==========================================================
* இந்த பதிவில் நீங்கள் பார்க்கும் புகைப்படங்கள், சங்கரரின் ஜன்ம பூமியில் உள்ள அவரது கோவில் மற்றும் அவரது குல தெய்வமான கிருஷ்ணர் கோவில் ஆகியவற்றில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். நாம் சென்ற நேரம் (ஏப்ரல் 21, அட்சய திரிதியை அன்று மதியம்) சரியான மழை என்பதால் பார்க்கும் இடமெங்கும் பசுமை போர்த்தி காட்சியளித்தது.
==========================================================
“சங்கரா நீ பாட்டுக்கு சந்நியாசியாக போய்விட்டால், எனக்கு யாரடா இருக்கிறார்கள்? முதுமை நெருங்கிவிட்ட என்னை யாரடா பார்த்துக்கொள்வார்கள்?” உருக்கமாக கேட்டாள் அன்னை.
சங்கரன் யோசித்தான். உடனே கொல்லைப் புறத்தில் பாய்ந்துகொண்டிருந்த பூர்ணாநதி கரைக்கு அழைத்து சென்று, அங்கு ஒரு மரத்தின் கீழே காணப்பட்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் விக்ரகத்தை எடுத்து அன்னையிடம் கொடுத்து “இதோ இருக்கிறானம்மா… கோகுலவாசன். நம் கண்ணன். இனி இவன் தான் உங்கள் மகன். இவன் உங்களை பார்த்துகொள்வான்!!” என்று கூறி கையில் கொடுத்தான்.
ஆர்யாம்பாள் அது கண்டு மிகவும் ஆறுதலடைந்தாள்.
“சங்கரா… ஒரு வேளை காலன் என்னை அழைத்துக்கொண்டால் எனக்கு இறுதிக் காரியத்தை யாரடா செய்வார்கள்?”
“அம்மா… உன் இறுதிக்காலத்தில் என்னை நினைத்துக்கொள். உலகின் எந்த மூலையிலிருந்தாலும் நான் உன்னைக் காண ஓடி வருவேன். ஒரு மகன் தாய்க்கு செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் செய்வேன். கவலைப்படாதே!” என்று ஆறுதல் கூறிவிட்டு புறப்பட்டான்.
ஆம், காலடியிலிருந்து புனிதனின் கால்கள் புறப்பட்டன. அந்த பாதம் பட்ட இடமெல்லாம் பவித்திரம் பெற்றன.
இதற்கிடையே, சங்கரன் தந்துவிட்டு சென்ற கிருஷ்ணனை ஆர்யாம்பாள், தன் மகனாகவே பாவித்தாள். அதை கொஞ்சுவது, பேசுவது என்று காலம் கழிந்தது.
தனக்கு இறுதிக்காலம் நெருங்குவதை ஒரு நாள் உணர்ந்துகொண்டாள். மகன் துறவறம் பூண்டு சந்நியாசியாக போய்விட்ட நிலையில் தனது காலத்துக்கு பிறகு யார் கவனித்துக்கொள்வார்கள் என்று நினைத்தாளோ என்னவோ, அந்த கிருஷ்ணருக்கு தன் வீட்டருகிலேயே ஒரு எளிமையான கோவில் எழுப்பினாள். அந்த விக்ரகத்தை அங்கு பிரதிஷ்டை செய்தாள்.
அது தான் புகைப்படங்களில் நீங்கள் காணும் கிருஷ்ணர் கோவில். ஆதிசங்கரரின் குலதெய்வம் இந்த கிருஷ்ணர் தான். (ஆர்யாம்பாள் இதை ஒரு சிறிய கோவிலாகத் தான் கட்டினாள். ஆனால், காலப்போக்கில் காலடியில் வசித்த சங்கரரின் உறவினர்கள், இதை சற்று பெரிதாக கட்டினர்.)
ஆண்டுகள் உருண்டோடின. சங்கரர் அப்போது சிருங்கேரியில் இருந்தார். இங்கே காலடியில் ஆர்யாம்பாள், புலம்பிக்கொண்டிருந்தாள். “எனக்கு இறுதிக் காலம் நெருங்கிவிட்டது. என் மகன் வருவேன் என்று சொன்னானே… எனக்கு கொள்ளி போட வருவானா? இல்லை நான் அனாதை பிணமாக போய்விடுவேனா? கிருஷ்ணா…” என்றவாறு புலம்பிக்கொண்டிருந்தாள்.
தம் தாயின் உடல்நிலை சரியில்லை என்பதையும், அவளுடைய இறுதிக்காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் தனது ஞானதிருஷ்டியினால் உணர்ந்தார் சங்கரர். தனது சீடர்களை அழைத்து விபரத்தை கூறிவிட்டு தனது ஆத்மசக்தியினால், ஆகாய மார்க்கமாக காலடி விரைந்தார். உலகத்திற்கே குருவாக இருந்தாலும் தாய்க்கு மகன்தானே !
“அம்மா… நான் சங்கரன் வந்திருக்கிறேன் அம்மா!”
மகனைக் கண்டவுடன் தான் அந்த தாய்க்கு தான் எத்தனை மகிழ்ச்சி.
“சங்கரா வந்துட்டியாப்பா… வந்துட்டியா… உன்னை பத்தி என்னென்னெவோ சொல்றாங்க. உன் பெருமை வடநாடு முழுக்க பரவிகிட்டுருக்காம். யார் யாரையோ வாதத்துல நீ ஜெயிக்கிறயாம். எங்கே என்னை மறந்துடுவியோன்னு நினைச்சேன்.”
“அம்மா… உன்னை எப்படி மறப்பேன் அம்மா… உன் இறுதிக்காலத்தில் நினைத்தால் போதும் நான் வருவேன் என்று வாக்களித்தேன் அல்லவா?”
“சங்கரா எனக்கு முடிவு நெருங்கிடுச்சு… என்னை நல்லபடியா அனுப்பி வெச்சிடு!” என்றாள்.
அன்னையை மடியில் கிடத்திக்கொண்டு, தாயின் வயிற்றில் பிள்ளை கருவாகி, பிறந்து வளரும் எல்லா நிலைகளிலும் தாயின் ஒவ்வொரு தியாகத்தையும், அனுபவித்த ஒவ்வொரு இன்னல்களையும் சொல்லிப் பாடுகிறார். அன்பின் மொழியிலேயே பாடுகிறார்.
ஆர்யாம்பாள் சிவபதம் பெறவேண்டி ‘சிவபுஜங்கம்’ என்ற ஸ்தோத்திரத்தால் ஈஸ்வரனை துதித்தார். அடுத்த நொடி, ஈஸ்வரன் பிரத்யட்சமாகி ஆர்யாம்பாளுக்கு காட்சி தந்தார். ஈஸ்வரன் வர, கூடவே ஆர்யாம்பாளை அழைத்துச் செல்ல பூதகணங்கள் வந்துவிட்டன.
அவர்களை கண்டு ஆர்யாம்பாள் பயந்தாள். “இவங்களை பார்த்தாலே… பயமா இருக்கு எனக்கு சங்கரா” என்றாள்.
உடனே மகாவிஷ்ணுவை வேண்டி ஒரு பாடல் பாடினார். மகாவிஷ்ணுவின் தரிசனம் கிடைத்தது. உடனே விஷ்ணு தூதர்கள் தாயாரை விமானத்தில் ஏற்றிக் கொண்டு வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.
தாயாருக்கு இறுதிச் சடங்குகளை செய்யத் தொடங்கினார் சங்கரர். யாரும் எந்த உதவியும் செய்ய மறுத்தனர். அவர் உறவினர்களும் அந்த ஊர் மக்கள் சிலரும் துறவறம் மேற்கொண்ட ஒரு சந்நியாசி அக்னி தொடர்புடைய சடங்குகளில் ஈடுபடக்கூடாது என்றனர்.
சங்கரர் தான் தன் தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தைப் பற்றி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அவர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. உதவவுமில்லை.
சங்கரர் மனம் தளரவில்லை. தான் தன் தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தைப் பற்றிக் கூறினார். அதை அவர்கள் கேட்பதாக இல்லை. உடனே சங்கரர் உலக சம்பிரதாயத்தையும் மீறாமல், அதே சமயத்தில் தாய்க்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றும் வகையில், தன் வீட்டு கொல்லைப் புறத்தில் அன்னையை வாழை மட்டைகள் மேல் கிடத்தி தன் யோகசக்தியால் வலது கையிலிருந்து அக்னியை உண்டு பண்ணி தாயாரின் தகனக்கிரியைகளை செய்து முடித்தார்.
அந்த இடம் தான் கீழே நீங்கள் புகைப்படங்களில் காணும் இடம்.
120 ஆண்டுகளுக்கு முன்பு, காலடி என்ற இடத்தையோ, ஜகத்குரு ஆதி சங்கராசார்யாரின் ஜன்ம பூமியையோ யாரும் அறிந்திருக்கவில்லை. சிருங்கேரி சாரதா பீடத்தின் 33ஆம் ஆசார்யரான ஜகத்குரு சங்கராசார்யர் ஸ்ரீ ஸச்சிதானந்த சிவாபினவ ந்ருஸிம்ஹ பாரதீ மஹாஸ்வாமிகளின் தெய்விக வழிகாட்டுதலினாலும், முயற்சியினாலும் மட்டுமே காலடி திரும்பக் கண்டுபிடிக்கப்பட்டது.
(எப்படி எதை வைத்து கண்டுபிடித்தார்கள் ? அது ஒரு சுவாரஸ்யமான தகவல். அடுத்த பதிவில் பார்க்கலாம்!)
ஆஸ்தாம் தாவதியம் ப்ரஸூதிஸமயே துர்வாரசூலவ்யதாநைருச்யம் தனுசோஷணம் மலமயீசய்யா ச ஸாம்வத்ஸரீ
ஏகஸ்யாபி ந கர்ப்பபாரவஹநக்லேசஸ்ய யஸ்ய க்ஷம:
தாதும் நிஷ்க்ருதிமுந்நதோஸபி தநயஸ்தஸ்யை ஜகந்யை நம:
குருகுலமுபஸ்ருத்யஸ்வப்நகாலே து த்ருஷ்ட்வா
யதிஸமுசிதவேஷம் ப்ராருதோ மாம் த்வமுச்சை:
குருகுலமதஸர்வம் ப்ராருதத் தே ஸமக்ஷம்
ஸபதி சரணயோஸ்தே மாதரஸ்துப்ரணாம:
ந நத்தம் மாதஸ்தே மரணஸமயே தோயமபிவா
ந ஜப்தோ மாதஸ்தே மரணஸமயே தாரகமனு:
ந தேயா ஸ்வாதாவா மரணதிவஸே ச்ராத்தவிதினா
அகாலே ஸம்ப்ராப்தே மயி குருதயாம் மாதரதுலாம்
முக்தாமணிஸத்வம் நயனம் மமேதி
ராஜதி ஜீவேதி சிரம்ஸுதத்வம்
இத்யக்தவத்யாஸ்தவவாசிமாத:
ததாம்யஹம் தண்டுலமேவ சுஷ்கம்
அம்பேதி தாதேசி சிவேதி தஸ்மின்
ப்ரஸூதிகாலே யதவோச உச்சை:
க்ருஷ்ணேதி கோவிந்தஹரே முகுந்தே
த்யஹோ ஜகந்யை ரசிதோய மஞ்ஜலி:
ஒவ்வொரு தாயின் வயிற்றில் பிறந்த மகனும் சங்கரரின் அடி பற்றி, அன்னைக்கு அன்பைக் கொடுத்து அருளையும் ஆசியையும் பெற வேண்டும்.
==========================================================
அடுத்து :
நம் காலடி பயணத்திற்கான வித்து ஊன்றப்பட்டது எங்கே?
ஆதிசங்கரர் ஜன்ம பூமி கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?
தங்க நெல்லி மழை பொழிந்த ‘சொர்ணத்து மனை’ – ஒரு நேரடி ரிப்போர்ட்!
==========================================================
An appeal – Help us in our mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?
For more details : CLICK HERE.
==========================================================
Also Check :
சங்கரரின் காலை முதலை பற்றிய ‘முதலைக் கடவு’ – ஒரு நேரடி ரிப்போர்ட் (2)
பக்திக்கும் பாசத்திற்கும் வளைந்த பூர்ணா நதி – காலடி நோக்கி ஒரு பயணம் (1)
ஜகத்குரு ஆதிசங்கரர் வாழ்க்கை வரலாறு – ஒரு (வி)சித்திர அனுபவம்!
அறியாமை இருளை அகற்றிய ஞான சூரியன் ஜகத் குரு ஆதிசங்கரர் ஜெயந்தி சிறப்பு பதிவு!
காலத்தால் அழியா ‘ஜனனி ஜனனி’ பாடலுக்கு ஆதிசங்கரர் தந்த ஆசி! சிலிர்க்க வைக்கும் உண்மை!!
==========================================================
[END]
இப்பொழுதே என் மனம் காலடிக்கு பயணம் செல்ல துடிக்கிறது. என் அப்பனின் அருளால் என் ஆசை ஒரு நாள் நிறைவேறும் தருணம் வரும் என மிக நம்பிக்கையுடன் காத்திருக்கின்றேன்.
நம் இந்து மதத்தின் சிறப்புகளை சொல்லி மாளாது. தாங்கள் பதிவில் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பார்ப்பதே பரவசமாக உள்ளது.
ஓம் நம சிவாய.
இந்த பதிவை படிக்கும் பொழுது என் மனம் காலடிக்கு சென்று விட்டது , மிகவும் தத்ரூபமாக , உயிரோட்டமுள்ள பதிவு. என்னதான் பகவானாக அவதரித்தாலும் தன தாய்க்கு குழ்ந்தை தானே , தன் தாய்க்கு அந்திம கர்மாவை நடத்தியதை படிக்கும் பொழுது மனம் கனக்கிறது
இந்த பதிவின் மூலம் எங்களையும் காலடிக்கு அழைத்து சென்றதற்கு நன்றிகள் பல
அனைத்து போட்டோக்களும் பசுமையாக கண்ணுக்கு விருந்தாக உள்ளது
நன்றி
உமா வெங்கட்
வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது…….உணர்ந்தால் மட்டுமே !
அற்புதமான விபரங்களை / விஷயங்களை அற்புதமாக வளரும் தலைமுறைக்கு தந்துகொண்டிருக்கும் உங்கள் பணி மேலும் மேலும் சிறந்தோங்க உங்களுக்கு எல்லா நலமும் , பலமும் , வளமும் தரவேண்டி இறைவனை பிரார்த்திக்கிறோம் . ஆத்ம தர்ஷன சேவா சமிதி ….சிவா
Dear Sundar, Thanks for this article. The ‘Mathru Panchakam’ strotra is one of the great piece of work by Sri Adhi Shankara. This should be read be read and understood by anyone who has born to a mother. If they do that there will not any old age home (in India atleast) such is the power of the words. If Shankara, a true Sanyasi has such a love to his mother just imagine how much sin we all do by ignoring/neglecting our parents. In fact, during Gaya Sraddham, mother is given the prime importance. Thanks. Best, Kumar
வணக்கம் சுந்தர். நாங்களும் காலடிக்கு ஒருமுறை சென்றிருக்கிறோம். அன்றும் நல்ல மழை. அமைதியான கோவில். தாயிக்கு செய்வதற்கு இல்லறவாசி துறவி என்று பாகுபாடு வைத்து இருகிறார்கள் . நலபடியாக முடிந்தற்கு வாழ்த்துகள் . நன்றி.
அன்பின் சுந்தர் அண்ணா..
காலடி பயணம் – 3ம் பகுதி – மெய் சிலிர்க்க வைத்து விட்டது என்றே சொல்ல வேண்டும்.காலடியின் அழகை தாங்கள் காட்டிய விதம் கொள்ளை கொள்ளும் அழகு அண்ணா.
தொடர்ச்சியான பதிவை எதிர்நோக்கி.
மிக்க நன்றி அண்ணா..