======================================================================
ஞானிகளின் வாக்கு பொய்க்குமா? குடும்ப சிக்கலை தீர்த்து வைத்த குரு!
– திரு.எஸ்.பி.ஜெனார்த்தனன் | ‘உண்மையுடன் ஒரு வாழ்வு’
எனது தங்கை வசந்தகுமாரிக்கு 1967 இல் திரு.ராதாகிருஷ்ணனுடன் திருமணம் நடந்தது. அவளுக்கு ஜோடி சேர்ந்த கணவரை அவள் மனதிற்கு பிடிக்கவில்லை. ஒரு வருடம் மாப்பிள்ளை வீட்டில் அவளை வைத்திருந்து மனத்தை மாற்ற முயற்சி செய்து அது முடியாமல் போகவே எங்கள் வீட்டில் அவளை கொண்டு வந்து விட்டுவிட்டு போய்விட்டார்கள். நாங்கள் அடைந்த துன்பம் அளவிட முடியாதது. இது சமயம் எனது மூத்த சகோதரி மதனசுந்தரியின் கணவர் கணேச நாடார் அவர்கள் அகால மரணமடைந்து என் அக்காவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இரண்டு குழந்தைகளுடன் எங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
என் தந்தைக்கோ வியாபாரம் சரியில்லை. என் நிலையோ அதற்கும் மேல். அப்போது தான் இழப்புக்களிலிருந்து மீண்டு தலையெடுக்க நேரம். எனக்கு திருமணமாகி குழந்தை பிறந்திருந்த நேரம். இவர்களின் துன்பம் முடிவுக்கு வராதா என ஏங்கிக்கொண்டிருந்தேன். குடுமப்த்திற்கு எப்போதும் நாம் உதவியாக இருக்கவேண்டும் என்ற துடிதுடிப்பு மனதில் இருந்தது.
என் உறவினர் ஒருவர் கணவரைப் பிரிந்து வாழும் என் தங்கையை பழித்துப் பேச, எனக்குள் ஆவேசம் பொங்கி வைராக்கியமாக உருவெடுத்தது. எங்கள் ஊரான சிவகாசி பக்கம் போகும்போதெல்லாம் ஊர் பெரியவர்களுடன் பேசி, என் தங்கையை மறுபடியும் கணவருடன் சேர்த்து வைக்க முயற்சிகள் எடுத்துக்கொள்ளச் சொல்வேன். கணவரைப் பிரிந்த என் தங்கை சமூகத்தில் தனக்கு தன் குடும்பத்தினருக்கு ஏற்பட்டிருந்த கெட்ட பெயரினால் நிறைய மனம் மாறியிருந்தாள்.
என் சித்தப்பா, தூத்துக்குடி திரு.A.R.P.N. இராசமாணிக்க நாடார் ஆர்கள் எங்கள் குடும்பத்தின் மீது அக்கறை உள்ளவர். அவர் என் தாயிடம் அடிக்கடி வற்புறுத்தி, ஒரு முறை (1969இல்) ஞானானந்தா தபோவனம் அழைத்துப் போய் தவத்திரு.ஞானானந்த கிரி ஸ்வாமிகள் தபோவனத்தை தரிசிக்க செய்து குடும்ப குறைகள் அனைத்தையும் திரு.ஸ்வாமிகளிடம் முறையிட வைத்திருக்கிறார்.
திரு.ஸ்வாமி எல்லா கஷ்டங்களையும் கேட்டறிந்து, “கவலை வேண்டாம். அனைத்து கஷ்டங்களும் தீர அம்பிகையை வேண்டுவோம் என கூறியிருக்கிறார். இப்படி என் அம்மா ஒரு சாமியாரைப் போய் பார்த்து வந்தது எனக்கு துளியும் பிடிக்கவில்லை. அவர்களை பார்க்கும்போதெல்லாம் “உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?’ என்று குறைப்பட்டுக்கொள்வேன். அம்மாவோ, “பெரிய ஞானி அந்த மகான். அவர் வாயிலிருந்து வரும் எந்த வாக்கும் வீணாகாது” என்று கூறி என்னை சமாதானப்படுத்தினார்.
(என் தாய் ஸ்ரீ ஞானனந்த கிரி சுவாமியை பார்க்க தபோவனம் சென்றிருந்தபோது அது சமயம் ராம்ஜி சுவாமியையும் தரிசித்திருக்கிறார். ராம்ஜி வேறு யாருமல்ல… யோகி ராம்சுரத் குமார் தான்!)
பிரிந்து வாழ்ந்து வந்த தம்பதிகளை ஒன்று சேர்த்து என் தங்கையின் வாழ்க்கையை சரியாக செய்ய எடுத்துக்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததன.
இப்படிப்பட்ட நிலையில் இராஜமாணிக்க சித்தப்பா பெங்களூர் வந்திருந்தார். என் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்திருந்தோம் அவரை. “இந்த விவாகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு என் தங்கை வாழ்க்கையை சரி செய்து கொடுங்கள்” என்று கேட்டுக்கொண்டோம் அவரை.
இதுவரை இந்த முயற்சியில் ஈடுபடுங்கள் என்று நம் குடும்பத்தில் யாரும் என்னிடம் கேட்டுக்கொள்ளவில்லை என்பதே எனக்கு பெரிய குறையாக இருந்தது. ஞானானந்தகிரி ஸ்வாமிகள் வேறு பிரிந்தவர்கள் நிச்சயம் ஒன்று சேர்வார்கள் என்று உன் அம்மாவுக்கு வரம் கொடுத்திருக்கிறார். எனவே இதில் முழுமூச்சாக ஈடுபட்டு வசந்தகுமாரியின் வாழ்வில் வசந்தம் வீச ஏற்பாடு செய்வேன்” என்று கூறினார்.
அதன் பிறகு சித்தியை கூட்டிக்கொண்டு நாசரேத் போய், வசந்தகுமாரியை கூட்டிக்கொண்டு, “இனி அவள் கணவன் வீட்டில் தான் இருப்பாள். இங்கே திரும்ப வரமாட்டாள்” எனக் கூறி தூத்துக்குடி அழைத்துப் போய்விட்டார். மாதக் கணக்கில் பல வழிகளில் முயற்சி செய்து பிரிந்திருந்த கணவன் – மனைவியை ஒன்று சேர்த்தார். இருவரும் நல்ல முறையில் வாழ ஆரம்பித்தார்கள்.
ஒன்று சேரவே முடியாது என்று கருதிய அவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தது ஆச்சரியமாக இருந்தது. (இன்று வசந்த்குமாரிக்கு நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள்!).
அவர்கள் இருவரும் ஒன்று சேரவும், குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் ஒவ்வொன்றாக விலக ஆரம்பித்தன. என் தம்பி பிரேம்குமார், எங்கோ எர்ணாகுளத்தில் உறவினர் ஒருவரின் கடையில் வேலை பார்த்து வந்தவனை மீண்டும் சிவகாசி அழைத்து வந்து கடை வைத்துக்கொடுத்தோம். மூலைக்கு மூலை ஆளுக்கொரு திசை என்று சிதறிப் போயிருந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்தது. எனக்கும் என் தந்தைக்கும் வியாபாரம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றமடைந்தது.
என் அம்மா ஞானானந்தா கிரி ஸ்வாமிகளிடம் வாங்கிய வரம் தான் இதற்க்கெல்லாம் காரணம் என்று நான் சொல்லவும் வேண்டுமா என்ன?
======================================================================
திரு.எஸ்.பி.ஜெனார்த்தனன் அவர்கள் எழுதிய ‘உண்மையுடன் ஒரு வாழ்வு’ என்னும் நூலில் கண்ட ஒரு நிகழ்வு இது. யோகி ராம்சுரத்குமார் அவர்களுடனான தனது அனுபவங்களை நூலாசிரியர் மிக அருமையாக விவரித்திருப்பார். இந்த நூல் நமக்கு எப்படி கிடைத்தது என்பது பற்றி முந்தைய பதிவில் விவரித்திருந்தோம். (http://rightmantra.com/?p=16607)
======================================================================
மேற்படி சம்பவத்தை நாம் நம் தளத்தில் பதிவு செய்ய காரணம் இருக்கிறது. நம் வாசகர்களில் சிலரும் இது போல திருமணமாகியும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். அவர்கள் யாவரும் மறுயோசனை இன்றி உடனே திருக்கோவிலூரில் உள்ள ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகள் தபோவனம் சென்று ஸ்வாமிகளிடம் மனமுருகி பிரார்த்தித்துக்கொள்ள விரைவில் தங்கள் துணையுடன் நிச்சயம் ஒன்று சேர்வார்கள். குருவருளால் நிச்சயம் நல்லதே நடக்கும். அதன் பிறகு அதை இங்கு தெரியப்படுத்தவும்.
சில குடும்ப சிக்கல்கள் இடியாப்ப சிக்கல் போன்று இருக்கும். எங்கே தொடங்குவது எங்கே முடிப்பது என்று ஒன்றுமே புரியாது. ஆனால் குருவருள் இருந்தால் எப்பேற்பட்ட பிரச்னையும் சூரியனைக் கண்ட பனி போல மெல்ல மறைந்துவிடும் என்பதில் ஐயமில்லை.
நாம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம் என்கிற வைர வரிக்கு இணங்க, பிரச்சனை தீர்வதற்குரிய சூழலுக்கு நாமும் உழைக்கவேண்டும். மந்திரத்தில் மகிமையை எதிர்பார்க்கக் கூடாது. (எதிர்பார்க்கலாம்… தப்பில்லை. ஆனால் நமக்கு அதற்கு தகுதி இருக்கிறதா என்று நமக்கு எப்படி தெரியும்?)
விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை. கெட்டுப்போகிறவர் விட்டுக்கொடுப்பதில்லை. எனவே நாம் சற்று விட்டுக்கொடுக்கவேண்டும். கடந்த கால தவறுகளுக்கு இறைவனிடமும் சம்பந்தப்பட்டவர்களிடமும் மன்னிப்பு கேட்டு, இனி அந்த தவறுகளை செய்யமாட்டேன் என்று உறுதி மேற்கொள்ள வேண்டும். இப்படி செய்தால் நிச்சயம் உங்கள் கோரிக்கை நிறைவேறும்.
மனித முயற்சிகளும் குருவருளும் சேருமிடத்தில் திருவருளுக்கு தடையேது?
======================================================================
* இந்த தளத்தின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை பெற்றது. எனவே பதிவுகளை சுட்டி (LINK) வாயிலாக பகிர்வது வரவேற்கத்தக்கது. முகநூல் மற்றும் மின்னஞ்சலில் பகிர விரும்புகிறவர்களுக்கு அதற்குரிய வசதிகள் பதிவின் தொடக்கத்தில் தலைப்புக்கு மேலே தரப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தவும். எடுத்தாள விரும்பினால் தளத்தின் பெயரை இறுதியில் அளிக்கவேண்டும். தொடர்ந்து நல்லாதரவு தாருங்கள்! தங்கள் வருகைக்கு நன்றி!!
=====================================================================
இன்னும் நீங்கள் நம் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேரவில்லையா? நல்லவர்களை நம்பி நல்லவர்களுக்காக நடத்தபடுகிறது இந்த தளம். இந்த உலகில் நல்லதை விதைக்க, கை கொடுங்கள். இது உங்கள் கடமையல்லவா?
We are running full-time. Give us your hand. Help us to serve you better – Join our ‘Voluntary Subscription’ scheme. Also ask your near and dear ones to join.
நமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா?
=====================================================================
Also check from our archives…
ஆனந்தத்தை அள்ளித் தரும் குருவின் மகாத்மியங்கள் – (ஞானானந்தம்-1)
நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!!
காங்கேயநல்லூர் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் – ஒரு திவ்ய தரிசனம்!
தீராத வினைகளை தீர்க்கும் நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் – A must visit place!
பித்தனாகியும் பரமனைப் பாடிய ஸ்ரீ அப்பைய தீட்சிதர் திவ்ய சரிதம் + அதிஷ்டான தரிசனம்!
ராம நாம மகிமை & போதேந்திராள் வாழ்க்கை வரலாற்று நாடகம்! ஒரு நேரடி அனுபவம்!!
கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!
குரு அடித்தாலும் அணைத்தாலும் அது கருணை தானே? – ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் லீலை!!
உருகிய பக்தை… வீட்டுக்கே வந்த நடராஜர்! உண்மை சம்பவம்!! ஆங்கிலேயே கலெக்டருக்கு அருள்புரிந்த அன்னை மீனாக்ஷி! சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!
சிவபெருமான் தன் பக்தனுக்கு காட்டிய கண்ணனின் ராசலீலை (உண்மை சம்பவம்)!
வள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!
பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!
ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!
முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!
உன்னை தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம்!முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!
சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!
முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2
ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?
கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1
தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!
காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!
======================================================================
[END]
குருவின் மகிமையை படித்ததும் இன்று குரு வாரமோ என்று நினைக்கத் தோன்றியது.
குருவின் மகிமை அளப்பற்கரியது. குருவின் மகிமை பொய்யாகுமா ? திரு ஜனார்த்தன் அவர்களின் தங்கையின் வாழ்வில் ஒளி விளக்கை ஏற்றிய நம் குரு ஞானனந்தகிரிக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரங்கள் .. முந்தைய ஜென்மத்தின் நல்வினைப்பயனால் அவர்கள் குடும்பத்திற்கு குருவின் பரிபூரண ஆசி கிடைத்து இருக்கிறது
குரு இருக்க கவலை எதற்கு. நாம் சற்குருவை தியானித்து அவரிடம் சரணாகதி அடைந்து விட்டால் என்னாளும் திரு நாளே
அம்பிகையாய் காட்சி அளிக்கும் குரு அழகோ அழகு.
ஞானானந்தா ஞானானந்தா ஞானானந்தா
நன்றி
உமா வெங்கட்
இன்று காலையில்தான் இணையதளத்தில் தபோவனம் மற்றும் சுவாமிகள் பற்றி படித்தேன்.
என்னே ஒரு ஆச்சரியம். தாங்களும் அவரின் மகிமை குறித்து ஒரு ஒப்பற்ற பதிவினை தந்து உள்ளீர்.
விரைவில் குரு தரிசனம் திண்ணம்.
குருவே சரணம் .
குருவே சரணம்……….. குருவின் அருள் கிடைத்து விட்டால் திருவருள் எளிதில் கிட்டும்…………
குருவருள் கிடைத்ததால் தான் நம்மால் குருவின் மகிமைகளை அறிய முடிகிறது என்று நம்புகிறோம்…………
சுந்தர் அண்ணா..
குருவருள் கிடைத்தால் தான் திருவருள் பெற முடியும் என்பதை உணர்ந்தேன்.
குருவே சரணம்.
மிக்க நன்றி அண்ணா..
வாழ்க வளமுடன்
உருவாய் அறுவை உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
கந்தர் அநுபூதி
அருணகிரிநாதர்
நன்றி
குரு சரணம் சரணம்
வணக்கம் சுந்தர். உண்மைதான் நம் குறைகளை கேட்டு எல்லாம் சரியாகும் என்று சொன்னால் உடனே ஒரு சந்தோசம், நம்பிக்கை . மனது லேசாகிவிடும் .குருவை தேடி மக்கள் ஓடுவது அதற்காத்தான். குருவே சரணம் யோகி ராம் சுரத்குமார் , யோகி ராம் சுரத்குமார் ,யோகி ராம் சுரத்குமார் . நன்றி