Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, November 9, 2024
Please specify the group
Home > Featured > யாரை குருவாக ஏற்றுக்கொள்வது? உண்மையான குருவை எப்படி அடையாளம் காண்பது?

யாரை குருவாக ஏற்றுக்கொள்வது? உண்மையான குருவை எப்படி அடையாளம் காண்பது?

print
“நமது மதத்தில் மஹா பெரியவர், ரமண மகரிஷி, ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள், யோகி ராம்சுரத்குமார், ஞானானந்த கிரி ஸ்வாமிகள், ஷிர்டி சாய்பாபா என எண்ணற்ற குருமார்கள் இருக்கிறார்களே. இவர்களில் யாரை பின்பற்றுவது யாரை வணங்குவது? ஒரே குழப்பமாக இருக்கிறதே… ஒரே ஒருவர் இருந்தால் சுலபமாக இருக்குமே…” என்று சமீபத்தில் ஒரு வாசகர் நம்மிடம் குறைப்பட்டுக்கொண்டார்.

“வாழ்க்கை எனும் துன்பக்கடலில் சிக்கி பல்வேறு பிரச்சனைகளுக்கு நடுவே கரைசேர முடியாமல் தவிக்கும் ஒருவனுக்கு கைதூக்கிவிட ஒருவர் இருவரல்ல… பலர் இருக்கிறார்கள். இது எத்தனை பெரிய வரம். அவர்களில் யாராவது ஒருவர் கையை பற்றி மேலே வரவேண்டியது தான். இதில் யோசிக்கவோ கவலைப்படவோ என்ன இருக்கிறது?” என்றோம்.

அவருக்கு மட்டுமல்ல பலருக்கும் ஒரு குருவை தேர்ந்தெடுத்து பின்பற்றுவதில் பல சந்தேகங்கள் இருக்கக்கூடும். குருபக்தி தொடர்பாக வாசகர்களுக்கு எழக்கூடிய பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கவே இந்த பதிவை தருகிறோம். நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறோம்.

சந்தேகம் : இத்தனை குருக்கள் இருக்கிறார்களே இவர்களில் யாரை நான் குருவாக ஏற்றுக்கொள்வது? ஒரு உண்மையான குருவை எப்படி அடையாளம் காண்பது?

பதில் : குரு என்பவர் நமது ஊழ்வினையை வேரறுக்க உதவுபவர். பார்த்த நொடியில், அவரை கரங்கூப்பி வணங்கத் தோன்றும். காதலாகி உள்ளம் கசிந்துருகி கண்ணீர் பெருகி வழியும். அவரிடம் இறைவனை பற்றிய சிந்தனையே மேலாகி நிற்கும். லௌகீக அபிலாஷைகளான பணம், பெயர், புகழ் குறித்த அவா அவரிடம் இருக்காது. அப்படிப்பட்டவர் தான் சத்குரு.

தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்
பின்னை வினையைப் பிடித்து பிசைவர்கள்
சென்னியில் வைத்த சிவனருளாலே

என்று மிக மிக அழகாக் திருமந்திரத்திலே திருமூலர் விளக்கியிருக்கிறார்.

Guru

மஹாகுரு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள், ஸ்ரீ ராமானுஜர், ராமகிருஷ்ண பரமஹம்சர், இராமநாம போதேந்திராள், ‘நடமாடும் தெய்வம்’ காஞ்சி மகா பெரியவர், சேஷாத்ரி ஸ்வாமிகள், ரமண மகரிஷி, திருமுருக.கிருபானந்த வாரியார், ஷீரடி சாய்பாபா, வடலூர் இராமலிங்க அடிகளார், ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகள், யோகி ராம்சுரத்குமார், ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள் போன்றவர்களே இதற்கு உதாரணம்.

சந்தேகம் : ஏன் ஈஸ்வர பக்தியை விட குருபக்தி உயர்ந்தது?

பதில் : இதற்கு நடமாடும் தெய்வமாக விளங்கிய காஞ்சி மகா பெரியவா அற்புதமான பதிலை கூறியிருக்கிறார்.

“ஜகத்தை ஸ்ருஷ்டிப்பது, பரிபாலிப்பது போன்ற பல காரியங்கள் ஈசுவரனுக்கு இருக்கின்றன. அவை எல்லாம் குருவுக்கு இல்லை. அவனுக்கு ஆபீஸ் உண்டு; இவருக்கு ஆபீஸ் இல்லை. ஆபீஸ் இருக்கிறவனிடம் போய்த் தொந்தரவு கொடுப்பதைவிட ஆபீஸ் இல்லாமல் சும்மா இருக்கிறவரிடம் நம் காரியத்தை மிக எளிதாக முடித்துக் கொண்டு விடலாம். ஈச்வரனுக்கு என்ன என்ன உத்தமமான குணங்கள் எல்லாம் இருக்கின்றனவோ அவை எல்லாம் இந்த குருவிடத்தில் இருக்கின்றன. இவர் சுத்தமானவர், பொய் சொல்லாதவர்; வஞ்சனை தெரியாதவர்; இந்திரியங்களை எல்லாம் வென்றவர்; கருணை நிறைந்தவர்; மகா ஞானி. இவரைப் பிரத்யக்ஷமாக பார்க்கிறோம். பகவானையோ பிரத்யக்ஷத்தில் பார்க்க முடியவில்லை. ஆகவே குருவின் திருவடிகளைப் பற்றிக்கொண்டு பக்தி செய்ய ஆரம்பித்துவிட்டால், ஈசுவர பக்தியினால் நமக்கு என்ன அனுகூலங்கள் உண்டாகின்றனவோ அத்தனையும் சுலபமாக உண்டாகிவிடும். அதனால் தான் குருபக்தி உயர்ந்தது என்று சொன்னார்கள்.” – தெய்வத்தின் குரல்

=====================================================================

Also check குரு என்பவர்  இறைவனை விட உயர்ந்தவரா? MUST READ

=====================================================================

சந்தேகம் : இன்று குரு என்ற பெயரில் பல போலிகள் உலவுகிறார்களே அவர்களை எப்படி அடையாளம் காண்பது?

பதில் : உண்மையை அடையாளம் காண்பது தான் சிரமம். போலியை மிக மிக சுலபமாக அடையாளம் காணலாம். போலிகளிடம் உள்ள முக்கிய குணம் அடக்கமின்மை. அஹங்காரம். ‘தான் நினைத்தால் எதுவும் செய்ய முடியும்’ என்பதை பக்தர்களிடம் நிலைநிறுத்தவே அவர்கள் முயற்சிப்பார்கள். இத்தகையோர் சித்து வேலைகளும் மந்திர மாயமாலங்கள் கைவரப்பெற்றிக்கலாம். ஆனால் அதனால் அவர்கள் குருவாகிவிடமுடியாது. இவர்களும் சர்க்கஸில் மந்திர தந்திரங்கள் செய்பவரும் ஒருவரே. தன்னலமற்றவரே குரு.

உண்மையான குரு வேதங்களின் உட்பொருளை மிக எளிமையாக பக்தர்களுக்கு விளக்கும் கலையை பெற்றிருப்பார். போலிகளுக்கு இது வரவே வராது.

சந்தேகம் :  இக்காலத்தில், பலர் தன்னை குருவென்று கூறிக்கொள்கிறார்கள். சீடர்களைவிட குருவின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. ஆனால், யாரை குரு என்று கூறலாம்?

பதில் : இது பற்றி சிருங்கேரி ஆச்சாரியார் ஒரு முறை கூறியதாவது :

குரு: அதிகததத்வ: சிஷ்யஹிதாயோத்யத: ஸததம். சாஸ்த்ரங்களில் கூறப்பட்டுள்ள தத்வங்கள் அனைத்தையும் நன்கு கற்றறிந்தவர், சீடர்களின் ஐயங்களை அறவே அகற்றக் கூடியவர். சீடர்களை முன்னேற்றுவதற்கு எப்பொழுதும் ஆயத்தமாக இருப்பவர் என்று ஸ்ரீ ஆதி சங்கரர் கூறுகிறார்.

All Gurus 2

சந்தேகம் :   சரி… உண்மையான குருக்களே பலர் இருக்கிறார்கள். இந்த தளத்திலேயே பலரைப் பற்றி பதிவுகள் வருகிறது. அவர்களில் யாரை வணங்குவது?

பதில் : தெய்வங்கள் பல இருந்தாலும் ‘இஷ்ட தெய்வம்’ என்ற ஒன்று இருப்பதில்லையா? உயிர் வாழ உணவு தேவை. அதிலேயே நமக்கு மிகவும் பிடித்த உணவு என்ற ஒன்று இருப்பதில்லையா அதுப் போலத் தான். உங்கள் மனதுக்கு பிடித்தவரை குருவாக தேர்ந்தெடுத்து பக்தி செய்து வாருங்கள். எந்த குருவும் தன்னை மட்டுமே வணங்கவேண்டும் என்று கூறியதில்லை. அப்படி எண்ணியதுமில்லை. புது புது குருமார்களை தேடி தேடி வணங்கவேண்டும் என்பதில்லை. சந்தர்ப்பம் அமையும்போது தயங்காது மற்றவர்களையும் வணங்கி வாருங்கள்.

உதாரணத்திற்கு ஒரு வேலையாக ஒரு ஊருக்கு செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் தான் ஒரு குருவின் அதிஷ்டானம் (மகாசமாதி) இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். என் குரு அவர் தானே இவரை தரிசிக்கவேண்டுமா என்று கருதாமல் அந்த அதிஷ்டானம் சென்று வணங்கி அவரது ஆசியை பெற்றுக்கொள்ளவேண்டும். நீங்கள் யாரை வணங்கினாலும் உங்களையே வணங்கியதாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று உங்கள் குருவிடம் பிரார்த்தியுங்கள். அப்புறம் என்ன? நதிகள் அனைத்தும் சமுத்திரத்தில் சங்கமிப்பது போல நீங்கள் எந்த குருவை வணங்கினாலும் உங்கள் குரு ஏற்றுகொள்வார்.

தன் அடியவன் தன்னை வணங்கவேண்டும் என்பது குருவின் எதிர்பார்ப்பு அல்ல.

சந்தேகம் : அப்போது ஒரு குரு தன் சீடனிடம் எதிர்பார்ப்பது என்ன?

பதில் : சூழ்நிலைகள் எப்படி நிர்பந்தித்தாலும் உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் இருத்தல், பொறுமையை கடைபிடித்தல், எடுத்த காரியத்தில் உறுதி, எல்லாவற்றுக்கும் மேல்… தன் உபதேசப்படி நடப்பது.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நினைவில் வைத்திருக்கவேண்டும். குருவின் புகழை பாடும் சீடனைவிட, அவரது கருத்துக்கள் படி வாழ்பவனே உண்மையான சீடன். தன் புகழை பாடிக்கொண்டு தனது உபதேசங்களை காற்றில் பறக்கவிடும் சீடனை குரு ஏற்றுக்கொள்ளவேமாட்டார்.

இறுதியாக… ஆச்சாரியாள்களையும் தெய்வங்களையும் ஆராதிப்பதாலோ கொண்டாடுவதாலோ அவர்களுக்கு எந்த நன்மையையும் இல்லை. அவர்கள் உபதேசப்படி ஒருவர் வாழ்வதில் தான் அவர்களுக்கு பெருமை இருக்கிறது என்பதை என்றும் மறக்கவேண்டாம்.

குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு
குரு தேவோ மஹேஸ்வரஹ
குரு சாட்சாத் பரப்ரம்மா
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா.

குருவே ப்ரம்மா, குருவே விஷ்ணு , குருவே மஹேஸ்வரனுக்குச் சமமானவர். உலக முழுமைக்குமான ஞானத்தைப் போதிப்பதால் குருவே சாட்ஷாத் பரப்பரம்மாவைப் போன்றவர். அப்படிப்பட்ட குருவை வணங்க வேன்டும்.

=====================================================================

An appeal – Help us in our mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

நமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா?

=====================================================================

=====================================================================

Articles about Maha Periyava

http://rightmantra.com/?cat=126

=====================================================================

Articles about other Gurus in Rightmantra.com

மனித முயற்சி + குருவருள் = திருவருள்! (ஞானானந்தம்-2)

ஆனந்தத்தை அள்ளித் தரும் குருவின் மகாத்மியங்கள் – (ஞானானந்தம்-1)

நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!! 

“மூன்று முறை அழைத்தால் போதும், இந்தப் பிச்சைக்காரன் ஓடி வந்து உதவி செய்வான்!” – யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி SPL

“எதற்கும் கவலைப்படாதே. உன்னுடைய மேலதிகாரியால் உனக்கு எந்த விதத் தொந்தரவும் ஏற்படாது!”

காங்கேயநல்லூர் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் – ஒரு திவ்ய தரிசனம்!

தீராத வினைகளை தீர்க்கும் நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் – A must visit place!

பித்தனாகியும் பரமனைப் பாடிய ஸ்ரீ அப்பைய தீட்சிதர் திவ்ய சரிதம் + அதிஷ்டான தரிசனம்!

ராம நாம மகிமை & போதேந்திராள் வாழ்க்கை வரலாற்று நாடகம்! ஒரு நேரடி அனுபவம்!!

குரு அடித்தாலும் அணைத்தாலும் அது கருணை தானே? – ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் லீலை!!

காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!

=====================================================================

Articles on Ramana Maharishi

பிள்ளையார் பழமும் அதீத சிற்றம்பலமும் – இது ரமண திருவிளையாடல்!

ரமண திருவிளையாடற் திரட்டில் கண்ட முத்துக்கள் மூன்று!

பிராப்தம் & ஆஞ்ஞை = ரமண விளையாட்டு!

=====================================================================

Articles about Sri Ragavendra Swamy

முதல் மாணவன், முதல் வேலை, முதல் சம்பளம்…!! – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (6)

புதுவை பிருந்தாவனத்தில் காட்சி தந்த ராகவேந்திரர் – உண்மை சம்பவம் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (5)

பட்ட மரம் துளிர்த்தது; வேத சக்தி புரிந்தது – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 4

கேட்பதை தருவார், கேட்டதும் தருவார் குருராஜர் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 3

“அழைத்தால் போதும் அடுத்த கணமே நினைத்தது நடக்கும்!” – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 2

திருவருளும் குருவருளும் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (1)

குருராஜர் இருக்க கவலை எதற்கு? நெகிழ்ச்சியூட்டும் நிஜ அனுபவங்கள்!

நம் தளத்திற்கு கிடைத்த ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பரிபூரண ஆசி! எங்கே… எப்படி?

ஆங்கில கவர்னருக்கு ராகவேந்திரர் காட்சியளித்த அற்புதம் – கஜெட் ஆதாரத்துடன்!

யாருக்கு தேவை தண்ணீர்?

உச்சரிப்பை விட உன்னத பக்தியே சிறந்தது!

இறைவா… பிறர் நிறைவில் பெருமிதமே தினம் காணும் குணம் வேண்டும்!

எது வந்த போதும் துணை நீயே குருராஜா – உண்மை சம்பவம்

முக்காலமும் நீ அறிவாய் குருராஜா – நம் தள வாசகரிடம் ஸ்ரீ ராகவேந்திரர் நிகழ்த்திய அற்புதம்!

‘ஸ்ரீ ராகவேந்திர தரிசனம்’ தொடர் அடுத்த வாரம் முதல் தொடர்ந்து  இடம்பெறும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

=====================================================================

[END]

17 thoughts on “யாரை குருவாக ஏற்றுக்கொள்வது? உண்மையான குருவை எப்படி அடையாளம் காண்பது?

  1. நேற்று 5 குருமார்களை நானும் எனது மனைவியும் தரிசிக்கும் பேறு பெற்றோம்.[விரைவில் இதுகுறித்து தங்களிடம் பகிருகிரேன்.] நேற்று வியாழகிழமையாக இல்லையே என்று மனம் அடித்து கொண்டது.

    இன்று குருவாரத்தில் தாங்கள் அந்த குறையை நீக்கி, அனைத்து குருமார்களையும் ஒருங்கே தரிசிக்கும் பாக்கியத்தை கொடுத்து விட் டீர்கள். மாபெரும் நன்றி.

    கேள்வி/ பதில் பகுதி மிக அருமை.
    தங்களின் தெளிவான பதில்கள் எங்கள் சிந்தையை தெளிய வைத்தது.

  2. இந்த பதிவு என்னுடைய குழப்பங்களை தீர்ப்பதாக இருக்கிறது . இருப்பினும் சில கேள்விகள் மனதில் உள்ளன . சரணாகதி மட்டுமே முழு ஈடுபாடு தருகிறது . சில போதனைகளில் நமக்கு உடன்பாடு இல்லை என்றால் மனம் சரணாகதியை அடைய ஈடுபாடு காட்ட முடியவில்லை . இது என்னுடைய மனம் சம்பந்த பட்டதா ? அல்லது எனக்கு இன்னும் அதற்கான நேரமோ அல்லது பக்குவமோ வரவில்லையா ? நேரம் இருந்தால் பதில் தரவும். பதிவுக்கு நன்றி .

    1. முக்திக்கு வழியை ஒவ்வொரு குருவும் ஒரு விதமாக காட்டுவார்கள். யார் கூறும் வழியை உங்களால் ஏற்றுக்கொள்ளமுடிகிறதோ அந்த குருவைப் பின்பற்றவும். இதில் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ளவேண்டும். சிலர் சில குருக்களை விளம்பரப் பொருளாக்கி பணம் செய்ய துடிக்கிறார்கள். உ.ம். தற்போது எங்கு பார்த்தாலும் ஷீரடி சாய்பாபா கோவில்கள் புற்றீசல் போல முளைத்துவிட்டன. அதற்கு ஒரே காரணம் வணிக நோக்கம் தான். சாய்பாபா கூறியதாக பல விஷயங்களை அங்கு எழுதிவைத்து மக்களுக்கு உபதேசித்து ஏமாற்றுகின்றனர். சாய்பாபாவின் உண்மையான உபதேசங்கள் ‘ஸ்ரீ சாயி சத்சரிதம்’ உள்ளிட்ட சில நூல்களில் மட்டுமே இருக்கின்றன. எனவே நமது அறிவைப் பயன்படுத்தி நமது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ளவேண்டும்.

  3. எனக்கும் இந்த குழப்பம் இருந்தது. இப்போது அதற்கு சரியான தீர்வு கிடைத்து விட்டது. தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி திரு. சுந்தர் அவர்களே.

  4. Dear Sundar

    Good morning. Given article answers many doubts which might have been raised in many of us.

    Thanks for very good article on the right day (Guru varam).

    KK- Navi Mumbai

  5. வாழ்க வளமுடன்

    தெளிவு குருவின் திருமேனி காண்டல்

    தெளிவு குருவின் திரு நாமம் செப்பல்

    தெளிவு குருவின் திரு வார்த்தை கேட்டல்

    தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே

    குரு ஒரு கண்ணாடி

    நன்றி

  6. சுந்தர் அண்ணா..

    குருவே சரணம்.

    இந்த பதிவின் மூலம் குரு பற்றி மேலும்
    தெரிந்து கொண்டேன்.

    குருவே துணை.

    மிக்க நன்றி…

  7. வணக்கம் சுந்தர். நல்ல கட்டுரை, அழகான படங்கள் அருமையான விளக்கம்.ஓம் சாய் ராம் ,ஸ்ரீ சாயி ராம், ஸ்ரீ சாயி ராம் .பள்ளத்தை நோக்கி பாயும் தண்ணீர் போல யாரிடம் மனம் அதிகமாக ஈடுபடுகிறதோ அவரை வணங்குவது முறை. நன்றி அனைவரையும் ஒரே படத்தில் தரிசிக்க தந்தற்கு.

  8. சுந்தர்ஜி
    குருமகிமை தொடரில் இந்த தொடர் ஒரு மைல்கல் எனலாம். ஏன் என்றால் குருவின் அவசியத்தை உணர்ந்த பின் தான் குருவின் மகிமைகளை படிக்கவும் அதனை உணர்ந்து நடக்கவும் முடியும். குரு வாரத்தில் வந்துள்ள இந்த பதிவு மிகவும் எல்லோருக்கும் எப்போதும் பயன்படும் ஒரு பதிவு. நாம் தியானம் கற்றுக்கொள்ள வாழும் ஒரு குருவிடம் நாடி, அவரே சத்குரு என்று நம்பி, பிறகு திருப்தியின்றி நம் தளம் மூலம் ஸ்ரீ மகாபெரியவா மற்றும் ஷிர்டி சாய்பாபா அவர்களை குருவாக ஏற்று மற்ற ஏற்புடைய (ராகவேந்திரர், ராமகிருஷ்ணர்…) குருமார்களையும் வணங்கி வருகிறோம். இவர்களெல்லாம் பல்வேறு காலங்களில் வாழ்ந்து இருப்பதால் அனைவரும் (இறைவனின்) குரு வடிவம் என்பதில் எமக்கு ஐயமில்லை. இதில் எனக்கு ஒரு ஐயம். ஒரு முறை ஏற்ற குருவினை மாற்றுவது பாவம் அல்லது குரு துரோகம் என்று சொல்கிறார்கள் . ஆனால் யாரிடம் நிம்மதி வருகிறதோ அவர் தான் குரு என்றால், பல பேரிடம் சென்றபிறகு இன்னவர் தான் என்று தெரிந்து மாறினால் பாவமா? தெளிவு படுத்தவும் !!

    1. உங்கள் கேள்விக்கான பதிலை ஒரு பதிவாக அளித்தால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.

      இருப்பினும் நீங்கள் கேட்டீர்கள் என்பதால் சுருக்கமாக ஒன்று கூறுகிறேன். அவரவர் ஆன்ம நிலைக்கும் பக்குவத்திற்கும் ஏற்ப குருமார்கள் சில சமயம் மாறுவதுண்டு. அதை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. அதற்காக குருவை மாற்றிக்கொண்டே இருக்கவேண்டும் என்கிற அவசியமும் இல்லை.

      ஆதிசங்கரரின் குரு கோவிந்த பகவத் பாதர். காசிக்கு ஆதிசங்கரர் செல்லும்போது, ஒரு சண்டாளன் (சிவபெருமான்) நாயுடன் குறுக்கே வர, இவர் “எட்டி நில்” என்பார். அதற்கு சண்டாளன், “எதை எதனிடமிருந்து விலகச் சொல்கிறீர்கள்? ஆத்மாவுக்குள் பேதமுண்டா?” என்று பல்வேறு கேள்விகளை எழுப்புவான். இறுதியில் அவனிடம் ஞானம் பெறும் சங்கரர் அவன் கால்களில் வீழ்ந்து “உங்களையே என் சற்குருவாக ஏற்கிறேன்” என்பார். அப்படியானால் அவர் வேதவியாசருக்கும் கோவிந்த பகவத்பாதாளுக்கும் துரோகம் செய்வதாக அர்த்தமா? நீங்களே பதில் சொல்லுங்களேன்…!

      1. தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி! குருவே சரணம்!! குருவருளால் இதை படிப்போர் அனைவரும் வாழ்க!!

  9. மிகவும் அருமையான விளக்கம் குருவை பற்றி.
    ஒவ்வோர் மனதிலும் இந்த கேள்விகள் கண்டிப்பாக இருந்திருக்கும் . தகுந்த விளக்கம் அளித்ததற்கு நன்றிகள் பல.

    நாம் குருவை வழிகாட்டியாக அமைத்துக் கொண்டால் துன்பங்கள் மற்றும் கவலைகள் என்னும் கடலை மிகவும் எளிதாக கடந்து விடலாம். கடலையும், வானையும் கடப்பத்தற்கு மாலுமி எப்படி தேவையோ, நம் வாழ்கை என்னும் கடலை கடப்பதற்கு குரு அவசியம் தேவை

    குருவே சரணம்

    நன்றி
    உமா வெங்கட்

  10. வணக்கம் சுந்தர் சார்

    யாரே குருவாக ஏற்றாலும் அவர்கள் பாதமே சரணகேதி என்றும் அடையும் போது தெளிவான பாதை கிடைக்கும்

    மிகவும் தெளிவான அருமையான பதிவு

    நன்றி

  11. திரு சுந்தர் அவர்களுக்கு வணக்கம்,
    என்னுடைய பல நாள் கேள்விக்கு விரிவான பதிலாக உள்ளது இந்த பதிவு நன்றி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *