Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, October 8, 2024
Please specify the group
Home > Featured > “வருவான்டி தருவான்டி மலையாண்டி!” Rightmantra Prayer Club

“வருவான்டி தருவான்டி மலையாண்டி!” Rightmantra Prayer Club

print
ருணகிரிநாதரால் பாடப்பட்ட பழநி ஆண்டவன் சந்நிதியில் மூன்று வயது குழந்தையைக் கிடத்தி விட்டு பெற்றோர் அழுதனர்.

“பழநியாண்டவா! நீயே இப்படி செய்யலாமா? எங்கள் குழந்தையைக் காப்பாற்று! உன்னை விட்டால் எங்களுக்கு வேறு யார் துணை?” என்று கதறினார்கள். இரவு வந்தது. அங்கேயே படுத்து விட்டனர்.

மறுநாள் காலை அதிசயம் நிகழ்ந்திருந்தது.

ராஜ அலங்காரத்தில் பழனி முருகன்
ராஜ அலங்காரத்தில் பழனி முருகன்

குழந்தையின் உடம்பில் இருந்த முத்துக்கள் குறைந்து இருந்தன. ஆம்! வைசூரியால் பாதிக்கப்பட்ட குழந்தைக்காகவே அதன் பெற்றோர் முருகனிடம் வேண்டிக் கொண்டிருந்தனர்.

பாதிப்பு குறைந்ததும் வீடு திரும்பினர். முத்துக்கள் மெல்ல மெல்ல காய்ந்து உதிரத் தொடங்கியது. ஆனால், குழந்தைக்கு பார்வை போய் விட்டது. அதற்காகப் பெற்றோர் வருந்தினாலும், “இந்தமட்டில் உயிர் பிழைத்ததே” என்று ஆறுதல் அடைந்தனர்.

அந்தக்குழந்தை தான் பிற்காலத்தில் தலைசிறந்த ‘மாம்பழக் கவிச்சிங்க நாவலர்’ என்று பெயர் பெற்றவர். இவர் எழுதிய பாடல்கள் பலவும் இன்று பழநியில் பாடப்படுகின்றன. பக்திச்சுவையுடன் பாட வல்ல இவர், ஒருநாள் பழநியாண்டவன் சந்நிதியில் பாடிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில், பால்காவடி சுமந்து வந்த பக்தர்கள் சிலர் சந்நிதியில் கூடியிருந்தனர்.

“பழநியாண்டிக்கு அரோகரா’ என்ற குரல் எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. அதைக் கேட்ட நாவலருக்கு ஆனந்தக்கண்ணீர் பெருகியது.

மாம்பழக் கவிச்சிங்க நாவலர்
மாம்பழக் கவிச்சிங்க நாவலர்

அப்போது சிலர், “கண் படைத்தவர்களுக்கே பழநிஆண்டவன் தரிசனம் சுலபமில்லையே! அப்படியிருக்க பார்வை இல்லாத இவர் இங்கு எதைப் பார்க்கப் போகிறார்?” என்று ஏளனமாகப் பேசினர்.

இதைக் கேட்டு வருந்திய நாவலர், “சகல வசையும் ஒதுக்கி எனைக் காப்பது என்ன மலை உனக்கு! அசைவில் மனத்தர் தொழும் பழனாபுரி ஆண்டவனே,” என்று பாடினார்.

பழநியாண்டவனுக்குச் செய்யப்படும் பால், பஞ்சாமிர்த அபிஷேகம், விபூதிக் காப்பு அனைத்தும் நாவலரின் மனக்கண்ணில் அப்படியே ‘நேரலை’ போலத் தெரிந்தது. அப்புறம் என்ன! சந்நிதியில் நடக்கும் ஒவ்வொன்றையும் அப்படியே அவர் சொல்ல ஆரம்பித்தார். இதைக் கேட்ட பக்தர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். வம்பு பேசியவர்கள் வாயடங்கி தலை குனிந்தனர். அர்ச்சகர் பிரசாதம் கொண்டு வந்து நாவலரிடம் அளித்தார்.

வம்பு பேசும் மனிதர்களை யாரும் பொருட்படுத்த தேவையில்லை. உண்மை பக்தர்களுக்காக பழநியாண்டவன் இரங்குவான். ஏன் மலையை விட்டும் கூட இறங்கியும் வருவான்!

(நன்றி : திரு.பி.என்.பரசுராமன் | தினமலர்)

==================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் : வயலின் இசைக்கலைஞர் திரு.மணலி குமார் அவர்கள் 

Violin kumarஇவரைப் பற்றிய பதிவு நமது ரோல்மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது. அதை படிக்கவும்.

வயலின் கலைஞர் திரு.மணலி குமார் அவர்களிடம் நமது தளத்தின் பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி நமக்காக இந்த வாரம் பிரார்த்தனை செய்யவேண்டும் என்று கேட்டோம்.

மிக்க மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். அப்போது ஒரு தகவலை அவர் வெளியிட்டார். “நான் சாமி கும்பிடுறதை நிறுத்தி பல வருஷம் ஆச்சு சார். எனக்கு கண் பார்வை போனவுடனேயே ஒரு வித விரக்தி வந்து சாமி கும்பிடுறதை நிறுத்திட்டேன். ஆனால், ரொம்ப வருஷம் கழிச்சி உங்களுக்காக உங்க வாசகர்களுக்காக நான் கடவுள் கிட்டே பிரார்த்தனை பண்றேன்.

‘முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே மற்றும் வருவான்டி தருவான்டி மலையாண்டி ஆகிய இரண்டு பாடல்களையும் வயலினில் இசைத்து பிரார்த்தனை பண்றேன்!” என்றார்.

ஆஹா…. என்னே நாம் செய்த பாக்கியம்….

இறைவனை இசையின் மூலம் வெகு சுலபமாக அடையமுடியும். அவனது கவனத்தை ஈர்க்க முடியும். இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவன் இறைவன்.

“சார்… நாங்கல்லாம் தினமும் சாமி கும்பிடுறோம்னு தான் பேரு. ஆனா நாங்க செய்றது என்னவோ அழுகாச்சியும் பேரம் பேசுறதும் தான். ஆனால், நீங்க உங்க வாழ்க்கையில் இவ்வளவு நடந்த பிறகும், தன்னம்பிக்கையோடு தலை நிமிர்ந்து நின்னு, இப்போ நாங்க கேட்டவுடனேயே எங்களுக்காக ஆண்டவன் கிட்டே பிரார்த்தனை பண்றேன்னு சொன்னீங்க பாருங்க… அது தான் சார் கிரேட்!” என்றோம்.

திரு.மணலி குமார் அவர்கள் எல்லா வளமும் நலனும் பெற்று வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டுகிறோம்.

==================================================================

இந்த வார பிரார்த்தனையில் இடம்பெற்றிருப்பவர்கள் வேலை வாய்ப்பு சிறப்பு பிரார்த்தனையின் போது கோரிக்கை அனுப்பியவர்கள். சென்ற வாரம் பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருந்தவர்களின் பட்டியலை வெளியிட்ட போது இவர்களின் பெயர்களை வெளியிடவில்லை. (திரு.செந்தில் தவிர்த்து). காரணம், இவர்கள் கோரிக்கைகளை பிரார்த்தனை பதிவில் தனியாகவே வெளியிட விரும்பினோம். அந்தளவு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். இவர்கள் பெயர் தளத்தில் வெளியிடப்பட்ட பட்டியலில் இடம்பெறவில்லையே அர்ச்சனை செய்ய நாம் ஆலயத்தில் அளித்த பட்டியலில் ஒருவர் பெயர் விடாமல் அனைவர் பெயர்களும் தவறாமல் சேர்க்கப்பட்டது. எனவே கவலை வேண்டாம்.

அவர்கள் கோரிக்கைகளில் இடம்பெற்றிருந்த தனிப்பட்ட சில விஷயங்களை நீக்கிவிட்டு அவர்கள் கோரிக்கையை வெளியிட்டிருக்கிறோம். விரைவில் வேலை தொடர்பான பிரச்சனைகள் நீங்கி, இவர்கள் மன நிம்மதி பெற பிரார்த்திப்போம்.

வேலைவாய்ப்பு தொடர்பாக மற்றவர்கள் அனுப்பிய கோரிக்கைகளையும் இனி ஒவ்வொன்றாக பிற கோரிக்கைகளோடு கலந்து வெளியிடப்படும். ஆக, அனைவருக்கும் அர்ச்சனை செய்த பலனும் கிடைக்கும். கூட்டுப் பிரார்த்தனையின் பலனும் கிடைக்கும்.

சென்ற வாரம் வேலை வாய்ப்பு சிறப்பு பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருந்த அனைவரின் பெயர்களுக்கும் சங்கல்பம் செய்யப்பட்டு திருவெறும்பூர் எறும்பீஸ்வரருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இந்த தகவலை நமக்கு திரு.கணேச குருக்கள் தெரிவித்தார். தொடர்ந்து எறும்பீஸ்வரர் பதிகத்தை படித்து வாருங்கள். நல்லதே நடக்கும்!

==================================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

Uncertainty killing me!

Dear Sir,

I am a recent reader of your postings

I just wanted you to pray for my problems.

I recently joined the new concern in abroad, with out judging my capacity and capabilities properly. After coming here things moved so swiftly that now I am in great trouble which makes me feel that will i be back home alive.

Day and night this is the thought running in my mind

I have two kids and a wife, father and mother to be taken care in Tiruvallur.

Due to this thought I am unable to concentrate on any thing, work r personal things are any other things.

I am just living a psycho life.

Will things change. Will I come back home, I am not sure.  Only prayers and God’s mercy could save me out from my situation .

Thanks

Sekar Anandiah

==================================================================

Want to complete my doctorate!

Respected Sundarji & readers,

My self T.Senthil – I am regular reader of the rightmantra.com.

In the weekly prayer you put my request – For the past ten years i am struggling in my higher studies – doctoral programme. Though i make strenous efforts to complete it i couldn’t able. My future is purely relying on the completion of that only.

Kindly pray for me so that i can finish my research work within this year – 2015.

Thanking you sundarji
T.SENTHIL

==================================================================

ஐந்து மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை

ரைட்மந்த்ரா வாசகர்களுக்கும் ஆசிரியர் சுந்தர் அவர்களுக்கும்,

இக்கடிதம் பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற எழுதுகிறேன்.

நான் புதுடெல்லியில் உள்ள கம்பெனி ஒன்றில் கடந்த நான்கு வருடங்களாக வேலை செய்கிறேன். கடந்த ஐந்து மாதங்களாக எனக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. கடந்த மூன்று வருடங்களாக இன்க்ரிமெண்ட் எனப்படும் சம்பள உயர்வும் கிட்டவில்லை. இதனால் நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளேன்.

நான் பணிபுரியும் பகுதியில் கோவில் இல்லாததால் ரைட்மந்த்ரா தளத்தையே கோவிலாக பாவித்து தினமும் படித்து வருகிறேன். இப்போதைக்கு எனக்கிருக்கும் ஒரே ஆறுதல் இது தான். தளத்தில் வெளியாகும் அனைத்து பதிவுகளையும் குறைந்தது இரண்டு முறையாவது படித்திருப்பேன். என் பிரச்னையை பிரார்த்தனை கிளப்பில் வெளியிட்டு எனக்கு ஒரு நல்ல வழிகிடைக்க பிரார்த்தனை செய்யும்படி உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

– வைத்தீஸ்வரன்,
புது டெல்லி

==================================================================

பொது பிரார்த்தனை

பார்வையற்றோர் படும் பாடு முடிவுக்கு வரவேண்டும்!

பார்வையற்றவர்கள் அனைவருக்கும் விரும்பிய மேற்படிப்பை படிக்கும் வாய்ப்போ, அல்லது அப்படி படிக்கும் போதே சம்பாதிக்கும் வாய்ப்போ கிடைப்பதில்லை. அப்படிப்பட்டவர்களின் நிலைமை மிகவும் பரிதாபமானது. ஐம்பொறிகளில் முக்கியமான ஒன்று பறிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் கல்வி தான். அதுவும் கிடைக்கவில்லை என்றால் எப்படி?

பார்வையற்ற மாணவர் தேர்வு எழுத உதவும் பெண்!
பார்வையற்ற மாணவர் தேர்வு எழுத உதவும் பெண்!

அதையும் மீறி கல்வி பயில வரும் மாணவர்களுக்கு, தேர்வு எழுத உரிய SCRIBES கிடைப்பதில்லை. நம் நாட்டில் இளைஞர் சக்தி எவ்வளவோ உள்ளது பயனற்ற விஷயங்களில் அவை வீணாகிக்கொண்டிருக்கிறது. அப்படிப்பட்டவர்களின் பார்வை இவர்களை நோக்கி திரும்பினால் எத்தனையோ பேரின் வாழ்க்கையில் ஒளி ஏற்றிவைக்கபடுமே? (உழவாரப்பணி குழு போல இதற்கென்று நம் தளத்தில் ஒரு விசேஷ குழு தொடங்கப்படவிருக்கிறது!)

தங்கள் உரிமைகளுக்காக சமீபத்தில் பார்வையயற்ற பட்டதாரிகள் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தி தான் தங்கள் கோரிக்கைகளை இவர்கள் நிறைவேற்றிக்கொள்ளவேண்டும் என்கிற நிலை இருப்பது உண்மையில் வெட்கக்கேடு.

B_Id_371831_blind_girl_help

பார்வையற்றவர்கள் சிறந்த கல்வி மற்றும் வேலை வாய்ப்பினை பெறவும், அவர்களுக்கு தேர்வு எழுத SCRIBES கிடைக்கவும், இறைவனை பிரார்த்திப்போம். இது தொடர்பாக அனைவருக்கும் விழிப்புணர்வு வரவேண்டும்.

இதுவே இந்த வார பொது பிரார்த்தனை.

=============================================================

An appeal – Help us in our mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=============================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgதிரு.சேகர் ஆனந்தையா அவர்களின் உத்தியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் நீங்கி, அவர் தம் குடும்பத்தினருடன் சௌக்கியமாக சந்தோஷமாக வாழவும், திரு.செந்தில் அவர்கள் தனது ஆராய்ச்சி படிப்பை விரைவில் வெற்றிகரமாக முடித்து அதன் மூலம் மேலும் மேலும் வளர்ச்சியடையவும், அவர் உத்தியோகம் சிறக்கவும், திரு.வைத்தீஸ்வரன் அவர்களுக்கு வேலையில் ஏற்பட்டுள்ள துன்பம் நீங்கி, அவர் விரும்பியபடி நல்லதொரு நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கவும்  பிரார்த்திப்போம். இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.மணலி குமார் அவர்கள் எல்லா நலனும் வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டுவோம். அவர் தம் இசைப் பயணமும் தெய்வீகத் தோண்டும் சிறக்கவேண்டும். பொது பிரார்த்தனையாக அறிவிக்கப்பட்டுள்ள பார்வையற்றோர் சந்திக்கும் பிரச்னைகள் யாவும் முடிவுக்கு வந்து, அவர்கள் நம் மாநிலத்தில் மகிழ்ச்சியுடன் மனநிறைவுடன் வாழவேண்டும்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : மே 17, 2015 ஞாயிற்றுக்கிழமை நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

=============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

=============================================================

Rightmantra Prayer Club

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E : editor@rightmantra.com  |   M : 9840169215  | W: www.rightmantra.com

=============================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131

=============================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : திருச்சி திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் சன்னதியில் இறைவனுக்கு பூஜைகள் செய்யும் பாக்கியம் பெற்ற திரு.கணேச குருக்கள் அவர்கள்.

 

5 thoughts on ““வருவான்டி தருவான்டி மலையாண்டி!” Rightmantra Prayer Club

  1. இந்த பதிவின் மூலம் மாம்பழக் கவிச்சிங்க நாவலர் பற்றி தெரிந்து கொண்டோம் . உள்ளன்போடு இறைவனை மனம் உருகி பிரார்த்தனை செய்தால் நம் முருகன் ஓடோடி வருவான் ராஜ அலங்கார முருகனை நம் தளம் வாயிலாக தரிசித்ததில் மிக்க மகிழ்ச்சி

    இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு குமார் அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்

    உழவாரப் பணி போல் பார்வை அற்றவர்களுக்கு என நம் தளத்தில் ஒரு குழு அமைப்பது அறிய மிக்க மகிழ்ச்சி

    இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்து இருக்கும் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்வோம்

    லோகா சமஸ்தா சுகினோ பவந்து

    ராம் ராம் ராம்
    நன்றி
    உமா வெங்கட்

  2. குருவருளாலும், திருவருளாலும் பிரார்த்தனை கோரிக்கை அனுப்பியுள்ள அனைவரின் குறைகளும் நீங்கி எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்று இறையடியை இறைஞ்சுகிறோம்……..

  3. மாம்பழக் கவிசிங்க நாவலர் அவர்களின் வரலாற்றை அறியத் தந்தமைக்கு நன்றிகள். இவ்வாரம் பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் சகோதரர். குமார் அவர்களுக்கு வாழ்த்துகள். நம்தள வாசகர்களின் பணி தொடர்பான பிரச்சினைகள் குருவருளாளும் திருவருளாலும் விரைவில் நீங்க வேண்டும். இவ்வார பொதுப் பிரார்த்தனை கோரிக்கை என் மனதைத் தொட்டது. நிச்சயம் பார்வையற்றவர்களுக்கு எழுத்து உதவியாளர் சரியானவராக அமைந்தால் அவர்களின் வாழ்வில் இன்னமும் மேன்மையுறுவர். நானும் பல நிகழ்வுகளை கேள்விப்பட்டிருக்கிறேன். தமிழ் இலக்கியம் தேர்வு எழுத ஆங்கில வழியில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் மாணவரை உதவியாளராக அமர்த்தியுள்ளனர். அவர் தமிழைப் படிக்கும் அழகு எப்படியிருந்திருக்கும்?. ஒற்றைக் கொம்பு, அப்புறம் க, அடுத்ததாக துணையெழுத்து என அவர் சொன்னால், பார்வைத் திரனற்றவருக்கு எப்படி புரியும். பார்வையற்றவர்களின் எழுத்துக்கள் நாம் எழுதுவதைப் போல் இருக்காது. அவை புள்ளி வடிவில் இருக்கும். படிக்கும் அழகே இப்படியென்றால், அந்நபரை வைத்து எப்படி தேர்வெழுத முடியும். அப்படியிருக்கையில் அவர் எப்படி தேர்வை எழுத முடியும். கணினிப் பயிற்சிக் கொடுத்து அவர்களை கண்ணியில் தேர்வெழுதச் சொன்னால், நிச்சயம் அவர்களால் சாதிக்க முடியும். இதற்கான முயற்சிகளை தேர்வுத்துறை எடுக்க வேண்டும். நம் தளத்தின் மூலம் எழுத்து உதவியாளர்கள் குழு அமைப்பது வரவேற்கத்தக்கது.

  4. வணக்கம் சுந்தர். கவிசிங்க நாவலர் பற்றி படித்து இல்லை . அறிய தந்தமைக்கு நன்றி. மற்ற உடல் குறைபாடு உள்ளர்வகளைவிட கண்ணில் குறைபாடு உள்ளவர்களை நினைத்தால் மிக வருத்தமாக இருக்கும்.எப்படித்தான் போரடுகிரர்களு என்று இருக்கும். எல்லோர் பிரச்சனைகள் தீர பிராத்திக்கிறேன். பரம் பொருளே பிரச்சனைகள் தீர ஆசி கூறு.ஸ்ரீ சாய் ராம், ஸ்ரீ சாய்ராம், ஸ்ரீ சாய் ராம். நன்றி.

  5. சுந்தர் அண்ணா..

    கந்தனை கடம்பனை கதிர்வேலனை எண்ணி துதிப்போருக்கு எண்ணிய எண்ணமெல்லாம் கை கூடும்.

    மிக்க நன்றி அண்ணா..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *