Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, February 21, 2024
Please specify the group
Home > Featured > மனமிருந்தால் மார்க்கமுண்டு!

மனமிருந்தால் மார்க்கமுண்டு!

print
சீனாவில் நடந்த உண்மை சம்பவம் இது. நினைவு தெரிந்த நாள் முதல் சைக்கிள் ரிக்க்ஷா இழுத்து தனது குடும்பத்தை காத்து வந்த ஏழைத் தொழிலாளி அவர். அவருடைய வயது 74 ஐ எட்டும்போது, உடல் ஒத்துழைக்க மறுக்க “போதும் ரிக்க்ஷா இழுத்தது” என்று முடிவுக்கு வந்து தனது சொந்த ஊருக்கு வந்தார்.

அப்போது வயல்களில் சிறு குழந்தைகள் வேலை செய்துகொண்டிருப்பதை பார்த்தார். படிக்க வேண்டிய வயதில் இந்த குழந்தைகள் ஏன் வயலில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று விசாரித்தார். வறுமையின் காரணமாக அவர்கள் பள்ளிக்கூடம் செல்லவில்லை என்பதை தெரிந்துகொண்டவர், அவர்களுக்காக மிகவும் பரிதாபப்பட்டார். அடுத்து அவர் செய்தது தான் யாரும் எதிர்பார்க்காத ஒன்று. தனது ஒய்வு காலத்திற்கு பயன்படும் என்று கருதி குருவி போல பல ஆண்டுகாலம் ரிக்க்ஷா இழுத்து தான் சேமித்து வைத்திருந்த மொத்த பணத்தையும் அப்படியே அந்த குழந்தைகளின் படிப்பு செலவுக்கு கொடுத்துவிட்டார். (சுமார் 50,000/- ரூபாய்).

Fang li

அவரது பிள்ளைகள் எவ்வளவோ தடுத்தும் அவர்கள் பேச்சை கேட்காமல் தான் ரிக்க்ஷா இழுத்த டியான்ஜின் நகருக்கே மீண்டும் திரும்பியவர், மறுபடியும் ரிக்க்ஷா இழுக்க துவங்கினார். ஏழ்மையின் காரணமாக கல்வி பயில வசதியில்லாத குழந்தைகளின் கல்விக்கு தனது சம்பாத்தியம் முழுவதையும் வழங்கினார்.

காலை விடியும்போது பணிக்கு செல்லும் அவர் இரவு தான் தனது அறைக்கு திரும்புவார். ஒரு நாளைக்கு 20 முதல் 30 யுவான்கள் கிடைக்கும். (1 யுவான் = 10 ரூபாய்க்கு சமம்). அதை அப்படியே பத்திரமாக உண்டியலில் போட்டுவிடுவார். இந்த காலகட்டங்களில் பாய் பங்க்லி மிக மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். கிடைத்த உணவை சாப்பிட்டுக்கொண்டு, (பெரும்பாலும் வீசி எறியப்படும் உணவை) எளிமையான ஆடைகளையே உடுத்தி வந்தார். அவரது ஆடைகளில் நையப்பட்ட நூலைவிட கிழிசலை தைக்க பயன்படுத்திய நூலே அதிகம்.

baiதன்னால் படிக்கமுடியவில்லை. ஆனால் மற்றவர்கள் படிக்கவாவது நாம் உதவி செய்வோமே என்று அவர் கருதினார். டியான்ஜின் நகரில் உள்ள பள்ளிகள், மற்றும் பல்கலைகழகத்திற்கு சென்று அங்கு ஏழ்மையின் காரணமாக படிக்க முடியாமல் கஷ்டப்படும் மாணவர்களுக்கு தனது சம்பாதித்யத்தை வழங்கி வந்தார். அவர் கொடுத்த ஒவ்வொரு பைசாவும் இந்த முதுமையிலும் அவர் வியர்வை சிந்தி சம்பாதித்தது என்பதால் அதை ஏற்க மாணவர்களும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களும் தயக்கம் காட்டினர். ஆனால், அவர் விடாப்பிடியாக வற்புறுத்தினார். “நீங்கள் அனைவரும் நன்றாக படித்து நல்ல நிலைக்கு வந்து படிக்க கஷ்டப்படும் மற்ற குழந்தைகளுக்கு உதவவேண்டும். அதுவே என் விருப்பம்!” என்றார்.

பாய் பங்க்லி படத்திற்கு அஞ்சலி செலுத்தும் மாணவர்கள்
பாய் பங்க்லி படத்திற்கு அஞ்சலி செலுத்தும் மாணவர்கள்

2001 ஆம் ஆண்டு தனது 90 வது வயதில், கடைசி தவணையை கட்ட டியான்ஜின் நகரில் உள்ள பள்ளி ஒன்றுக்கு அவர் செல்லும்போது, மாணவர்களும் ஆசிரியர்களும் கண்களில் கண்ணீர் பெருக அவருக்கு பிரியா விடை கொடுத்தனர்.

கொண்ட கொள்கைக்காக வெயில், மழை, பனி என்று பாராமல் உழைத்த பாய் பங்க்லி தனது வாழ்நாளில் 12 முறை உலகை சுற்றி வந்ததற்கு சமமான தூரத்திற்கு ரிக்க்ஷா இழுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. 90 வது வயதில் அவர் ஒய்வு பெற்றபோது சுமார் ரூ.35,00,000/- பணத்தை முன்னூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் படிப்பு செலவுக்கு கொடுத்திருந்தார்.

2005 ஆம் ஆண்டு புற்றுநோயின் காரணமாக பாய் பங்க்லி மறைந்தபோது டியான்ஜின் நகரமே திரண்டு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தியது.

பிறருக்கு உதவ வேண்டும் என்கிற உறுதி இருந்தால் எந்த சூழ்நிலையிலும் ஒருவரால் உதவ முடியும் என்பதற்கு பாய் பங்க்லி அவர்களின் வாழ்க்கையே சிறந்த உதாரணம்.

======================================================================

பிரபஞ்ச விதி!

ரைட்மந்த்ராவுக்கு என தனியே அலுவலகம் துவக்கிவிட்ட சூழ்நிலையில், செலவினங்களை சமாளிக்க நம் தளத்திற்கு வருவாய் ஈட்ட ‘விருப்ப சந்தா’ திட்டத்தை சென்ற வாரம் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். ஏற்கனவே நமது பணிகளுக்கும் தளத்திற்கும்  உதவி வரும் வாசகர்கள் சிலரைத் தவிர இதுவரை சுமார் 15 -20 வாசகர்கள் தான் இதில் சேர ஆர்வம் காட்டியிருக்கின்றனர். தளத்தை ஆயிரக்கணக்கானவர்கள் தினசரி படித்து வந்தாலும் குறைந்தது 50 முதல் 100 பேராவது மனமுவந்து இந்த திட்டத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்த்தோம்.

(Check : ஒரு முக்கிய அறிவிப்பு + வேண்டுகோள்!)

நாம் சற்று உரிமையுடன் பேசக்கூடிய சில வாசகர்களிடம் இது தொடர்பாக பேசியபோது அவர்கள் சொன்னது: “என் நிதி நிலை சரியான பிறகு நான் நான் நிச்சயம் தளத்திற்கு உதவுவேன்” என்பது தான்.

அந்த எண்ணம் தவறு, எந்த சூழ்நிலையிலும் ஒருவரால் பிறருக்கு உதவி செய்ய முடியும் என்பதை உணர்த்தவே பாய் பங்க்லி அவர்களின் கதையை அளித்தோம்.

நாளை வசதி வந்தவுடன் நீங்கள் செய்யும் ஆயிரம் ரூபாயைவிட, இன்று செய்யும் நூறு ரூபாயே நமக்கு போதுமானது. அதுவே உயர்வானது.

ஒரு வேளை டீ செலவைக் குறைத்துக்கொண்டு அதை சேமித்து நம் தளத்திற்கு வழங்கும் வாசகர்கள் கூட நமக்கு இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களிடம் நாம் எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நமது தளத்திற்கு தங்களால் இயன்றளவு நிச்சயம் உதவ வேண்டும் என்கிற அக்கறையில் அவர்கள் தரும் ஒரு ரூபாய் கூட நமக்கு ஆயிரம் ரூபாய்க்கு சமம். அவர்கள் பொருளாதார நிலை நாளை உயரும்போது நிச்சயம் நாம் கேட்காமலே அவர்கள் நம் தளத்திற்கு செய்வார்கள் என்று நமக்கு தெரியும்.

நம் தளத்திற்கு உதவிட வேண்டும் என்கிற குறுகிய கண்ணோட்டத்துடன் மட்டுமே இதை சொல்லவில்லை. வாசகர்கள் அனைவரும் பொருளாதார ரீதியில் உயர்ந்து பலப் பல அறப்பணிகளை அவர்களாகவே செய்யவேண்டும், அந்த நிலையை அவர்கள் எட்டவேண்டும் என்பதற்காக சொல்கிறோம். நாம் தோற்றாலும் நீங்கள் ஒருபோதும் தோற்கக்கூடாது என்பதற்காக சொல்கிறோம்.

உங்கள் பிரச்சனைகளை, தேவைகளை பற்றி மட்டுமே சிந்திப்பதை விடுத்து சற்று கண்களை திறந்து பாருங்கள். உங்களைச் சுற்றி பல முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் உங்கள் பார்வைக்கு – உங்கள் சிறு உதவிக்கு – ஏங்கிக் காத்திருப்பது புரியும்.

பணகாந்த விதிப்படி, கொடுப்பவர்கள் தான் மேலும் மேலும் பெறுவதற்கு தகுதியுடையவர்களாக ஆகிறார்கள். பிரபஞ்சமும் அவர்களுக்கு தான் அள்ளி அள்ளித் தரும். எத்தனை செலவுகள் உங்களுக்கு இருந்தாலும் உங்கள் வருவாயில் குறைந்தது 3% முதல் 5% வரை நீங்கள் நல்ல விஷயங்களுக்கு அவசியம் செலவு செய்யவேண்டும். அப்போது தான் மற்ற வீண் செலவுகள் குறைந்து, சுபசெலவுகள் அதிகரிக்கும். (வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது, பிள்ளைகளுக்கு சகோதர சகோதரிகளுக்கு திருமணம் செய்விப்பது போன்றவை). பரீட்சித்து பாருங்கள். உண்மை புரியும்.

நமது தளத்தை ரெகுலராக பார்த்து வருபவர்களுக்கு புரியும் – உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் எப்படியெல்லாம் இந்த சமூகத்துக்கு ஒருவர் உதவலாம் என்று. (பார்க்க : கருவறையில் மட்டுமா இருக்கிறான் கந்தன் ? தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 2)

நன்றி!

கீழ்கண்ட பதிவுகளை அவசியம் அனைவரும் மீண்டும் படிக்கவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

“எனக்கு வசதியில்லே. வசதியிருந்தா நான் நிறைய தர்ம காரியங்கள் செய்வேன்” என்று சொல்பவரா நீங்கள்?- MUST READ

விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்….

======================================================================

Also check articles related to above post:

ஒரு முக்கிய அறிவிப்பு + வேண்டுகோள்!

ஒரு கனவின் பயணம்!

வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்!

‘நாளை’ என்பதில்லை நரசிம்மனிடத்தில்!

வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா? MONDAY MORNING SPL 78

======================================================================

Don’t miss these articles too….

கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து குடுகுடுப்பைக்காரனுக்கு தந்த பாரதி – ஏன் தெரியுமா???

மகன் திருமணத்திற்கு நண்பரிடம் உதவி கேட்டுப் போன வ.உ.சி. — நடந்தது என்ன? 

“விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்!” – பாரதியின் மனைவி செல்லம்மாளின் வானொலி உரை!

உங்கள் இழப்பு மற்றவர்களுக்கு லாபமாக இருக்கட்டும் – காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்!

இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் ? 

இறைவனுக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்வது எது ?

======================================================================

[END]

3 thoughts on “மனமிருந்தால் மார்க்கமுண்டு!

 1. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டு இந்த பதிவு.

  உதவி/சேவை செய்வற்கு மனம் தான் முக்கிய கருவி.

  தளிர் நடை போட ஆரம்பித்திருக்கும் நமது தளம், மேலும் வலுவான முறையில் செயல் பட, வாசகர்களாகிய நாம் இல்லையென்று மறுக்காமல், நம்மால் முடிந்த அளவு உதவி செய்ய உறுதி கொள்ளுவோம்.

  நாளை நாம் கொடுக்கபோகும் பனங்காயைவிட இன்று நாம் கொடுக்கும் கடுகே தேவையானது மற்றும் சிறப்பானது.

  ஊர் (வாசகர்கள்) கூடி, தேர் (தளம்) இழுப்போம். புண்ணியத்தில் பங்கு பெரும் பாக்கியம் பெறுவோம்.

 2. பாய் பங்க்ளியின் கதையை படிக்க படிக்க மெய் சிலிர்க்கிறது. இந்த பதிவை படிக்கும் நம் வாசகர்கள் கண்டிப்பாக மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை கண்டிப்பாக வளர்த்துக் கொள்வார்கள்.

  பிறருக்கு உதவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் எந்த சூழ்நிலையிலும் அந்த நல்ல எண்ணம் நிறைவேறும்.

  நாம் மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பாங்கை வளர்த்துக் கொண்டால் கண்டிப்பாக நமக்கு அது டபுள் மடங்கு return ஆகும். இது நான் என் அனுபவத்தில் கண்ட உண்மை.

  நன்றி
  உமா வெங்கட்

 3. மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பதற்கு பெரியவர் பாய் பங்க்லி ஒரு உதாரணம்………….தள்ளாத வயதிலும் தன் உழைப்பால் பிறருக்கு உதவியிருக்கிறார்……….அவரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *