இந்த கோவிலை பற்றி கேள்விப்பட்டவுடன், இங்கு செல்லவேண்டும் என்கிற ஆவல் ஏற்பட்டது. இதையடுத்து எப்படியோ பட்டரின் அலைபேசி எண்ணை தேடிப்பிடித்து நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு கோவிலுக்கு வருவதாக சொன்னோம். வரும்போது ஏதாவது வாங்கி வரவேண்டுமா என்று கேட்டபோது, எனக்கு ஒன்றும் வேண்டாம். இங்கு குரங்குகள் நிறைய உண்டு. அவற்றுக்கு பிஸ்கெட் ஏதாவது வாங்கி வாருங்கள் என்றார்.
இதையடுத்து சுமார் 20 பாக்கெட்டுகள் பார்லே-ஜி பிஸ்கட்டுகள் வாங்கிக்கொண்டு சென்றோம். நாம் சென்ற நேரம் பட்டர் வரவில்லை. சன்னதி திறக்கவில்லை. எனவே வெளியே பிரகாரத்தில் அமர்ந்து கொண்டு சென்றிருந்த பிஸ்கெட்டுகளை பிரித்து வானரங்களுக்கு அளித்தோம். அனைத்தும் ஒழுங்காக வாங்கி சாப்பிட்டன. அவற்றுக்குள் சண்டையிட்டுக்கொண்டன, சேட்டைகள் செய்தன என்பது வேறு விஷயம். நம்மிடம் தவறாகவோ முரட்டுத்தனமாகவோ நடந்துகொள்ளவில்லை. நம்மிடம் நன்கு பழகிவிட்டன. எனவே இந்த குரங்குகள் குறித்த பயம் நமக்கு துளியும் இல்லாமல் இருந்தது.
இதற்கிடையே கோவிலில் அர்ச்சகராக இருக்கும் பாலாஜி பட்டர் வந்த பிறகு, சுவாமி தரிசனம் செய்தோம். அவரிடம் பேசுகையில் நமது உழவாரப்பணி குழு குறித்து எடுத்துக்கூறி அப்படியே அங்கு உழவாரப்பணிக்கும் அனுமதி பெற்றோம்.
அதற்கு அடுத்த வாரம் அந்த கோவிலை பற்றி ஆலய தரிசனத்தில் பதிவளித்துவிட்டு அங்கு உழவாரப்பணி செய்யப்போகும் விஷயத்தை அறிவித்தோம். (புடவை கட்டிக்கொள்ளும் பெருமாள் – சென்னை புறநகரில் ஒரு அதிசய மலைக்கோவில்!)
மலைக்கோவில், அதுவும் இதுவரை கேள்விப்பட்டிராத கோவில் என்பதால் வழக்கமாக வரும் நம் உழவாரப்பணி குழு அன்பர்கள் தவிர, மேலும் சிலர் கூட இந்த உழவாரப்பணிக்கு திரண்டனர்.
முன்னதாக தளத்தில் உழவாரப்பணி குறித்து பதிவளிக்கும்போது, குரங்குகள் அங்கு இருப்பதை கூறி பணிக்கு செல்லும்போது அவற்றுக்கு பிஸ்கட், பொரி உருண்டை உள்ளிட்ட தின்பண்டங்கள் வாங்கி செல்வோம் என்று வேறு கூறியிருந்தோம். எனவே பணிக்கு நாம் மற்றும் பணிக்கு வந்த சில அன்பர்கள் என பலர் அவற்றுக்கு பல்வேறு தின்பண்டங்களை வாங்கிச் சென்றோம்.
பணி செய்த நாளன்று, அனைவரும் வேனில் சென்று அடிவாரத்தில் இறங்கினோம். ஆளாளுக்கு ஒரு ஒரு சாமான்களை எடுத்துக்கொண்டு மலையேற ஆரம்பித்தனர். (பக்கெட், துடைப்பம், மாப், பிளாஸ்டிக் குடம், பிரஷ், மதிய உணவு etc. etc.). நாம் நம்மிடம் ஒரு பெரிய கவரில் பட்டருக்கு மரியாதை செய்யவேண்டி வாங்கிய வேட்டி, சட்டை, சால்வை, மற்றும் இனிப்புக்கள் அடங்கிய சுவீட் பாக்ஸ் என அனைத்தையும் எடுத்துக்கொண்டு மலையேறினோம். வழியில் நாம் சந்திக்கப்போகும் ஆபத்தை அறியாமல்.
பாதி படிக்கட்டுக்கள் ஏறி இருப்போம். எங்கிருந்து தான் வந்தனவோ தெரியவில்லை. ஒரு பெரிய வானரப்படை நமது குழுவினரை மறித்தது. மற்றவர்கள் கைகளில் இருந்தது வெறும் துப்புரவு பொருட்கள் மட்டுமே. எனவே அவர்கள் தப்பித்துவிட்டார்கள். ஆனால், நாமும் பிஸ்கெட்டுகளை வைத்திருந்த நண்பர் ஒருவரும் மாட்டிக்கொண்டுவிட்டோம். மலையில் உள்ள குரங்குகளை பற்றித் தான் நமக்கு தெரியுமே தவிர, இவற்றை பற்றி தெரியாது.
இவை சரியான முரடாக இருந்தன. நமது கைகளில் இருந்த கவரை ஒரு குரங்கு வந்து பறிக்க எத்தனித்தது. உள்ளே இருக்கும் சுவீட் பாக்ஸை அது பார்த்துவிட்டது. ஏதோ வெயிட்டாக இவன் கொண்டு போகிறான் என்று நினைத்துவிட்டதோ என்னவோ, எத்தனை விரட்டியும் போகவில்லை. கவர் பறிபோய்விட்டால் என்ன செய்வதென்று நமக்கு ஒரே பதட்டமாகிவிட்டது. காரணம், அதில் வெறும் இனிப்பு மட்டுமில்லை… வேட்டி, சட்டை, சுவாமிக்கு பட்டுப்புடவை மற்றும் பட்டருக்கு மரியாதை செய்ய சால்வை என வேறு சில முக்கியமான பொருட்களும் இருந்தன.
பிஸ்கட் பையை கொண்டு சென்றவர், கையில் ஒரு பிரம்பை எடுத்துக்கொண்டு அதை சுழற்றியபடியே சென்றுவிட்டார். ஆனால் நாம் தான் நிராயுதபாணியாக மாட்டிக்கொண்டுவிட்டோம். நமக்கு இயல்பாகவே எந்த விலங்கையும் அடிப்பதோ அச்சுறுத்துவதோ பிடிக்காது. குரங்கை மட்டும் எப்படி அடிப்பதாம்.
எனவே அங்கு கிடந்த ஒரு பெரிய சுள்ளியை எடுத்துக்கொண்டு சும்மா அதை மிரட்டியபடி ஒவ்வொரு படியாக மேலே ஏறினோம். மற்ற குரங்குகள் குச்சியை பார்த்ததும் சற்று பயந்து பின்வாங்க, ஒரே ஒரு குரங்கு மட்டும் ‘இவன் சும்மா பிலிம் காட்டுறான்… நான் பிடுங்குறேன் பார் இவன் கிட்டேயிருந்து அதை…’ என்று நினைத்ததோ என்னவோ, விடாமல் நம்மிடம் இருந்த கவரை பிடுங்க முயற்சித்தது.
ஒரு கட்டத்தில் நாம் சற்று வேகமாக கையிலிருந்த குச்சியை சுழற்ற, திடீரென அதற்கு கோபம் வந்துவிட்டது. உர்ரென்று ஒரு கர்ஜனை செய்து அதன் பல்லை காண்பித்தது பாருங்கள்… குரங்குகளுக்கு கடைவாய்ப் பல் மிகவும் கூராக இருக்கும் போல… அப்போது தான் அதை கவனித்தோம். நமக்கு குலை நடுங்கிவிட்டது.
சரி… நம்மை கடிக்காமல் விடாது என்று முடிவே செய்துவிட்டோம்.
கடைசியில் வேறு வழியின்றி அதனிடம் பேச்சு வார்த்தை நடத்தினோம்.
“டேய்… ஆஞ்சநேயா விட்டுடு… இது நல்லாயில்லே…. டேய் ஆஞ்சநேயா விட்டுடு… இது உங்களுக்கு கொடுக்கத்தானே எடுத்துட்டு போறேன்… அது புரியாம என்னையே கடிக்க வர்றே…. உங்களுக்குத் தான் சாப்பிட நிறைய வாங்கிட்டு வந்திருக்கோம்ல.. இதை எதுக்கு பிடுங்குறே…. விட்டுடு… ப்ளீஸ்…ப்ளீஸ்… ” என்று அதினிடம் கெஞ்சினோம்.
அது நமது கெஞ்சலை சட்டை செய்யவில்லை.
இன்னும் வேகமாக சீறியபடி, பல்லை காண்பித்து பயமுறுத்தியது. அதன் பல்லை பார்க்க பார்க்க நமக்கு பயம். குரங்குக் கடிக்கு மட்டும் மருந்தே கிடையாது தெரியுமா?
எப்படியாவது இதனிடமிருந்து இந்த பொருட்களை காப்பாற்றி நாமும் தப்பிக்கவேண்டுமே என்று தோன்றியது. கடைசியில் பெருமாளிடம் வேண்டிக்கொண்டோம். “ஹே…. ஸ்ரீனிவாசா… இவைகளை மறக்காமல் இவைகளுக்கும் சாப்பிட நாங்கள் நிறைய வாங்கிக்கொண்டு வந்திருக்கிறோம். அது புரியாமல், பட்டருக்கு மரியாதை செய்யவும் உனக்கு சார்த்த புடவையும் நாங்கள் கொண்டு வந்த பையை பிடுங்க முயற்சிக்கின்றனவே… நீ தான் இவைகளுக்கு புரியவைக்கவேண்டும்…” என்று பிரார்த்தித்தோம்.
இதற்கிடையே, குரங்குகளிடம் மாட்டிக்கொண்டு நாம் விழித்ததை மேலேயிருந்து பார்த்த மகளிர் குழுவினர் சிலர், “வழியில சுந்தர் சார்… குரங்குகள் கிட்டே பேச்சு வார்த்தை நடத்திகிட்டு இருக்கார்” என்று நம் நிலையை வைத்து காமெடி செய்துவிட்டனர். நாம் குரங்கிடம் நடத்திய பேச்சுவார்த்தையை கவனித்த சிலர் நம்மைப் போலவே மேலே நடித்துக்காட்டியாதாக வேறு தகவல்.
இங்கே ஒரு மனுஷன், குலை நடுங்கிப் போய் எப்படிடா இதுங்ககிட்டே இருந்து தப்பிக்கிறதுன்னு போராடிக்கிட்டுருந்தா… இவங்க நம்மளை வெச்சு காமெடி பண்ணிட்டாங்க… இந்த கொடுமையை எங்கே போய் சொல்றது… ஹூம்…. யானை குழிக்குள்ளே விழுந்தா பூனை கூட எட்டிப்பார்க்குமாம்…
இதற்கிடையே குச்சியை சுழற்றியபடியே நாம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டோம். ‘கிட்டே வந்தீங்கன்னா… அடிச்சேபுடுவேன்’ என்று சற்று வேகமாகவே நாம் குச்சியை சுழற்ற, என்ன நினைத்ததோ அந்த விடாக்கொண்டன் குரங்கு நம்மை ஒரு வழியாக விட்டது.
விட்டால் போதுமென வேக வேகமாக படியேறி மலையுச்சியை சென்றடைந்தோம்.
எனவே ஆப்பூர் மலைக்கோவில் செல்பவர்கள், அங்கு குரங்குகளுக்கு ஏதேனும் வாங்கிச் சென்றால், அதை ஜிப் வைத்த பையில் தோளில் மாட்டிக்கொண்டு எடுத்துச் செல்லவேண்டும். பிளாஸ்டிக் கவரில் எதையும் எடுத்துச் செல்வதை தவிர்க்கவும். இல்லையென்றால் வழியிலேயே அவற்றை பறிகொடுக்க நேரிடும்.
சோளிங்கரிலும் இதே போன்ற குரங்குகள் தொல்லை உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறோம். சொல்லப்போனால் இவற்றைவிட அவை மிகவும் வயலண்ட்டாம். கையில் பழமோ உணவுப்பொருட்களோ இருப்பதை பார்த்தால் பிடுங்கிச் செல்லாமல் விடவே விடாதாம்.
இத்தோடு விட்டதா குரங்குகள் தொல்லை…? பணி நடக்கும்போது எங்கள் பொருட்களை காக்க நாங்கள் பட்டபாடு இருக்கிறதே… அதை வைத்து ஒரு மெகா சீரியலே எடுத்துவிடலாம்…
கீழே பணி முடித்து திரும்பவரும்போது நண்பர் ஸ்ரீஹரி அவர்களின் மகன் குழந்தை கிருஷ்ண முரளியின் டிபன் பாக்ஸை ஒரு குரங்கு பிடுங்கிச் சென்றுவிட்டது. டிபன் பாக்ஸை பறிகொடுத்துவிட்டு அவன் அழுத அழுகை இருக்கிறதே…. அவன் பெற்றோர்களுக்கு அவனை சமாதனப்படுத்துவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.
நாம் இந்த பதிவில் கூறியது குரங்குகள் செய்த அட்டகாசத்தில் சில சாம்பிள்கள் தான். ஒரு பக்கம் நாங்கள் பணி செய்ய மறுப்பக்கம் அவை தங்கள் சேட்டைகளை தொடர்ந்து செய்துவந்தன. அது பற்றி அடுத்த வாரம் விரிவாக பார்க்கலாம். கூடவே ஆப்பூர் உழவாரப்பணி நடைபெற்ற விதம் குறித்தும் பதிவளிக்கப்படும்.
===============================================================
ஒரு விஷயம்… குரங்குகள் எத்தனை விஷமம் செய்தாலும் அவற்றை அடிக்கவே அடிக்கக்கூடாதாம். குரங்குகள் மட்டுமல்ல பூனைகளுக்கும் இது பொருந்தும்.
இரண்டு மகன்களும் பார்க்க குரங்குகள் போல….
பல ஆண்டுகளுக்கு முன்னர் வாரப் பத்திரிகை ஒன்றில் படித்த ஒரு சம்பவம் இன்னும் நம் நினைவில் பசுமையாக இருக்கிறது. ஆனந்த விகடன் என்று கருதுகிறோம். தினசரி தாம் கொண்டு செல்லும் மதிய உணவை, ஒரு சில குரங்குகள் தின்று தீர்ப்பதை கண்டுபிடித்த கூலித் தொழிலாளி ஒருவன், ஒரு முறை அந்த உணவில், கண்ணாடி துண்டுகளையும் கடுக்காய் முள்ளையும் கலந்து வைக்க, அதை தின்ற குரங்குகள் வாயில் இரத்த காயம் ஏற்பட்டு துடிதுடித்து அவை இறந்து போய்விட்டன. ஆனால், அதற்கு பிறகு அந்த தொழிலாளிக்கு பிறந்த இரண்டு மகன்களும் பார்க்க குரங்குகள் போலவே இருந்தார்களாம். அவர்களின் புகைப்படங்களை வேறு வெளியிட்டிருந்தது அந்த பத்திரிகை. உண்மையிலே பார்க்க அச்சு அசலாக குரங்குகள் போலவே அவர்களுக்கு தோற்றம். மூளை வளர்ச்சியும் அவ்வளவாக இல்லை. ஐந்தறிவு விலங்குகளை போன்றே அவர்களது செயல்பாடுகளும் இருந்தன. குரங்குகள் மரணத்திற்கு காரணமான அவர்களின் தந்தை காலமான பிறகு அவர்களை வைத்துக்கொண்டு அந்த சகோதரர்களின் தாய் பட்டபாடு சொல்லிமாளாது. அந்த ஊர் குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் ஓர் காட்சிபொருளாகவே அந்த இரண்டு சகோதரர்களும் இறுதிவரை வாழ்க்கையை கழித்துவிடுவார்களோ என்று அஞ்சுவதாக அந்த தாய் கூறியிருந்தார். இப்போதும் அந்த கட்டுரையையும் அந்த சகோதர்களின் முகத்தையும் நம்மால் மறக்க முடியவில்லை.
எனவே குரங்குகளை சும்மா மிரட்டத் தான் செய்யவேண்டுமே தவிர ஒரு போதும் அவற்றை அடிப்பதோ, தாக்குவதோ கூடாது.
இது குறித்து மகா பெரியவா தொடர்புடைய ஒரு சம்பவத்தை கோதண்டராம சர்மா அவர்கள் எழுதிய ‘மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’ தொகுப்பில் படித்ததை தருகிறோம்…
===============================================================
குரங்கை அடித்ததால் ஏற்பட்ட தோஷம்!
ஒரு கோடைக்கால ஞாயிற்றுக்கிழமை. காஞ்சிபுரம் ஸ்ரீ மடத்தில் ஒரு பல்லகில் அமர்ந்து தரிசனம் தந்துகொண்டிருந்தார்கள் பெரியவா. ஏரளமான பக்தர்கள் வந்திருந்தார்கள். தட்டு தட்டாக பழங்கள், திராட்சை, கல்கண்டு, தேன் பாட்டில்கள் பல்லக்குக்கு வெளியே சமர்பிக்கப்பட்டிருந்தன.
திடீரென்று ஒரு குரங்குப் படை அங்கே வந்தது.
அட்டகாசம் தான்! பழங்களை குதறித் தின்றன. தேன் பாட்டில்கள் உருண்டன.
பெரியவாளிடம் போய் விஷமம் செய்யப்போகின்றனவோ என்று சிஷ்யர்கள் தவியாய்த் தவித்தனர்.
பெரியவா முகத்தில் சஞ்சலத்தின் ரேகையே தென்படவில்லை.
“ஒன்று செய்யாதீர்கள்!”
ஈஸ்வராக்ஞை! தடிகளை கொண்டு வந்த அன்பர்கள் செயலிழந்து தடிகளாய் நின்றுவிட்டார்கள்.
ஒரு வழியாக தம் வேலைகளை முடித்துக்கொண்டு ராம காரியத்துக்கு போய்விட்டன வானரங்கள்.
பக்தர்களுக்கு ஒரு கதை சொன்னார்கள் பெரியவா.
தஞ்சை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் குரங்குகள் தொல்லை தாங்கமுடியவில்லை. அசட்டுத் தனமாக மாட்டிக்கொண்டுவிட்ட ஒரு குரங்கை தடியால் அடித்துவிட்டார் ஒருவர். உள்காயம் ஏற்பட்டு சில நாட்களுக்கு பிறகு உயிரை விட்டது அந்த குரங்கு.
அடுத்ததாக அவருக்கு பிறந்த குழந்தைக்கு பேச்சு வரவில்லை. பெண் குழந்தை. கல்யாணம் செய்துகொடுக்க வேண்டிய பருவம் வந்தது.
பெரியவாளிடம் வந்து, செய்த பாவத்தை கூறி அழுதார்கள் தம்பதிகள்.
“மண்ணால் குரங்கு பொம்மை செய்து, உங்கள் ஊர் கிராம தேவதை கோவிலில் காணிக்கை மாதிரி சமர்பித்துவிடு. மனமொப்பி கல்யாணம் செய்துகொள்பவனாக பார்த்து, விவாஹம் செய்துகொடு.”
அப்படியே நடந்தது. வாய் பேசாத அந்த பெண்ணுக்கு சுட்டித் தனமாக பேசுகின்ற குழந்தை பிறந்ததாம்.
“குரங்கை அடிக்கக்கூடாது. அவைகளிடம் கருணை காட்டவேண்டும். ராம சேவகர்கள் பரம்பரையில் தோன்றியவை. நமக்கு தொந்தரவு கொடுத்தாலும் அனுமனை நினைத்துக்கொண்டு அவைகளை விட்டுவிடவேண்டும்!”
பெரியவாளிடமிருந்தே கதையையும் உபதேசத்தையும் கேட்ட அன்பர்கள் உருகிப்போனார்கள்.
===============================================================
அடுத்த உழவாரப்பணி!
நம் தளத்தின் அடுத்த உழவாரப்பணி மே 17, 2015 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும். இரண்டு மூன்று ஆலயங்களை பரிசீலித்து வருகிறோம். (விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.)
உழவாரப்பணியில் பங்கு கொள்ள விரும்பும் அன்பர்கள் நமக்கு தங்கள் பெயர், அலைபேசி எண், வசிக்கும் இடம் ஆகிய மூன்றையும் குறிப்பிட்டு editor@rightmantra.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். அல்லது TEMPLE CLEANING VOLUNTEER என்று மேற்படி மூன்று விபரத்தையும் குறிப்பிட்டு எஸ்.எம்.எஸ். அனுப்பவும். தங்களுக்கு மின்னஞ்சல் மூலமும் குறுந்தகவல் மூலமும் தகவல் அனுப்பப்படும்!
நன்றி!
‘ரைட்மந்த்ரா’ சுந்தர்,
ஆசிரியர், Rightmantra.com
E-mail : editor@rightmantra.com | Mobile : 9840169215
===============================================================
An appeal – Help us in our mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?
நமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா?
=====================================================================
Also check ….
நம் உழவாரப்பணிக்கு பெருமை சேர்த்த சிறுவன்! நெகிழவைக்கும் சம்பவம்!!
ஹரிஹர தரிசனமும் தாத்திரீஸ்வரர் கோவில் உழவாரப்பணியும்!
புடவை கட்டிக்கொள்ளும் பெருமாள் – சென்னை புறநகரில் ஒரு அதிசய மலைக்கோவில்!
தீவினைகளை அகற்றி பாவங்களை துடைத்தெறிய ஓர் அரிய வாய்ப்பு!
உயிரை பறிக்க வந்த எமதூதர்கள்; தடுக்க வந்த சிவகணங்கள்!
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே!
இவர்களின் சேவையை விட பெரியது இந்த உலகில் உண்டா? “இதோ எந்தன் தெய்வம்” – (3)
வள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!
“எது இன்பம்?” — சேக்கிழார் மணிமண்டபத்தில் சில நெகிழ்ச்சியான தருணங்கள்!!
பாயாசம் சாப்பிட்டதற்கு பாராட்டு கிடைத்த அதிசயம்! — சிவராத்திரி SPL (5)
“என் கடைக்காலம் அரங்கன் சேவைக்கே!’ – கண்கலங்க வைத்த ரங்கநாயகி – திருநீர்மலை உழவாரப்பணி
‘பெரிய’ இடத்து பணியாளர்களுக்கு நம் தளம் செய்த சிறப்பு – A quick update on திருநின்றவூர் உழவாரப்பணி !
திருமகளின் புகுந்த வீட்டில் (திருநின்றவூர்) நமக்கு உழவாரப்பணி வாய்ப்பு கிடைத்த கதை !
பாராட்டும் வரவேற்பும் பெற்ற நமது ஒத்தாண்டீஸ்வரர் கோவில் உழவாரப்பணி! பிரத்யேக பதிவு!!
“என் பிள்ளை குட்டிங்க நல்லாயிருந்தா அது போதும்” – திருமழிசையில் நெகிழவைத்த ஈஸ்வரியம்மா!
=====================================================================
[END]
ஒரே பதிவில் மூன்று முக்கியமான விசயங்களை தொகுத்தளித்த உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
1. பழைய நிகழ்வுகளை நினைத்து பார்த்து மறுபடியும் சிரிக்க வைத்தது.
2. எல்லா பிராணிகளின் மேலும் எல்லோராலும் ஒரேமாதிரியான அன்பு காட்ட முடியாது. அதை புரிந்துகொண்டு குரங்குகளை அனுமனின் சொருபமாக நினைக்கவேண்டும் என்று சொன்னது.
3. அதே மாதிரி மிக அற்புதமாக மகா பெரியவா அவர்களின் நெகிழ்ச்சி கொடுக்கும் கதை சொன்னது.
எல்லா உழவர பணியிலும் கதை, திரைகதை, வசனகர்த்த, direction எல்லாமே தாங்கள் தான். ஆனால் ஆப்பூரில் மட்டும் நீங்கள் அனுமனிடம் மாட்டிகொண்டு திரைகதை செய்து காமித்ததை உமா மேடம் மலை மேலே direction செய்ய மகளிர் அணி மொத்தமும் கலாட்டா தான்.
இப்போது நினைத்தாலும் ஒரே சிரிப்பு தான் வருகிறது.
anjeneya காப்பாத்து நன்றாக இருந்தது.
யானை குழிக்குள்ளே விழுந்தால் பூனை கூட எட்டி பார்க்குமாம்.
பழமொழி நன்றாக இருக்கிறது.
நீங்கள் என்ன குச்சி வைத்து மிரட்டும் ஆசிரியர் போலவா இருக்கீங்க நாங்கள் பயபடுவதர்க்கு. சரிக்கு சரி விளையாடி விட்டு யானை பூனை என்று பழமொழி எல்லாம் சொல்லகூடாது.
ஒருவேளை அப்போது நீங்கள் இருந்த தோற்றத்தை வைத்து யானை என்று சொன்னீங்களா?
ஒரு ஓடை போல காவியும் வெள்ளையுமான படிக்கட்டு மனதை கவர்கிறது.
ஒரே ஒரு சன்னதியாக இருந்தாலும் அங்கு பணி செய்தது மனதுக்கு மிகவும் நிறைவாக இருந்தது.
ஆனால் இறுதி வரை அனுமனின் பயம் இருந்தது உண்மை தான்.ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே சிரிப்பு தான்.
என்றும் அன்புடன்.
எல்லோருக்கும் இனிய காலை வணக்கம். நம் தளத்திற்கு வந்து 10 நாட்கள் ஆகி விட்டது. நான் திடீரென ஒரு வாரம் அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்து விட்டு மதுரை சென்று விட்டேன். மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் , திருப்பரங்குன்றம், இன்மையில் நன்மை தருவார் கோவில், மதன கோபால் சுவாமி கோவில். திருசெந்தூர், சங்கரன் கோவில் , கூடல் அழகர் பெருமாள் கோவில். ஒத்தக்கடை நரசிம்மர் கோவில் சென்று விட்டு இன்று காலையில் தான் சென்னை வந்தேன். அதுவும் ஏப்ரல் 22ம் தேதி எனக்கு வாழ்கையில் மறக்க முடியாத நாள். அதை பற்றி தனி பதிவாக திரு சுந்தர் அவர்கள் எழுதுவார்கள். மீனாக்ஷி அம்மனை தரிசனம் செய்ததையும், ரமண மந்திரம் சென்றதையும் வாழ்நாளில் மறக்க முடியாது. திரு சிட்டி. மனோ, சுந்தரி மற்றும் அவர் கணவர் எங்களுடன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தது பசுமரத்து ஆணி போல் மனதில் பதிந்து விட்டது.
தங்கள் ஆப்பூர் பதிவு அருமை. தாங்கள் குரங்குகளிடம் மாட்டிக்கொண்டு அவஸ்தைப் பட்டு ஒரு வழியாக மலை மேல் ஏறியதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. செம காமெடி. பரிமளத்திடமும் நம் மகளிர் குழுவினரிடமும் தாங்கள் குரங்கிடம் மாட்டிக் கொண்டு கடந்து வந்த பாதையை எல்லோரிடமும் நான் சொல்லி சொல்லி சிரித்து வயிறு புண்ணாகி விட்டது. அந்த உழவாரப் பணி செய்து மாதங்கள் ஆகி விட்டாலும் மறக்க முடியாத நிகழ்வு .
மகா பெரியவா சொன்ன கதை நெஞ்சம் நெகிழ வைக்கிறது. நாம் எல்லா பிராணி களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும்
நன்றி
உமா வெங்கட்
வணக்கம் சுந்தர். அழகான மலைப்பாதை ,அழகான கோவிலில் உழவார பனி முடித்துவிட்டு வந்து இருகிறீர்கள்.அழகர் மலைமேல் உள்ள ராகாய் கோவிலுக்கு செல்லும் வழியில் நிறைய வானரங்கள் உண்டு.பயமாகத்தான் இருக்கும்.ஆனால் மஹா பெரியவா சொல்லியதை கேட்ட பிறகு அனுமார் வழிதோன்றலை எதுவும் செய்ய தோன்றாது. நன்றி.
சுந்தர் அண்ணா..
தங்களின் இந்த பதிவின் மூலம் ஆப்பூர் மலை கோவில் பற்றி அறிந்து கொண்டேன்.அடுத்த பதிவில் ஆப்பூர் உழவார பணி பற்றியும் மற்றும் பெருமாள் தரிசனம் பற்றியும் அறிய ஆவலாய் உள்ளேன்.
சுந்தர் அண்ணனுக்கு ஏற்பட்ட ஆப்பூர் அனுபவம் தான், வள்ளிமலையில் எனக்கும் அறிவுரை செய்தார் என்று நினைக்கிறேன்.
ஆப்பூர் சென்று, பெருமாளை தரிசனம் செய்திட வேண்டும் என்று தங்களின் பதிவின் முதல் வண்ணப்படம் என்னை மேலும்,மேலும் உற்சாகமூட்டுகிறது அண்ணா.
மிக்க நன்றி அண்ணா..
சுந்தர்ஜி அவர்களுக்கும்,நமது தள வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.
ஆப்பூர் உசவாரபணி திருப்பதி தரிசனம் போன்றதொரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது,
ஆனால் சுந்தர்ஜி வாரனங்களுடன் நடத்திய கெஞ்சல் நாடகங்களை நான் பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை.
நன்றிகளுடன் ,
மனோகர் .
பதிவை முழுக்க படித்துவிட்டே இந்த கமெண்ட்டை அளிக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.
– சுந்தர்
Dear sundar sir,
as usual rocking,but I don’t find your experience to be funny or hilarious,because same incident happened to me in Thiruvannamalai Ramanashram,I was not lucky enough to be alone like you as I was holding my 2 little kids, but thankfully by god’s grace nothing happened to anyone,next time before going to these kind of temples or any temple do carry the leftovers of Diwali crackers,(anukundu,lakshmi vedi,yanai vedi ) 2 or 3 shots are enough to keep them away from you for a very long time,trust me this works brilliantly than any other methods (my grandfather had a estate in kodai and they use this method to drive the monkies ),its true we are dominating their habitat and living places but we cant risk our safety and have panic attacks.keep rocking.Mahaperiyava is with you.
Indu
I was frightened. That’s true. But my team made fun with the whole episode. (ennaa villaththanam!) What to do… hmm…
Anyway, your idea is strange. Until it doesn’t harm monkeys it is okay.
So, next time have to pack some crackers… isn’t it…?
sorry sundar sir,
now only im realizing a mistake in my writing,i didn’t mean anything wrong while writing ” I was not lucky enough to be alone like you”,pls forgive if I offended u in anyway, you are a blessed being and a great soul, a Seethai is waiting for this Ramar, Mahapriyava is there to guide her to u.we are also waiting for that moment.
Indu
Don’t worry. I never mistake my ardent readers. Because I don’t read their words. I read only the thoughts behind the words. So please feel comfortable and you said nothing wrong. And thanks for your wishes. Btw, i am not worth the words you referred.