
கேரளத்தில் உள்ள கோவில் நடைமுறைகள் நமது பாரம்பரியத்திலிருந்து மிகவும் வேறுபட்டவை. அங்கு சுத்தத்திற்கு தான் முதலிடம். அதேபோல, எந்த சூழ்நிலையிலும் அங்கு பூஜைகள் நேரம் தவறுவது இல்லை. யாருக்காகவும் பூஜை நிறுத்திவைக்கப்படும் வழக்கம் அங்கு அறவே இல்லை. கோவில் என்றால் ராஜகோபுரம் இருக்கவேண்டும் அப்படி இப்படி என்கிற வழக்கமெல்லாம் அங்கு கிடையாது.
சுத்தம். நேரந்தவறாமை. இது தான் அங்கு ஒரே குறிக்கோள்.
ஆன்மீக சார்ந்த சமூக புரட்சிக்கு ஸ்ரீமத் ராமானுஜர் பாடுபட்டுகொண்டிருந்த காலம் அது. தமிழகத்தில் உள்ள பல ஆலயங்களில் தேவையற்ற சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை அவர் மாற்றி, புதுமைகளை புகுத்தி வந்தார். ஆனால் கேரள நாட்டு திவ்ய தேசங்களின் நடைமுறைகள் மட்டும் எதற்குள்ளும் அடங்காமல் வித்தியாசமாக இருந்தது அவருக்கு நெருடியது. எனவே அவற்றை மாற்றி சீரமைக்க விரும்பி மலையாள தேசத்துக்கு வந்தார்.
ஆச்சாரியர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் இங்கே இருக்கும் போத்திகள் தங்கள் நடைமுறைகளை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. காலம்காலமாக நாங்கள் பின்பற்றி வருவதை நீங்கள் சொல்கிறீர்களே என்று மாற்றிக்கொள்ள முடியாது என்று மறுத்துவிட்டனர். ஆனால் ராமானுஜர் எப்படியும் அவர்களின் நடைமுறையை மாற்றிவிடுவது என்று உறுதியாக இருந்தார்.
அதனால் பகவானிடம் போத்திகள் பிரார்த்தனை செய்தார்கள். “சுவாமி… எங்களுக்கென்று சில நடைமுறைகளை காலகாலமாக வழுவாமல் பின்பற்றி வருகிறோம். அவற்றை மாற்றிக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை. ஸ்ரீ ராமானுஜரோ அவற்றை எப்படியாவது மாற்றியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார். நீ தான் அவரிடமிருந்து எங்களை காக்கவேண்டும்!” என்று பிரார்த்தித்தார்கள்.
தங்கள் ஒழுகுமுறையிலிருந்து அவர்கள் மாறுபட வேண்டாமென்று திருவண்பரிசாரத்தில் எழுந்தருளியிருக்கும் திருவாழ்மார்பனும் சித்தம் கொண்டதால், அந்த தலத்தில் இராமானுஜர் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தபோது அவரே அறியாத வண்ணம் அவரை தூக்கிச்சென்று தமிழ்நாட்டில் திருக்குறுங்குடி என்னும் தலத்தில் கிடத்திவிட்டார்.
விழித்தெழுந்த இராமானுஜர் தாம் திருக்குறுங்குடியில் இருப்பது கண்டு திகைத்தார். இது இறைவனின் திருவிளையாடல் என்று உணர்ந்துகொண்டார். பரம்பொருளின் உள்ளக் கிடக்கையைப் புரிந்துகொண்டு, தன் முயற்சியிலிருந்து பின்வாங்கி, அது முதல் தமிழ்நாட்டிலேயே தம் தொண்டுகளில் கவனம் செலுத்தலானார்.
(பிரபுசங்கர் அவர்கள் தினகரன் ஆன்மீக மலரில் எழுதிய ‘மலைநாட்டு திவ்ய தேசங்கள்’ தொடரில் இருந்து சில பகுதிகளை தழுவி எழுதப்பட்டது இந்த பதிவு!)
==================================================================
* நமது பிரார்த்தனை கிளப்புக்கு கோரிக்கை அனுப்பி இதுவரை இடம்பெறாதவர்கள் மீண்டும் நமக்கு அதே மின்னஞ்சலை அனுப்பி நினைவூட்டவும். தொலைபேசியில் கூறியிருந்தால் மீண்டும் தொடர்புகொண்டு நினைவுபடுத்தவும்.
** பிரார்த்தனை நிறைவேறிய வெற்றிக் கதைகள் விரைவில் வெளியிடப்படும்.
==================================================================
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் : சித்துக்காடு தாத்திரீஸ்வரர் கோவிலில் குருக்களாக தொண்டு செய்யும் நடராஜ குருக்கள் (55).
பரம்பரை பரம்பரையாக பல நூற்றாண்டுகளாக தாத்திரீஸ்வரருக்கு பூஜை செய்து வரும் பேற்றை பெற்றவர்கள் இவர்கள். திரு.நடராஜ குருக்கள் அவர்களின் தந்தையார் திரு. கன்னிகேஸ்வரர் குருக்கள். இவர் மகனும் இங்கு குருக்களாக உள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று தனது குடும்பத்தின் சார்பாக அன்னதானம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
தாத்திரீஸ்வரர் கோவிலை பொருத்தவரை தைப்பூசம் மிகவும் விசேஷம். அன்று இவர் குடும்பத்தினர் பால்காவடி எடுத்து இங்கு எழுந்தருளியிருக்கும் சுப்ரமணிய சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்வர்.
சென்ற ஞாயிறு நாம் தாத்திரீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி செய்தது குறிப்பிடத்தக்கது. அது சமயம் சுவாதி நட்சத்திர வாசகர்களுக்கும் நண்பர்கள் பலருக்கும் அர்ச்சனைக்காக சங்கல்பம் செய்யவேண்டியிருந்தது. இது தவிர உழவாரப்பணியில் பங்கு கொண்டு அன்பர்களுக்கும் சங்கல்பம் செய்யவேண்டியிருந்தது.
கிட்டத்தட்ட அனைவருக்கும் மிக மிக பொறுமையாக சங்கல்பம் செய்து வைத்து அர்ச்சனையும் சிறப்பான முறையில் செய்தார் நடராஜ குருக்கள். இத்துனைக்கும் அப்போது மிகவும் லேட்டாகிவிட்டது.
அதே போல ‘ப்ரசூன குந்தளாம்பிகை’ அம்பாள் சன்னதியிலும் அனைவருக்கும் அர்ச்சனை செய்து தீபாராதனை காண்பித்தார்.
பங்குபெற்ற மகளிர் வாசகியர் அனைவருக்கும் அம்பாளின் வளையலும், திருமாங்கல்யச் சரடும் பிரசாதமாக கிடைத்தது மறக்கமுடியாத அனுபவம்.
ஒவ்வொரு உழவாரப்பணியின்போதும் நாம் பணி செய்யும் ஆலயத்தில் உள்ள அர்ச்சகர்களை கௌரவிப்பது நம் வழக்கம். எனவே இங்கும் இறுதியில் பிரகாரத்தில் வைத்து நடராஜ குருக்கள் அவர்களுக்கு நம் தளம் சார்பாக மரியாதை செய்யப்பட்டது. அனைவருக்கும் எல்லா வித நலன்களும் செல்வமும் கிடைக்க வாழ்த்துவதாக நெகிழ்ச்சியுடன் கூறினார்.
அன்று மாலை அவரை தொடர்புகொண்டு நமது பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி வரும் வாரம் நம் பிரார்த்தனை கிளப்பிற்கு தலைமை ஏற்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். மிக்க மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு, அது சமயம் தாத்திரீஸ்வரர் சன்னதியில் அர்ச்சனை செய்து நம் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்வதாக கூறியிருக்கிறார். அவருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.
==================================================================
இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?
நமது பிரார்த்தனை கிளப்பில் சமர்பிக்கப்பட்டுள்ள பிரார்த்தனைகள் நிறைவேறி வரும் செய்திகள் ஒவ்வொன்றாக கிடைத்து வருகின்றன. தங்கள் சுற்றமோ நட்போ பிரச்சனைகளில் இருந்தாலோ அல்லது பிரார்த்தனை ஒன்றே அவர்களை காப்பாற்றும் என்றாலோ நமக்கு தகவல் தெரிவிக்க யோசிக்கவேண்டாம். கையில் வெண்ணை இருக்க மருந்துக்காக நெய்யை தேடி அலைவது போல சிலர் நடந்துகொள்வது நமக்கு வேதனையளிக்கிறது. மகத்துவம் மிக்க மகானுபாவர்கள் இந்த பிரார்த்தனைக் கிளபிற்கு ஒவ்வொரு வாரமும் தலைமை ஏற்கிறார்கள். அடியேன் அல்ல என்பதை நினைவில் கொள்ளவும். நான் உங்களில் ஒருவன். அவ்வளவே. மேலும் நமது ஒவ்வொரு பிரார்த்தனையையும் மகா பெரியவாவின் திருவடிகளுக்கே அற்பணித்து வருகிறோம்.
இந்த வாரம் பிரார்த்தனைக்கு கோரிக்கை அளித்திருக்கும் வாசகி பற்றி பின்னர் சொல்கிறோம். மற்றவர்களின் நலனை என்றும் வேண்டும் நல்லுள்ளம் அவர். நமது நலம்விரும்பி. தனது அண்டைவீட்டில் இருக்கும் பெண் ஒருவர் படும் துன்பத்தை காண பொறுக்க முடியாமல் இங்கு நமக்கு பிரார்த்தனைக்கான கோரிக்கையை அளித்திருக்கிறார்.
அடுத்து இடம்பெற்றிருக்கும் சூரியகலா அவர்களின் கோரிக்கையின் ஆழம் அந்த பிரச்சனையில் சிக்கித் தவிப்பவர்களுக்கு தான் தெரியும். ஒருவருக்கு உத்தியோகம் செய்யுமிடத்தில் அமைதி கிடைக்காவிட்டால் வேறு எங்குமே அவர்களுக்கு அமைதி கிடைக்காது. பணிபுரியும் இடத்தில் மன அமைதியும் நிம்மதியும் மிகவும் முக்கியம். அந்த பிரச்சனையை அனுபவித்து வரும் நம் வாசகர்கள் அனைவருக்கும் ஒரு விடிவு காலம் கிடைக்க இறைவன் அருள்புரிவானாக.
==================================================================
1) மஞ்சள் காமாலை நோயால் வாடும் அன்புக்குரிய அக்கா!
வணக்கம் சார்…
நான் திருச்சியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். கடந்த சில மாதங்களாக நான் ரைட்மந்த்ரா தளத்தை பார்த்துவருகிறேன். தற்போது தளத்தின் தீவிர வாசகி.
எனக்கு மிக நீண்ட நாட்களாக தெரிந்த எங்கள் வீட்டு பக்கத்தில் உள்ள சகோதரி திரு.ராகினி (40) என்பவர் அவர்கள் கடந்த சில வாரங்களாக மஞ்சள் காமாலை வந்து மிகவும் துன்பப்பட்டு வருகிறார். குடும்ப வாழ்க்கையில் எண்ணற்ற பிரச்சனைகளை ஏற்கனவே சந்தித்து வரும் அவர் இதன் மூலம் நிலைகுலைந்து போயிருக்கிறார். அவருக்கென்று உதவிட யாரும் இல்லை.
அவரது நிலை மிகவும் பரிதாபகரமான ஒன்று. அவருக்கு நான் நிறைய உதவிட நினைக்கிறேன். இருப்பினும் நான் இருக்கும் சூழலில் எதுவும் செய்திட முடியவில்லை. எனவே அவருக்காக இங்கு பிரார்த்தனை சமர்பிக்க விரும்புகிறேன். அவர் மஞ்சள் காமாலை நோயிலிருந்து குணம்பெற்று, சௌக்கியமாக சந்தோஷமாக வாழவேண்டும்.
நன்றி!
=================================================================
2) Want peace of mind @ workplace!
Dear Sundar sir and Rightmantra friends,
I am Sooriyakala from Toronto. I have been reading this website for the past few months and taking part in prayer club prayers also. I would like to submit my prayer here.
I am not happy at my current workplace. It is a very negative environment with many negative people. I am constantly stressed and depressed due to this. Please pray that these circumstances should change and that I should be at peace at my work place. Also, that my daughter will get a good government job soon. Thank you so much.
My name : Sooriyakala K. Age:57
My Daughter: Shathana K. Age: 23
Location: Toronto, Canada
=================================================================
பொது பிரார்த்தனை
தாத்திரீஸ்வரர் கோவிலின் குளம் பொலிவு பெற்று நீர் நிரம்பி காட்சியளிக்க வேண்டும்!
கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் மிக மிக விரிவான ஒன்று. கோவில் இருந்தால் கண்டிப்பாக அங்கு குளமும் இருக்கும்.
அந்தக் காலத்தில் எல்லாம் தண்ணீருக்கு இப்போது உள்ளது போல போர்வெல்லோ அல்லது குழாய்களோ கிடையாது. மக்கள் தங்களின் குடிநீர் தேவைகளை கோவிலின் குளத்தை கொண்டே பூர்த்தி செய்து கொள்வர். கால்நடைகளுக்கும் குளத்தில் இருந்து தான் நீர் கொண்டு செல்வர்.
பறவைகள், உள்ளிட்ட பல உயிரனங்களுக்கு கோவிலின் குளத்து நீர் தான் வாழ்வாதாரம்.
ஆனால் இன்று பல கோவில்களில், குளம் இருந்த சுவடே இல்லை. வடிவேலு கிணத்தை காணோம் என்று ஒரு படத்தில் கூறுவது போல, நகர்ப்புறங்களில் இருக்கும் பெரும்பாலான கோவில்களின் திருக்குளங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுவிட்டன.
மீதியிருக்கும் கோவில்களில் குளம் இருந்தால் அதில் நீர் இல்லை.
சென்ற வாரம் நாம் உழவாரப்பணி மேற்கொண்ட தாத்திரீஸ்வரர் கோவிலுக்கு மிகப் பெரிய குளம் ஒன்று உண்டு. மயிலை கபாலீஸ்வரர் கோவிலின் குளம் எவ்வாறு பரந்து விரிந்து காணப்படுகிறதோ அதே அளவு மிகப் பெரிய குளம். ஆனால், கோவில் பல நூற்றாண்டுகளுக்கு முந்தையது என்பதால் குளம் முழுதும் காய்ந்துபோய், புதர் மண்டி படிக்கட்டுக்கள் சிதிலமடைந்து காணப்படுகின்றது.
இதை சீரமைக்க பல கோடிகள் செலவாகும் என்பதால் குளம் அப்படியே இருக்கிறது. அண்மையில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் போது கூட இதை சீரமைக்க முடியவில்லை. காரணம் இதற்கு ஆகும் பொருட்செலவு.
தாத்திரீஸ்வரர் கோவிலின் குளம் சீரமைக்கப்பட்டு அது நீர் நிரம்பி காட்சியளிக்கவேண்டும். பசுமை அந்த பகுதியில் தழைக்கவேண்டும்.
செல்வந்தர்கள் நினைத்தால் இதை செய்ய இயலும். பொருள் வசதி மிக்கவர்கள் இதற்கு முன்வரவேண்டும். ஈஸ்வரா அதற்கு உன் அருள் வேண்டும்.
இதுவே இந்த வார பொது பிரார்த்தனை!
==================================================================
திருச்சியை சேர்ந்த ராகிணி அவர்கள் மஞ்சள் காமாலை நோயிலிருந்து குணம்பெற்று சௌக்கியமாக சந்தோஷமாக வாழவும், கனடாவை சேர்ந்த சூரியகலா அவர்களுக்கு அலுவலகத்தில் நிம்மதியான சூழ்நிலை ஏற்படவும், பணியானது மகிழ்ச்சியும் மன அமைதியும் நிறைந்ததாக மாறவும், அவரின் மகள் சாதனாவுக்கு அரசு உத்தியோகம் கிடைக்கவும், இறைவனை வேண்டுவோம். தாத்திரீஸ்வரர் கோவிலின் குளம் சீரமைக்கப்பட்டு அது நீர் நிரம்பி காட்சியளிக்கவேண்டும். பசுமை அந்த பகுதியில் தழைக்கவேண்டும்.
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றிருக்கும் திரு.நடராஜ குருக்கள் அவர்களின் சிவத் தொண்டு மேலும் மேலும் சிறந்து விளங்கவும், அவரது குடும்பத்தினர் மற்றும் பரம்பரையினர் அனைவருக்கும் தாத்திரீஸ்வரரின் அருள் எப்போதும் கிடைக்கவும் பிரார்த்தனை செய்வோம்.
நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.
கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.
நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!
பிரார்த்தனை நாள் : பிப்ரவரி 22, 2015 ஞாயிற்றுக்கிழமை நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm
இடம் : அவரவர் இருப்பிடங்கள்
=============================================================
பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:
உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.
=============================================================
பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.
அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.
(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)
=============================================================
உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…
உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!
உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.
E-mail : simplesundar@gmail.com Mobile : 9840169215
=============================================================
பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131
=============================================================
சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : சென்னை மதனந்தபுரத்தை சேர்ந்த தலைசிறந்த ஹரிஹர பக்தரான திரு.ஸ்ரீராமுலு அவர்கள்.
பக்தனுக்காக பரந்தாமன் செய்த லீலைகளை படித்து மெய் சிலிர்த்தேன். தெரியாத கதை. பக்திக்கு அன்பு ஒன்றே முக்கியம் என்பதை இந்த கதை உணர்த்துகிறது . கோவில் கோபுரம் கொள்ளை அழகு. போன வாரம் பார்த்த கோபுரத்தை இந்த வாரம் நேரில் கொண்டு வந்து விட்டீர்கள் தங்கள் புகைப்படம் மூலமாக.
போன வாரம் தாத்தீஸ்வரர் கோவில் குளம் வற்றி இருந்ததை பார்த்து எங்களுக்கு இவ்வளவு பெரிய குளம் இருந்தும் தண்ணீர் இல்லாமல் புல்லும் புதரும் மண்டிக்கிடக்கிறதே என்று ஆதங்கப் பட்டோம். கணங்களில் கண்ணீர் வழிந்தோடியது அந்த குளத்தை பார்த்ததும். வெகு விரைவில் அந்த குளத்திற்கு புனரமைப்பு செய்ய யாரேனும் முன் வர வேண்டும்
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு நடராசன் அவர்களுக்கு என் பணிவான நமஸ்காரங்கள். போன வாரம் அவர் கையால் உழவார பணியில் கலந்து கொண்ட அனைவரும் பரிசு வாங்கியது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. திருப்பணியில் கலந்து கொண்டவர்கள் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்.
இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்து இருக்கும் ராகினியின் மஞ்சள் காமாலை நோய் வெகு விரைவில் சரியாகவும் , திருமதி சூரியகலாவிற்கு உத்தியோக இடத்தில் அமைதி கிடைக்கவும். அவருடைய பெண்ணிற்கு கூடிய விரைவில் அரசாங்க உத்தியோகம் கிடைக்கவும் தாத்ரீஸ்வரர் அருள் புரிய வேண்டும்.வேலை பார்க்கும் இடத்தில் மன அமைதி இல்லை என்றால் எப்படி இருக்கும் நம் மன நிலை என்பதை நான் அனுபவ பூர்வமாக உணர்ந்தவள் நான் .
நம் பிரார்த்தனை நேரத்தின் பொழுது மகா பெரியவா நம்முடன் உடன் இருந்து நம் வாசகர்களுக்கு நல்லாசி வழங்க வேண்டும்
லோகா சமஸ்தா சுகினோ பவந்து
மகா பெரியவா ….சரணம் .. மகா பெரியவா கடாக்ஷம்
ராம் ராம் ராம்
நன்றி
உமா வெங்கட்
சித்துகாடு, பூண்டி , சிங்கிஸ்வரர் மாதிரி பழம்பெரும் கோவில்களில் பணி செய்ய எங்களுக்கு கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.
கோவில் குருக்கள் மிகவும் பொறுமையாக எங்கள் அனைவரின் பேரிலும் சங்கல்பம் செய்ததது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது,
அவர் இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றது நம் பாக்கியம்.
இந்த தளத்தில் பிரார்த்தனை பதிவு செய்ய தயங்கவேண்டாம்.
சுந்தர் சொல்வது போல தலைமை ஏற்பவர்கள் கடவுளால் அனுமதிக்க பட்டவர்கள்.
நம் தளமே நமக்கு தெய்வம். தனியாக நாம் ஏன் பதிவு செய்ய வேண்டும் எல்லாம் அவர்(சிவன்) பர்த்துகொள்வர் என நினைத்து நான் இழந்தது மிக பெரிய இழப்பு. அது இன்றளவும் என்ன உறுத்தி கொண்டு இருக்கிறது.
சுந்தர் சொல்வது போல நம் அக்கம் பக்கம் இருப்பவர்களுக்கு கூட நாம் உடனே இங்கு பதிவு பண்ணி நம் ஒரு புண்ணியம் கட்டிக்கொள்ள வேண்டும்.
சூர்யகலா, ராகினி சாதனா இவர்கள் பிரார்த்தனை நிறைவேறவும் கோவில் குளம் நீர் நிரம்பி ஊர் பசுமை பெறவும் பிரார்த்திப்போம்.
nandri
வணக்கம் சுந்தர் . நம்ம ஊர் கோயில்களும் கேரளா கோயில்கள் போல சுத்தமாக இருக்கவேண்டும் என்பதே விருப்பம் . எல்லோருக்காகவும் வேண்டுகிறேன் . நன்றி .
திருச்சி ரோகினி அவர்களின் நோய் தீரவும், கனடா சகோதரி சூர்யகலா அவர்களின் அலுவலகத்தில் நிம்மதி ஏற்படவும், அவரின் மகளுக்கு அரசு வேலை கிடைக்கவும், தாத்ரீச்வரர் கோவில் குருக்கள், குடும்பம் செழுமை அடைந்து சிவ தொண்டு மேலும் செய்யவேண்டும், திருக்குளம் நீர் நிரம்பி செழுமை பொங்கவும் பிரார்த்திக்கிறேன்.
மண்ணுயிர்களின் துன்பங்கள் யாவும் நீங்கி எங்கும் அன்பும், நலமும், அமைதியும், பசுமையும் நிறைந்திருக்க குருவருளையும், திருவருளையும் இறைஞ்சுவோம்………
வாழ்க வளமுடன்
எல்லாரும் இன்புற்றிருக்க இறைவனை பிரத்தனை செய்வோம்
நன்றி
இவ்வார பிரார்த்தனைக்கிளப் நிகழ்விற்குத் தலைமை தாங்கவிருக்கும் நடராஜகுருக்கள் அவர்களுக்கு எனது வணக்கங்கள்.
திருச்சி ரோகினி அவர்களின் உடல்நலம் பெறவும், கனடா சகோதரியின் அலுவலகப் பிரச்சினைகளைத் தீரவும், அவர் மகள் சிறந்த பணியினைப் பெறவும், திருக்கோவில் திருக்குளம் நீர்நிரம்பி பொலிவுடன் திகழவும் மகாபெரியவா அவர்களின் பொற்பாதம் பணிந்து வேண்டிக்கொள்கிறேன்.
,