Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, May 18, 2024
Please specify the group
Home > Featured > நல்லதொரு வேலை; இனியில்லை கவலை! இதோ ஒரு அருமையான பரிகாரத் தலம்!!

நல்லதொரு வேலை; இனியில்லை கவலை! இதோ ஒரு அருமையான பரிகாரத் தலம்!!

print
‘உத்தியோகம் புருஷ லட்சணம்’ என்று கூறுவார்கள். ஆனால், தற்போது ஆணுக்கு மட்டுமின்றி பெண்ணுக்கு கூட அது ஒரு முக்கிய லட்சணமாக மாறிவிட்டது. காரணம் அடியோடு மாறிவிட்ட திருமண சந்தை. எனவே ‘உத்தியோகம் திருமண ப்ராப்தம்’ என்று சொல்வதே சரி.

விரும்பியபடி விரும்பிய இடத்தில் வேலை என்பது அனைவருக்கும் வாய்க்காது. அது பூர்வ ஜென்ம கர்மாவோடு தொடர்புடையது. படிப்புக்கும் பார்க்கும் வேலைக்கும் சம்பந்தம் கொஞ்சம் கூட இல்லாமல், ஒரு வித நிர்பந்தத்தில் பேரில் வேலை பார்த்துகொண்டிருப்பவர்கள் அநேகம். தகுதியிருந்தும் திறமையிருந்து உரிய வேலை கிடைக்காமல் அவதிப்படுபவர்கள் ஒரு வகை. அப்படியே கிடைத்தாலும் சரியான ஊதியம் கிடைக்காமல் அவதிப்படுபவர்கள் மற்றொரு வகை. அப்படியே கிடைத்தாலும் எந்த வித முன்னேற்றமும் இன்றி அப்படியே இருப்பவர்கள் வேறொரு வகை. குடும்பத்தை காப்பற்றவேண்டுமே என்கிற ஒரே காரணத்துக்காக தன்மானத்தை அடகு வைத்துவிட்டு பணியிடத்தில் அனைத்து மான அவமானங்களையும் தாங்கிக்கொண்டு மெழுகாய் உருகுபவர்கள் எண்ணற்றோர். இப்படி வேலை தொடர்பான பிரச்சினைகள்  ஒவ்வொருவருக்கும் ஒரு விதத்தில் இருக்கும். ஆனால், நம் வாசகர்கள் அப்படி இருக்கலாமா? வாழ்வியல் மந்திரமாயிற்றே நம் தளம்! மனதுக்கினிய வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் அற்புதமான ஒரு பரிகாரத் தலம் பற்றிய பதிவு இது!! கெட்டியாக பிடித்துக்கொண்டு கரை சேருங்கள்!!!

Thiruverumbur Erumbeesar 1

இதுவரை நாம் தரிசித்த சிவாலயங்களில் முற்றிலும் வித்தியாசமான அமைப்போடு காட்சியளிப்பது இந்த ஆலயம் தான். இதன் அமைப்பு மற்ற சிவாலயங்களை போல இருக்காது. மிக மிக பழமையான ஒரு அமைப்பாக இது விளங்குகிறது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென் கரைத்தலங்களில் இது 7 வது தலம். திருச்சி நகரில் உள்ள திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் திருக்கோவிலே இத்தனை பெருமைகளை உடைய தலமாகும்.

திருச்சி மாநகருக்கு உரிய சிறப்பு, இரண்டு சிவாலயங்கள். ஒன்று ஜீவராசிகளில் மிகப் பெரிதான யானை வழிபட்ட திருவானைக்கோவில். இரண்டாவது ஜீவராசிகளில் மிகச் சிறிய எறும்புகள் வழிபட்ட இந்தத் திருவெறும்பூர். திருச்சியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது திருவெறும்பூர்.

பழைய காலத்திய கோவில் என்பதால், இந்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறை கோயிலின் பராமரிப்பை ஏற்றுள்ளது

இந்த தலத்திற்கு செல்லவேண்டும் என்கிற ஆவல் எப்போது ஏன் ஏற்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக எறும்பீஸ்வரரை தரிசிக்கவேண்டும் என்கிற ஆவல் மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. சென்ற மார்ச் மாதம் முதல் வாரம், வாசகர் மற்றும் நண்பர் ஒருவரின் இல்ல திருமணத்தில் பங்கேற்க நாமும் நண்பர் செந்திலும் கரூர் சென்றிருந்தோம். காலை திருமணத்தில் கலந்துகொண்டுவிட்டு மதியம் அங்கிருந்து நாகப்பட்டிணம் செல்வதாக திட்டம். ஆனால், கரூரிலிருந்து நேரடி பஸ் கிடைக்கவில்லை. திருச்சி போய் அங்கிருந்து தான் மயிலாடுதுறையோ நாகப்பட்டிணமோ செல்லவேண்டும். நாங்கள் திருச்சி சென்று சேரவே மணி நான்காகிவிட்டது. எனவே நாகை பயணத்தை இரத்து செய்துவிட்டு, திருச்சியிலேயே ஏதேனும் ஆலயத்தை தரிசிக்க எண்ணியிருந்தோம். அப்போது திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் தான் நினைவுக்கு வந்தார். எறும்பீஸ்வரரை தரிசித்துவிட்டு அப்படியே அருகில் உள்ள திருநெடுங்குளம் மற்றும் வயலூர் ஆகிய தலங்களை தரிசிக்க திட்டமிட்டோம். எனவே திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்தே ஒரு கால்டாக்சியை பேசி நேரே திருவெறும்பூர் பயணம்.

Thiruverumbur Erumbeesar 3

Thiruverumbur Erumbeesar 4Thiruverumbur Erumbeesar 5Thiruverumbur Erumbeesar 6முக்கால் மணிநேரத்தில் திருவெறும்பூரை அடைந்துவிட்டோம். கோவிலுக்கு எதிரிலேயே அருமையான திருக்குளம்… நீர் நிறைந்து காணப்படுகிறது.  குளக்கரை சுவர் முழுக்க நாயன்மார்களின் சரிதம் ஓவியத்துடன் காணப்பட்டது மனதுக்கு இதமாய் இருந்தது.

Thiruverumbur Erumbeesar 2

Thiruverumbur Erumbeesar 7வாசலிலேயே பூ, பழம் உள்ளிட்டவைகளை வாங்கிக்கொண்டு படியேறினோம். செல்லும் வழியில் ஆங்காங்கே ஆடுகள். இது போன்ற கால்நடைகளை ஆலயங்களில் பார்க்கும்போது தான் மனதிற்கே ஒரு வித அமைதி தோன்றுகிறது.

படி ஏற, ஏற திருவெறும்பூர் நகரின் சுற்றுப்புறங்கள் தெரிய ஆரம்பித்தன.

Thiruverumbur Erumbeesar 9

Thiruverumbur Erumbeesar 8

Thiruverumbur Erumbeesar 10Thiruverumbur Erumbeesar 11Thiruverumbur Erumbeesar 12ஆதிசேஷனுக்கும், வாயு தேவனுக்கும் இடையே யார் பெரியவர் என போட்டி வந்தபோது வாயுவால் பெயர்க்கப்பட்ட மேரு மலையின் ஒரு பகுதியே இங்கு மலையாக இருக்கிறதாம். அதன் மீதே இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 70 வது தேவாரத்தலம் ஆகும். திருநாவுக்கரசர் பாடிய தலம் இது.

ஆலயம் ஒரு சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது. கல்லில் வெட்டப்பட்டுள்ள சுமார் 125 படிகளின் மீதேறி இவ்வாலயத்தை அடையலாம். கருவறை முற்றிலும் கற்களால் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் நுழைவு வாயில் வடக்கு திசையில் உள்ளது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன.

கருவறையில் சிவலிங்கம் புற்று வடிவில் மேடும், பள்ளமுமாக ஒரு முழுமையான அமைப்பு இல்லாமல் மணல் லிங்கமாக இருக்கிறது. எனவே, லிங்கத்திற்கு அபிஷேகம் கிடையாது. எண்ணெய் காப்பு மட்டுமே செய்கின்றனர். லிங்கம் இடப்புறத்தில் சாய்ந்தபடி இருக்க, மத்தியில் ஒரு பிளவு இருக்கிறது. பார்வைக்கு லிங்கம் இரண்டு பகுதிகளாக பிரிந்திருப்பது போல இருக்கிறது. இதில் வலப்புறம் உள்ள பகுதியை சிவன் அம்சம் என்றும், இடப்புறத்தை அம்பாள் அம்சம் என்றும் சொல்கின்றனர். இந்த லிங்கத்திற்கு “சிவசக்தி லிங்கம்’ என்ற பெயரும் உண்டு. சிவமும், சக்தியும் ஒன்று என்பதை இந்த வடிவம் உணர்த்துகிறது.

Thiruverumbur Erumbeesar 14

Thiruverumbur Erumbeesar 15சுவாமிக்கு சுழற்சி முறைப்படி நம் வாசகர்கள் சிலரின் பெயருக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. குருக்கள் நிறுத்தி நிதானமாக அனைவருக்கும் சங்கல்பம் செய்தார்.

அம்பாள் நறுங்குழல் நாயகி தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். இவள் நறுமணம் வீசும் கூந்தலுடன் இருக்கிறாள் என்பது ஐதீகம். எனவே, இப்பெயரில் அழைக்கின்றனர். இவளுக்கு தினமும் வேறுவேறு விதமாக அலங்காரம் செய்கின்றனர். இதனால் அம்பாள் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கோலத்தில் காட்சி தருகிறாள். இவளுக்கு முன்புறம் ஆதியில் வழிபடப்பட்ட அம்பாள் சிலை இருக்கிறது.

Thiruverumbur Erumbeesar 24

Thiruverumbur Erumbeesar 19

Thiruverumbur Erumbeesar 16

Thiruverumbur Erumbeesar 17Thiruverumbur Erumbeesar 18Thiruverumbur Erumbeesar 31Thiruverumbur Erumbeesar 32Thiruverumbur Erumbeesar 33தாரகாசுரன் எனும் அசுரன் இந்திரலோகத்தை கைப்பற்றி இந்திரனையும், தேவர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். அவனிடமிருந்து தங்களை காக்கும்படி தேவர்கள் பிரம்மாவிடம் முறையிட்டனர்.

அவர் பூலோகத்தில் இத்தலத்தில் குன்றின் மீது சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருப்பதாகவும், லிங்கத்திற்கு மலர் வைத்து பூஜை செய்து வழிபட்டால் அவர் அசுரனை அழிப்பார் என்றும் கூறினார். அதன்படி தேவர்கள் இத்தலம் வந்தனர். அசுரனின் கண்ணில் படாமல் இருப்பதற்காக சிறிய எறும்பின் வடிவம் எடுத்து சிவனை வழிபட்டனர்.

சிவனின் உச்சியில் (தலையில்) மலர் வைக்க பாணத்தின் மீது ஏறியபோது, லிங்கம் வழவழப்பாகவும், செங்குத்தாக இருந்ததால் அவர்களால் மேலே செல்ல முடியவில்லை. தேவர்கள் படும் துயரத்தை கண்ட சிவன், அவர்கள் எளிதாக ஏறிவர, மண்புற்று போல தன் உருவத்தை மாற்றிக் கொண்டதோடு, சற்றே இடப்புறமாக சாய்ந்தும் கொண்டார்.

பின், தேவர்கள் எளிதாக ஏறிச்சென்று சிவன் தலையில் மலர் வைத்து வழிபட்டனர். அவர்களுக்கு அருள் புரிந்த சிவன், தாருகாசுரனை அழித்து தேவர்களை காத்தார். ‘எறும்பீஸ்வரர்’ என்ற பெயரும் பெற்றார்.

பிப்பிலீச்சரம், மணிக்கூடம், இரத்தினக்கூடம், திருவெறும்பிபுரம், எறும்பீசம், பிரமபுரம், இலக்குமிபுரம், மதுவனபுரம் குமாரபுரம் எனப் பல பெயர்களுண்டு. தென் கயிலாயம் என்றும் இத்தலத்தைச் சொல்வர்.

Thiruverumbur Erumbeesar 25

Thiruverumbur Erumbeesar 26Thiruverumbur Erumbeesar 27தரிசனம் முடித்துவிட்டு கீழே இறங்கும்போது ஆலயத்தின் சிதிலமடைந்த பகுதிகள் சிலவற்றை பார்க்க நேர்ந்தது. மனம் பதறியது. படையெடுப்பினால் சிதைந்தனவா? அல்லது அலட்சியமா என்று தெரியவில்லை. எப்படியோ, தொன்மையான ஆலயங்கள் என்பவை நமது பாரம்பரியத்தின் பொக்கிஷங்கள். அதன் ஒவ்வொரு துளியும் மதிப்பு மிக்கவை.

திருவெறும்பூர் சிறப்பு!

* முற்றிலும் கற்களால் அமைக்கப்பட்ட கருவறை கொண்டது இத்தலம்.

* மூலவர் லிங்கம் மண்புற்று வடிவில் அமைந்துள்ளது எனவே நேரடியாக அபிசேகம் செய்யாமல், நீர்புகாதவாறு கவசம் பொருத்திய பின் அபிசேகம் செய்யப்படுகின்றது. வடபுறம் சாய்மானமாக உள்ள ஈசன் திருமேனி (எறும்புகள் ஊற இயலும் வண்ணம்) மேற்புறம் சொரசொரப்பாகவும் உள்ளது. சிவலிங்கத்தின் மீது எறும்புகள் ஊர்ந்த அடையாளங்களைக் காணலாம்.

* இத்தலம், மும்மூர்த்திகளில் சிவன் தவிர்த்த இருவரான திருமால் மற்றும் பிரம்மா வழிபட்ட சிறப்புடைய தலம்.

* இந்திரன் முதலான தேவர்களும் அகத்தியர் நைமிச முனிவர் ஆகிய முனிவர்களும் இத்தலத்தின் சிறப்பறிந்து இங்கு வழிபட்டனர்.

* இது ஒரு பாடல் பெற்ற தலம். திருநாவுக்கரசர், இப்பெருமானின் சிறப்புக்களை ஐந்தாம், ஆறாம் திருமுறையில் பாடியருளியுள்ளார்.

* இக்கோயிலில் சூரியானரின் திருவுருவம் நவக்கிரக சந்நிதியில் தமது இரு மனைவியரோடும் காட்சி தருவதாக அமைந்துள்ளது.

* கோவிலின் வெளி பிரகாரம் நந்தவனம் போன்ற அமைப்பில் காணப்படுகிறது.

Thiruverumbur Erumbeesar 34

Thiruverumbur Erumbeesar 20

Thiruverumbur Erumbeesar 28Thiruverumbur Erumbeesar 29Thiruverumbur Erumbeesar 30Thiruverumbur Erumbeesar 21Thiruverumbur Erumbeesar 23பிரசாதத்தை எடுத்துக்கொண்டு பிரகாரத்தை வலம்  வரும்போது, அங்கே சுற்றிக்கொண்டிருந்த ஆடுகள், ஆவலோடு நம்மை நோக்கி வந்தன. பொதுவாக இது போன்ற பிரசாதங்களை பசுக்களுக்கு கொடுத்துவிடுவது நம் வழக்கம். ஆனால் அன்று இந்த ஆடுகளுக்கு அவற்றை வழங்கிவிட்டோம்.

நண்பர் செந்தில் இந்த தரிசனத்தின்போது மிகவும் உதவியாக இருந்தார். நமக்கு எந்த வித நிர்பந்தத்தையும் தராமல் பொறுமையாக நடந்துகொண்டார். அவருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி. எறும்பீஸ்வரர் அருள் அவருக்கு என்றும் உண்டு.

(எறும்பீஸ்வரரை தரிசித்துவிட்டு அப்படியே அங்கிருந்து திருநெடுங்குளம் பயணம். திருநெடுங்குளம், திருவுடைய ஒரு ஊர். அது பற்றி மற்றொரு பதிவில் பார்ப்போம்.)

======================================================================

சோம்பலை விரட்டி, சுறுசுறுப்பை தந்து, வேலைவாய்ப்பை அள்ளித் தருபவர்!

தரிசனம் முடித்துவிட்டு மீண்டும் வந்து குருக்களிடம் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். வேலைவாய்ப்பை தருவதில் இந்த சிவன் மிகவும் பிரசித்தமாம். அதுவும் குறிப்பாக கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட வேலை வேண்டுவோர், இவரை வணங்கினால் வெற்றி நிச்சயமாம்.

அப்போது கணேச குருக்கள் கூறியதாவது : இந்த தலத்தில் வந்து இறைவனை தரிசித்துவிட்டு அர்ச்சனை செய்துவிட்டு வேலைவாய்ப்புக்காக பிரார்த்திக்கவேண்டும். பின்னர் பிரகாரத்தை மூன்று முறை முட்டி பிரதட்சிணம் வரவேண்டும். விரும்பியபடி நல்ல வேலை கிடைத்தவுடன் சுவாமிக்கு பாலாபிஷேகம் (குறைந்தது 10 லிட்டர்) செய்து வேண்டுதலை நிறைவேற்றவேண்டும்.

எறும்புகளை சுறுசுறுப்புடன் வழிபடச் செய்து அவர்களுக்கு அருள் வழங்கினார் ஈசன் என்பதால், இந்தத் தலம் சுறுசுறுப்புக்குப் பேர் பெற்றது. ஒருவர் எப்போது சுறுசுறுப்பாக இருப்பார்? நல்ல வேலை கிடைத்தால் தானே? சுவாமிக்கு பூஜை செய்து வேண்டிக் கொண்டால் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாக உழைக்கும் குணம் மேன்மையடையும், துயரங்கள் நீங்கும். இது வழிவழி நம்பிக்கை.

இந்த தலத்திற்கு வந்து எறும்பீஸ்வரரிடம் வேண்டிக்கொண்டு விரும்பியபடி நல்ல வேலை பெற்றவர்கள் ஏராளம் ஏராளம். குறிப்பாக சாப்ட்வேர் துறையில் நல்ல வேலையை வேண்டுவோர் எண்ணற்றோர் இங்கு பலன் பெற்று பாலபிஷேகம் செய்திருக்கிறார்களாம்.

இந்த வாரம் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவிருப்பது திரு.கணேசன் குருக்கள் தான்.

திருச்சி பயணம்

ஈசனருளால் திருச்சியில் ஒரு முக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தலைமையேற்று சிறப்புரை ஆற்ற நமக்கு அழைப்பு வந்திருக்கிறது. எனவே வரும் சனிக்கிழமை திருச்சி செல்லவிருக்கிறோம்.

திரு.கணேச குருக்களுடன் நாம்
திரு.கணேச குருக்களுடன் நாம்

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கவிருப்பது எறும்பீஸ்வரருக்கு தினமும் பூஜை செய்யும் பாக்கியம் பெற்ற திரு.கணேச குருக்கள் தான். ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை நேரம் எறும்பீஸ்வரர் சன்னதியில் தான் இருப்போம்.

உங்களுக்கே தெரியும்…. இந்த பதிவை முன்பே அளித்திருக்கவேண்டியது. ஆனாலும் தாமதத்திலும் ஒரு நன்மை விளைந்திருக்கிறது. வேலைவாய்ப்பு பரிகாரத் தலம் தொடர்பான இந்த பதிவை அளித்துவிட்டு தான் பிரார்த்தனை கிளப்பில் வேலைவாய்ப்பு சிறப்பு பிரார்த்தனையை வெளியிட எண்ணியிருந்தோம். இந்த வாரம் வெளியிடப்படுவதால், திருச்சி செல்லும் நாம் அப்படியே பிரார்த்தனை நேரத்தில் எறும்பீஸ்வரரையும் தரிசித்து, கோரிக்கை அனுப்பியுள்ள அனைவருக்கும் அர்ச்சனை செய்ய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முன்பே வெளியிட்டிருந்தால் இந்த வாய்ப்பு அமைந்திருக்காது.

வேலை வாய்ப்பு பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியுள்ள அத்தனை வாசகர்களின் பெயர்களையும் லிஸ்ட் எடுத்துச் சென்று அவர்கள் பெயர்களுக்கு எறும்பீஸ்வரர் சன்னதியில் சங்கல்பம் செய்ய உத்தேசித்திருக்கிறோம். முடிந்தால் பாலாபிஷேகமும் ஏற்பாடு செய்யலாம் என்று எண்ணியிருக்கிறோம்.

பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியுள்ள வாசகர்கள் அனைவரும் நம்பிக்கையுடன் கீழ்கண்ட எறும்பீஸ்வரர் பதிகத்தை பாராயணம் செய்து வாருங்கள். நல்லதே நடக்கும். சிவன் மீது வைக்கும் நம்பிக்கை என்றும் பொய்க்காது.

நாம் ஏற்கனவே பல முறை கூறியது தான. எளியோருக்கு எளியோன் நம் தலைவன். உள்ளன்போடு “ஓம் நம சிவாய” என்று நீங்கள் உருகி கூப்பிட்டாலே ஓடோடி வந்து ஏவல் செய்ய காத்திருப்பான். அவன் அருளை பெற நீங்கள் நாயன்மார்களை போல இருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை. இதயத்தின் ஓரம் ஒரு துளி ஈரமும், ‘அன்பே சிவம்’ என்பதை உணர்ந்த மனிதர்களாகவும் இருந்தால் போதும். நற்றுணையாவது நமச்சிவாயமே! அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!!

படிகத்தை படிக்கும்போது எறும்பீஸ்வரரை மனதில் நினைத்துகொள்ளவும். அதற்கு வசதியாக எறும்பீஸ்வரர் படத்தை தந்திருக்கிறோம்.

வேருக்கு நீரூற்றி விளைக்கின்ற தலைவா...
வேருக்கு நீரூற்றி விளைக்கின்ற தலைவா…

எறும்பீஸ்வரர் பதிகம்

விரும்பி யூறு விடேல்மட நெஞ்சமே
கரும்பி னூறல்கண் டாய்கலந் தார்க்கவன்
இரும்பி னூறல றாததோர் வெண்டலை
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.

பிறங்கு செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணுசீர்க்
கறங்கு பூத கணமுடைக் கண்ணுதல்
நறுங்கு ழல்மட வாளொடு நாடொறும்
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.

மருந்து வானவர் தானவர்க் கின்சுவை
புரிந்த புன்சடைப் புண்ணியன் கண்ணுதல்
பொருந்து பூண்முலை மங்கைநல் லாளொடும்
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.

நிறங்கொள் கண்டத்து நின்மலன் எம்மிறை
மறங்கொள் வேற்கண்ணி வாணுதல் பாகமா
அறம்பு ரிந்தருள் செய்தவெம் அங்கணன்
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.

நறும்பொன் நாண்மலர்க் கொன்றையு நாகமுந்
துறும்பு செஞ்சடைத் தூமதி வைத்துவான்
உறும்பொன் மால்வரைப் பேதையோ டூர்தொறும்
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.

கறும்பி யூர்வன ஐந்துள காயத்தில்
திறம்பி யூர்வன மற்றும் பலவுள
குறும்பி யூர்வதோர் கூட்டகத் திட்டெனை
எறும்பி யூரரன் செய்த இயற்கையே.

மறந்து மற்றிது பேரிடர் நாடொறுந்
திறம்பி நீநினை யேல்மட நெஞ்சமே
புறஞ்செய் கோலக் குரம்பையி லிட்டெனை
எறும்பி யூரரன் செய்த இயற்கையே.

இன்ப மும்பிறப் பும்மிறப் பின்னொடு
துன்ப மும்முட னேவைத்த சோதியான்
அன்ப னேயர னேயென் றரற்றுவார்க்
கின்ப னாகும் எறும்பியூ ரீசனே.

கண்ணி றைந்த கனபவ ளத்திரள்
விண்ணி றைந்த விரிசுடர்ச் சோதியான்
உண்ணி றைந்துரு வாயுயி ராயவன்
எண்ணி றைந்த எறும்பியூ ரீசனே.

நிறங்கொள் மால்வரை ஊன்றி யெடுத்தலும்
நறுங்கு ழல்மட வாள்நடுக் கெய்திட
மறங்கொள் வாளரக் கன்வலி வாட்டினான்
எறும்பி யூர்மலை எம்மிறை காண்மினே.

===============================================================

An appeal – Help us in our mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

நமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா?

=====================================================================

Also check :

தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!

மாங்கல்யம் தந்த மங்களாம்பிகை – சிலிர்க்க வைக்கும் ஒரு நிகழ்வு!!

தீராத தோல்நோய்களை தீர்க்கும் திருத்தலம் + எருக்கன் இலை பிரசாதம்!

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!

நமக்கென்று ஒரு சொந்த வீடு – உங்கள் கனவு இல்லத்தை வாங்க / கட்ட வழிகாட்டும் பதிகம்!

உணவும், உறக்கமும், நிம்மதியும், செல்வமும் நல்கி இறுதியில் சிவபதம் அருளும் பதிகம்!

வசிஷ்டர் அருளிய தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்

வாழ்வுக்கு வழிகாட்டும் 27 நட்சத்திரங்களுக்குரிய பரிகாரத் திருத்தலங்கள்!

சிவன் கோவிலில் காணக் கிடைக்காத அனுமன் சன்னதியுடன் கூடிய மூல நட்சத்திர பரிகாரத் தலம்

108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் தவறவிடக் கூடாத ஒரு தலம்!

தவறுகளை மன்னித்து நல்வாழ்வுக்கு வழிகாட்டும் ஒரு தலம்!

=====================================================================

[END]

12 thoughts on “நல்லதொரு வேலை; இனியில்லை கவலை! இதோ ஒரு அருமையான பரிகாரத் தலம்!!

 1. நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை

  படிக்கும்போதே உடலில் சிலிர்ப்பு

  சிவாய நமஹ

 2. கண்களை கவர்கிறது இந்த ஆலய தரிசன பதிவு எல்லா படங்களும் அருமையோ அருமை
  நாளெல்லாம் பார்த்தும் படித்து கொண்டும் இருக்கலாம்.
  படங்களை பற்றி மேலே சொல்ல வார்த்தைகள் இல்லை.
  எல்லா பதிவுகளுமே முத்துக்கள் தான். இருந்தாலும் இந்த migavum பழமையான திருக்கோவில் அதுவும் மிக முக்கியான வேண்டுகோளுக்காக இந்த பதிவு பெருமை சொல்ல வார்த்தைகள் இல்லை
  நாளை விரிவாக பின்னோட்டம் இடுகிறேன்.
  என்றும் அன்புடன்

 3. ஒவ்வொரு படங்களும் தத்ரூபமாக உள்ளது, வேலைவாய்ப்பு பதிவு லேட்டாக வரவேண்டும் என்பது ஈசனின் ஆணை. எனக்காகவும் ஈசனிடம் பிரார்த்தனை செய்யவும் . தாங்கள் திருச்சியில் விழாவில் உரை நிகழ்த்தப் போவதை அறிய மிக்க மகிழ்ச்சி.

  எரும்பீஸ்வரர் பற்றி தொகுத்து வழங்கியது அற்புதம். திரு செந்திலுக்கும் ஈசன் அருள் புரிவார்

  அனைவரும் இந்த பதிகத்தை படித்து பயனடைவோம்,

  நன்றி
  உமா வெங்கட்

 4. எரும்பீஷ்வரர் சன்னதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் மிக அருமையாக உள்ளது ஸ்தல புராணம் படிக்க சுவாரஸ்யமாக உள்ளது… ஏறும்பீச்வரர் புகைப்படம் அளித்தமைக்கு நன்றி..இதேபோல் தாங்கள் தரிசிக்கு அனைத்து திருத்தலங்களின் மூலவர் படத்தினையும் முடிந்தவரை புகைப்படமாக அளித்தால் நாங்களும் அத்திருத்தலங்களை தரிசித்த பாக்கியம் கிடைக்கும் … நன்றி…

 5. வணக்கம் சுந்தர் சார்

  மிகவும் அருமையான பதிவு

  நன்றி

 6. சுந்தர் அண்ணா..

  எறும்பீஸ்வரர் ஆலயம் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டேன். மிகவும் பழமையான திருக்கோவில் பற்றி புதுமையான முறையில் (கோவில் இருப்பிடம்,தங்கள் அனுபவம்,தல புராணம், வரலாற்று நிகழ்வுகள்,வண்ண படங்கள் மற்றும் சிறப்பு பதிகங்கள் ) சொல்வதன் மூலம் நாங்களும் நம் தலைவரை நேரிடையாக தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்று வருகிறோம்.

  வண்ண படங்களும் சூப்பரோ சூப்பர் என்று தான் சொல்ல வேண்டும்.

  தங்களுக்கு உதவிய திரு செந்தில் அண்ணாவிற்கும் என் நன்றிகள் பல.

  தாங்கள் ஏற்கனவே கூறியது போல..சரியான நேரத்தில்,சரியான தலைமையில் இந்த வார கூட்டு பிரார்த்தனை. நம் தள அன்பர்கள் அனைவரும் தொழில் / வேலையில் முன்னேற்றம் பெற்றிட எல்லாம் வல்ல எம் பெருமான் “எறும்பீஸ்வரர்” அருள் புரிய நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.

  இந்த வார தங்களது “திருச்சி பயணமும்” மற்றும் தங்கள் சொற்பொழிவு விழாவும் சிறக்க வாழ்த்துகிறேன் அண்ணா.

  மிக்க நன்றி அண்ணா..

 7. வணக்கம் சுந்தர். அருமையான படங்கள்மற்றும் கட்டுரை.நன்கு தொகுத்து அளித்து இருகிறீர்கள்.நன்றிகள். திருச்சியில் மற்ற திருகோவில்களை தரிசித்து இருகிறேன் ஆனால் திருவெறும்பூர் சென்றது இல்லை . பதிவின் மூலம் பலர் பயனடைய உமையொருபாகன் ஆசிர்வதிக்கட்டும்.சிறப்புரை இனிதே நடக்க வாழ்த்துகள்.நன்றி.

 8. மறக்க முடியாத பயணம் மற்றும் தரிசனம். நன்றி

 9. வணக்கம். எரும்பிஸ்வரர் சந்நிதியில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை அறிந்து மிக்க மகிழ்ச்சி . அந்த கோவில் பற்றி தெரியாத விஷயங்களை தெரிந்து கொண்டேன். திருச்சிக்கு பலமுறை சென்று மற்ற கோயில்களை பலமுறை தரிசித்து இருக்கிறேன். ஆனால் திருவெறும்பூர் இதுவரை சென்றது இல்லை. எங்களுக்காக மிக்க முயற்சி செய்து பிரார்த்தனை செய்ததற்கு நன்றிகள் பல.

  1. எறும்பீஸ்வரர் மிக மிக சக்தி வாய்ந்தவர். அதே நேரம் எளிமையானவர். நேரில் ஒரு முறை சென்றால் புரிந்துகொள்வீர்கள். வாழ்த்துக்கள்.

   1. ஐயா நான் நாம் தளத்தில் Facebook மூலம் அறிமுகமானவர்.அனைத்து தகவல்களும் மிகவும் அருமையாகவும் உள்ளது.
    இன்று நான் வேலை வாய்ப்புக்காக ஒரு பதிகத்தை தேடி வந்தேன். ஆனால் மிகவும் ஆச்சரியமாக உள்ளது.
    நான் தேடி வந்த தகவல் என் கண்முன்னே. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ஐயா. ஞாயிற்றுக்கிழமை அன்று நானும் தரிசனம் செய்ய முடியும் என்று நம்புகிறேன்.
    எல்லம் அவர் செய்யலாம்.
    ஓம் நமசிவாய

 10. சுந்தர் சார்,
  அருமையான பதிவு. அதுவும் எனக்கு தேவையான முக்கியமான பதிவு. நீங்கள் போன் செய்து பேசியதே எனக்கு உற்சாகம் தந்தது. இந்த பதிவை படிக்க சொன்னது பெரும் பாக்கியமாக கருதுகின்றேன் . மிக்க நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *