பார்வையற்றோர் இணைந்து நடத்தும் ‘வள்ளுவன் பார்வை’ என்கிற மின்னஞ்சல் குழுமத்தின் உறுப்பினர்கள் ஆண்டு சந்திப்பு, திருச்சி சமயபுரம் அருகே பழுவூர் என்னும் ஊரில் ஒரு பள்ளியில் நாளை தொடங்கி இரண்டு நாட்கள் நடக்கவிருக்கிறது. இந்த மின்னஞ்சல் குழுமத்தை சார்ந்த தமிழகத்திலிருந்து 200 க்கும் மேற்ப்பட்ட பல்வேறு பார்வையற்ற சாதனையாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் இதில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இவர்களில் பலர் வங்கிகளிலும், பள்ளி, கல்லூரிகளிலும், இதர அலுவலகங்களிலும் உயரதிகரிகளாக பணி புரிகின்றனர்.
இந்த விழாவில் தலைமை ஏற்று, சிறப்புரை ஆற்ற நாம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறோம். ரைட்மந்த்ரா துவக்கப்பட்டதிலிருந்து பல பார்வையற்ற சாதனையாளர்களை நேரில் சந்தித்து பேட்டி எடுத்து அதை தளத்தில் வெளியிட்டு அதன் மூலம் அவர்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் உத்வேகம் அளித்து வருவதால் இதற்கு நாம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறோம் என குழுமத்தின் தலைவர் திரு.சிவானந்தன் தெரிவித்தார். இது தவிர அந்த குழும உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் பேச்சு போட்டியின் நடுவராகவும் நாம் இருக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்கள். அதில் பங்கேற்க திருச்சி செல்கிறோம்.
நாம் செய்யும் தவம் யாருக்கும் தெரியாது. ஆனால், வாங்கும் வரம் அனைவர் கண்களையும் உறுத்தும் என்பார்கள். இந்த நிலையை அடைய, நாம் எடுத்துக்கொண்ட முயற்சிகள், பட்ட சிரமங்கள் நமக்குத் தான் தெரியும். பசி தூக்கம் தொலைத்து இந்த தளமே எம் சுவாசமாக கருதி யாம் ஆற்றிய உழைப்பு கொஞ்ச நஞ்சமல்ல என்பது உங்களுக்கும் தெரியும்.
நாம் இன்னும் வெற்றிக்கோட்டை தொட பல தூரம் போகவேண்டியிருக்கிறது. ஆனாலும் இந்த நிலையை அடைந்ததே நம்மை பொருத்தவரை ஒருவகையில் மிகப் பெரிய வெற்றி தான்.
ஒரு சிறந்த ஆன்மீக / தன்னம்பிக்கை எழுத்தாளராகவும், MOTIVATIONAL SPEAKER ஆகவும் வரவேண்டும் என்பதே நமது லட்சியம். அதற்கான முதல் படி இது. குருவருளும் திருவருளும் உடனிருந்து மேன்மேலும் நமக்கு வழிகாட்டவேண்டும்.
வள்ளுவன் பார்வை குழுமத்தின் தலைவர் திரு.சிவானந்தன், நெறியாளர் திரு.வெங்கடேசன் மற்றும் ஈரோடு ஞானப்பிரகாசம், தமிழ் செல்வி ஞானப்பிரகாசம், புதுகோட்டை ராதாபாய் ஆகியோருக்கு நம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
நாம் இப்படி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கவிருக்கிறோம் என்று வள்ளுவன் பார்வை குழுமத்தின் மூலம் கேள்விப்பட்டவுடன், “நானும் வந்து கலந்துகொண்டு உங்கள் உரையை கேட்க ஆவலாக இருக்கிறேன்” என்று கூறிய தினமலர் இணைய ஆசிரியர் நண்பர் முருகராஜ் அவர்களுக்கு நம் நன்றி.
விழா நல்லபடியாக நடக்கவும், நமது பங்கை நாம் சிறப்பாக ஆற்றவும் உங்கள் பிரார்த்தனைகளையும் நல்லாசிகளையும் வேண்டுகிறோம்.
(குறிப்பு : நாளை மே 2, நரசிம்ம ஜெயந்தி. நமக்கும் நரசிம்மருக்கும் உள்ள பந்தத்தை நீங்கள் அறிவீர்கள். நரசிம்ம ஜெயந்தியான அன்று நமது மிகப் பெரிய மேடைப் பேச்சு அரங்கேறுவது அவர் கருணையே! எல்லாப் புகழும் இறைவனுக்கே !!)
எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே
உன்னை இடர வைத்து தள்ள பார்க்கும் குழியிலே
அத்தனையும் தாண்டி காலை முன் வையடா
அஞ்சாமல் கடமையிலே கண் வையடா!
– ‘ரைட்மந்த்ரா’ சுந்தர்,
ஆசிரியர், WWW.RIGHTMANTRA.COM
======================================================================
Also check articles related to above post:
பார்வையற்றோரின் வள்ளுவன் பார்வை!
வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்!
‘நாளை’ என்பதில்லை நரசிம்மனிடத்தில்!
எல்லாப் புகழும் இறைவனுக்கே! துணை நின்ற பெருமை உங்களுக்கே!!
வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா? MONDAY MORNING SPL 78
பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு ஆனைமுகன் தந்த அற்புதப் பரிசு!
விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!
தேவை : வாழ்வில் சாதிக்க துடிக்கும் சில இளைஞர்கள் !
======================================================================
[END]
நரசிம்ம ஜெயந்தி அன்று தங்களுடைய முக்கியமான மேடை பேச்சு அமைவது, அவருடைய திருவருள் பரிபூர்ணமாக உங்களுக்கு உள்ளதை காண்பிக்கிறது.
இந்நிகழ்வு உங்களுக்கு நிச்சயம் ஒரு மிக பெரிய திருப்புமுனையாக அமையும் என்பதில் எள்ளளவும்
சந்தேகமில்லை
குருவருளும், திருவருளும் உடன் வர, இனி எல்லாம் ஜெயமே.
விழா சிறப்பாக நடக்கவும், தங்களின் மேடைப்பேச்சும் மற்றும் நடுவர் பணியும் சீர்மிகு அமைய இறைவனை பிரார்த்திகிறேன்.
உங்கள் எண்ணம் போல் உங்கள் நல வாழ்வு.
வாழ்க வளமுடுடன் நண்பர் சுந்தர் அவர்கள்.
நன்றியுடன்
நாராயணன்.
Dear SundarJi,
All the best for your speech..
Rgds,
Ramesh
All the best sir
All the best sundar sir
All the best sundar ji
CONGRATS ANNA!!
happy and at same time know that this is just the beginning for you!!
Mikka மகிழ்ச்சி. தாங்கள் இந்த உயர்ந்த நிலையை அடைய எவ்வளவு கஷ்டபட்டு இருப்பீர்கள் என்பதை எங்களால் நன்கு உணர முடியும் . உழைப்புக்கு ஏற்ற உன்னத பலன் கண்டிப்பாக உண்டு . நரசிம்மன் அருளால் தாங்கள் வெற்றிக் கோட்டையை எட்டிப் பிடிக்க வாழ்த்துக்கள்
நன்றி
உமா வெங்கட்
சுந்தர்ஜி
மிக மிக மகிழ்ச்சி!! குருவருளாலும் திருவருளாலும் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துகளும் வணக்கங்களும்!!
சுந்தர்ஜி
எங்கள் உள்ளம் கனிந்த நல்வாழ்த்துகள்.உங்கள் பணி, புகழ் தொடர
வாழ்த்துகள்
மிகவும் சந்தோஷமான விஷயம்.
நீங்கள் செய்த தவத்தின் ஒரு பகுதி பலித்தது.
மேல்மேலும் சிறப்பு பெற valththukkal
nandri
All the best ji….
உமது பணி சிறக்க எமது வாழ்த்துக்கள்.
Namasthe Sir,
Your speech at Pazhuvur should have been a grand success. I have no doubt about this.
Please, if you do not mind, I have 2 requests to make to you.
If time permits, could you please visit to Shri Kailasanathar temple at Koonancheri if this sacred sthalam is on your way home. Please let us know how the Kailasanathar at this holy place is worshipped ( with what slokas either in Tamil or Sanskrit ).
could you please let us (right mantra readers) how to worship LORD NARASIMHA in a manner agreeable to Him.
I make this request because I performed the Miraculos Lakshmi Narasimha viratha explained by Prof. Wiswapathi, He says, Lord Narasimha will come in any form to accept the prasadam from the person who performs this viratha.
I was disappointed that no human or any living creature (like crow) took the prasadam from me. I think that Lord Narasimha did not accept my Puja or prasadam.
By the way, we are strict vegetarians. The cocoanut I bought for the kalasam was rotten– this I came to know only when I broke the cocoanut, after the puja was finished. I could not get Thulasi leaves and the betel leaves which are not available where I live. May be that is why the Puja and Prasadam were not agreeable to Lord Narasimha. But I apologised to the Lord for these 2 mistakes.
Please explain to us how to do the puja in an appropriate manner to please God Narasimha
with regards and thank you
Sakuntala
வணக்கம்……… நிகழ்ச்சி இனிதே நடந்திருக்கும் என்று நம்புகிறோம்……. தாங்கள் மென்மேலும் உயர எங்கள் வாழ்த்துக்கள்…………
“மாபெரும் சபையினில் நீர் நடந்தால் உமக்கு மாலைகள் விழ வேண்டும்….. ஒரு மாற்று குறையாத மன்னவர் இவரென்று போற்றிப் புகழ வேண்டும்”
சுந்தர் sir, ஒரு சந்தேகம். அலுவலகத்தில் கம்ப்யூட்டர் monitor in அருகில் நம்மை நோக்கியபடி சாமி padangalai வைக்கலாமா? சாமி எதிரே நாம் கால்களை நீட்டி உட்காருவது போல ஆகுமோ? அலுவலகத்தில் சாமி padaththail மேஜையில் எந்த இடத்தில் வைக்கலாம். நன்றி.
மிக்க மகிழ்ச்சியான செய்தி..விழா சிறப்பாக நடந்திருக்கும். விழாவினை பற்றியும்,தாங்கள் ஆற்றிய தலைமை உரை பற்றியும் சீக்கிரம் பதிவிடுங்கள்
மிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்.
மிக்க நன்றி அண்ணா..