“உங்கள் கோரிக்கையை சற்று விரிவாக எனக்கு தமிழில் ஆங்கிலத்திலோ டைப் செய்து மின்னஞ்சல் அனுப்புங்கள். வரும் வாரங்களில் வெளியிடுகிறேன்” என்று கூறியிருந்தோம்.
அப்போது அவர் மகா பெரியவா பற்றியும் தான் சில கருத்துக்களை எழுதி அனுப்புவதாகவும் நன்றாக இருந்தால் தளத்தில் வெளியிடலாம் என்றும் அதைவிட தனக்கு வேறு பாக்கியம் இருக்க முடியாது” என்றும் கூறினார்.
“நீங்கள் அனுப்புங்கள்… படித்துவிட்டு அது பற்றி முடிவு செய்கிறேன்” என்று பதில்கூறினோம்.
அடுத்த இரண்டு நாட்களில் இரண்டு தனித் தனி மின்னஞ்சல்கள் அனுப்பிவிட்டார். ஒன்றில் பிரார்த்தனை கிளப்புக்கு கோரிக்கை. மற்றொன்றில் பெரியவா பற்றிய அவரது கருத்துக்கள்.
ஆங்கிலத்தில் தான் அனுப்பியிருந்தார். ஆனால், மிகவும் ரசித்து படித்தோம். அசாத்திய ஆங்கில புலமை அவரிடம் இருக்கிறது. மேலும் சொல்லவரும் விஷயத்தை மிகவும் இனிமையாக எடுத்துக் கூறும் பாங்கும் சிறப்பாக இருக்கிறது. எனவே அதை தளத்தில் அவசியம் வெளியிடவேண்டும் என்று கருதி, அவரது மின்னஞ்சலை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து தந்திருக்கிறோம்.
ஒரிஜினல் ஆங்கில எழுத்துருவையும் தந்திருக்கிறோம். அதன் பின்னேர் இறுதியில் நமது வழக்கமான குரு தரிசனம் பதிவு அளிக்கப்பட்டிருக்கிறது.
திரு.சந்திரமௌலி சாஸ்திரிகளை நாம் நேரில் சந்தித்தபோது குறிப்பெடுத்துக்கொள்ள பயன்படுத்திய டைரியை வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டோம். எனவே அடுத்த வாரம் அது இடம்பெறும்.
திரு.சந்திரசேகரன் அவர்களின் பிரார்த்தனை அடுத்த வாரங்களில் ஏதேனும் ஒன்றில் வெளியிடப்படும். அவர் இருக்கும் சூழ்நிலையில் இப்படி பெரியவா மீது அவர் அசைக்கமுடியாத ஆழ்ந்த பக்தி கொண்டுள்ளது, பக்திக்கே இலக்கணம் வகுக்கிறது என்றால் மிகையாகாது.
நாம் ஏற்கனவே கூறியபடி, துன்பத்தில் தொடரும் பக்தியே தூய்மையானது.
=====================================================================
மடத்துக்கு சென்றால் மகா பெரியவா கேட்கும் முதல் கேள்வி என்ன தெரியுமா?
மகா பெரியவாவை பற்றி எழுதுவது எனக்கு அளவு கடந்த சந்தோஷத்தை தருகிறது. காஞ்சி மகா பெரியவா, காஞ்சி மாமுனிவர் – இந்த இரண்டு வார்த்தைகளும் தான் எனக்கு உலகிலேயே மிக மிக இனிமையான வார்த்தைகள். இந்த இரண்டு வார்த்தைகளும் என் நாவிலிருந்து வரும்போது, என்னவோ தெரியவில்லை எனக்கு கிடைக்கும் அந்த பரவசத்துக்கு ஈடு இணையே இல்லை.
நம் அனைவருக்கும் தெரியும் அவர் எண்ணற்ற அற்புதங்களை தனது யோக சக்தியினால் நிகழ்த்தியிருக்கிறார். தனது இறைத்தன்மையை காண்பிக்க அல்ல. அவரை தரிசிக்க வரும் பக்தகோடிகளின் துயர்களை தீர்க்க.
எல்லோரையும் ஒரே மாதிரி தான் அவர் நடத்தினார். ஏழை பணக்காரன் வித்தியாசத்தை அவர் பார்த்ததில்லை. தன்னை அடிக்கடி வந்து சந்திப்பவர்களையும் சரி… எங்கிருந்தோ அவரை மனதார துதிப்பவர்களும் சரி… எல்லாருமே அவருக்கு ஒரே மாதிரி தான். பக்தர்களிடம் அவர் வேறுபாட்டை கண்டதில்லை. ஜாதி, மத, மொழி பேதமின்றி அந்த பரம்பொருளின் கருணை மழை அனைவருக்கம் கிடைத்தது.
மகா பெரியவா தனது பால்ய பருவத்தில் திண்டிவனத்தில் உள்ள ஆர்காட் அமெரிக்க மிஷன் பள்ளியில் தான் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பள்ளி கிருஸ்தவ மிஷினரிகளால் நடத்தப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கள் பயிலும் அனைத்து மத மாணவர்களுக்கும் பைபிள் கல்வியை அவர்கள் கட்டாயமாக்கினர் என்பதை சொல்லவேண்டியதில்லை. நம் மகா பெரியவா பைபிள் கல்வியிலும் நன்கு தேர்ச்சி பெற்று முதல் மாணவனாக வந்தார், பல பரிசுகளை வென்றிருக்கிறார் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
அவரது அருளை பெற ஒருவர் இந்தியராகத் தான் இருக்கவேண்டும் என்பதில்லை. வெளிநாடுகளிலிருந்து வந்த பல பக்தர்கள் அவரிடம் கிருஸ்துவை உணர்ந்ததாக சொல்லியிருக்கிறார்கள். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பால் பிரண்டனுடன் அவர் நிகழ்த்திய உரையாடல் மிகவும் பிரசித்தம். மகா பெரியவாவை பற்றியும் ரமண மகரிஷியை பற்றியும் அவர் எழுதிய நூலில் பல இடங்களில் சிலாகித்து எழுதியிருக்கிறார்.
தமிழக முன்னாள் ஆளுநர் திரு.அலெக்சாண்டர் அவர்கள் பெரியவாவை சந்திக்க சென்றபோது, பைபிள் குறித்து பெரியவா உரையாட, பைபிள் மீது அவருக்கு இருக்கும் அசாத்திய அறிவு குறித்து வியந்துபோய்விட்டாராம். “ஒரு இந்து மத சன்னியாசிக்கு இந்தளவு பைபிள் மீது இருக்கும் அறிவு என்னை வியக்கவைக்கிறது” என்று இது பற்றி குறிப்பிட்டார் அவர். தான் ஒரு சிரியன் கத்தோலிக்கர் என்றாலும் பைபிள் பற்றி மிகவும் ஆழமாக பெரியவாவிடம் விவாதித்து பல விஷயங்களை தெரிந்துகொண்டதாக அவர் கூறினார்.
அது மட்டுமல்ல… இந்த இடத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.எம்.எம்.இஸ்மாயில் பற்றி குறிப்பிடவேண்டும். தமிழ் மீதும் கம்பராமாயணம் மீதும் இஸ்மாயில் அவர்களுக்கு இருந்த புலமையும் ஆளுமையும் அனைவரும் அறிந்த ஒன்று. மகா பெரியவாவின் பக்தர்களில் அவரும் ஒருவர் என்பது தான் இங்கே விசேஷ தகவல். பெரியவாவை சந்தித்து அவரது ஆசியை பெற அடிக்கடி காஞ்சிபுரம் செல்வார் இஸ்மாயில்.
ஒருமுறை சிறந்த இலக்கியவாதியும், கம்பன் கழகத்தின் தலைமை பொறுப்பிலிருந்த திரு.நீதியரசர் இஸ்மாயில் அவர்கள் பெரியவர்களைப் பார்க்க வந்தார். இருவருக்கும் இடையே இலக்கிய விஷயங்களைப் பற்றியும் கம்பராமாயணத்தைப் பற்றியும் விவாதம் வெகு நேரம் நடந்து கொண்டு இருந்தது. மடத்திலிருந்த எல்லோருக்கும் ஸ்வாமிகள் நீதியரசருக்கு என்ன பிரசாதம் கொடுக்கப் போகிறார் என்ற எண்ணமே மிகுதியாக இருந்தது. இந்துக்களுக்கெல்லாம் விபூதி குங்குமம் வழங்கலாம். ஆனால் இந்த இஸ்லாமிய பெரியவருக்கு என்ன கொடுப்பார்? விவாதம் முடிந்து நீதியரசர் விடைபெறும் நேரம் நெருங்கிவிட்டது.
ஸ்வாமிகள் மடத்துச் சிப்பந்தி ஒருவரை அழைத்து சைகையால் ஒரு பொருளைக் கொண்டுவரச் சொன்னார்கள். உடனே அவரும் ஒரு வெள்ளிப் பேழையில் அந்தப் பொருளைக் கொண்டுவந்து ஸ்வாமிகள் முன் வைத்தார். ஸ்வாமிகள் நீதியரசரைப் பார்த்து இந்தப் பேழையில் சந்தனம் இருக்கிறது இதை அணிந்துகொண்டு நலமாக இருங்கள் என்றார். மேலும் கூறினார் நம் இருமதத்தினருக்கும் பொதுவான அம்சம் இது. உங்கள் தர்காவிலும் சந்தனக்கூடு உண்டு எங்கள் கோவில்களிலும் சந்தனம் உண்டு. நீதியரசரும் சந்தோஷத்துடன் அதை அணிந்து கொண்டு சென்றார்.
மஹாஸ்வாமிகளுக்கு எல்லா மதத்தினர் மீதும் மரியாதை உண்டு. அதேமாதிரி மற்ற மதத்தினரும் அவருக்கு மரியாதை செலுத்தத் தவறியதே இல்லை. அவர் சமாதியான அன்று மரியாதை செலுத்த வந்தவர்களுள் சில இஸ்லாமிய சகோதரர்களும் அடக்கம்.
பிற மதத்தினரிடம் எந்த வித துவேஷத்தையும் நாம் பாராட்டாது அன்பு செலுத்தவேண்டும் என்பதையே
மேற்கூறிய சம்பவங்கள் மூல பெரியவா தான் நடந்துகொண்டு அதன் மூலம் நமக்கு உணர்த்துகிறார். அதுவும் மும்பை போன்ற பலதரப்பட்ட மக்கள் வசிக்கும் ஒரு நகரத்தில் அவரது இந்த பாடம் நாம் பின்பற்றவேண்டிய ஒன்று.
மேலும் பெரியவா தான் வாழ்ந்த காலத்தில் தவறாமல் பின்பற்றி வந்த அறங்களுள் ஒன்று அனைத்து தரப்பட்ட மக்களுக்கு பாரபட்சமற்று நடைபெற்ற அன்னம்பாலிப்பு. மடத்துக்கு சென்றால் அவர் கேட்கும் முதல் கேள்வி, “சாப்பிட்டீர்களா?” என்பது தான்.
சாப்பிடவில்லையென்றால், போய் முதலில் சாப்பிட்டுவிட்டு வாருங்கள் அப்புறம் என்னிடம் வந்து பேசலாம் என்பது தான் அவர் கூறுவதாக இருக்கும்.
அன்னதானம் செய்வதற்கு ஏழை, பணக்காரன், ஜாதி, மத பேதம் பார்க்கக்கூடாது என்பது அவர் அபிப்ராயம். காரணம் பசி என்பது எல்லாருக்கும் பொதுவான ஒன்று. எனவே அவரை பின்பற்றுபவர்கள் அனைவரும் மறக்காமல் இதை நினைவில் கொள்ளவேண்டும்.
இவை தவிர, மஹா பெரியவா மிகவும் சிரத்தை எடுத்துக்கொண்டது வேத சம்ரட்சணம், கோ சம்ரட்சணம் மற்றும் இதிகாசங்கள் மற்றும் உபநிஷதங்களை காப்பது ஆகியவற்றில் தான்.
வேதம் படிக்கும், கற்றுத் தரும் அனைவருக்கும் நம்மால் இயன்ற உதவிகளை நாம் அவசியம் செய்யவேண்டும்.
மகா பெரியவா காயத்ரியை இத்துடன் தருகிறேன்.
இதனை தினமும் 108 முறை ஒருவர் கூறினால் போதும். அவருடைய அருளுக்கு பாத்திரமாகிவிடலாம்.
ஸ்ரீ மஹாபெரியவா காயத்ரி:
ஓம் காஞ்சி வாஸாய வித்மஹே
சாந்த ரூபாய தீமஹி |
தன்னோ சந்த்ரசேகரேந்த்ர ப்ரசோதயாத் ||
எஸ்.சந்திரசேகரன், கல்யான் கிழக்கு, மும்பை
=====================================================================
Original English Text :
Maha Periyava the Omnipotent and Omnipresence!
It gives me immense pleasure for me to write a few words about Sri Sri Kanchi Mahaperiyava.
“Kanchi Mahaperiyava, Kanchi Mahamunivar” for me these two words are the sweetest words in the world. Whenever these words come to my senses, I feel I am experiencing an inexplicable feel of eternal joy. We are all aware that, He did and continues to do so many miracles – not to showcase His iswaratvam but only to give solace and relieve the yoke ofsorrows of all the people who came to him whether they are His devotees or otherwise.
He treated all alike – rich and poor – who visit Him physically or pray from adistance irrespective of their caste, creed, sex and their level of mental maturity and spiritual attainment. .
Mahaperiyava had his initial schooling at Arcot American Mission High School, Tindivanam, which obviouslywas run by Christian Missionaries. Needless to say that they gave special thrust to impart Biblical studies to all students irrespective of their religion. It is no wonder Mahaperiva stood first in Bible studies and won many laurels.
Not even one’s nationality matters.Quite a lot of foreign devotees saw and felt Christ in Him during their interaction with Him.Mr. Paul Brunton, a French is a standing example. He made wonderful remarks about Him and Shri Ramana Maharishi in his book.
Former Governor of Tamil Nadu His Excellency Alexander amazed at his knowledge of Bible. He remarked that “I am really wondering His knowledge in Bible” and added that though he belonged to Syrian Catholic subsect – a small sub division in Christianity – He discussed with him about the bible with a deep sense of omniscience.
It is not impertinent here to mention that the former High court Justice Shri M.M. Ismail, an exponent of Tamil literature in general and Kamba Ramayana in particular was one of the staunch devotees of Mahaperiyava. Whenever, Shri M. M. Ismail visited Kanchipuram, Mahaperiyava used to discuss with him deeply in Koran and Kambaramanayana. On one such visits, Mahaperiyava told his disciples to bring prasadam which is in a small container. All the people who were surrounding in that place werewonderingwith a sense of doubt as to what acceptable prasadam He is going to give him, as the former was a Muslim. Mahaperiyava opened the container, which was filled with full of good quality Sandal paste. Mahaperiyava told Shri M. M.Ismail that Sandal Paste is common to both the religions. We are using Sandal in Pujas and Muslims are using the same in “Chandana Kudu Vaibava”. All were exclaimed.
Shri M. M.Ismail accepted Prasadams with pleasure.
From the above incidents, Mahaperiyava advised us by His deeds that we, who are now in Maharashtra,a place of domicile for all the people of various states in India to treat all alike. We should not show any partiality. Moreover, Mahaperiyava during His life time, was very particular in feeding all the people. If anybody visited Kanchipuram Mutt, the first question from Mahaperiyava was whether he had his food. If not, to take it at once and them come for darshan. Likewise, we should also feed all the people (no caste or creed) as hunger is common for all living beings. As far as possible, we must perform Annadanam not only for Brahmins but also for all the people.
Mahaperiyava was also very much interested in fostering Vedas, Upanishats and ancient Epics. To some extent, we should also encourage and nurture the Pandits who are teaching Vedas.
I thank Mr. Rightmantra Sundar for giving me an opportunity to write few words about Mahaperiyava.
I am giving below the Gayatri Manthra of Mahaperiyava which is very useful to us. If we chant 108 times daily definitely we may reap the fruits of prosperity in all the walks of our life.
Om Sri Kanchee Vasaya Vidmahe
Shantha Roobaya dheemahi
Thannuo Chandrasekharendra Prachothayath
– S. Chandrasekaran, Kalyan-E, Mumbai
=====================================================================
குழந்தைகள் வருவர் பின்னே! வாழைப்பழங்கள் வரும் முன்னே!!
இது நமது வழக்கமான குரு வார ஸ்பெஷல் பதிவு.
மேலே திரு.சந்திரசேகரன் கூறியுள்ள கருத்துக்களை அடியொற்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவு!
பிக்ஷா வந்தனம் செய்ய வந்தார் ஒரு அன்பர். கும்பகோணம் பக்கம், அவருடைய கிராமம். சொந்தமாக வாழைத்தோட்டம். ஏராளமான கறி காய்களுடன் நான்கு தார் வாழைப்பழமும் கொண்டு வந்திருந்தார். பெரிய பெரிய சீப்புக்கள். நீளமான பழங்கள்.
பெரியவா தாரிலிருந்து ஒவ்வொரு பழமாக பிய்த்து தட்டுக்களில் வைக்கச் சொன்னார்கள். தொண்டர்களுக்கு ஆச்சரியமாக இருந்தாலும் சொன்னதை செய்து தானே ஆகவேண்டும்?
ஐந்தாறு தட்டுக்களில் தனித் தனி பழமாக வைக்கப்பட்டன. சுமார் முன்னூறு பழங்கள் இருக்கும்.
பத்து நிமிஷங்கள் ஆகியிருக்கும். ஏதோ ஒரு பள்ளிக்கூடத்தின் குழந்தைகள் நான்கு பஸ்களில் தரிசனத்துக்கு வந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வாழைப்பழம். பெரியவா தன் கையாலேயே கொடுத்தார்கள்.
கடைசிப் பையன் வந்தபோது, தட்டில் ஒரே ஒரு பழம் மட்டுமே இருந்தது.
எத்தனை மாணவர்கள் வந்தார்களோ அத்தனை பழங்கள் தான் இருந்தன.
மாணவர்கள் போன பிறகு பெரியவா சொன்னார்கள் : “குழந்தைகள் கிறிஸ்தவப் பள்ளியிலிருந்து வருகிறார்கள். மெஜாரிட்டி கிருஸ்தவ குழந்தைகள். இவர்களுக்கு விபூதி குங்குமம் கொடுப்பது சரியாக இருக்காது. அவர்களுக்கும் மனதிருப்தி ஏற்படாது. பழம் என்றால் யாரும் மறுப்பதற்கில்லை. அதனால் தான் எல்லாருக்கும் பழங்கள் கொடுத்தேன்.”
எவர் மனதையும் புண்படுத்தக் கூடாது என்பது பெரியவா கொள்கை.
“சங்கர மடம் என்பதால் நான் விபூதி கொடுத்திருந்தால் எல்லாருமே கை நீட்டி வாங்கிக்கொள்வார்கள். கொஞ்ச தூரம் சென்றதும், சுவரோரமாக உதறிவிட்டு போயிருப்பார்கள்!”
நிதர்சனத்தில் என்றுமே பெரியவாவுக்கு கண் உண்டு. கிட்டத்து பார்வை!.
[மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள் | டி.எஸ்.கோதண்ட ராம சர்மா]
(குரு தரிசனம் தொடரும்)
=====================================================================
Also check :
யாரை குருவாக ஏற்றுக்கொள்வது? உண்மையான குருவை எப்படி அடையாளம் காண்பது?
குரு என்பவர் இறைவனை விட உயர்ந்தவரா? MUST READ
=====================================================================
மனதுக்கினிய வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் அற்புதமான ஒரு பரிகாரத் தலம் பற்றிய பதிவு இது!! கெட்டியாக பிடித்துக்கொண்டு கரை சேருங்கள்!!!
Check :
நல்லதொரு வேலை; இனியில்லை கவலை! இதோ ஒரு அருமையான பரிகாரத் தலம்!!
=====================================================================
An appeal – Help us in our mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
=====================================================================
Earlies articles on Maha Periyava in Guru Darisanam series…
நெற்றியில் குங்குமம்; நெஞ்சில் உன் திருநாமம்! – குரு தரிசனம் (34)
அலகிலா விளையாட்டுடையானின் அன்பு சாம்ராஜ்ஜியத்தில் ஒரு புதிய வரவு! குரு தரிசனம் (33)
குரங்கை அடித்ததால் ஏற்பட்ட தோஷம்! மகா பெரியவா சொன்ன பரிகாரம்!! குரு தரிசனம் (32)
சர்வேஸ்வரா நீ அறியாததும் உண்டோ? – குரு தரிசனம் (30)
“என்ன தாமஸ், பையன் கிடைச்சுட்டானா?” – குரு தரிசனம் (29)
“மகா பெரியவா நாவினின்று வருவது வார்த்தைகள் அல்ல. சத்திய வாக்கு!” – குரு தரிசனம் (28)
ஒரு ஏழை கனபாடிகளும் அவர் செய்த பாகவத உபன்யாசமும் – குரு தரிசனம் (27)
மகா பெரியவா அனுப்பிய உதவித் தொகை; ஒளிபெற்ற அர்ச்சகர்கள் வாழ்வு! – குரு தரிசனம் (26)
பெரியவா பிரசாதம்னா சும்மாவா? ஆப்பிள் செய்த அற்புதம்! – குரு தரிசனம் (25)
இது உங்களுக்கே நியாயமா சுவாமி? – குரு தரிசனம் (24)
ஸ்ரீ மகா பெரியவா திருவிளையாடல் – குரு தரிசனம் (23)
சொத்து வழக்குகளில் சிக்கித் தவித்தவருக்கு மகா பெரியவா சொன்ன பரிகாரம் – குரு தரிசனம் (22)
மகா பெரியவாவின் ஸ்பரிஸம் பட்ட குளத்து நீர் – குரு தரிசனம் (21)
சாமி குத்தம், தடைபட்ட திருப்பணி, முடித்து வைத்த மகா பெரியவா! – குரு தரிசனம் (20)
இது தான் பக்தி என்பதை உணர்த்திய குடும்பம் – குரு தரிசனம் (19)
பார்வையாலேயே குணப்படுத்தும் வைத்தீஸ்வரன் – குரு தரிசனம் (18)
கேட்டது ஒரு பிள்ளையார் சிலை; கிடைத்ததோ ஒரு கோவில் – குரு தரிசனம் (17)
குரு தரிசனம் தந்த பரிசு – அன்றும், இன்றும் – இரண்டு உண்மை சம்பவங்கள் – குரு தரிசனம் (16)
மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம் – நெஞ்சை உலுக்கும் சம்பவம் – குரு தரிசனம் (15)
“ஏம்பா! உங்களுக்கு எப்போ பார்த்தாலும் பெரியவா சேவை தானா?” – குரு தரிசனம் (14)
வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!
வாழைப்பழத்துக்கு பதில் மகா பெரியவா கொடுத்த நெற்பொரி. ஏன்? எங்கு? – குரு தரிசனம் (13)
“கடமைக்கே நேரமில்லை, இதுல கோவிலுக்கு எங்கே சாமி போறது?” – குரு தரிசனம் (12)
காசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவேண்டும்? – குரு தரிசனம் (11)
குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….
http://rightmantra.com/?cat=126
=====================================================================
Also check short series on Kalady & Sornaththu Manai :
சங்கரரின் காலை முதலை பற்றிய ‘முதலைக் கடவு’ – ஒரு நேரடி ரிப்போர்ட் (2)
பக்திக்கும் பாசத்திற்கும் வளைந்த பூர்ணா நதி – காலடி நோக்கி ஒரு பயணம் (1)
ஜகத்குரு ஆதிசங்கரர் வாழ்க்கை வரலாறு – ஒரு (வி)சித்திர அனுபவம்!
=====================================================================
Articles on Ramana Maharishi
ஈசனோட கதவு எப்பவும் திறந்தே இருக்கும். ஆனா…
பிள்ளையார் பழமும் அதீத சிற்றம்பலமும் – இது ரமண திருவிளையாடல்!
ரமண திருவிளையாடற் திரட்டில் கண்ட முத்துக்கள் மூன்று!
பிராப்தம் & ஆஞ்ஞை = ரமண விளையாட்டு!
=====================================================================
Articles about other Gurus in Rightmantra.com
‘பரப்பிரம்மம்’ நிகழ்த்திய லீலைகள் – பிரம்மேந்திரர் ஜெயந்தி ஸ்பெஷல்!!
மனித முயற்சி + குருவருள் = திருவருள்! (ஞானானந்தம்-2)
ஆனந்தத்தை அள்ளித் தரும் குருவின் மகாத்மியங்கள் – (ஞானானந்தம்-1)
நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!!
“எதற்கும் கவலைப்படாதே. உன்னுடைய மேலதிகாரியால் உனக்கு எந்த விதத் தொந்தரவும் ஏற்படாது!”
காங்கேயநல்லூர் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் – ஒரு திவ்ய தரிசனம்!
தீராத வினைகளை தீர்க்கும் நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் – A must visit place!
பித்தனாகியும் பரமனைப் பாடிய ஸ்ரீ அப்பைய தீட்சிதர் திவ்ய சரிதம் + அதிஷ்டான தரிசனம்!
ராம நாம மகிமை & போதேந்திராள் வாழ்க்கை வரலாற்று நாடகம்! ஒரு நேரடி அனுபவம்!!
குரு அடித்தாலும் அணைத்தாலும் அது கருணை தானே? – ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் லீலை!!
காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!
=====================================================================
Articles about Sri Ragavendra Swamy
முதல் மாணவன், முதல் வேலை, முதல் சம்பளம்…!! – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (6)
புதுவை பிருந்தாவனத்தில் காட்சி தந்த ராகவேந்திரர் – உண்மை சம்பவம் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (5)
பட்ட மரம் துளிர்த்தது; வேத சக்தி புரிந்தது – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 4
கேட்பதை தருவார், கேட்டதும் தருவார் குருராஜர் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 3
“அழைத்தால் போதும் அடுத்த கணமே நினைத்தது நடக்கும்!” – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 2
திருவருளும் குருவருளும் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (1)
குருராஜர் இருக்க கவலை எதற்கு? நெகிழ்ச்சியூட்டும் நிஜ அனுபவங்கள்!
நம் தளத்திற்கு கிடைத்த ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பரிபூரண ஆசி! எங்கே… எப்படி?
ஆங்கில கவர்னருக்கு ராகவேந்திரர் காட்சியளித்த அற்புதம் – கஜெட் ஆதாரத்துடன்!
உச்சரிப்பை விட உன்னத பக்தியே சிறந்தது!
இறைவா… பிறர் நிறைவில் பெருமிதமே தினம் காணும் குணம் வேண்டும்!
எது வந்த போதும் துணை நீயே குருராஜா – உண்மை சம்பவம்
முக்காலமும் நீ அறிவாய் குருராஜா – நம் தள வாசகரிடம் ஸ்ரீ ராகவேந்திரர் நிகழ்த்திய அற்புதம்!
‘ஸ்ரீ ராகவேந்திர தரிசனம்’ தொடர் அடுத்த வாரம் முதல் தொடர்ந்து இடம்பெறும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.
=====================================================================
[END]
குருவின் பெருமைகளை மிக அழகாக பதிந்துள்ளார் மும்பை வாசகர்.
குருவின் காயத்ரியை தந்த அவருக்கு கோடி நன்றிகள்.
அவருடைய துயர் நீங்க குருவை பிரார்த்திக்கிறேன்
குரு வாரத்தில் நம் குருவைப் பற்றி நம் வாசகர் திரு சந்திரசேகர் அவர்கள் மகா பெரியவா பற்றி ஸ்லாகித்து , உணர்ச்சி பூர்வமாக எழுதியதை படித்து மெய் மறந்தேன். மகா பெரியவா எல்லா மதத்திற்கும் மதிப்பு கொடுத்து நடந்து கொண்டதை படிக்கும் பொழுது அவர் ஜாதி மத பேதங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பதை சொல்லவும் வேண்டுமோ….. .
மகா பெரியவா மீது திரு சந்திரசேகர் அவர்கள் வைத்து இருக்கும் பக்திக்கு நான் தலை வணங்குகிறேன். அவர் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்
குருவார பதிவு கதையும் அருமை.
குருவே சரணம்….குரு கடாக்ஷம்
நன்றி
உமா வெங்கட்
குருவே சரணம்……. குருவே சரணம்……….. குருவே சரணம்………..
சுந்தர்ஜி
மஹா பெரியவா அவர்களை பற்றி எழுத, எழுத வார்த்தைகள் வந்துகொண்டே இருக்கும். அவர்களை பற்றி படிக்க மிகவும் தித்திப்பாக இருக்கிறது. சந்திரசேகர் எழுதிய கடிதம் மிகஅருமை
“வாழைபழங்களின் எண்ணிக்கை மிகச்சரியாக இருந்த நிகழ்வு…”
என்னவென்று கூறுவது?
நமது வார்த்தைகள் எதுவும் இது போன்ற சத்திய நிகழ்வுகளின் முழுமையை உணர்த்தாது.
குரு சரணம்.
சுந்தர் அண்ணா..
குரு தரிசனம் மிகவும் சிறப்பு சேர்த்ததற்கு காரணம் திரு. சந்திரசேகரன் அய்யாவின் மடல் என்று சொல்வது சால சிறப்பு. அவரின் கடிதத்தின் ஒவ்வொரு வார்த்தைகளும் வேத வாக்கு. எனக்கு இந்த பதிவை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது அண்ணா..
இந்த பதிவிற்கு பின்புலமாய் அமைந்த திரு.சந்திரசேகரன் அய்யா விற்கு கோடான கோடி நமஸ்காரங்கள். அவரது பிரச்சினைகள் அனைத்தும், குருவருளால் மறைந்து, அவரது வாழ்வில் இன்ப ஒளி வீசிட நாம் பிரார்த்திப்போமாக..
தாங்கள் வழங்கிய பதிவும் மிகவும் அருமை.
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே—திருமந்திரம் 137
குருவே சரணம்..
மிக்க நன்றி அண்ணா.
வணக்கம் சுந்தர். படிக்க படிக்க திகட்டாதவை குருவின் பெருமைகள்.உங்கள் மூலமாக நாங்களும் பல சம்பவங்களை தெரிந்து கொள்கிறோம் .நன்றி இன்னும் சில காலம் நம்முடன் இருந்து இருக்கலாம்.மஹா பெரியவா சரணம்.
குரு சரணம் சரணம்
மஹாபெரியவா சரணம்