Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, May 18, 2024
Please specify the group
Home > Featured > “என்ன தாமஸ், பையன் கிடைச்சுட்டானா?” – குரு தரிசனம் (29)

“என்ன தாமஸ், பையன் கிடைச்சுட்டானா?” – குரு தரிசனம் (29)

print
கா பெரியவரிடம் வேதம் படித்த பெருமையையுடைய அவரது மாணவர் திரு.நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகளை அவரது வீட்டில் சென்று சந்தித்து, கௌரவித்து நம் தளத்திற்காக பேட்டி எடுத்த நிகழ்வை சென்ற வாரம் விளக்கியிருந்தோம்.

திரு.சாஸ்திரிகள் அப்போது மகா பெரியவா புரிந்த அற்புதங்கள் குறித்து கூறிய நிகழ்வு ஒன்றை இதோ இங்கே தந்திருக்கிறோம்.

Maha Periyava sitting with thandaகுருவின் தரிசனம், சிவபூஜைக்கு உதவி!

80 களின் தொடக்கத்தில் நடந்த சம்பவம் இது. காஞ்சியில் அப்போது திரு.தாமஸ் என்பவர் காவல்துறை கண்காணிப்பாளராக (DISTRICT POLICE SUPERINTENDENT) பணியாற்றிவந்தார். மடத்துக்கு அவர் மிகவும் நெருக்கம். மகா பெரியவா மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தார் அவர். அடிக்கடி பெரியவாளை வந்து தரிசித்துவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அவரது ஒரே மகன், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்துவிட, தந்தை மீதிருந்த பயத்திலும் விரக்தியிலும் வீட்டை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் எங்கோ சென்றுவிட்டான். எத்தனை தேடியும் பையன் கிடைக்கவில்லை. காவல்துறை உயர் அதிகாரி என்பதால் விஷயம் வெளியே கசியாமல் தேடவேண்டியிருந்தது. மாதங்கள் தான் உருண்டோடியதே தவிர மகன் எங்கேயிருக்கிறான் என்கிற தகவலே தெரியவில்லை. இதனிடையே தாமஸ் அவர்களின் மனைவியின் உடல்நலமும் இதனால் பாதிக்கப்பட்டது.

Neelakkal Ramachandhira Sasthirigal 3பிள்ளையை தேடும் அத்தனை முயற்சிகளும் தோற்றுவிட, எதற்கும் மகா பெரியவரை ஒருமுறை பார்த்து விஷயத்தை சொல்லி அவரது ஆசியை பெற்று வருவோம் என்று கருதி, மடத்துக்கு மகா பெரியவரை தரிசிக்க சென்றார்.

அவர் சென்ற தினத்தில் மடத்தில் எக்கச்சக்க கூட்டம். பெரியவாவை தரிசிக்க மிகப் பெரிய கியூ நின்றுகொண்டிருந்தது. இவர் பக்தர்களோடு பக்தராக வரிசையில் நின்றார்.

பெரியவாளிடம் என்ன சொல்லவேண்டும் என்று மனதுக்குள் திட்டமிட்டுக்கொண்டார். இவர் முறை வந்தது.

“என்னப்பா தாமஸ் எப்படியிருக்கே? நானே உன்கிட்டே பேசணும்னு நினைச்சிண்டிருந்தேன்”

“சொல்லுங்க சுவாமி”

“எனக்கு ஒரு உபகாரம் பண்ணு…. ஊருக்கு ஒதுக்குபுறம் ஒரு சர்ச் இருக்கு. அந்த சர்ச் பக்கத்துல ஒரு இடத்துல சிவலிங்கம் ஒன்னு இருக்கு. ஆனா அந்த இடத்தை யாரோ நாத்திகம் பேசறவா ஆக்கிரமிச்சி வெச்சிண்டு யாரையும் அந்தப் பக்க விடமாட்டேங்குறான்னு தெரியுறது. சிவலிங்கம் பூஜை பண்ணப்படாம இருக்கக்கூடாது. நீ கொஞ்சம் முயற்சி பண்ணி, அவா கிட்டே பேசி, அந்த லிங்கத்தை தினமும் ரெண்டு வேளை பூஜை பண்றதுக்கு மட்டும் வழி ஏற்படுத்திக்கொடுக்கச் சொல்லு. அது போதும். மடத்துல இருந்து நான் தினமும் ஒருத்தரை அனுப்பி அந்த லிங்கத்துக்கு பூஜை ஏற்பாடு செய்றேன். செய்வியா?” என்று கேட்டு உடனே இவர் புறப்படுவதற்கு உத்தரவு கொடுத்துவிட்டார்.

பெரியவா உத்தரவு கொடுத்துவிட்டால் உடனே அங்கிருந்து அகன்றுவிடவேண்டும். எனவே இவருக்கு அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை.

நாம் எதற்காக வந்தோமோ அதை பெரியவரிடம் சொல்ல முடியவில்லையே என்று எண்ணி வருந்தியவர், சரி முதலில் பெரியவர் சொன்ன வேலையை முடிப்போம். அதற்கு பிறகு அவரை பார்க்க வருவோம். அப்பொழுது சொல்லிக்கொள்ளலாம் என்று கருதி பெரியவா குறிப்பிட்ட அந்த இடத்திற்கு சென்றார்.

அந்த உள்ளூர் நாத்திகப் பிரமுகரிடம் அனைத்தையும் விளக்கி, சிவனை பூஜை செய்வதற்கு மட்டும் ஒரு சிறிய வழி ஏற்படுத்திக்கொடுத்தால் போதும் என்று கேட்டுக்கொண்டார்.

தன்னிடம் கேட்பது மிகப் பெரிய காவல்துறை உயரதிகாரி, அவர் தயவு எதிர்காலத்தில் ஆத்திர அவசரம் என்றால் தேவைப்படும் என்பதால் அவருக்கு மறுப்பு சொல்ல முடியாமல் அந்த நாத்திகப் பிரமுகர் அதற்கு ஒப்புக்கொண்டும், “நாளைக்கே நீங்க சொல்ற வேலையை முடிச்சிடுறேன் சார். அவங்க இனிமே டெய்லி வந்து பூஜை பண்ணிட்டு போகலாம்!” என்றார்.

பெரியவா தனக்கிட்ட பணியை வெற்றிகரமாக முடித்த திருப்தியுடன் வீட்டுக்கு திரும்பினார் தாமஸ்.

Neelakkal Ramachandhira Sasthirigal

வீட்டுக்கு திரும்பினால் அங்கே அவர் கண்ட காட்சி அவரை ஒரு நிமிடம் திடுக்கிடச் செய்தது. எந்த மகனை ஒரு பெரிய போலீஸ் பட்டாளத்தையே இறக்கி மாதக்கணக்கில் தேடிக்கொண்டிருந்தாரோ அந்த மகன் அவர் வீட்டில் சோபாவில் உட்கார்ந்துகொண்டிருந்தான்.

ஓடிச்சென்று மகனை வாரியணைத்தவர், கண்ணீர் சொறிந்தார்.

மகா பெரியவரின் தீர்க்க தரிசனத்தையும், சொல்லாமலே மனதில் இருக்கும் குறைகளை அறிந்து அவற்றை களையும் கருணையையும் எண்ணி எண்ணி வியந்தார் தாமஸ்.

அடுத்த நாள் திரு.தாமஸ் பெரியவாவிடம் நடந்ததை கூறி நன்றி தெரிவித்துவிட்டு வரச் சென்றார். தாமஸை  பார்த்தது தான் தாமதம், “என்ன தாமஸ் பையன் கிடைச்சுட்டானா?” என்றது அந்த தெய்வம்  சிரித்துக்கொண்டே.

காஞ்சிக்கு வெளியே இப்போது அந்த சர்ச்சுக்கு பக்கத்தில் அந்த சிறிய சிவன் கோவில் இருக்கிறது.

தாமஸ் அவர்கள் தற்போது ஒய்வுபெற்று செகந்திராபாத்தில் குடும்பத்துடன் வசிப்பதாக தகவல்.

=====================================================================

இன்று முதல் ஆரம்பம்! பஜகோவிந்தத்தை அனுபவிக்க வாருங்கள்!

Baja Govindam

இருவினை தீர்க்க ஓர் அரிய வாய்ப்பு. ‘பகவன்நாம போதேந்திராள்’ நாடகத்தின் பிராமாண்ட வெற்றியை தொடர்ந்து ஷண்மதங்களை ஸ்தாபித்த நமது ஆச்சாரியாள் ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நாடகம் மஹாலக்ஷ்மி பெண்கள் நாடகக்குழுவினரால் அரங்கேற்றப்படவிருக்கிறது.

நாள் : ஏப்ரல் 2 – 7, 2015  நேரம் : மாலை 7.00 மணி.

அனுமதி இலவசம் அனைவரும் வருக!

=====================================================================

Rightmantra.com is running full-time. Give us your hand. Help us to serve you better – Join our ‘Voluntary Subscription’ scheme. Also ask your near and dear ones to join. 

நமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா?

=====================================================================

Earlies articles on Maha Periyava in Guru Darisanam series…

“மகா பெரியவா நாவினின்று வருவது வார்த்தைகள் அல்ல. சத்திய வாக்கு!” – குரு தரிசனம் (28)

ஒரு ஏழை கனபாடிகளும் அவர் செய்த பாகவத உபன்யாசமும் – குரு தரிசனம் (27)

மகா பெரியவா அனுப்பிய உதவித் தொகை; ஒளிபெற்ற அர்ச்சகர்கள் வாழ்வு! – குரு தரிசனம் (26)

பெரியவா பிரசாதம்னா சும்மாவா? ஆப்பிள் செய்த அற்புதம்! – குரு தரிசனம் (25)

இது உங்களுக்கே நியாயமா சுவாமி? – குரு தரிசனம் (24)

குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….

http://rightmantra.com/?cat=126

=====================================================================

Articles about Yogi Ramsurath Kumar, Gnananda Giri Swamigal, Seshadri Swamigal, Thirumuruga Kripananda Variyar and other Gurus in Rightmantra.com

மனித முயற்சி + குருவருள் = திருவருள்! (ஞானானந்தம்-2)

ஆனந்தத்தை அள்ளித் தரும் குருவின் மகாத்மியங்கள் – (ஞானானந்தம்-1)

நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!! 

“மூன்று முறை அழைத்தால் போதும், இந்தப் பிச்சைக்காரன் ஓடி வந்து உதவி செய்வான்!” – யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி SPL

“எதற்கும் கவலைப்படாதே. உன்னுடைய மேலதிகாரியால் உனக்கு எந்த விதத் தொந்தரவும் ஏற்படாது!”

காங்கேயநல்லூர் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் – ஒரு திவ்ய தரிசனம்!

தீராத வினைகளை தீர்க்கும் நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் – A must visit place!

பித்தனாகியும் பரமனைப் பாடிய ஸ்ரீ அப்பைய தீட்சிதர் திவ்ய சரிதம் + அதிஷ்டான தரிசனம்!

ராம நாம மகிமை & போதேந்திராள் வாழ்க்கை வரலாற்று நாடகம்! ஒரு நேரடி அனுபவம்!!

குரு அடித்தாலும் அணைத்தாலும் அது கருணை தானே? – ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் லீலை!!

காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!

=====================================================================

Articles on Ramana Maharishi

பிள்ளையார் பழமும் அதீத சிற்றம்பலமும் – இது ரமண திருவிளையாடல்!

ரமண திருவிளையாடற் திரட்டில் கண்ட முத்துக்கள் மூன்று!

பிராப்தம் & ஆஞ்ஞை = ரமண விளையாட்டு!

=====================================================================

Articles about Sri Ragavendhra Swamigal in Rightmantra.com

முதல் மாணவன், முதல் வேலை, முதல் சம்பளம்…!! – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (6)

புதுவை பிருந்தாவனத்தில் காட்சி தந்த ராகவேந்திரர் – உண்மை சம்பவம் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (5)

பட்ட மரம் துளிர்த்தது; வேத சக்தி புரிந்தது – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 4

கேட்பதை தருவார், கேட்டதும் தருவார் குருராஜர் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 3

“அழைத்தால் போதும் அடுத்த கணமே நினைத்தது நடக்கும்!” – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 2

திருவருளும் குருவருளும் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (1)

குருராஜர் இருக்க கவலை எதற்கு? நெகிழ்ச்சியூட்டும் நிஜ அனுபவங்கள்!

நம் தளத்திற்கு கிடைத்த ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பரிபூரண ஆசி! எங்கே… எப்படி?

ஆங்கில கவர்னருக்கு ராகவேந்திரர் காட்சியளித்த அற்புதம் – கஜெட் ஆதாரத்துடன்!

யாருக்கு தேவை தண்ணீர்?

உச்சரிப்பை விட உன்னத பக்தியே சிறந்தது!

இறைவா… பிறர் நிறைவில் பெருமிதமே தினம் காணும் குணம் வேண்டும்!

எது வந்த போதும் துணை நீயே குருராஜா – உண்மை சம்பவம்

முக்காலமும் நீ அறிவாய் குருராஜா – நம் தள வாசகரிடம் ஸ்ரீ ராகவேந்திரர் நிகழ்த்திய அற்புதம்!

‘ஸ்ரீ ராகவேந்திர தரிசனம்’ தொடர் அடுத்த வாரம் முதல் தொடர்ந்து  இடம்பெறும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

=====================================================================

[END]

10 thoughts on ““என்ன தாமஸ், பையன் கிடைச்சுட்டானா?” – குரு தரிசனம் (29)

 1. மஹா பெரியவாள் கருணையின் ஊற்று…அவரை பற்றி பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே ..ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

 2. காஞ்சிபுரம் சென்றால் மகா பெரியவாவின் கடைக்கண் பார்வை பெற்ற அந்த சிவன் கோவிலையும் தரிசனம் செய்வோம் .

  மகா பெரியவா சரணம் ….

  பஜகோவிந்தத்தையும் கண்டுகளித்து ஆனந்த சாகரத்தில் மூழ்குவோம். திருமதி பாம்பே ஞானம் அவர்களுக்கும் மகா லக்ஷ்மி குழுவினருக்கும் குரு அருளோடு பஜகோவிந்தம் 100 எபிசோடுகளை தாண்ட வாழ்த்துக்கள்

  நன்றி
  உமா வெங்கட்

 3. சுந்தர் அண்ணா..

  காலை முதல் எதிர்பார்த்து காத்திருந்தேன். பதிவை படித்த பின்பு, குரு தரிசனம் கிடைத்து விட்டது.

  குருவே சரணம்.

  மிக்க நன்றி அண்ணா..

 4. ஒவ்வரு வாரமும் குரு தரிசனம் நமக்கு பாவ விமொசனமாக அமைகிறது. திங்கள் MONDAY SPECIAL . குரு வாரம் குருதரிசனம் என
  அளவிடமுடியாத பதிப்புகள். மெழுகுவர்த்தி தன்னை உருகுவதுபோல்
  நம் ஆசிரியர் திரு சுந்தர்ஜி நமக்க தேடி தேடி பதிவை தானே ஓடி சென்று உண்மையான நிகழ்சிகள் , காலத்தில் அழியாத கல்வெட்டுகள்
  கோவில்கள், தலைவர்கள், ரோல் மடல், ஆன்மிக மகான்கள், என பல்வேறு பதிவுகள் நமக்காக வழங்கி வருகிறார். அவரை ஊக்க படுத்துவோம்

 5. வாழ்க வளமுடன்

  மாதா

  பிதா

  குரு

  தெய்வம்

  நன்றி

 6. குருவே சரணம்……….. குருவே சரணம்……….. குருவே சரணம்………..

 7. குருவின் வழி காட்டுதல் இல்லையென்றால் இல்லக்கினை அடையமுடியாது என்னைப்போன்று.இது போன்ற குருவின் திருவிளையாடல்களை கேள்விப்பட்டுள்ள நான் அனுபவித்ததில்லை.எனது தந்தை சுப்பிரமனியபிள்லை ஓர் கோவில் ஊழியர்(திருமலைக்கொவில்).தினமும் 627 படிகள் கடந்து மலையேருவார்.நொடிக்கொருமுரை ‘எம்பெருமான் முருகன்’ யென்று கூறிக்கொள்வார். நான் மனதுக்குள் யோசிப்பேன்.ஆனல் மலை போன்ற பிரச்சினைகலை தவிடுபொடியாக்கிவிடுவார்.அவர் அமரர் ஆகிவிட்டார்.எனக்கு குரு ,சாமி எல்லாம் அவர்தான்.எந்த ஒரு தடங்கல் வந்தாலும் அவரை நினைத்தால் சூரியனைக்கண்ட பனி போல் நீங்கிவிடும்.குரு யாரென்று தெரியாதவர்கள் தந்தையை குருவாக பாவித்துக்கொள்லுங்ககள்.எனது கருத்தை தளத்தில்பதிவுசெய்ய அன்னுமதித்ததற்கு நன்றி.தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.நன்றி சுந்தர் அவர்களுக்கு !

  1. மிகவும் சரி,
   தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

  2. உள்அன்போடு இறைவனை வழிபடும் அன்பர்களின் தேவைகள், கேட்காமலே நிறைவேற்றப்படும் என்பற்கு இதைவிட சிறந்த உதாரணம் உண்டோ.

   மகா பெரியவரின் அருள், மதங்களை கடந்த நிகழ்வாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *