Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, September 12, 2024
Please specify the group
Home > Featured > எத்தகைய பூஜையை சிவபெருமான் ஏற்றுக்கொள்கிறார்? – Rightmantra Prayer Club

எத்தகைய பூஜையை சிவபெருமான் ஏற்றுக்கொள்கிறார்? – Rightmantra Prayer Club

print
காபாரதப் போரில் சிந்து மன்னனை வெல்ல மிகச் சக்தி வாய்ந்த ஆயுதம் அர்ஜூனனுக்கு தேவைப்பட்டது. அதனால் பகவான் கிருஷ்ணர், சிவபெருமானின் அருளால் அவ்வாயுதம் கிடைக்கும் என்றும், தாம் கயிலைக்கு அழைத்துச் சென்று அதை பெற்றுத் தருவதாகவும் கூறி, அர்ஜூனனை கயிலைக்கு அழைத்துச் சென்றார்.

அர்ஜூனன் சிறந்த சிவபக்தன். செல்லும்போது சிவபூஜைக்கு நேரம் நெருங்கியது. ஆனால், சிவலிங்கம் இல்லாதால் எப்படி பூஜை செய்வது என்று குழம்பினான்.

Lord Siva

அவனது குழப்பத்தை அறிந்த கிருஷ்ணர், தன்னையே சிவனாக கருதி பூஜிக்கும்படி சொன்னார். அர்ஜூனன் தயங்கினான்.

“ஒரு சிவலிங்கமாக கருதி, என்னை பூஜை செய். என்ன மலரைக் கொண்டு அர்ச்சனை செய்கிறாய், எங்கெல்லாம் எனக்கு சந்தனத் திலகமும் திருநீறும் இடுகிறாய் என்பதையெல்லாம் நினைவில் வைத்துக்கொள்!” என்றார். பிறகு யோக நிஷ்டையில் ஆழ்ந்துவிட்டார்.

கண்ணன் தயவின்றி நாம் சிவபெருமானிடம் அந்த அஸ்திரத்தை பெற முடியாது. எனவே இவர் சொல்வதை கேட்பதை தவிர வேறு வழியில்லை. “ஈசனே நான் செய்வது தவறானால் என்னை மன்னிக்கவேண்டும்” என்று பிரார்தித்துக்கொண்டு பகவான் கிருஷ்ணரை சிவலிங்கமாக கருதி பூஜைகள் செய்தான். அங்கே கிடைத்த மலர்களை கொண்டு கொன்றை மலர்கள் மற்றும் நாகலிங்கபூவை இவற்றை கொண்டு கண்ணனை பூஜை செய்தான்.

கயிலையை இவர்கள் நெருங்கும்போது ஒரு ஓரமாக மலர்கள் மலையென குவிக்கப்பட்டிருந்தன.

“இது என்ன? எங்கிருந்து இவ்வளவு பூக்கள் வந்தன?” என்று அங்கிருந்த சிவகணங்களிடம் கேட்டான் அர்ஜூனன்.

“பூவுலகில் பீமன் என்பவர் தினமும் செய்யும் மானச சிவபூஜையில் குவியும் மலர்களே இவை. தினசரி இவற்றை அகற்றுவது எங்களுக்கு பெரிய வேலை!” என்றனர்.

இதை கேட்டபிறகு தானே சிறந்த சிவபக்தன், பீமன் வெறும் சாப்பாட்டுராமன் என்று அதுவரை எண்ணிக்கொண்டிருந்த அர்ஜூனனின் அகம்பாவம் அகன்றது.

கயிலை உச்சியை சென்றடைந்த பிறகு, இறைவனை கிருஷ்ணரும், அர்ஜூனனும் தரிசித்தனர். கிருஷ்ணருக்கு எங்கெல்லாம் அர்ஜூனன் திலகமிட்டு, சந்தனமிட்டு, திருநீறிட்டு அலங்காரம் செய்தானோ அதே இடங்களில் சிவனுக்கும் அந்த சினங்கள் இருந்தன. மேலும், கிருஷ்ணருக்கு சாத்திய கொன்றை மாலை ஈசன் கழுத்திலும், அர்ச்சித்த நாகலிங்கப் பூக்கள் சிவபெருமானின் காலடியிலும் கிடந்தது.

அது கண்ட அர்ஜூனன் பேதம் மனிதர்களிடம் தான். இவர்களிடம் இல்லை என்பதை உணர்ந்தான்.

மூர்த்தி பேதமும் அகம்பாவமும் இன்றி ஆத்மார்த்தமாக செய்யப்படும் பூஜைகளையே சிவபெருமான் ஏற்று மகிழ்கிறான் என்பது புலனாகிறதல்லவா?

இந்த சம்பவத்தை திருவாய்மொழியில் மிக அழகாக விளக்குகிறார் நம்மாழ்வார்.

தீர்த்தன் உலகளந்த சேவடிமேல் பூந்தாமம்,
சேர்த்தி யவையே சிவன்முடிமேல் தான் கண்டு,
பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழா யான்பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே?
திருமாலின் மாயை யாருக்கூத தெரியும்?

Also check : யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்?

==================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் : திருச்சி திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் சன்னதியில் இறைவனுக்கு பூஜைகள் செய்யும் பாக்கியம் பெற்ற திரு.கணேச குருக்கள் அவர்கள்.

திருச்சி திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் சன்னதியில் இறைவனுக்கு பூஜைகள் செய்யும் பாக்கியம் பெற்ற திரு.கணேச குருக்கள் அவர்கள்.

Thiruverumbur Erumbeesar 38

கணேச குருக்கள் கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக எறும்பீஸ்வரருக்கு பூஜைகள் செய்துவருகிறார். செய்யும் பூஜைகளை நிறுத்தி நிதானமாக சிரத்தையாக செய்வது இவரது தனித்தன்மை.

வேலைவாய்ப்புக்களை பொருத்தவரை நல்ல உத்தியோக பிராப்த்ததை அனுக்ரஹிப்பதில் எறும்பீஸ்வரர் வரப்ப்ரசாதி என்பது இவரது கூற்று. அதற்கு உதாரணமாக பல சம்பவங்களை கூறமுடியும் என்று கூறுகிறார்.

எறும்பீஸ்வரரிடம் வேண்டிக்கொண்டு முட்டிப் பிரதட்சிணம் செய்து பின்னர் அதன் மூலம் நல்ல உத்தியோகத்தில் அமர்ந்து பாலபிஷேகம் செய்து வேண்டுதலை நிறைவேற்றிய எண்ணற்ற பேரை தமக்கு தெரியும் என்று கூறுகிறார்.

Thiruverumbur Erumbeesar 37

இந்த வாரம் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டும் என்றும் பிரார்த்தனை நேரத்தில் நாமும் எறும்பீஸ்வரர் சன்னதியில் இருப்போம் என்று கூறியிருக்கிறோம். பௌர்னமியையொட்டி ஞாயிறு காலை 11.00 மணிக்கே பாலபிஷேகம் நடந்துமுடிந்துவிடும் என்றும் நம் தளம் சார்பாக மாலை சிறப்பு அர்ச்சனை வேண்டுமானால் அனைவருக்கும் செய்துவைப்பதாகவும் கூறினார். எனவே நண்பர்களே வேலை வாய்ப்பு சிறப்பு பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியுள்ள வாசகர்களின் பெயர்களில் அர்ச்சனை செய்யப்படும். பாலபிஷேகம் அடுத்த ஞாயிறு மாலை ஏற்பாடு செய்யப்படும். நாம் இந்த ஞாயிறு செல்லும்போது, அதற்குரிய தொகையை கட்டிவிட்டு வருகிறோம். அடுத்த வாரமும் இதே பிரார்த்தனையை ரிப்பீட் செய்துவிடலாம். என்ன சொல்கிறீர்கள்?

==================================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

வேலைவாய்ப்பு சிறப்பு பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருக்கிறவர்களின் பட்டியலை இத்துடன் தந்துள்ளோம்.

இவர்கள் அனைவரும் உத்தியோகம் தொடர்பான பிரச்சனைகளில் சிக்கி தவிப்பவர்கள். இவர்களில் சிலருக்கு நல்ல வேலை கிடைக்கவில்லை, வேறு சிலருக்கு நல்ல வேலை அமையவில்லை, வேறு சிலருக்கு ஒரு வித தேக்கநிலை, இன்னும் சிலருக்கோ நித்திய கண்டம் போல தினம் தினம் பிரச்சனைகள்.

நாம் முன்பே கூறியுள்ளபடி, நிம்மதியான வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைவது நல்ல உத்தியோகம் தான்.

தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது. வாய்ப்புக்கள் வரும்போது அதை கெட்டியாக பற்றிக்கொள்ள்ளவேண்டும். நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம். மனித முயற்சியும், இறைவனின் அருளும் சேரும்போது அங்கே அற்புதங்கள் சாத்தியமாகின்றன.

வரும் வாய்ப்பு நல்ல வாய்ப்பா அல்லது அது முன்னேற்றத்தை தருமா என்பதை அறியக்கூடிய தெளிவை இறைவன் நமக்கு தருவான்.

கீழே பிரார்த்தனை சமர்பித்துள்ள அத்தனை பேருக்கும் உத்தியோகம் தொடர்பான பிரச்சனைகள் நிச்சயம் விரைவில் முடிவுக்கு வரும் என நம்பலாம். வரும் வாய்ப்பு நல்லதாக உங்களுக்கு நிம்மதி தரக்கூடியதாக சிவனருளால் அமையும். இனி உங்கள் யாருக்கும் சோதனைகள் இல்லை. சோதனைக்காலம் முடிந்துவிட்டது என்றே எண்ணிக்கொள்ளுங்கள். நேர்மறையான எண்ணங்களே இனி உங்களிடம் இருக்கவேண்டும்.

கடந்த கால கஷ்டங்களை இனியும் தூக்கி சுமக்கவேண்டாம். அவற்றை ஒரு கெட்ட கனவாக கருதி மறந்துவிடுங்கள். ஆனால், அது தந்த பாடத்தை ஒரு போதும் மறவாதீர்கள்.

திருவெறும்பூர் ஆலயம் பற்றி நாம் அளித்த பதிவில் உள்ள எறும்பீஸ்வரர் பதிகத்தை தொடர்ந்து நம்பிக்கையுடன் படித்து வாருங்கள். நல்லதே நடக்கும். வினையற்ற செல்வமும் நல்ல உத்தியோக ப்ராப்தமும் அனைவருக்கும் சித்திக்க இறைவன் அருள்புரிவான்.

உங்கள் கோரிக்கை நிறைவேறியவுடன், எறும்பீஸ்வரரை தரிசித்து நன்றி தெரிவித்துவிட்டு வாருங்கள். முடிந்தால் பாலபிஷேகம் செய்யுங்கள்.

இத்தனை பேரின் கோரிக்கையையும் வெளியிட முடியாது என்பதால் அவர்கள் பெயர்களை மட்டும் வெளியிட்டிருக்கிறோம். இந்த பட்டியலில் எவர் பெயராவது விடுபட்டிருந்தால் கவலைப்படவேண்டாம். அடுத்த வாரமும் இதே பிரார்த்தனை நீட்டிக்கப்படும் என்பதால், உங்கள் பெயர்களை அனுப்பினால், பாலபிஷேகம் செய்யும்போது சங்கல்பம் செய்ய அனுப்பிவைத்துவிடுவோம்.

வாசகர்கள் பிரார்த்தனை நேரத்தில் இத்தனை பெயர்களையும் எவ்வாறு நினைவில் வைத்திருந்து சொல்வது என்று யோசிக்கவேண்டாம். “ரைட்மந்த்ராவுக்கு பிரார்த்தனை கோரிக்கை அனுப்பியுள்ள நல்ல வேலையின்றி கஷ்டப்படும் அனைவருக்கும் நீ அருள்புரியவேண்டும் இறைவா” என்று ஈசனிடம் பிரார்த்தித்தால் போதும். முடிந்தால் எறும்பீஸ்வரர் பதிகத்தை அவர்களுக்காக படிக்கவும். இல்லையேல், உங்களிடம் உள்ள நூல்களிலிருந்து ஏதேனும் ஒரு பதிகத்தை மேற்படி கோரிக்கையை மனதில் எண்ணி படிக்கவும். அது போதும்.

நாம் அந்நேரம் சன்னதியில் இருப்போம் என்பதால் நாம் லிஸ்ட் எடுத்துச் சென்று சங்கல்பம் செய்து, எறும்பீஸ்வரர் பதிகத்தை படிப்போம். (எறும்பீஸ்வரர் பதிகம் எழுத்துரு தேவைப்படுபவர், நமக்கு editor@rightmantra.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். TEXT அனுப்பி வைக்கிறோம்._

வேலைவாய்ப்பு தொடர்பான கோரிக்கை அனுப்பியுள்ள வாசகர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் விபரம் வருமாறு :-

1) திரு.கே.கிருஷாந்தன், Age 24, இலங்கை.

2) Mr. Sudharsan – Age 36 – Trichy

3) Mr.  Anbu – Age 45 – Trichy

4) Mr. Balamuruali – Age 40 – Trichy

5) திரு.வேல்முருகன், (Age not mentioned) அவினாசி

6) திருமதி.லக்ஷ்மி ப்ரீத்தி, (Age not mentioned) பெங்களூர்

7) எஸ்.ஆர்.ராஜ்குமார், (Age not mentioned), சென்னை – 33.

8) Mr.Suresh Elumalai, Age: 37 Chennai.

9) Srinivasan, Age 32, Tirupattur (Vellore District)

10) Mr.Shyam Age & Place not mentioned

11) திரு. V P சக்திவேல், வயது : 32, கோயம்புத்தூர்

12) பெயர் : G செந்தில்குமார் (36), P ஜெயலட்சுமி (30), கோவை

13) Mr. N.Ganapathy Raman, (Age not mentioned), Nigeria

14) Mr. Praveen Ram (22), Place not mentioned

15) Mr. Don’t want to disclose the name, Age 42, Velachery, Chennai  (Brother)

16) Don’t want to disclose the name, Velachery, Chennai (Elder Sister)

17) Mr.G.Kesavan, (Age not mentioned) Trichy

18) Mr.A.L.Sai Balaji, (Age not mentioned) Neyveli

19) Mr. Ganesh Krishna, (Age & Place not mentioned)

20) Mr. Viswanathan, (42), Chennai.

21) Ms.பத்மாவதி சேதுராமன், (Age not mentioned) பூரம், பெங்களூர்

22) Ms.சிவரஞ்ஜனி  சேதுராமன், (Age not mentioned) திருவோணம், பெங்களூர்

23) Vinod Kumar K S (30), Star -Avittam, Rasi – Kumbham, Qatar

தருகின்ற வளம் என்றும் தடையின்றி வர வேண்டும்!
வசமாகும் நின் கருணை பெரும் பேறு தினம் வேண்டும்!!
வாய்க்கின்ற வாய்பெல்லாம் நினதருளால் நிறைய வேண்டும்!!!

==================================================================

பொது பிரார்த்தனை

பூகம்பத்தில் சிக்கி உருக்குலைந்து போயுள்ள நேபாளத்தில் இயல்பு நிலை திரும்பவேண்டும்!

பூகம்பத்தில் சிக்கி உருக்குலைந்து போயுள்ள நேபாளத்தில் இயல்பு நிலை திரும்பவேண்டும்!

நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாகிவிட்டன.

இடிபாடுகளில் சிக்கியவர்களையும், உயிரிழந்தவர்களையும், மீட்கும் பணி கடந்த 6 நாட்களாக தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை 6134 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

Image: *** BESTPIX *** Kathmandu Struck By Powerful Earthquake

நிலநடுக்கத்துக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரம் வரை இருக்கும் என்று நேபாள பிரதமர் கூறியிருந்தார். ஆனால் இடிபாடுகளுக்குள் இன்னமும் ஏராளமானவர்கள் கிடப்பதால் பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்தை எட்டக்கூடும் என்று நேபாள ராணுவ தலைமை தளபதி கவுரவ் ராணா தெரிவித்தார்.

பல இடங்களில் வீடுகள் இருந்த சுவடுகளே இல்லை என்றும், இடிபாடுகளை தங்கள் கைகளாலேயே அகற்றி அதனுள் தங்களது உறவினர்கள் யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா என மக்கள் தேடி வரும் காட்சி மிகுந்த துயரத்தை அளிப்பதாகவும் செஞ்சிலுவைச் சங்கத்தினர் கூறுகிறார்கள். சிந்துபல்சவுக் என்ற இடத்தில் மட்டும் 40ஆயிரம் வீடுகள் தரைமட்டமாகிவிட்டதாக செஞ்சிலுவைச் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Image: *** BESTPIX *** Kathmandu Struck By Powerful Earthquake

நிலநடுக்கம் காரணமாக நேபாளத்தில் சுமார் 80 லட்சம் பேர் உறவினர்களையும், உடமைகளையும் இழந்து தவிக்கிறார்கள். சுமார் 60 லட்சம் பேரின் வீடுகள் முழுமையாக இடிந்து நாசமாகி விட்டன. இதனால் அவர்கள் எந்த வாழ்வாதாரமும் இல்லாமல் நடுத்தெருவில் நிற்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நிலநடுக்கத்தில் இருந்து உயிர் தப்பியவர்களின் நிலை மிகவும் வேதனைக்குரியதாக உள்ளது. உணவு, உடை, குடிநீர், மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் பல லட்சம் மக்கள் தவித்தப்படி உள்ளனர். வீடுகளை இழந்த பெரும்பாலானவர்களுக்கு மூன்று வேளையும் உணவு கிடைப்பதில்லை. இதனால் உயிர் தப்பியவர்களில் பெரும்பாலானவர்கள் பசியும் பட்டினியுமாக உள்ளனர்.

நேபாள நாட்டு மக்களுக்கு உதவ பல்வேறு நாடுகளிலும் இருந்து உணவு பொருட்கள், மருந்து வகைகள், குடிநீர் பாட்டில்கள் காத்மாண்டுக்கு தினம் தினம் வந்து குவிந்தபடி உள்ளன. ஆனால் அந்த நிவாரணப்பொருட்களை உரிய முறையில் அதிகாரிகளால் பிரித்து வினியோகம் செய்ய முடியவில்லை. மழை, கடும் குளிர் போன்ற சூழ்நிலையும் நிவாரணப் பணிகளை முடக்கியுள்ளது.

நேபாளத்தில் விரைவில் இயல்பு நிலை திரும்பவும், பூகம்பத்தில் பலியானவர்களின் ஆன்மா சாந்தியடையவும் இறைவனை பிரார்த்திப்போம்.

பூமித் தாயின் இந்த சீற்றத்திற்கு என்ன காரணமோ அது நிவர்த்திக்கப்பட பிரார்த்திப்போம்.

இதுவே இந்த வார பொது பிரார்த்தனை.

=============================================================

An appeal – Help us in our mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Check for our bank account and other details….

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=============================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgஉத்தியோகம் வேண்டி பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியுள்ள ரைட்மந்த்ரா வாசகர்கள் அனைவருக்கும் அவர்கள் விரும்பியபடியே முன்னேற்றத்தையும் மகிழ்ச்சியையும் நல்ல ஊதியத்தையும் தரக்கூடிய வேலை விரைவில் கிடைக்கவேண்டும் என பிரார்த்திப்போம். பூகம்பத்தில் பாதிக்கப்பட்டுள்ள நேபாளம் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பவேண்டும், அங்கு நிவாரண பணிகள் தொய்வின்றி நடைபெறவேண்டும், இந்த இயற்கை பேரழிவில் பலியான மக்களின் ஆன்மா சாந்தியடைந்து இனி அந்த மண்ணில் சாந்தியும் சமாதானமும் நிலைவேண்டும் என இறைவனிடம் பிரார்த்திப்போம்.

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில் திரு.கணேச குருக்கள் அவர்கள் எல்லா வளமும் நலனும் பெற்று தனது தொண்டை இனிதே தொடரவேண்டும்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : மே 3, 2015 ஞாயிற்றுக்கிழமை நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

=============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

=============================================================

Rightmantra Prayer Club

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E : editor@rightmantra.com  |   M : 9840169215  | W: www.rightmantra.com

=============================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131

=============================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : மகா பெரியவாவிடம் வேதம் படித்த பெருமையையுடைய அவரது மாணவர் திரு.நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள்

2 thoughts on “எத்தகைய பூஜையை சிவபெருமான் ஏற்றுக்கொள்கிறார்? – Rightmantra Prayer Club

  1. நாம் ஆத்மானுபவமாக இறைவனுக்கு செய்யும் பூஜையை இறைவன் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வான் என்பதை ஒரு சிறிய கதையின் மூலம் தெளிய வைத்து விட்டீர்கள்
    குருவருளாலும் திருவருளாலும் இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்து இருக்கும் அனைவரின் கோரிக்கையையும் ஏறும்பீஸ்வரர் கண்டிப்பாக நிறைவேற்றுவார்

    லோகா சமஸ்தா சுகினோ பவந்து

    ராம் ராம் ராம்

    நன்றி
    உமா வெங்கட்

  2. அன்பின் சுந்தர் அண்ணா..

    நாம் உள்ளன்போடு செய்யும் ஆத்மார்தனமான பூஜையை இறைவன் ஏற்று கொள்வார் என்பது
    இந்த பதிவின் மூலம் புரிந்தது..நாமும் இதனை முழுமனதோடு பின்பற்றி ஈசனின் அருளை பெற்றிட முயல்வோமாக.

    மிக்க நன்றி அண்ணா..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *