Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, April 19, 2024
Please specify the group
Home > Featured > திருநாவுக்கரசர் பதிகம் பாடி புரிந்த அற்புதங்கள்!

திருநாவுக்கரசர் பதிகம் பாடி புரிந்த அற்புதங்கள்!

print
சைவ சமயக் குரவர் நால்வருள் தனிச்சிறப்பு மிக்கவர் அப்பர் பெருமான் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசர். இன்று (சித்திரை சதயம்) அவரது குரு பூஜை. அதாவது இறைவனோடு அவர் இரண்டறக் கலந்த நாள். நால்வருள் அதிக ஆண்டுகள் வாழ்ந்து மூப்பிலும் சிவத்தொண்டு செய்தவர் இவரே. திருஞானசம்பந்தரும் இவரும் சம காலத்தவர்கள் (கி.பி.6 ஆம் நூற்றாண்டு).

Appar 2இவரது இயற்பெயர் மருள்நீக்கியார். சைவ சமயத்தில் பிறந்தும் மருள்நீக்கியார் சமண சமயத்தால் ஈர்க்கப்பட்டார். பாடலிபுரம் சென்று சமண நூல்களை நன்கு பயின்றார். இவரது புலமையைச் சமணர் புகழ்ந்தனர். அவரைத் தம் தலைவராக்கினர். தருமசேனர் எனப் பெயரிட்டு அழைத்தனர்.

இதையெல்லாம் அவரது சகோதரி திலகவதியார் துளியும் விரும்பவில்லை. தம்பி மீண்டும் சைவநெறிக்கு வரவேண்டும் என விரும்பினார். திருவருளால் மருள் நீக்கியாருக்குத் தாங்க முடியாத வயிற்றுவலி ஏற்பட்டது. சூலை நோய் எனப்பட்ட அந்த வயிற்றுவலியால் அவர் துடிதுடித்தார். குடைந்து குடைந்து நோயின் கொடுமை கூடியது. என்ன செய்வார்? தமக்கையாரே தஞ்சமென்று திலவதியாரிடம் சென்றார். நோயின் துன்பத்திலிருந்து தன்னைக் காப்பாற்றும்படி அழுது கேட்டார்.

திலகவதியார் தம்பியாரை திருவதிகை வீரட்டானத்தில் வீரட்டானேசுவரர் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். ‘நமசிவாய’ என்னும் திருவைந்தெழுத்தை ஓதித் திருநீற்றை அள்ளிக் கொடுத்தார். “தம்பி! இறைவனிடம் உன் குறையைச் சொல்லு”, என்றார். அழுதும் தொழுதும் நின்ற மருள்நீக்கியார் தம்மை அறியாது பாடினார். என்ன பாடினார்?. . “வீரட்டானத்து அம்மானே! யமன் போன்ற இந்த நோயை அகற்றிவிடும். முறுக்கி முடக்கி என்னைத் துன்புறுத்துகிறது. என்னால் தாங்க முடியவில்லையே! அறியாமல் பிழை செய்தேன். இரவும் பகலும் உம்மை வணங்குவேன். இந்த நோயிலிருந்து என்னைக் காப்பாற்றுவீர்!” என்றவாறு கொல்லிப் பண்ணில் தேவாரம் பாடினார். இதோ! இவர் பாடிய முதல் பாடல்.

கூற்றாயின வாறுவி லக்ககிலீர்
கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக் கேஇர வும்பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே.

தேவாரப் பதிகத்தின் பத்துப் பாடல்களைப் பாடி முடித்தார். சூலை நோய் தானாக அகன்றது. இனிமையான தமிழில் பாமாலை பாடியதால் “நாவுக்கரசர்” என்றழைக்கப்பட்டார். நாவுக்கரசரும் சிவநெறி நின்று மகிழ்ந்தார்.

பதிகம் என்றால் பத்து பாடல்கள் கொண்ட தொகுப்பு என்று பொருள். பொதுவாக அப்பர் பிரான் பத்து பாடல்கள் கொண்ட பதிகங்களாகவே அதிகமாக பாடியுள்ளார். ஆனால் ஒரு சில பதிகங்கள், உணர்ச்சி மேலீட்டால் ஒரு பாடல் அதிகமாக கொடுக்கப்பட்டு பதினோரு பாடல்கள் கொண்ட பதிகங்களாகத் திகழ்வதை நாம் காணலாம்.

உழவாரப்பணி என்னும் திருக்கோவில் துப்புரவு பணியை தொடங்கி வைத்தவர் இவரே. தனது ஆயுளின் கடைசி காலம் வரை உழவாரப்பணி செய்துவந்தார் நாவுக்கரசர். திருப்புகலூரில் இவர் உழவாரப்பணி செய்துகொண்டிருக்கும் நாளில் இவர் செதுக்கிய இடங்களில் எல்லாம் பொன்னும், பொருளும், நவ இரத்தினங்களும் சிவபெருமான் அருளால் தோன்ற, அவைகளை மண்ணாகவும், கல்லாகவும் துச்சமாக மதித்து குளத்தில் எறிந்தார். இவரை மயக்க வந்த தேவ மாதர்கள் இவரை மயக்க முடியாமல் தோற்றுச் சென்றனர்.

“நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்னும் புகழ் பெற்ற வாக்கியம் இவர் உதிர்த்ததே.

புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன்னடி
என்மனத்தே வழுவாதிருக்க வரம் தர வேண்டும்
இவ்வையகத்தே தொழுவார்க்கிரங்கி இருந்தருள்செய்
பாதிரிப் புலியூர் செழுநீர் புனற்கங்கை செஞ்சடை மேல்
வைத்த தீவண்ணனே.

Appar

திருநாவுக்கரசர் பதிகம் பாடி புரிந்த அற்புதங்களில் சிலவற்றை பார்ப்போம்.

* திருநாவுக்கரசருக்கு வந்த கொடிய சூலை நோயை திருவதிகை வீரட்டானத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் மீது பதிகம் பாடி தீர்த்துக்கொண்டார்.

* சமணர்கள் இட்ட நீற்றறையில் ஏழு நாட்கள் இருந்து பதிகம் பாடி எவ்வித ஊறும் இன்றி சிவபெருமான் அருளால் வெளிவந்தார்.

* சமணர்கள் தந்த நஞ்சு கலந்த பால் சோறு உண்டும் பதிகம் பாடி உயிருடன் இருந்தார்.

* தன்னை கொல்லுமாறு சமணர்கள் ஏவிவிட்ட யானையை பதிகம் பாடி, தன்னை வலம் வந்து வணங்குமாறு செய்தார்.

* சமணர்கள் அவரை கல்லில் கட்டி கடலில் போட, பதிகம் பாடி அக்கல்லையே தெப்பமாக கொண்டு மிதந்து கரை சேர்ந்தார்.

* திங்களூரில் அப்பூதியடிகளின் மகனை பாம்பு தீண்டி அவன் இறக்க, பதிகம் பாடி அவனை உயிர்ப்பித்தார்.

* திருவீழிமிழலையில் அடியார்கள் பசியால் வருந்த, பதிகம் பாடி தினமும் சிவபெருமானிடம் ஒரு பொற்காசு பெற்று அடியார்கள் பசிதீர்த்து வந்தார்.

DSC02198
திருநாவுக்கரசருக்கு படிக்காசு அருளிய இடம்

* திருமறைக்காடு என்னும் வேதாரண்யத்தில் பூட்டப்பட்டு பல்லாண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த கோவில் கதவுகளை பதிகம் பாடி திறக்கச் செய்தார்.

* திருப்பைஞ்ஞீலிக்கு செல்லும் வழியில் இவர் பசியால் வருந்துவதை சிவபெருமான் அறிந்து ஒரு அந்தணராக வந்து சிவபெருமான் இவருக்கு கட்டமுது தந்து பசியாற்றியும், நீர் அருந்த ஒரு குளமும், இளைப்பாற ஒரு சோலையும் தந்தருளினார்.

* இந்த பூத உடலோடு கையிலாய தரிசனம் செய்ய நடந்து நடந்து கால் தேய்ந்து தவழ்ந்து சென்று கை தேய்ந்து, உருண்டு சென்று உடலும் தேய்ந்தபோது சிவபெருமான் அந்தன உருக்கொண்டு வந்து ஒரு குளத்தை காட்டி அதில் மூழ்கச் செய்து எழும்போது திருவையாறு சமுத்திர தீர்த்தக் கரையில் வெளிப்பட்டு ஆடி அமாவாசை தினத்தன்று கையிலாய தரிசனம் காண உதவினார்.

* இவர் பாடிய பதிகங்களை கேட்டு இறைவனே இவருக்கு ‘திருநாவுக்கரசர்’ என்னும் பட்டத்தை சூட்டினார்.

* அப்பர் ஸ்வாமிகள் எழுவதாவது வயதில் தல யாத்திரை துவங்கி, 81 வயது வரை 5 முறை தலப்பயனம் மேற்கொண்டு பாடியுள்ள தலங்கள் 126. பதிகங்கள் 312. மொத்த பாடல்கள் 3066 ஆகும்.

* திருப்புகலூரில் இறைவனுடைய திருவடிகளை அடைய விரும்பி ‘புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்’ என்று பாடி சித்திரை சதயத்தன்று சிவபெருமானோடு இரண்டறக் கலந்தார்.

* அப்பர் பெருமானது அருந்தொண்டை நினைவுகூறும் வகையில் தான் நமது தளம் சார்பாக வழங்கப்படும் விருதுகளில் இந்த ஆண்டு ‘ரைட்மந்த்ரா அப்பர் திருநாவுக்கரசர்’ என்னும் விருதை அறிமுகப்படுத்தி, உழவாரப்பணியில் சிறந்து விளங்குபவர்களுக்குஅளித்து வருகிறோம்.

Jeyaram 2
சிறந்த உழவாரப்பணி தொண்டுக்காக நமது தளத்தின் ‘அப்பர் திருநாவுக்கரசர்’ விருதை பெரும் திரு.ஜெயராமன்

இந்த ஆண்டு விருதை பெற்றவர் இருகால்கள் இழந்த நிலையிலும் உழவாரப்பணி செய்யும் தொண்டர் திரு.ஜெயராமன் அவர்கள். (இவரை பார்க்க நேர்ந்ததே புண்ணியம் தான் !)

பூமியார்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி
ஆழிமிசைக் கள் மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாத வூரார்திருத் தாள் போற்றி.

====================================================================

Also check similar articles and true incidents :

Thalaivar is always great!

தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!

பணத்தை தேடி வரவழைத்த பதிகம்! மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!

உணவும், உறக்கமும், நிம்மதியும், செல்வமும் நல்கி இறுதியில் சிவபதம் அருளும் பதிகம்!

வசிஷ்டர் அருளிய தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்

நமக்கென்று ஒரு சொந்த வீடு – உங்கள் கனவு இல்லத்தை வாங்க / கட்ட வழிகாட்டும் பதிகம்!

ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?

அகத்தியரின் ‘திருமகள் துதி’ – இது வீட்டில் இருந்தாலே திருமகளின் அருள்மழை நிச்சயம்!

மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!

பன்னிரு திருமுறைகளின் பெருமையும் அதை மீட்டுத் தந்த நம்பியாண்டார் நம்பியும்!

ஆஞ்சநேய பக்தர்களுக்கு ஓர் வரப்பிரசாதம் – கிடைப்பதர்க்கரிய ஸ்ரீஹநுமத் சுப்ரபாதம்!!

வறுமையை விரட்டி, பொன் பொருள் சேர்க்க எளிய தமிழில் ஒரு அழகிய ஸ்லோகம்!

களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!

‘திருவாசகம்’ என்னும் LIFESTYLE MANTRA – கருவுற்றிருக்கும் பெண்கள் கவனத்திற்கு!

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!

அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!

மாங்கல்யம் தந்த மங்களாம்பிகை – சிலிர்க்க வைக்கும் ஒரு நிகழ்வு!!

====================================================================

[END]

 

9 thoughts on “திருநாவுக்கரசர் பதிகம் பாடி புரிந்த அற்புதங்கள்!

 1. நமது தலைவர் நாயன்மார்களுக்கும் அவருடைய அடியார்களுக்கும் புரிந்த, புரிந்து கொண்டிருக்கின்ற திருவருட்களை எப்பொழுது கேட்டாலும் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பே தோன்றாது.

  ஓம் நம சிவாய

 2. மருள் நீக்கியார் கதையும் அப்பர் பெருமானாக அவர் பாடிய பதிகங்களும் நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள்.
  திலகவதி அம்மையாரின் கதையும் அப்பர் பெருமானின் பெருமைகளும் கேட்க கேட்க திகட்டாதவை
  பட்டியலிட்டு காட்டி உள்ள பதிகங்கள் அருமை எங்களுக்கு மிகவும் தேவைப்படும் பதிகங்கள்.
  படித்து பலன் பெறுவோம்.
  நன்றி

 3. நால்வரில் ஒருவரான திருநாவுக்கரசரைப் பற்றி அவரது குரு பூஜை அன்று பதிவாக எழுதியதைப் படிக்க படிக்க பரவசம்.

  அவர் இயற்றிய 5 , 6 ம் திருமுறை படிக்க படிக்க தேனினும் இனிய தெள்ளமுதமாக இருக்கும்.

  //சொற்றுணை வேதியன் சோதி வானவன்
  பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கை தொழக்
  கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
  நற்றுணை யாவது நமச் சிவாயவே /

  நன்றி
  உமா வெங்கட்

 4. நாவுக்கு அரசர் என்று
  சிவபெருமானால் வழங்கப்பட்டவர் – இது ஒன்று போதுமே அவர் பெருமை விளக்க

  திருச்சிற்றம்பலம் !!!

 5. வணக்கம் சுந்தர். தகுதியானவர்கள்கு உதவியம், மரியாதையும் செய்வதில் உங்களை விட தெரிந்தவர்கள் யார் இருகிறார்கள்.வாழ்த்துக்கள் ஜெயராமன். ஈசன் அருளால் எல்லோரும் நலமோடு இருக்கவேண்டும் . நன்றி.

 6. சுந்தர் அண்ணா..

  இந்த பதிவிற்கு நன்றிகள் பற்பல.

  அப்பர் பெருமான் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டேன். அனைத்தும் புதிய தகவல்கள்.
  நம் இளம் தலைமுறையினர் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய பதிவு என்று தான் சொல்ல வேண்டும்.

  மிக்க நன்றி அண்ணா..

 7. Posts like this, makes us urging to more and more about nayanmars, alwars and their divine relations.
  **
  As usual, picture is superb. Glad to know about Appar thirunavukkarasar.
  **
  From each post of yours, you’re opening new accounts in the minds of people like me – the accounts specifically made for the great people in the history.

  Today, people like me, who just had reel leaders as a hero. How they are living in their real lives reveals shocking things.

  So, instead of going behind cine and politics, we should turn towards karma yoga and bhakthi yoga.
  **
  **Chitti**.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *