பிள்ளையின் பசியறிந்து பாலூட்டும் அன்னையை போல, பெரியவா பல சமயங்களில் தன்னை நாடி வந்தவர்கள் கேட்காமலே அவர்களின் உள்ளக் கிடைக்கையை அறிந்து அவர்களுக்கு உதவியிருக்கிறார். அதுவும் ஸ்ரீமடத்தின் ஊழியர்கள் மற்றும் அணுக்கத் தொண்டர்கள் என்றால் அது பற்றி சொல்லவேண்டுமா என்ன?
மகா பெரியவா தான் பீடத்தில் இருந்த காலத்தே கோ-பூஜை, கஜ பூஜை உள்ளிட்ட பல பூஜைகளில் அவருக்கு உதவியாக இருந்த திரு.டி.ஆர்.சந்திரமௌலி சாஸ்த்ரிகள் கூறிய மற்றுமொரு சம்பவம்…
இது நடந்து சுமார் 30-35 வருடங்கள் இருக்கும்.
திரு.சந்திரமௌலி சாஸ்திரிகள் அவர்களின் இரண்டாவது மகள் திருமதி.பாலதிரிபுர சுந்தரி அவர்களின் மகன் ராஜகோபால் என்பவர் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தார். பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் சிவில் என்ஜினீயரிங் சேர அவருக்கு ஆசை. அனைத்து ஏற்பாடுகளும் செய்த நிலையில் பாலிடெக்னிக்கில் சேர ரூ.7000/- தேவைப்பட்டது. பேரனின் கல்விக்கு ஏதாவது வழி கிடைக்காதா என்று கருதிய தாத்தா திரு.சந்திரமௌலி சாஸ்திரிகள், பேரனை அழைத்துக்கொண்டு ஸ்ரீமடத்தில் பெரியவாவை சந்திக்க வந்தார். (அப்போது தான் காசியில் காமகோடீஸ்வரருக்கு பூஜை செய்துகொண்டிருந்ததாக ஞாபகம் என்று கூறுகிறார் சந்திரமௌலி சாஸ்திரிகள்).
ராஜகோபாலுடன் ஆர்வமுடன் உரையாடிய பெரியவா, “என்ன படிக்கப் போகிறாய்? எங்கு படிக்கப் போகிறாய்?” என்று வினவியிருக்கிறார். அனைத்தும் சொன்ன இவர், தான் பாலிடெக்னிக்கில் சேர ஏழாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது என்பதை மட்டும் சொல்லவில்லை. ஏதோ ஒரு தயக்கம். மெளனமாக இருந்தார். தாத்தாவும் அது பற்றி சொல்லவில்லை.
ஆசிபெற்றதும், ராஜகோபாலை சற்று அமரும்படி கூறிவிட்டு மற்ற பக்தர்களுக்கு ஆசி வழங்கத் துவங்கினார்கள் பெரியவா. அத்தருணத்தில் யாரோ ஒரு பக்தர் பெரியவா அவர்களுக்கு காணிக்கையாக ஒரு தட்டில் பழங்களையும் ரொக்கமாக சில ரூபாய்களையும் வைத்து அளித்து உள்ளார்.
அதை பார்த்த பெரியவா, “அந்த தட்டை அப்படி வைங்கோ” என்று கூறிவிட்டு, ஒரு ஓரமாக அமர்ந்திருந்த ராஜகோபாலை கூப்பிட்டு, “இந்த இந்த தட்டுல இருக்குற பணத்தை எடுத்துக்கோ. நினைச்ச மாதிரி பாலிடெக்னிக்ல சேர்ந்து படி!” என்று திருவாய் மலர்ந்தருளினார்.
தட்டை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்ட ராஜகோபால், பணத்தை எடுத்து, எண்ணிப் பார்த்த போது அதிர்ச்சியிலும் ஆனந்தத்திலும் உறைந்தேப் போனார். ஏனெனில் அதில் சரியாக ரூ.7000/- இருந்தது.
திரு.ராஜகோபால் வெற்றிகரமாக பாலிடெக்னிக் படிப்பை முடித்து அதன்பிறகு பி.இ. முடித்துவிட்டு தற்போது ஒரு மிகப் பெரிய கட்டுமான நிறுவனத்தில் சிவில் என்ஜினீயராக உள்ளார். பெரியவா கடாக்ஷம்!
இதே போல திரு.டி.எஸ்.கோதண்ட ராம சர்மா அவர்கள் தரிசன அனுபவங்களில் விவரித்துள்ள வேறொரு சம்பவமும் நம் நினைவுக்கு வந்தது.
ஒரு முறை பெரியவாளை காணவந்த ஒரு பெரிய செல்வந்தர், காணிக்கையாக ரூ.12,000/- சமர்பித்தார்.
பெரியவாவோ, “எனக்கெதுக்குடா பணம்?” என்று சொல்லிவிட்டு, அப்போது சந்தர்ப்பணை சமையற்கட்டில் பணிபுரிந்துவந்த ஒருவரை கூப்பிட்டனுப்பி, “உன் பொண்ணுக்கு கல்யாணம்னு சொன்னியே… பணம் வேணாமா? இதோ இதை எடுத்துக்கோ” என்றார் – பணம் கொடுத்தவரின் எதிரிலேயே.
“இதை நான் செய்ய காரணம் இருக்கிறது. இந்த மடத்தில் எத்தனையோ சிப்பந்திகள் மிக குறைந்த சம்பளத்துக்கு மனப்பூர்வமாக உழைக்கிறார்கள். அவர்கள் வீட்டில் கல்யாணம் கார்த்தி என்றால் அவர்கள் பணத்துக்கு எங்கே போவார்கள்?” என்றார்.
அருள் என்றால் வெறும் தூறல் இல்லை. கன (பண) மழை தான்.
=====================================================================
உழவாரப்பணி அறிவிப்பு!
நமது தளத்தின் அடுத்த உழவாரப்பணி இந்த பதிவில் விளக்கப்பட்டுள்ள திரிசூலநாதர் திருக்கோவிலில் வரும் ஞாயிறன்று (மே 24) நடைபெறும். (காலை 7.30 – 12.30 வரை). பணியில் பங்கேற்க விரும்பும் அன்பர்கள் நேரடியாக ஆலயத்திற்கு வந்துவிடவேண்டும். தளம் சார்பாக மதிய உணவு வழங்கப்படும்.
வழி : சென்னை-திருச்சி ஜி.எஸ்.டி. சாலையில் விமான நிலையம் எதிரே உள்ள ரயில்வே கேட்டை தாண்டி வந்தால் திரிசூலத்தை அடையலாம். ரயில்நிலையம் : திரிசூலம். பணியில் பங்கேற்க விரும்பும் அன்பர்கள் அவசியம் தகவல் தெரிவிக்கவேண்டும்.
Rightmantra Sundar | Mobile : 9840169215
E-mail : editor@rightmantra.com | Website : www.rightmantra.com
Facebook : Righmantra Sundar (Personal) | www.facebook.com/RightMantra (Official)
=====================================================================
எத்தனை பதிகங்கள், எத்தனை ஸ்லோகங்கள்? அத்தனையும் படிக்கவேண்டுமா? எல்லா பிரச்சனைகளுக்கும் சேர்த்து ஒரே பதிகம் / ஸ்லோகம் இல்லையா? என்ற சந்தேகத்திற்கு விடை இந்த பதிவு!
எதுக்கு இத்தனை பதிகங்கள்? ஒரே பதிகம் / ஸ்லோகம் அத்தனை பலனையும் தராதா??
=====================================================================
மனதுக்கினிய வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் அற்புதமான ஒரு பரிகாரத் தலம் பற்றிய பதிவு இது!! கெட்டியாக பிடித்துக்கொண்டு கரை சேருங்கள்!!!
நல்லதொரு வேலை; இனியில்லை கவலை! இதோ ஒரு அருமையான பரிகாரத் தலம்!!
