Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, April 19, 2024
Please specify the group
Home > All in One > கண்கலங்க வைத்த சிறுவன்; கண் திறந்த பாலம் ஐயா – பாரதி விழா கவரேஜ் (1)

கண்கலங்க வைத்த சிறுவன்; கண் திறந்த பாலம் ஐயா – பாரதி விழா கவரேஜ் (1)

print
பாரதி விழாவை நான் நடத்தத் காரணமே ஒரு சுவாரஸ்யமான நிகழ்வுதான். சுமார் ஒரு மாசத்துக்கு முன்ன நான் சிவக்குமார் என்கிற சிவனடியார் ஒருவரின் பெரியபுராண சொற்பொழிவை கேட்க மேற்படி சக்தி விநாயகர் கோவிலுக்கு போயிருந்தேன். (இவர் முன்னணி என்ஜினீயரிங் காலேஜ்ல HOD. தெரியுமோ?) கோவிலுக்கு சொந்தமான ஹாலில் தான் அவரது சொற்பொழிவு நடந்தது.

சென்னை நகரின் மையப்பகுதி, கோவில், அருகே ஒரு பெரிய பார்க், பஸ் வசதி இப்படி அனைத்து அம்சங்களும் வசதிகளும் அங்கே இருந்ததால எனக்கு அப்போவே எனக்கு அந்த இடமும் சூழ்நிலையும் ரொம்ப பிடிச்சிப் போச்சு.

வேற ஒரு நிகழ்ச்சி நடத்துவதற்கு தான் நான் முதலில் விசாரித்தேன். ஆனால் அது பாரதி விழாவாக மாறியது என்பது இப்பவும் எனக்கு அதிசயம் தான். எல்லாம் நிச்சயம் ஆண்டவனின் திருவுள்ளம் தான்.

விநாயகர் சதுர்த்தி (செப்டம்பர் 19, 2012) அன்னைக்கு இந்த RIGHTMANTRA.COM  ஆரம்பிச்சேன். அதே பிள்ளையார் கோவில்ல நம்மோட முதல் ஈவன்ட்டுக்கு இடம் கிடைச்சது நான் செய்த பாக்கியம்.

பாரதி பிறந்தநாள் விழாவை நடத்துவது என்று முடிவானவுடன் என் மனதில் உதித்தது இளங்கோ சாரும் நந்தகுமார் சாரும் தான். சாதனைக்கு உதாரணமா இவர்களை விட பெரிய உதாரணத்தை நான் காட்டமுடியுமா? பாரதி கனவு கண்ட அக்கினி குஞ்சல்லவா இவங்க ரெண்டு பேரும்?

[pulledquote][typography font=”Cantarell” size=”14″ size_format=”px”]மேலும் இன்னைக்கு நாடு மறந்துக்கிட்டுக்குற சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மாபெரும் தலைவர்களை இன்றைய தலைமுறைக்கு அடையாளம் காட்டி அவங்க செஞ்ச சாதனைகளை தியாகங்களை நினைவுபடுத்த விரும்புறேன். அதுக்கு பிள்ளையார் சுழியா பாரதியார் பிறந்தநாளை கொண்டாட விரும்புறேன். நீங்க தான் தலைமையேற்று நடத்திக்கொடுக்கனும்னு கேட்டுக்கிட்டேன்.[/typography] [/pulledquote] அடுத்து விழாவை தலைமையேற்று நடத்த மிகப் பெரிய மனிதர் ஒருவர் இருந்தா நல்லாயிருக்கும்னு தோணிச்சு. அப்போ நினைவுக்கு வந்தவர் தான் பாலம் ஐயா. அவரை உடனே நண்பர் ஒருத்தர் மூலமா நேர்ல சந்திச்சு… இப்படி ஒரு வெப்சைட் ஆரம்பிச்சு நடத்திகிட்டுருக்கேன். அதுல சமூக பணிகள் எல்லாம் நிறைய செய்யனும்னு ஆசைப்படுறேன்.

மேலும் இன்னைக்கு நாடு மறந்துக்கிட்டுக்குற சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மாபெரும் தலைவர்களை இன்றைய தலைமுறைக்கு அடையாளம் காட்டி அவங்க செஞ்ச சாதனைகளை தியாகங்களை நினைவுபடுத்த விரும்புறேன். அதுக்கு பிள்ளையார் சுழியா பாரதியார் பிறந்தநாளை கொண்டாட விரும்புறேன். நீங்க தான் தலைமையேற்று நடத்திக்கொடுக்கனும்னு கேட்டுக்கிட்டேன்.

பாரதின்னு சொன்னவுடனே அவருக்கு ரொம்ப சந்தோஷம். உடனே காலண்டர்ல நம்ம பங்க்ஷன் தேதியை மார்க் பண்ணி ஆன் தி ஸ்பாட் அப்பாயிண்ட்மென்ட் கொடுத்திட்டார்.

அவர் கிட்டே பேசப் பேச அது அப்படியே பேட்டியா மாறிடிச்சு. அந்தளவு மனுஷன் பெரிய பெரிய விஷயங்களை அனாயசமா கொட்டுறார்.

நாங்க பேசிகிட்டிருக்கும்போதே ஒரு அம்மா கல்வி உதவி கேட்கிறதுக்காக தன்னோட ஸ்கூல் படிக்கும் சின்ன பையனை கூட்டிகிட்டு வந்திருந்தாங்க. அவன் மாற்றுத் திறனாளி வேற. அவங்களோட எதிர்பாராத குடும்ப சூழல் காரணமா அந்த பையனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டமுடியலே. பாலம் ஐயா கிட்டே உதவி கேட்பதற்காக வந்திருந்தார்கள். அப்போ என்னோட பேட்டி போய்கிட்டிருந்தது. அவங்க ஓரமா உட்கார்ந்திருந்தாங்க. ஐயாவோட அலுவலக உதவியாளர் அவங்க கிட்டே ஒரு அப்ளிகேஷன் எழுதி கொடுக்க சொல்லி கேட்டாங்க. அவங்க எழுதிக்கிட்டுருந்தாங்க.

இந்த பக்கம் நானும் பாலம் ஐயாவும் பேசிக்கிட்டுருந்தோம். என்ன நினைச்சாரோ… “நீங்களும் இப்படி வந்து உட்காருங்கம்மா… நான் சொல்றதை கேட்டுக்கோங்க”ன்னு சொல்லி அந்தம்மா மற்றும் அவங்க பையனையும் எதிர்ல உட்கார சொன்னார்.

முதல்ல ஏனோதான்னு கேட்க ஆரம்பிச்சவங்க.. அவர் பேசப் பேசப் அப்படியே மகுடிக்கு மயங்கின பாம்பு மாதிரி ஆயிட்டாங்க. ஐயா அந்தளவு பின்னி பெடலேடுத்துடார்.

பேசி முடிக்கிற சமயம் அந்தம்மா கிளம்பும்போது மறக்காம எங்களுக்கு இந்த ஃபீஸ் கட்டுற உதவியை செய்யனும்னு அவர் கிட்டே கையெடுத்து கும்பிட்டு கேட்டுகிட்டாங்க. ஆனா ஐயா… “இவர் கூட இதுமாதிரி நிறைய உதவியெல்லாம் அமைதியா செஞ்சிட்டு வர்றார். இவர் கிட்டே சொல்லுங்க. இவர் பார்த்துகிடுவார்.” அப்படின்னு சொல்லி நம்மளை காமிச்சு சொல்லிட்டார். இது மாதிரி உதவிகள் நாம செய்வோம்னு முதல் சந்திப்புலயே ஐயா நம்மளை கைகாட்டினதுல எனக்கு ஒரு பக்கம் சந்தோஷம். மறுபக்கம் அவ்ளோ பெரிய தொகைக்கு நான் எங்கே போவேன் அப்படிங்கிற ஒரு சின்ன கலவரம். இருந்தாலும் ஐயாவோட வார்த்தையை தட்டமுடியுமா?

என்னை நம்பிக்கையோட பார்த்த அந்தம்மா மற்றும் அந்த குழந்தைகிட்டே “ஓகே… நான் பார்த்துக்குறேன்…. முழுசா என்னால பண்ண முடியலேன்னாலும் பாதியாவது பண்றேன்” அப்படின்னு சொல்லி அந்த பையன் படிக்கிற ஸ்கூல், கிளாஸ், கட்டவேண்டிய ஃபீஸ் பற்றிய விபரம் எல்லாம் ஒன்னு விடாம கேட்டு எழுதிகிட்டேன். அவங்க நன்றி சொல்லிட்டு கிளம்பிட்டாங்க.

நண்பர்கள் கிட்டே சொன்னவுடனே அதுல ஹரிஹரசுதன்னு ஒருத்தர் ஒரு கணிசமான தொகையை உடனே கொடுத்துட்டார்…. ஒரு ஏழையின் படிப்பில் மத்தவங்க பங்கும் இருக்கட்டும்னு சொல்லி என்னோட பங்கு கொஞ்சம் + என் நண்பர்களோட பங்கு கொஞ்சம் சேர்த்து அந்தப் பையனுக்கு நான் சொன்னமாதிரியே ஸ்கூல் ஃபீஸை நண்பர் விஜய் ஆனந்த் மூலமா போய் நேரடியா ஸ்கூல்லயே கட்டிட்டோம். அந்தம்மா நன்றி மறக்காம நம்ம பாரதியார் விழாவுக்கு தன்னோட பையனை அழைச்சிகிட்டு வந்திருந்தாங்க. நிகழ்ச்சிக்கு நடுவில்… அந்த சிறுவன்… என்னிடம் வந்து எனக்கு மைக் வேணும் நான் கொஞ்சம் பேசணும்னு சொன்னான்.

நான் மைக்கை கொடுத்தவுடனே…. “என்னோட படிப்புக்கு RIGHTMANTRA.COM தான் உதவி பண்ணாங்க. நீங்க நல்லாயிருக்கனும். ரொம்ப நன்றி” அப்படின்னு தன்னோட மழலைக் குரலில் சொன்னான்.

எனக்கு ஒரு நிமிஷம் கண் கலங்கிடுச்சு.  எங்களுக்கு நன்றி சொல்றதுக்காக அந்த பையனோட அம்மாவுக்கு தோணின விஷயம் இது. எங்களுக்கே அந்த நொடி வரைக்கும் தெரியாது.

நான் உடனே மைக்கை வாங்கி….

“அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நட்டல்,
அன்னயாவினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”

என்று மகாகவி பாரதி கூறியபடி புண்ணியத்திலேயே மிகப் பெரிய புண்ணியம் ஒரு ஏழையின் கல்விக்கு உதவுவது தான். இந்த உதவியை நாங்க செய்றதுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்த பாலம் ஐயாவுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. அடுத்த வருஷம் – இறைவன் அருளால் – பாரதி பிறந்தநாள் விழா இதை விட பிரம்மாண்டமாக – பல பேருக்கு கல்வி உதவி அளித்து சிறப்பாக கொண்டாடப்படும். அதுக்கும் பாலம் ஐயா தான் வந்து நடத்திக்கொடுக்கணும்.” அப்படின்னு சொன்னேன்.

எல்லாரும் கைதட்டினாங்க.

இந்த விழாவுல பாரதி கனவு கண்ட ஒவ்வொரு அம்சத்தையும் நாங்க செயல்படுத்தியது மிக பெரிய அதிசயம் தான். ஏன்னா எல்லாம் இதை கண்டிப்பா இப்படி பண்ணனும்னு நாங்க திட்டமிடலே. காரணம் எங்களுக்கு பெரியவங்களை வெச்சு இந்த மாதிரி  சமூக விழா நடத்தி அனுபவம் இல்லை. உதவி பண்றதுக்கோ களப்பணி செய்றதுக்கோ போதுமான ஆட்கள் இல்லே. எங்ககிட்டே இருந்ததெல்லாம் கடவுள் மேல நம்பிக்கையும், எங்க மேல நம்பிக்கையும் தான். ஆனாலும் விழா மிக சிறப்பா நடந்து முடிஞ்சதுக்கு காரணம் பாரதி ஆன்மாவின் ஆசியும், இறைவனின் கருணையும் தான்.

நடுவுல ஐயா கிட்டே ஒரு நாள் பேசும்போது தான் தெரிஞ்சுது… அவர் இங்கிலீஷ் மீடியம் படிக்கிறவங்களுக்கு எந்த உதவியும் செய்றதில்லே. அதுனால தான் அந்த சின்ன பையனுக்கு உதவி செய்ய என்னை கை காமிச்சுட்டார் அப்படின்னு.

எவ்வளவோ உதவிகள் செய்ற இவருக்கு இது ஒரு விஷயமா?. எனவே பேச்சினூடே ஒரு நாள் நான் கேட்டேன்… “ஐயா இன்னைக்கு மூட்டை தூக்குறவன் கூட தன்னோட பையனை இங்கிலீஷ் மீடியம் படிக்கணும்னு ஆசைப்படுற காலம்…. அப்படி இருக்க… நீங்க இங்கிலீஷ் மீடியம் படிக்கிறவங்களுக்கு உதவி பண்றதில்லேன்னு கொள்கை வெச்சிருக்கீங்களே ஏன்? இது சரியா? இப்படி முடிவு பண்ணினதுக்கு பின்னாடி நிச்சயம் ஏதாவது நியாயமான காரணம் இருக்கும். அது என்னன்னு தெரிஞ்சிக்கலமா?” அப்படின்னு கேட்டேன்….

அவர் அதுக்கு சொன்ன காரணம் இருக்கு பாருங்க.. நிச்சயம் இதை நீங்க எல்லாரும் தெரிஞ்சிக்கணும். நாம எல்லாரும் எந்தளவு ஒரு பெரிய தப்பை நம்மளை அடகு வெச்சு பண்ணிக்கிட்டுருக்கோம்னு புரியும்….

தொடரும்….

17 thoughts on “கண்கலங்க வைத்த சிறுவன்; கண் திறந்த பாலம் ஐயா – பாரதி விழா கவரேஜ் (1)

 1. பதிவை முழுமையாக படித்தேன். ஒரு கணம் என்னை அறியாமல் ஒரு சில துளிகள் என் கண் ஓரத்தில் வந்து நின்றது. சுந்தர் உங்களை என் நண்பர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை, இல்லை இல்லை கர்வப் படுகிறேன். உங்களின் இந்த முயற்சி ஆலமரம் போல் விருட்சம் அடைந்து இந்து சமுதாயத்தில் ஒருள் நாள் நீங்கள் ஒரு மாபெரும் மனிதராக அடையாளம் காட்டப்படுவீர்கள். நன்றி வாழ்த்துக்கள்.

 2. பெருக்கெடுத்து ஓடும் நதி கடலில் கலந்து வீணாகிவிடுமோ என்ற என் எண்ணத்தை மாற்றி நன்மையை கொடுக்கும் நதியாக மாறிய நிகழ்வு அல்லவா இது.

  நேரில் பார்த்து பரவசம் அடைந்த நிகழ்வு அல்லவா இது.

  உண்மை உழைப்பை சமுதாயம் என்றும் மறக்காது. உங்கள் பணிகளில் எங்களுக்கும் பங்களித்த பாங்கு என்னை நெகிலவைத்துவிட்டது.

  உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

  ————————————————————-
  ரபீக் உங்கள் கமெண்ட்டை மிகவும் ரசித்தேன்.
  இந்த நதி நிச்சயம் (மன) விளைச்சலுக்கு தான் பயன்படுமேயன்றி கடலில் கலந்து வீணாகாது.
  – சுந்தர்

 3. இந்த ஆத்மப்பூர்வமான நிகழ்வில் என்னையும் சேர்த்துக் கொண்ட சுந்தர் அண்ணாவிற்கு முதலில் என் நன்றிகள்… மனதிற்கு நிறைவாகவும், பெருமையாகவும், மிடுக்காகவும் உணர்கிறேன். நம் நிகழ்ச்சி நாயகன் தான் முண்டாசுக் கவிஞன் ஆயிற்றே…!

  வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் நமக்கு நளபாகம் படைத்து விட்டார்கள் என்பது தான் உண்மை..! செவிக்கும் மனதிற்கும் கொள்ளை இன்பம்…மொத்தத்தில் நமக்கெல்லாம் சரியான கருத்துத் தீனி..!

  “கடமையைச் செய்; பலனை எதிர்பார்”

  விஜய் ஆனந்த்

 4. ஒரு கணம் என்னை அறியாமல் ஒரு சில துளிகள் என் கண் ஓரத்தில் வந்து நின்றது.

  உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

  நன்றி

  மனோகரன்.

 5. இந்த மாபெரும் விழாவில் நான் பங்கேற்றது நான் செய்த பாகியம் என்று நினைக்கிறன்…இப்படி ஒரு விழாவில் இப்படிப்பட்ட மனிதர்களை சந்திக்கிற வாய்பு எல்லோருக்கும் கிடைக்காது…
  .
  பாலம் ஐயா, இளங்கோ மற்றும் நந்தகுமார் போன்றகளை சந்தித்து அவர்களுடன் உரையாட சந்தர்பம் அளித்த நம் தளத்திருக்கு நன்றி..
  .
  இளங்கோ அவர்களின் தன்னம்பிக்கை என்னை மிகவும் ஆச்சியரத்தில் ஆழ்த்தியது எனபது மறுக்கமுடியாத உண்மை…

  திரு.முல்லைவனம்… நினைக்கவே மலைப்பாக இருக்கிறது. ஒரு மரத்தை நட்டு அதை பராமரிப்பதே நமக்கு பெரிய பாடாக இருக்கிறது. லட்சக்கணக்கான மரங்களை நட்டு அதை பராமரித்தும் வருகிறார் என்றால் அது என்ன சாதாரண விஷயமா? நம்மடியே இப்படிப்பட்ட மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது நாம் இந்த உலகத்திற்கு செய்தது என்ன என்று தான் கேட்கத் தோன்றுகிறது.
  .
  மாரீஸ் கண்ணன்

 6. கலக்கல் ணா,… அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து .. ஜி.உதய்..

 7. போன தடவை செய்ததை போல இப்போ பல படிகள் மேல் ஏறி
  அடுத்த இடத்துக்கு சென்று நிறைவான ஒரு நிகழ்வை நடத்தி இருக்கும் உங்களுக்கு முதல் ஒரு சபாஷ்

  இது ஒரு அளவிட முடியாதை நிறைவை மனதுக்கு தருகிறது

  இவர்களை போன்ற மனிதர்களை சந்திக்கும் பொது தான் நாம் யார் நம் பிறப்பை உணர்கிறோம்

  நம் நம்மால் இயன்ற அளவு …சரியான மனிதர்களுக்கு தேவையான நேரத்தில் அவர்களது வாழ்விருக்கு உறுதுணையாக இருக்க முயற்ச்போம்

  முதல் முயற்சி பாரதி விழாவாக அமைந்தில் மிக்க மகிழ்ச்சி

 8. Dear Sundar,

  I m also really interesting to help these kind of childrens who is suffering for educational expenses. Please add me in your list.

  Rememeber me, I wrote the coverage for Endhiran audio release function from Malaysia. Please give me the chance to help people.

  Thanks & Best Regards,

  M.Ganesan(Singapore)

  ——————————————–
  Sure Ganesan. Will get back to you.
  – Sundar

 9. சார் உங்க எப்சிடேய் நான் பார்க்கும் ஒவொரு சமயமும் என் கண்கள்ல தண்ணீர் வந்துரும் இதுதான் சார் உங்க வெற்றி. நீங்க சிம்பிள் சுந்தர் இல்ல கிரேட் சுந்தர் ……

 10. சுந்தர்,
  நெஜமாவே மனசு வலிக்குது….இப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என்று…

  ஜெயசுந்தரம்

 11. டியர் சுந்தர் முதல்ல இதன் தொடர்ச்சியை முடிங்க அப்புறம் மார்கழிய பார்ப்போம் .அன்பான வேண்டுகோள்.

  ————————————————————-
  வெரி குட். இப்படி கேட்டாத்தானே நமக்கும் ஒரு ஆர்வம் இருக்கும். இதோ ரெண்டே நாள்… தூள் கிளப்பிடலாம்.
  – சுந்தர்

 12. டியர் சுந்தர் இதன் இரண்டாம் பாகம் இன்னும் எழுதலைய .pls .எழுதுங்க அய்யா என்ன சொன்னார்னு ஆவள இருக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *