அழகு ரேகா எந்த அடிப்படையில் இந்த உதவித் தொகைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று உங்களுக்கு தெரியும். இருப்பினும் புதிய வாசகர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக மீண்டும் சொல்கிறோம்.
ஏழ்மை நிலையில் உள்ள சக மாணவிகள் பலர் ஸ்காலர்ஷிப் (கல்வி உதவி) பெற மிகவும் உறுதுணையாக இருந்தார் அழகு ரேகா.
ஸ்காலர்ஷிப் அப்ளிகேஷன் வாங்கித் தருவது, அதை நிரப்ப சொல்லிக்கொடுப்பது, அதை சப்மிட் செய்ய உதவுவது என்று வசதியற்ற கிராமப்புற சக ஏழை மாணவிகளுக்கு பெரிதும் உதவினார். இறுதியில் இவருக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்கவில்லை. இதனால் அவர் மனம் உடைந்து விடவில்லை. பிறருக்கு உதவும் தனது குணத்தை மாற்றிக்கொள்ளவில்லை.
நமது பாரதி விழாவில் ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவி வழங்கி வருகிறோம். ரேகாவைப் பற்றி பேராசிரியர் திருமதி.ராதாபாய் அவர்கள் மூலம் கேள்விப்பட்டபோது, ‘நிச்சயம் அவருக்கு நாங்கள் ஸ்காலர்ஷிப் தருகிறோம். அவர் விரும்பிய கல்வி செலவுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்’ என்று கூறி, பாரதி விழாவுக்கு ரேகாவையும் அழைத்து வாருங்கள் என்று கேட்டுக்கொண்டோம்.
இதையடுத்து ராதாபாய் அவர்களுடன் ரேகாவும் நமது பாரதிவிழாவுக்கு வந்திருந்தார். மேடையில் ரேகாவின் உதவும் உள்ளத்தையும் அவருக்கு இறுதியில் கல்வி உதவி கிடைக்காமல் போனதையும் குறிப்பிட்டு ரூ.15,000/- கான காசோலை வழங்கப்பட்டது.
(ஒரு விஷயத்தை மட்டும் அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும். நம் தளம் சார்பாக நாம் செய்யும் சேவைகள் சரியான நபரையே என்றும் சென்றடையும்!)
மிகவும் பின்தங்கிய வறுமையான குடும்பத்திலிருந்து வந்தவர் ரேகா என்பதால் அவருக்கு நிச்சயம் அந்தப் பணத்தின் அருமை தெரியும். நம் உதவியை சரியாக பயன்படுத்திக்கொண்டு நன்றாக படிப்பார், நமது பெயரைக் காப்பாற்றுவர் என்று நம்பினோம்.
இதற்கிடையே சமீபத்தில் நம்மை தொலைபேசியில் அழைத்த அழகு ரேகா நமது கல்வி உதவித் தொகை மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும், தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் முதல் மதிப்பெண்கள் எடுத்து முதல் மாணவியாக வந்து பல பரிசுகள் பெற்றிருப்பதாகவும் அதற்காக நமக்கு நம் வாசகர்களுக்கு நன்றி தெரிவிக்கவே அலைபேசியில் அழைத்ததாகவும் கூறினார். மேலும் இது குறித்து தனது எண்ணங்களை கடிதமாக எழுதி அனுப்புவதாகவும் கூறினார்.
சொன்னபடி, தனது தோழி ஒருவர் உதவியுடன் கடிதம் எழுதி அனுப்பியிருக்கிறார்.
என்ன சொல்வது…. படித்தவுடன் நெகிழ்ந்து போய்விட்டோம்.
ரைட்மந்த்ராவும் அதன் வாசகர்களும் நிகழ்த்திய மிகப் பெரிய சாதனையாக இதைக் கருதுகிறோம்.
தானத்தில் உயர்ந்தது வித்யா தானம். அதுவும் பார்வையற்ற ஒரு ஏழை மாணவிக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த வித்யா தானத்திற்கு ஈடு இணை எதுவுமில்லை. சம்பந்தப்பட்ட உதவியை நல்கிய வாசகர்களுக்கு மட்டுமல்லாது அனைவருக்கும் இந்த அருந்தொண்டின் பலன் போய் சேரவேண்டும் என்று கருதி 15,000/- ல் சில துளிகள், பாரதி விழாவுக்கு வந்த நிதியிலிருந்து அளித்தோம்.
எதிர்காலத்தில் கல்வி உதவி தொடர்பாக என்ன தேவை இருந்தாலும் நம்மை தொடர்புகொள்ளும்படியும் நம் தளம் அதை செய்யக் காத்திருப்பதாகவும் அழகு ரேகா அவர்களிடம் கூறியிருக்கிறோம்.
அழகு ரேகா அவர்களுக்கும் பார்வையற்ற அவருக்கு பலவிதங்களில் உறுதுணையாக இருக்கும் சக மாணவி ஜெனிபர் அவர்களுக்கும், ரேகாவுக்கு இந்தளவு தன்னம்பிக்கையையும் உதவும் உள்ளத்தையும் பயிர் செய்த அவரது ஆசிரியர் டாக்டர் திருமதி.ராதாபாய் அவர்களுக்கும் நம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
Check :
நம் தளத்தில் வெளியான தென்னிந்தியாவின் முதல் பார்வையற்ற முனைவர் பட்டம் பெற்ற பெண் திரு.ராதாபாய் அவர்களின் சிறப்பு பேட்டி!
ராதாபாய் – விழியிழந்தும் பிறருக்கு வழிகாட்டும் பாரதி கண்ட புதுமைப் பெண்!
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
ரேகாவின் கடிதத்தை ஒரு வரிவிடாமல் படியுங்கள். காரணம், இது வெறும் கடிதமல்ல… கடவுளின் குரல்.
பல நூல் படித்து நீயறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
அழகு ரேகாவுடன் நீங்கள் பேசவிரும்பினால் பேச வசதியாக அவரது அலைபேசி தந்துள்ளோம். மாலை 4.30 க்கு மேல் தொடர்புகொள்ளவும்.
அழகு ரேகா அவர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வை வெற்றிகரமாக முடிப்பார். இந்திய ஆட்சிப் பணியில் சேர்வார். அவரை சிறப்பு விருந்தினராக கொண்டு நமது தளத்தின் பாரதி விழாவும் எதிர்காலத்தில் நடைபெறும்.
கனவு மெய்ப்படவேண்டும்!
===============================================================
உன் பாதங்கள் நடக்க தயாரானால் பாதைகள் மறுப்பு சொல்வதில்லை!
ரைட்மந்த்ரா அன்புச் சகோதரர் சுந்தர் அவர்களுக்கு வணக்கம்.
நான் இந்த கடிதத்தை என் தோழியின் வாயிலாக எழுதுகிறேன். ரைட்மந்த்ரா வாசகர்கள் அளித்த கல்வி உதவித் தொகை பெரிதும் பயனுள்ளதாக இருந்தது. நான் மேலும் வளர்ச்சி அடைவதற்கு அது ஒரு தூண்டுகோலாகும்.
எங்கள் துறையில் நன்றாக படித்து, நடைபெற்ற தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்து முதல் மாணவியாக இருக்கின்றேன். மேலும் பல பரிசுகளையும் பெற்றுள்ளேன்.
நான் படித்து வேலைக்கு சென்றவுடன் என்னை போல், படிக்கும் மாணவர்களுக்கு உதவி செய்வேன் என்று உறுதி எடுத்திருக்கிறேன். இப்போது என்னுடன் பயிலும் பார்வையற்ற சக மாணவர்கள் அனைவருக்கும் என்னால் இயன்ற உதவியை செய்து வருகின்றேன்.
ஒவ்வொருவரும் பிறந்தோம் வளர்ந்தோம் என்று இருந்துவிடாமல் முடிந்த அளவிற்கு பிறருக்கு உதவி செய்வோம் என இந்த கடிதத்தை படிக்கும் ஒவ்வொருவரையும் அன்பாக கேட்டுக்கொண்டுள்ளோம்.
சென்ற வாரம் நம் தளத்தில் பார்வையற்றோர் நலனுக்காக பிரார்த்தனை செய்யப்பட்டதாக டாக்டர் திருமதி. ராதாபாய் அம்மா அவர்கள் கூறினார்கள். அச்செய்தியை கேட்டவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். பார்வையற்றோருக்காக பிரார்த்தனை செய்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இறைவன் உங்களுக்கு என்றும் துணையிருப்பார்.
நான் படிப்பதற்கு பலரும் உதவி செய்கின்றார்கள். அது மட்டுமல்லாமல் என் கல்லூரியில் பயிலும் தோழி ஜெனிபர் என்னுடன் இருந்து தேவையான உதவிகளை அதிகமாக செய்து வருகிறார். மேலும் இவர் எனக்கு பாடங்களை படித்துக்காட்டுவது, எழுதித் தருவது என பல உதவிகளை செய்துவருகிறார்.
ரைட்மந்த்ரா தளம் அதன் வாசகர்கள் அனைவரின் ஆசீர்வாதத்தாலும் உதவியினாலும் மேன்மேலும் வளர்ச்சி அடையவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். சென்ற பாரதி விழாவைக் கண்டு ஆச்சரியம் அடைந்தேன். நம் நாட்டில் இவ்வளவு உயர்ந்த அன்பு உள்ளங்கள் இருக்கிறார்கள் என்று வியப்படைந்தேன். அன்று முதல் நான் இன்னும் பலருக்கு உதவி செய்யவேண்டும் என்று மனதில் உறுதி எடுத்துக்கொண்டேன்.
என்னுடன் படிக்கும் சக தோழிகளிடமும் நாம் பிறருக்கு உதவி செய்யவேண்டும் என்று எடுத்துக்கூறினேன். ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையுடன் தைரியத்துடனும் வாழவேண்டும் என்று எடுத்துக்கூறினேன். இதற்கு எடுத்துக் காட்டாக ஒரு கவிதையை விளக்குகிறேன்.
தன்னம்பிக்கை
நதிகள் ஓடுகின்றன கடலிலே சங்கமிப்போம் என்று
நண்டுகள் கரை ஏறுகின்றன வளைகள் தமக்கே சொந்தமென்று
மலர்கள் மலர்கின்றன இறைவனிடம் சேருவோம் என்று
மழை பொழிகின்றன பூமியிலே சேர்வோம் என்று
இவையெல்லாம் தன்னிச்சையாக செயல்படுகையில்
மனிதா நீ மட்டும் ஏன்
முடங்கிக் கிடக்கின்றாய்?
சோர்வுகள் உன் சொந்தம் அல்ல
தடைகள் உன் பந்தம் அல்ல
உன் பாதங்கள் நடக்க தயாரானால்
பாதைகள் மறுப்பு சொல்வதில்லை
இந்த கவிதை தான் எனக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுத்தது.
இக்கடிதத்தில் பிழை இருந்தால் என்னையும், எழுத உதவி செய்த என் தோழி ஜெனிபரையும் மன்னிக்க வேண்டுகிறேன்.
மீண்டும் ஒருமுறை ரைட்மந்த்ரா நிறுவனர் சகோதரர் சுந்தர் அவர்களுக்கும் அன்புள்ளம் கொண்ட வாசகர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
என்னை தொடர்புகொள்ள விரும்பினால் 9952639579 என்ற எண்ணில் மாலை 4.30 க்கு மேல் தொடர்பு கொள்ளலாம்.
மிக்க நன்றியுடன்,
என்.அழகு ரேகா
புதுக்கோட்டை
===============================================================
முக்கிய அறிவிப்பு!
வேலை தேடுவோர் & வேலையில் பிரச்சனை உள்ளோருக்கான சிறப்பு பிரார்த்தனை பதிவு!!
மிகப் பெரிய ஆலய தரிசன பதிவு ஒன்று தயார் செய்து வருவதால் இன்று பிரார்த்தனை கிளப் பதிவு இடம்பெறாது. மேலும் அடுத்த வாரம் இடம் பெறக்கூடிய பிரார்த்தனை கிளப் பதிவு சரியான வேலை கிடைக்கமால் சிரமப்படுவோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
நல்ல வேலை வேண்டுவோர், திறமையும் தகுதியுமிருந்தும் நல்ல வேலை கிடைக்காமல் அவதிப்படுவோர், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காமல் சிரமப்படுவோர் என அனைவரும் இதில் தங்கள கோரிக்கைகளை சமர்ப்பிக்கலாம். அடுத்த வாரம் பிரார்த்தனை கிளப்புக்கு தலைமை தாங்கக்கூடியவர் இது தொடர்பான ஒரு திருக்கோவிலில் இறைவனுக்கு பூஜை செய்யும் பாக்கியம் பெற்றுள்ளவர். எனவே நம்பிக்கையுடன் சமர்பிக்கவும்.
உங்கள் கோரிக்கைகளை சற்று விரிவாக, தமிழிலோ ஆங்கிலத்திலோ உங்கள் முழு பெயர், ஊர், வயது, மற்றும் உங்கள் பிரச்னை ஆகியவற்றை குறிப்பிட்டு editor@rightmantra.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். தமிழில் எழுத முடியாதவர்கள், ஒரு தாளில் எழுதி அதை ஸ்கேன் செய்து அனுப்பலாம். இது எதுவுமே சாத்தியமில்லை என்றால் நம்மை அலைபேசியில் தொடர்புகொள்ளலாம்.
நன்றி!
‘ரைட்மந்த்ரா’ சுந்தர்,
ஆசிரியர், Rightmantra.com
E-mail : editor@rightmantra.com | Mobile : 9840169215
===============================================================
An appeal – Help us in our mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
நமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா?
=====================================================================
Also check :
அன்பு மிகுந்த தெய்வமுண்டு துன்பம் அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!
மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!
மகனின் கல்வி உதவி – தாய் அடைந்த சிவலோகப் பதவி!
இருள் வந்த போது விளக்கொன்று உண்டு; எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு!
இயற்பியல் விதிகள் தெரியும், உலகியல் விதிகள் தெரியுமா? MON MORNING SPL 57
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி! – UNSUNG HEROES 3
===============================================================
[END]
திரைப்பட நடிகர்களுக்கு ஆயிரங்கள் செலவு செய்து பிளக்ஸ் பேனர் வைப்பவர்களை, கண்டிப்பாக ஒரு முறையேனும் இந்தப் பதிவை படிக்க வைத்து விடு ஆண்டவா !
—
” அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் ”
—
“கடமையைச் செய்; பலனை எதிர்பார்”
—
விஜய் ஆனந்த்
மாணவி அழகுரேகாவிற்கும் அவரது தோழி ஜெனிபருக்கும் நமது வாழ்த்துக்கள்……. அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்று விரும்புகிற அவர்கள் வாழ்வில் மென்மேலும் முன்னேற இறைவனை பிரார்த்திக்கிறோம்………
அழகுரேகாவை நமது தளத்தின் பாரதி விழாவின் சிறப்பு விருந்தினராக விரைவில் எதிர்பார்க்கிறோம்……….
நம் தளத்தின் சேவையை நினைத்து மெய் சிலிர்க்கிறது. பாராட்டுக்கள்
அழகு ரேகாவின் கடிதத்தை படிக்க படிக்க கண்கள் பனிக்கின்றன. அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற அவரின் எண்ணமும், தன்னம்ம்பிகை குணத்தையும் பாராட்ட வார்த்தைகள் இல்லை.
அவர் படிப்பில் முதல் மதிப்பெண்கள் பெற்றதற்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் அவர் மேலும் மேலும் பல விருதுகளையும் பட்டங்களையும் வென்று, அவரின் எண்ணப்படி அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் குருவருளாலும் திருவருளாலும் ஈடேற வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
சரியானவரை தேர்ந்து எடுத்து கௌரவித்ததற்கு மிக்க நன்றி. அவரின் தன்னம்பிக்கை கவிதை மிகவும் அருமை.
அழகு ரேகாவிற்கான குறள்
தான் இன்புறுவது உலகு இன்புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந்தார்
நன்றி
உமா வெங்கட்
சுந்தர் அண்ணா..
என்னை போன்ற புதியவர்களுக்கு, தங்களின் குரல் இப்பதிவு மூலம் தெரிகிறது. அடுத்தவர்களுக்கு நம்மால் முடிந்த அளவாவது உதவ வேண்டும் என்பதை தெரிந்து கொண்டோம். மாணவி அழகுரேகா மற்றும் அவரது தோழிக்கும் வாழ்த்துக்கள்.
தெய்வம் பற்றிய கருத்து மிக மிக அருமை.
பல நூல் படித்து நீயறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
மிக்க நன்றி அண்ணா..
வாழ்க வளமுடன்
என்ன சொல்லி நான் எழுத !!!!
ரைட் மந்த்ரா மகுடத்தில்,
மேலும் ஒரு மாணிக்க கல் !
ரைட்மந்த்ரா தளத்தின் பார்வை , அழகு ரேகாவின் மீது பட்டவுடன்
அவருடை மனதில் இந்திய ஆட்சி பணி எனும் கனவு சுடர் விட்டு
எரிய ஆரம்பித்து விட்டது
அவருடை எண்ணம் ஈடேற வழ்த்துகள்
நன்றி
அழகு rekha மென் மேலும் வெற்றி பெற வேண்டுகிறேன்.
கடவுள் வேறு எங்கும் இல்லை. இதை விட சொர்க்கம் ஏதும் இல்லை என்று உதவி செய்யும் நீ வாழ்க. .
நல்லோர் ஒருவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை. நல எண்ணம் கொண்ட நீ வாழ்க நூறு வருடம்.
தன்னை அறிந்தவர் எதற்கும் அஞ்சுவதில்லை. உறுதி கொண்ட நீ வாழ்க. rekha தோழி வாழ்க.
கே. . சிவசுப்ரமணியன்.
வணக்கம் சுந்தர். கடினமான சூழ்நிலையிலும் படித்த அழகு ரேகாவுக்கு வாழ்த்துக்கள் அதற்கு உதவிய சுந்தற்கும் நன்றிகள் பல. உதவும் கரங்களே சிறந்த கரங்கள் என்பதற்கு நீங்களே சிறந்த உதாரணம் . விரைவில் உங்களோடு பலரும் சேர்ந்து மற்றவர்கள்கு உதவ இறைவன் ஆசிர்வதிப்பாரக. தேவைபடுபவற்கு உதவி கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. மீண்டும் நன்றிகள்.
நமது தளத்தின் ஆண்டு விழாவில் வித்யா தானம் பெற்ற அழகு ரேகா, அதனால் தான் பெற்ற பயன்களையும், ஆண்டு விழாவில் கலந்து கொண்டதால் ஏற்பட்ட தாக்கங்களையும் விவரித்த விதம் மனதை நெகிழ செய்தது.
அவருடைய தன்னபிக்கை கவிதை படிக்கும் போதே புது இரத்தம் பாய்வது போல் உள்ளது
தன்னுடைய பிரச்சனைகளை பெரிதாக நினைக்காமல், மற்றவர்களுக்கு உதவி புரிந்து வரும் அழகு ரேகா மற்றும் அதற்கு உறுதுணையாக இருக்கும் ஜெனிபர் நமக்கல்லாம் ஒரு எடுத்துக்காட்டு. இவர்கள் வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன் இவர்களை உருவாக்கிய சிற்பி, டாக்டர் திருமதி ராதாபாய் அவர்களுக்கும் நமது கோடானகோடி நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.
தகுதியான நபரை தேர்வு செய்த ஆசிரியருக்கும் நமது நன்றிகள்.
இறைவன் உறையும் இடம் குறித்தான விபரம் நாம் அனைவரும் மனதில் நிறுத்த வேண்டிய ஒன்றாகும்.
முடிவாக ஆசிரியரின் கனவு நிச்சயம் மெய்ப்படும். அது காலத்தின் கட்டாயம்.