2014 டிசம்பர் மாதம் இரண்டாம் வாரம். ரைட்மந்த்ரா அலுவலகத்திற்கு இடம் பார்த்து வந்த நேரம். ஒரு நாள் நண்பர் ஒருவரை சந்தித்து பேசிவிட்டு மேற்கு மாம்பலம் வீராசாமி தெரு வழியே வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தோம். எதிரே ஒரு சுவாமி திருவீதி உலா வந்து கொண்டிருந்தார். பொதுவாக சாலைகளில் சுவாமி புறப்பாடு மற்றும் திருவீதி உலா ஆகியவற்றை காண நேர்ந்தால் பைக்கை நிறுத்தி சுவாமி தரிசனம் செய்துவிட்டு புகைப்படங்களும் எடுத்துவிடுவோம். நமது பதிவுகளில் அளிக்க உபயோகமாக இருக்கும்.
அன்றும் அப்படியே. பைக்கை சற்று ஓரமாக நிறுத்திவிட்டு சுவாமி தரிசனம் செய்துவிட்டு புகைப்படம் எடுத்தோம். என்ன சுவாமி என்று புரியவில்லை. உற்சவ வாகனத்தில் அமர்ந்திருந்தவர்களிடம் கேட்டோம்.
“இது வடதிருநள்ளாறு சனீஸ்வர பகவான்” என்றார்கள்.
வட திருநள்ளாறு என்று அழைக்கப்படும் ஷேத்ரம் அந்த பகுதியில் தான் இருக்கிறது அன்று கேள்விப்பட்டிருக்கிறோம். மேற்கொண்டு எதுவும் தெரியாது.
அன்று சனிக்கிழமை வேறு. அடி தூள். சனீச்வர தரிசனம் தேடி வந்து கிடைத்துள்ளது என்று கருதி, புகைப்படம் எடுப்பதில் மேலும் ஆர்வமானோம்.
புகைப்படங்கள் எடுத்தபடி, வாகனத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்தபடி கூடவே ஓடினோம். கிரி ரோட்டின் துவக்கத்தில் உள்ள ஒரு மளிகை கடை முன்பு சுவாமி சிறிது நேரம் நின்றார்.
கடையிலிருந்து திருவீதி உலாவில் உடன் வந்தவர்கள், விளக்கு ஏந்தியவர்கள் என அனைவருக்கும் குளிர்பானம் தந்தார்கள்.
ஓடோடிச் சென்று கடையில், “சார்… இதுக்கு அவங்கே கிட்டே பணம் வாங்கவேண்டாம். நான் கொடுத்துடறேன்” என்றோம்.
அங்கேயிருந்த மற்றொருவர், “இல்லேயில்லே… ஒத்துக்க மாட்டாங்க. இதை அவங்க ரொம்ப நாள் செஞ்சிகிட்டு வர்றாங்க…” என்றார்.
கடைக்காரரும் சான்சே இல்லை என்பது போல சிரித்தார்.
“அப்ப… பந்தத்துக்கு எண்ணையாவது வாங்கி தரட்டுமா?” என்று கேட்டோம்.
“எண்ணையும் இருக்கு..” என்று அங்கே நின்று கொண்டிருந்த ஒருவர் கையில் வைத்திருந்த பெரிய தூக்கை காண்பித்தார்.
நமக்கு ஏமாற்றமாக இருந்தது.
ஆனால் தொண்டு செய்யவேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் வாய்ப்புக்கா பஞ்சம்? சட்டைப் பையில் இருந்த பணத்தை அப்படியே பிரித்து மங்கள வாத்தியக்காரர்கள், வாகனத்தை இழுத்து வந்தவர்கள், விளக்கை ஏந்தி வந்தவர்கள், அர்ச்சகர் என அனைவருக்கும் பிரித்துகொடுத்தோம்.
இவை அனைத்தையும் ஒருவர் கவனித்தபடி இருந்தார்.
நம்மை அழைத்தார். “ரொம்ப நல்லா காரியம் செய்றீங்க தம்பி. நீங்க யாரு? எங்கேயிருந்து வர்றீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?” என்று கேட்டார்.
நாம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டோம்.
“நல்ல விஷயம்… ரொம்ப நல்ல விஷயம்… ஒரு நாள் ஃபோன் பண்ணிட்டு வாங்க… கோவிலை பத்தி நிறைய சொல்றேன்” என்றார்.
“நீங்க??” சந்தேகத்தோடு கேட்டோம்.
“நான் இந்த கோவில் டிரஸ்டியா இருக்கேன்” என்றார்.
அடுத்து சில நாட்கள் கழித்து அந்த பகுதியில் இருக்கும் வாசகர் ராஜ்குமார் என்பவரையும் அழைத்துக்கொண்டு சென்றோம்.
சென்னையில் ஒரு திருநள்ளாறு – நேரடி தரிசனம்!
சென்னை மேற்கு மாம்பலம் வெங்கடாசலம் தெருவில் அருளாட்சி புரிந்து வருகிறார் வட திருநள்ளாறு சனி பகவான். சனீஸ்வர பகவான் சாந்தமூர்த்தியாக காக வாகனத்தில் அமர்ந்து நீலாம்பிகையுடன் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். சனிபகவானின் தாக்கத்திலிருந்து தப்ப இத்தலத்தில் பஞ்சமுக அனுமார், யக்ஞ விநாயகர் போன்றோரும் அருள்கின்றனர்.
இந்த ஆலயத்திற்கு சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் வருகை புரிந்த நடமாடும் தெய்வம் காஞ்சி மகா பெரியவர் இதை வட திருநள்ளாறு என்றே குறிப்பிடுகிறார்.
இங்கே கிழக்கு நோக்கி எழுந்தருளி அருள்பாலிக்கும் சனீஸ்வரன் மீது அவர் தந்தையான சூரியபகவானின் கதிர்கள் நேரடியாக விழும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த ஆலயத்தின் சிறப்பு.
சனீச்வரரால் அவருக்கு ஈஸ்வரன் பட்டம் வழங்கிய சர்வேஸ்வரன் கூட பீடிக்கப்பட்டதாக வரலாறு உண்டு. ஆனால் சனீஸ்வரர் பிடிக்க இயலாத இருவர் யார் தெரியுமா?
ஒருவர் விநாயகர். மற்றொருவர் ஆஞ்சநேயர்.
இந்த கோவிலில் சனிபகவானோடு இவர்கள் இருவரும் கூட எழுந்தருளியிருப்பதால், அஷ்டமத்து சனி, ஏழரை நாட்டு சனி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இங்கு வந்து சனீஸ்வரரை தரிசித்து பலன் பெறலாம்.
ஸ்ரீ ராமபக்தரான ஆஞ்சநேயர் இங்கு பஞ்சமுக ஆஞ்சநேயராக எழுந்தருளி அருள்பாலிப்பது சிறப்பு.
ஆரம்ப காலத்தில் இந்த இடத்திற்கு புலியூர் என்று பெயர். வெங்கட்டாசலம் என்பவர் 1930 வாக்கில் இங்கு குடியேறினார். (வெங்கடாசலம் தெரு என்று அவர் பெயரில் தான் தெரு வழங்கப்படுகிறது). 1936 ஆம் ஆண்டு வெங்கடாசலம் அவர்களால் இது ஒரு சிறு ஆஞ்சநேயர் ஆலயமாக ஸ்தாபிக்கப்பட்டது.
அப்போது ஆலயம் போன்ற அமைப்பெல்லாம் கிடையாது. சிறு மாடம் போன்று இருக்கும். அப்போது இங்கு ஆஞ்சநேயர் விக்ரகம் மட்டும் தான் இருந்தது. பிற்பாடு அவர் இங்கு பஞ்சமுக ஆஞ்சநேயரையும் சனீச்வர பகவானையும் பிரதிஷ்டை செய்தார்.
1962 ஆம் ஆண்டு ஒரு சனிப் பெயர்ச்சியின் போது இங்கே எழுந்தருளிய மகா பெரியவர் இந்த இடத்தின் சான்னித்தியத்தை உணர்ந்து “இது எதிர்காலத்தில் வட திருநள்ளாராக விளங்கும்!” என்று திருவாய் மலர்ந்தருளினார்.
தல விருட்சமாக இங்கு அரசமரம் இருக்கிறது. முதலில் இவர் அரசமரத்தடி பிள்ளையாராகத் தான் இருந்தார். கோவில் பிற்காலத்தில் வளர்ந்தபோது, மரத்தை வெட்டாமல் அப்படியே இடைவெளி விட்டு கோவிலை கட்டியிருக்கிறார்கள்.
பிற்பாடு 2003 ஆண்டு சனஞ்செயா டிரஸ்ட் என்பவர்களால் இக்கோவில் சிறப்பான முறையில் புனருத்தாரணம் செய்யப்பட்ட்டது. ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் இங்கு குறைந்தது 1000 முதல் 1500 பேர் வருகின்றனர்.
இங்கு சனீஸ்வரன் தனது சக்தி நீலா தேவியுடன் வசிக்கிறார்.
இங்கு யக்ஞ கணபதி இருக்கிறார். ஹோமத்தில் எழுந்தருளும் கணபதிக்கு யக்ஞ கணபதி என்று பெயர்.
பஞ்ச முக ஆஞ்சநேயருக்கு ஒரு வரலாறு உண்டு. ராம-ராவன யுத்தத்தின்போது ராவணனுக்கு உதவ வந்தான், மயில் ராவணன் மாயைகளில் வல்லவனான அவன், விபீஷணனை ஏமாற்றி ராம லட்சுமணரை மயக்கிக் கவர்ந்து சென்றான். மயில் ராவணனை அழித்து ராம லட்சுணரை மீட்டார் மாருதி. அப்போது ஐந்து முகங்கள் உள்ளவராக அவர் எடுத்ததே பஞ்சமுக அனுமன் வடிவம். அனுமனின் முகத்தோடு வராகர், ஹயக்ரீவர், நரசிம்மர், கருடன் முகங்களும் இணைந்த வடிவம் இது. எனவே இவரை வழிபட்டால் தைரியம், கல்வி, அறிவு, எதரிபயம் இன்மை, சுபகாரியத் தடைவிலகல் ஆகிய நற்பலன்களோடு, தீயசக்திகளால் ஏற்பட்ட பயமும் அகலும்.
சனி ப்ரீதி இங்கு செய்ய விரும்புவோர், ஒன்பது வாரங்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் வந்திருந்து சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்து விளக்கேற்றிவிட்டு, கடைசி வாரம் சுவாமிக்கு அபிஷேகம் செய்து அன்னதானம் செய்தால் போதும். சனிபகவான் அகமகிழ்ந்து அனைத்து நலன்களையும் அருள்வார்.
அபிஷேக கட்டணம் ரூ.500/-. வீட்டிலிருந்து கொண்டுவரும் பிரசாதத்தை இங்கே நிவேதனம் செய்யமாட்டார்கள். இங்கே ஆலயத்திலேயே பிரசாதத்துக்கு பணம் கட்டிவிட்டால், அவரவர் விருப்பத்திற்கேற்ப எள்ளு சாதம், சர்க்கரை பொங்கல், புளியோதரை என இங்கு மடப்பள்ளியிலேயே தயார் செய்து தருவார்கள். பிரசாத கட்டணம் ரூ.350/-. (பல்வேறு கட்டளைகளின் கட்டண விபரங்கள் அடங்கிய புகைப்படம் தனியே தரப்பட்டுள்ளது.)
இது போன்ற ஆலயங்களில் பிரசாதமாக வழங்கப்படும் குறிப்பாக சனீஸ்வரர் பிரசாதத்தை வாங்கி சாப்பிடுவது சகல விதங்களிலும் நன்மை தரும். அவர்கள் சனிபகவானின் அருளுக்கும் பாத்திரமாவார்கள். சனீஸ்வர பிரசாதத்தை வேண்டாம் என்று சொல்வது அவரை அவமதிப்பது போல என்பதை நினைவில் வைத்திருங்கள்.
சனிக்கிழமை தோறும் அன்னதானம் நடைபெறுகிறது. அதற்கு கட்டணம் ரூ.1500/- (ஐந்து கிலோ). இந்த அன்னதானத்தில் அனைவருக்கும் போதுமான அளவு சாம்பார் சாதம் தரப்படும். விரும்புவோர் அதற்கு உபயதாரராகி அதன் அன்றைய செலவை ஏற்றுக்கொள்ளலாம்.
சனிக்கிழமையானால் இங்கு கடைகள் முளைத்துவிடும். கடைகளில் அர்ச்சனைக்கு தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கும்.
ஆஞ்சநேயருக்கு வெண்ணெய், வெற்றிலை மாலை, விநாயகருக்கு அருகம்புல், தேங்காய் பூ பழம் உள்ளிட்ட அர்ச்சனை செட் என அனைத்தும் கிடைக்கும்.
ஆலயத்தின் அர்ச்சகராக கடந்த பல ஆண்டுகளாக சேவை சாதித்து வரும் சுரேஷ் குருக்கள் என்பவரை கௌரவித்து, நம் தளம் சார்பாக வட திருநள்ளாறு ஆலயத்திற்கு ‘தினசரி பிரார்த்தனை’ படத்தையும் பரிசளித்தோம்.
ஆலய முகவரி : அருள்மிகு வட திருநள்ளாறு சனீச்வரர் ஆலயம், # 35, வெங்கடாசலம் தெரு, மேற்கு மாம்பலம், (Land mark : யுனிவெர்சல் எதிரே உள்ள கிரி ரோடு முடிவில்), சென்னை – 600033. தொலைபேசி : 044-24742801
=======================================================================
முக்கிய அறிவிப்பு : சனீஸ்வரர் விசேஷ வழிபாடு + அர்ச்சனை!
வரும் சனிக்கிழமை (21/03/2015) நமது தளம் சார்பாக இங்கு விசேஷ அர்ச்சனை + அபிஷேகம் + பிரசாத விநியோகம் செய்யப்படவிருக்கிறது. தங்களுக்கு சனிப்பெயர்ச்சி சரியில்லை என்று கருதும் வாசக அன்பர்கள் (சென்னை வாசகர்கள் நீங்கலாக) குறிப்பாக வெளியூர், வெளி மாவட்ட, வெளி மாநிலங்களில் வசிக்கும் வாசகர்கள் மற்றும் சனி தசை நடக்கும் வாசகர்கள் தங்கள், பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் உள்ளிட்ட விபரங்களை நமக்கு simplesundar@gmail.com முகவரிக்கு மின்னஞ்சல் செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். அவர்கள் அனைவருக்கும் வரும் சனிக்கிழமை அர்ச்சனை செய்யப்படும். இதற்கு பணம் எதுவும் நமக்கு தரவேண்டாம். முழுக்க முழுக்க சேவை நோக்கோடு தான் இது செய்யப்படவிருக்கிறது.
சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக சனி ப்ரீதி தலமான ‘திருநள்ளாறு’ செல்ல இயலாமல் தவிக்கும் வாசகர்களின் நன்மைக்கே இது செய்யப்படுகிறது.
சென்னையில் வசிக்கும் வாசகர்கள் வரும் சனிக்கிழமையோ அல்லது வேறு ஒரு சனிக்கிழையிலோ நேரில் வந்திருந்து சனீஸ்வரரை தரிசித்து அர்ச்சனை செய்து பலனடையுங்கள். வெளியூர் மற்றும் வெளிமாவட்ட, மாநில அன்பர்கள் மட்டும் மேற்படி வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பலன்பெறுங்கள்.
அடுத்து வரும் பிரார்த்தனை பதிவு சனிப்பெயர்ச்சி தங்களுக்கு சரியாக இல்லை என்று கருதும் வாசக அன்பர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தாங்கள் சனீச்வரரால் மிகுந்த சோதனைக்கு உள்ளாகியிருப்பதாக கருதும் வாசகர்கள் தங்கள் கோரிக்கைகளை பிரார்த்தனை விபரங்களை நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
21 மார்ச், 2015 சனிக்கிழமை அன்று நடைபெறும் விசேஷ அர்ச்சனையில் உங்கள் பெயர் சேர்க்கப்படுவதுடன் வரும் வாரத்தின் பிரார்த்தனை கிளப் பதிவில் உங்கள் கோரிக்கைகள் வைக்கப்பட்டு பிரார்த்தனை செய்யப்படும். எனவே பிரார்த்தனை பதிவில் கோரிக்கை சமர்பிக்கவிரும்பும் வாசகர்கள் தங்கள் கோரிக்கையை மின்னஞ்சல் அனுப்பலாம். பெயர் வெளியிடவேண்டாம் என்று கருதினால் அதையும் குறிப்பிடவும்.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு சனீஸ்வரரின் அருளை பரிபூரணமாக பெற்று பலனடையவும்.
நீலாஞ்சன ஸமா பாஸம் ரவி புத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸநைசரம்!
தொடர்புக்கு :
Rightmantra Sundar
Founder & Editor,
www.rightmantra.com
Mobile : 9840169215 | E-mail : simplesundar@gmail.com
=======================================================================
Check similar articles:
சனீஸ்வர பிரசாதம் பரம பவித்ரம், சர்வ மங்களம்! – சனிப்பெயர்ச்சி தரிசன அனுபவம்!
‘சனிப்பெயர்ச்சி’ பாதிப்பை போக்கும் எளிமையான பரிகாரங்கள்!
சனிப் பெயர்ச்சியை கண்டு ஏன் இந்த பயம்?
=======================================================================
Also check :
ஒரு முக்கிய அறிவிப்பு + வேண்டுகோள்!
மீனவர் வலையில் மாட்டிக்கொண்ட முனிவர்… எப்படி மீட்கப்பட்டார்?
கோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை!
அறங்களில் உயர்ந்த கோ சம்ரோக்ஷனத்தின் அருமையும் பெருமையும்!
வைதரணியில் சிக்கி தவிக்கும்போது துணையாய் வருவது எது ?
நலன்களை அள்ளித்தர இதோ நமக்கு ஒரு நந்தினி!
நம் பாஞ்சாலி பெற்ற குழந்தை ‘தேவகி’!
கோமாதா சேவையும் ‘குரு’ ப்ரீதியும் – குரு பெயர்ச்சி உங்களுக்கு ஏற்றம் தர ஓர் எளிய வழி!
நம்ம துர்காவுக்கு வேலன் பொறந்தாச்சு!
எட்டிப்பார்த்து சொல்லுங்கள், இறைவன் உள்ளே இருக்கிறானா? ‘ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்’
கோ சேவை செய்பவர்களுக்கு ஒரு கௌரவம் – ரைட்மந்த்ரா தீபாவளி கொண்டாட்டம் 2
=======================================================================
[END]
வட திருநள்ளார் என்ற ஷேததரிததின் மகிமையை
மிகச் சிறப்பாக எடுத்து உரைத்துஉள்ளிர்கள்.
தளத்தின் வாசர்களுக்காக தாங்கள் ஏற்பாடு செய்துள்ள
பூஜை , தங்களின் உயரிய எண்ணத்தை நினைத்து நெஞ்சம் நெகிழகிறது. பாராட்ட வார்த்தைகளே அகராதியில் இல்லை.
தங்கள் மனம்போல் இல்துணை அமைந்து, வாழவாங்கு வாழ இறைவனை மனமாற வேண்டுகிறேன்.
மிக்க நன்றி
உண்மையில் திருநள்ளார் சென்று வருவது என்பது ஒரு மிகப்பெரிய சவால் ஆனால் சென்னையில் பிறந்து வளர்ந்த எங்களுக்குக்கூட தெரியாத இந்த ஆலயம் பற்றிய விபரம் நிறைய பேரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உணர வைக்கும் அதன் பலன் உங்களுக்கும் உண்டு. இங்கும் வர முடியாதவர்களுக்காக நீங்கள் செய்யும் தொண்டு இந்த வார அர்ச்சனை.
“இதனை இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன் கண் விடல் ”
வள்ளுவர் சொன்னார் அன்று சனி பகவான் உங்கள் மூலம் அதை உறுதிப்படுத்தி இருக்கிறார். இந்த ஆலயம் பற்றிய பதிவு உங்களால்தான் முடியும் என்று உங்களிடம் விட்டு விட்டார்.
எல்லாம் அவன் செயல்.
திருநள்ளாறு செல்வது அத்தனை சுலபமல்ல என்பது நீங்கள் கூறுவது 200% உண்மை. கடந்த பல ஆண்டுகளாக முயற்சி செய்து இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் திருநள்ளாறு சென்று வரும் பாக்கியம் கிடைத்தது.
இந்த ‘வட திருநள்ளாறு’ உற்சவரை தம்பதி சமேதராக திருவீதி உலாவில் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்த பின்னர் அடுத்த சில நாட்களிலேயே திருநள்ளாறு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. திருநள்ளாறு சென்று வந்த பின்னர், இந்த ‘வட திருநள்ளாறு’ ஆலயத்திற்கு தரிசனத்திற்க்காகவும் பதிவுக்காகவும் சென்றோம். அதன் பலன் தான் உடனடியாக இதே பகுதியில் ஒரு நல்ல இடத்தில் அலுவலகத்துக்கு இடம் கிடைத்தது. (சம்பத் குமார் சார் அலுவலகத்திற்கு வந்திருக்கிறார். அவரிடம் கேட்டுப் பாருங்கள்!)
ஒவ்வொன்றும் எப்போது நடந்தன என்று சரியான தேதிகள் நினைவில் இல்லை. ஆனால் ஒன்றுக்கொன்று தொடர்பு இருப்பது மட்டும் உண்மை.
நமது துன்பங்களை பெரிதாக எண்ணாமல் பிறர் துயரை துடைக்க நம்மால் இயன்ற ஏதோ ஒரு செயலை எப்போதும் செய்து கொண்டேயிருக்க வேண்டும். இந்த பிரபஞ்சத்திற்கு நீங்கள் செய்யும் மிகப் பெரிய உதவி அதுவே. மிகப் பெரிய வழிபாடும் அதுவே என்பது என் கருத்து. விரக்தியுடன் இருப்பவருக்கு நம்பிக்கை அளிப்பதை விட பெரிய புண்ணியம் ஏதேனும் இருக்க முடியுமா என்ன? மற்றபடி எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே.
– சுந்தர்
வாழ்க வளமுடன்
நல்ல பதிவு
நன்றி
விரைவில் நீலாதேவி சமேத சனீச்வர பகவானை வட திருநள்ளாறில் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும்……….
சனிக்கிழமை அன்று வட திருநள்ளாறு பற்றி படிப்பதில் மிகவும் சந்தோஷம். 27 வருடங்களாக சென்னையில் இருந்தும் இந்த கோவில் பற்றி தெரியாது. நம் தளம் மூலம் அறிந்து கொண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி. கோவிலைப் பற்றி அழகாக விவத்திருக்கிரீர்கள். நம் தளம் வாசகர்களுக்காக செய்யப் போகும் அர்ச்சனை நிச்சயம் திருநள்ளாறு செல்ல முடியாமல் தவிப்பவர்களுக்கு மிகவும் உபயோகமாய் இருக்கும்.
இறைவன் அருளாசி என்றும் உங்களுக்கு உண்டு.
நன்றி
உமா வெங்கட்
சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக திருநள்ளாறு செல்ல முடியாமல் தவிக்கும் அனைவருக்கும் வரப்பிரசாதம் இந்த பதிவு.
சனீஸ்வரரை கோவில்களில், தனி சன்னதியில், நவக்கிரங்களிடையே பார்த்திருக்கிறேன். இது போன்ற தனி உற்சவராக பார்ப்பது இதுவே முதன்முறை. அருமையான அலங்காரம்.
தம்பதி சமேதராக வீற்றிருக்கும் சனிபகவான் நிச்சயம் வேண்டிய வரங்களை அருள்வார் என்பதில் சந்தேகமில்லை.
சென்னை வரும்போது நிச்சயம் தரிசிக்கவேண்டும் என்று நான் நினைத்துள்ள கோவில்களின் பட்டியலில் இதுவும் சேர்ந்துவிட்டது.
தங்கள் மூலம் சனிதசையால் துன்பப்படுபவர்கள் அனைவருக்கும் சனீஸ்வரரின் அருள் போய்சேரட்டும். தங்கள் நோக்கம் போற்றத்தக்கது.
வாழ்க உங்கள் தொண்டு.
பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்
சுந்தர் அண்ணா..
மிகவும் அருமை. சனி பகவானை தரிசிக்க தூண்டுகிறது
நீலாதேவி சமேத சனீச்வர பகவானை வட திருநள்ளாறில் தரிசிக்கும் வாய்ப்பு
விரைவில் கிடைக்க வேண்டும்.
Ieஇன்று சனி பகவான் அபிஷேகத்தில் கலந்து கொண்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.என். மனம் மிகவும் அமைதி அடைந்தது. நம் வாசகர்களுக்காக தாங்கள் சனி பகவானுக்கு தாங்கள் செய்த தன்னலம் கருதாது செய்த சேவை யை நினைத்து என் கண்கள்n குளமாயின. Indru எனக்கு மறக்க முடியாத பொன்aal
Uma
தங்களுக்கு கோடாணு கோடி நன்றிகள்
உமா வெங்கட்