Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 8, 2024
Please specify the group
Home > Featured > ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடிய திருஞானசம்பந்தர் குரு பூஜை!

ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடிய திருஞானசம்பந்தர் குரு பூஜை!

print
திருஞானசம்பந்தர் குரு பூஜையையொட்டி கடந்த 03/06/2015 புதன்கிழமை அன்று சைதையில் உள்ள திருவள்ளுவர் குருகுலம் என்னும் ஆதரவற்றோர் இல்லத்தில் நம் தளம் சார்பாக திரையிடப்பட்ட ஞானசம்பந்தர் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ‘ஞானக் குழந்தை’ திரைப்படம் பற்றிய பதிவு இது.

குழந்தைகளுக்கு குறிப்பாக இதுபோன்ற ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு பக்தியையும் நற்பண்புகளையும் வளர்க்கும் திரைப்படங்களை போட்டு காண்பிக்கவேண்டியதன் அவசியத்தை ‘தீயவை மாள, பிணிகள் அகல, எதிர்கால சந்ததியினர் சிறக்க, தளம் சார்பாக ஒரு தடுப்பூசி!’ என்ற பதிவில் நாம் விளக்கியிருந்தது  நினைவிருக்கலாம்.

Thiruvalluvar Gurukulam 3

Thiruvalluvar Gurukulam 8இந்த ஸ்க்ரீனிங் பற்றி விளக்கி வாசகர்களிடம் உதவி கோரியிருந்தோம். ஆனால், என்னவோ தெரியவில்லை எவரிடமிருந்தும் எந்த உதவியும் கிடைக்கவில்லை. “ஆகட்டும்…சமாளிப்போம்” என்று ஏற்பாடுகளை தீவிரப்படுத்தினோம்.

இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு யாராவது ஒருவர் உடனிருந்தால் நன்றாக இருக்கும். இது பற்றி அறிந்ததும் வாசகர் ராகேஷ் அவர்களின் சகோதரர் மனோ, தான் வருவதற்கு தன் விருப்பத்தை தெரியப்படுத்தினார். இவர் டி.எம்.இ. முடித்துவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறார். (இவர் ஏற்கனவே நம்முடன் சில ரோல்மாடல் / வி.ஐ.பி. சந்திப்புக்களுக்கு வந்துள்ளார்.)

 பிஸ்கட் பாக்கெட் கொடுத்தபோது...
பிஸ்கட் பாக்கெட் கொடுத்தபோது…

Thiruvalluvar Gurukulam 4

“புதன் மாலை 4.00 மணிக்கு ரைட்மந்த்ரா அலுவலகம் வந்துவிடுங்கள்… இங்கே சில பொருட்களை எடுத்துச் செல்லவேண்டும். இங்கிருந்து நாம் ஒன்றாக செல்லலாம்” என்று அவரிடம் கூறினோம்.

மனோ வந்தவுடன், டி.வி.டி. பிளேயர், குழந்தைகளுக்கு கொடுக்க பிஸ்கட் பாக்கெட்டுகள், பாக்கெட் சைஸ் சிவபுராணம் நூல்கள் என் அனைத்தையும் எடுத்துக்கொண்டு திருவள்ளுவர் குருகுலம் கிளம்பினோம்.

ப்ரொஜெக்டர் மற்றும் ஸ்க்ரீன் வாடகைக்கு எடுத்த நிறுவனத்தில், அந்த டெக்னீசியன் நம்மை தொடர்புகொண்டு நேரே VENUE வந்துவிடுவதாக சொன்னார்.

நாம் சென்ற நேரம், அனைத்தும் தயாராக இருந்தது. குழந்தைகள் ஆர்வமுடன் படத்தை காண குழ்மியிருந்தார்கள்.

Thiruvalluvar Gurukulam 5

Thiruvalluvar Gurukulam 7குழந்தைகள் அல்லவா… எனவே படத்தை சற்று கவனமுடன் பார்க்கவேண்டும் என்பதற்காக அவர்களிடம் ஞானசம்பந்தரைப் பற்றியும் அவர் வாழ்ந்த காலகட்டம் மற்றும் புரிந்த அற்புதங்கள் குறித்தும் ஒரு சிறு உரையை கொடுத்தோம். மேலும், படத்தை கவனமாக பார்க்கவேண்டும் என்றும், இது கற்பனை கதையல்ல உண்மை கதை என்று கூறி படம் முடிந்தவுடன் கேள்விகள் கேட்போம்  சரியாக பதில் சொல்பவர்களுக்கு பரிசுகள் தரப்படும் என்றும் கூறினோம்.

படம் 7.30 க்கு முடிந்தவுடன் டின்னர் முடித்துவிட்டு, அடுத்து அரைமணி நேரம் டாம் & ஜெர்ரி திரையிடப்படும் என்றும் கூறினோம். குழந்தைகள் குதூகலத்துடன் தலையசைத்தார்கள்.

முன்னதாக படம் துவங்குவதற்கு முன்னர், அனைவருக்கும் ஒரு சிறிய பிஸ்கட் பாக்கெட் கொடுத்தோம்.

Thiruvalluvar Gurukulam 6
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடி…

Thiruvalluvar Gurukulam 29படம் துவங்கி ஓட ஆரம்பித்தது. சில நகைச்சுவை காட்சிகளில் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

நமது கணிப்புப் படி மொத்தமிருந்த சுமார் 60 குழந்தைகளுள் 15 பேர் படத்தை நன்கு பார்ப்பார்கள், ஓரளவு அதில் உள்ள விஷயத்தை கிரகித்துக் கொள்வார்கள் என்பது புரிந்தது. காரணம், மற்ற குழந்தைகள் அனைவரும் வயதில் சிறியவர்கள். அவர்களால் இந்த படத்தை பார்த்து புரிந்துகொள்ள முடியுமா என்று தெரியாது. அவர்கள் மனதுக்குள் ‘சிவாய நம’ என்கிற மஹா மந்திரமும் ‘திருஞானசம்பந்தர்’ என்கிற தெய்வக் குழந்தையின் பெயரும் புகுந்தாலே போதும் அதுவே நமக்கு மிகப் பெரிய வெற்றி தான் என்று கருதினோம்.

நாம் நினைத்தது போலவே மொத்தமிருந்த குழந்தைகளில் சுமார் 20 பேர் படத்தை பார்க்க, மற்ற குழந்தைகள் விளையாடிக்கொண்டும், தூங்கிக்கொண்டும் நேரத்தை கழித்தன. படத்தைவிட இது பார்க்க ஆனந்தமாக, சுவாரஸ்யமாக இருந்தது.

Thiruvalluvar Gurukulam 19

படம் நிறைவடைந்தவுடன், “டின்னர் சாப்பிட்டுவிட்டு வாருங்கள்… வந்தவுடன் சில கேள்விகள் கேட்கிறேன்… அதன் பின்னர் டாம் & ஜெர்ரி பார்க்கலாம்” என்று கூறினோம்.

அனைவரும், “ஹையா…. ஜாலி….” என்று கூறிக்கொண்டே டைனிங் ஹாலுக்கு ஓடினர்.

இதற்கிடையே, நாம் சைதை மார்க்கெட்டுக்கு சென்று பென்சில் பாக்ஸ் full செட், மற்றும் பேனா பென்சில் ரப்பர் ஆகியவற்றை வாங்கி  வந்தோம்.

மாணவர்கள் உணவை முடித்துவிட்டு மீண்டும் வந்து அமர்ந்தவுடன் படம் குறித்து கேள்விகள் கேட்டோம்.

* சம்பந்தரின் தந்தை பெயர் என்ன? (சிவபாதவிருதயர்)
* சம்பந்தர் பாடிய பாடலின் முதல் வார்த்தை என்ன? (தோடுடைய செவியன்)
* திருநாவுக்கரசரின் இயற்பெயர் என்ன? (வாகீசர்)
* அவர் சகோதரி பெயர் என்ன? (திலகவதியார்)

இப்படி சில கேள்விகள் கேட்டோம். சிறு குழந்தைகள் அல்லவா திணறினார்கள். பல பெரியவர்களுக்கே இந்த கேள்விகளுக்கு விடை தெரியாது எனும்போது முதன்முறை சம்பந்தர் வரலாற்றை பார்க்கும் இவர்களுக்கு எப்படி தெரியும்?

இன்னும் கேள்வியை சுலபமாக்குவோம் என்று கருதி, “உங்களில் யாராவது இங்கே வந்து இந்த படத்தின் கதை என்ன என்று சுருக்கமாக சொல்ல முடியுமா?” என்று கேட்டோம்.

ஒரு மாணவி முன் வந்தாள். அவளை வரவேற்று உற்சாகப்படுத்தி, “தப்பா சொன்னாக் கூட பரவாயில்லேம்மா… நீ என்ன பார்த்தியோ… உனக்கு என்ன புரிஞ்சுதோ அதை சொல்லு” என்றோம்.

அம்மாணவி, சம்பந்தரின் வரலாற்றை தத்ரூபமாக விளக்க ஆரம்பித்தாள். நமக்கு ஒரே பரவசம். மாணவர்களுக்கும் ஒரே ஆனந்தம். ஏதோ அவர்களே சொல்வது போல அத்தனை மகிழ்ச்சி அவர்கள் அனைவரிடத்திலும். (அது தான் குழந்தைகள் குணம்!)

ஓரளவு அந்த மாணவி, திரைப்படத்தில் பார்த்து புரிந்துகொண்ட சம்பந்தரின் வரலாற்றை கூற, நாம் இடைமறித்து, “போதும்.. போதும்… பிரமாதம்” என்று கூறினோம்.

“குழந்தைகளே… பார்த்தீங்கல்ல… என்ன அருமையா சொன்னாங்க இவங்க… இவங்களுக்கு தானே ப்ரைஸ் கொடுக்கணும்?”

“ஆமாம்… ஆமாம்….” என்றனர் கோரசாக.

“உன் பேர் என்னம்மா?”

“ஜான்சி!”

“ஓ… வெரிகுட்… நீ கிறிஸ்டியனா?” நமது சந்தேகத்தை கேட்டோம்.

“ஆமாம்…” என்றாள் அந்த மாணவி.

“வெரி குட்… வெரி குட்” என்று கூறி, பலத்த கரகோஷங்களுக்கு இடையே, அம்மாணவிக்கு பென்சில், ஸ்கேல், பேனா, ரப்பர், ஷார்ப்பனர் அடங்கிய ஒரு பாக்ஸை கொடுத்தோம்.

Thiruvalluvar Gurukulam 11

ஜான்சி எட்டாம் வகுப்பு படித்து வருகிறாளாம். அவள் மனதில் எந்த மத துவேஷமும் இல்லை என்பது அவளிடம் பேசும்போது புரிந்தது.

அப்புறம் குழந்தைகளிடம் திரும்பி, “அப்புறம் வேற யாராவது இதே மாதிரி இவங்க விட்ட இடத்தில இருந்து சொல்ல முடியுமா?” என்று கேட்டோம்.

மணிமேகலை என்ற குழந்தை, முன்வந்தது. அக்குழந்தைக்கு அதிகபட்சம் எட்டு வயதிருக்கும்.

ஜான்சி விட்ட இடத்திலிருந்து அவள் தொடர்ந்தாள். இருப்பினும் கோர்வையாக சரியாக சொல்ல வரவில்லை. யோசித்து யோசித்து சொன்னாள். பெயர்களில் பல பிழைகள் இருந்தன.

மாணவர்களை நோக்கி, “மணிமேகலைக்கு தான் பார்த்ததை சரியா சொல்ல வரலை. தப்பாத் தான் சொல்றா. ஆனாலும் நீங்கல்லாம் தயங்கும் போது அவ தைரியமா இங்கே வந்து தன் கருத்தை வெளிப்படுத்தினா பார்த்தீங்கல்ல… அந்த எண்ணத்தை, தைரியத்தை நாம் பாராட்டனும் இல்லையா? ஸோ, மணிமேகலைக்கு இரண்டாம் பரிசு என்று கூறி, ஒரு உயர் ரக பென்சிலும் எரேசரும் பரிசளித்தோம்.

Thiruvalluvar Gurukulam 12

இதற்கிடையே, அடுத்து என்ன படம் பார்க்க விரும்புறீங்க என்றோம்…. “காஞ்சனா 2, அரண்மனை” என்றெல்லாம் குரல்கள் வந்தன. ஆனால், ஒரே ஒரு மாணவன் மட்டும் வயது அதிகபட்சம் பத்து இருக்கும். “அங்கிள்… பாரதி படம் போடுங்க அங்கிள்” என்றான்.

நம் புருவம் உயர்ந்தது…. “ஏன்பா அந்த படத்தை மட்டும் செலக்ட் பண்ணி கேக்குறே?”

“அதுல பாட்டெல்லாம் நல்லாயிருக்கும். படமும் நல்லாயிருக்கும்!” என்றான்.

“ஒ.கே. அடுத்த மாசம் உங்களுக்கு ‘பாரதி’ படம் போடுறேன். படம் முடிஞ்சதும் இதே போல, ஒரு அரை மணிநேரம் டாம் & ஜெர்ரி. ஒ.கே வா…?”

“ஒ.கே. ஒ.கே.” என்று அனைவரும் கையை தூக்கி நம் கருத்தை ஆமோதித்தனர்.

Sivapuranam

அடுத்து டாம் & ஜெர்ரியை ப்ரொஜெக்டரில் போடுவதற்கு முன்னர் அனைவருக்கும் ‘சிவபுராணம்’ பாடல் அடங்கிய ஒரு சிறிய புக்கை கொடுத்தோம். அனைவருக்கும் நாம் நெற்றியில் திருநீறு வைத்துவிட அந்த புத்தகம் தரப்பட்டது. மாணவர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாங்கிச் சென்று அமர்ந்தனர்.

Thiruvalluvar Gurukulam 14

பல குழந்தைகள் நன்றி நன்றி என்று சொல்ல, ஒரு சிலர் கையெடுத்து வணங்கி, “வாழ்க வளமுடன்” என்று சொன்னது நம்மை நெகிழச் செய்தது. (யாரேனும் ஏதேனும் கொடுத்தால் அவர்களுக்கு நன்றி கூறவேண்டும், வாழ்க வளமுடன் கூறவேண்டும் என்று அவர்களுக்கு சொல்லியிருப்பார்கள் போல!)

Thiruvalluvar Gurukulam 15

Thiruvalluvar Gurukulam 16Thiruvalluvar Gurukulam 18“இந்த புத்தகத்தை எல்லாரும் பத்திரமா வெச்சிக்கனும். உங்கள் எல்லாருக்கும் தமிழ் படிக்க தெரியும்னு நினைக்கிறேன். இதை நிச்சயம் படிங்க… உங்களுக்கு நல்லா படிப்பு வரும்! நீங்க கேட்கிறது எல்லாம் சாமி தரும்!” என்றோம்.

“அடுத்த முறை வரும்போது இந்த புக்கை கரெக்டா படிச்சி இந்த பாட்டை ஒப்பிக்கிறவங்களுக்கு தனியா கிப்ட் ஒன்னு தருவேன்!” என்றோம்.

மாணவர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். சிவபுராணம் 50 நூல்கள் தான் கிடைத்தது. மொத்தம் 60 பேர் என்பதால் மீதி 10, விநாயகர் அகவல் வாங்கியிருந்தோம். எஞ்சியிருந்தவர்களுக்கு விநாயகர் அகவல் தந்தோம்.

Thiruvalluvar Gurukulam 20
மனவளர்ச்சி குன்றிய அபியுடன்…

Thiruvalluvar Gurukulam 9

Thiruvalluvar Gurukulam 25
பிள்ளையாரை பற்றியதில் தான் எத்தனை ஆனந்தம் இவளுக்கு…

அப்போது மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமி, அபி என்பவள், தனக்கு சிவபுராணத்திற்கு பதில், விநாயகர் அகவல் வேண்டும் என சைகையில் நம்மிடம் உணர்த்தினாள். அவளுக்கு விநாயகர் அகவல் தந்தோம். நூலின் முகப்பில் உள்ள பிள்ளையார் படம் அவளுக்கு ஏதோ ஒரு வித ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கும் போல.

அச்சிறுமியின் நிலை கண்டு கண்களில் நீர் துளிர்த்தது. ஒரு பெண் குழந்தை, மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பவள், வளரும்போது எத்தனை சிரமங்களை சந்திக்கவேண்டியிருக்கும்? அவளுக்காக அந்த நொடி சர்வேஸ்வரனிடம் பிரார்த்தித்தோம்.

Thiruvalluvar Gurukulam 23

Thiruvalluvar Gurukulam 22Thiruvalluvar Gurukulam 24அடுத்து டாம் & ஜெர்ரி திரையிடப்பட்டது. மாணவர்கள் விழுந்து விழுந்து சிரித்தபடி படத்தை பார்த்தது கண்கொள்ளா காட்சி. சிரிப்பையே கண்டிராத இப்படிப்பட்ட குழந்தைகள் முகத்தில் சிரிப்பை வரவழைப்பதைவிட பெரிய புண்ணியம் ஏதேனும் இருக்க முடியுமா என்ன?

டாம் & ஜெர்ரி நிறைவடைந்தவுடன், அனைவருக்கும் அளித்த சிவபுராணம் நூல்களை வாங்கி, அதில் அவரவர் பெயர்கள் எழுதித் தந்தோம். ஏனெனில், நாளை இது என்னோடது, இது உன்னோடது என்று ஆளாளுக்கு சண்டையிட்டுக் கொள்வார்கள்.

நூல்களை வாங்கி பெயர்களை எழுதிக்கொண்டிருந்தபோது, ஒரே ஒரு குழந்தை மட்டும் நாம் பெயர் எழுதித் தந்த புத்தகத்தை திருப்பி கொடுத்து “அங்கிள் என் அம்மா பேரையும் இதுல எழுதுங்களேன்” என்றது. தன் தாய் மீது அந்த குழந்தை வைத்திருக்கும் பாசம், நெஞ்சை நெகிழ வைத்தது.

வாங்கி அம்மா பெயர் எழுதிக் கொடுத்தோம். இதைப் பார்த்த மேலும் சில குழந்தைகளும் “என் அம்மா பேரை எழுதிக் கொடுங்க… என் அம்மா பேரை எழுதிக் கொடுங்க” என்று பிடிவாதம் பிடித்தன. எல்லாரிடமும் மீண்டும் புக்கை வாங்கி அவர்களின் அம்மா பெயரை எழுதிக் கொடுத்தோம். அதற்கு பிறகு நடந்தது தான் ஹைலைட். ஒரே ஒரு சிறுவன் நம்மிடம் வந்தான். பெயர் நினைவில் இல்லை. அவனுக்கு அப்பா அம்மா இல்லை போல, “அங்கிள் அங்கிள் உங்க பேரை எழுதிக் கொடுங்க” என்றான்.

“என் பேர் எதுக்குப்பா? இது உன்னோட புக் உன் பேரைத் தான் எழுதனும்” என்றோம்.

“இல்லை… இல்லை… நீங்க உங்க பேரை எழுதித் தாங்க” என்றான். நாம் தயங்க,  அழுதுவிடுவான் போலிருந்தது. எனவே, நம் பெயரை எழுதி தந்தோம். இதை பார்த்த மற்ற குழந்தைகளும் ஆளாளுக்கு அந்த நூலில் நம் பெயரையும் எழுதித் தரச் சொல்லி பிடிவாதம் பிடித்தன.

கள்ளங்கபடமற்ற குழந்தைகள் மனதில் நீங்கள் இடிம்பிடித்தால் போதும்… கடவுளின் மனதில் இடம் பிடித்தது போலத் தான். அந்த வகையில் நமக்கு மிகப் பெரிய மனநிறைவை தந்தது இந்த நிகழ்ச்சி.

குழந்தைகள் நம் பெயரை எழுதச் சொல்ல காரணம் என்ன? உளவியல் ரீதியாக சிந்தித்தால் புரியும்.

நாம் அவர்களுடன் இருந்த ஒவ்வொரு நொடியும் அவர்கள் அத்தனை சந்தோஷமாக இருந்தார்கள். வெறும் கண்களுக்கு விருந்து மட்டுமல்ல, வயிற்றுக்கும் பிஸ்கட்  கொடுத்தது, அவர்களிடம் பரிவுடன் பேசியது, அவர்களில் ஒருவனாக மாறி அவர்களுடன் சிரித்து மகிழ்ந்தது இப்படி பல விஷயங்களால் அவர்கள் மனதிற்குள் நாம் இடம்பிடித்துவிட்டோம். தங்களுடைய அன்பை ஏதேனும் ஒரு வகையில் அவர்கள் நமக்கு RECIPROCATE செய்ய விரும்பினார்கள். அதன் வெளிப்பாடு தான் இந்த அன்பு.

கடைசீயில் இருந்த சில குழந்தைகள் ப்ரொஜெக்டர் கம்பெனி டெக்னீசியன் கார்த்திக்கையும் மனோவையும் கூட அவர்களில் சிலர் அணுகி நம் பெயருடன் அவர்கள் பெயரையும் நூலில் எழுதித் தரச் சொல்லி கேட்டது…. கவிதை! கவிதை!!

முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு மாலை புறப்படும்போது “சற்று அவசரப்பட்டு அகலக்கால் வைத்துவிட்டோமோ?” என்று பொருளுதவி கிடைக்காததினால் யோசித்தோம். ‘ஒவ்வொரு மாதமும் இதை செய்யாமல், மூன்று மாதத்திற்கு ஒரு முறை இது போல ஏற்பாடு செய்யலாம்’ என்று சிந்தித்தபடி தான் மாலை நிகழ்ச்சிக்கு வந்தோம்.

ஆனால், இவர்களின் முகத்தில் தெரிந்த சந்தோஷமும் கள்ளங்கபடமற்ற இவர்களின் அன்பும், ஒரு கிறிஸ்தவ மாணவி, சம்பந்தர் வரலாற்று திரைப்படத்தை பார்த்து சரியாக கதை சொல்லி முதல் பரிசை பெற்றதும் நம் எண்ணத்தை மாற்றிவிட்டன. கோ-சம்ரட்சணம் எப்படி யார் உதவினாலும் உதவாவிட்டாலும் தவறாமல் நம் தளம் சார்பாக செய்யப்படுகிறதோ (சில சமயம் பர்சனல் ரிஸ்க் எடுத்து செய்கிறோம்) அதே போல இது போன்ற MOVIE SCREENING ம் கூட தவறாமல் ஏற்பாடு செய்ய தீர்மானித்திருக்கிறோம். பக்தி படங்கள் மட்டுமல்ல, பாரதி, காமராஜர், பகத்சிங், ராமானுஜன் போன்ற படங்களையும் திரையிட வேண்டும். இவர்களுக்கும் இன்னும் மதிப்பு மிகுந்த பரிசுகளை வழங்கி குதூகலத்தில ஆழ்த்தவேண்டும் என்றும் தீர்மானம் செய்தோம்.

இந்த நிகழ்வில் இன்னொரு ஹைலைட் என்ன தெரியுமா? ப்ரொஜக்டர் வாடகை எடுத்த விஷன் நெக்ஸ்ட் கம்பெனியிலிருந்து வந்திருந்த டெக்னீசியன் கார்த்திக் என்பவர், அவரும் படத்தை இன்வால்வ்மென்ட்டாக பார்த்தது தான். மேலும், நமக்கென்ன நம்ம வேலையா இது என்று இருக்காமல், குழந்தைகள் ‘சிவபுராணம்’ வாங்கும்போது வரிசையை ஒழுங்குபடுத்துவது, பின்னர் அவர்களை அமரவைப்பது என்று அர்பணிப்பு உணர்வுடன் அங்கு நம்முடன் சேர்ந்து பணியாற்றினார்.

Thiruvalluvar Gurukulam 17
ப்ரொஜெக்டர் டெக்னீசியன் கார்த்திக் ‘சிவபுராணம்’ வழங்குகிறார்

எனவே, அவரை கொண்டும் சில குழந்தைகளுக்கு சிவபுராணம் கொடுக்கச் சொன்னோம். பின்னர் பில் செட்டில் செய்யும்போது, அவரிடம் தனியாக ரூ.100/- ஐ கொடுத்து “இதை நைட் டிபன் சாப்பிட வெச்சிக்கோங்க” என்றோம். ஆனால் அவர் ஏற்க மறுத்துவிட்டார். “இதோ டிப்ஸோ அன்பளிப்போ இல்லை. உங்களுடைய ஆத்மார்த்தமான ஈடுபாட்டுக்கு என்னால முடிஞ்சா ஒரு சிறிய அங்கீகாரம்” என்றோம்.

“இல்லை சார் வேண்டாம். எவ்வளவு பெரிய விஷயம் நீங்க செஞ்சிருக்கிறது! இது போன்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நானும் சில மணிநேரங்கள் செலவழித்தேன் என்பதே நான் செய்த பாக்கியமா நினைக்கிறேன்!!” என்றார்.

முதல் பரிசு பெற்ற ஜான்சியுடன்....
முதல் பரிசு பெற்ற ஜான்சியுடன்….

“இதை ஏற்றுக்கொண்டு தான் தீரணும்னு நீங்க சொன்னீங்கன்னா இந்த நிகழ்ச்சிக்கு என்னோட பங்களிப்பா இதை வெச்சிக்கோங்க!” என்று நம்மிடமே அந்த பணத்தை திருப்பித் தந்தார்.

படத்தை ஸ்க்ரீன் செய்ய நாம் எடுத்துக்கொண்ட வலிகள் அனைத்தும் பறந்தே போய்விட்டன.

அனைத்தையும் பேக், செய்துவிட்டு நாங்கள் புறப்படும் நேரத்தில், ஒரு குழந்தை நம்மை நோக்கி வந்தது. “அங்கிள் நான் ஒன்னே ஒன்னு கேட்பேன்…. தருவீங்களா?” என்றது.

ஏதோ பிஸ்கட் பாக்கெட் அல்லது பேனா, பென்சில், ரப்பர் இப்படி கேட்கும் போல என்று கருதி, “என்னம்மா வேணும்?” என்றோம்.

“எனக்கு திருநீறு பாக்கெட் இருந்தா கொடுங்களேன். டெய்லி வெச்சிக்கணும்” என்றது மழலைக்குரலில். குழந்தை பெயர் நினைவில் இல்லை. ஆனால் அதிகபட்சம ஏழு அல்லது எட்டு வயதிருக்கும். (இதையெல்லாம் மனோவும், கார்த்திக்கும் பார்த்துக்கொண்டிருந்தர்கள்!) அவர்களுக்கும் ஒரே வியப்பு.

“ஆஹா… என்னே நான் செய்த பாக்கியம்… என்னே நான் செய்த பாக்கியம்…..” என்று கூறியபடி, பையிலிருந்த வள்ளிமலை விபூதி பாக்கெட்டை எடுத்து தந்தோம்.

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே

ஒரு சிறு குழந்தை, நாடி வந்து திருநீறு கேட்கிறது என்றால் இதைவிட இந்த நிகழ்வின் அபார வெற்றிக்கு சான்று இருக்கமுடியுமா என்ன?

Thiruvalluvar Gurukulam 27

Thiruvalluvar Gurukulam 26

Thiruvalluvar Gurukulam 28இனி பிரதி மாதம் இது போன்ற நிகழ்வுகளை ஆதரவற்றோர்  இல்லங்களிலும், வேத பாடசாலைகளிலும் தொடர்வது என்று முடிவே செய்துவிட்டோம். வழி காண்பித்த இறைவன், விளக்கேற்றமலா போய்விடுவான்?

=====================================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா??
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=====================================================================

Also check :

‘தீயவை மாள, பிணிகள் அகல, எதிர்கால சந்ததியினர் சிறக்க, தளம் சார்பாக ஒரு தடுப்பூசி!’

ஜகத்குரு தரிசனத்துடன் தொடங்கிய நம் தீபாவளி கொண்டாட்டங்கள்

அர்த்தமுள்ள, ஆத்மார்த்தமான தீபாவளியை கொண்டாடலாம் வாருங்கள்!

வண்ணத்து பூச்சிகளுக்கு ஒரு பட்டாடை – ரைட்மந்த்ரா தீபாவளி கொண்டாட்டம் 1

வடலூரின் வாழும் வள்ளலாரின் கருணை இல்லம்! ஒரு ரவுண்ட்-அப்!!

ஆதரவற்றவர்களின் ஆலமரம் – இதோ வடலூரில் ஒரு வாழும் வள்ளலார்!

பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா எம் தலைவா…

வயிற்றுக்கு சோறிட வேண்டும், இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்!

எங்கே செல்லும் இந்த பாதை?

இன்பம் எங்கே, மகிழ்ச்சி எங்கே என்று தேடுகிறீர்களா ?

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம், வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக!

=====================================================================

[END]

6 thoughts on “ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடிய திருஞானசம்பந்தர் குரு பூஜை!

  1. யாருடைய உதவியும் இல்லாமல் நிகழ்ச்சியை மிகவும் பிரமாதமாக செயல்படுத்திய தங்களுக்கு வாழ்த்துக்கள்

    குழந்தைகளை உற்சாகப் படுத்தி படம் பார்க்க வைத்ததே தங்களுக்கு மாபெரும் வெற்றி தான்.

    தங்களின் ஒவ்வொரு செயலுக்கும் தெய்வம் துணை நிற்கும்.

    //குடி செய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
    மடிதற்றுத் தான் முந் துறும் // குறள் 1023

    தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

    நன்றி
    உமா வெங்கட் .

  2. சுந்தர் ஜி,
    வாழ்க வளமுடன்!! வளர்க உங்கள் தொண்டு!!

    குழந்தைகளின் சிரித்த முகங்களைப் பார்க்க ஆனந்தமாக இருக்கிறது…

  3. வணக்கம் சுந்தர்.ரொம்ப நாளைக்குபிறகு இயல்பான குழைந்தைகளை பார்த்த பரவசம் ,சந்தோசம் .உங்களக்கு கோடி கோடி நன்றிகள். வயதுக்கு மீறிய குழைந்தைகளே பார்த்தே பழக்க பட்டவர்கள் நாம். அதனால் தான் இந்த குழைந்தைகளை பார்த்ததும் சந்தோசம். எதிர்கால சந்ததியினர் சிறக்க ஒரு தடுபூசி என்ற பதிவு பார்த்ததும் பெரிதாக ஒன்றும் தோன்ற வில்லை. ஆனால் இந்த பதிவு அனைத்தையும் மாற்றிவிட்டது. மீண்டும் நன்றிகள்.

  4. Dear Mr.Sundar,

    Hats off to you for this effort. Please mail me before your next visit.
    I shall provide you few sets of new clothes as prize for the winner.
    Tks n regds
    Ranjini

  5. இளம் குழந்தைகளுக்கு நம் தளம் சார்பாக போடப்பட்டுள்ள தடுப்பூசி, வருங்கால சமுதாயத்திற்கு பலன் அளிக்கும். திருநீற்றோடு இளம் தளிர்களை பார்க்கும் போது,மனம் அடைந்த சந்தோசம் …சொல்ல வார்த்தைகள் இல்லை.

    15 குழந்தைகளில் ஒரு குழந்தையாவது நம் முயற்சிக்கு வித்திடும் என்று நான் நம்புகிறேன்.

    தாங்கள் கேட்ட கேள்விகளுக்கு எனக்கு பதில் தெரியவில்லை. அனைத்து வண்ண படங்களும் அருமை.ஒவ்வொரு நிகழ்விலும் நம்மை இறை வழி நடத்துவது குறிப்பால் உணர முடிகிறது.
    அடுத்த நிகழ்வில் நான் இணைந்து கொள்ள விரும்புகிறேன்.

    தென்னாடுடைய சிவனே போற்றி.
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

    நன்றி அண்ணா..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *