மாதங்கள் உருண்டோடின. பறவைகள் எப்படி வளர்கின்றன? நன்றாக பறக்கின்றனவா? என்று தெரிந்துகொள்ள பயிற்சியாளரை அழைத்தான் மன்னன்.
“அரசே… இரண்டு பறவைகளில் ஒன்று நன்றாக பறக்க கற்றுக்கொண்டுவிட்டது. மற்றொன்று எவ்வளவோ முயற்சித்தும் அது அமர்ந்திருக்கும் கிளையை விட்டு நகர மறுக்கிறது” என்றான்.
உடனே மன்னன், தனது நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கால்நடை மருத்துவர்களையும் பறவையியல் நிபுணர்களையும் அழைத்து பறவைக்கு என்ன ஆயிற்று? அது ஏன் பறக்க மறுக்கிறது? என்று ஆராயுமாறு கட்டளியிட்டான்.
அவர்களும் அதை முற்றிலும் பரிசோதித்துவிட்டு, “இந்த பறவையிடம் எந்த குறையுமில்லை. உடலில் ஊனமுமில்லை. ஆனால் அது ஏன் பறக்க மறுக்கிறது என்று புரியவில்லை அரசே” என்றனர்.
உடனே தனது அமைச்சரை அழைத்து “என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ தெரியாது. இந்த கிளி இன்னும் இரண்டு நாளில் பறக்கவேண்டும்” என்றான் கண்டிப்புடன்.
சில நாட்கள் கழித்து ஒரு நாள் தனது மாளிகையின் உப்பரிகையிலிருந்து வெளியே பார்க்கிறான். கிளி அதே இடத்தில் தான் உட்கார்ந்திருந்தது. நகரவேயில்லை. மன்னனுக்கு என்னவோ போலிருந்தது.
“இதற்கு என்ன ஆயிற்று ஏன் பறக்க மறுக்கிறது என்று தெரியவில்லையே? நாட்டுப்புறத்தில் உள்ள வயலில் வேலை செய்யும் விவசாயிகள் அல்லது மூத்த குடிமக்கள் எவரையேனும் அணுகி இது பற்றி கேட்கவேண்டும். அவர்களுக்கு ஒருவேளை இது பறக்க மறுப்பதன் காரணம் தெரிந்திருக்க்கலாம்” என்று கருதி உடனே காவலர்களை அழைத்து, “நாட்டுப்புறத்திற்கு போய் யாரேனும் ஒரு மூத்த விவசாயி ஒருவரை அழைத்து வா” என்று கட்டளையிட்டான்.
அடுத்தநாள் காலை கண்விழிக்கும்போது, அந்த பஞ்சவர்ணக் கிளி மரத்தை சுற்றி அங்கும் இங்கும் பறந்துகொண்டிருப்பதை பார்த்தான்.
அவனுக்கு ஒரே சந்தோஷம். “இந்த அற்புதத்தை செய்தவரை உடனே அழைத்து வாருங்கள்!” என்றான்.
அந்த விவசாயி மன்னன் முன்பு வந்து பணிந்து நின்றார்.
“எல்லாரும் முயற்சி செய்து தோற்றுவிட்ட நிலையில் நீ மட்டும் கிளியையை எப்படி பறக்கச் செய்தாய்?”
மன்னன் முன் தலையை வணங்கியபடி விவசாயி சொன்னார்… “அது ரொம்ப சுலபமான காரியம் அரசே. மரத்தில் ஏறி அந்த பறவை உட்கார்ந்திருந்த கிளையை நான் வெட்டிவிட்டேன். வேறொன்றுமில்லை!” என்றார்.
இறைவனும் சில சமயம் அந்த விவசாயி போல, நம்மை நமது சக்தியை உணரச் செய்யவேண்டி, நாம் அமர்ந்திருக்கும் கிளையை வெட்டிவிடுவான். அது நமது நன்மைக்கே. நம் சக்தியை ஆற்றலை நாம் உணரவேண்டியே என்று கருதி நம்மை உயர்த்திக்கொள்ள முயற்சிக்கவேண்டும்.
நாம் அனைவரும் உயர உயர பறப்பதற்கு படைக்கப்பட்டவர்கள். ஆனால் பல சமயங்களில் நாம் நமது சக்தியை உணராமல் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு பழக்கப்பட்ட வேலைகளை மட்டுமே அது தான் நம்மால் முடியும் என்று கருதி செய்து வருகிறோம். நாம் சாதிக்க கூடியவை எண்ணற்றவை. முடிவற்றவை. ஆனால் நம்மில் பலருக்கு அது கண்டுபிடிக்கப்படாமலே போய்விடுகிறது. செக்கு மாடு போல, ஒரே இடத்தில், மிக சுலபமான, ஒரே வேலையை செய்வதிலே தான் நாம் ஆர்வம் செலுத்துகிறோம். ஆகையால் தான் பலருக்கு வாழ்க்கை ஒரு உற்சாகமான, த்ரிலிங்கான, மன நிறைவான ஒன்றாக இல்லாமல் மிகச் சாதாரணமாக கழிந்துவிடுகிறது.
நாம் அமர்ந்திருக்கும் (ஒட்டிக்கொண்டிருக்கும்) பயமென்னும் கிளையை வெட்டி எறிந்து, உயரப் பறக்கும் பெருமிதத்திற்க்காக சுதந்திரப் பறவைகளாய் நம்மை விடுவித்துக்கொள்வோம். நாம் சாதிக்கப் பிறந்தவர்கள். செக்கு மாடுகள் அல்ல.
Please check :
======================================================================
நமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா?
======================================================================
Also check :
======================================================================
‘அணுகுமுறை’ என்கிற மந்திரச்சொல் – MONDAY MORNING SPL 83
எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? – MONDAY MORNING SPL 82
அகத்தின் அழகு முகத்தில் தெரியும், எச்சரிக்கை! MONDAY MORNING SPL 81
பராசக்தியின் உடலில் தோன்றிய கொப்புளங்கள் – MONDAY MORNING SPL 80
சிரித்தவர்களை பார்த்து சிரித்த நிஜ ஹீரோ – MONDAY MORNING SPL 79
வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா? MONDAY MORNING SPL 78
ஒரு சிறிய பேட்ஜ் செய்த அற்புதம் – MONDAY MORNING SPL 77
மனுஷனா பிறந்துட்டு எதுக்குங்க மாட்டைப் போல உழைக்கணும்? MONDAY MORNING SPL 76
நல்ல செய்தியா கெட்ட செய்தியா எது வேண்டும்? MONDAY MORNING SPL 75
வாழ்க்கையில் உயர என்ன வழி? – MONDAY MORNING SPL 74
கடவுளிடம் நமக்காக ஒரு கேள்வி – MONDAY MORNING SPL 73
மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா? – MONDAY MORNING SPL 72
பல நாள் திருடன் ஒரு நாள்… MONDAY MORNING SPL 71
ஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு! MONDAY MORNING SPL 70
நீங்கள் எந்தளவு ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று தெரியுமா? MONDAY MORNING SPL 69
திருடனிடம் கொடுக்கப்பட்ட சாவி — MONDAY MORNING SPL 68
வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67
பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா? — MONDAY MORNING SPL 66
உங்கள் வாழ்க்கையை இறைவன் மதிப்பிடுவது எப்படி தெரியுமா? – MONDAY MORNING SPL 65
முன்னேற துடிப்பவர்கள் மனதில் செதுக்க வேண்டிய வைர வரிகள் — MONDAY MORNING SPL 64
முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….
http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6
======================================================================
[END]
மிகவும் அருமையான monday மோர்னிங் ஸ்பெஷல் நாம் அனைவரும் சாதிக்க பிறந்தவர்கள். நான் எனக்குள் இருக்கும் சக்தியை நினைக்காமல் குண்டு சட்டியில் குதிரையை ஒட்டிக் கொண்டிருப்பதால் தான் நாம் உயர்ந்த நிலையை அடைய முடிய வில்லை. இந்த பதிவு எனக்கு மிகவும் உற்சாகம் ஊட்டும் பதிவாக உள்ளது
நாம் அனைவரும் சாதிக்க பிறந்தவர்கள் செக்கு மாடுகள் அல்ல // சூப்பர்
நன்றி
உமா வெங்கட்
Sudarji Good Morning,
Very Energetic and suitable article for Current Scenerio of Life. Monday spl as usual super.
S.Narayanan.
very energetic and very matching story for us.
அருமையான மற்றும் தன்னம்பிக்கையான வைர வரிகள்.
எல்லாம் நன்மைக்கே.
குருவே சரணம்
வாழ்க வளமுடன்
நன்றி
நமது தளத்தின் மண்டே மார்னிங் ஸ்பெஷல் பதிவுகள் ஒன்றையொன்று விஞ்சும் வகையில் அமைகிறது. இன்றைய பதிவு one of the best என்பேன்.
உண்மையில் கதை மிக மிக சஸ்பென்சாக இருந்தது. எப்படித் தான் அந்த கிளி பறக்கப்போகிறதோ என்று அறிந்துகொள்ள மிகவும் பரபரப்பாக இருந்தது.
அந்த விவசாயி உண்மையில் தான் பழுத்த அனுபவசாலி என்று உணர்த்திவிட்டார்.
கதையைவிட இறுதியில் நீங்கள் தந்திருக்கும் விளக்கம் அருமை.
நீங்கள் சொல்வது போல, பல நேரங்களில் நம்மை உயர பறக்கச் செய்யவே இறைவன் நம்முடைய கிளையை வெட்டிவிடுகிறான்.
நாம் அனைவரும் நம் சக்தியை உணர்வோம். உயர உயர பறப்போம்.
அடுத்த மண்டே மார்னிங் ஸ்பெஷலை ஆவலுடன் எதிர்பார்க்கும்,
பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்
சுந்தர் சார் வணக்கம்
மிகவும் அருமையான அழகான பதிவு சார்
மிக்க நன்றி
Excellent article sundar ji…Very very motivating one…
Most of us don’t want to move out of our comfort zone, either in job front or in personal life.
Excellent edition, motivating us to do things,
not only, smartly but also differently.
thanks a lot
அதுதான் நம்மால் முடியும் என்பதை சற்று மாற்றி
“நம்மால்தான் அது முடியும்”
என்பதை உணர வைத்த அருமையான அனுபவக்கதை
இப்படி கதை சொல்வதற்கு உம்மால்தான் முடியும் என்று சொல்லாமல் சொல்லி விட்டீர்கள்.
One among the best.
டியர் சுந்தர்ஜி
Congrats for excellent post. நன்றி
vazgha பல்லாண்டு
வாழ்க வளமுடன்
சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு………………
சிகரத்தை அடைந்தாள் வானத்தில் ஏறு…………………
நன்றி
Dear SundarJi..
Wow, Super.. Thanks for sharing..
Rgds,
Ramesh
வணக்கம் சுந்தர். அருமையான பதிவு. வலிக்க அடி விழுந்தால் வளர்ச்சி தானாக வரும் என்று சொல்லுவார்கள். அதைத்தான் சோதனை என்றும் சர்வைவல் இன்ஸ்டின்க்ட் என்றும் சொல்கிறர்கள் . நன்றி
சுந்தர் அண்ணா..
இந்த பதிவு நம்பிக்கை ஊட்டும் உற்சாக டானிக்.
மிக்க நன்றி..
அடுத்த monday morning spl நோக்கி…
அருமையான பதிவு………….சோதனைகள்தான் சாதிக்க உதவும் என்ற கருத்தை வலியுறுத்தும் அழகான பதிவு………..நமக்கு ஏற்படும் சோதனைகள் நம்மை யாரென்று நாம் உணரவும் அடுத்தவர்களுக்கு உணர்த்தவும் உதவுகின்றன என்று தெரிந்து (தெளிந்து) கொண்டேன்…..