இதற்கிடையே திருமதி.ராதாபாய் அவர்களின் பேட்டியை தினமலர் நிஜக்கதை பகுதியில் நண்பர் முருகராஜ் அவர்கள் வெளியிட்டார். அவர் மூலம் ‘வள்ளுவன் பார்வை’ மின்னஞ்சல் குழுமத்தை பற்றி கேள்விப்பட்டு, வியந்து அந்த குழுமத்தின் நெறியாளர் (MODERATOR) திரு.வெங்கடேசன் அவர்களுடன் பேசி, அது பற்றியும் நிஜக்கதை பகுதியில் வெளியிட்டார்.
‘பார்வையில்லையே… மற்றவர்கள் போல நாம் நவீன வசதிகளை பயன்படுத்திக்கொள்ளமுடியவில்லையே’ என்று சுயபச்சாதாபத்திற்கு இடம் கொடுக்காமல் தொழில்நுட்பத்தை தங்களுக்கு ஏற்றவாறு உபயோகப்படுத்திக்கொண்டு தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து வரும் இவர்கள் நிச்சயம் பாராட்டப்படவேண்டியவர்கள்.
தினமலர் நிஜக்கதை பகுதியில் வெளியான கட்டுரையை வாசகர்கள அவசியம் படிக்கவேண்டும்….!
வேறொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது. அதை பின்னர் சொல்கிறோம்.
======================================================================
இது வள்ளுவன் பார்வை!
பார்வை உள்ள தமிழர்கள் பலர் தமிழின் மீது காட்டாத அன்பை அக்கறையை பார்வை இல்லாத ஒரு குழுவினர் காட்டி வருகின்றனர். வெறும் அக்கறை மட்டுமின்றி தமிழின் உயர்வுக்கு அவர்கள் தந்துவரும் உழைப்பும் அசாதாரமானது. இதோ அவர்களைப்பற்றி…வெங்கடேசன் கோவையில் உள்ள ஸ்டேட்பாங்க் ஆப் இந்தியாவில் டெலிபோன் ஆபரேட்டராக பணியாற்றிவருகிறார். சிறுவயதில் பார்வையை இழந்தவர் ஆனால் எந்த வயதிலும் உற்சாகத்தை இழக்காதவர்.இது இல்லையா சரி அடுத்து? என்று யோசிப்பவர், வாழ்க்கையையும் தமிழையும் மிகவும் நேசிப்பவர். இன்றைய காலகட்டத்தின் தவிர்க்கமுடியாத விஷயங்களான கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போனின் சிறப்புகளை பார்வை இல்லாதவர்களும் பயன்படுத்தவேண்டும் என்பதில் பல ஆராய்ச்சி செய்தவர்.
ஸ்கீரின் ரீடிங் (திரை வாசிப்பான்) என்ற மென்பொருள் மூலமாக மொபைல் போனுக்கு வரக்கூடிய குறுஞ்செய்திகளும் கம்ப்யூட்டரில் வரக்கூடிய மெயில்களையும் கேட்கமுடியும் என்றானதும் இவரது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
ஒரு இணையதள வசதி கொண்ட மடிக்கணனி, வயர்லெஸ் கீபோர்டு மற்றும் ஸ்பீக்கர் மட்டும் இருந்துவிட்டால் போதும் இவரது உலகமே மாறிவிடும். கதைகள் கட்டுரைகள் இலக்கியங்கள் எல்லாம் தேடிதேடி படிக்கிறார். படித்த விஷயங்களை இவரைப்போலவே பார்வை இல்லாத நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது அந்த தமிழ் தரும் இன்பம், அமுதத்திற்கும் மேலானதாக இருப்பதை உணர்ந்தார்.
இந்த தமிழ் அமுதை ஏன் நண்பர்கள் என்ற சிறு வட்டத்திற்குள் அடக்கவேண்டும், பார்வை இல்லாத, தமிழ் தெரிந்த யார் வேண்டுமானாலும் அனுபவிக்கட்டுமே என்ற தொலைநோக்கோடு உருவாக்கப்பட்டதுதான் வள்ளுவன் பார்வை என்ற மின்மடல்.
வள்ளுவன் பார்வை பெயர் வைக்க விசேஷ காரணம் எதுவும் இல்லை இந்த மின்மடல் பக்கத்தை வடிவமைத்து கொடுத்தவர் உதாரணத்திற்கு இந்த தலைப்பை சொன்னார் நன்றாகத்தானே இருக்கிறது என அதையே எங்கள் மின்மடலுக்கு தலைப்பாக வைத்துக்கொண்டோம்.
இப்போது என்னைப்போலவே பார்வை இல்லாத ஆனால் பல்வேறு பதவிகளிலும் பொறுப்பிலும் உள்ளவர்கள் பலரும் இந்த வள்ளுவன் பார்வை மின்மடல் உறுப்பினர்கள்.
உறுப்பினர்கள் மட்டும் இதில் தங்களது கருத்துக்களை பதியமுடியும், உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினராகிக்கொண்டு கருத்துக்களை பதியலாம் எந்த கட்டணமும் இல்லை. பார்வை உள்ளவர்கள் இந்த மின்மடலை படித்து ரசித்து மற்றவர்களுக்கு பகிரலாம்.
வள்ளுவன் பார்வை மின்மடல் துவங்கி கொஞ்ச காலம்தான் ஆகிறது உறுப்பினர்கள் பரவலாக சேர்ந்து வருகின்றனர். கட்டுரை கவிதை கருத்துக்களை பதிந்து வருகின்றனர். பார்வை இல்லாதவர்களுக்கு பயன்படக்கூடிய வேலை வாய்ப்பு பயிற்சி கருத்தரங்கு போன்ற பல பயனுள்ள செய்திகளும் இதில் நிறைய வருகிறது
முதல் விஷயம் இங்கே யாரும் பரிதாபத்தை எதிர்பார்த்தோ சோகத்தை பிழிந்து கொடுத்தோ எழுதவில்லை. கருத்துக்களும் எழுத்துக்களும் மிகவும் உற்சாகமாக இருக்கிறது.அனைத்து விஷயங்களும் இங்கே ஆரோக்கியமாக பரிமாறப்படுகிறது. விஷயங்கள் பலவும் புதிய கோணத்தில் இருக்கிறது. பார்வை இல்லாதவர்கள் பதிவு செய்கிறார்கள் என்ற எண்ணமே எங்கு எழாத அளவிற்கு தமிழ் தகராறு இல்லாமல் கோர்வையாக அழகாக அற்புதமாக இருக்கிறது. இவர்கள் கம்ப்யூட்டர் உலகத்தில் மவுஸ் கிடையாது. ஆனால் மவுஸ் இல்லாமலே விரைவாகவும் நேர்த்தியாகவும் கணியை உபயோகிக்கிறார்கள். தமிழ் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக உறுப்பினர்கள் கட்டாயமாக தமிழில்தான் எழுதவேண்டும் என்பது எங்களின் பிரதான விதியாகும்.
அனைத்திற்கும் சேர்த்து நெறியாளர் வெங்கடேசனை தொடர்பு கொண்டு வாழ்த்திய போது இது ஒரு கூட்டு முயற்சி ஆகவே பாராட்டுகள் அனைவருக்கும் போய்ச்சேரவேண்டும். தமிழுக்கான ஒரு மென்பொருள் சேவை தேவை என்ற போது மின்மடல் நண்பர்கள் ஒன்று சேர்ந்து பணம் கொடுத்தோம். நாங்கள் எங்கள் சொந்த செலவில் ஒன்று கூடி வள்ளுவன் மடலை மேம்படுத்துவதற்கு ஒரு கூட்டம் நடத்தினோம். அடுத்த கூட்டம் நடத்துவதற்கும் இடம் தேடிக்கொண்டு இருக்கிறோம்.
இப்போதுதான் துவங்கியிருக்கிறோம். இந்த வள்ளுவன் பார்வை செல்ல வேண்டிய தூரமும், சொல்ல வேண்டிய கருத்துக்களும், வெல்ல வேண்டிய விஷயங்களும் நிறையவே இருந்தாலும் அதை சாதிப்போம் என்ற நம்பிக்கை நிறைய இருக்கிறது, என்று சொல்லும் வெங்கடேசனை வாழ்த்து நினைப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்:8903449780.
(இவரது அலுவலக நேரம் (9-6) தவிர்த்து பேசினால் நல்லது, நீங்கள் பேசுவதோடு உங்களுக்கு தெரிந்த தெரியாத பார்வை இல்லாதவர்களுக்கு வள்ளுவன் பார்வை பற்றிய விஷயங்களை சொல்லி வெங்கடேசனின் எண் கொடுத்து பேசவையுங்கள், அவர்கள் உலகம் உற்சாகம் பெறும் உங்கள் மனமோ சந்தோஷம் பெறும்). -எல்.முருகராஜ், தினமலர்.காம்
======================================================================
Also check from our archives…
“கண் போனால் என்ன? கால் போனால் என்ன?” – தேவாரத் திருப்பணியில் அசத்தும் ஞானப்பிரகாசம்!
ராதாபாய் – விழியிழந்தும் பிறருக்கு வழிகாட்டும் பாரதி கண்ட புதுமைப் பெண்!
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் என உணர்த்தும் தன்னம்பிக்கை சிகரம் கண்ணப்பன்!
தமிழகத்தின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களுள் ஒருவரை சந்திப்போமா?
பாரதி கண்ட புதுமைப் பெண் – பாஸிட்டிவ் கௌசல்யா!
ஒரு கவர்ச்சி நடிகையின் மறுப்பக்கம்!
ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும் – மகளிர் தின சிறப்பு பதிவு!
முடக்கி போட்ட விதி; ஜெயித்து காட்டிய மதி !
ஆயிரக்கணக்கில் படையெடுக்கும் கிளிகள் – சென்னையில் ஒரு அதிசயம்! DIRECT PICTORIAL REPORT!
இது போன்ற ரோல் மாடல் / சாதனையாளர் சந்திப்பு தொடர்பான பதிவுகளுக்கு :
======================================================================
[END]
சுந்தர் அண்ணா..
மின் மடலின் தலைப்பே மிகவும் ஆச்சரிய படுத்துகிறது. விழி இழந்தோர் “வள்ளுவன் பார்வை” மூலம் ஒளி பெற்று வருகிறார்கள் என்பது உறுதி.
வள்ளுவன் பார்வை மின் மடல் மூலம் “தமிழ்” மொழி மீதான பார்வை பெற்றிருப்பது மிகவும் சந்தோசம்.
திரு.வெங்கடேசன் அவர்களை கண்டிப்பாக வாழ்த்த வேண்டும்.மென்மேலும் அவர் தொண்டும்,பணியும் சிறக்க நம் தள அன்பர்கள் அனைவரும் வாழ்த்துவோமாக..
மிக்க நன்றி அண்ணா..
வள்ளுவன் பார்வை பற்றி அறிந்து கொண்டேன். திரு வெங்கடேசன் அவர்கள் சேவை அளப்பற்கரியது. பார்வை அற்றோர்களுக்கு இந்த தளம் பற்றி சொல்வது நம் கடமை.
திரு வெங்கடேசன் சேவை மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
நன்றி
உமா வெங்கட்
வணக்கம் சுந்தர்.ஏற்கனவே உற்சாகதோடும் , தன்நம்பிகையோடும் செயில்படுபவர்களுக்கு உங்கள் கட்டுரைகள் மேலும் உற்சாகம் ஊட்டும் என்பதில் ஐயமில்லை. உங்கள் பதிவுகளும் உதவியும் தேவைபடுபவர்கள்கு கிடைகிறது. வாழ்த்துக்கள். நன்றி.