Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, May 18, 2024
Please specify the group
Home > Featured > ஸ்கூல், காலேஜ் அட்மிஷன் டென்ஷனா?

ஸ்கூல், காலேஜ் அட்மிஷன் டென்ஷனா?

print
டுத்தடுத்து தேர்வு முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே பிளஸ்-டூ தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. நாளை எஸ்.எஸ்.எல்.சி. முடிவுகள் வெளியாகவிருக்கின்றன. பொதுவாகவே ஜூன் மாதம் என்றாலே பெற்றோர்களுக்கு ஒரு வித டென்ஷனும் பயமும் வந்துவிடும். ஃபீஸ் கட்டவேண்டும், பிள்ளைகள் விரும்பிய கல்வியை, விரும்பிய கல்வி நிறுவனத்தில் அளிக்கவேண்டும்… இப்படி பல டென்ஷன்கள். (இப்போல்லாம் ஓரளவு சுமாரான ஸ்கூல்ல எல்.கே.ஜி. ஃபீஸே ரூ.30,000/- ஆகுது.)

நல்ல மதிப்பெண்கள் இருந்தும் பல மாணவர்களுக்கு விரும்பிய படிப்பை விரும்பிய கல்வி நிறுவனத்தில் படிக்க முடியாத நிலை ஏற்படும். சிலருக்கு ஒரு குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தில் பிள்ளைகளை சேர்க்க ஆசையிருக்கும். ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலைகள் மற்றும் பொருளாதார நிலை அதற்கு இடம் கொடுக்காது.

அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவமாட்டாங்க. நான் சொல்றது சிவனோட திருவடிங்க! இந்த பதிவை படிங்க…. அருமையான தீர்விருக்கு இதுல! நம்ம தலைவர் இருக்கும்போது கவலை எதுக்கு ?

இவர்கள் அனைவருக்கும் வழிகாட்டும் விதமாய் இந்த பதிவில் இரண்டு பதிகங்களை அளித்திருக்கிறோம். ஒன்று பிள்ளைகளுக்கு. மற்றொன்று பெற்றவர்களுக்கு. நம்பிக்கையோடு இப்பதிகங்களை படித்து வர, விரும்பிய கல்வி நிறுவனத்தில் விரும்பிய கல்வி கற்க வாய்ப்பு கிடைக்கும். கல்வி கட்டணத்தை எந்த வித சிரமும் இன்றி செலுத்திட ஏற்றதொரு பொருளாதார சூழ்நிலையும் பெற்றோர்களுக்கு அமையும்.

பெற்றோர்களுக்கு இந்த நேரத்தில் ஒன்றை கூற ஆசைப்படுகிறோம். உங்கள் பிள்ளைகளின் விருப்பத்திற்கு மாறாக அவர்களை எந்த படிப்பும் படிக்க வற்புறுத்த வேண்டாம். அவர்கள் விருப்பத்திற்கு மாறாக நீங்கள் வற்புறுத்தினால் நாளை அவர்கள் உங்களை குற்றம் சொல்ல வாய்ப்பிருக்கிறது.

‘சிவாய நம’ என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை!

(* இந்த பதிவில் இடம்பெற்றுள்ள பதிகங்களின் எழுத்துரு (TEXT) வேண்டுபவர்கள் நமக்கு editor@rightmantra.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறோம்.)

Lord Siva

====================================================================

கல்வியில் சிறந்து விளங்க…

சுற்றமொடு பற்றுஅவை துயக்குஅற அறுத்துக்
குற்றம்இல் குணங்களொடு கூடும் அடியார்கள்
மற்று அவரை வானவர்தம் வான்உலகம் ஏற்றக்
கற்றவன் இருப்பது கருப்பறிய லூரே

வண்டு அணைசெய் கொன்றைஅது வார்சடைகள் மேலே
கொண்டு அணைசெய் கோலம்அது கோள்அரவினோடும்
விண்டு அணைசெய் மும்மதிலும் வீழ்தர ஓர் அம்பால்
கண்டவன் இருப்பது கருப்பறிய லூரே

வேதமொடு வேதியர்கள் வேள்வி முதல்ஆக
போதினோடு போதுமலர் கொண்டு புனைகின்ற
நாதன்என நள்இருள்முன் ஆடுகுழை தாழும்
காதவன் இருப்பது கருப்பறிய லூரே

மடம்படு மலைக்கு இறைவன் மங்கைஒரு பங்கன்
உடம்பினை விடக்கருதி நின்ற மறையோனைத்
தொடர்ந்து அணவு காலன் உயிர் காலஒரு காலால்
கடந்தவன் இருப்பது கருப்பறிய லூரே

ஒருத்தி உமை யோடும் ஒருபாகம் அதுவாய
நிருத்தன் அவன் நீதிஅவன் நித்தன் நெறிஆய
விருத்தன் அவன் வேதம்என அங்கம் அவை ஓதம்
கருத்தவன் இருப்பது கருப்பறிய லூரே

விண்ணவர்கள், வெற்பு அரசு பெற்றமகள் மெய்த்தேன்
பண்அமரும் மென்மொழியினாளை அணைவிப்பான்
எண்ணி வரும் காமன்உடல் வேவ எரிகாலும்
கண்ணவன் இருப்பது கருப்பறிய லூரே

ஆதிஅடியைப் பணிய அப்போடு மலர்ச்சேர்
சோதிஒளி நல்புகை வளர்க்கு வடுபுக்குத்
தீதுசெய வந்துஅணையும் அந்தகன் அரங்கக்
காதினன் இருப்பது கருப்பறிய லூரே

வாய்ந்த புகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப்
பாய்ந்து அமர்செயும் தொழில் இலங்கை நகர்வேந்தற்கு
ஏய்ந்த புயம் அத்தனையும் இற்றுவிழ மேல்நாள்
காய்ந்தவன் இருப்பது கருப்பறிய லூரே

பரந்து அது நிரந்துவரு பாய்திரைய கங்கை
கரந்துஓர் சடைமேல்மிசை உகந்து அவளை வைத்து
நிரந்தர நிரந்து இருவர் நேடி அறியாமல்
கரந்தவன் இருப்பது கருப்பறிய லூரே

அற்றம் மறையா அமணர் ஆதம் இலி புத்தர்
சொற்றம் அறியாதவர்கள் சொன்னசொலை விட்டுக்
குற்றம் அறியாத பெருமான் கொகுடிக் கோயில்
கற்று என இருப்பது கருப்பறிய லூரே

நலம்தரு புனல்கலி ஞானசம் பந்தன்
கலந்தவர் கருப்பறியல் மேய கடவுள்களைப்
பலம்தரு தமிழ்க்கிளவி பத்தும் இவை கற்று
வலம் தரும் அவர்க்கு வினைவாடல் எளிது ஆமே

பாடியவர்: திருஞான சம்பந்தர் | தலம்: தலைஞாயிறு

====================================================================

Meenakshi-Amman-and-Lord-Sundareshwar-depicted-in-Painting

பணத்தட்டுப்பாடு நீங்கவும், துவங்கும் செயல் இனிதே நிறைவேறவும்

வேத வேள்வியை நிந்தனை செய்து உழல்
ஆதம் இல்லி அமணொடு தேரரை
வாதில் வென்று அழிக்கத் திருவுள்ளமே?
பாதி மாதுடன் ஆய பரமனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே

வைதிகத்தின் வழி ஒழுகாத அக்
கைதவம் உடைக் கார் அமண் தேரரை
எய்தி, வாது செயத் திருவுள்ளமே?
கைதிகழ் தரு மாமணி கண்டனே,
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே

மறை வழக்கம் இலாத மாபாவிகள்
பறி தலைக் கையர், பாய் உடுப்பார்களை
முறிய வாது செயத் திருவுள்ளமே?
மறி உலாம் கையில் மா மழுவாளனே,
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே

அறுத்த அங்கம் ஆற ஆயின நீர்மையைக்
கறுத்த வாழ் அமண் கையர்கள் தம்மொடும்
செறுத்து, வாது செயத் திருவுள்ளமே?
முறித்த வாண் மதிக் கண்ணி முதல்வனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே

அந்தணாளர் புரியும் அருமறை
சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
சிந்த, வாது செயத் திருவுள்ளமே?
வெந்தநீறு அது அணியும் விகிர்தனே,
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே

வேட்டு வேள்வி செயும் பொருளை விளி
மூட்டு சிந்தை முருட்டு அமண் குண்டரை
ஓட்டி வாது செயத் திருவுள்ளமே?
காட்டில் ஆனை உரித்த எம் கள்வனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே

அழல் அது ஓம்பும் அருமறையோர் திறம்
விழல் அது என்னும் அருகர் திறத்திறம்
கழல, வாது செயத் திருவுள்ளமே?
தழல் இலங்கு திருவுருச் சைவனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே

நீற்று மேனியர் ஆயினர் மேல் உற்ற
காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத்
தேற்றி, வாது செயத் திருவுள்ளமே?
ஆற்ற வாள் அரக்கற்கும் அருளினாய்,
ஞாலம் நின்புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே

நீலமேனி அமணர் திறத்து நின்
சீலம் வாது செயத் திருவுள்ளமே?
மாலும் நான்முகனும் காண்பு அரியதோர்
கோலம் மேனியது ஆகிய குன்றமே,
ஞாலம் நின்புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே

அன்று முப்புரம் செற்ற அழக நின்
துன்று பொற்கழல் பேணா அருகரைத்
தென்ற வாது செயத் திருவுள்ளமே?
கன்று சாக்கியர் காணாத் தலைவனே,
ஞாலம் நின்புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே

கூடல் ஆலவாய்க் கோனை விடைகொண்டு
வாடல் மேனி அமணரை வாட்டிட,
மாடக் காழிச் சம்பந்தன், மதித்த இப்
பாடல் வல்லவர், பாக்கிய வாளரே

பாடியவர்: திருஞான சம்பந்தர் | தலம்: மதுரை

* இந்த பதிவில் இடம்பெற்றுள்ள பதிகங்களின் எழுத்துரு (TEXT) வேண்டுபவர்கள் நமக்கு editor@rightmantra.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறோம்.

====================================================================

Also check similar articles and true incidents :

திருநாவுக்கரசர் பதிகம் பாடி புரிந்த அற்புதங்கள்!

Thalaivar is always great!

தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!

பணத்தை தேடி வரவழைத்த பதிகம்! மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!

உணவும், உறக்கமும், நிம்மதியும், செல்வமும் நல்கி இறுதியில் சிவபதம் அருளும் பதிகம்!

வசிஷ்டர் அருளிய தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்

நமக்கென்று ஒரு சொந்த வீடு – உங்கள் கனவு இல்லத்தை வாங்க / கட்ட வழிகாட்டும் பதிகம்!

ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?

அகத்தியரின் ‘திருமகள் துதி’ – இது வீட்டில் இருந்தாலே திருமகளின் அருள்மழை நிச்சயம்!

மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!

பன்னிரு திருமுறைகளின் பெருமையும் அதை மீட்டுத் தந்த நம்பியாண்டார் நம்பியும்!

ஆஞ்சநேய பக்தர்களுக்கு ஓர் வரப்பிரசாதம் – கிடைப்பதர்க்கரிய ஸ்ரீஹநுமத் சுப்ரபாதம்!!

வறுமையை விரட்டி, பொன் பொருள் சேர்க்க எளிய தமிழில் ஒரு அழகிய ஸ்லோகம்!

களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!

‘திருவாசகம்’ என்னும் LIFESTYLE MANTRA – கருவுற்றிருக்கும் பெண்கள் கவனத்திற்கு!

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!

அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!

மாங்கல்யம் தந்த மங்களாம்பிகை – சிலிர்க்க வைக்கும் ஒரு நிகழ்வு!!

====================================================================

[END]

 

4 thoughts on “ஸ்கூல், காலேஜ் அட்மிஷன் டென்ஷனா?

 1. சரியான நேரத்தில் சரியான பதிவு . அனைத்து பெற்றோர்களும் , மாணவர்களும் இந்த இரண்டு பாடலையும் படித்துப் பயன் பெறலாம்.

  சிவன் இருக்க பயம் எதற்கு.???

  முதல் பதிகம் எனக்கு பரிச்சய மாகாத பதிகம். இரண்டாவது பதிகம் அடிக்கடி முனுமுனுக்கும் பாடல்.

  உமா வெங்கட்

 2. சரியான நேரத்தில், மிகவும் உபயோகமான வாழ்வியல் பதிகங்கள் பற்றி தெரிந்து கொண்டோம்.

  திருஞான சம்பந்தர் திருவாய் மலர்ந்து அருளிய, திருப்பதிகங்கள் மூலம் வாழ்வில் வெற்றி பெற முயல்வோமாக..

  நம் “தலைவரின்” அடிகள் போற்றி, தரணியில் தலை நிமிர்ந்து வாழ இறையருள் துணை புரியட்டும்.

  ஈசனடிபோற்றி எந்தை யடிபோற்றி
  தேசனடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
  நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி
  மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி
  சீரார் பெருந்துறைநந் தேவன் அடிபோற்றி
  ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி

 3. Sorry to see today’s state of education – which has became nothing but business.
  **
  Most of us, had finished the higher education itself by less than a lakh but now – even for LKG, Pre-KG itself is costing several thousands or half/quarter of lakh.
  **
  Only God can help middle class people – they constitute more part of population after poor category. Since poor people don’t and can’t make their children study in private schools and so they join their children in public schools itself.

  And that’s more than enough. Knowledge doesn’t come from private schools certainly these days – but only they make mark machineries.
  **
  And great that you had put right sthostras for eliminating that worries for them.
  **
  Thanks so much for this timely relief post.
  **
  **Chitti**.

  1. ஹலோ சுந்தர் சார் அவர்களின் செல்ல சிட்டி சார் அவர்களே தங்களை வணங்குகிறேன்.
   தங்களின் இந்த இங்கிலீஷ் எத்தனை முறை படித்தாலும் என் மனதில் ஆழ பதிய மாட்டேன் என்று பிடிவாதம் செய்கிறது.
   சின்னதாக தமிழில் போட்டாலும் என் மனம் உவகை கொள்கிறது.
   தமிழ் ப்ளீஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *