கட்டுரையை படித்தபிறகு புரிந்தது, இறைவன் மேற்படி வாசகருக்கு மட்டும் வழிகாட்டவில்லை… அது போன்ற பிரச்னையில் சிக்கித் தவிக்கும் பல வாசகர்களுக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கும், இதற்கு முன்பு இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை நமது பிரார்த்தனை கிளப்பில் சமர்பித்திருந்த அனைத்து வாசகர்களுக்கும் சேர்த்து வழிகாட்டியிருக்கிறான் என்று.
வாசகர் அரவிந்தராஜ் அவர்களுக்கும் இதை தட்டச்சு செய்து தந்து உதவிய உமா வெங்கட் அவர்களுக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றி.
படியுங்கள்… அனைவரிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்!
நோய் நொடியற்ற ஆரோக்கியமான சமூகம் உருவாக நம்மால் இயன்ற சிறு உதவியை செய்வோம்.
=======================================================================
கைவிட்ட ஆங்கில மருந்து, கைகொடுத்த நம்ம ஊர் மருந்து! புற்றுநோயில் இருந்த மீண்ட அதிசயம்!!
‘எப்ப வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது, ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்’ என்கிற சூப்பர் ஸ்டாரின் டயலாக் புற்று நோய்க்கும் பொருந்தும். சாதாரண உடல் தொந்தரவுதானே என்று நாம் நினைக்கும் விஷயங்கள் திடீரென்று விஸ்வரூபம் எடுத்து ‘கான்சர்’ என்று லேப் ரிப்போர்ட் வருகிறபோது, ‘நேற்று வரை நன்றாகத்தானே இருந்தோம்’ என்று அதிர்ச்சியூட்டும்.
செலவு பிடிக்கும் மருந்துகள், மாதக் கணக்கில் நீடிக்கும் சிகிச்சைகள், வலி … என்று மீதம் இருக்கிற வாழ்நாளை நரகமாக்கி விடுகிறது இந்தப் புற்றுநோய். ‘வைத்தியம் எதுவுமே வேண்டாம். இப்பவே செத்துப்போனாக் கூடத் தேவலை’ என்றெல்லாம் மனம் சலித்து துவள வைக்கும்.
எங்கள் குடும்பத்திலும் இது இப்படித்தான் ஆட்டம் காட்டியது. ஆனால், தெய்வாதீனமாக மீண்டு விட்டோம். பலருக்கும் எங்களின் அனுபவம் பயன்படும் என்ற எண்ணத்தில் இதை எழுதுகிறேன்.
என் ஒரே தாய் மாமாவுக்கு முழங்கையில் இரண்டு இடத்தில் சின்னச் சின்ன கட்டிகள் வந்தது. அதனால் எந்தத் தொந்தரவும் இல்லாததால் அவர் அதைக் கண்டு கொள்ளவில்லை. சில மாதங்கள் கழித்து சரியாக சாப்பிட முடியவில்லை என்றார். சாதாரண ஊசி, மாத்திரைகள் எடுத்துக் கொண்டதில் கொஞ்சம் சரியானது. ஆனால் மீண்டும் அதே உபாதைகள் தலை தூக்கவும் டாக்டர் ஸ்கேன் எடுக்கச் சொன்னார். ஸ்கேன் செய்ததில் உடலுக்குள் ஆங்காங்கே சின்ன சின்ன கட்டிகள் இருப்பதாகும் அதை டெஸ்ட் செய்து பார்த்தால் தான் மேற்கொண்டு சிகிச்சை செய்ய முடியும் என்றும் சொல்லிவிட்டார்.
ஊசி மூலம் கட்டியின் ஒரு சிறு பகுதிய எடுத்து சோதித்தார்கள். புற்றுநோய் என்று ரிசல்ட் வந்தது. எங்களுக்குப் பெரிய அதிர்ச்சி தான். ஆனாலும் சமாளிக்க வேண்டுமே. மனதைத் தேற்றிக்கொண்டோம்.
சரி, அதற்காக சிகிச்சைகளை எடுப்போம் என்று நாங்கள் தயாராவதற்குள் இந்த டெஸ்ட், அந்த டெஸ்ட் என்று செய்து, கடைசியில் ஒரு வார்த்தை சொன்னார்கள். இது மூன்றாவது ஸ்டேஜ் என்று.
‘ஒரு கட்டியாக இருந்தால் ஆபரேஷன் மூலம் நீக்கி விடலாம். ஆனால் இது பரவலாக இருப்பதால் ஆபரேஷன் செய்ய முடியாது. கீமோதெரபி கொடுக்கலாம். அதில் எந்தளவுக்கு முன்னேறற்றம் ஏற்படுகிறது என்பதை பொருத்து சிகிச்சையைத் தொடரலாம்’ என்றார் டாக்டர்.
தனக்கு கான்சர் என்பதே என் மாமாவுக்குத் தெரியாமல் இதுவரை சமாளித்தாயிற்று. ஆனால் கீமோதெரபி கொடுக்கும் போது ‘புற்றுநோய்க்கான சிறப்பு பிரிவு’ என்று கொட்டை எழுத்தில் மின்னிய போர்டு என் மாமாவின் மனதை நொறுக்கிவிட்டது.
அதன் பிறகு “மருந்துகள் எதுவும் சாப்பிட மாட்டேன். எத்தனை நாள் உயிரோடு இருக்க முடியோ அத்தனை நாளும் வீட்டிலேயே இருந்து விட்டுப் போகிறேன். எந்த ஆஸ்பத்திரிக்கும் வரமாட்டேன்” என்று பிடிவாதம் செய்யத் தொடங்கி விட்டார். வெறும் ஜூஸ் வகைகள். அரை இட்லி, இப்படித்தான் இருந்தது அவருடைய உணவு. நிறைய வற்புறுத்தலுக்குப் பிறகு அடுத்த கீமோதெரபி சிகிச்சைக்கு சம்மதித்தார்.
‘ஆறு மாதங்களிருந்து ஒரு வருடம் வரை தான் அவர் உயிரோடு இருப்பார்’ என்று டாக்டர்கள் கெடு விதித்தார்கள். எங்களால் அதைத் தாங்கவே முடியவேயில்லை. அப்போது அவருடைய மகனுக்கு 25 வயது. சின்ன வயது தான் என்றாலும் அவனுடைய கல்யாணத்தையாவது அவர் பார்க்கட்டுமே என்று ஆசைப்பட்டோம்.
தீவிரமாகப் பெண் தேடினோம். ”அவனுக்கு ஏன் கல்யாணம் செய்து வைக்க அவசரப்படுகிறீர்கள்? நான் அதற்குள் செத்து விடுவேன் என்று டாக்டர் சொல்லிவிட்டாரா?” என்று கேட்ட போது, அழுகையைத் தவிர எங்களிடம் பதில் ஏதும் இல்லை.
விலை உயர்ந்த மருந்துகள், வலி மிகுந்த சிகிச்சைகள் என்பதைவிட குணப்படுத்த முடியுமா ? முடியாதா ? என்பதே தெரியாத நிலை தான் இன்னும் கொடுமை. சிகிச்சையைத் தொடரவும் முடியாமல், கை விடவும் முடியாமல் நாங்கள் தவித்துக் கொண்டிருந்த போது தான் நண்பர் ஒருவர் வேறொரு சிகிச்சை குறித்துத் தெரிவித்தார்.
கர்நாடகாவில் பத்ராவதியில் ஒரு ஆஸ்ரமம் இருக்கிறது அங்கே சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். நீண்ட நாள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட என் உறவினர் அங்கு சிகிச்சை எடுத்த பிறகு குணமானார். நம்பகமான ஆயுர்வேத மருத்துவம் தான் தருகிறார்கள் என்று சொன்னார்
எங்களில் யாருக்கும் நம்பிக்கை இல்லை. ஆனாலும், அதையும் தான் பார்ப்போமே என்று மாமாவை அங்கே அனுப்பி வைத்தோம்.
கர்நாடகாவில் ஷிமோகா மாவட்டத்தில் இருக்கிறது பத்ராவதி. அங்கேதான் ‘ஸ்ரீ சிவசுப்ரமணிய சாமி ‘ என்ற பெயரில் இயங்குகிறது அந்த ஆஸ்ரமம். பெங்களூருவில் இருந்து கிட்டத்தட்ட 7 மணி நேரப் பயணம். இங்கே நாள்பட்ட நோய்கள் பலவற்றுக்கும் சிகிச்சை தருகிறார்கள்.
அங்கு சுவாமிஜி நம் வியாதி என்ன என்பதையும், அதற்கான ஸ்கேன், மருத்துவ ரிப்போர்ட்டுகளையும் கவனமாகக் கேட்டுக் கொள்வாராம். அதன் பிறகு ஒரு மாதத்துக்கான மருந்துகள் தருகிறார். சில பத்தியங்களும் சொல்வாரம். சில வகை நோய்களுக்கு அங்கேயே தங்க வேண்டி வருமாம். மருந்துகளுடன், மருத்துவ குணமுள்ள உணவு வகைகளும் அவர்களுக்கு அந்த ஆஸ்ரமத்திலேயே வழங்கப்படுகிறதாம். மருந்துகளும் அதிகமாக உட்கொள்ள வேண்டியது இல்லை, ஒரு ஊசியின் முனையில் எடுத்துச் சாப்பிடக் கூடிய மருந்துகளும் உண்டு.
இப்படி அங்கே ஒரு மாத மருந்து சாப்பிட்டு முடித்த உடனே என் மாமாவுக்கு சற்று தெம்பு வந்தது. கொஞ்சம் உணவு சாப்பிட ஆரம்பித்தார். எங்களுக்கும் நம்பிக்கை பிறந்தது அடுத்த 2 மாதங்களுக்கு இதே போல் போய் பார்த்து மருந்துகள் வாங்கி வந்தார். கடைசியாகப் போன போது ‘உங்களுக்கு இனி எந்தப் பிரச்சனையும் இல்லை சந்தேகம் இருந்தால் போய் ஸ்கேன் எடுத்துப் பாருங்கள் ” என்று சொல்லியிருக்கார் சுவாமிஜி. ஆனால் என் மாமா செய்யவில்லை.
“என் உடம்பு இபோது நன்றாக இருக்கிறது. ஒரு வேளை ஸ்கேன் ரேபோர்ட்டில் எதையாவது சொன்னால் என்ன செய்வது? சுவாமிஜியின் மருந்து என்னை முழுவதுமாக குணமாக்கிவிட்டது என்றே நான் நம்புகிறேன், எனக்கு இது போதும்” என்று சொல்லிவிட்டார்.
இது நடந்து 3 வருடங்களாகி விட்டன. இப்போது வரை என் மாமாவுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஜனவரியில் தான் அவரது மகனுக்கு திருமணம் நடந்தது.
எப்படி நடக்குமோ, இவன் கல்யாணத்தைப் பார்க்க அவனுடைய அப்பா உயிருடன் இருப்பாரோ மாட்டாரோ என்றெல்லாம் நாங்கள் பயந்த அவனுடைய கல்யாணம் ஜாம் ஜாமென்று நடந்தது.
கடவுளின் அருளால் தான் எங்களுக்கு சரியான வழிகாட்டுதல் கிடைத்தது. அந்த சிகிச்சையில் வெற்றியும் கிடைத்தது..எவ்வளவு பெரிய சிக்கலுக்கும் ஏதாவது ஒரு வழியில் நல்ல தீர்வு கிடைக்கும் என்று இப்போது எங்கள் குடும்பத்தில் எல்லாவருமே நம்புகிறோம்.
வாசகி கடிதத்தில் குறிப்பிட்டிருந்த ஆஸ்ரமத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம்.
”பக்கவாதம், புற்று நோய் , நீண்டநாளைய தோல் வியாதிகள் என்று பல நோய்களுக்கும் இங்கே சிகிச்சை தரப்படுகிறது நோயாளிகள் இதுவரை எடுத்துக்கொண்ட மருந்துகள், மெடிக்கல் ரிப்போர்ட் ஏதேனும் இருந்தால் அவற்றையும் அவசியம் எடுத்து வர வேண்டும். இது முழுக்க முழுக்க ஆயுர்வேத மருத்துவம் தான், சிலருக்கு குறிப்பிட்ட நாட்களுக்கான மருந்து தரப்படும். இன்னும் சிலருக்கு தொடர் சிகிச்சை தேவைப்படும் , அவர்களுக்கு தங்குவதற்கான எல்லா வசதிகளும் ஆஸ்ரமத்திலேயே இருக்கிறது. ஃபோனில் தொடர்பு கொண்டு தங்களுக்கான அனுமதியை முன்கூட்டியே பெற்றுக் கொண்டு வரலாம் என்று தெரிவித்தார் ஆஸ்ரம நிர்வாகி ஒருவர்.
ஆஸ்ரம முகவரி :
ஸ்ரீ சிவசுப்ரமணிசாமி ஆஷ்ரமம்
டி . கே . ரோடு, பத்ராவதி 577 301
ஷிமோகா மாவட்டம், கர்நாடகா
ஃபோன் : 08282 267206
* இது எந்த வித விளம்பரத்துக்காக வெளியிடப்படும் கட்டுரை அல்ல. நமது நிருபரால் உறுதி செய்யப்பட்ட ஒரு நடுத்தர மனிதரின் அனுபவமே ஆகும். வாசகர்கள் அவரவர் சொந்த முடிவின் பேரில் சிகிச்சையை மேற்கொள்ளலாம்.
(நன்றி: மல்லிகை மகள் ஆகஸ்ட் 2014)
=======================================================================
Also check :
தொப்பைக்கு இனி குட்பை! MUST READ!!
புற்றுநோயை ஆரத்தி எடுத்து வரவேற்கும் உணவு பழக்கவழக்கங்கள் – ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!!
‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’! READ IT AGAIN & AGAIN!!
எயிட்ஸ் – தேவை ஒரு புரிதல் – ‘சொல்லத் துடிக்குது மனசு’ !
குழந்தைகளை பாதிக்கும் ஆட்டிசத்தின் அறிகுறியும் அதை குணப்படுத்தும் வழிமுறைகளும்
சீரான சிறுநீரக செயல்பாட்டிற்கு உதவும் உணவுப் பொருட்கள்!
சிகரெட்டை நிறுத்த முடியவில்லையா? இதோ ஒரு எளிய டெக்னிக்!
இயற்கையின் அதிசயம் — நம் உடலுறுப்புக்களை போன்றே தோற்றமளித்து அவற்றை காக்கும் சில காய்கனிகள்!
மருத்துவ அதிசயம் — டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் பப்பாளி இலைச் சாறு!
=======================================================================
[END]
இனிய காலை வணக்கம் ……….
மிகவும் அருமையான எல்லோருக்கும் பயன் படக் கூடிய முத்தான பதிவு. தாங்கள் ஆன்மிகத்தில் மட்டுமல்லாமல் மற்ற சப்ஜெக்ட் லேயும் பட்டயக் கிளப்புகிறீர்கள். இதில் தான் ரைட் மந்த்ராவின் தனித்துவம் இருக்கிறது.
திக்கற்றோருக்கு தெய்வமே துணை என்பது போல் , தீர்க்க முடியாத நோயால் அவதிப்படும் அனைவருக்கும் இந்த பதிவு ஒரு கண் கண்ட மருந்து.
இந்த வாசகியின் கடிதத்தை படிக்க படிக்க மெய் சிலிர்க்கிறது. தீர்க்க முடியாத நோய் தீர்ந்தது இறைவனின் சித்தம் மீனா செல்வராஜ் இந்த நிகழ்ச்சியை மிகவும் கோர்வையாக எழுதி இருக்கிறார்கள்.
இதை பதிவாக வெளியிடச் சொல்லி நம் தளத்திற்கு கொடுத்த நம் வாசகர் திரு அரவிந்த் ராஜ் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்.
இந்த விவரத்தை என்னிடம் தட்டச்சு செய்யக் கொடுத்த தங்களுக்கு நான் எனது மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
நன்றி
உமா வெங்கட்
இன்றைய தேதியில் தேவையான ஒரு முக்கியமான பதிவு.
நம்மால் முடிந்த அளவு மற்றவர்களுடன் இப்பதிவினை பகிர்வோம்
அனுப்பிய வாசகருக்கும், பதிவு வெளியிட்டில் உதவிய வாசகிக்கும், தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி
ஏனன்றால் 13 ஆண்டுகளுக்கு முன், என் அருமை சகோதரியையும் அவருடைய கணவரையும் இந்த கொடிய நோயின் பாதிப்பில் இருந்து காப்பற்ற ஒரு வருட காலம் போராடி தோற்றேன்.
உளரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் குடும்பத்தில் மிக கொடூர தாக்கத்தை உண்டு பண்ணும் இந்த வியாதி நம்முடைய விரோதிக்கிகுட வரக்கூடாது.
.
Very good information.
வாழ்க வளமுடன்
தன்னலம் கருதாத , சுயநலமில்லாத பொது நலத்திர்க்காகவே இந்த தளம் உருவானது என்பதிற்கு இந்த பதிவு ஒரு சான்று .ரைட் மந்த்ரா மகுடத்தில் மேலும் ஒரு மாணிக்கமாக மிளிர்கின்றது . ஐயாவின் செயலை பாரட்ட மனம் இல்லை என்றாலும் குறை கூறாமல் தள வாசகர்கள் இருக்க வேண்டும்
நன்றி
Really useful information for many, Nowadays i get to hear from some one or other that someone had been affected/ died due to cancer . Hope this articles is widely read and helps many people in need.
Very good article. Thanks for Sharing.
Regards,
Sankar J
very very useful information. Thanks for sharing.
வணக்கம் சுந்தர் இந்த கட்டுரையால் பயன் பெரும் அணைத்து உள்ளங்களும் உங்களை வாழ்த்தும். நன்றி
மிகவும் பயனுள்ள தகவல் , தேங்க்ஸ் சுந்தர் சார்
அருமைனயான பதிவு.
நன்றி
ராஜா