“இவரை கேட்டுக்கிட்டுருந்தா வேலைக்காகாது…” என்று நினைத்தாரோ என்னவோ நம் பதிவுகளில் ஒன்றை பார்த்துவிட்டு அவராகவே நமது தளத்தின் புதிய அலுவலக முகவரிக்கு கூரியர் மூலம் நூலை அனுப்பிவிட்டார்.
நேற்று முன்தினம் அதாவது சிவராத்திரி அன்று காலை அலுவலகத்தில் அமர்ந்து சிவராத்திரி தொடர்பான பதிவுகளை தட்டச்சு செய்து கொண்டிருந்தபோது கூரியர் வந்தது.
அலுவலகத்துக்கு வந்த முதல் கூரியர். பிரித்து பார்க்கிறேன்… ஒரு பொக்கிஷம்!
நூலின் பெயர் : ‘உண்மையுடன் ஒரு வாழ்வு!’
யோகிராம்சுரத்குமார் அவர்களுடன் பல ஆண்டுகள் நெருக்கமாக பழகிய ஜெனார்த்தனன் என்பவர் எழுதியிருக்கும் அற்புதமான நூல் இது.
பின்னட்டையில் கூறப்பட்டிருக்கும் வாக்கியம் என்ன தெரியுமா?
“இந்த நூலை படிப்பவர்கள் பாக்கியசாலிகள். சுவாமிகளின் அருள் பார்வை அவர் மேல் பட்டு, அவரது தெய்வ உரு அவர்களை ஆட்கொண்டு, ஆனந்தப் பரவசம் அவர்களுக்கு சித்தித்தே தீரும் என்பதில் ஐயமில்லை.”
தேடி வரும் குருவருள் என்பது இது தானோ?
இன்னும் நாம் இதுவரை திருவண்ணாமலையில் இருக்கும் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் ஆஸ்ரமத்துக்கு சென்றதில்லை. விரைவில் சென்று தரிசிக்கவிருக்கிறோம்.
சிவராத்திரி அன்று கண்விழித்து படித்திட இதை விட நல்ல புத்தகம் கிடைக்குமா என்ன? எனவே சிவராத்திரியின் போது திருவெண்பாக்கத்தில் இந்த நூலைத் தான் படித்துக்கொண்டிருந்தோம்.
நாம் இதுவரை படித்ததிலேயே மிகவும் வித்தியாசமான நூல். ஞானானந்தகிரி ஸ்வாமிகள், பாப்பா சுவாமி ராமதாசர், அய்யா வைகுண்டர் என பல மகான்களையும் ஆங்காங்கே தொட்டுவிட்டு செல்கிறது இந்த நூல். நூலை இதுவரை படித்ததில் ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது. மகான்கள் செய்யும் ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் இருக்கிறது என்பது தான் அது.
அந்த நூலில் எத்தனையோ அற்புதங்கள் கொட்டிக்கிடந்தாலும் நாம் படித்த சுவாரஸ்யமான சிலிர்ப்பூட்டும் சம்பவங்களுள் ஒன்றை இங்கே பகிர்ந்திருக்கிறோம். (பிற அற்புதங்களையும் அவ்வப்போது பகிர்ந்துகொள்வோம்.)
(மேற்படி நூலில் நாம் படித்து, மகிழ்ந்த சம்பவத்தை எம் வாசகர்களுக்கும் தரவேண்டும் என்று கருதி அதை மெருகேற்றி பழமொழிகள் உள்ளிட்ட பல சிறப்புக்களை சேர்த்து நமது பாணியில் இந்த பதிவை உருவாக்கியிருக்கிறோம். எனவே எடுத்தாள நேர்ந்தால் ஒரு ஓரத்தில் நம் தளத்தின் பெயரையும் போட்டுவிடுங்கள். ப்ளீஸ்!)
நன்றி மறந்தோரை நான் விடுவேனா? திருச்செந்தூர் முருகனின் லீலை!!
18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற சம்பவம் இது. மருந்துவாழ்மலை பகுதியில், அய்யா ஸ்ரீ வைகுண்டர் நடைப் பயிற்சி செய்வது வழக்கம். அங்கு ஒருவர் மிகவும் சிரத்தையாக வேலை பார்த்து வந்தார். தினம் அவரை அய்யா பார்ப்பது வழக்கம். மருந்துவாழ் பகுதியில் புதையல் இருப்பதாக ஐதீகம். ‘
ஒரு நாள் மாடு மேய்க்கும் அந்த நாடாரை அய்யா கூப்பிட்டு, “உனக்கு நான் ஒரு பெரும் புதையலை எடுத்துக்கொடுத்தால் என்ன செய்வாய்?” என்று கேட்டார். “நீங்கள் என்ன செய்யச் சொல்கிறீர்களோ அதன்படி செய்கிறேன்” என்றார் அவர்.
“திருச்செந்தூர் முருகனுக்கு தேர் இல்லை. இந்த புதையலை எடுத்துக் கொடுத்தால், அந்த தேரைச் செய்வாயா?”
“கண்டிப்பாக செய்கிறேன்!”
புதையல் இருக்கும் நொச்சிக் கொப்பை காட்டி “உச்சி வேளையில் தோண்டிப் பார்” என்று சொல்லிவிட்டு போய்விட்டார். அவர் சொன்ன இடத்தை தோண்டிப் பார்க்க, ஒரு கடாரம் பெட்டி நிறைய சொக்கத் தங்கம் இருந்தது. அவர் சொந்த ஊர் காயாமொழி. திருச்செந்தூர் கோவிலில் இன்றும் போத்திகள் தான் கோவில் குருக்கள்.
திருச்செந்தூர் மூலவரான பாலசுப்பிரமணிய சுவாமியை தொட்டு பூஜை செய்பவர்கள் போத்திகள் இவர்கள் மூலவரைத் தவிர்த்து வேறு எந்த கடவுளுக்கும் பூஜை செய்ய மாட்டார்கள். கோவிலுக்குள் இருக்கும் சண்முகர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு பூஜை செய்பவர்கள் சிவாச் சாரியார்கள். இவர்களைத் தவிர்த்து கோவிலில் தேங்காய் பழம் உடைத்து அர்ச்சனை செப்வர்கள் திரிசுதந்திரர்கள். இவர்கள் தான் கோவிலுக்குள் நடத்தப்படும் யாகசாலை பூஜையை செய்வார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்களின் பரிகார பூஜையையும் இவர்கள் தான் செய்கிறார்கள்.
அந்த நாட்களில் அதாவது 18 ஆம் நூற்றாண்டில் திருச்செந்தூர் கோவிலுக்கு போக நாடார்களுக்கெல்லாம் அனுமதி கிடையாது.
புதையலை கண்டெடுத்த அந்த நாடார், நிறைய பொருள் தந்து திருச்செந்தூர் தேரை செய்ய வைத்தார். அதனால் அவரை மிகவும் மரியாதையுடன் நடத்தினார்கள்.
ஆற்றை கடக்கும் வரை அண்ணன் தம்பி. ஆற்றை கடந்த பின்னர் நீ யாரோ நான் யாரோ என்பது போல தேர் முழுமையடைந்து முற்றுப் பெற்ற பின்னர் காயமொழிக்காரர்களை போத்திகள், “இனி கோவிலுக்குள் நுழைந்தால் கொன்றுவிடுவோம்!” என்று மிரட்டி விரட்டினார்கள்.
தேர் வெள்ளோட்டம் விடவேண்டிய தினம், எவ்வளவோ முயற்சித்தும் தேர் நிலையிலிருந்து நகரவில்லை. போத்திகள் செய்வதறியாது தவித்தார்கள்.
அன்றிரவு, தலைமை போத்தியின் கனவில் தோன்றிய முருகன், “தேரை எப்படி நகரவிடுவேன்? பணத்தை முழுவதுமாக செலவழித்தவனை விரட்டி விட்டீர்கள். காயாமொழி கிராமத்திலிருந்து எவராவது வந்து தொடாமல் தேர் நகராது” என்று சொல்லி மறைந்தார்.
மறுநாள் கொடுக்கட்டி, காயாமொழி கிராமத்திற்கு இவர்களை கூப்பிடப்போனால், “போத்திகள் நம்மை கொல்ல வருகிறார்கள்” என பயந்து கிராமத்தையே காலி செய்துவிட்டு ஓடிவிட்டனர். எப்படியே ஒரு வாரம் நகர்ந்தது. போத்திகள் எவ்வளவோ முயற்சித்தும் காயாமொழிக்காரர்கள் ஒருவரைக் கூட பார்க்க முடியவில்லை.
என்ன செய்வதென்று கையைப் பிசைந்த போத்திகள், தலைமை போத்தியிடம் ஆலோசனை கேட்க, ஒரு கைக்குழந்தை கிடைத்தால் கூட போதும். அக்குழந்தையை கொண்டு நம் காரியத்தை சாதித்துவிடலாம் என்றார்.
பெரியவர்களே ஒட்டமெடுக்கும்போது குழந்தைக்கு எங்கே போவது? ஒரு நாள் ஒரு தாய் தனது குழந்தையை தொட்டிலில் போட்டுவிட்டு குளத்து பக்கம் போனவர், ஊர் திரும்பமுடியவில்லை. எனவே தொட்டிலில் கிடந்த அந்த குழந்தையை தூக்கி வந்து குளிப்பாட்டி, நகை போட்டு அலங்கரித்து தேர் வடத்தை தொடச் செய்தார்கள். தேர் மிகச் சுலபமாக ஓடியது. அன்று முதல் இன்றுவரை ஆதித்தனாரின் குடும்பம் தொட்டால் தான் தேர் நகர ஆரம்பிக்கும்.
(* போத்திகளுக்கு திருச்செந்தூர் கோவிலில் உள்ள உரிமை பற்றி மேற்படி நூலில் கூறப்பட்டுள்ளது உண்மை தானா என்று ஆராயமுற்பட்டோம். உண்மை தான். அப்போது வேறு ஒரு சுவாரஸ்யமான சம்பவம் கிடைத்தது. அதை வேறொரு பதிவில் பார்க்கலாம். ஜஸ்ட் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!! ஒ.கே?)
=====================================================================
Also check from our archives…
ஆனந்தத்தை அள்ளித் தரும் குருவின் மகாத்மியங்கள் – (ஞானானந்தம்-1)
காங்கேயநல்லூர் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் – ஒரு திவ்ய தரிசனம்!
தீராத வினைகளை தீர்க்கும் நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் – A must visit place!
பித்தனாகியும் பரமனைப் பாடிய ஸ்ரீ அப்பைய தீட்சிதர் திவ்ய சரிதம் + அதிஷ்டான தரிசனம்!
ராம நாம மகிமை & போதேந்திராள் வாழ்க்கை வரலாற்று நாடகம்! ஒரு நேரடி அனுபவம்!!
கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!
குரு அடித்தாலும் அணைத்தாலும் அது கருணை தானே? – ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் லீலை!!
உருகிய பக்தை… வீட்டுக்கே வந்த நடராஜர்! உண்மை சம்பவம்!! ஆங்கிலேயே கலெக்டருக்கு அருள்புரிந்த அன்னை மீனாக்ஷி! சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!
சிவபெருமான் தன் பக்தனுக்கு காட்டிய கண்ணனின் ராசலீலை (உண்மை சம்பவம்)!
வள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!
பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!
ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!
முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!
உன்னை தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம்!முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!
சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!
முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2
ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?
கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!
காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!
================================================================
[END]
திருசெந்தூர் முருகன் துணை…….யோகியின் அருள் நம் தளத்திற்கு பூரணமாக உண்டு என்பது நம் இந்த புத்தகம் நம் தளத்தை அடைந்த விதத்தில் தெரிகிறது……….புத்தகத்தை அனுப்பிய வாசகிக்கு நன்றி………மேலும் நன்றி மறப்பதை இறைவன் விரும்புவதில்லை என்றும் தெரிந்து கொண்டோம்………..நன்றி……..
இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.
காலையிலேயே நம் குலதெய்வத்தை பற்றிய பதிவை படிக்கும் பொழுதே மெய் சிலிர்த்தேன். நம் பழனி வாசகிக்கு முதற்கண் என் இனிய வாழ்த்துக்களை சொல்லி கொள்கிறேன். அந்த புத்தகத்தின் அற்புதத்தை தங்கள் தளம் மூலம் படிக்கும் நாங்களும் மிக்க பாக்கியசாலிகள். தங்களுக்கு சிவராத்திரி அன்று அந்த புண்ணிய குரு மகிமை தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பது தாங்கள் வணங்கும் குருவின் சித்தம். ஒரு புண்ணியம் வாய்ந்த புத்தகம் தங்கள் ஆபீசிற்கு முதல் courier ஆக வந்திருப்பது தாங்கள் குருவின் மேல் வைத்திருக்கும் அளவு கடந்த பற்றுக்கு ஓர் சிறிய சான்று.
நானும் திருச்செந்தூருக்கு பல முறை சென்று இருக்கிறேன். ஆனால் இந்த தேர் பற்றிய கதை தங்கள் தளம் மூலம் அறிந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி . நன்றி மறந்தோரை நம் முருகன் எப்படி கை விடுவான்.
அய்யா வைகுண்டரின் மகிமையோ மகிமை. இவரை பற்றியும் தங்கள் தளத்தில் அடிக்கடி பதிவு செய்யவும். அந்த புத்தகத்தில் உள்ள மற்ற நிகழ்வுகளையும் படிக்க ஆவலாக உள்ளேன்
திருச்செந்தூரில் மாசிமாத தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. தேர் சப்பரம் மிகவும் அழகு. திருசெந்தூர் கடலுக்கு என் மனம் சென்று விட்டது
திருசெந்தூர் முருகன் துணை
நன்றி
உமா வெங்கட்
அருமை.
யோகி ராம்சுரத்குமார் அவர்களைப்பற்றிய பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளோம்.
குருவே சரணம்
ஓம் நம சிவாய
குருவாரமும் அதுவுமாய் திருச்செந்தூர் முருகனை பற்றிய அருமையான பதிவு. தெய்வத்தின் முன் எல்லோரும் சமம். சாதி மதம் எல்லாம் அவனுக்கு ஏது?
முருகனை, கந்தர் அனுபூதியில் அருணகிரி நாதர், குருவாய் வருவாய் என்று தானே அழைக்கிறார் (எங்கோ கேட்டது)
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் ‘குருவாய்’
வருவாய் அருள்வாய் குகனே
யோகி ராம்சுரத் குமார் பற்றி மேலும் அநேக விவரங்கள் மற்றும் அவருடைய திருவிளையாடல்கள் பற்றி அறிய ஆவலாக உள்ளோம். நன்றி சுந்தர் ஜி.
வாழ்க வளமுடன்
மெய் மறந்தேன்
நன்றி
அந்த புத்தகத்தின் வாயிலாக நமது தளத்தின் புதிய அலுவலத்திற்கு தனது பரிபூர்ண ஆசிகளை வழங்கியுள்ளார் முருகபெருமான்.
வேலும் மயிலும் சேவலும் துணை.
அந்த புததகத்தை அனுப்பிய வாசகிக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்
வணக்கம் அண்ணா
யோகிராம் சுரத்குமார் யோகிராம் சுரத்குமார் யோகிராம் சுரத்குமார் ஜெயகுருராயா…
தாங்கள் திருஅண்ணாமலைக்கு வர வேண்டிய நேரம் நெருங்கி கொண்டிருக்கிறது அண்ணா
அருமையான பகிர்வு. இனி வரப்போகும் பதிவுகளுக்கு பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கிவிட்டது. வேலும் மயிலும் சேவலும் துணை.
வணக்கம் சுந்தர் . முடியும்போது இன்னும் நிறைய செய்திகளை பகிர்ந்துகொள்ளுங்கள் .
தாங்கள் அள்ளித்தெளித்த அருள் வார்த்தைகளில் ஆனந்தமாய் நனைந்தோம் …
நல்ல பதிவு…
இது போன்ற வரலாற்று சம்பவங்கள் அதிகம் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்
நன்றி
ராஜாராம்
சுந்தர் அண்ணா..
மெய் சிலிர்க்க வைக்கிறது..
மிக்க நன்றி அண்ணா..