நமது RIGHTMANTRA.COM அலுவலகத்தை பிப்ரவரி மாதம் துவக்கியபோது ஒரு அலுவலகம் அமைப்பதற்கு அத்தியாவசியமான சில அடிப்படை தேவைகளை பற்றி குறிப்பிட்டு வாசகர்களிடம் உதவிக்கரம் நீட்டுமாறு கோரிக்கை விடுத்திருந்தோம்.
அதில் ஒரு சிலவற்றை தவிர அனைத்தும் நம் வாசகர்களின் பேராதரவோடு பெருங்கருணையோடு நிறைவேறிவிட்டன. அவர்கள் உதவிக்கரம் நீட்டாவிட்டால் நமது கனவு கானல் நீராகவே போயிருக்கும்.
இப்படி உதவிகளை நல்கிய வாசகர்கள் சிலர் தங்கள் பெயர்களை வெளியிடவேண்டாம் என்றும் இது ஆத்மார்த்தமாக தாங்கள் செய்யும் உதவி என்றும் நம்மிடம் கேட்டுக்கொண்டுள்ளார்கள். ஒரு சிலர் பெயரை வெளியிட்டு மற்றவர்கள் பெயரை வெளியிடவில்லை என்றால் அது நன்றாக இருக்காது. எனவே எவர் பெயரையும் வெளியிடவில்லை. மேலும் நம் வாசகர்கள் பெயரையோ புகழையோ எதிர்பார்த்து இந்த உதவிகளை செய்யவில்லை என்பதை நாம் நன்கறிவோம். நம் தளத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள மதிப்பினாலும், நம் மீது கொண்ட அன்பினாலும் தான் இதை அவர்கள் செய்தார்கள் என்று நமக்கு தெரியும். அவர்களுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.
கணினி, லேப்டாப், பெரிய காமிரா (Canon PowerShot SX530), கம்ப்யூட்டர் டேபிள் & சேர் உள்ளிட்ட அடிப்படை பர்னிச்சர்கள், மிக முக்கியமாக அட்வான்ஸ் தொகை, உள்ளிட்ட முக்கிய தேவைகள் நம் வாசகர்களால் நிறைவேற்றப்பட்டுவிட்டது.
Canon PowerShot SX530 ல் தான் காங்கேயநல்லூர் லட்ச தீபம், சமீபத்திய வள்ளிமலை படி உற்சவம் தொடர்பான புகைப்படங்களை எடுத்தோம்.
(இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கப்பட்ட காமிராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைத் தான் பல பதிவுகளில் நீங்கள் இது வரை ரசித்தீர்கள். அந்த காமிரா மிகவும் உழைத்து களைத்துவிட்டது. வெளியூர் பயணங்களில் சிரமமாக இருக்கிறது. நமக்கு காமிரா என்பது வலது கை போல என்பதை நீங்கள் அறிவீர்கள்!)
எஞ்சியுள்ளவை மூன்றே மூன்று தான்.
* சிறிய காமிரா (Sony DSC-WX200/B – Price Rs.12,500/-)
* வாய்ஸ் ரெக்கார்டர் (Sony ICD-UX533F/B Price Rs. 6,500/-)
* சிறிய லேசர் பிரிண்டர்
=====================================================================
காலடி பயணம்!
ஏப்ரல் 21 அன்று வரக்கூடிய அக்ஷய திரிதியை முன்னிட்டு எல்லாம் வல்ல ஈசனின் தனிப் பெருங்கருணையினாலே வரும் திங்கட்கிழமை இரவு காலடி (ஆதிசங்கரர் அவதாரத் தலம்) புறப்படுகிறோம். காலடி கேரளா மாநிலத்தில் உள்ளது. காலடியில் சங்கரர் திருக்கோவிலை தரிசித்துவிட்டு பின்னர் அங்கிருந்து கனகதாரா ஸ்தோத்திரம் பிறந்த ‘சொர்ணத்தை மனை’க்கு பயணம். ஆதி சங்கரர், அன்னை மகா லக்ஷ்மியின் அருளால் தங்க நெல்லிக்கனி பெய்வித்த அந்த வீடு இன்றும் காலடியில் இருக்கிறது. அந்த நாள் தான் அக்ஷய திரிதியை. பின்னர் அங்கிருந்து மதுரை பயணம். மதுரையில் தலைவரை (சோமசுந்தரர்) சந்தித்துவிட்டு ஏப்ரல் 23 காலை சென்னை திரும்புகிறோம்.
‘சொர்ணத்து மனை’ குறித்த பதிவு உங்களை பிரமிப்பூட்டும் என்பது உறுதி.
உடனடி தேவை
இந்த பயணத்திற்கு நமக்கு அவசியம் மேற்கூறிய பட்டியலில் உள்ள சிறிய காமிரா தேவைப்படுகிறது. காரணம் பெரிய காமிராவை வைத்து சில இடங்களில் புகைப்படம் எடுப்பது சிரமமாக உள்ளது. அதில் உள்ள நடைமுறை சிக்கல்களை பற்றி ஏற்கனவே ஒரு சில பதிவுகளில் விளக்கியிருப்போம். எனவே வாசகர்கள் மேற்கூறிய காமிராவை வாங்க உடனடி பொருளுதவியை நல்கி பயணம் சிறக்க உதவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி!
‘ரைட்மந்த்ரா’ சுந்தர்,
ஆசிரியர், Rightmantra.com
E-mail : editor@rightmantra.com | Mobile : 9840169215
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
=====================================================================
Also check articles related to above post:
ஒரு முக்கிய அறிவிப்பு + வேண்டுகோள்!
வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்!
‘நாளை’ என்பதில்லை நரசிம்மனிடத்தில்!
வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா? MONDAY MORNING SPL 78
=====================================================================
[END]
தங்கள் காலடி பயணமும் ,மதுரை பயணமும் இனிதே நடை பெற வாழ்த்துக்கள். தங்கள் அலுவலக தேவைக்கு என்னால் முடிந்த உதவி நிச்சயம் உண்டு.
தாங்கள் ஆதி சங்கரரையும் , மீனாக்ஷி சுந்தரரையும் தருசித்திட்டு வந்த பிறகு தங்கள் காட்டில் பண மழை கொட்டப் போகிறது. அடுத்த வாரம் அழகிய பதிவு எங்களுக்காக காத்து இருக்கிறது,
நன்றி
உமா வெங்கட்
வாழ்க வளமுடன்
பயணம் இனிதாய் அமைய , எண்ணியது நடைபெற வாழ்த்துக்கள்
நன்றி
தங்கள் பயணம் சிறப்பாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
சுந்தர் அண்ணா..
தங்களின் பயணம் சிறக்க வாழ்த்துக்கள். காலடி பயண சிறப்பு கட்டுரையை எதிர்நோக்கி
மிக மிக ஆவலாய் உள்ளேன்.காலடி பயண முன்னோட்ட கட்டுரை மிகவும் சிறப்பு.
மிக்க நன்றி அண்ணா..