=====================================================================
An appeal – Help us in our mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
=====================================================================
Earlies articles on Maha Periyava in Guru Darisanam series…
தாயுமானவளை அனுப்பிய தாயுமானவன் – குரு தரிசனம் (36)
மடத்துக்கு சென்றால் மகா பெரியவா கேட்கும் முதல் கேள்வி என்ன தெரியுமா? – குரு தரிசனம் (35)
நெற்றியில் குங்குமம்; நெஞ்சில் உன் திருநாமம்! – குரு தரிசனம் (34)
அலகிலா விளையாட்டுடையானின் அன்பு சாம்ராஜ்ஜியத்தில் ஒரு புதிய வரவு! குரு தரிசனம் (33)
குரங்கை அடித்ததால் ஏற்பட்ட தோஷம்! மகா பெரியவா சொன்ன பரிகாரம்!! குரு தரிசனம் (32)
சர்வேஸ்வரா நீ அறியாததும் உண்டோ? – குரு தரிசனம் (30)
“என்ன தாமஸ், பையன் கிடைச்சுட்டானா?” – குரு தரிசனம் (29)
“மகா பெரியவா நாவினின்று வருவது வார்த்தைகள் அல்ல. சத்திய வாக்கு!” – குரு தரிசனம் (28)
ஒரு ஏழை கனபாடிகளும் அவர் செய்த பாகவத உபன்யாசமும் – குரு தரிசனம் (27)
மகா பெரியவா அனுப்பிய உதவித் தொகை; ஒளிபெற்ற அர்ச்சகர்கள் வாழ்வு! – குரு தரிசனம் (26)
பெரியவா பிரசாதம்னா சும்மாவா? ஆப்பிள் செய்த அற்புதம்! – குரு தரிசனம் (25)
இது உங்களுக்கே நியாயமா சுவாமி? – குரு தரிசனம் (24)
ஸ்ரீ மகா பெரியவா திருவிளையாடல் – குரு தரிசனம் (23)
சொத்து வழக்குகளில் சிக்கித் தவித்தவருக்கு மகா பெரியவா சொன்ன பரிகாரம் – குரு தரிசனம் (22)
மகா பெரியவாவின் ஸ்பரிஸம் பட்ட குளத்து நீர் – குரு தரிசனம் (21)
சாமி குத்தம், தடைபட்ட திருப்பணி, முடித்து வைத்த மகா பெரியவா! – குரு தரிசனம் (20)
இது தான் பக்தி என்பதை உணர்த்திய குடும்பம் – குரு தரிசனம் (19)
பார்வையாலேயே குணப்படுத்தும் வைத்தீஸ்வரன் – குரு தரிசனம் (18)
கேட்டது ஒரு பிள்ளையார் சிலை; கிடைத்ததோ ஒரு கோவில் – குரு தரிசனம் (17)
குரு தரிசனம் தந்த பரிசு – அன்றும், இன்றும் – இரண்டு உண்மை சம்பவங்கள் – குரு தரிசனம் (16)
மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம் – நெஞ்சை உலுக்கும் சம்பவம் – குரு தரிசனம் (15)
“ஏம்பா! உங்களுக்கு எப்போ பார்த்தாலும் பெரியவா சேவை தானா?” – குரு தரிசனம் (14)
வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!
வாழைப்பழத்துக்கு பதில் மகா பெரியவா கொடுத்த நெற்பொரி. ஏன்? எங்கு? – குரு தரிசனம் (13)
“கடமைக்கே நேரமில்லை, இதுல கோவிலுக்கு எங்கே சாமி போறது?” – குரு தரிசனம் (12)
காசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவேண்டும்? – குரு தரிசனம் (11)
குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….
http://rightmantra.com/?cat=126
=====================================================================
Also check short series on Kalady & Sornaththu Manai :
வையம் செழிக்க மகனை தியாகம் செய்த ஆர்யாம்பாளின் சமாதி – காலடி பயணம் (3)
சங்கரரின் காலை முதலை பற்றிய ‘முதலைக் கடவு’ – ஒரு நேரடி ரிப்போர்ட் (2)
பக்திக்கும் பாசத்திற்கும் வளைந்த பூர்ணா நதி – காலடி நோக்கி ஒரு பயணம் (1)
ஜகத்குரு ஆதிசங்கரர் வாழ்க்கை வரலாறு – ஒரு (வி)சித்திர அனுபவம்!
=====================================================================
Articles on Ramana Maharishi
எந்த கண்களில் பார்வை இருக்கிறது? எதில் இல்லை?
ஈசனோட கதவு எப்பவும் திறந்தே இருக்கும். ஆனா…
பிள்ளையார் பழமும் அதீத சிற்றம்பலமும் – இது ரமண திருவிளையாடல்!
ரமண திருவிளையாடற் திரட்டில் கண்ட முத்துக்கள் மூன்று!
பிராப்தம் & ஆஞ்ஞை = ரமண விளையாட்டு!
=====================================================================
Articles about other Gurus in Rightmantra.com
‘பரப்பிரம்மம்’ நிகழ்த்திய லீலைகள் – பிரம்மேந்திரர் ஜெயந்தி ஸ்பெஷல்!!
மனித முயற்சி + குருவருள் = திருவருள்! (ஞானானந்தம்-2)
ஆனந்தத்தை அள்ளித் தரும் குருவின் மகாத்மியங்கள் – (ஞானானந்தம்-1)
நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!!
“எதற்கும் கவலைப்படாதே. உன்னுடைய மேலதிகாரியால் உனக்கு எந்த விதத் தொந்தரவும் ஏற்படாது!”
காங்கேயநல்லூர் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் – ஒரு திவ்ய தரிசனம்!
தீராத வினைகளை தீர்க்கும் நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் – A must visit place!
பித்தனாகியும் பரமனைப் பாடிய ஸ்ரீ அப்பைய தீட்சிதர் திவ்ய சரிதம் + அதிஷ்டான தரிசனம்!
ராம நாம மகிமை & போதேந்திராள் வாழ்க்கை வரலாற்று நாடகம்! ஒரு நேரடி அனுபவம்!!
குரு அடித்தாலும் அணைத்தாலும் அது கருணை தானே? – ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் லீலை!!
காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!
=====================================================================
Articles about Sri Ragavendra Swamy
முதல் மாணவன், முதல் வேலை, முதல் சம்பளம்…!! – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (6)
புதுவை பிருந்தாவனத்தில் காட்சி தந்த ராகவேந்திரர் – உண்மை சம்பவம் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (5)
பட்ட மரம் துளிர்த்தது; வேத சக்தி புரிந்தது – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 4
கேட்பதை தருவார், கேட்டதும் தருவார் குருராஜர் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 3
“அழைத்தால் போதும் அடுத்த கணமே நினைத்தது நடக்கும்!” – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 2
திருவருளும் குருவருளும் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (1)
குருராஜர் இருக்க கவலை எதற்கு? நெகிழ்ச்சியூட்டும் நிஜ அனுபவங்கள்!
நம் தளத்திற்கு கிடைத்த ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பரிபூரண ஆசி! எங்கே… எப்படி?
ஆங்கில கவர்னருக்கு ராகவேந்திரர் காட்சியளித்த அற்புதம் – கஜெட் ஆதாரத்துடன்!
உச்சரிப்பை விட உன்னத பக்தியே சிறந்தது!
இறைவா… பிறர் நிறைவில் பெருமிதமே தினம் காணும் குணம் வேண்டும்!
எது வந்த போதும் துணை நீயே குருராஜா – உண்மை சம்பவம்
முக்காலமும் நீ அறிவாய் குருராஜா – நம் தள வாசகரிடம் ஸ்ரீ ராகவேந்திரர் நிகழ்த்திய அற்புதம்!
‘ஸ்ரீ ராகவேந்திர தரிசனம்’ தொடர் அடுத்த வாரம் முதல் தொடர்ந்து இடம்பெறும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.
=====================================================================
[END]
குரு வாரத்தில் குரு தனது பக்தனுக்கு கொடுத்த அருள் (பண) மழையை படித்து மெய் சிலிர்த்தேன்.
குருவாரத்தில் குருவிற்கு என் சாஷ்டாங்க நமஸ்காரம்.
தாயுமானவர் இல்லையா நமது தெய்வம்…. தாய்க்குத் தானே தனது குழந்தையின் தேவை புரியும்.
ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ். குருவின் திருவடி போற்றி போற்றி
குருவே …. சரணம் ………..குரு …..கடாக்ஷம்
நன்றி
உமா வெங்கட்
குரு தரிசனம் என்றால் மெய் சிலிர்க்க வைக்கும் குரு தரிசனம் தான்.
வேண்டியோருக்கு வேண்டியதை கொடுத்து கொண்டிருக்கின்ற பெரியவாளின் கருணையே கருணை!
இன்றைய குரு தரிசனத்தின் மூலம், நாங்கள் அருள் மலையில் நனைந்து கொண்டிருக்கிறோம்.
இரு நிகழ்வின் மூலம் குருவின் தாய்மை உள்ளம் தெளிவாக புரிந்தது..
குருவே சரணம்:
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர:
காஞ்சி சங்கர:
காமாஷி சங்கர:
காமகோடி சங்கர:
மிக்க நன்றி அண்ணா…
குரு சரணம் சரணம்
சுந்தர்ஜி
அருமையான் குரு தரிசனம். குரு தரிசனம் கோடி புண்ணியம்.
குரு வாரம் குரு அருள் சூப்பர்
மகாபெரியவா அவர்களின் அனுக்கிரகங்களைப் படிப்பதே மனதிற்கு நிம்மதியைத் தருகிறது. நாம் மனதில் நினைப்பதை இறைவன் நடத்தித் தருவார் எனும் நம்பிக்கையைத் தருகிறது. மிக்க நன்றி.
குருவை பணிந்தோருக்கு ஒருபோதூம் கவலை இல்லை
குருவே சரணம்.
குருவே சரணம்
தட்டாமலே திறக்கப்படும் கதவுகள் – குருவின் ஆசி.
குருவே சரணம்……..குருவே சரணம்…….குருவே சரணம்………..
Gurus are the platform for us to connect with God.
**
Happy to know lot of information about Kanchi Paramacharya here. Thanks so much ji.
**
We need to have pure bhakthi alone and slowly our past bad karmas will get over and will soon get good things through the good deeds done by us in this karma. All this is possible by connecting with god through Gurus.
**
And I guess, through this website, Many persons’ karma are almost getting over and good times are starting ahead.
Best wishes for all.
**
**Chitti**.
குரு திருவடி சொர்க்கம். குரு பார்வை மோட்சம். குரு அருள் இன்பம். குருவே கண் கண்ட தெய்வம்.
மாதா நம் பிதாவை நமக்கு அறிமுகம் செய்கிறார். நம் பிதா நம் குருவை நமக்கு அறிமுகம் செய்கிறார். நம் குரு நம்மை இறைவன் அருகில் நம்மை அழைத்து செல்கிறார்.
அது தான் மாதா பிதா குரு தெய்வம். ஒருவர் சொன்ன விளக்கம் இது.
நம் குரு திருவடி போற்றி. .
திரு சுந்தர் அவர்கள் பணி வருங்காலம் அவர் பெயர் சொல்லும் படியாக உள்ளது.
நன்றி.
கே. சிவசுப்ரமணியன்
வணக்கம் சுந்தர். நடந்தது , நடக்கபோவது என அனைத்தும் அறிந்த மகான், யாருக்கு, எப்போது என்ன கொடுக்கவேண்டும் என அறிந்த மகான். நமக்குதான் புரிவதில்லை.படிப்பதே சந்தோசம்.குருவே சரணம். நன்றி.
குரு வாரத்தில் குரு பதிவு படிக்க எங்களுக்கு கோடி நன்மை கிடைக்கும்
பெரியவாவின் அற்புதங்கள் படிக்க படிக்க அருமை.
நம் பதிவை படித்து எங்கள் உணர்வுகளை சுதந்திரமாக எழுத வைத்து அதை வெளியிட்ட தங்களுக்கு என் நன்றிகள்
என்றும் அன்புடன்.
//நம் பதிவை படித்து எங்கள் உணர்வுகளை சுதந்திரமாக எழுத வைத்து அதை வெளியிட்ட தங்களுக்கு என் நன்றிகள் ///
எங்கேயோ ……… இடிக்கிறதே ………………
நன்றி
உமா வெங்கட்