவேற்றி தந்துவிட்டார். நீங்கள் நன்றி சொல்லவேண்டியது அவருக்கு தான்!” என்றோம்.

சென்ற ஆண்டு விழாவிலேயே அவருக்கு இதை நாம் செய்ய நினைத்திருந்ததும் ஆனால் முடியாமல் போய்விட்டது என்றும் தற்போது நிறைவேறியது மகிழ்ச்சி என்றும் கூறினோம்.

Rameez 3
உங்கள் பிரதிநிதியாக சகோதரர் மனோ திரு.ரமீஸ் அவர்களிடம் DRAWING PAD ஐ ஒப்படைக்கிறார்!

நம் தள வாசகரும் நண்பருமான ராகேஷ் அவர்களின் சகோதரர் மனோ அப்போது நம் அலுவலகம் வந்திருந்தார். இருவரும் சேர்ந்து ஒரு ரோல் மாடல் சந்திப்புக்கு செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்தோம். எனவே மனோவை வைத்து திரு.ரமீஸ் அவர்களுக்கு நம் தளம் சார்பாக DRAWING PAD பரிசளிக்கப்பட்டது.

“ALL THE BEST RAMEEZ. ஒரு பெரிய டைரக்டர் கிட்டே STORY BOARD ஆர்டிஸ்ட்டா நீங்க சேர வாழ்த்துறேன். கிடைக்கும் வாய்ப்புக்களை நன்கு பயன்படுத்திக்கொண்டு, முன்னேறி, நீங்களும் இதே போல திறமையிருந்தும் வழியில்லாமல் சிரமப்படுகிரவர்களுக்கு ஜாதி மத பேதம் பாராமல் உதவ வேண்டும்” என்று கேட்டுக்கொண்டோம். நிச்சயம் அவ்வாறு செய்வதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்.

“இதை உங்களுக்கு தந்தது நானோ என் நண்பரோ கூட இல்லை.”

“அப்போ யார்?” என்பது போல பார்த்தார்.

“பின்னால் சிரிச்சுகிட்டே இருக்கார் பாருங்க அவரு தான்!” என்று மஹா பெரியவரின் புகைப்படத்தை காண்பித்தோம்.

நாம் சொன்னவுடன் பின்னால் திரும்பி ஒரு கணம் பெரியவரை பார்த்தவர், “ஆமா… சார்… நானும் அப்படித்தான் நம்புறேன்!” என்றார்.

சுவாமி விவேகானந்தர் நூலை பரிசளித்தபோது...
சுவாமி விவேகானந்தர் நூலை பரிசளித்தபோது…

என்னவோ யோசித்தவர், தயங்கி தயங்கி, “இன்னும் ஒன்னே ஒன்னு கேட்பேன் தருவீங்களா?” என்றார்.

“என்ன சொல்லுங்க….”

“விவேகானந்தரோட புக் எதாச்சும் இருந்தா கொடுங்களேன்!”

“என்ன விவேகானந்தர் புக்கா? விவேகானந்தரை உங்களுக்கு புடிக்குமா?”

“நான் பிறந்து வளர்ந்ததே திருவல்லிக்கேணில இருக்குற ஐஸ் ஹவுஸ் ஏரியாவுல தான். அங்கே சுவாமி விவேகானந்தர்  இல்லத்துக்கு அடிக்கடி போவேன். எனக்கு மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன் அவரு தான். நான் இன்னைக்கு எத்தனையோ பிரச்சனைகள்ள எதிர்நீச்சல் போட்டு ஓரளவு நல்லாயிருக்கேன் அப்படின்னா அதுக்கு காரணம் சுவாமிஜியோட வார்த்தைகள் தான். துவண்டு கிடக்கும் நேரத்துல அது எனக்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திச்சு! அவர் இல்லேன்னா நான் இல்லே!!” என்றார்.

உடனே அவருக்கு நம்மிடம் இருந்த சுவாமி விவேகானந்தர் பற்றிய புத்தகம் ஒன்றை பரிசளித்தோம்.

புறப்படும்போது சொன்னார்… “சார்… உங்க அறிமுகம் எனக்கு கொஞ்சம் முன்னாடியே கிடைச்சிருக்கக்கூடாதான்னு தோணுது. ஒருவேளை கிடைச்சிருந்தா இந்நேரம் எங்கேயோ போயிருப்பேன்!” என்றார்.

“இதெல்லாம் நாம தீர்மானிக்கிற விஷயம் இல்லே. எல்லாம் அவன் செயல். நம்ம முயற்சிகள் அது பாட்டுக்கு தொடர்ந்துகிட்டே இருக்கணும். அதது நடக்கவேண்டிய நேரத்துல நிச்சயம் நடக்கும். உங்க டெடிகேஷன் எனக்கு தெரியும். நல்லா வருவீங்க வாழ்த்துக்கள்!”

Swami Vivekananda Q copy

இந்த பதிவில் நாம் உணர்த்த வரும் விஷயங்கள் என்னவென்றால்… நம்மைச் சார்ந்தவர்கள் நலனை நம்மால் இயன்ற அளவில் நாம் பார்த்துக்கொள்ளவேண்டும். தர்மத்திலும் தலையாய தர்மம் அது. உங்களால் முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் அந்த எண்ணமாவது உங்களுக்கு வரவேண்டும். அதை செயல்படுத்துவதர்க்குரிய வழிவகைகளை ஆண்டவன் ஏற்படுத்தி தருவான். இப்படி ஒரு உதவியை ரமீஸ் அவர்கள் நம் தளம் வாயிலாக பெறப்போகிறார் என்று அதை நிறைவேற்றிய முன்தினம் வரை நமக்கோ அவருக்கோ தெரியாது. ஆனால், இன்று அவரது பணிக்கு மிகவும் தேவையான அந்த உபகரணம் அவர் கைகளில்! இது சாதாரண விஷயம் அல்ல. சம்பந்தப்பட்ட வாசகருக்கு இங்கே நன்றியை தெரிவித்துக்கொள்வதுடன், அனைவரையும் ஒரு கருவியாக்கி இதை செவ்வனே நிறைவேற்றிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் மஹா பெரியவருக்கும் நம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்!!

* நாளை  முதல் இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் நோன்பு துவங்குகிறது. இந்த பதிவு இன்று அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி.

===============================================================================

ஒரு முக்கிய விஷயத்தை அனைவருக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்!

நம் தளத்தில் பதிவுகளின் இறுதியில் விருப்ப சந்தா குறித்த கோரிக்கை அளிக்கப்படுவது நீங்கள் அறிந்ததே. அது தவிர அவ்வப்போது நாம் செய்யக்கூடிய அறப்பணிகளுக்கும் உதவி கோரி அறிவிப்பு வெளியிடுகிறோம். அது குறித்து ஒரு சிறு விளக்கம்.

1) விருப்ப சந்தா

இது தான் நமது வாழ்வாதாரம். தளம் நடப்பது இதைக் கொண்டு தான். இதன் மூலம் தான் தளத்தின் நிர்வாக செலவுகள் செய்யப்படுகிறது. இதை அனைத்து வாசகர்களிடம் இருந்தும் – அவரவர் சக்திக்கு ஏற்ப – எதிர்பார்க்கிறோம். ஆனால் இதைக் கட்டாயப்படுத்த விரும்பவில்லை. பெயரைப் போலவே இது விருப்ப சந்தா. (VOLUNTARY SUBSCRIPTION).

நம் தளத்தின் நிர்வாகப் பணிகளில் உதவுவதே சிறந்த புண்ணிய காரியம் தான் என்றாலும் ‘விருப்ப சந்தா’ செலுத்தும் வாசகர்களுக்கு பிரதியுபகாரம் செய்யவேண்டி அதில் கிடைக்கும் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தை நூம்பல் கோவிலில் நடைபெறும் கோ-சம்ரட்சணத்திற்கு பயன்படுத்தப்படுகிறோம்.

2) சேவைகளில் உதவி வேண்டி விடுக்கும் கோரிக்கைகள்

இது அவ்வப்போது நாம் செய்யக்கூடிய, ஒப்புக்கொள்ளக்கூடிய அறப்பணிகளுக்கு. இதை நாம் அனைத்து வாசகர்களிடமிருந்தும் எதிர்பார்க்கவில்லை. அந்தந்த சேவைகளில் இணைய விருப்பமுடைய வாசகர்களிடமிருந்து தான் எதிர்பார்க்கிறோம். அவ்வளவே. செய்யும் சேவையானது செம்மையாக செய்ய இது துணை புரியும். இதில் கிடைக்கும் தொகையை வைத்து பிரதி மாதம் காசி விஸ்வநாதர் கோவிலில் கோ-சம்ரட்சணம் செய்யப்படுகிறது. (இது நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது.)

விருப்ப சந்தா என்பது அனைத்து வாசகர்களின் கடமை. சேவைகளில் உதவி என்பது அவரவர் சௌகரியம். இரண்டிற்கும் உதவ விரும்பினால் மிக்க மகிழ்ச்சி.

===============================================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

===============================================================================

Also check :

நல்லதை நினைத்தால் போதும்… நடத்திக்கொள்ள ஆண்டவன் தயார்!

ஒவ்வொரு வீட்டிற்கும் விளக்கு!

இது கடிதமல்ல… கடவுளின் குரல்!

அன்பு மிகுந்த தெய்வமுண்டு துன்பம் அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!

தேடும் செல்வம் ஓடிவிடும்; தெய்வம் விட்டுப் போவதில்லை! – யாமிருக்க பயமேன் ? (10)

===============================================================================

ரமீஸ் அவர்களின் ஓவியம் இடம்பெற்ற பதிவுகளில் ஒன்று…

கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்! – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்!

===============================================================================

[END]

7 thoughts on “இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை..!

  1. ரமீஷின் வாழ்கையில் ஒளி விளக்கு ஏற்றிய நம் வாசகரின் உயர்ந்த உள்ளத்திற்கு என் மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தாங்கள் மிகவும் விரும்பும் விவேகனந்தர் தான் ரமீசை தங்களிடம் கொண்டு சேர்த்து , அவருக்கு தங்கள் மூலமாக அவருக்கு உதவி செய்து இருக்கிறார்.. ரமீஸ் மேலும் மேலும் முன்னேற இறைவன் அருள் புரிவார்

    நாம் அடுததவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை நம் வாசகர்கள் மத்தியில் ஆனித் தரமாக பதிய வைக்கிறீர்கள்.

    DOING GOOD TO OTHERS IS VITRUE, INJURING OTHERS IS SIN – BY SWAMIJI

    நன்றி
    உமா வெங்கட்

  2. இந்த பதிவை படித்த பின் பின்னூட்டம் இட வார்த்தைகள் இல்லை… மிகவும் நெகிழ்ச்சியான பதிவு.

    “நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை”
    ரமீஸ் அவர்களுக்கு உதவி செய்த நல்ல உள்ளம் படைத்தவருக்கு என் பாராட்டுக்கள். இவரைப் போன்றும் உங்களை போன்றும் நல்லவர்களுக்கு மஹா பெரியவா-வின் ஆசி என்றும் உண்டு.

    நம் தளம் மென்மேலும் வளர என்னால் ஆன உதவியை செய்ய தயாராக இருக்கிறேன்.

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர.

  3. வணக்கம் சுந்தர் சார்

    மிகவும் அருமையான பதிவு

    நன்றி

  4. Dear Sundar Sir

    Mahaperiyava Thiruvadi Saranam. Really Great. Again I am bowing my head to your great friend who helped our brother Shri Rameez. Mahaperiyava already blessed Rameez by awarding a drawing pad. In this connection I request you to kindly pray for me to Mahaperiyava to give such opportunities to me. I also wish to participate such good things.

    Also I request you to write some article about Sringeri Mahasannidhanam.

    Thanks and Regards

    S. Chandrasekaran

  5. ஒவியர் ரமீஷ்க்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்தக்கள்.
    நமது அலுவலகத்தில் அவரை நீங்கள் எனக்கு அறிமுகம் செய்தது, இன்றும் என்நினைவில் பசுமரத்த்தாணி போல் உள்ளது.

    குறிப்பறிந்து உதவி செய்வதில் தங்களுக்கு நிகர் யாரும் இல்லை. பாராட்டுக்கள்.

    மகா பெரியவரின் ஆசியுடன், தனது ஓவிய தொழிலுக்கு தேவையான முக்கிய உபகரணத்தை, நல்ல எண்ணங்களை கொண்ட மனிதர்கள் மூலம் பெற பெற்ற அந்த இளைஞர், வாழ்வில் மிக சிறந்த நிலையை விரைவில் அடைவது உறுதி

  6. வணக்கம்….

    திரு.ரமீஸ் அவர்களுக்கு நம் உளமார்ந்த வாழ்த்துக்கள்…….. அவருக்கு நம் தளத்தின் மூலம் செய்யப்பட்ட உதவி குறித்து மகிழ்கிறோம்…… மென்மேலும் தகுதி உடையவர்களுக்கு இது போல் உதவிகள் தொடர வேண்டும் என்றும், அவர்களும் வாழ்வில் உயர வேண்டும் என்றும் எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறோம்………. வாழ்த்துக்கள்……….

  7. Sundar Anna,

    Thanks for giving this great opportunity and added me in your spiritual path.
    This is my great,happiest moment in my life.

    Thanks,
    R.Mano

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *