இவரது அருந்தொண்டின் தன்மை உணராத ஊர்மக்களுள் சிலர், “அவனுக்கென்ன, இருக்கு அள்ளிக் கொடுக்குறான்” என்று பேசுவாராயினர்.
அடியார்க்கு அமுதளிப்பது என்பது செல்வச் செழிப்பால் மாறனார் செய்வது அல்ல. அது அவரது உதிரத்தோடு ஊறிய ஒரு குணம் என்பதை ஊரார்க்கு காட்டிட திருவுள்ளங் கொண்டான் இறைவன்.
இதனால் இளையான்குடிமாறனாரின் செல்வம் குறைந்து வறுமை உண்டாகியது. இவ்வாறு செல்வம் சுருங்கினாலும், தம்மிடமிருந்த நிலங்கள் முதலியவற்றை விற்றும், கடன் வாங்கியும் அடியார்க்கு அமுதளிக்கும் பணியை விடாது வைராக்கியத்தோடு செய்து வந்தார்.
ஒரு கட்டத்தில் விற்பதற்கு இனி எதுவுமில்லை என்கிற நிலையில் ஒரு குடிசையில் வாழ்க்கையை துவங்கினர் மாறனார் தம்பதியினர்.
ஒரு மழைக்கால இரவில், உண்பதற்கு எதுவும் இன்றி நீரை குடித்து உறங்கச் சென்றனர் தம்பதியினர். நள்ளிரவுப் பொழுதிலே தலைவர் ஈசன், அடியார் கோலங்கொண்டு மாறனாரது குடிசைக்கு எழுந்தருளிக் கதவைத் தட்டி அழைத்தார்.
மாறனார் கதவைத் திறந்து அடியார் நிற்பதை கண்டதும் அகமகிழ்ந்தார்.
“தங்களுக்கு செய்யக்கூடியது யாது?” என்று அன்போடு வினவினார்.
“அடியேன் யாத்திரை செல்லும் வழியில் இங்கு வந்தேன். மழை நேரமென்பதால் உண்பதற்கு உணவு எங்கும் கிடைக்கவில்லை. தங்களிடம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் வந்துள்ளேன்!” என்றார் அடியார் கோலத்திலிருந்த இறைவன்.
அடியாரை வீட்டினுள் அழைத்து வரவேற்று இருத்தற்கு இடங்கொடுத்தார்; அடியார்க்கு உணவளிக்க வீட்டில் ஏதுமில்லையே என வருத்தம் மிகுந்தது. மழை பொழுது என்பதால் துண்டை விரித்து தலையில் போர்வை போல போர்த்திச் சென்று அன்றையப் பகற்பொழுதில் நிலத்தில் விதைக்கப்பட்ட நெற்மணிகளைச் சேகரித்து வந்து, சிறிதே வளர்ந்த கீரைகளைப் பறித்து, இல்லாளிடம் கொடுத்து சமைக்குமாறு கூறினார்.
ஆனால் அடுப்பெரிக்க விறகு இல்லை. வீட்டின் சிதலமடைந்த கூரையிலிருந்த காய்ந்த மூங்கில்களை பறித்து அதை உடைத்து விறகாக பயன்படுத்திக்கொள்ளூமாறு கூறினார்.
உணவு சமைத்து மாறனாரும் அவரது துணைவியாரும் சிவனடியாருக்கு உணவு படைத்தனர். அப்பொழுது அடியாராக வந்திருந்த பெருமான் சோதிப்பிழம்பாய் எழுந்து தோன்றினார். அது கண்டு மாறனாரும் மனைவியும் திகைத்து நின்றனர்.
சிவபெருமான் உமாதேவியாருடன் எருதின் மேல் தோன்றி, ‘அன்பனே! அன்பர் பூசை அளித்த நீ உன் மனைவியோடும் என் பெரும் உலகமாகிய சிவலோகத்தினை அடைந்து பேரின்பம் அனுபவித்திருப்பாயாக’ என்று அருள் செய்து மறைந்தருளினார்.
ஒப்புடன் முகமலர்ந்து உண்மை பேசி உபசரித்து, உப்பில்லாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தம் அல்லவா?
அதுவும் மாறனார் இட்ட அந்த அமுதத்தை இங்கே ஏற்றுகொள்பவன் சாட்சாத் அந்த சர்வேஸ்வரனே எனும்போது… அதன் மகத்துவம் தான் என்னே!
ஒப்புடன் முகமலர்ந்து உபசரித் துன்மைபேசி
உப்பிலா கூழிட்டாலும் உண்பதே அமிர்தமாகும்,
முப்பழமொடு பாலண்ணம் முகங்கடுத் திடுவராயின்
கப்பிய பசியினொடு கடும்பசி யாகுந்தானே!
– விவேக சிந்தாமணி
=====================================================================
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் : அன்னதான அருந்தொண்டர் திரு.ஜோலார்பேட்டை நாகராஜ் அவர்கள்.
இவரைப் பற்றிய பதிவு நமது ரோல்மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது. அதை படிக்கவும்.
ஜோலார்பேட்டை நாகராஜ் – நூற்றுக்கணக்கானோரின் பசியை ஆற்றும் ஒரு தனி மனிதன்!
இந்த பூமி இன்னும் சுற்றிக்கொண்டிருப்பதற்கு காரணமானவர்களுள் ஒருவர் திரு.ஜோலார்பேட்டை நாகராஜ்!
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி (குறள் 226)
என்று வள்ளுவர் கூறும் ஏழைகளின் பசித் துயர் போக்கும் அருந்தொண்டை செய்து வருபவர்.
ஜோலார்பேட்டையில் ஏலகிரி ரெஸ்டாரண்ட் என்ற பெயர் தான் நடத்திவரும் ஓட்டலில் தினசரி நூற்றுக்கணக்கான ஏழை எளியோர்களுக்கு இலவச உணவு வழங்குகிறார். தொழிலாளர்களுக்கும் கூலி வேலை செய்பவர்களுக்கும் பாதிவிலையில் உணவு வழங்குகிறார். கைக்குழந்தை உடைய தாய்மார்களுக்கு இலவசமாக பால் தருகிறார். பள்ளி மாணவர்களுக்கு பேனா வழங்குகிறார். இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக.
அவரை நம் www.rightmantra.com தளம் சார்பாக சந்தித்து உரையாடிய ஒரு இனிமையான அனுபவத்திற்கு, http://rightmantra.com/?p=
=====================================================================
இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருக்கும் எஸ்.ஆர்.ராஜ்குமார் அவர்களை நமக்கு கடந்த ஓராண்டாகத் தான் தெரியும். எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் நமது பணிகளில் துணை நிற்பவர், நமது ஆண்டுவிழா முதல் அலுவலகத் திறப்பு விழா வரை அனைத்திற்கும் தவறாமல் வந்தவர். உழவாரப்பணிகளில் கூட பங்கேற்றுள்ளார். உத்தியோகம் அமைவதில் பிரச்சனைகள் இருந்தாலும் நல்ல வேலை கிடைக்கும் வரை காத்திருப்போம் என்று கருதாமல் ஏதேனும் ஒரு வேலையை செய்யவேண்டும் என்று கருதி உழைப்பவர். அவர் எந்தளவு கடினமான ஒரு பணியை சமீபகாலங்களில் செய்துவந்தார் என்று நாம் ஒரு நாள் அருகிலிருந்தே பார்த்தோம்.
எறும்பீஸ்வரருக்கு அளிக்கப்பட்ட பிரார்த்தனையில் இவர் பெயரும் சேர்க்கப்பட்டு அர்ச்சனை செய்யப்பட்டது. சமீபத்தில் நம் அலுவலகம் வந்து நம்மை சந்தித்தபோது, விரைவில் நல்லதொரு பணி செட்டாகிவிடும் என்றும் அப்படி நடக்கும் பட்சத்தில் திருவெறும்பூர் சென்று தலைவரை தரிசித்துவிட்டு வரச் சொல்லியிருக்கிறோம். அவர் நல்ல மனதிற்கு விரைவில் நல்லது நடக்கும் என்று – அவர் நம்புகிறாரோ இல்லையோ – நாம் நிச்சயம் நம்புகிறோம்.
அடுத்து ஸ்ரீராம். இவரை கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக நமக்கு தெரியும். சிறந்த சிந்தனையாளர். பொதுநலம் பேணுபவர். நம் நலம் விரும்பிகளுள் ஒருவர். தமது மைத்துனருக்காக பிரார்த்தனை சமர்பித்திருக்கிறார். ஒட்டுமொத்த குடும்பத்தின் அமைதியும் எதிர்காலமும் இதில் அடங்கியிருக்கிறது என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்த பிரார்த்தனையாக இருக்கிறது. இவர் மைத்துனரின் குடும்பத்தில் விரைவில் பிணக்குகள் நீங்கி, புதிய அத்தியாயம் மகிழ்ச்சியுடன் துவங்கும் என நம்பலாம்.
இதில் ஒரு ஒற்றுமை என்னவென்றால், இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை சமர்பித்துள்ள இருவரும் ஷிர்டி சாயி பகவானின் பக்தர்கள்!
பொது பிரார்த்தனை, உள்ளத்தை உருக்கும் ஒன்று என்றால் மிகையாகாது. சினிமா ஷூட்டிங்கில் நடிகர்களுக்கு கால் விரல் சுளுக்கிக்கொண்டால் கூட பெரிதாக செய்தி வெளியிடும் பத்திரிக்கைகள், நம் தேசத்தை காக்கும் வீரர்கள் 20 பேர் பலியான சம்பவம் குறித்து பத்தோடு பதினொன்றாக செய்திகள் வெளியிட்டுள்ளனர். எங்கே போய் முட்டிகொள்வது?
ஆனால், ராணுவ வீரர்களே… கலங்கவேண்டாம். இதோ உங்களுக்காக சில கண்ணீர்த்துளிகளை சிந்தவும் பிரார்த்திக்கவும் நாங்கள் இருக்கிறோம்!
=====================================================================
இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?
நல்ல வேலை கிடைக்கவேண்டும்; பிரச்னைகள் யாவும் தீரவேண்டும்!
இனிய நண்பர் சுந்தர் அவர்களுக்கு, உள்ளன்போடு சொல்கிறேன், மனதார இந்த சமுதாயத்தை மேம்படுத்த தாங்கள் ஆற்றி வரும் சேவை பிரமிக்க வைக்கிறது. இந்த கலியுகத்தில் அத்துணை பெரும் பொருள் சேர்ப்பதில் நாடும்போது, தாங்கள் அருள் தேடி சொல்வது மட்டுமல்லாமல், எங்களையும் கூட்டு சேர்த்து கொண்டு ஒரு சத்தமில்லா இயக்கத்தையே நடத்தி கொண்டிருகிறீர்கள். தங்களின் கருத்தாளுமையும் சொல்ல வரும் விஷயத்தை சுவாரஸ்ய மாகவும், நம்பிக்கை தரும் விதமாகவும் அளிக்க தங்களை தவிர வேறு யார். எல்லாம் வல்ல அந்த ஆண்டவனின் பரிபூர்ண ஆசீர்வாதம் தங்களுக்கு இருப்பது உறுதி.
தங்கள் நட்பு வட்டதிலும் வாசகர் மத்தியிலும் ஒரு சிறு (மிக மிக சிறிய) ஒரு துகளாக இருப்பதே எனக்கு பெருமை தான்.
பிறந்தது முதலே சரியான அன்பும் அரவணைப்பும் வழிகாட்டுதலும் இல்லாமல், மிக சிறிய வயதில் தாயை இழந்து, தந்தையிடம் கூட வளர முடியாமல், நான் வாழ்க்கை முழுதும் துன்பத்துக்கும் துயரத்திற்கும் ஆளாகி நொந்து நூடுல்ஸ் ஆகி விட்டேன். படிப்பு, வேலை எல்லாவற்றிலும் தடங்கல், உறவுகள் விட்டு பிரிந்து, தினம் தினம் போராட்டமாகவே இருக்கிறது.
ஆனால் தாங்கள் கூறுவது போல் எதற்கோ இறைவன் என்னை பக்குவ படுத்துவதாகவே எடுத்துக்கொண்டு, இறை நம்பிக்கை எனக்கு அதிகமாகிறதே தவிர, குறைய வில்லை.
தற்போது நான் partner ஆக இருந்த நிறுவனத்திலிருந்து வெளியேர வேண்டியதாகி விட்டது. temporaryயாக நான் சேர்ந்த வேலையை விடும்படி ஆகிவிட்டது. தற்போது எந்த வேலையும் இல்லாமல் அடுத்து வேறெந்த வேலை இல்லாமல் குடும்ப செலவை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தவிக்கிறேன். ஓரளவிற்கு படித்திருந்தும், நல்ல அனுபவம் இருந்தும் தகுந்த வேலை கிடைக்காமல் வருத்தமாகவும் வாழ்க்கையில் ஒருவித சலிப்பும் வந்துவிட்டது.
இந்த மன நிலையில் நான் இருக்கும்போது தான் தங்களின் வேலை தொடர்பான பிரார்த்தனை பதிவை கண்டு மிகவும் நம்பிக்கையுற்றேன். இந்த வார கூட்டு பிரார்த்தனையில் எனக்காகவும் என்னை போன்று கஷ்டபடுவோருக்க்காகவும் இறைவனிடம் மனமுருகி பிரார்த்தனை செய்ய, நம் வாசகர்களும், தலைமை ஏற்று நடத்த போகும் பெரியோர்களையும் வேண்டி கேட்டு கொள்கிறேன்.
தங்களின் ஆதரவுக்கும் நம் வாசகர்களின் பிரார்த்தனைக்கும் நிச்சயம் பலன் கிடைக்கும் என்றும், நல்ல வேலை கிடைத்து, அதன் மூலம் வரும் ஒரு பங்கை என்னால் முடிந்த நற்காரியங்களுக்காக பயன் படுத்தவும் எல்லாம் வல்ல இறைவனையும், காஞ்சி மஹா பெரியவாளையும், சற்குரு சாயி நாதரையும் பணிந்து வேண்டுகிறேன்.
எஸ்.ஆர். ராஜ்குமார்,
சென்னை – 33.
=====================================================================
My brother-in-law should unite with his family!
Dear Rightmantra family members,
I am a member of the Rightmantra family for the past three years. One of the best things to happen in this group is the weekly prayer by all its members for the welfare of unknown and the society.
I take this opportunity to request you all to pray for my Brother-in-law who is facing extreme hardship and mental agony because of a problem between him and his wife after 20 years of married life. He had been almost jobless for the past 3-4 years with a meager income from his side. His wife really works hard to earn and support the family. They have two children one girl in late teens and another boy in early teens. At this point of time, his wife broke away from him for reasons best known to them and is living with her mother. Having seen their family in happier times, I am unable to digest and comprehend such breakups. During such trying times, people like me cannot interfere in their internal issues, as I fear that it may worsen the situation. I am praying to Shirdi Saibaba and our most reverential Guru Kanchi Maha Periyava for the welfare of the affected family.
I request you all to pray for my Brother-in-law and his wife to forget their bitter past, bury the differences for the sake of their children, start afresh with hope and live together as one happy family.
Rightmantra Family Member
Regards,
Sriram
=====================================================================
பொது பிரார்த்தனை
மணிப்பூர் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு நம் கண்ணீர் அஞ்சலி!
நாம் இன்று தினமும் இங்கு நிம்மதியாக உறங்குகிறோம் என்றால் அதற்கு காரணம் எல்லையில் நம்மை காக்கும் ராணுவ வீரர்கள் தான். பசி தூக்கம் மறந்து நாட்டைக் காக்கும் பணியில் ராணுவத்தினர் தங்களை அற்பணித்து கொள்கின்றனர். புயலா, வெள்ளமா, நிலநடுக்கமா எது வந்தாலும் முதலில் ஓடி வருவது அவர்கள் தான். ஆனால் அவர்களுக்கு உண்மையில் பாதுகாப்பில்லை, அவர்கள் உயிருக்கும் உத்திரவாதமில்லை என்பது தான் நிதர்சனம்.
மணிப்பூர் மாநிலத்தில் வியாழன் (ஜூன்4) ரோந்து சென்ற ராணுவத்தினர் மீது, உல்பா தீவிரவாத அமைப்பினர் நடத்திய வெடிகுண்டு மற்றும் ராக்கெட் குண்டு தாக்குதலில் ராணுவத்தினர் 20 பேர் பலியாயினர், 11 பேர் காயம் அடைந்தனர்.
மணிப்பூர் மாநிலத்தில் உல்பா, ஐக்கிய விடுதலை முன்னணி, என்.எஸ்.சி.என், என்.டி.எப்.பி, மக்கள் விடுதலைப் படை (பி.எல்.ஏ), கே.ஒய்.கே.எல் என்ற மேதே புரட்சிகர அமைப்பு என்ற தீவிரவாத இயக்கங்கள் செயல்படுகின்றன. இவர்களிடமிருந்து மக்களை பாதுகாக்கும் பணியில் ராணுவத்தின் டோக்ரா படைப்பிரிவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் தலைநகர் இம்பாலில் இருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள சந்தெல் மாவட்டம் டெங்னோபால்நியூ சம்தால் ரோடு பகுதியில் டோக்ரா படைப்பிரிவை சேர்ந்த ராணுவத்தினர் 4 வாகனங்களில் வழக்கமான ரோந்து பணியில் நேற்று காலை ஈடுபட்டனர். இது மியான்மர் எல்லையையொட்டி உள்ள பகுதி. பரலாங் மற்றும் சரோங் கிராமங்களுக்கு இடையே ராணுவத்தினர் நேற்று காலை 9 மணியளவில் கடந்து சென்றபோது, ரோட்டில் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டை தீவிரவாதிகள் வெடிக்கச் செய்தனர். இதில் ராணுவ வாகனங்கள் சிதறின. அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் ராணுவத்தினர் மீது ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் துப்பாக்கிகளால் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவத்தினர் 20 பேர் பலியாயினர், 11 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலை பி.எல்.ஏ மற்றும் கே.ஒய்.கே.எல் அமைப்பினர் நடத்தியிருப்பதுபோல் தெரிகிறது என மணிப்பூர் உள்துறை செயலாளர் சுரேஷ் பாபு கூறியுள்ளார். ஆனால் இந்த தாக்குதலுக்கு உல்பா உட்பட சில தீவிரவாத அமைப்புகள் பொறுப்பேற்றுள்ளன. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை பிடிக்க பாதுகாப்பு படையினர் விரைந்துள்ளனர். அவர்கள் தப்பிச் செல்லாமல் இருக்க இந்தோ-மியான்மர் எல்லை மூடப்பட்டுள்ளது.
நாட்டைக் காக்கும் பணியில் உயிர் நீத்த அனைத்து ராணுவ வீரர்களுக்கும் நம் சிரந்தாழ்ந்த வணக்கங்களையும் அவர் தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அவர்கள் அனைவரது ஆன்மாவும் சாந்தியடையவும் நமது ராணுவ வீரர்களை கொன்ற கோழைகள் கருவறுக்கப்படவும் இறைவனை வேண்டுவோம்.
இதுவே இந்த வார பொது பிரார்த்தனை !
=====================================================================
சரியான வேலை வாய்ப்பு அமையாது சிரமப்படும் நம் வாசகரும் நம் நண்பருமான திரு.எஸ்.ஆர்.ராஜ்குமார் அவர்களுக்கு மனநிம்மதியும், நல்ல ஊதியத்தையும் தரக்கூடிய வேலை ஒன்று கிடைத்து, அவரது துன்பங்கள் யாவும் முடிவுக்கு வரவும், குடும்பத்தில் பூசல் ஏற்பட்டு மனைவியை பிரிந்து வாடும் நண்பர் ஸ்ரீராம் அவர்களின் மைத்துனர் தன் மனைவியுடன் மீண்டும் ஒன்று சேரவும், திரு.ஜோலார்பேட்டை நாகராஜ் அவர்களின் அன்னதான அருந்தொண்டு தடையின்றி தொடரவும், அவரும் அவர் தம் குடும்பத்தாரும் எல்லா வளங்களையும் நலன்களையும் ஈசனருளால் பெற்று வாழ்வாங்கு வாழவும் பிரார்த்திப்போம். மணிப்பூரில் நிகழ்ந்த தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிர் நீத்த நம் ராணுவ வீரர்களின் ஆன்மா சாந்தியடையவும் அவர்களை பிரிந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் ஆறுதல் பெறவும் பிரார்த்திப்போம்.
நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.
கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.
நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!
பிரார்த்தனை நாள் : ஜூன் 7, 2015 ஞாயிற்றுக்கிழமை நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm
இடம் : அவரவர் இருப்பிடங்கள்
=====================================================================
An appeal – Help us in our mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
=====================================================================
பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:
உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.
=============================================================
பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.
அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.
(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)
=============================================================
உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…
உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!
உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.
E : editor@rightmantra.com | M : 9840169215 | W: www.rightmantra.com
=====================================================================
பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131
=====================================================================
சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : திருப்பணித்தொண்டர் திரு.சிவ.ஜனார்த்தனம் !
மிக்க நன்றி நண்பரே. இப்போது தான் நான் ஜோலார்பேட்டை பெருமானுக்கு (நல்ல அடை மொழி!) COMMENT செய்துவிட்டு, REFRESH செய்தேன். அதற்குள் என்னுடைய பிரார்த்தனை upload ஆகியிருக்கிறது. என்ன ஒரு TIMING. இது ஒன்று போதாதா தங்களின் இனிய நட்பும், நம் வாசகர்களின் பிரார்த்தனையும் நிச்சயம் நிறைவேறும் என்று நம்புவதற்கு.
என் குடும்பதிர்க்ககவும், என் வேலை / தொழில் குறித்த பிரார்த்தனை செய்ய போகும் அணைத்து நல்ல உள்ளங்களுக்க்காகவும், கோடானு கோடி நன்றிகள் பல. நம் ஜோலார்பேட்டை நாகராஜ் பெருந்தகைக்கும் மிக்க மிக்க நன்றிகள் பல. நானும் ஏற்கனவே சொன்னது போல், அய்யாவுக்கு ஒரு சிறு கஷ்ட்டம் கூட வரக்கொடது என்று என்னுடைய இதய தெய்வம் ஸ்ரீ ஸ்ரீ சாயி பகவானிடம் மன்றாடி வேண்டுகிறேன். சுந்தர் அவர்களுக்கு அனேக கோடி நன்றி.
திரு நாகராஜ் அவர்களுக்கு பொருத்தமான 63 நாயன்மார்களில் ஒருவரான இளையான்றன் குடி மாறனார் பற்றிய கதையை போட்டு பிரார்த்தனை பதிவை மெருகேற்றி விட்டீர்கள்
. //இளையான்றன் குடி மாறன் அடியார்க்கும் அடியேன் //
திரு நாகராஜ் அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.
இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்து இருக்கும் திரு ராஜ்குமார் மற்றும் திரு ஸ்ரீராம் அவர்களின் பிரார்த்தனையை இறைவன் கண்டிப்பாக நிறைவேற்றுவார். நம் பிரார்த்தனை கிளப்பில் அவர்கள் கோரிக்கை வந்ததே அவர்கள் கோரிக்கை நிறைவேறப் போவதாக அர்த்தம்.
பொதுப் பிரார்த்தனையாக ராணுவ வீரர்களுக்காக பிரார்த்தனை செய்வோம். திரு நாகராஜ் அவர்களின் தொண்டு மேலும் மேலும் சிறக்கவும் பிரார்த்தனை செய்வோம்
லோகா சமஸ்தா சுகினோ பவந்து
ராம் ராம் ராம்
நன்றி
உமா வெங்கட்
இந்த வாரம் பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் திரு நாகராஜ் என்று தெரிந்ததுமே ஒரு இனிய ஆறுதல். ஏனென்றால் நாகராஜ் அவர்களை போன்ற நல்ல ஆன்மாக்களின் பிரார்த்தனை இறைவனிடம் நேரடியாக போய் சேருகிறது.
எனது மைத்துனரின் குடும்ப சூழ்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள் என்னும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பிரார்த்தனை செய்யும் அத்தனை உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து உடனடியாக எனது கோரிக்கையை வெளியிட்டதற்கு சுந்தருக்கு நன்றி.
ஷிர்டி சாயி பாபா பாதம் பணிகிறேன்.
ஜோலார்பேட்டை நாகராஜ் = நவீன இளையான்குடி மாறனார். அனைவரின் பிரார்த்தனைகளும் சாய்பாபாவின் அருளால் நிறைவேற வேண்டும்.
வாழ்க பாரதம்; வளர்க அவள் பெருமை.
இந்த வாரம் வந்துள்ள நாயன்மார் மாறனார் கதையும் ஜோலார்பேட்டை திரு நாகராஜ் அவர்களும் அடியவர்களுக்கு அமுது அளிப்பதையே தொண்டாக நடத்தி வந்துள்ளார்கள்.
கதைக்கும் பிரார்த்தனை தலைவருக்கும் மிக பொருத்தம்.
இந்த வார பிரார்த்தனைக்கு வந்துள்ள இரண்டு கோரிக்கைகளும் மகா பெரியவ அவர்களால் நிறைவேறி அவர்கள் மனமகிழ்ச்சியுடன் வாழ பிரார்த்தனை செய்வோம்.
பிராத்தனை செய்தேன் ..நாளை மாலையும் செய்கிறேன் …
இவர்கள் வாழ்வில் ஒரு மாற்றம் உண்டாக இறைவனை வேண்டுகிறேன் …
உங்கள் இறை பணி வீறு நடை உடன் தொடரட்டும்
இனிமையான தமிழில்,
அறுபது மூவருள் ஒருவராம்
இளையான்குடி மாறனார் பற்றி அறிய
இணைத்தது – rightmantra.com
இது போன்ற உண்மை சம்பவங்கள் தான், நம்மை மேலும் ஆத்ம தரிசனம் கிடைத்திட உதவும்.
நாம் வாழ்வில் தளர்ந்து போகும் போது, இத்தகைய நிகழ்வுகளை “மனக்கண் ” கொண்டு வந்து, மேலும் முயற்சி செய்து இறைஅருள் பெறுவோமாக..
அனைவரது கோரிக்கைகளும் நிறைவேறிட கடவுள் கருணை காட்டுவாராக..
நன்றி அண்ணா..