Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, December 7, 2024
Please specify the group
Home > Featured > கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு!

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு!

print
ட்டினத்தார் துறவு மேற்கொண்டு ஊர் ஊராக உஞ்சவிருத்தி செய்து வாழ்ந்து வந்த காலம். (10 ஆம் நூற்றாண்டு தொடக்கம்). திருவிடைமருதூரில் அவர் தங்கியிருந்தபோது ஒரு நாள், இறைவன் மகாலிங்க சுவாமி அவர் கனவில் தோன்றி, “திருவெண்காடா, நமது திருத்தலங்கள் அனைத்தையும் சென்று தரிசித்து நம்மை பாடுவாயாக!” என்று கட்டளையிட்டார்.

திருவிடைமருதூர் மஹாலிங்கஸ்வாமி திருக்கோவில்
திருவிடைமருதூர் மஹாலிங்கஸ்வாமி திருக்கோவில்

உடனே திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் மகாலிங்கேஸ்வரரையும் அன்னை பெருநலமுலையம்மையையும் தரிசித்துவிட்டு திருத்தல யாத்திரை புறப்பட்டார். அப்படி யாத்திரை புறப்பட்டவர், பல தலங்களுக்கு சென்று இறைவனை பாடிவிட்டு ஒரு சமயம் திருவாரூருக்கு வந்து சேர்ந்தார்.  அங்கு கமலாம்பிகையையும் தியாகேசரையும் தரிசித்துவிட்டு அங்கேயே சில காலம் தங்கினார். ஒரே நாளில் திருவாரூரை பார்த்து பரவசப்பட்டுவிடமுடியுமா என்ன? அங்கேயே ஒரு மண்டபத்தில் தங்கியிருந்து திருவாரூர் தலங்களை தரிசிக்க விரும்பினார். அங்கு தங்கியிருந்த நாட்களில் வீடு வீடாக சென்று உஞ்சவிருத்தி செய்து வந்தார்.

பட்டினத்தார் மீது பேரன்பும் பக்தியும் ஏற்பட்ட 18 வயது நிரம்பிய திருவாரூர் வாழ் இளைஞன் ஒருவன் அப்போது அவருக்கு பணிவிடைகள் செய்ய ஆரம்பித்தான். பட்டினத்தாரும் அவன் அன்புக்கு கட்டுப்பட்டு அவனை தனது சீடனாக ஏற்றுகொண்டார்.

Pattinathar 1
திருவொற்றியூர் கடற்கரையில் உள்ள பட்டினத்தார் திருக்கோவில் நுழைவாயில் – தற்போதைய தோற்றம்

இந்நிலையில் அந்த இளைஞனின் வீட்டில் அவனுக்கு திருமணம் செய்துவைக்க எண்ணினார்கள். அவனோ திருமணத்தில் விருப்பம் இன்றி, தனது குருநாதருக்கு சேவை செய்வதையே பெரும் பாக்கியமாக கருதி, திருமணத்தை மறுத்து வந்தான். இதனால் கவலை கொண்ட அந்த இளைஞனின் தாயாரும், அவனுக்கு பெண் கொடுப்பதாக சொன்ன அவன் அத்தையும் பட்டினத்தாரை சந்திக்க வந்தனர்.

அவரிடம் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, “சுவாமி.. தந்தையை இழந்த இவனுக்கு காலாகாலத்தில் திருமணம் செய்துவைக்க ஆசைப்படுகிறோம். இதோ இவர்கள் அவன் சொந்த அத்தை. தனது பெண்ணையே இவனுக்கு மணமுடிக்க விரும்புகிறார். ஆனால் இவனோ திருமணத்தில் நாட்டமின்றி உங்களுக்கு தொண்டு செய்வதே வேலை என்று வாழ்ந்து வருகிறான். நீங்கள் தான் அவனுக்கு நல்வழி கூறவேண்டும்.” என்று கேட்டுக்கொண்டார்கள்.

Pattinathar 3
பட்டினத்தார் கோவில் (புனரமைக்கப்படும் முன்பு)

பட்டினத்தாருக்கு அதும் மிகவும் சங்கடமாக போய்விட்டது. தானோ ஒரு அன்னக்காவடி. இடுப்பில் துண்டு மட்டுமே கட்டிக்கொண்டு வாழ்ந்து வரும் தனக்கு தொண்டு செய்வதாக கூறிக்கொண்டு ஒருவன், இல் வாழ்க்கையை ஏற்க மறுத்தால் எதிர்காலத்தில் இந்த உலகம் நம்மை அல்லவா கண்டு ஏளனம் செய்யும் என்று கருதியவர், அந்த இளைஞனை அழைத்து, “குழந்தாய்… உன் பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்கள் ஆகியோர் சொல்வதை முதலில் கேள். அனைத்தையும் துறந்த எனக்கு யாரும் உதவிக்கு தேவையில்லை. நீ உன் அத்தை மகளையே திருமணம் செய்துகொண்டு இல்லறத்தில் ஈடுபடு. உனக்கு நிச்சயம் திருவருள் உண்டு. நீ சிறிது காலமே நமக்கு தொண்டு செய்தாலும் நாம் மிகவும் அகமகிழ்ந்தோம்.” என்றார்.

“குருவே தங்கள் விருப்பம் எதுவோ அதுவே என் விருப்பமும் கூட. உங்கள் வார்த்தையை நான் தட்டமாட்டேன். ஆனால் ஒரே ஒரு வேண்டுகோள். அதை மட்டும் நீங்கள் நிறைவேற்றி தரவேண்டும்”

“நிச்சயம்…. என்ன சொல்….”

“என் திருமணத்திற்கு தாங்கள் வருகை தந்திருந்து வாழ்த்த வேண்டும்” என்று வேண்டுகோள் வைத்தான்.

பட்டினத்தாரும் அதற்கு மிக்க மகிழ்ச்சியோடு சம்மதம் தெரிவிக்க, அடுத்த சில நாட்களில் அவனுக்கு விமரிசையாக திருமணம் நடைபெற்றது.

தனக்கு தொண்டு செய்த தொண்டனின் திருமணத்திற்கு வருகை தந்த பட்டினத்தார் மணமக்களை வாழ்த்தினார்.

சிறிது காலம் சென்றது. தம்பதிகள் இல்லறத்தில் ஈடுபட, பட்டினத்தார், திருவாரூரில் தங்கியிருந்து ஒவ்வொரு தலமாக சென்று இறைவனை வழிபாட்டு பாடி வரலானார்.

இல்லறத்தில் ஈடுபட்ட இளைஞன், ஒரு நாள் எண்ணை தேய்த்து குளித்தான். அன்று இரவு மனைவியுடன் சேர்ந்தான். (எண்ணை தேய்த்து குளிக்கும் அன்று தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்பது சாஸ்திரம். காரணம் ஜூரம் வந்துவிடும். சாஸ்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் காரணம் உள்ளது.) எண்ணை தேய்த்து குளித்த அன்று தாம்பத்தியத்தில் ஈடுபட்டதால் அந்த இளைஞனுக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டது. அடுத்த இரண்டு நாட்களில் ஜூரம் கடுமையாக சிகிச்சை பலனின்றி அந்த இளைஞன் யாரும் எதிர்பார்க்காத வகையில் மரணமடைந்தான்.

புதுமாப்பிள்ளை இறந்தது கண்டு அனைவரும் கதறி துடித்தனர். அந்த இளைஞனின் இளம் மனைவி கணவனின் காலை பிடித்துக்கொண்டு அழுது அரற்றி கொண்டிருந்தாள்.

இது எதுவும் அறியாத பட்டினத்தார், அவர்கள் இருந்த வீதியின் வழியே தற்செயலாக உஞ்சவிருத்தி செய்துவந்துகொண்டிருந்தார். பட்டினத்தாரை கண்டதும் அவ்வீதிவாசிகள் சிலர் அவரிடம் சென்று, “தங்களுக்கு பணிவிடை செய்த இளைஞன் ஜூரம் கண்டு மாண்டுவிட்டான்” என்று தெரிவித்தனர்.

அது கண்டு கலங்கிய பட்டினத்தார், அவன் வீட்டுக்கு சென்று அவன் உடலை கருணை பொங்க பார்த்து,

வடிவந்தானும் வாலிபம் மகளும் தாயும் மாமியும்
படிகொண்டாரும் ஊரிலே பழிகொண்டால் நீதியோ
குடிவந்தானும் ஏழையோ ? குயவன் தானும் கூழையோ ?
நடுநின்றானும் வீணனோ ? நகரம் சூறை ஆனதே.

மண்ணும் உருகும் மரம் உருகும் மாயை உருகும் மால்உருகும்
பெண்ணும் உருகும் ஆண் உருகும் பேதாபேத வகை உருகும்
அண்ணல் உருகும் இடத்தமர்த்த ஆத் தாள் உருகும் அரவணையான்
எண்ணி உருகும் குருநாதன் என்பால் உரைத்த ஓர் மொழியே

எனப் பாடினார்.

அடுத்த நொடி அங்கு ஒரு அதிசயம் நிகழ்ந்தது. உயிரற்று கிடந்தவன், உறக்கத்தினின்று எழுபவன் போன்று எழுந்தான்.

(கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு என்று வள்ளுவர் கூறியிருப்பதில் தான் எத்தனை எத்தனை பொருள்!!)

தன் குருநாதர் தனக்கெதிரே இருப்பதை பார்த்து பணிந்து வணங்கி நின்றான்.

இளைஞனின் உற்றார் உறவினர் மகிழ்ச்சி பெருக்கில் செய்வதறியாது சிலை போல ஸ்தம்பித்து நின்றனர். பட்டினத்தாரின் தவ வலிமையை, ஆற்றலை போற்றி வணங்கினர்.

Pattinathar 4
காதற்ற ஊசியும் வாராது காணுங் கடை வழிக்கே!

இதற்குள் விஷயம் பரவி, அந்த தெருவே இவர் இருந்த வீட்டில் கூடிவிட்டது. அனைவரும் பட்டினத்தாரின் கால்களில் வீழ்ந்து, “நீங்கள் எங்கேயும் போகக்கூடாது. இங்கேயே இருங்கள். இந்த ஊரே உங்களுக்கு ஏவல் செய்யும்” என்றனர்.

“உங்கள் அன்புக்கு நன்றி மக்களே. அடியேன் பல தலங்களில் சென்று இறைவனை பாடவேண்டியிருக்கிறது. நான் ஒரே இடத்தில்  முறையன்று” என்று பட்டினத்தார், அவர்கள் வேண்டுகோளை ஏற்க மறுத்து திருவாரூரிலிருந்து புறப்பட்டார்.

ஒரு சிவனடியாருக்கு செய்த தொண்டின் காரணமாக அந்த இளைஞனுக்கு அவனது விதியே திருத்தி எழுதப்பட்டுவிட்டது.

குருபக்திக்கு ஈடு இணை இந்த குவலயத்தில் இல்லை. சிவனடியாருக்கு செய்யும் தொண்டுக்கு இணை அண்ட சராசரத்தில் இல்லை.

இந்த பதிவில் நீங்கள் காணும் பட்டினத்தார் கோவிலின் சில புகைப்படங்கள் 2012 ஆம் ஆண்டு நாம் பட்டினத்தார் கோவிலுக்கு சென்றபோது எடுத்தது.

எந்த ஜென்மத்தில் அடியேன் செய்த புண்ணியமோ தெரியாது… காற்றுக்கு ஒதுங்கிய குப்பையாய் ஒரு நாள் திருவொற்றியூர் தியாகேசர் ஆலயத்திற்கும் பட்டினத்தடிகள் சமாதிக்கும் சென்றிருந்தோம். ஆலய தரிசனத்தின் பலனைப் பற்றி உங்களுக்கு தெரியுமே. வரவிருக்கும் வினையை மாற்றி, இருக்கும் வினையை விரட்ட வல்லது. இங்கு சென்றுவிட்டு வந்த சில மாதங்களில் ரைட்மந்த்ரா பிறந்தது. தளம் துவங்கிய பிறகு நாம் நம் தளத்தின் பதிவுக்காக எடுத்த புகைப்படங்களைப் போன்ற நேர்த்தி  தளம் துவக்குவதற்கு முன்பு நாம் எடுத்த புகைப்படங்களில் அமைந்தது உண்மையில் திருவருள் தான். (நாம் சொல்ல வருவது புரிகிறதா?)

Pattinathar Temple1

இந்தக் ஆண்டு (2015) துவக்கத்தில் இந்த கோவில் முற்றிலும் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டுவிட்டது. குடமுழுக்கு செய்யப்பட்ட ஆலயத்தின் புகைப்படங்களை பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள். COMPLETE MAKEOVER. இருப்பினும் பட்டினத்தார் கோவிலின் பழைய தோற்றம் அரியது என்பதால் இந்த பதிவில் தருகிறோம்.

பட்டினத்தாரின் வாழ்க்கையிலிருந்து மேலும் சுவாரஸ்யமான ஒரு தகவலுடன் புதிய படங்களுடன் சிறப்பு பதிவு ஒன்று விரைவில் அளிக்கப்படும்.

========================================================================

ஒவ்வொரு அங்குலத்திலும் அற்புதம்!

மனித வாழ்விற்கு தேவையான அத்தனை நீதிகளையும் ஒருங்கே போதிப்பது பட்டினத்தாரின் புனித சரிதம். இவரது சரிதத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் அற்புதங்களும் மகத்துவங்களும் பொதிந்து கிடக்கும். சிவபெருமானே மகனாக பிறந்த பெருமையுடையவர் பட்டினத்தார். இவர் வாழ்ந்த காலம் 10 ஆம் நூற்றாண்டு. சென்னை திருவொற்றியூர் கடற்கரையில் இவரது திருச்சமாதி உள்ளது. அதன் புகைப்படம் தான் இங்கே நீங்கள் பார்ப்பது.

Pattinathar 2

தற்போது, இந்த சமாதி புனரமைக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை யுகாதி பண்டிகையன்று மாலை திருவொற்றியூர் சென்றிருந்தோம். அப்போது தியாகராஜரையும் வடிவுடையம்மனையும் பட்டினத்தாரையும் தரிசித்துவிட்டு வந்தோம். புனரமைக்கப்படுவதற்கு முன்பிருந்த கோவிலே பார்க்க அழகாக பழமையுடன் இருந்ததன நமக்கு படுகிறது. அது பற்றிய விரிவான கவரேஜ் விரைவில்…

With TMS

(குறிப்பு : இன்று ஏழிசை வேந்தர் திரு.டி.எம்.எஸ். அவர்களின் பிறந்த நாள். திரு.டி.எம்.எஸ். அவர்கள் நடித்த பட்டினத்தார் / அருணகிரிநாதர் படங்களை பார்க்கவேண்டும் என்று விரும்புவோர் நமக்கு தகவல் தெரிவிக்கவும். ஒரிஜினல் காம்போ டி.வி.டி. வாங்கி அனுப்புகிறோம். இரண்டுமே பார்க்க பார்க்க சலிக்காத காவியங்கள். காலத்தால் அழியாத பொக்கிஷங்கள்.

எமது சிந்தனையில் பெருமளவு மாற்றத்தை விதைத்து நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட தூண்டுகோலாக இருந்தது ‘பட்டினத்தார்’ திரைப்படம் தான். மேலும் அவரே பாடி நடித்திருப்பதால் திரு.டி.எம்.எஸ். அவர்களின் ஒரிஜினல் குரலை இந்த படங்களில் தான் பார்க்கமுடியும். இது போன்ற படங்களை எல்லாம் அவசியம் ஒவ்வொருவரும் பார்க்கவேண்டும். தேவையுள்ளோர் சொல்லுங்கள் வாங்கி அனுப்புகிறோம். நம்மால் முடிந்த ஒரு கைங்கரியம்!)

==============================================================

Also check our exclusive interview with Thiru.TMS a year before his departure.

“ஒன்றென்றிரு.. தெய்வம் உண்டென்றிரு…” – ஏழிசை வேந்தர் திரு.டி.எம்.எஸ். அவர்களுடன் ஒரு பிரத்யேக சந்திப்பு!

==============================================================

Similar Interviews :

==============================================================

Also check :

‘மாணவர்கள் மனதில் மாணிக்கவாசகர்’ – திவாகரும் அவரது திருவாசகத் தொண்டும்!

உருகிய பக்தை… வீட்டுக்கே வந்த நடராஜர்! உண்மை சம்பவம்!! – நவராத்திரி SPL 1

திருமுறை, திருப்புகழ் விளக்கை அனைவருக்கும் ஒளிரச் செய்யும் ஓர் அன்னை!

‘திருவாசகம்’ என்னும் LIFESTYLE MANTRA – கருவுற்றிருக்கும் பெண்கள் கவனத்திற்கு!

பித்தனாகியும் பரமனைப் பாடிய ஸ்ரீ அப்பைய தீட்சிதர் திவ்ய சரிதம் + அதிஷ்டான தரிசனம்!

‘என்னை தாலாட்ட வருவாரோ?’ ஏழுமலைக்காக தினமும் ஏங்கும் வேதபுரீஸ்வரர்!

தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!

“கண் போனால் என்ன? கால் போனால் என்ன?” – தேவாரத் திருப்பணியில் அசத்தும் ஞானப்பிரகாசம்!

கலியின் தீமை, ஊழின் கடுமை நீக்கும் அருட்கொடை = பன்னிரு திருமுறை!

பன்னிரு திருமுறைகளின் பெருமையும் அதை மீட்டுத் தந்த நம்பியாண்டார் நம்பியும்!

திருமுறைகளை கண்டெடுத்த ராஜ ராஜ சோழன் !

==============================================================

[END]

9 thoughts on “கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு!

  1. பட்டினத்தார் பற்றி படிக்க படிக்க மெய் சிலிர்க்கிறது. தனது மாண்டு போன சீடரை உயிருடன் எழுப்பியதை படிக்கும் பொழுது, திருஞானசம்பந்தர் பூம்பாவையை உயிருடன் எழுப்பியது என் நினைவுக்கு வருகிறது. திருவிடைமருதூர் கோவில் நுழை வாயில் நம்மை வா வா என வரவேற்ப்பது போல் உள்ளது. ஒவ்வொரு படங்களும் அருமையோ அருமை. இதுவரை பட்டினத்தார் கோவிலுக்கு சென்றதில்லை. இந்த பதிவை படித்த பிறகு கண்டிப்பாக செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. நான் திரு டி எம் எஸ் அவர்களின் குரலுக்கு பரம ரசிகை . அவர்கள் நடித்த (பட்டினத்தாராகவே வாழ்ந்த ) படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. நம் வாசகர்களுடன் போன வருட மே மாதம் வேனில் சென்ற பொழுது தாங்கள் பட்டினத்தார் படம் போட்ட ஞாபகம் உள்ளது. பட்டினத்தாரின் சிறப்பு பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    திரு டி எம் எஸ் அவர்களின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்ந்தமைக்கு நன்றிகள் பல. //இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், அவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் //

    நன்றி
    உமா வெங்கட்

  2. சுந்தர்ஜி

    அருமையான பதிவு. மெய் சிலிர்கிறது . மகான்களின் வாழ்கை நமக்கு
    பல அற்புதகள் தருகிறது .சொல்ல வார்த்தைகள் இல்லை . தித்திக்கும் தேனாக இருக்கிறது.
    நன்றி

  3. பட்டினத்தார் திருவடிகள் போற்றி……….

    ” காதற்ற ஊசியும் வாராது காணுங் கடை வழிக்கே” – இந்த வரியை நினைத்தாலே நமக்கு உலகின் நிலையாமை புரிந்து பற்றற்ற தன்மை வந்து விடும். அவ்வளவு பொருள் அந்த வரிக்குள்…….

    நாம் தரிசிக்க விரும்பும் கோயில்களின் வரிசையில் பட்டினத்தார் சுவாமிகளின் அதிட்டானமும் சேர்ந்து கொண்டது…….. குருவின் அருள் விரைவிலேயே கிட்டட்டும்……..

  4. இன்னும் பிரார்த்தனை மண்டபம் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை.

  5. பட்டினத்தார் பற்றி அறிந்து கொள்ள நீண்ட நாட்களாக ஆவலாக இருந்த எனக்கு, இப்பதிவு மிகுந்த மன மகிழ்ச்சியை கொடுத்தது.

    பட்டினத்தாரின் சிறப்பு பதிவினை ஆவலுடன்
    எதிர் நோக்கியுள்ளோம்

    நன்றி

  6. வாழ்க வளமுடன்

    சுந்தர் சார் நல்ல பதிவு

    நன்றி

  7. Sir,
    What u described is right…earlier temple is very nice and also some of songs is also written in the wall…

    கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
    நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்
    நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும்
    துதியாப் பிழையும் எல்லாப் பிழையும்
    பொருத்தருள் வாய் கச்சியேகம்பனே…..

    திருவொற்றியுரின் மன்னை…எடுத்து…திருநீற்றாக.. இட்டாலே..புண்ணியம்..என்றும் தன் பாடலில்…குறிப்பிட்டுள்ளார்..

    திருவொற்றியுர் உடையிர்..திருநீறு..இட்டு..ஐந்தெழுத்து..ஓதவும்….கற்பியுமே…

    வாவியெல்லாம் தீர்த்தம் மணல் எல்லாம் வெண்ணிறு
    காவனங் கெல்லாம் கனநாதர் பூவுலகில் ஈது சிவலோகமென்று..
    மெய்த் தவத்தோர் ஓதிடும்…திருவொற்றியுர்…

    இளங்கோ…

  8. “காதறுந்த ஊசியும் வாராது காண் கடைக்கண் கடை வழிக்கே” பட்டினத்தார் வாழ்கையை புரட்டிப்போட்ட வரிகள் இவை , அவரை மட்டுமல்ல எம்மையும்தான் பலமுறை “பட்டினத்தார்” திரைப்படத்தை பார்த்திருக்கிறேன் அதேபோல் அருணகிரி நாதரும் .

    தயவு செய்து எனக்கு டி வி டி அனுப்பி வைக்கவும்

    நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *