Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, March 2, 2024
Please specify the group
Home > Featured > கிளிகளின் தந்தைக்கு ஒரு சிறிய கௌரவம்!

கிளிகளின் தந்தைக்கு ஒரு சிறிய கௌரவம்!

print
சென்னை ராயப்பேட்டையில் தனது வீட்டு மாடியில் தினசரி ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு உணவளித்து வரும் கிளிகளின் தந்தை, பசுமைக் காவலர் திரு.காமிரா சேகர் அவர்களை பற்றிய அறிமுகம் நம் வாசகர்களுக்கு தேவையில்லை. நமது ரைட்மந்த்ரா விருதுகள் விழாவில் ‘வள்ளலார் விருது’ பெற்றவர் இவர். பறவைகள் நல ஆர்வலர். சிறந்த சமூக சேவகர்.

Parrots Sekar sir

ரைட்மந்த்ராவுக்கென அலுவலகம் திறந்ததிலிருந்தே திரு.சேகர் அவர்களை அலுவலகத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்து வந்தோம். நம் அழைப்பை ஏற்று நேற்று மாலை நமது அலுவலகத்துக்கு வந்திருந்தார்.

நமது அலுவலகத்துக்கு வந்த அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்து நமது தளத்தின் சார்பாக ஒரு தொகையை காசோலை மூலம் அளித்தோம். (இது நாம் அடிக்கடி செய்து வருவது தான்.).

நாம் திருக்குறள் நூலை பரிசளிக்க திட்டமிட்டிருந்தோம். அது ஸ்டாக் இல்லை.

Rightmantra Award
சேகர் அவர்கள் ரைட்மந்த்ரா விருது பெறும்போது

Parrots Sekar sir 2சேகர் அவர்களுடன் நாம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பேசுவதுண்டு. அவருக்கு MORAL SUPPORT கொடுக்க நாம் இருக்கிறோம் என்பதை உணர்த்திக்கொண்டே இருப்போம். பேசும்போது பல நெகிழ்ச்சியான சம்பவங்களை குறிப்பிடுவார்.

With Sekar sir 3
ரைட்மந்த்ரா அலுவலகத்துக்கு திரு.சேகர் அவர்கள் வந்தபோது….

நேற்றைக்கு பேசும்போது அவர் கூறியதாவது : “நீண்ட நாட்களாக யாரோ ஒருவர் மாதம் ஒருமுறை ஒரு பெரிய பை நிறைய அரிசியை கீழே எங்கள் படி அருகே வைத்துவிட்டுப் போவார். யார் அப்படி வைப்பது எங்கிருந்து வருகிறார்கள் என்ற விபரம் எதுவும் தெரியாது. கடைசியில் ஒரு நாள் பார்த்தேன். ஒரு வயதான பெரியவர். பார்க்க ஏதோ கோவில் குருக்கள் போல இருந்தார்… அவரது தோற்றத்தை பார்த்தால் வசதியானவர் போல தெரியவில்லை. சைக்கிளில் வந்தார். வந்தவர் தான் கொண்டு வந்திருந்த அரிசி பையை கீழே வாசப்படி அருகே வைத்துவிட்டு, வானத்தை நோக்கி ஒரு நமஸ்காரம் செய்தார். சில வினாடிகள் தான். அப்படியே கண் மூடி நின்றார். பிறகு உடனே கிளம்பிவிட்டார். அடுத்தமுறை அவர் பையை வைக்கும்போது வெளியே எங்கிருந்தோ சென்ற நான் திரும்ப வந்துவிட்டேன். என்னை பார்த்தவுடன் லேசாக ஒரு புன்னகை மட்டும் சிந்திவிட்டு போய்விட்டார். அவர் எந்த மாதிரி அரிசி கொடுக்கிறார் அது எத்தனை கிலோ எத்தனை நாளைக்கு ஒரு முறை என்றெல்லாம் நான் கவலைப்படவில்லை. எனக்கு உதவவேண்டும். கிளிகளுக்கு உணவளிக்கவேண்டும் என்கிற அந்த எண்ணத்தை மட்டுமே நான் பார்க்கிறேன். மனமுவந்து ஒரு பிடி அரிசி கொடுத்தால் கூட அது ஒரு மூட்டை அரிசிக்கு சமம் தான். இந்த கிளிங்களால ஒரே தொல்லைப்பா என்று அலுத்துகொள்கிறவர்களுக்கு நடுவே இப்படியும் சில ஆன்மாக்கள் இருப்பது ஆச்சரியம் தான்!” என்றார்.

“நிச்சயம் சார்… உதவவேண்டும் என்கிற சிந்தனை உள்ளவர்கள் எந்த சூழ்நிலையிலும் உதவுவார்கள்!” என்றோம்.

With Sekar sir 2

கிளிகளுக்கு தினசரி உணவளிப்பதில் உள்ள சிரமங்களை அவர் பட்டியலிட்ட போது நெஞ்சம் கனத்தது. இவரல்லவா நிஜ ஹீரோ என்று தோன்றியது.

ஒரு விஷயத்தை அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும். கிளிகளுக்கு தினமும் உணவு படைக்கவேண்டும் என்பதால் இவருக்கு ஞாயிற்றுக் கிழமையோ விடுமுறை என்பதோ கிடையாது. மேலும் தினமும் இரண்டு வேளை கிட்டத்தட்ட 5 மணிநேரங்கள் இவர் இவற்றுக்கு உணவு வைக்கவே செலவிடுகிறார்.

சமீபத்தில் தனக்கு ஏற்பட்ட சோதனை பற்றி திரு.சேகர் அவர்கள் குறிப்பிடும்போது….

இவரது வீட்டுக்கு முன்பாக பக்கத்துக்கு வீட்டுக்கு லைன் கொடுக்கவேண்டி, மின்சார வாரியத்தினர் ஒரு பெரிய பள்ளத்தை ரோட்டின் குறுக்கே தோண்டிவிட்டனர். பணிமுடித்த பின்னர் அதை சரியாக மூடாமல் அப்படியே மண்ணை போட்டுவிட்டு சென்றுவிட்டனர். ஒரே நாளில் மண் இறங்கி பெரிய GAP ஏற்பட்டுவிட்டது. விளைவு, வாகனங்கள் செல்லும்போது குறிப்பாக கனரக வாகனங்கள் செல்லும்போது ஏற்படும் அதிர்விலும் டங் டங் என்கிற அந்த பகுதியே அதிரும் அளவிற்கு ஓசை எழுகிறது. மனிதர்களுக்கு வேண்டுமானால் இது பழகியிருக்கலாம். ஆனால் கிளிகள் ? அவை மிகவும் டிஸ்டர்ப் ஆகின்றனவாம். அவை உணவு உண்ண வரும் நேரத்தில் இது போன்ற சத்தம் எழுவதால் அவை சரியாக உணவு உண்ணாமல் தவிக்கின்றனவாம்.

மேலும் அந்தப் பகுதி முழுக்க குறுக்கே நெடுக்கே போகும் வயர்கள் கேபிள்கள் என அனைத்திலும் கிளிகள் அமர்ந்திருக்கும். இந்த டங் டங் சத்தத்தால் அவை அங்கே தற்போது அமர்வதில்லை.

கிளிகளை அச்சுறுத்தும் சாலைப் பள்ளம்
கிளிகளை அச்சுறுத்தும் சாலைப் பள்ளம்

இது பற்றி கவுன்சிலர், எம்.எல்.ஏ., மேயர் என யாரோ யாருக்கோ இவர் புகார் அளித்தும் நோ யூஸ். கடைசீயில் இவரே ரூ.2000/- செலவு செய்து கான்க்ரெட் பாக்கிங் செய்து போட்டால், அதுவும் இரண்டு நாட்களில் இறங்கிவிட்டதாம். (இதெல்லாம் கார்ப்பரேஷன் செய்யவேண்டிய வேலை.).

Parrot royapettah

இது போன்று சாலைகளின் குறுக்கே பள்ளம் வெட்டுவதே சட்டப்படி தவறு. அதற்கு அனுமதி பெற 1008 பார்மாலிட்டிகள் இருக்கின்றன. அப்படியிருக்கும் போது இது எவ்வாறு வெட்டப்பட்டது? வெட்டியும் சரியாக அதை ரிப்பேர் செய்யாமல் சம்பந்தப்பட்டவர்கள் போனது எப்படி?

எப்படியோ ஆறறிவு மிருகங்களின் அலட்சியத்தினால் சின்னஞ்சிறு பறவைகளான கிளிகள் சரியாக உணவு உண்ண முடியாமல் தவிக்கின்றன.

கிளிகளே பார்ப்பதற்கு அரிதான ஒரு பறவையாகிவிட்ட நிலையில் அதுவும் சென்னை போன்ற ஒரு நகரத்தில் இவர் தனது அருந்தொண்டை எந்தவித அரசாங்க உதவியும் இன்றி செய்துவருகிறார். இவருக்கு அரசு தேவையான உதவிகளை செய்து இவரது தொண்டு தொல்லையின்றி தொடர உதவவேண்டும்.

============================================================

Also check :

ஆயிரக்கணக்கான கிளிகளின் காட்ஃபாதரின்  குமுறலை கொஞ்சம் கேளுங்கள்!

ஆயிரக்கணக்கில் படையெடுக்கும் கிளிகள் – சென்னையில் ஒரு அதிசயம்! DIRECT PICTORIAL REPORT!

இறைவனின் படைப்பும் மனிதனின் புத்தியும் – மனம் விட்டு பேசலாமா? (1)

பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா எம் தலைவா…

===============================================================

[END]

8 thoughts on “கிளிகளின் தந்தைக்கு ஒரு சிறிய கௌரவம்!

 1. நம் ஆண்டு விழாவில் திரு சேகர் அவர்களுக்கு வள்ளலார் விருது கொடுத்து கௌரவித்தது மிகவும் பொருத்தமானது. வள்ளலார் வாடிய பயிரைக் கண்டபோது வாடினார். இவர் கிளிகளுக்காக தனது வாழ்கையையே தியாகம் செய்தவர். அவரின் தியாக உணர்விற்கு நான் தலை வணங்குகிறேன். அவர் கிளிகளுக்கு உணவு அளிப்பதில் உள்ள கஷ்டங்களைப் படிக்க படிக்க மனதிற்கு மிகவும் வருத்தமாக உள்ளது .

  மாதம் ஒரு முறை கிளிக்காகளுக்காக அரிசி கொடுக்கும் தயாள குணத்தை நாம் போற்றுவோம் . நம் அலுவலகத்தில் அவருக்கு பொன்னாடை போத்தி கௌரவித்ததில் மிக்க மிகிழ்ச்சி . நம் அலுவலகம் பார்க்க லக்ஷ்மி கடாக்ஷ மாக உள்ளது

  எது எதற்கோ free கொடுக்கும் நமது அரசாங்கம், பட்ஜெட்டில் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் பாதுகாப்பதற்கு ஒரு தொகையை ஒதுக்கினால் மிகவும் உபயோகமுள்ளதாக இருக்கும் .

  நன்றி
  உமா வெங்கட்

 2. வணக்கம் சுந்தர். கிளியை கையில் வைத்து இருக்கும் அன்னை மீனாக்ஷி தான் இதற்கு ஒரு வழி காட்டவேண்டும் .நல்லது செய்பவர்கள்கு உதவி கிடைப்பது கடினம் என்பது தெரிந்ததுதான் . அரசாங்கத்தில் இருந்து உதவி கிடைக்கும் என்ன நம்புவோம் . நன்றி .

 3. Namaskaram Shri Sundar Sir

  Shri Sekar Sir was an unsung hero, but no more he is an unsung hero.
  Thank you so much for introducing Shri Sekar Swamin to us.
  Even though our government is blind to recognise such selfless unsung hero, Shri Sekhar Sir, our Right Mantra was not only quick in recognizing him, introducing him to the readers of Right Mantra,but it is quick in honouring him with awards and other recognitions.

  My namaskaram to Shri Sekar Swamin
  Cheers
  Sakuntala

 4. யாரைக் குற்றம் சொல்வது. அலட்சிய அதிகாரிகளையா இல்லை எல்லாவற்றையும் கண்டும் காணாமல் இருக்கும் நம் மக்களையா?. என்று மாறுவோம் நாம் !

  கோபத்துடனும், இயலாமையுடனும்

  விஜய் ஆனந்த்

 5. வணக்கம் சுந்தர் சார்

  கிளிகளின் தந்தைக்கு அருமையான பரிசு சார்

  நன்றி

 6. பச்சை கிளிகளை பார்ப்பதே பரவசம்தான்.
  நமது தளத்தின் வள்ளலார் விருது நாயகன் திரு சேகர் அவர்களை தாங்கள் அவ்வப்போது support செய்து வருவது போற்றத்தக்கது.

  நமது அரசாங்கத்திற்கு விவஸ்தையே இல்லையா.
  திரு.சேகர் அவர்களுக்கு உதவி செய்ய மனம்
  இல்லையன்றாலும், உபத்திரம் செய்யாமல் இருக்கலாமே. .
  ஹிந்தி தெரிந்த வாசகர்கள் யாரேனும் இக்கட்டுரையை ஹிந்தியில் மொழிபெயர்த்து திருமதி மேனகா காந்தி அவர்களுக்கு அனுப்பினாலாவது, விமோச்சனம்
  வருகிறதா என்று பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *