எதிர்காலத்தில் தளத்தின் வருவாய் ஆதாரங்களை பெருக்கி அப்படி வரும் வருவாயிலும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் கோ-சம்ரோக்ஷனத்துக்கு பயன்படவேண்டும் என்று கருதுகிறோம். எனவே வேறு ஏதேனும் தேவையுடைய கோ-சாலையை தேடிவந்தோம். நமது தேடலுக்கேற்ப ஒரு கோவிலைப் பற்றி தகவல் தானாக கிடைத்து அங்கு இரண்டு முறை தீவனமும் வாங்கித் தந்தாயிற்று. (விரிவான தகவல்களுடன் கோவிலைப் பற்றிய படங்களுடன் விரைவில் பதிவளிக்கிறோம்.)
84 நூறாயிரம் யோனி பேதங்களிலே தோன்றிய எல்லாப் பிராணிகளும் உண்டு வெளியே வந்தால் மலம் என்று பெயர். ஒரு பிராணி மட்டும் உண்டு கழிப்பதற்கு மலம் என்று பெயர் கிடையாது. பசுவுக்கு மட்டுமே அந்த பெருமை உண்டு. பசுவின் கழிவு மட்டுமே சாணம் என்ற சொல்லுக்கு உகந்ததாகும். மற்றது அனைத்தும் மலமேயாகும். இதிலிருந்தே புலப்படுமே பசுவின் பெருமை.
பசுவின் பெருமையை கேட்பது, படிப்பது, பிறருக்கு சொல்வதும் புண்ணியத்திலும் பெரும் புண்ணியம். பசுவை போஷிப்பது அதைவிட பெரும் புண்ணியம்.
படித்தாலே புண்ணியம் தரும் பசுவின் பெருமையை விளக்கும் மற்றொருமுறை கதை இது.
மீனவர் வலையில் மாட்டிக்கொண்ட முனிவர்… எப்படி மீட்கப்பட்டார்?
கற்புக்கரசி என பெயர் பெற்ற சுகன்யாவின் பதி ச்யவன மகரிஷி ஆவார். எந்த தொந்தரவும் இல்லாமல் தவமியற்ற விரும்பிய இவர் ஒரு முறை பிரயாகையில் நீருக்கு அடியில் பல அடி ஆழத்தில் மூச்சையடக்கி தவம் புரிந்து வந்தார். பிரயாகை மிகவும் புனிதமான நதியாகும்.
ஒரு நாள் மீனவர்கள் மீன் பிடிக்க பிரயாகை நதிக்கு வந்தனர். அவர்கள் வலையை வீசியதில் மீன்களுடன் ச்யவன மகரிஷியும் சேர்ந்து சிக்கிக்கொண்டார்.
வலையை இழுத்தபோது வலை கனமாக இருக்கவே ஏதோ மிகப் பெரிய மீன் சிக்கிவிட்டது என்று மகிழ்ந்த மீனவர்கள் மகிழ்ச்சியுடன் வலையை கரைக்கு இழுக்கவே வலையில் யோகநிஷ்டையில் ஒரு மகரிஷி இருப்பதை கண்டு அஞ்சி நடுங்கினர்.
நீரின் ஸ்பரிசம் அகன்று வெளிக்காற்று மேனி மீது பட, கண்விழித்து பார்த்தபோது எதிரே மீனவர்கள் அஞ்சி நடுங்கியபடி நின்றுகொண்டிருந்தனர்.
இவர் கண் விழித்ததும் இவர் காலில் வீழ்ந்த மீனவர்கள், “சுவாமி… நாங்கள் மீன் பிடிக்கத்தான் வலையை வீசினோம். நீங்கள் வலையில் சிக்குவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. எங்களை மன்னித்துவிடுங்கள். நீங்கள் அனுமதித்தால் மீண்டும் உங்களை ஆற்றில் உங்களை கண்டெடுத்த இடத்திலேயே விட்டுவிடுகிறோம்” என்று மன்றாடினார்.
ச்யவன மகிரிஷி பொறுமையில் பெரியவர். பண்பில் உயரந்தவர். மீனவர்கள் மீது எந்த தவறும் இல்லை. அவர்கள் தொழிலை தானே அவர்கள் செய்தார்கள் என்றுணர்ந்து, “நீங்கள் வலைவீசும்போது நான் சிக்கிகொண்டதால் மீன்களைப் போலவே நானும் உங்கள் உடமை. அதனால் என்னை விற்று அதில் கிடைக்கும் பணத்தை தாரளமாக எடுத்துக்கொள்ளுங்கள். இதுவே எம் விருப்பம்!” என்றார்.
மீனவர்களின் வலையில் ஒரு மகரிஷி சிக்கிக்கொண்டது அந்நாட்டு மன்னன் நஹூஷனுக்கு ஒற்றர்கள் மூலம் தெரியவந்தது. ஓடோடி வந்து மகரிஷியின் பாதங்களில் பணிந்து மீனவர்கள் அறியாமல் செய்த பிழைக்கு மன்னிக்க வேண்டினான்.
“ஆயிரம் பொற்காசுகளை மீனவர்களுக்கு நான் தந்துவிடுகிறேன்” என்றான்.
ச்யவனரோ எதுவும் கூறவில்லை. அமைதியாக இருந்தார்.
நஹூஷனுக்கு ஒருவேளை ஒரு பெரும் ரிஷியை தாம் குறைவாக மதிப்பிடுகிறோமோ என்ற அச்சம் ஏற்பட்டது.
“நூறாயிரம் பொன் தருகிறேன்” என்றான். இப்போதும் ச்யவனர் மெளனமாக இருந்தார்.
அடுத்து ஒரு கோடி பொன் என்றான்.
அப்போதும் ச்யவனர் எதுவும் கூறவில்லை.
இறுதியில் நஹூஷனின் தவிப்பை பார்த்து மனமிரங்கி, “அந்தணர்களை அழைத்து கலந்து பேசி முடிவு செய்!” என்றார்.
இவர்கள் உரையாடிக்கொண்டிருக்கும்போது அங்கு வேறு ஒரு முனிவர் வந்தார்.
அவரிடம் விஷயத்தை விளக்கியதும், “மீனவர்களுக்கு ஒரு பசுவை கொடுத்து ச்யவனரை மீட்டுவிடு” என்றார்.
அதன்படி மீனவர்களுக்கு பசுவை கொடுத்து ச்யவனவரை மீட்டான் நஹூஷன்.
கோடிகோடியாக கொட்டிக்கொடுத்தாலும் விலைக்கு வாங்க முடியாத ஒரு பெரும் ரிஷியை மீட்க ஒரே ஒரு பசு போதும் என்றால் அதன் சிறப்பை என்னவென்று சொல்வது.
கோமதீவித்யா
கோமதீம் கீர்தயிஷ்யாமி ஸர்வ பாப ப்ரணாஷிநீம்
தாம் து மே வததோ விப்ர ஷ்ருணுஷ்வ ஸுஸமாஹித :
காவ: ஸுரபயோ நித்யம் காவோ குக்குலு கந்திகா:
காவ: ப்ரதிஷ்டா பூதாநாம் காவ: ஸ்வஸ்த்யயநம் பரம்
அந்நமேவ பரம் காவோ தேவாநாம் ஹவிருத்தமம்
பாவநம் ஸர்வ பூதாநாம் ரக்ஷந்தி ச வஹந்தி ச
ஹவிஷா மந்த்ர பூதேந தர்ப்பயநந்யமராந் திவி
ருஷீணாமக் நிஹோத்ரேஷு காவோ ஹோமே ப்ரயோஜிதா
ஸர்வேஷாமேவ பூதா நாம் காவ: சரணமுத்தமம்
காவ பவித்ரம் பரமம் காவோ மங்க லமுத்தமம்
காவ: ஸ்வர்கஸ்ய ஸோபாநம் காவோ தந்யாஸ் ஸநாதநா:
(ஓம்) நமோ கோப்ய: ஸ்ரீமதீப்ய: ஸெளரபே யீப்ய ஏவ ச
நமோ ப்ரஹ்ம ஸுதாப்யஸ்ச்ச பவித்ராப்யோ நமோ நம:
ப்ராஹ்மணாஷ்சைவ காவஷ்ச குலமேகம் த்விதா ஸ்திதம்
ஏகத்ர மந்த்ராஸ்டதி ஹவிரேகதர திஷ்டதி
தேவ ப்ராஹ்மணகோ ஸாதுஸாத்வீபி: ஸகலம் ஜகத்
தார்யதே வை ஸதா தஸ்மாத் ஸர்வே பூஜ்யதமா: ஸதா
யத்ர தீர்தே ஸதா காவ: பிபந்தி த்ருஷிதா ஜலம்
உத்தரந்தி பதா யேந ஸ்திதா தத்ர ஸரஸ்வதீ
காவம் ஹி தீர்தே வஸதீஹ கங்கா
புஷ்டிஸ்ததா தத் ரஜஸி ப்ரப்ருத்தா
லக்ஷ்மீ: சுரேஷே ப்ரணதௌ ச
தர்மஸ்தாஸாம் ப்ரணாமம் ஸததம் சகுர்யாத்
===========================================================
Also Check :
கோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை!
அறங்களில் உயர்ந்த கோ சம்ரோக்ஷனத்தின் அருமையும் பெருமையும்!
வைதரணியில் சிக்கி தவிக்கும்போது துணையாய் வருவது எது ?
நலன்களை அள்ளித்தர இதோ நமக்கு ஒரு நந்தினி!
நம் பாஞ்சாலி பெற்ற குழந்தை ‘தேவகி’!
கோமாதா சேவையும் ‘குரு’ ப்ரீதியும் – குரு பெயர்ச்சி உங்களுக்கு ஏற்றம் தர ஓர் எளிய வழி!
நம்ம துர்காவுக்கு வேலன் பொறந்தாச்சு!
எட்டிப்பார்த்து சொல்லுங்கள், இறைவன் உள்ளே இருக்கிறானா? ‘ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்’
கோ சேவை செய்பவர்களுக்கு ஒரு கௌரவம் – ரைட்மந்த்ரா தீபாவளி கொண்டாட்டம் 2
===========================================================
[END]
பசுவின் பெருமையை பற்றி படிக்க படிக்க மெய் சிலிர்க்கிறது. பசுவின் பெருமையை இந்த அழகான பதிவாகிய ஷ்யவன மகரிஷி கதை மூலம் தெரிந்து கொள்வதே நாம் செய்த புண்ணியம் தான். தாங்களும் ஒவ்வொரு விஷேசங்களுக்கும் கோ சம்ரோக்ஷனம் செய்து புண்ணியம் தேடிக் கொள்கிறீர்கள். பசுவின் உடலில் முப்பது முக்கோடி தேவர்கள் வாசம் செய்கிறார்கள். பிற மலங்களைப் போக்குவதற்காகவே அமைந்தது பசுவின் சாணம்.
கோமதீவித்யா பாடல் அருமை. பசுபதீஸ்வரர் கோபுரம் மிக அருமை. பசுவும் சிவலிங்கமும் கொள்ளை அழகு . நாங்களும் நம் தளம் மூலம் நடைபெறும் கோ சம்ரோக்சனத்தில் கலந்து கொண்டு எங்களால் முடிந்த உதவி செய்வோம்
நன்றி
உமா வெங்கட்
முற்றிலும் உண்மை சுந்தர்,
கோடானுகோடி தேவதைகள் வாழும் ஸ்தலம்… ‘கோ’வை போற்றுவமாக…
V விஸ்வநாதன்
கோ சம்ரோஷ்னத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு சிறப்பான பதிவு.
இன்றுதான் மகாபெரியவர் உபநயனம் வைபவம் ஒன்றினை மாட்டு தொழுவத்தில் நடத்திய சம்பவம் படித்ததின் மூலம் அந்த இடத்தின் மகிமையை அறிந்து கொண்டேன்.
நன்றி
கோ பூஜை செய்த பலன் நிச்சயம் உங்களுக்கு உண்டு. கரூர் பசுபதீஸ்வர கோயில் கோபுரம் மிக அழகு.
கோமாதாவின் மகிமையை எடுத்துரைக்கும் மிக அழகிய பதிவு………..நன்றிகள் பல……………
மிகவும் அவசியமான பதிவு , கூடவே ஓரு வேண்டுகோள் நமது வாராவார பிராத்தனையைில் பசு வதை தடுப்பு சட்டம் கொண்டுவர அவன் தாளை பற்றி மன்றாடுவோம் .
Good. Will do that Sankar sir.
பசுவை பற்றி பெருமை சொல்லும் பதிவு இது.
தெரியாத பல விஷயங்கள் நம் தளத்தில் நாம் அறிந்து கொள்ள நம் ஆசிரியர் நமக்காக பதிவுகளாக கொடுக்கிறார்.கோவின் பெருமையும் கோ சம்ரோக்சனத்தின் பெருமையும் கோ பூஜையின் பலன்களையும் பல தடவை நமக்கு பதிவாக கொடுத்துள்ளார்.
கரூர் கோவில் கோபுரம் மிகவும் அருமை
மற்றுமொரு அருந்தகவலை அறியத்தந்தமைக்கு நன்றி நன்பரே!. பசுபதிநாதர் ஆலயக்கோபுரமும், எம்பெருமானுக்கு கோமாதா அபிடேகம் செய்யும் சிற்பக்காட்சியும் நெஞ்சில் நிறைந்தது. மிக்க நன்றி.
SundarJi,
Thanks for this article..
Thanks
Ramesh
மிக நல்ல பதிவு. அந்த நாளில் வறுமை காரணமாக யாரும் கஷ்ட பட்டதில்லை. பசுவை வணங்கினர். பசு கண் கண்ட கடவுள்.
பசுவை போற்றும் எந்த நாடும் வறுமை அடைவதிலே.
பசுவை போற்றுவோம்.
நன்றி தங்கள் பதிவுக்கு.
கே. சிவசுப்ரமணியன்.
சுந்தர்ஜி
பசுவின் பெருமை உல்லகறிய செய்தமைக்கு தங்களுக்கு மேலும் பெருமை செய்கிறது இந்த பதிவு. நாங்களும் இனி கோ சம்ரோச்சனம் செய்வோம் .
நன்றி
அருமயான விஷயம் பசுவை போற்றுவோம்
டியர் சுந்தர் சார்.
கோ சம்ப்ரோஷனம் பற்றி அடிக்கடி நல்ல தகவல்கள் தருகின்றீர்கள், எனக்கும் அதில் பங்கெடுத்துக் கொள்வதில் மிகுந்த விருப்பம் இருக்கிறது.
மகா மகா புண்ணிய சேவை. தங்கள் பணி தொடரட்டும்.
நன்றியுடன்,
ரமாஷங்கர்.
.
தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
உயரிய புனிதமான அந்த அன்னையின் ஸ்தானத்தை வரமாக பெற்ற கோமாதாவின் சிறப்பை என்னவென்று சொல்வது
மூவுலகை ஆளும் மும்மூர்த்திகளும் முப்பெரும் தேவியரும்
முப்பத்து முக்கோடி தேவர்களும் ரிஷி முனிகளும் தமது இருப்பிடமாக கோமாதாவை தேர்ந்தேடுத்திருக்கார்கள் என்றால் அந்த சிறப்பு நன்கு விளங்கும்
அத்தகைய சிறப்பு மிக்க கோமாதவிர்க்கு நாம் செய்யும் எந்த ஒரு செயலும் புண்ணியம் அளிக்க கூடியதாகும்
சுந்தர் அவர்கள் குறிப்பட்டது போல
முடிந்தவரை அருகில் உள்ள கோ சாலைக்கு சென்று வழிபடுவதோடுமட்டுமல்லாம் நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டியது அவசியம்
இந்த உதவி கோ சாலையில் உள்ள பசுக்களோடு நின்று விடாமல் நீங்கள் அன்றாடம் உங்கள் வழியில் பார்க்கும் பசுக்களுக்கும் ஒரு கட்டு கீரையோ அல்லது பழங்களோ உங்களால் முடிந்ததை வாங்கி கொடுத்து புண்ணியத்தை தேடலாம்
நல்லதொரு பதிவை அளித்து அனைவருக்கும் அதன் அவசியத்தை புரிய வைத்தமைக்கு மிக்க நன்றி !!!