[Check : பெரியவா பிரசாதம்னா சும்மாவா? ஆப்பிள் செய்த அற்புதம்! – குரு தரிசனம் (25)]
நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோதே வெளியே பிரதோஷ நேர சுவாமி புறப்பாடு நடந்துகொண்டிருந்தது. ஆலயத்தில் கட்டுக்கடங்காத கூட்டம். எங்கெங்கு பார்க்கினும் மக்கள் கூட்டம்.
தவில் மற்றும் நாதஸ்வரத்துடன் மங்கள வாத்திய சப்தத்தை கேட்டவுடன் வெளியே ஓடிவந்தோம்… சுவாமி வந்த அழகு… நமக்கே விசிலடிக்கவேண்டும் என்று தோன்றியது என்றால் அங்கே அவனுடனேயே அந்த ஆலயத்திலேயே இருக்கும் பறவைகள் மற்றும் அணில் உள்ளிட்ட விலங்களுக்கு? அவைகளின் குதூகலத்தை கேட்கவேண்டுமா என்ன…. பறவைகளின் கிரீச் கிரீச் சப்தமும்… அணில் கூட்டங்களின் சப்தமும், ரீங்காரமாய் அந்த பிரதேசத்தில் ஒலித்தன.
நாம் ஓடிவந்து காமிராவை எடுத்து கிளிக் செய்வதற்குள் பறவைகள் சிவபெருமானுக்கு மேலே கூட்டமாக பறந்து வந்து ஒரு வட்டமடித்துவிட்டு வானில் பறந்துவிட்டன. பறந்து செல்வதும் திரும்ப வருவதும் என அவைகள் நடத்திய லீலை… கண்கொள்ளா காட்சி!
சுவாமியை தரிசித்தபடி காமிராவை எடுத்தபடி ஊர்வலத்தின் முன்னே ஓடினோம். புகைப்படங்களை எடுத்தபடி இருந்தோம்.
அத்தனை கூட்டத்திலும் ஒரு பசு உள்ளே புகுந்து சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருந்தது கண்கொள்ளா காட்சி. அதை சிலர் விரட்ட முற்பட்டனர். அடிக்க முற்பட்டனர். “யாரும் அவற்றை அடிக்கவோ விரட்டவோ வேண்டாம்… இவற்றின் மூச்சுக் காற்று இங்கே கலந்ததால் இந்த பிரதோஷ பூஜையே பவித்திரமடைந்துவிட்டன! இங்கே அவற்றுக்கே முதல் உரிமை!!” என்று நமக்கு தெரிந்த நீதியை அங்கே சிலரிடம் சொல்லிக்கொண்டிருந்தோம். (ஒருவருக்கு நம் மெசேஜ் சென்று சேர்ந்தாலும் சந்தோஷம்!).
முப்பத்துமுக்கோடி தேவர்களும் இந்த பசுவின் ரூபத்தில் வந்து இறைவனின் பிரதோஷ ஊர்வலத்தை கண்டு ரசித்தனர் என்பதே நம் அபிப்ராயம்.
பிரசாதம் பெற வரிசையில் நின்ற சிலர், தங்கள் பங்கை பசுக்களுக்கு கொடுத்துவிட்டு சென்றனர். நாம் வெளியே சென்று அருகம்புல் ஒரு கட்டை வாங்கி வந்து கொடுத்தோம். நாம் கொடுக்க ஆரம்பித்தவுடன் நம்மையே அது சுற்றி சுற்றி வந்தது. பிறகு கையில் சுவாமிக்கு அர்ச்சனை செய்ய வைத்திருந்த பிரசாதப் பையில் இருந்த பழங்களை கொடுத்துவிட்டோம். (பிறகு இதனுடன் இன்னொரு பசுவும் சேர்ந்துகொண்டது தனிக்கதை.)
சுவாமி ஒரு நான்கைந்து சுற்று வந்தார் என நினைக்கிறோம். புறப்பாடு முடிந்து பிரகாரத்தில் ஒரு இடத்தில் வைத்து பூஜைகள் நடைபெற்றது.
அப்போது அங்கே எதிரே ஒரு மூலையில் தேவார நால்வர் போல ஒரு குழுவினர் நின்றுகொண்டு பதிகங்களை பாடிக்கொண்டிருந்தனர். நம்முடன் இருந்த நண்பர் முத்துக்குமார் அவர்களை நம்மிடம் காட்டினார். பார்க்கவே கண்கொள்ளா காட்சி அது.
சென்னை போன்ற நவநாகரீக (?!!) நகரில் இப்படி ஒரு காட்சியை கண்டது கண்களுக்கு ஒரு விருந்து தான். யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற வேண்டாமா? அவர்களை படம்பிடித்து உங்களிடம் காட்டியே தீரவேண்டும் என்று ஆசைப்பட்டு அவர்களை புகைப்படம் எடுக்க முற்பட்டபோது ‘எங்களை புகைப்படம் எடுக்கவேண்டாம்!’ என்று நம்மை கேட்டுக்கொண்டனர். ஆனால் நாம் ‘இது என் உரிமை’ அப்படி இப்படி என்று எது எதையோ பேசி அவர்களை சம்மதிக்க வைத்து புகைப்படம் எடுத்தோம். (யார் கிட்டே எப்படி பேசவேண்டும் என்பது நமக்கு தெரியாதா?)
இந்த குழுவினர் பின்னர் உள்ளே சென்று ஒவ்வொரு சன்னதியாக பதிகங்கள் பாடிக்கொண்டே குங்கிலியம் இட்டனர். பார்க்கவே கண்கொள்ளா காட்சி. இதற்காகவே ஒரு பிரதோஷத்தன்று மறுபடியும் இருதயாலீஸ்வரர் கோவிலுக்கு செல்லவேண்டும்.
நேரம் செல்ல செல்ல வானின் நிறம் மாறி இருள் மெல்ல மெல்ல கவ்வியது. (புகைப்படங்களை பாருங்கள் புரியும்!)
அதற்கு பிறகு சிறிது நேரத்தில் நம்முடன் வந்திருந்த நண்பர் வெளியூர் பயணம் செய்யவேண்டும் என்பதால் இப்போது கிளம்பினால் தான் சரியாக இருக்கும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பிவிட்டார். (நேரம் அப்போது 7.00 இருக்கும்!)
உள்ளே தரிசனத்திற்கும் சரி… வெளியே பிரசாதம் வாங்கவும் சரி…. பெரிய க்யூ நின்றுகொண்டிருந்தது. நாம் புகைப்படம் எடுக்கும் மும்முரத்தில் இருந்தபடியால் பிரசாதத்தை வாங்கவில்லை. ஆனால் நமக்கோ சரியான பசி. வெண்பொங்கல் பிரசாதம் வேறு. க்யூவில் நின்று வாங்கவேண்டும் என்றால் எப்படியும் அரைமணி நேரமாவது ஆகும். காலை வேறு உழவாரப்பணியில் பங்கேற்றமையால் மிகவும் களைப்பாக இருந்தது. நாம் வண்டி வேறு எடுத்து வரவில்லை. ரிட்டர்ன் போகும்போது பஸ்ஸில் போகவேண்டும். எனவே கிளம்பிவிடுவோம்… என்று முடிவு செய்து சுவாமியை சென்று தரிசித்துவிட்டு, உற்சவரையும் தரிசித்துவிட்டு குருக்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வெளியே வந்தோம். (குருக்கள் கூறிய தகவல்கள் தனிப் பதிவாக வரும்!)
ஆலய நிர்வாகி பாலகிருஷ்ணன் அவர்களை சந்தித்த நன்றி கூறி விடைபெற்று கிளம்ப எத்தனித்தபோது, “பிரசாதம் வாங்கிக்கிட்டீங்களா?” என்றார்.
“இல்லே சார்…. ஃபோட்டோ எடுக்குறதுல மும்முரமா இருந்ததாலே பிரசாதம் வாங்க முடியலே…”
“என்ன சார்… என்கிட்டே சொல்லக்கூடாதா?” என்று கூறியபடி மடப்பள்ளியின் உள்ளே சென்று இரண்டு கவர்களில் பிரசாதம் கொண்டு வந்தார்.
“ஒன்னு இங்கே சாப்பிடுங்க… ஒன்னு வீட்டுக்கு கொண்டு போங்க!” என்றார்.
உள்ளத்தின் சிறு விசும்பலை கூட எப்படித் தான் இறைவன் உணர்கிறானோ தெரியவில்லை. அது தான் சிவபெருமானின் தனி இயல்பு.
அவருக்கு நன்றி கூறி, மானசீகமாக இருதயாலீஸ்வரருக்கும் நன்றி கூறி, பிரதோஷ ப்ரசாதமான வெண் பொங்கலை சாப்பிட்டுவிட்டு புறப்பட்டோம்.
ஆலய அலுவலகத்தில் கோவிலின் தல வரலாறு நூலையும் விபூதி பிரசாதத்தையும் நமக்கு அளித்தார்.
மொத்தத்தில் மறக்கமுடியாத ஒரு பிரதோஷம்!
==============================================================
(அறிவிப்பு : இன்றிரவு அளிக்க வேண்டிய இந்த பதிவை அலுவலகத்தில் மட்டுமே இணையம் பார்க்கக் கூடிய வசதி கொண்டவர்களை மனதில் கொண்டு இப்போதே அளித்துவிட்டோம். தளத்திற்கு இனி சிவராத்திரி விடுமுறை. இனி நாளை மறுநாள் சிவாராத்திரி அனுபவம் தொடர்பான பதிவு அளிக்கப்படும். அதனுடன் இந்த வருடத்து சிவராத்திரி ஸ்பெஷல் பதிவுகள் நிறைவு பெறும். இராமநாம மகிமை தொடர் அடுத்து துவங்கும்!)
==============================================================
Also check :
சிவபெருமானின் அனந்த கல்யாண குணங்கள் – சிவராத்திரி ஸ்பெஷல் 5
சிவராத்திரி – செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும்! சிவராத்திரி ஸ்பெஷல் 4
இறைவனிடம் கேட்கக்கூடாத கேள்வி – சிவராத்திரி ஸ்பெஷல் 3
மஹா சிவராத்திரி விழா – சிவ நாம அர்ச்சனையில் பங்கேற்க ஒரு அரிய வாய்ப்பு!
கல் நந்தி புல் சாப்பிட்டு தண்ணீரும் குடித்த உண்மை சம்பவம் – சிவராத்திரி ஸ்பெஷல் 1
சென்ற ஆண்டு அளித்த சிவராத்திரி ஸ்பெஷல் தொடர் மற்றும் இதற்கு முன்பு நாம் அளித்த சிவராத்திரி சிறப்பு பதிவுகளுக்கு….
http://rightmantra.com/?s=சிவராத்திரி&x=6&y=12
==============================================================
[END]
இருதயாலீஸ்வரரை எம் இதயத்தில் இருந்து
கண்களால் காண வைத்து விட்டேள் அண்ணா!
எல்லாம் எம் சரணாளின் மகிமை!
இந்த பிரதோஷ பதிவை படிக்க படிக்க மெய் சிலிர்க்கிறது. நாங்களும் இந்த பிரதோஷத்தில் கலந்து கொண்ட உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள் அத்தனை படங்களும் அருமை. மிகவும் தத்ரூபமான பதிவு . நானும் எதாவது ஒரு பிரதோஷ தினத்தில் கலந்து கொள்ள முடி செய்து இருக்கிறேன்.
இறை சிந்தனை உள்ள தங்களுக்கு இறை அருளால் பிரசாதம் கிடைத்ததில் வியப்பு என்ன இருக்கிறது. நாங்களும் பிரசாதத்தை உண்ட மகிழ்ச்சி ஏற்படுகிறது.
மொத்தத்தில் இந்த சிவராத்திரி ஸ்பெஷல் வெண்பொங்கல் பிரசாதத்துடன் முடிவடைந்து உள்ளது
நன்றி
உமா வெங்கட்
Thanks a lot sundar sir. U made this day a very spiritual. Make us to think more abt our jagathpitha. Wonderful. Happy Shiva rathri.
மொத்தத்தில் துரந்தோ express வேகத்தில் சிவனை எங்கள் சிந்தையில் நிறுத்தி விட்டீர்கள்/. வாழ்க உங்கள் ஆன்மீக தொண்டு … வளர்க தங்கள் தளம் .
நன்றி
உமா வெங்கட்
பிரதோஷ தரிசனம் நன்று……….கோயிலில் பதிகங்கள் பாடிய நால்வரைப் பார்க்கையில், உண்மையில் நால்வர் பெருமக்கள்தான் இவ்வாறு வடிவெடுத்து வந்து இறைவனைப் பாடுகிறார்களோ என்று தோன்றுகிறது……….
சுந்தர்ஜி
பிரதோஷ மகிமை மிகவும் மெய்சிலிர்க்க உங்கள் கட்டுரை மனம் சிலிர்க்க வைத்துவிட்டது. உங்கள் ஒவ்வரு கட்டுரையும் படிக்கும் போது பசிக்கவில்லை .
உங்களின் ஒவ்வொரு பதிவும் ஒரு ஆன்மிக கைடு போல் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன.
முக்கியமாக தல வரலாறுகள்/உற்சவங்கள்,மகான்களின் மகிமைகள்,புகைபடங்கள் யாவும் அற்புதம்.
நன்றி என்ற ஒரு வார்த்தையால் என்னுடைய உளகிடங்கை கட்டுபடுத்த இயலாது
Thanks a lot, Sir. You have made this Sivarathri a great and very useful one. Expecting many more spiritual artciles like this from you, Sir. really wonderful.
Regards
M. Padmavathi
அருமை. உங்கள் சிவராத்திரி அனுபவங்கள் தொடர்பான பதிவுக்காக காத்திருக்கிறோம்.
நல்ல பதிவு
பிரதோஷ தரிசனம் – மறு
பிறப்பறுக்கும் ரகசியம்
புகைப்படங்கள் அனைத்தும் கண்களுக்கும் மனதிருக்கும் இனிய விருந்து
மிக்க நன்றி
தொடர்க உங்கள் திருப்பணி !!!
Nice post Sundar sir
சார்
தங்களின் பதிவுகளை படிக்கும்போது நானும் அவ்விடத்தில் இருந்து இறை தரிசனம் பெற்றது போல் உணர்வு ஏற்படுகிறது.
விரைவில் உங்களது பணியில் சேர்ந்து கொள்ள காத்திருக்கும் அன்பன்
ஹரி தயாளன்
பெங்களூர்.
இந்த தளத்தை படிக்கச் படிக்கச்வே கண்ணில் நீர் பெருகுகிறது…எல்லாம் அவன் செயல்… மெய்சிலிர்கிறது ஒவ்வொரு முறை படிக்கும்போதும்…உங்கள் பனி வளர ஏன் வாழ்த்துக்கள்.