Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, October 10, 2024
Please specify the group
Home > Featured > “முதுகுல குத்திட்டாங்க சாமி…!” அழுத மெய்யன்பர். வாரியார் சொன்னது என்ன?

“முதுகுல குத்திட்டாங்க சாமி…!” அழுத மெய்யன்பர். வாரியார் சொன்னது என்ன?

print
ன்றளவும் ஆன்மீக அன்பர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு போற்றும் சமயப் பெரியோர்களில் ஒருவர் திருமுருக.கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள். ‘வேலை வணங்குவதே வேலை’ என்று வாழ்ந்தவர். ஊருக்கு உபதேசித்தபடி தான் முதலில் வாழ்ந்து காட்டிய உத்தமர். வாரியார் அவர்கள் முருகனை வழிபாடு செய்யாத நாளே கிடையோது. முருகனை வழிபாடு செய்யாமல் அவர் உணவை அருந்திய நாளும் கிடையாது.

Kangeyanallur Variyar Swamigal 1
காங்கேயநல்லூர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் அதிஷ்டானத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலை!

அவருடைய பேச்சைக் கேட்டு ஆத்திகரானோர் பலர். தாய்தந்தைக்கு மதிப்பளித்து வணங்கியவர்கள் பலர். புலால் உணவை விட்டுச் சைவ உணவுக்கு மாறியவர்கள் எண்ணற்றோர். ஆடுகளையும், மாடுகளையும் பிடாரி கோவிலில் வெட்டிப் பலியிடுவதைக் கண்டித்து கைவிட்டவர்கள் பலர். சண்டை சச்சரவில் ஈடுபட்ட மனைவியர்களும், கணவர்களும் அவர் பேச்சைக் கேட்டுத் திருந்தினர். பணத்தை இறுக முடிந்து கொண்டிருந்த லோபிகள் அவர் பேச்சைக் கேட்டு அறச்செயல்களுக்குப் பணத்தை கொடுக்க முன் வந்தனர்.

அவருடைய பேச்சால் ஒழுக்கமும், பக்தியும் வளர்ந்தது. மதுவையும், புலாலையும் சூதாட்டத்தையும துறந்தவர்கள் பலர். இப்படி எத்தனையோ நன்மைகள் அவரால் விளைந்தன. இதையெல்லாம் சொல்லிக்கொண்டே போகலாம்.

Subramaniyar Swamy

யோதிகம் காரணமாக நடக்க முடியாமல் சுவாமிகள் கடைசி நாட்களில் சிரமப்பட்டது தெரியும். சொற்பொழிவுக்கு வரும் இடங்களில் இரண்டு மூன்று நாட்கள் தங்க நேரிடும்போது, குளிப்பதற்கோ இதர விஷயங்களுக்கோ செல்ல வேண்டும் என்றால் துணையின்றி எதுவும் செய்ய முடியாத நிலை.

அதைப் பார்த்து கவலைகொண்ட மெய்யன்பர்கள் சிலர், “சுவாமி கொஞ்சம் ஓய்வாக உங்கள் வீட்டில் இருக்கலாமே. இத்தனை சிரமப்படவேண்டுமா? நீங்கள் அதிகமான தொண்டு செய்திருக்கிறீர்கள். அந்த திருப்தியோடு ஓய்வெடுக்கலாமே?” என்றார்கள்.

“ஏம்பா… வீட்டில் சும்மா இருக்கிற போதோ… ஆஸ்பத்திரியில் படுத்துக்கொண்டிருக்கிறபோதோ என் உயிர் போகக்கூடாது.  பூஜை செய்யும்போதோ சொற்பொழிவு செய்யும்போதோ என் உயிர் போகவேண்டும். அது தான் பெருமை… புகழ்” என்பாராம்.

வாரியாரின் மெய்யன்பர்களில் ஒருவர். சிலர் அவரிடமிருந்த கொஞ்ச நஞ்ச பணத்தையும் பிசினஸ் செய்யலாம் என்று ஏமாற்றி பிடுங்கிவிட்டனர். வேறு சிலர் அவருக்கு உதவுவதாக சொல்லி ஆசை வார்த்தைகள் கூறி கடைசீயில் கைவிரித்து விட்டனர்.

சுவாமிகளிடம் ஒரு நாள் வந்து மேற்படி மெய்யன்பர் அழுதார்.

அதற்கு வாரியார்….. “பாவ புண்ணியத்திற்கேற்ப நமக்கு பலன் விளைகிறது. ஒருவர் வங்கியில் ரூ.1000 போட்டு வைக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். 950 ரூபாய்க்கு செக் கொடுத்தால் அது பாஸாகும். 1050 ரூபாய்க்கு கொடுத்தால்? பாஸாகாது அல்லவா? எனவே நாம் செய்த புண்ணியத்தின் அளவுப்படியே அனைத்தும் நடக்கும். ஆனாலும் சில நேரங்களில் வங்கி, நமது நன்னடத்தையை நாம் கணக்கை வகிக்கும் பாங்கையும் கண்டு நமக்கு தேவையான நேரத்தில் OVER DRAFT கொடுப்பதில்லையா? அது போல, இறைவனிடம் நம்பிக்கையோடு மன்றாடினால் நிச்சயம் உதவிகள் கிடைக்கும்” என்றார்.

அன்பு ததும்ப அந்த அன்பரை பார்த்து அவருடைய நெற்றியில் திருநீறு பூசினார். அடுத்த சில நாட்களிலேயே அவருடைய பிரச்சனைகள் யாவும் ஒவ்வொன்றாக தீர்ந்துபோயின.

பார்வையிலேயே பாவத்தை மாய்க்கும் குருவின் திருவடி!
பார்வையிலேயே பாவத்தை மாய்க்கும் குருவின் திருவடி!

சாத்தூரில் ஸ்வாமிகள் ஒரு அன்பர் வீட்டில் தங்கியிருந்தார். ஸ்வாமிகள் தான் வாழ்ந்த காலத்தில் எத்தனையோ ஏழை மாணவர்களின் மேற்படிப்புக்கு உதவியிருக்கிறார். அவரால் தங்கள் வீட்டில் முதல் பட்டதாரியை பார்த்த குடும்பங்கள் அநேகம். ஸ்வாமிகளால் அப்படி பொறியியல் படிக்கவைக்கப்படும் மாணவர் ஒருவர் தேர்வு கட்டணத்திற்கும் மிகவும் தேவையான இதர செலவுகளுக்கும் ரூ.3500/- வேண்டும் என்று அவருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

ஸ்வாமிகள் அக்கடித்ததை படிப்பதும் வைப்பதுமாக இருந்தார். சுவாமிகளிடம் பணமில்லை என்பது அதன் மூலம் புரிந்தது.

அந்த நேரம், வெளியே கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

சிவகாசியை சேர்ந்த பக்தர் டி.ஜி.தர்மா என்பவர் தன் மனைவி லீலாவதி என்பாரோடு அந்த வீட்டில் சுவாமி தங்கியிருப்பது தெரிந்து வந்து, பொன்னாடை போர்த்தினர்.

“தங்கள் பணிகளுக்கு என் காணிக்கை” என்று கூறி, தட்டில் வெற்றிலை பாக்கு பழங்களோடு ரூ.3500/- எடுத்து வைத்தார்.

ஸ்வாமி, அவர்களை ஆசீர்வதித்தார்.

அங்கிருந்த நண்பர் ஒருவரிடம் அந்த பணத்தை கொடுத்து, மாணவர் அனுப்பிய கடித்ததையும் கொடுத்து இந்த பணத்தை அந்த மாணவர் கூறியவாறு டிராப்ட் எடுத்து அனுப்பிவிடுங்கள் என்றார்.

ஸ்வாமிகள் அந்த மாணவனுக்கு ரூ.3500/- தேவை என்று நினைத்ததும், அந்த தொகை சரியாக அவரை தேடி வருகிறது என்றால், இதை என்னவென்று சொல்வது?

சாட்சாத் முருகப் பெருமானே அவருள் குடிகொண்டிருக்கிறான் என்பது தானே?

=======================================================

We need your help…

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்! For more information click here!

Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215  |  E-mail : editor@rightmantra.com

=======================================================

Also check:

வாரியார் ஸ்வாமிகள் முருகப் பெருமானிடம் அனுதினமும் வேண்டி நின்றது என்ன?

காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!

தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!

காங்கேயநல்லூர் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் – ஒரு திவ்ய தரிசனம்!

ஏழை திருமணத்துக்கு உதவிய வள்ளல் & வாரியாரின் வாழ்வும் வாக்கும் – தமிழ் புத்தாண்டு SPL & வீடியோ!

முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2

வாரியார் நினைத்தார்; வள்ளலார் நடத்தி வைத்தார்!

சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!

மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க… ஈசன் மகனோடு மனம் விட்டுப் பேசிப் பாருங்க…

“முருகன் அடிமையா நான் வாழ்ந்தது சத்தியம்னா இப்போ மழை பெய்யும்டா!”

சின்னப்பா தேவரை முருகன் தடுத்தாட்கொண்ட முதல் சம்பவம் எது தெரியுமா?

நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!!

அடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் !

 மணிகண்டனை தேடி வந்த முருகன்! ஒரு உண்மை சம்பவம்!!

களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!

முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!

செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!

ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1

==========================================================

[END]

9 thoughts on ““முதுகுல குத்திட்டாங்க சாமி…!” அழுத மெய்யன்பர். வாரியார் சொன்னது என்ன?

  1. வாரியார் சுவாமிகள் ஒரு முறை மஹா ஸ்வாமிகளை தரிசனம் செய்த பொது அவரை தனக்கு நமஸ்காரம் செய்ய அனுமதி தர வில்லை. மிக வருத்ததோடு வாரியார் சுவாமிகள் காரணம் கேட்ட பொது தாங்கள் தங்கள் திரு மேனி முழுவுதும் ருத்ராசம் தரித்து இருப்பதால். என்றார்.

    மஹா சுவாமிகள் மிக மதித்த மகான்.

    அவர் திருவடி தொழுவோம்.

    நன்றி தங்கள் பதிவுக்கு.

    கே. சிவசுப்ரமணியன்

  2. மிகவும் அருமையான பதிவு. நாம் செய்யும் பாவ புண்ணியத்திற்கேற்ப நம் வாழ்க்கை அமையும்

    படங்கள் அனைத்தும் பரவசமாக உள்ளது.

    வாரியார் ஸ்வாமிகள் நினைத்தால் முடித்துக் கொடுக்க முருகன் இருக்கிறார்.

    செவ்வாய் கிழமை வாரியார் ஸ்வாமிகள் பற்றி படித்தது மிக்க மகிழ்ச்சி

    குருவின் திருவடியை காண கண் கோடி வேண்டும்.

    காங்கேய நல்லூர் லட்ச தீப பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    திருச்செந்தூர் முருகன் துணை

    நன்றி

    உமா வெங்கட்

  3. குருவின் திருமேனி, திருவடி தரிசித்தோம்.சிந்தை குளிர்ந்தோம்.

    உள்ளன்போடு வழிபடும்போது, இறையருள் பெறுவது நிச்சயம்.

    நன்றி

  4. அருமையான பதிவு.
    நமது நன்னடத்தை காரணமாக, இறைவன் நமக்கு குருவின் மூலம் நல்லாசிகள் அனைத்தையும் கண்டிப்பாக வழங்குவார்.
    “வேலை வணங்குவதே வேலை”

    வாழ்க வளமுடன்
    நன்றி

  5. வணக்கம் சுந்தர். குருவின் திருவடிகளுக்கு சரணம் ஓம் முருகா. நன்றி

  6. குருவே சரணம்……திருமுருகனின் அடிமையானவருக்கு நாம் அடிமையாக இருக்க மாட்டோமா என மனம் ஏங்குகிறது……

    நேற்று அலுவலக வேலையாக வேலூர் செல்ல நேர்ந்தது……அங்கு ஓரிடத்தில் காங்கேய நல்லூர் – 2 கி.மீ என்று தகவல் பலகையைப் பார்த்ததும் உடனே அங்கு சென்று குருவின் அதிஷ்டானதைத் தரிசிக்க வேண்டும் என்ற அவா ஏற்பட்டது…….. ஆனால் செல்ல இயலவில்லை….. விரைவில் அந்த வரம் கிடைக்க வேண்டும் என்று குருவை வேண்டிக் கொள்கிறேன்……

  7. வாழ்க வளமுடன்

    தெளிவு குருவின் திருமேனி காண்டல்

    தெளிவு குருவின் திருநாமம் செப்பல்

    தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டால்

    தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே

    நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *